ஜான் பெர்ரி பார்லொ – ஒரு கோரிக்கை

October 12, 2016

இதனைப் படிக்கப்போகும் ஓரு சிலருக்கு இந்த விண்ணப்பம் (= SkyBread ©எஸ்.ரா; ஆனால் மன்னிக்கவும், இது விண்ஆப்பம் அல்ல – இதனை அவர் எப்படிப் பெயர்த்துத் தள்ளுவார் என்பதை நினைத்தாலே எனக்கு ஏடாகூடமாகக் கதிகலங்குகிறது! அது SkyAngloIndian என விரியுமோ என்ன எழவோ!).

(குறைந்த பட்சம் – அந்த எழவெடுத்த அமெரிக்க ஸிலிக்கன்வேலி பகுதியில் வசிக்கும், அமெரிக்கத் தேர்தல் தொடர்பாக உட்கார்ந்த இடத்திலிருந்தே நக்கல் கருத்துகளை உதிர்க்கவேண்டிய ஜனநாயகத்தேவை அவசியம் இருந்தாலும் வேலைவெட்டியற்றுத் தொடர்ந்து இந்த ஒத்திசைவுக்கு வரும் பாவப்பட்ட அந்த  மூன்று நண்பர்களுக்காவது இந்த விண்ணப்பம்! டேய் பசங்களா –  வங்கிக் கணக்கில், மாதாமாதம் ஏறிக்கொண்டிருக்கும் டாலர்களை சும்மாச்சும்மா எண்ணிக்கொண்டே, அதேசமயம் சீப் ஃளைட்டுகளுக்காக, ‘டீல்’களுக்காக ஏங்கிக் கொண்டே இருக்காமல் – பெண்பிள்ளை வளர்ந்துகொண்டிருப்பதால் (ஆகவே ‘வேர்களைத் தேடுவதாக’ பாவலா பண்ணிக்கொண்டு) இந்தியாவுக்குக் கண்டிப்பாக அடுத்த வருடம் மூட்டையைக் கட்டிக்கொண்டு போய்ச் சேர்ந்தேயாகவேண்டும் என வெட்டிக் கனவு கண்டுகொண்டிருக்காமல்  – உருப்படியான அமெரிக்கக் காரியங்களுக்கும் உதவி பண்ணுங்கடா. ங்கொம்மாள… பெருஸ்ஸா க்ரீன்கார்டும் குடியுரிமையும் வாங்கிக்கினுதானாடா அமெரிக்காவ முன்னேத்தப் போற்றீங்க? போக்கத்தவனுங்களா…)

சரி. ஜான் பெர்ரி பார்லொ – இந்த இணைய உலகத்திலும் அதற்கு அப்பாற்பட்டும் பலதளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் மகாமகோ மனிதர். *பொக்கிஷம்*. அவருடைய ஆரோக்கியத்துக்காக, மருத்துவச் செலவுகளுக்காக இந்தக் கோரிக்கை. முடிந்தால் – நம் அனைவராலும் உதவப்படவேண்டிய நபர்தான் அவர்.

screenshot-from-2016-10-12-184310
-0-0-0-0-0-0-0-0-0-

http://www.sweetwatermusichall.com/event/1347933-everyday-miracle-benefit-for-mill-valley/

எனக்கும் இந்தக் கூட்டத்தில் பங்குபெற ஆசைதான், சிலபல முன்னறிமுகங்களைப் பலபத்தாண்டுகளுக்குப் பிறகு பார்த்து ஆனந்தமாக அளவளாவலாம் என்ற நப்பாசைவேறு – ஆனால் அக்டோபர் மூன்றாம்+நாலாம் வாரங்களில் நான் மஸ்ஸாசூஸெட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தில் சீரழிந்து கொண்டிருப்பேன். இதில் எனக்குக் கொஞ்சம் இரட்டிப்பு வருத்தம்தான். ஆனாலும்…

ஜான் பெர்ரி பார்லொ அவர்கள் தொடர்பாக –  நான் மிகமிக மதிக்கும் பெரியவர்களில் ஒருவரான டேவ் ஃபார்பர் அவர்கள் நடத்தும் மின்னஞ்சல் குழுமத்தின் மூலமாக வந்த செய்தியினைக் கீழே கொடுக்கிறேன்.

> Barlow’s friends and family are staging a benefit concert to fund his
> Wellness Trust on Monday, October 24 in Mill Valley. It’s at the
> Sweetwater Music Hall and will include music by many of Barlow’s
> friends and collaborators, including Bob Weir, Jerry Harrison, Lukas
> Nelson, Members of String Cheese Incident, Ramblin’ Jack Elliott, Sean
> Lennon, and Les Claypool.
>
> There will also be an auction of art pieces and prizes donated for the
> occasion.
>
> Tickets are $500. VIP tickets for a 6:30pm reception are $1000.
>
> All the proceeds will go into the John Perry Barlow Wellness Trust,
> which was set up by his three daughters and friends to provide for his
> care and recovery. In addition, they’re accepting donations to the
> trust independent of the benefit, at:
>
> http://www.johnperrybarlow-wellnesstrust.com/
>
> I spent some hours with Barlow yesterday at UCSF Hospital. He is in
> good spirits after an abdominal operation a week ago to remove a
> blockage from his small intestine that had plagued him for six weeks.
> He is still in the intensive care unit, and hasn’t set foot on the
> ground for weeks, so he will again have to work hard to regain some
> mobility. But he has recovered his mental capacity and good humor
> after a challenging bout of postoperative delirium. The staff is
> hoping to transfer him to an ordinary UCSF hospital room today. His
> short-term goal is to become able enough to attend his own benefit in
> two weeks!
>
> I’ll see you at Sweetwater…
>
> John
>
> PS: If you have any Barlow memorabilia, or art objects you weren’t
> really using, and you want to include them in the auction, let me or
> his daughter Anna Winter Barlow know. Any old copies of “Decrypting
> the Puzzle Palace?” Any “Declarations of Independence of Cyberspace”?
> Etc…

உங்கள் பணத்தை உபயோகமான வழிகளில் செலவழிக்க என்னுடைய பரிந்துரையை ஏற்று, ஜான் அவர்கள் உடல் நலம் பெற உதவவும்.

http://www.johnperrybarlow-wellnesstrust.com/donate.html

நன்றி.

சில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)

4 Responses to “ஜான் பெர்ரி பார்லொ – ஒரு கோரிக்கை”

  1. vijay Says:

    Done!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s