தொழில்முறை தமிழ் எழுத்தாள அறிவுஜீவியையும் பாம்பையும் பார்த்தால்… முதலில்…
September 27, 2017
…அந்தப் பாவப்பட்ட பாம்பை, அந்த எழுத்தாளனின் படமெடுத்தலில் இருந்து உடனடியாக, போர்க்காலரீதியில் காப்பாற்றவேண்டும். வேறு வழியேயில்லை. :-(
மேலும் அய்யாமார்களே, அம்மையார்களே!
…இது பெரியார் பூஜை ஸீஸன். பெரியாரின் பக்தகேடிக் குருவிமூளைகள் ஏகத்துக்கும், ஆனால் அவர்கள் வழக்கம்போலவே ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல், மகத்தான அறியாமையில் மினுக்கிக்கொண்டு கொந்தளித்துக்கொண்டிருக்கும் காலமிது. ஆகவே பெரியாரியப் பொன்மொழிகளை உபயோகிக்காமல், எந்தவொரு சுயமரியாதையுள்ள தமிழனும் பகுத்தறிவு மிக்க திராவிடனாகப் பரிணாம வீழ்ச்சி அடையமுடியாதல்லவா?
தொழில்முறை தமிழ் எழுத்தாளனையும் பாம்பையும் கண்டால்… …
-0-0-0-0-0-
ஹ்ம்ம்… ஏனெனில் தஎ சிகாமணிப் பெருந்தகைகள் ஜீபூம்பா ஜீபாம்புகள். இதுதான் பிரச்சினையே! இவர்கள் காட்டும் பிலிம்களிலிருந்து தப்பிப்பது என்பது எளிதான விஷயமேயல்ல. எத்தை எடுத்தாலும் அதைப் பற்றித் தங்கள் மேலான டமால்டுமீலியக் கருத்துகளை, கொஞ்சம்கூடக் கூச்சநாச்சமில்லாமல் வாரிவாரி வழங்கும் பாரி வள்ளல்கள் இவர்கள். ஆக – இவர்கள் எடுக்கும் படங்களைப் பார்த்தால் படமெடுக்கும் பாம்புகளுக்கே தாழ்மையுணர்ச்சி வந்து பாவம் அரண்டு சுருண்டுபோய் சுணங்கிவிடும்கள். தேவையா, சொல்லுங்கள்?
பாவம், நான். அந்தப் பாம்பையே விடுங்கள்!
-0-0-0-0-0-
கடந்த சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக – இவர்களில் பலர் கூசாமல் புளுகிக்கொண்டிருந்தாலும், இந்தத் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களின் பெரும்பாலான எழுத்துகளையும் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன் (=நான் ஒரு மாற்றுமூளையாளன்) என்பதால் – என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியவேண்டிய விஷயங்கள் யாவையென்றால், எனக்கு: 1) பணத்தையும் நேரத்தையும் வேறு விஷயங்களில் விரயம் செய்யுமளவுக்குத் துப்பில்லை 2) சுயசித்திரவதைகளில் உள்ள தொடரும் ஆர்வம் + 3) வாழ்க்கையை 200% வெறுத்துவிட்டு அதன் விளிம்புக்குச் சென்று அதற்கு அப்பால் (=that milk) என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள அப்படியொரு முனைப்பு.
= ஆக நான், ஸோ டோடல்லி ஹோப்லெஸ். நன்றி.:-(
-0-0-0-0-0-
…ஹ்ம்ம். இந்த அழகில் – பொதுவாகவே இந்த இலக்கியக் காரர்களுக்கும் இன்னபிற கலைக்கார ஜந்துக்களுக்கும் என்னவொரு சுயபிம்பம் என்றால் – ஏதோ தாங்கள்தாம் அவதாரபுருஷர்கள் (தூயட் டமிளில் சொல்லவேண்டுமானால் அவதாரபுருடர்கள்) என்றும், தாங்கொணா கொடுமைகள் சூழ்ந்த இவ்வுலகத்தில் ஆசுவாசத்தையும், அறவுணர்ச்சியையும், மேன்மைப் படுத்தலையும், நம்பிக்கையையும் அளிப்பவர்கள் என்றும் — அதனால் அவர்கள் அடையும் துக்கத்தை மீறி உன்னதத்தை நோக்கிச் செல்பவர்கள், சமூகத்தின் கையைப் பிடித்துக்கொண்டு வானமேற்றி வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்பவர்கள் என்றும்… சுவாரசியமான புனைவுகள்.
பிரச்சினையென்னவென்றால் – இவர்களில் பலர் வாய்கூசாமல், கண் இமைக்காமல் புருடா விடுவதை நேரில் கண்டு களித்திருக்கிறேன். அந்தப் புருடாக்களையும் வாயைப் பிளந்துகொண்டு கேட்டுக் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் சகவாசகக் குளுவான்களையும் பார்த்திருக்கிறேன்.
ஹ்ம்ம்ம்… ஆனால் எனக்குப் புரிகிறது: இந்த ஆதார-ஆதர்ச புருடர்களுடைய பிரச்சினையென்னவென்றால் – மானாவாரியாகப் புருடா விட்டுவிட்டு ஒருகட்டத்தில் தங்கள் புருடாக்ளைத் தாங்களே நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள், பாவம்.
ஊக்கபோனஸாக – மேலும் தாங்கள் சொல்வதுதான் அவை மட்டுமேதான் உண்மை எனும் ஜாக்ருத நிலைக்கு வேறு வந்து மலைமலையாக அதிகப் பிரசங்கம் செய்துவிடுகிறார்கள்! யேஸ்ஸுவே, நீங்கள் ஆரம்பித்த எழவை, எங்கு கொண்டு செல்கிறார்கள் பாருங்கள், இப்பாவிகள். :-(
இங்கு பிரச்சினையென்னவென்றால் – இவர்களில் பல புருடர்+புருடிகளுடன் இணைந்து ‘பணி’ப்பிணி வேறு புரிந்திருக்கிறேன். பாம்பின் கால் பாம்பறியும். நன்றி.
தற்காலத் தமிழ் எழுத்தாளர்களை, அதாவது, அவ்வப்போதாவது நான் படிக்கும் பாக்கியம் பெற்ற, படுதெகிர்யம் மிக்க நெஞ்சுரம் படைத்த (heart fertilizer armylike) எழுத்தாளர்களை, மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்:
1. அறச்சீற்றத்தோடு அட்ச்சுவுடுபவர்கள்
2. அறச்சீற்றத்தோடு அட்ச்சுவுடுபவர்கள்
3. அறச்சீற்றத்தோடு அட்ச்சுவுடுபவர்கள்
…சரி. இப்போது மேற்கண்ட பகுப்புகளைச் சுருக்கமாக எடுத்துக்காட்டாதுகளுடன் சுருக்கமாகப் பார்க்கலாம்:
ஆனால் – இருத்தலியலில் மூழ்கியலாகி தத்தளித்தலியலில் பாதிக்கவியல் பட்டு அன்னியமாதலியலில் அநியாயத்துக்கு ஈடுபடுதலியலாகும் கூறுகெட்ட தண்டச்சம்பள ஐடி குமாஸ்தாவியலாள வாசகர்கடிதவியலாளர்களுக்கு மிகச் சரியாகவே அறிவுரையியல் தருகிறார்கள். ‘டேய், கவிதையாடா எள்தறே நீ? ங்ஙொம்மாள, போய் ஆவற வேலையப் பார்டா!’
ஏனென்று கேட்டால் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தைக் குறித்து அவர்களுக்கு முழ நீளத்துக்கு லத்தீன் மொழியிலேயே எழுத முடிவதால், அவ்வெழுத்துகளைப் படிக்கும் சகிப்புத்தன்மையற்ற மோதி பதவிவிலகவேண்டும் என்பார்கள்.
தனக்கு இலக்கிய நொபெல் பரிசை அளிக்காத அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போன்றவர்களெல்லாம் ஒரு சீட்டாட்டமா என விசனத்துடன் கேட்பார்கள். எனக்கும் ட்ரம்பை விட்டால், இந்த அமெரிக்கர்களுக்கு வேறு கதியேயில்லையா எனத்தான் தோன்றுகிறது. ஏன் ஒரு ரம்மியையோ ப்ரிட்ஜையோ, ஏன் ஒரு மூணுசீட்டோ அந்த ஆனானப்பட்ட அமெரிக்காவில் கிடைக்கவில்லையா என்ன? :-(
3. மூன்றாம்தர எழுத்தாளர்கள் கர்மசிரத்தையாக டவுன்லோட் செய்கிறவர்கள். பின்னர் சிலபல நெகிழ்வாலஜி நகாசுவேலைகளைச் செய்து, உட்கார்ந்த இடத்திலிருந்தே அப்லோட் செய்கிறவர்கள். + ஒழிகிற நேரத்தில் அணுக்கரு சக்தியையும் சார்லிசாப்ளினையும் ஆராய்ச்சி செய்து உலக சினிமா முதல் கார்ல்மார்க்ஸ் ஊடாக நீட் பரீட்சைவரை ஒர்ரே கருத்துக் கும்மாளம்.
இப்போது தம் எழுத்துகளைத் தாமே பதிப்பித்துக்கொண்டு தம் எழுத்துகளின்மீது பித்துக்கொண்ட பித்துக்குளிகளுக்கெல்லாம் பரிமாறப் போகிறார்களாம் வேறு. கொஞ்சம் நடுக்கமாகவே இருக்கிறது.
வாழ்க கருத்துச் சு தந்திரம்.
-0-0-0-0-0-
ஆகவே, கூறுகெட்ட சகதமிழ் வாசகர்களே! ஒரு சராசரித் தமிழ் எழுத்தாளச் சிகாமணியையும் பாம்பையும் ஒருசேரப் பார்த்தால் – யாரையும் எதனையும் அடிக்கவேண்டாம்.
மிகச் சாத்வீகமாக, பின்னங்கால் பிடறியில் படப் புறமுதுகிட்டு ஓடினால்போதும்.
ஊக்க போனஸாக, அப்படித் தெறிந்து ஓடுவதற்கு முன்னால், அந்தப் பாம்பை அச்சிகாமணிகளின் ஓளிவட்டங்களிலிருந்து அகற்றி பத்திரமாக ஒரு πயில் போட்டுக்கொண்டு, அந்தப் பாவப்பட்ட ஜந்துவுக்கேற்ற சுற்றுச்சூழலில் மிகுந்த கவனத்துடன் சேர்ப்பித்தால் அது ஒரு ஆகச் சிறந்த ;-) காத்திரமான சமூகப் பங்களிப்பு.
நன்றி.
-0-0-0-0-0-0-
ஆகவே, நான் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்தும் களப்பிணிகளிலிருந்தும் டெம்பரவரியாகத் தப்பித்து, கொடைக்கானல் பக்க மலைச்சரிவொன்றில் என் நண்பனின் அழகுக் குடிலில் தஞ்சம் அடைந்திருக்கிறேன். நன்றி.
ராயல் என்ஃபீல்ட் புல்லெட்டும் மழையும் மேகமும் குளிரும் பச்சைப்பசேலும் (+ அறிவியல்புலப் புத்தகங்களும், தொடர் தேநீர்க்கோப்பைகளும்) என் மகனுடன் பேய்க்கதையாடல்களும் இருக்கையில் எனக்கெதற்கு அலக்கியம், சொல்லுங்கள்?
—-
September 27, 2017 at 18:56
சார் இதுக்கு நீங்க ஜெமோ, சாரு, எஸ்ரா இவங்களையெல்லாம் படிக்காதீங்கன்னு சொல்லி இருக்கலாம்… ஆனாலும் உங்களுக்கு நக்கல் ஜாஸ்தி போங்கோ!
September 27, 2017 at 19:27
யோவ் லெனி, நான் சொல்லவராததையெல்லாம் சொல்லவந்துவிட்டமாதிரியாகச் செய்தியைத் திரிப்பதை மிகக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.
மேலும் நீங்கள், ‘நரசுஸ் காப்பி’ உசிலைமணித்தனமான தமிழைக் கிண்டல் செய்வதன்மூலம் உங்கள் ஜாதிக்காழ்ப்பை அப்பட்டமாகக் (=that kitelike) காண்பிப்பதை ஊக்கபோனஸாக ஆட்சேபிக்கிறேன்.
நன்றி! (இல்லை)
September 28, 2017 at 09:15
>ராயல் என்ஃபீல்ட் புல்லெட்டும் மழையும் மேகமும் குளிரும் பச்சைப்பசேலும் (+ அறிவியல்புலப் புத்தகங்களும், தொடர் தேநீர்க்கோப்பைகளும்) என் மகனுடன் பேய்க்கதையாடல்களும் இருக்கையில் எனக்கெதற்கு அலக்கியம், சொல்லுங்கள்.
கொடுத்து வைத்தவர். Zen and the art … மாதிரி ஒரு புத்தகம் எழுதுங்கள்.
September 28, 2017 at 15:08
இல்லையப்பா ஸ்ரீதர், நான் கொஞ்சம் பி(ர்)ஸி(க்). ;-)
கேரட்டுகளை அறுவடை செய்துகொண்டிக்கிறோம். ஆகவே நல்ல புத்தகங்களை எழுதும் ஆக்கபூர்வமான வேலைகளை சாய்ஸில் விட்டுவிடுகிறேன். நன்றி.
நிற்க. விக்ரம் ராகவன் அவர்களுடைய நண்பர் ஒருவருடன் பூகொ சரவணன் அவர்கள் எழுதிய ஆஸ்டின் க்ரன்வில் விவகாரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன்.
பூகொ அவர்கள் அறியாமையில் ஏதோ எழுதியிருக்கிறார். அல்லது மனதாறப் பொய் சொல்லியிருக்கிறார். அல்லது எவன் சரிபார்க்கப் போகிறான் என அட்ச்சுவுட்டிருக்கிறார். இது குறித்து எழுதவேண்டும். சரியா?
மறுபடியும் நன்றி.
September 29, 2017 at 18:50
ஒன்னும் மட்டும் உறுதி – நீங்க எல்லோரையும் தொடர்ந்து படிக்கிறீங்க ;-)
September 30, 2017 at 07:03
:-( எஸ்ரா, சாரு எப்போதாவது – கிண்டல் மகிழ்ச்சிக்காக. அதுவும், எனக்கு முன்னறிமுகமானவர்கள் யாராவது ‘படி’ என்று சுட்டியைக் கொடுத்தால். ஜெயமோகன் தளத்தை முடிந்தவரை. அதுவும் எல்லாமுமல்ல. என்னால் வெண்முரசைப் படிக்கமுடியவில்லை, என் சொந்தப் பிரச்சினை. அவ்வளவுதானய்யா. :-(
தொடர்ந்து எல்லாவற்றையும் படிக்க வாய்ப்போ மனதோ இல்லை. இதற்குப் பல காரணங்கள். முக்கியமான காரணம் – சுமார் 50% வாழ்நாட்கள் கழிந்துவிட்டன. :-)