11-17 வகைகளில் ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி?(க்றீச்சிடுதல் (5/n))
September 13, 2018
biodynamics & vegetable production workshops
August 6, 2018
Till circa 3 years back, I was a regularly practicing biodynamic gardener, though lately my foci have shifted elsewhere. Read the rest of this entry »
திராவிடர்கள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் அல்லர் – மாறாக, சந்தேகமேயில்லாமல் பத்தரை மாற்றுத்தங்கங்கள்!
February 25, 2018
கிண்டலுக்காக அல்ல, உண்மையைத்தான் சொல்கிறேன். :-( Read the rest of this entry »
குர்திஸ்தான், அமெரிக்காவின் பொறுப்பு, சோகம் – சில குறிப்புகள்
November 8, 2017
அக்டோபர் 16 – அன்று இதைக் கேள்விப்பட்டதும் எனக்குக் கொஞ்சம் சோகமாகி விட்டது. :-( என்னதான் வீரியமிக்க தமிழ் இலக்கியக்காரர்களைப் படித்தாலுமேகூட என்னால் ஓரிரு நாட்களுக்கு வாய்விட்டுச் சிரிக்கவே முடியவில்லை. கொடுமைதான். Read the rest of this entry »
உண்மையில், இவர் விடுதலை வீரமணி என்பதிலிருந்து படிப்படியாகத் தேய்ந்து திராவிடலை வீரமணியாகவே ஆகிவிட்டார்! மனிதர், தொடர்ந்து அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டேயிருக்கிறார். Read the rest of this entry »
நடைமுறை அரேபிய இஸ்லாம், சோகங்கள்: சில குறிப்புகள்
August 1, 2017
மனது ஒரு நிலையில் இல்லை. Read the rest of this entry »
ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள் — தொடர்கின்றன…
…கவலை வேண்டேல். இதுதான் கடைசி. (ஹ்ம்ம்… + 1 வரலாம். திருவண்ணாமலைக்காரர் தொடர்பதிவுக்காகப் பிடுங்கி எடுத்ததினால் இப்படி. மன்னிக்கவும்)
ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள்
June 26, 2017
ராம்நாத் கோவிந்த் அவர்களைப் பற்றி – அவர், நம் ஜனாதிபதியாகப் போவதைக் குறித்து, நம்மில் பலருக்கும் பலப்பலப் பலான பிரச்சினைகள், என்ன செய்வது சொல்லுங்கள்? Read the rest of this entry »
இப்படியாகத்தானே மே2017ல் மூன்று வாரங்கள் கழிந்தன… Read the rest of this entry »
மறுபடியும் மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள்
April 14, 2017
திரியாவரத்தனமில்லாத புத்திசாலிகளுடனும் பேசுவது ஒரு அணுக்கமான அனுபவம் என்றால் அப்படிப்பட்டவர்களில், செயலூக்கமும் தளராமுயற்சியும் நமது பாரதத்தின் மீது மாளாக் கரிசனமும் நேர்மையும் உடையவர்களுடன் பேசுவது மேலதிகமாகச் சுகத்தையும் திருப்தியையும் – ஆகவே, எதிர்காலத்தின்மீது ஒரு நன்னம்பிக்கையையும் ஒருங்கே அளிக்கும் சமாச்சாரம். Madhuji is one such person who is absolutely non-partisan and a very sane headed pragmatist at that. A real doer. Read the rest of this entry »
எனக்குப் பிடித்தமான திரைப்பட இயக்குநர்கள் எனச் சிலரை மிகஅணுக்கமாக மாளாப்பேராசையுடன் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களில் இந்த மகாமகோ தார்கொவ்ஸ்கியும் ஒருவர். (இந்த ஜாபிதாவில் இருக்கும் இந்தியாகாரர்கள் ரித்விக் கட்டக், இப்போது – கொஞ்சம் யோசனைக்குப் பிறகு ஸத்யஜித் ராய்) Read the rest of this entry »
ஜிரொ டனிகூசி – குறுங்குறிப்புகள்
February 16, 2017
சில நாட்கள் முன் இவரும் (=Jiro Taniguchi) போய்ச்சேர்ந்துவிட்டார் என இன்று அறிந்துகொண்டேன்: Japanese manga artist Jiro Taniguchi dies aged 69
#தமிழண்டா!
January 31, 2017
இந்தத் தமிழேண்டா, திராவிடண்டா, வீரமறவன்டா, வீழமாட்டோம்டா, வீரிட்டெழுவோம்டா, வீரவேல்டா, வெற்றிவேல்டா, வாளாவிருக்கமாட்டோம்டா, வாளைச் சுழற்றுவோம்டா, திமிறி எழுவோம்டா, திர்ப்பி அடிப்போம்டா, நெருப்புடா, செருப்புடா++ வீரவசனக் கொந்தளிப்புக் கோமாளி வகையறா தினவாளர்களைக் கவனிக்க நேரும்போதெல்லாம் சங்கடமாகவும் கூச்சமாகவும் (கொஞ்சம் கோபமாகவும், மிகவும் வெறுப்பாகவும்) இருக்கிறது; ஜிகினா மினுமினுக்கும் அவர்களுடைய அட்டைக்கத்திகளைப் பிடுங்கி சகதிராவிடர்களுக்கு ஈந்து இனமானக் கழுதைகளின் பசியை ஆற்றலாம் எனப் படுகிறது. ஆகவே முத்தாய்ப்பாக மட்டுமே, முக்கியமான இந்தக் கருத்துப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன், இந்தப்பதிவை வெறும்வெட்டி நகைச்சுவை – என நினைக்காதீர்கள். படு ஸீரியஸ் கட்டுரைதான் இது. கவலை வேண்டேல். சரியா? (இதில் சுமார் 2350 வார்த்தைகள்; ஸாரி, கொஞ்சம் ஓவர்தான்!)
கருத்துப்படம் #1: தமிழண்டா! ^%&*$#@!
Read the rest of this entry »
யுஃப்ரெடீஸின் சீற்றம் (Wrath of Euphrates) – இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு எதிரான குர்தி+அமெரிக்க+ஸிரிய வீரர்களின் முன்னெடுப்பு
January 17, 2017
கடந்த அக்டோபர்2016லிருந்து இஸ்லாமிக் ஸ்டேட் வெறியர்களின் ‘தலை’நகரான ரக்கா-வைப் பிடிப்பதற்காகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் யுத்தம்தான் இந்த ரேத் ஆஃப் யுஃப்ரெடீஸ். இதற்கு உலகம் கொடுக்கும் விலை மிக அதிகம் என்றாலும் (இதில் பெரும்பாலும் குர்திகளின் ரத்தம்தான் தியாகம் செய்யப் படுகிறது; மற்ற ‘இஸ்லாமிய’ தேசங்களெல்லாம், தங்கள் சொந்தச் சாக்கடையை ‘யுஃப்ரெடீஸின் சீற்றம்’ சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது, ஆனந்தமாகத் தம் பெண்பிள்ளைகளை ஒடுக்கிக்கொண்டு 1500ஆண்டுகளுக்கு முன் சென்று வாழ்வாங்குவாழ்வது எப்படி எனக் காலட்சேபம் செய்து கொண்டிருக்கிறார்கள்!) கொஞ்சம்கொஞ்சமாக அயோக்கியம் நசுக்கப்பட்டுகொண்டிருக்கிறது. Read the rest of this entry »
பாஸ்டனூர் சுற்றிப் புராணம் – சில குறிப்புகள்
October 21, 2016
கடந்த பதினைந்து-இருபது ஆண்டுகளாக, இந்தக் ‘கடவுளின் சொந்த நாடு’ எழவுக்குச் செல்வதை தவிர்த்து வந்திருக்கிறேன் என்றாலும், இக்காலங்களில், என்னுடைய இந்த அடிப்படை உரிமையை நிலை நாட்ட முடியவில்லை. எடுத்துக்கொண்டிருக்கும் காரியம் அப்படி. காலத்தின் கந்தறகோளம்தான் இது, வேறென்ன சொல்ல…
ஜான் பெர்ரி பார்லொ – ஒரு கோரிக்கை
October 12, 2016
இதனைப் படிக்கப்போகும் ஓரு சிலருக்கு இந்த விண்ணப்பம் (= SkyBread ©எஸ்.ரா; ஆனால் மன்னிக்கவும், இது விண்ஆப்பம் அல்ல – இதனை அவர் எப்படிப் பெயர்த்துத் தள்ளுவார் என்பதை நினைத்தாலே எனக்கு ஏடாகூடமாகக் கதிகலங்குகிறது! அது SkyAngloIndian என விரியுமோ என்ன எழவோ!).
(குறைந்த பட்சம் – அந்த எழவெடுத்த அமெரிக்க ஸிலிக்கன்வேலி பகுதியில் வசிக்கும், அமெரிக்கத் தேர்தல் தொடர்பாக உட்கார்ந்த இடத்திலிருந்தே நக்கல் கருத்துகளை உதிர்க்கவேண்டிய ஜனநாயகத்தேவை அவசியம் இருந்தாலும் வேலைவெட்டியற்றுத் தொடர்ந்து இந்த ஒத்திசைவுக்கு வரும் பாவப்பட்ட அந்த மூன்று நண்பர்களுக்காவது இந்த விண்ணப்பம்! டேய் பசங்களா – வங்கிக் கணக்கில், மாதாமாதம் ஏறிக்கொண்டிருக்கும் டாலர்களை சும்மாச்சும்மா எண்ணிக்கொண்டே, அதேசமயம் சீப் ஃளைட்டுகளுக்காக, ‘டீல்’களுக்காக ஏங்கிக் கொண்டே இருக்காமல் – பெண்பிள்ளை வளர்ந்துகொண்டிருப்பதால் (ஆகவே ‘வேர்களைத் தேடுவதாக’ பாவலா பண்ணிக்கொண்டு) இந்தியாவுக்குக் கண்டிப்பாக அடுத்த வருடம் மூட்டையைக் கட்டிக்கொண்டு போய்ச் சேர்ந்தேயாகவேண்டும் என வெட்டிக் கனவு கண்டுகொண்டிருக்காமல் – உருப்படியான அமெரிக்கக் காரியங்களுக்கும் உதவி பண்ணுங்கடா. ங்கொம்மாள… பெருஸ்ஸா க்ரீன்கார்டும் குடியுரிமையும் வாங்கிக்கினுதானாடா அமெரிக்காவ முன்னேத்தப் போற்றீங்க? போக்கத்தவனுங்களா…)
சரி. ஜான் பெர்ரி பார்லொ – இந்த இணைய உலகத்திலும் அதற்கு அப்பாற்பட்டும் பலதளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் மகாமகோ மனிதர். *பொக்கிஷம்*. அவருடைய ஆரோக்கியத்துக்காக, மருத்துவச் செலவுகளுக்காக இந்தக் கோரிக்கை. முடிந்தால் – நம் அனைவராலும் உதவப்படவேண்டிய நபர்தான் அவர்.

-0-0-0-0-0-0-0-0-0- Read the rest of this entry »
அஹ்மெத் ஷா மஸூத், பஞ்ச்ஷேரின் சிங்கம், ஆஃப்கனிஸ்தானின் ஒப்பற்ற தலைவன்: சில குறிப்புகள், படங்கள்
September 9, 2016
“எவ்வளவோ வரலாற்று நாயகர்கள் இருந்திருக்கிறார்கள்… ஆனால் அவர்களில் பலரும் – பாடப்படாமல், பேசப்படாமல், போற்றப்படாமல் ஏகோபித்த இருளில் மறைந்துவிட்டார்கள்; ஏனெனில் அவர்களைப் பற்றிய நினைவுகளை எழுதக்கூடிய வீரியம் மிக்கவர்கள் இல்லை…”
க்வின்டுஸ் ஹொராடியஸ் ஃளாக்கூஸ் (65 – 8; ஏசு பிறந்ததற்கு முன்னால்) (எனது மேற்கண்ட நிர்மூலத்தின் லத்தீன்வழி ஆங்கில மூலம்= Many heroes lived . . . but all are unknown and unwept, extinguished in everlasting night, because they have no spirited chronicler)
மகாமகோ அஹ்மெத் ஷா மஸூத், சந்தேகத்திற்கிடமின்றி நமது சமகால வரலாற்று நாயகன் தான்! பலப்பல போற்றுதற்குரிய கல்யாண குணங்களை உடையவன்; வாழ்க்கையைத் தீவிரமாக அணுகியவன், புத்திமான். பலவான். மிக முக்கியமாக, அவன் மிக அற்புதமான மனிதன்.
சர்வ நிச்சயமாக, நான் மகாமகோ வீரியமுள்ள எழுத்தாளன் என்றெல்லாம் இல்லை. ஏன், சொல்லப்போனால், நான் எழுத்தாளனேகூட அல்லன். ஆனால், அஹ்மெத் ஷா மஸூத் போன்றவர்கள் மறக்கப் படவே கூடாது. அவர்கள், அபூர்வமாகவே பூக்கும் விடிவெள்ளிகள்.
ஆகவேதான் இதனைப் பதிக்கிறேன்..
இதற்கு முகாந்திரம் – ஜெயமோகன் அவர்களுடைய ‘வளரும் வெறி‘ எனும் 6, ஃபெப்ருவரி 2016 அன்று வெளிவந்த கட்டுரை.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இதனை நான் எழுத ஆரம்பித்தேன். அரையும் குறையுமாய் இருக்கும் என்னுடைய பலப்பல வரைவுப்பதிவுகள் போலவே இதுவும் பாவப்பட்ட நிலையில் இருந்தது; இன்று கொஞ்சம் சமயம் வாய்த்திருப்பதால் தூசிதட்டி இதனைப் பதிப்பிக்கிறேன். Read the rest of this entry »
(எனக்குத் தற்போது சுமார் 70 நிமிடங்களுக்கு இணைய இணைப்பு, ஒரு லேப்டாப் எழவுடன் கிடைத்திருக்கிறது; ஆகவே இந்தப் பதிவை அவசரம் அவசரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்; ஆகவே, என் தட்டச்சுத் தவறுகளை மன்னிக்கவும்!) Read the rest of this entry »
aao77ckn
May 31, 2016
கடந்த சில நாட்களாக ராஜஸ்தானின் ஒரு வறண்ட டொக்கில் ஆசிரியர் பயிற்சி முகாம் ஒன்றில் வேலை.
சிலபல கணிநி-சார் கற்பித்தல்களுக்கான முஸ்தீபுகள் – அறிவியல், கணிதம் என. கணிநிகள் எப்படி நம் நண்பர்கள், அவற்றிடமிருந்து வேலை வாங்கிக்கொள்வது எப்படி, அவை கொடுக்கும் கஷ்டங்களை நிவர்த்தி செய்துகொள்வது எப்படி என்றெல்லாம் விரிந்தன/விரிகின்றன அவை… பயிற்சிமுகாம் பெரும்பாலும் ஹிந்தியில் தான் நடந்தது. ஆகவே கொஞ்சம் தடுமாறிவிட்டேன். ஏனெனில் ஹிந்தி கலைச்சொற்கள் பலவும் என் மண்டையில் இல்லை. ‘ஏக் கான்வ் மே, ஏக் கிஸான் ரகுதாத்தா’ பாக்கியராஜ் பலமுறை நினைவுக்கு வந்தார். :-(

