குர்திஸ்தான், அமெரிக்காவின் பொறுப்பு, சோகம் – சில குறிப்புகள்

November 8, 2017

அக்டோபர் 16 – அன்று இதைக் கேள்விப்பட்டதும் எனக்குக் கொஞ்சம் சோகமாகி விட்டது. :-( என்னதான் வீரியமிக்க தமிழ் இலக்கியக்காரர்களைப் படித்தாலுமேகூட என்னால் ஓரிரு நாட்களுக்கு வாய்விட்டுச் சிரிக்கவே முடியவில்லை. கொடுமைதான்.

…தோளோடு தோள் சேர்ந்து – கிர்குக் பகுதி இஸ்லாமியஅரசு கொலைகாரர்களை – பெரும்பாலும் குர்தி ரத்தமும் (+கொஞ்சம் அமெரிக்க வகையும்) சிந்தி வெளியேற்றிய பின்னர் (பெரும்பாலும், தம் நாட்டில் நடக்கும் விஷயங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த) இராக்கிய ராணுவம் மும்முரமான வந்து குர்திகளைத் துரத்தியிருக்கிறது. அமெரிக்கா இதனை எதிர்க்கவில்லை. :-(

இது எனக்குக் கொஞ்சம் பொறுப்பற்றதாகப் படுகிறது. என்னைப் பொறுத்தவரை, தொலைநோக்கில் குர்திகள் (இவர்களில் 98% பேர் முஸ்லீம்கள்) மட்டுமேதான் இந்த அரேபிய-மத்தியதரைக்கடல் நாடுகள் மத்தியில் ஜனநாயகத்துக்கும் முன்னேற்றத்துக்கும், மற்ற மதங்களை/நம்பிக்கைகளை மதிக்கும் தன்மைக்கும் தயாராக இருப்பவர்கள். தொடர்ந்து முனைபவர்கள். அமெரிக்கா இவர்களுக்கு உதவி செய்திருப்பதால், அமெரிக்காவுக்கு இவர்கள் எதிர்காலங்களில் அணுக்கமாகவே இருப்பார்கள்.

ஆனால் ஏனோ தெரியவில்லை வரவர இந்த அமெரிக்க அரசு என்னைக் கலந்து ஆலோசிக்கவேமாட்டேனென்கிறது. என்ன செய்ய. :-( என் தற்போதைய எதிரிகள் – எஸ்ரா, நிசப்தம், ஸமோஸா, ராமச்சந்திரகுஹா போன்றவர்கள் ட்ரம்பிடம் போட்டுக் கொடுத்திருக்கவேண்டும் என்பது என் அனுமானம்.

…எது எப்படியோ, இது realpolitik ground-reality வகை.  சில சமயங்களில், எனக்கு இம்மாதிரி அமெரிக்க நடவடிக்கைகள் புரிய கொஞ்ச நாட்களாகிவிடுகின்றன, என்ன செய்வது. :-(

ஆனால் – நாம் மதிக்கும் ஊடகக் காரர்களில் ஒருவரான ஸேத் ஃப்ரான்ட்ஸ்மன் அவர்கள் (என்னைப் போன்ற மடையர்களுக்கு என, ஆனால் தொ. பரமசிவம் அவர்கள் போன்ற மேலான மடையர்களுக்கு அல்ல, கவனிக்கவும்!) விஷயத்தை ஓரளவுக்கு விளக்கியிருக்கிறார். நன்றி ஸேத்ஜி.

முடிந்தால் படித்து யோசிக்கவும்: You’d think the US would stand with Kurds, here’s why America won’t  ( ·

-0-0-0-0-0-0-

நான் மிகமிக மதிக்கும் தைரியசாலியும் முதுகெலும்புள்ள ஊடகக்காரருமான ருக்மணி காலிமாக்கி அவர்களுடைய ட்வீட்கள் இந்தக் கட்டுரையில் இருக்கின்றன. நம்முலகத்தில் இஸ்லாம் காலூன்றி நவீனமாகவும் வளரும் சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கும் இரு பிரதேசங்களில் ஒன்றான குர்திஸ்தானைப் பற்றியவை இவை. (இன்னொரு பிரதேசம், சந்தேகத்துக்கிடமில்லாமல் பாரதம்; தூரத்தில் எங்கோ பின்னே இருப்பது இந்தோனேஷியா – பிற மிகப்பின்னர்)


நானுமே கூட மாய்ந்துமாய்ந்து இந்தப் பாவப்பட்ட குர்திகளுக்காகவென (தமிழில்தான்) எழுதியிருக்கிறேன் –  இரு எடுத்துக்காட்டுகள்:

ஆக, எனக்குக் கொஞ்சம் அலுப்பாகவே இருக்கிறது, என்ன செய்ய…

…இப்போது சொல்லுங்கள், குர்திஸ்தான் கனவு நனவாகவேண்டுமா அல்லவா?

வேண்டுதல்: குர்திஸ்தானுக்குச் சுதந்திரம் கிடைத்தால் – தமிழ் அலக்கியத்துக்கே ஒரு முழுக்குப் போட்டுவிட்டு உங்களையெல்லாம் நிம்மதியாக இருக்கவைக்கத் தயார். ஆனால் காலம் ஒத்துழைக்கவேண்டும்.

-0-0-0-0-

தொடர்பு இருக்கக்கூடும் சில முந்தைய பதிவுகள் – இவற்றில் பல குர்திகளைப் பற்றியவை…

6 Responses to “குர்திஸ்தான், அமெரிக்காவின் பொறுப்பு, சோகம் – சில குறிப்புகள்”

 1. பிரபுதேவா Says:

  ஐயா, குர்திக்கள் இராக்கில் மட்டும் இருந்தால் பெரிய பிரச்சனை இருக்காது. சுற்றி இருக்கும் நாடுகளிலும் இருக்கிறார்கள். குர்திஸ்தான் உதயமானால், துருக்கி, ஈரான் எனப் பல நாடுகள் உடையும் அல்லது உள்நாட்டு போர் துவங்கும் நெருக்கடி இருக்கிறது என்பது என் புரிதல். குர்திக்கள் ஜனநாயகத்திலும் முன்னேற்றத்திலும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்கிறீர்கள். நான் சந்தித்த பார்த்த குர்திக்கள் யாரும் அப்படி இருக்கவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை எனச் சொன்னதற்காக பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்ல மறுத்த குர்திக்களை சந்தித்திருக்கிறேன். ஐரோப்பாவில் உள்ள மசூதிகளில் சத்தமாக ஏன் பாங்கொலி ஒலிக்கக்கூடாது. ஐந்துமுறையும் ஒலிக்க வேண்டும் என விவாதம் செய்த துருக்கிய குர்தி பெண்மணியை அறிவேன்.


  • அய்யா, நன்றி.

   1. துருக்கி இரான் பகுதிகள் கொஞ்சம் கஷ்டம். ஆனால் இராக் ஸிரியா பகுதிகள் இணைவது கொஞ்சம் சுலபம். பார்க்கலாம் எதிர்காலம் எப்படி விரிகிறதென்று.

   2. நான் பேசிய/உரையாடிக்கொண்டிருக்கும் குர்திகள் அப்படியல்லர். ஒருவேளை ஜெர்மனியில் உள்ள குர்திகளுக்கும் குர்திஸ்தான் பிரதேசத்தில் உள்ள குர்திகளுக்கும் சிலபல வித்தியாசங்கள் இருக்கலாமோ என்னவோ? (உதாரணத்துக்கு – இந்தியாவில் வாழும் சராசரி இந்தியஅடிப்படை ர்களையும் அமெரிக்காவில் வாழும் சராசரி இந்தியர்களையும் பொருத்திப் பார்த்தோமானால் – அய்யோ! ஏற்கனவே எனக்கு அமெரிக்க இந்திய நண்பர்கள் குறைவு… …)

   3. ஆனால் ஃபின்லாந்த் + ஜெர்மனியில் இருக்கும் இருகுர்திகளை அறிவேன். அவர்களும் சாதாரணமானவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

   4. உங்கள் கருத்துகளை என் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அவ்வப்போது சரிபார்த்துக்கொள்கிறேன், சரியா? இவ்வுலகம் சாம்பல் நிறமானது, என்ன செய்வது.

   • பிரபுதேவா Says:

    நீங்கள் சொல்வது போல வேறுபாடுகள் இருக்கலாம். நான் குறிப்பிடுபவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த துருக்கிக் குர்திக்கள். ஆனால் அவர்கள் அவ்வளவாக படிப்பறிவோ பொதுஅறிவோ வாய்க்கப்பெற்றவர்கள் அல்ல. ஒருவேளை தங்களுடன் உரையாடியவர்கள் சற்று உலகஞானம் பெற்றவர்களாக இருந்து இருக்கக்கூடும். எனக்குப் பரிச்சயமான ஒரு இலங்கைப் பெண்மணியின் மகளை கருப்பு நிறம் எனச் சொல்லி, சில துருக்கிக் குர்திச் சிறுவர்கள் எச்சில் உமிழ்ந்த சம்பவமும் உண்டு. அனுபவம் புதுமை.

 2. RC Says:

  அய்யா,
  ஸேத் ஃப்ரான்ட்ஸ்மன் எழுதிய பதிவை படித்தேன்.360’கோண பார்வை.குர்த் நலன் எட்டாக்கனியோ? பதிவிலிருந்து //அமெரிக்கா நிரந்தரமான நண்பர்களோ எதிரிகளோ கொண்டிருப்பதில்லை, ‘அதன் தேவைகள்’ மட்டுமே நிரந்தரமானவை-ஹென்றி கிஸ்ஸிஞ்ஜர் //.சத்தியமான வார்த்தைகள்.

  என் கவலை தங்கள் தமிழ்ப் பதிவை படிப்பவர் ‘குர்த்’ என்ற வார்த்தையை எவ்வாறு புரிந்து கொள்வார் என்பதே.கலாச்சாரம்,இனம்,மொழி,பேச்சுவழக்கு,குறுங்குழு, தேசீயம்,குடிமகன் போன்ற சொற்களை சரியான பொருளில் உள்வாங்கிக்கொண்டு, மத்தியகிழக்கு வரலாறு பற்றிய மேலோட்ட புரிதலோடு ‘குர்த்’ என்ற சொல்லை பார்த்தால் புரியும்.இல்லையெனில் கஷ்டம்.தங்கள் பதிவின் கரிசனமும் புரியாது.
  நாம் தமிழர்-சீமானோடு கொண்டு முடிச்சு போடவே வாய்ப்பு அதிகம்.எங்காளு தான் அன்னிக்கே சொன்னாருல்ல ! அய்யோ :-(

  திரு.பெர்னார்ட் லூயிஸ் எழுதிய ‘Arabs In History’ புத்தகத்தில், தொடக்கத்திலேயே மிக விரிவாக ‘அரப்’ என்ற சொல்லை விளக்குகிறார் பல்வேறு கோணத்தில்.கால ஓட்டத்தில் இச்சொல்லின் பொருள் அடையும் மாற்றத்தை நம் கண் முன்னே ஓட விடுகிறார். பாலைவன நாடோடி [BEDOUIN], அதில் பல குலங்கள்,’இறைத்தலைமை’யின் தீவிரத்தால் குல மரபுகள் அனைத்தும் ஒன்றாதல், பலம் உணர்தல்,ஒற்றை நோக்கோடு ஆக்கிரமித்து பரவுதல்,நகரமயமாதல்..மொழி, மத ரீதியாக கட்டமைத்தல்,பின் அதிகாரம் தொடர்ந்து கைக்கொள்ள ரத்த ரீதியான வம்சாவளி கொள்கை..இங்கே இந்த இடத்தில் ‘அரப்’ என்ற சொல் மறுபடியும் ‘வேருக்கே’செல்தல் :-(
  இந்த பின்புலத்தில் தான் நாம் துருக்கியரையும்,பெர்சியரையும்,மிஸ்ரியையும்,குர்த் களையும் புரிந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன்.மொட்டையாக அல்லது திராவிடத்தனமாக வெறும் ஷியா, சுன்னி,எண்ணெய் வளம்,அமெரிக்க வல்லாதிக்கம் என்று கூவினால் நாம் தவற விடுவது உண்மையை மட்டுமல்ல,நம்மையும்.
  தங்கள் பதிவுகளின் மூலம் நான் பெற்றது பல..நன்றிகள் மறுபடியும் வாத்தியாரே

  இந்த/கடந்த வாரத்திய மத்திய கிழக்கு செய்திகள் எதுவும் நல்லதுக்கானவை அல்ல.
  //ரியாத் விமான நிலையம், சவூதி கைதுகள்,கச்சா எண்ணெய் விலை உயர்வு, லெபெனான் பிரதமர் ராஜினாமா// இதை ஏதோ யாரோ பண்றான், சாதாரணன் பாதிக்கப்படறான் னு கூவ எனக்கும் ஆசை தான்.ஆனா மிடில :-)

  • RC Says:

   நேற்றைய பின்னூட்டத்தில் நான் குறிப்பிட விடுபட்டதாக நினைப்பவை.
   ஈரான்,சிரியா,ஈராக் ஆகிய தேசங்கள் ‘குர்த்’ என்ற அடையாளத்தை அந்த மக்கள் வைத்துக்கொள்வதை மறுக்கவில்லை.ஆனால் துருக்கியோ அப்படி ஒரு அடையாளமே/தனித்துவமே இல்லை என்று மறுத்து,அவர்கள் ‘மலை துருக்கியர்’ என்றே அதிகாரபூர்வமாக அழைக்கிறது (தகவல் உபயம் -பிபிசி) .
   துருக்கிய முஸ்தபா கெமால் (Kemalism), எகிப்திய கமால் அப்துல் நாசர் (Pan-Arabism) போன்ற அறியப்பட்ட வரலாற்று மனிதர்களோடும் அவர்கள் சார்ந்த நிகழ்வுகளோடும் பொருத்தி ‘குர்த்’ வரலாற்றை அணுகுவோமானால் மேலதிக புரிதல் வரும் என்று நினைக்கிறேன்.
   என் குறைவுபட்ட வரலாற்றுப்புரிதலில், குர்திகளுக்கு மற்ற யாரையும் விட துருக்கியை ஒத்துக்கொள்ள வைப்பதே முக்கியம் . அதற்கு அமெரிக்காவை விட ரஷ்யாவே கூடுதல் உதவி புரிய முடியும் என்றும் நான் என்று நினைக்கிறேன்.
   தவறான புரிதலெனில் சுட்டிக்காட்டவும். நன்றிகள்.


   • அய்யா, அது அவ்வளவு சுலபமல்ல.

    துருக்கியை வளையவைப்பது கடினம். ஏனெனில் – கிரேக்கர்கள், அர்மேனியர்கள், அஸ்ஸீரியர்கள் போன்ற மக்கள் திரள்களை லட்சக் கணக்கில் அறிவியல்பூர்வமாகவும் இஸ்லாமியத்தனமாகவும் ஒழித்த பாரம்பரியம் இருக்கிறது. இந்த அரசின் அர்மேனியக் கொலைகள்தாம் ஹிட்லருக்கு ஒரு முன்மாதிரி.

    குர்தித் தலைவர்களையும் இளைஞர்களையும் ஒழிப்பதற்கென ஜிடெம் எனும் ராணுவக்கும்பலை அறிவியல் பூர்வமாக நடத்திவருகிறார்கள்வேறு. குர்திகளின் ஜனநாயகத் தலைவர்கள் (துருக்கியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்) அனைவரும் – ஸெலாஹிட்டின் டிமிர்ட்டாஸ் உட்பட – சிறையில். குர்திவன்முறையாளர்களும் சிறையில் (பிகெகெ அமைப்பின் அப்துல்லாஹ் அஸலன் உட்பட). இதைத் தவிர துருக்கி ராணுவம் குர்திப் பகுதிகளில் (ஸிரியாவுடையது உட்பட) வாடிக்கையாக குண்டுபோடல்கள், பீரங்கித் தாக்குதல்கள் – படுகொலைகள்.

    ஆனால் துருக்கி ஒரு நேடோ நாடு. ஆக – அமெரிக்கா பெரும்பாலும் ஒரேயடியாக துருக்கியை எதிர்க்காது. அப்பகுதியில் இஸ்ரேலுக்கு அப்பாற்பட்டு காத்திரமான ராணுவம் உடையது துருக்கி.

    ரஷ்யா – ஸிரியாவுடைய பஷர் அல்-அஸத் கும்பலின் பெரிய ஆதரவு நாடு. இந்த கும்பலை எதிர்ப்பவர்கள் குர்திகள். ஆகவே ரஷ்யா குர்திகளுக்கு நேரடியாக ஆதரவளிக்காது.

    ரஷ்யாவும் அமெரிக்காவும் – தங்கள் பொருளாதாரபலத்துக்காக அணிசேர்ந்துகொண்டு துருக்கியை எதிர்த்தால், ஒருவேளை…

    சரி, டொனல்ட் ட்ரம்ப் டக் அவர்கள் என்னை அழைத்துகொண்டிருக்கிறார். அமெரிக்க பொருளாதாரம் குறித்து ஏதோ ஆலோசனை வேண்டுமாம். சனிக்கிழமையாயிற்றே, எண்ணெய் தேய்த்துக் குளித்துக்கொண்டிருப்பானே என ஒரு கருணையும் இல்லை. இரண்டு மிஸ்ட் கால்ஸ். ஆகவே பிற பின்னர்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s