திராவிடர்கள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் அல்லர் – மாறாக, சந்தேகமேயில்லாமல் பத்தரை மாற்றுத்தங்கங்கள்!

February 25, 2018

கிண்டலுக்காக அல்ல, உண்மையைத்தான் சொல்கிறேன். :-(

ஏதேதோ விஷயங்கள் தொடர்பாக, சென்றவாரம் தில்லி சென்றிருந்தபோது ஒரு தமிழகப் ‘பெரும்புள்ளி’ ஒப்பந்ததாரர் (-கான்ட்ரேக்டர், 80+ வயது, ), பெரியவர் ஒருவருடன் பேசவாய்ப்பு கிடைத்தது. இருவரும் சிலபல உயர் அரசதிகாரிகளைப் பார்த்துப் பேசக் காத்துக்கொண்டிருந்தோம். நரைமுடிக்கு நன்றி சொல்லவேண்டும். ஆக, நம் தமிழகம் குறித்த சிலமணி நேர அங்கலாய்ப்புகள்.   சோகங்கள். (இந்தியா இன்டர்னேஷனல் ஸென்டர் காப்பி(கள்) பிரமாதம்!)

அவர் ஒரு பாரம்பரிய காங்கிரஸ்காரர் – இப்போது அப்படியில்லை. வீட்டில் தெலுங்குமொழி – ஆனால் தமிழர்களும்கூட – கோவில், கொடை எனப் பவ்வியமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆகவே இவர் குடும்பத்தினர் சர்வ நிச்சயமாக கருணாநிதி, ஏவவேலு, வீராச்சாமி, இசுடாலிர், திருமாவளவன், வீரமணி வகையறா திருட்டுத் திராவிடர்களுமல்லர். மூன்று-நான்கு தலைமுறைகளாக இம்மாதிரி ஸிவில்வர்க்ஸ்-கட்டுமான வகையறாவில் ஈடுபட்டிருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் எனும் வீடு/அபார்ட்மெண்ட் வகைக் கட்டமைப்புகளில் ஈடுபாடில்லை. சுமார் 2000 குடும்பங்களுக்கு இவருடைய தொழில் தொடர்ச்சியாக, நேரடியாக வேலை தந்துகொண்டிருக்கிறது.

-0-0-0-0-0-
சரி.

திராவிடம் எனும் முடை நாற்றமெடுக்கும் ஊழல்குண்டித்தனத்தைப் பற்றிய என்னுடைய கீழ்கண்ட உரையாடல் குறிப்புகளையும் (அவருடைய ஒப்புதலுடன்) சிலபல என் சொந்தக் குறிப்புகளையும் பதிக்கிறேன். இதில் பலப்பல எனக்கும் (ஏன், உங்களுக்குமேகூட) தெரிந்திருக்கும் விஷயங்கள்தாம். ஆனாலும் – எதற்கும் இருக்கட்டும் என்று … (மேலும் – இதில் பொதுப்பணித்துறை+கட்டுமானங்கள் சார் ஊழல் குறித்த செய்திகள் மட்டுமே – பிற துறைகள் பற்றி உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன், சரியா?)

. பொதுப்பணித்துறை (பிடபிள்யுடி – PWD – Public Works Department) எனூம் அமைப்பில், வெள்ளைக்காரன் ஆண்டுகொண்டிருந்தபோதும் ஊழல் இருந்தது. நேரடியாக, பிரிட்டிஷ் அரசும் கொள்ளையடித்தது; அவர்கள் பங்குக்குச் சொந்த ‘கைச்செலவுகளுக்காக’ ப்ரிட்டிஷ் அரசதிகாருகளும்  ‘தனிப்பட்ட முறையில்’ திருடினார்கள். நம் கலைச்செல்வங்களையும் எடுத்துச் சென்றார்கள். (ஒரு விஷயம்: இவர்களில் ஒரு சிலர் அப்படியில்லை – ஆனால் அவர்கள் பொதுத்தலைவிதிகளுக்கு அப்பாற்பட்ட மிகமிகச் சிறுபான்மை)

ஆ.  மிகச் சிறிய அளவில் 1967 வரை ஊழல்/கையூட்டு இருந்தது; அது பெரும்பாலும் அதிகாரவர்க்கத்திடம்தான் சரணாகதி. அதன் சதவீதம் – அப்போதைய திட்டமதிப்பீடு அளவுகளில் சுமார் 1.5 – 2. அவ்வளவுதான்.

. ஆனால் கருணாநிதி புத்திசாலி என்பதிலும், உழைத்துழைத்துக் குடும்பத்துக்காகச் சொத்துசேர்க்க அலையாக, அன்றிலிருந்தே அன்றில் பறவை போல அலைந்துகொண்டிருந்தவர் என்பதில் சந்தேகமேயில்லை. ஆகவே, அண்ணாதுரையிடம் சண்டைபோட்டு 1967ஆம் ஆண்டில் பணம் கொழிக்கும் துறையாகவும், நன்றாகப் ‘புறங்கையை நக்க வசதி‘ மிக்கதாகவும் இருந்த/இருக்கும் ‘பொதுப்பணித் துறை’ எழவை வாங்கிக்கொண்டார். பின் என்ன, ஒர்ரே பொதுப்பிணிதான். பொதுப்பிணந்தின்னித்தனம்தான், வேறென்ன சொல்ல. :-(

. தி(ருட்டு)முக ஆட்சியானது (இசுடாலிர் என என்னால் செல்லமாகவும் அளவுக்கு மீறிய அதிமரியாதையுடனும் அழைக்கப்படும் ‘ஸ்டாலின்’ அவர்கள் உண்மையாகவும் தன்னிலை விளக்கமாகவும் மேடைப்பேச்சொன்றில் சொல்லியதுபோல) புறம்போக்குகளாலும் களவாணிகளாலும் கட்டமைக்கப்பட்ட அராஜக திராவிடர் ஆட்சி.  பிறகட்சிகளெல்லாம் – இதில் ஊறி வெளிவந்துள்ள சகோதர மட்டைகள்தாம். (பொதுவாக, இந்தத் திராவிடக்கொள்ளைக்காரக் கட்சிகளில் – நான், திமுக, அஇஅதிமுக, விசிக, தேமுதிக, திக, மமக, தமுமுக என அனைத்து உதிரிகளால், உதிரிகளுக்காக, உதிரித்தனமாக நடத்தப்படும்  கட்சிகளையும் இணைப்பேன்.)

. பெரியவர், தன் தகப்பனாருடன் நேரடியாக காமராஜ் ராஜாஜி பக்தவத்சலம் ஓமந்தூரார், அண்ணாதுரையிலிருந்து – கருணாநிதி எம்ஜிஆர்கள்  வரை சந்தித்திருக்கிறார்.

. மேற்கண்டவர்களில் கருணாநிதி  (+எம்ஜி ஆரின் இரண்டாம் ஆட்சிகாலம் 1980+) தவிர – மற்றவர்களின், மற்ற சமயங்களின்  அப்பழுக்கற்ற தன்மை – உயர்மட்டங்களில் ஊழலின்மை குறித்து சிலாகித்தார்.

. பின்னாட்களில் தம் பிள்ளைகளுடன் ஜெயலலிதா, ஜானகி,   சசிகலா, கருணாநிதி, இசுடாலிர் போன்ற்வர்களையும் வணிகரீதியாகச் சந்தித்திருக்கிறார். எதுவும் நேரடித்தன்மையுடன் இல்லை. திராவிட ஊழல் ஒன்றே இணைத்த வடம்.

. கூச்சப்பட்டு, அசிங்க, வெட்க உணர்ச்சியுடன் வாங்கப்பட்ட  (படுமோசமில்லாத, குறைந்தபட்ச) கையூட்டு – முதன்முறையாக கருணாநிதியால் 7% (ஏழு சதவீதம்) என ஏற்றப்பட்டு நேரடியாகவும், அடாவடியாகவும் உரிமையுடனும்  ‘கட்சி நிதிக்காக’ என வாங்கப்பட்டது (1968) எனச் சொன்னார். (இந்த கட்சி நிதிக் கணக்குக் கேட்கப்போய்தான், கருணாநிதியால் கல்தா கொடுக்கப்பட்டார் எம்ஜிஆர்!)

. பின்னர் 1977-80 வரை, முதல் எம்ஜிஆர் ஆட்சியின் பெரும்பாலான ஊழலின்மை குறித்தும், நேரடித்தன்மை பற்றியும் சொன்னார்.

. அதன்பின் வந்த ஆட்சிகளில் படிப்படியாக இந்தக் கையூட்டுச் சதவீதம் ஏறி, திமுகவின்  (கருணாநிதி + இசுடாலிர்) 2006-11 ஆட்சியின்போது 9.5% எண்ணிக்கையைத் தொட்டது என்றார். (இச்சமயம் அவர் பிள்ளைகள் ஒப்பந்தப்புள்ளிதாரர்களாக இருந்தார்கள்)

. இப்போது அஇஅதிமுக ஆட்சியில் இது 10.5% – நேரடிக் கப்பம் என்றார்.

ஆனால், இதில் ஒரு நேரடித் தன்மை இருக்கிறது. ஊழல் ஜனநாயகப் படுத்திப் பரவலாக்கப்பட்டது(!) என்கிறார்!

அதாவது:

எந்தச் செலவுத்திட்டமானாலும் (அரசதிகாரிக் குப்பையாளர்களின் தண்டச் சம்பளம் பற்றிச் சொல்லவில்லை) – அதாவது எந்தக் கட்டுமான, பொருள்வாங்கல் தொடர்பான செலவானாலும், நேரடி-முதல்படிக் கையூட்டு என்பது அந்தத் திட்டமதிப்பில் நேரடியாக 10.5%.

இதில் 3.5% பாகம் நேரடியாகக் கட்சிச் செலவுகளுக்குத் தவறாமல் சென்றுவிடும். (இந்தப் பணம்தான், அழகிரிகளும் இசுடாலிர்களும் தினகரன்களும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும், பிரியாணி பொட்டலங்களுக்கும், உடன்பிறப்புகள் சரக்கடிக்கவும் உபயோகமாக இருக்கும் பணம் – இதிலும் அவரவர் திறன்பொறுத்துக் கையாடல்கள் நடக்கும்!)

மிச்சமிருக்கும் 7 சதவீதம் அமைச்சரிலிருந்து – திட்டப்பகுதிசார் கடைமட்ட கவுன்ஸிலர் வரை, அவரவர் சக்திக்கும் பராக்கிரமத்துக்கும் ஏற்றபடியும் முறைப்படியும் ‘கருணாநிதித்தனமான அறிவியல்முறை ஊழல்பங்கீட்டு‘ வழிகளில் பட்டுவாடா செய்யப்படும்.

இந்த 10.5% தவிர சுமார் 1.5 – 3% கையூட்டு – அதிகாரிகளுக்கும் வட்டார தண்டல்காரர்களுக்கும் (காவல்துறை உட்பட)  கட்டப் பஞ்சாயத்தாளர்களுக்கும் அழவேண்டியிருக்கும்.

அரசுத் திட்டங்களில் நேரடி லஞ்சம்: சுமார் 12-14%!

யோசித்துப் பாருங்கள் – இந்த அழகில் நம் திராவிடத் திருடர்கள் இருந்தால், எப்படி நம் நாட்டில் தரமான முன்னேற்றம் ஏற்படும்?

(நான் முன்னமே எழுதியதுபோல, இவையனைத்திற்கும் பிரகாசமான விதிவிலக்குகள் இருக்கின்றன. ஒரு மணியான பிடபிள்யு பொறியியலாள இளைஞருடன் நேற்றுகூடப் பேசிக்கொண்டிருந்தேன்)

-0-0-0-0-0-

பொதுவாக அமைதியாக (ஆனால் மிகுந்த ரத்த அழுத்தத்துடன்) அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த நான், கடைசியில் — கொஞ்சம் மேலதிகமாகப் பொறுத்துக்கொள்ளமுடியாமல் அவரிடம் கேட்டேன்:

அய்யா, இவ்வளவு பேசுகிறீர்களே – நீங்கள் ஏன் இந்த ஈனத் தொழிலில் இன்னமும் இருக்கிறீர்கள்? வேண்டுமளவு வந்துவிட்டது என இந்தக் களவாணிகளுடன் இருக்கும் சங்காப்தத்தையே விட்டுவிடலாமே என்றேன். நீங்கள் ஏன் சர்க்காரியா கமிஷன் முன் பிரமாணம் அளிக்கவில்லை என (விநயத்துடன் தான்) கேட்டேன்.

அதற்கு அவர் துணுக்குறாமல், பெருமூச்சுவிடாமல் சொன்னபதில்களின் சாராம்சம்:

1. அவர் குடும்பத்தினருக்கு இதுதான் தொழில்.  தங்களால் முடிந்தவரை தரக்கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். (ஆனாலும் அவரைப் போல உள்ள, சுமார் 100-120 பெரியபுள்ளிஒப்பந்தக்காரர்களும் அந்த மனப்பான்மை படைத்தவர்கள் அல்லர்)

2. அவரை நம்பி சுமார் 2000 குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களை நட்டாற்றில் விடமுடியாது. (அவர் அனைவருக்கும் பிஎஃப் போன்றவற்றையெல்லாம் கொடுக்கிறார்)

3.  நீங்கள் காட்ஃபாதர் பார்த்திருக்கிறீர்களா (ஆஹா, சர்வ நிச்சயமாக – 3-4 முறை என்றேன்) – அப்படியானால் நீங்கள் அதையும் ஒரு பின்புல விடையாக வைத்துக்கொள்ளுங்கள். (நான் பதிலுக்குச் சொன்னேன்: கருணாநிதிகளும் எடப்பாடிகளும் உங்களைப்போல அப்படியே சொல்லமுடியுமல்லவா? அவர்களும் காட்ஃபாதர் பார்த்திருப்பார்களே! அவர் சொன்னார்: நீங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பள்ளி ஆரம்பித்து நடத்துங்கள், எங்கள் குடும்பம் உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும். ஒருவிதமான உபத்திரவமும் இருக்காது. ஒரு ‘மாதிரி’ கல்விசாலையை உருவாக்கலாம். உங்கள் விருப்பம். அதேசமயம் யோசியுங்கள், உங்கள் கருணாநிதிகள் இம்மாதிரி ஒரு துக்குணியூண்டு விஷயமாவது செய்திருக்கிறார்களா? என் பதில்: யோசித்துச் சொல்கிறேன்)

4. அவர் தில்லி வந்ததன் காரணம் – மத்திய அரசு திட்டங்களில் பங்கேற்க, ஆஃப்கனிஸ்தான் போன்ற பிரதேசங்களில் கட்டுமான வேலைக்கான முஸ்தீபுகளில் இறங்கத்தான். குஜராத்திலும் பிஹாரிலும் மிஸோரத்திலும் அவர் நிறுவனம் முனைந்திருக்கும் முன்னேற்றத் திட்டங்கள் பற்றிச் சொன்னார். நல்லவிஷயம்தான்.

5. தமிழகம் மட்டுமல்ல – மற்றத் தென்னக மாநிலங்களிலும் கதை ஊழல்தான் – கர்நாடகத்தில் இது 10%. கேரளத்தில் 9.5% (ஆனால் அங்கு அவ்வளவு நிர்மாணத் திட்டங்கள் இல்லை, ‘பிஸினெஸ்’ குறைவு), தெலங்காணாவில் 8% (அங்கு ரேட் குறைந்திருக்கிறது), ஆந்திராவில் 5% என கையூட்டு விரிகிறது – ஆனால் பிஹாரிலும் குஜராத்திலும் அது பெரும்பாலும் இல்லவேயில்லை என்கிறார். (எனக்கு குஜராத் பற்றி ஏற்கனவே தெரியும் – ஆனால் அவர் இக்கால பிஹார் பற்றிச் சொன்னது எனக்குக் கொஞ்சம் வியப்பாகவே இருந்தது)

6. அவர் சர்க்காரியா முன்னால் சென்று கருணாநிதியின் நிதிக்குவை பற்றி வாக்குமூலம் கொடுக்காதற்குக் காரணங்கள் அ) அதன் டேர்ம்ஸ் ஆஃப் ரெஃபெரென்ஸ் ஆ) அவர் தொடர்ந்து அரசுப் பணிகளை எடுத்துச் செய்யவேண்டிருந்த குடும்பச் சூழ்நிலை இ) மனைவிக்கு வந்திருந்த புற்றுநோய்.
-0-0-0-0-

முடிவாக: ஊழல், %, கட்சி’நிதி’ என்பதற்கெல்லாம் – குறைந்த பட்சம் நம் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை முழுமூல நிர்மூல காரணம் கருணாநிதி.

அவர் தனயன் மேதகு இசுடாலிர் (அதுவும் 9.5% போல முன்னர் பெற்றுக்கொண்டு) இம்மாதிரி ஏதோ எடப்பாடிபழனிச்சாமி ஆட்சிதான் % ஆட்சி எனப் புலம்புவது – ‘ஈயத்தைப் பார்த்து இளிக்கும்’ வெறும் வெட்டிப் பீற்றல் பீற்றும் பித்தளையைத்தான் நினைவுபடுத்துகிறது….

மேலும் பணவீக்கத்துக்கு ஏற்ப 2011 திமுகவின் 9.5% இப்போது 2018  அஇஅதிமுகவில் 10.5% ஆனது பெரியவிஷயமா என்ன? :-(

களவாணிகளும் புறம்போக்குகளும் மிக்க திராவிடத்தில் இதெல்லாம் சகஜமில்லையா?

எது எப்படியோ – திருட்டுத் திராவிடர்களிடமிருந்து, 10.5%மாற்றுத்தங்கங்களிடமிருந்து நம் தமிழகத்துக்கு விமோசனம் உண்டா?

அல்லது அடுத்தமுறை இசுடாலிர்கள் இன்னொரு கமிஷன் மண்டி அரசமைத்து 11.5% வாங்கப்போவதைப் பார்க்கும் காலமும் வந்துவிடுமோ?

தீராவிடத் திருட்டுத் திராவிடம் கண்டிப்பாக, தமிழகத்திலிருந்து வேரறுக்கப்படவேண்டும் என்பதில் நமக்கு ஐயமே இருக்கக்கூடாது!

செய்வோமா, செய்வோமா?

2 Responses to “திராவிடர்கள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் அல்லர் – மாறாக, சந்தேகமேயில்லாமல் பத்தரை மாற்றுத்தங்கங்கள்!”

  1. Gopi Says:

    கீழ் மட்டங்களில் சில ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை போகும் கான்ட்ராக்டுகளில் 20-30% கமிஷன் என்று விரிகிறது என்ன இதை போன்ற பல ஒப்பந்தங்கள் ஆளுங்கட்சிகாரர்களாலேயே எடுக்கப்பட்டு வேலை நடக்காமலோ அல்லது கந்தரகோளமாக ஏதோ ஒப்பேற்றியோ பில் கிளியர் செய்யப்படும்.


  2. […] இவர் மனவாடு. தமிழகத்தில் ‘தொழில்.’ ஒரு நெட்வர்க்கர் – ஆகவே கர்நாடகம் (10% ஆட்சி), தெலெங்காணா (8% ஆட்சி), கம்யூனிஸ்ட் கேரளம் (9.5% ஆட்சி) தமிழகம் (10.5% ஆட்சி – முக்கியமான விஷயம்: இது கருணாநிதி ஆரம்பித்து வைத்த 7.5% ஆட்சியின் பரிணாம வளர்ச்சி மட்டுமே!) பற்றியெல்லாம் வயிற்றெரிச்சல் கொடுக்கும் சுவாரசியமான தகவல்கள். ஆனால் எனக்குப் புளகாங்கிதம் – எங்கும் எதிலும் தமிழகம் தான் முதலிடத்தை வகிக்கிறது… […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s