அவசரத் தேவைக்கு ஒரு ஸென்ட்ரிஃப்யூஜ் செய்துகொள்வது எப்படி

May 11, 2017

இந்த centrifuge எழவை மிகவும் தமிழ்ப் படுத்தி எடுத்தால் ‘மைய விலக்கு விசைப்பொறிப் பிரிப்பி’ என விரியும். High speed centrifuge எழவானது – ‘அதிவேக மைய விலக்கு விசைப்பொறிப் பிரிப்பி‘ என முழ நீளத்துக்கு விரியும். தேவையா?

நமக்குத் தேவை தமிழை மேன்மைப்படுத்துவதற்கான, செழுமைப் படுத்தவதற்குத் தோதான திசைச் சொற்கள்.  இவற்றின் மூலம் விஷயங்களைப் பரிமாற்றம் செய்துகொள்வது வசதி, இது முக்கியமும் கூட.

தமிழெழுத்து வரிவடிவத்தின் மகாமகோ குறைபாடான ஒரு உருவத்துக்குப் பலப்பக உச்சரிப்பு வழிகளையும் – நாம் முடிந்தவரை தவிர்க்கவேண்டும்.

அவ்வளவே.

அயோக்கிய திராவிடத்தனமான போலிப் பாசாங்குத் தமிழ்வெறி வேண்டாம். நம் பாரம்பரியத்தில் நமக்கு வாய்த்துள்ள எழுத்து வடிவங்களை, கலாச்சாரக் கூறுகளை வெறுப்பது, உதாசீனம் செய்வது என்பது –  நம் விசால மனப்பான்மையுடைய பாரம்பரியத்தை, நம் மூதாதையர்களை ஏகோபித்து வெறுப்பதற்குச் சமம்.

தமிழ்வெறி தலைக்கேறியதால் ஏற்படும் இவ்வெறுப்பு எனும் புற்றுநோயானது – நம்மை ஒற்றைப் படைத்தனமான மதவாதங்களுக்கும் ஒண்ணரைக்கண் தரிசனங்களுக்கும், வறட்டு மனப்பான்மைகளுக்கும் இட்டுச் சென்று —  சமூகம் மலடாக்கப்படுவதிலும் வன்முறைப் பொறுக்கிமுதல்வாதம் மூலமாக இஸ்லாமிக் ஸ்டேட் வஹ்ஹாபிய ஸலாஃபிய வகையறா தீவிரவாத முட்டுச் சந்தில் போய் முடியும்.

…நமக்கு, நம் பிள்ளைகளுக்கு, வருங்கால சந்ததியர்களுக்கு… இது தேவையா என்ன?

ஆகவே ஸென்ட்ரிஃப்யூஜ்.

சர்வ நிச்சயமாக… செண்டிரிபூசு அல்ல அம்மணிகளே, அம்மணர்களே! மன்னிக்கவும்.

ஆக, நம் செல்லத்திராவிடர்களின் தமிழொழிப்பை எதிர்கொள்வது இப்படி!

-0-0-0-0-0-0-

ஐந்தாவது படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு ஒரு பிரச்சினை. அவர்களுக்கு, திரவங்களில் கரைந்திருக்கும்/கலந்திருக்கும் பொருட்களை வடிகட்டி, பின் துப்புரவாகப் பிரித்து எடுக்கவேண்டும்.

ப்ளாஸ்டிக் வடிகட்டி ஒன்றை உபயோகிக்கலாம். ஆனால்  பொதுவாகவே, வடிகட்டி எழவின் பிரச்சினை என்னவென்றால் அதன் வலைப் பின்னற் துளைகளின் அளவு எனும் கெடுபிடி – இதனை நம்மால் குறைக்கவோ அதிகப் படுத்தவோ முடியாது. மேலும், இவ்வடிகட்டிகளை மறுபடியும் மறுபடியும் உபயோகித்தால் துளைகள் அடைபட்டு இந்த ஃபில்டர் / ஸ்ட்ரெய்னர் படுமோசமாகச் செயல்படும். வடிகட்டிக் காகிதம் கீகிதம் என்று அலைவதெல்லாம் ஒத்துவராது, பரிசோதனை முறைக்கும் தோதாகாது.

ஸென்ட்ரிஃப்யூஜ் ஒன்றை, பள்ளி ஆய்வகத்திற்காக வாங்கலாம் என்றால் பல்லாயிரக் கணக்கில் செலவழிக்கவேண்டி வரும். அதை அப்படியே வாங்க முடிந்தாலும் ஒருமாதம் போலப் பொறுத்திருந்து அது நம்மை வந்தடையும் வரை  நெட்டி முறித்துக் கொண்டிருக்கவேண்டும். வந்த பின் அதனைப் புரிந்துகொண்டு அதனைப் பராமரிப்பு  செய்யவேண்டும் என்பதற்கு அப்பாற்பட்டு அதனை விதம்விதமான பிற விஷயங்களுக்கு உபயோகிக்கவேண்டும், அதற்குக் கொஞ்சமாவது ஆர்வமும் படிப்பறிவும் கற்பனையும் வேண்டும். நம்மில் பலரிடம் இதற்கு ஏகோபித்த தட்டுப்பாடு வேறு!

குழந்தைகள் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு சூட்டோடுசூடாக வேண்டிய உதவிகள் செய்யாமல் இருப்பது அசிங்கமான விஷயம். ஏனெனில் ஆசிரியர்களோ பெற்றோர்களோ – குழந்தைகளுடைய  நியாயமான தேவைகளை மதித்து அவர்களுக்குத் திறப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதுதான் அவர்களுடைய தலையாய பணி. (ஆனால் நம்மில் பலருக்கு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவதுதான் உச்சகட்ட சமூகப் பங்களிப்பு! வாழ்க!)

குழந்தைகளின் ஆர்வத்துக்குத் தடையாக இருக்கவே கூடாது – இல்லாவிடில் முதல் கோணல் முற்றும் திராவிடம் என்றாகிவிடும்…

சரி.  ஒரு மிகமிகச் சரியான விலையுயர்ந்த கருவி கிடைக்கும் வரை நாம் நம்முடைய பரிசோதனைகளைச் செய்ய ஆரம்பிக்கக்கூட மாட்டோம் எனும் மனப்பான்மை – நம் நிதிப் பற்றாக்குறைச் சூழலில் ஒத்துவராது. மாறாக – நம்மிடம் இருக்கும் பொருட்களை, சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும் சமாச்சாரங்களை உபயோகித்து – முடிந்தால் (திராவிடத்தால் காயடிக்கப்படாமல் இருந்தால்) கொஞ்சம் சொந்த மூளையையும் நேரத்தையும், முதலீடு செய்தால் பல விஷயங்களையும் செய்துவிடமுடியும். ஏனெனில் நான் The Art of the Possible என்பதை மனப்பூர்வமாக ஆராதிப்பவன்.

-0-0-0-0-0-

ஆக, எங்களிடம் இருந்த தட்டுமுட்டுச் சாமான்கள், பைண்டிங் வயர், டெஸ்ட்ட்யூப்கள், ஒரு போல்ட்+நட், ஒரு சாதா ட்ரில் – இவற்றை உபயோகித்து அரை மணி நேரத்தில் ஒரு ஸென்ட்ரிஃப்யூஜ் செய்தோம். மிக நன்றாக உழைக்கிறது இது. :-)

 

கீழே, எங்கள் செல்ல ஸென்ட்ரிஃப்யூஜ் என் கையுடன் சேர்ந்து கைகோர்த்துக்கொண்டு தன்னைத்தானே எடுத்துக்கொண்ட ஸெல்ஃபி.

குழந்தைகள் தயிரிலிருந்து ஆரம்பித்து சாக்கடை நீர் வரை அப்படியொரு ஸென்ட்ரிஃப்யூஜ்வகை பிரிப்பைச் செய்த வண்ணம் இருந்தனர். ஓரிரு டெஸ்ட் ட்யூப்கள் உடைந்தும் போயின.

மேலதிகமாகப் பிள்ளைகள், பற்சக்கரங்கள் பற்றிய அடிப்படைகளைக் கற்றுக் கொண்டார்கள். மைய ஈர்ப்பு விசை, மைய விலக்கு விசை பற்றியெல்லாமும் கூட.

என்னைப் பொறுத்தவரை அவர்கள் கற்றுக்கொண்டிருக்கக்கூடிய விஷயங்களில் முக்கியமானது – இந்த The Art of the Possible. முடியும் எனும் கலை.

இந்த ‘நம்மால் முடியும் எனும் கலை’  என்பது சர்வ நிச்சயமாக – வெறும் இசுடாலிர் வகையறா வறட்டுத்தனப் பசப்புரையான ‘நமக்கு நாமே’ ஒப்பேற்றல் அல்ல. மன்னிக்கவும்.

-0-0-0-0-0-

கூடிய விரைவில் ஒரு பழைய ஹார்ட் டிஸ்க் ஒன்றைக் கழற்றி அதன் மோட்டரை வைத்துக்கொண்டு – அதைப் பிரித்தெடுத்தோ பிரிக்காமலேயோ – ஒரு அதிவேக ஸென்ட்ரிஃப்யூஜ் செய்துகொடுக்கவேண்டும் எனவொரு திட்டம். பார்க்கலாம். :-)

Yes! ‘The Art of the Possible’ will delivereth us unto the future. Amen.

 இது தொடர்பாக, டமிள் வறிவடிவம் குரித்து மேலும் மண்டையில் அடித்துக்கொண்டே படித்தழ:

8 Responses to “அவசரத் தேவைக்கு ஒரு ஸென்ட்ரிஃப்யூஜ் செய்துகொள்வது எப்படி”

 1. nparamasivam1951 Says:

  நமக்கு நாமே-உன்னத கொள்கை.

  • Sudharsan Krishnan Says:

   வணக்கம் ராமசாமி ஆசானே ,
   முன்பே உங்களுக்கு தெரிந்திருக்க வாயப்பு உள்ளது இருந்தாலும் என் ஆசைக்கு.
   ஜப்பானிய மொழயில் hiragana மற்றும் katakana என்று எழுத்துக்கள் உள்ளன.
   வெளியிலிருந்து வந்த எல்லா வார்த்தைகளையும் katakana வினால் எழுத்திலும் பேச்சிலும் வேலையிலும் உபயோகிக்கிறார்கள், அழகாக பிரித்து வைத்துள்ளார்கள் உதாரணம் : Computer என்பதை கம்பியூட்டா (kamputa )அல்லது பசோகொண் (Personal Computer என்பதின் short form ), Monitor என்பதை மொனிட்ட மற்றும் Television ஐ terebi என்றே அழைக்கிறார்கள். கணினி, சின்ன திரை,அலைபேசி என்று நாம் கண்டுபிடுக்காத வெளியிருந்து வந்தவற்றை சங்கத்தமிழில் உள்ளது போல மொழிபெயர்ப்பு செய்வது நீங்கள் சொல்வது போல் திராவிடத்திலே பிறந்து ஊறியவர்களால் மட்டுமே முடியும் செயல்.
   தமிழ் வழி கல்வி படித்த எனக்கே பாதி புரியவில்லை. மிகவும் கடினமாக உள்ளதாக உணர்கிறேன்.
   நன்றி


   • ​ஆ!

    யோவ்! இன்னாபா இத்து! பேராசான் கீராசான்னிட்டு சொல்றீங்க! ஒர்ரே பயம்மாக் கீதே!

    என்னோட பெத்த பேராசானுங்கோ எஸ்ரா அய்யா,எம்மான் அரவிந்தன் கண்ணையன், வொட்ன்பெற்ப்பு யுவகிருஸ்னா, பொறம் பாலிட்டிக்கிச் நீலகண்டனார், அதிசா வே வருக ன்னிட்டு அல்லார்கிட்டயும் பர்மிசன் வாங்கிக்கினுதாம்பா, என்ன இப்டீ கூப்டமுடியும்! அவ்னுங்கோ கோய்ச்சிக்கப் போறானுவங்கோ! அத்து வேற பெரச்சினை!

    அய்யா, மொழிப்பற்று என்பது ஒன்று, மொழிவெறி என்பது இன்னொன்று. பிற நாடுகளைப் போலல்லாமல் நம்மிடம் திராவிடர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டால் தமிழகத்தின் பிரச்சினைகளை மிகச் சரியாகவே புரிந்து கொள்ளலாம்.

    ஹ்ம்ம்ம்… உலகில் இரண்டே இரண்டு மொழிகளில் தான் இப்படிப்பட்ட மொழிவெறி அயோக்கியத்தனமும் சின்னத் தனங்களும் இருக்கின்றன. ஒன்று தமிழ். இன்னொன்று அரபிய மொழி. தமிழ்வெறி தமிழ் நாட்டில் மட்டும்தான் (நல்லவேளை!) இருக்கிறது. ஆனால் அரபிய மொழி. ம்தத்தோடு சேர்ந்து கலந்துகட்டிக்கொண்டு பறந்ட்ஜ்ஹுக் கொண்டிருக்கிறது. இது சோகம்தான்!

 2. ஆனந்தம் Says:

  இது செயல்படும் விதத்தை ஒரு வீடியோவாக எடுத்து இக்கட்டுரையிலேயே சேர்த்துவிட்டால் நன்றாக இருக்குமே. ஆர்வமாக இருக்கிறேன்.


  • :-( அடுத்தமுறை இப்படி எத்தையாவது நோண்டும்போது நினைவில் வைத்துக்கொள்ள முயல்கிறேன். ஒரே பிரச்சினை என்னவென்றால் – அவற்றைப் பற்றி எழுதி மினுக்கிக் கொள்வதற்கு அவகாசம் கிடைக்கவேண்டும்… ஹ்ம்ம்…

   (ஆனால் நீங்கள் யூட்யூப் தேடலில் ஈடுபட்டால், இது எப்படி செயல் படும் என்பதைத் தெரிந்துகொள்ளலாமே!)


 3. மத்து, எந்திர மத்து, அதிவேக எந்திர மத்துன்னு சொல்வதை விட்டுவிட்டு, இப்படி சொல்லால் வதைக்கிரீர்களே!


  • மத்து? ஆ!
   மத். கபீ நஹி.
   இரண்டுக்கும்
   ஒரே பின்புலம்
   இருந்தாலும் திரண்டு வருவதில்
   இருக்கிறது அய்யா சூட்சுமம்.

 4. Kannan Says:

  enna ezhavo? aana nalla irruku :) keep it up.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s