இதுதாண்டா தமிழனின் பேராண்மை இழப்பீடு!
November 27, 2013
மன்னிக்கவும்: எனக்குக் கொஞ்சம் தேவைக்கதிகமாகவே வெட்கமும் அவையடக்கமும் உண்டு. என்னுடைய பெருமைகளை நானே தம்பட்டம் அடித்துக் கொள்வது என்பது, எனக்கு எப்போதுமே என்னவோ போலிருக்கும். இருந்தாலும் வழக்கம்போலத் தொடர்கிறேன்.
இரண்டு பதிவுகள் முன், ஒரு பின்னூட்டத்தில் திரு ‘ரவிக்குமார்’ அவர்கள், டெலக்ஸ் முறையில் (அல்லது தற்கால எஸெம்மீஸ் மொழியில்) அவருடைய உள்ளக் கிடக்கையை, ஒரு தமிழராகத் தம் சகோதரத் தமிழரை அறிய அவருக்கிருக்கும் ஆர்வத்தை, ஜெம்மொழி ஆங்கிலமொழிப் பின்னூட்டமிட்டு ஜெவ்வனே வெளிப்படுத்தினார்கள்: “sir, thankz for recomending book. plz tell when the book released.” இவர் ஒரு தகவல்தொழில் நுட்பத் தட்டச்சுக் குளுவானாகத்தான் இருப்பாரென்று என்னுடைய அனுமானம். ஏனெனில் இவருக்குத் தமிழிலும் எழுதமுடியவில்லை; ஆங்கிலத்தையும், பாவம் என்னைப் போல எழுதுகிறார். எழுதியதை இடஞ்சுட்டிப் பொருள் புரிந்துகொள்ளும் முனைப்பும் இல்லை. கொஞ்சம் வெள்ளந்தி மனிதரோ?
சரி… இதனால் வாழ்க்கையையே வெறுத்துவிட்ட நான், முதலில் அதற்கு விட்டேற்றியாக ஒரு பதில் அளித்திருந்தேன். ஆனால் அது சரியில்லை, நியாயமில்லை என்று தோன்றியதால, வேறு வழியில்லாமல் உண்மையைச் சொல்லிவிடலாம் எனத்தான் இந்தப் பதிவு. மன்னித்தருளவும். Read the rest of this entry »
தமிழர், ஆண்மையின்மைக்கு இழப்பீடு பெறுவது எப்படி
November 25, 2013
தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (7/n)
சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் … யின் தொடர்ச்சி:
… நமக்குப் பேரும் புகழும் பெற்று, உலகறிய வாழவேண்டும் என ஆசை. நாம் எலியளவு இருந்தாலும் புலிபோல் காட்டிக்கொள்ள ஆசை. ஆக நாம் — நமக்கும், நாம் வழிபடும் சினிமாக்காரர்களுக்கும் அரசியல்காரர்களுக்கும் பெரிய்ய பெரீய்ய கந்தறகோள விளம்பரத் தட்டிகளை வைத்து இதன் வழியாக நம் சாசுவதத்தன்மையையும், மேன்மையையும் உலகுக்கு அறிவிக்கிறோம். …
நம் தமிழ் நாட்டில் உள்ள அளவு ஃப்லெக்ஸ் தட்டிகள், கட்-அவுட்கள் உலகில் வேறெங்கும் இருக்குமா என எனக்குச் சந்தேகமே! ஃப்லெக்ஸ் தட்டி அச்சிடும் கருவிகளைத் தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்யும் விற்பனை விற்பன்னர் ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டபோது என் கருத்தை ஆமோதித்தார். இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில்தான் இதற்கு ஏக வரவேற்பு! Read the rest of this entry »
சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள்
November 24, 2013
சாளரம் #3: பொதுவாக, நம் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு, தங்கள் ‘ஆண்மை’ (பேராண்மை?) குறித்த, இனம் புரியாத ஒரு தாழ்வு மனப்பான்மையும் – ஆகவே அதன் தொடர்பான உளைச்சலும் அரிப்பும் இருக்கின்றன.
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (6/n) [தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ?? வரிசையில் ஆறாம் பாகம்]
இது பரவாயில்லைதான் – எவ்வளவோ விஷயங்களில் தாழ்வுமனப்பான்மை கொண்டிருக்கவேண்டிய நாம், எவ்வளவோ விஷயங்களுக்காகப் பெருமை (=மற்றவர்களை ஒடுக்கும், அற்பமாக நினைக்கும் கர்வ வகையறா அல்ல) கொள்ளவேண்டிய நாம் – பொதுவாக, இவற்றுக்கு எதிர்ப்பதமாகவே நடந்து கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மைதான்.
ஆக, நிதர்சனம் எப்படியோ — ஆண்மை, பேராண்மை போன்ற விஷயங்களில் தாழ்வு மனப்பான்மையிருப்பது பரவாயில்லைதான் – பல விஷயங்களில் இது ஒன்று மட்டும் தானே – ஆகவே, இது தன்னளவில் ஒரு பெரிய பிரச்சினையுமில்லை.
ஆனால், இதனால் நமக்கு ஏற்படுவது ஒரு மகாமகோ சிடுக்கல் பிரச்சினை!
… இந்தக் கையலாகாத்தன – அய்யய்யோ, நமக்குத் தேவையான அளவு ஆண்மையில்லையே – என்கிற மனப்பான்மையானது — நம்மைப் பலவிதங்களிலும் பாடுபடுத்தும் இந்தத் தாழ்ச்சியை, அநியாயமாக நமக்கு இழைக்கப்பட்ட அநீதியாக நாம் கருதுவதை — எப்படியாகவேனும் ஈடு செய்ய அநியாயத்துக்கு உந்துகிறது. Read the rest of this entry »
சாளரம் #2: வரலாறு = குத்துமதிப்பாக இது, ஒருவேளை வரலைந்துக்கும் வரலேழுக்கும் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜந்துவோ என்னவோ?
November 20, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (5/n)
அதாவது, வரலாறு என்பது முதற்சங்கத்துக்கும் முன்னால், பஃறுளியாறு லெமூரியாவில் குமரிக்கண்டத்தில் ஓட ஆரம்பித்தற்கும் முன்னால், ஏன் கல் தோன்றுவதற்கே கூட முன்னால், தமிழகமெங்கும் ஓடோதி ஓட்டமாக ஓட்டமெடுத்துக் கொண்டிருந்த ஒரு பண்டமிழ் ஆறு என்பதை அறிக. மேலும், அச்சமயத்திலேயே, நம் முன்னோதிமுந்தைய மூதாதைகளின் பேரரசன் அதிமுற்காலச் சோழன் – ஒன்றரையாம் கபாடபுரம் கண்டாராதித்தன் இமையம் சென்று கோவேறுகழுதைகளைப் பிடித்துக் கொண்டு வந்ததையும் மேலதிகமாக அறிக! (எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான இமையம் அவர்களை இப்படி உபயோகிப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாரா?)
சாளரம் #2: பொதுவாக, நமக்கு வரலாற்றறிவு என்பது குறைவு. மிக முக்கியமாக, சமகால வரலாற்றை அவதானிப்பது என்பது இன்னமும் குறைவு.
இவ்வரிசையில், முந்தைய பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??
-0-0-0-0-0-0-0-0-0-0-
ஏன் நமக்கு வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லையென்றால், நமக்குப் பல முக்கியமான விஷயங்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கோ, தெரிந்து தெளிவதற்கோ சிரத்தையில்லை. நாம் பெரும்பாலும் நுனிப்புல் மேய்பவர்கள் என்பதை தனிப்பட்ட முறையில், நேரடியாக அறிவேன். எப்படியெனில், நானும் இந்த நுனிப்புல் மேயும் ஜாதியின் பிரதம அங்கத்தினன் தான் என்பதை மட்டில்லா மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் – என்ன இருந்தாலும் நானும் ஒரு தமிழன் தானே! Read the rest of this entry »
சாளரம் #1: மரக்காணம் நிகழ்வுகள், ஜாதிக் கட்சிகள், தமிழ் எழுத்துரு /வரிவடிவப் பொங்கல்கள்…
November 16, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (4/n)
(அல்லது) சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (2/2)
முந்தைய பாகம்: சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (1/2)
… நாம் இந்தச் சாளரத்துக்கான மேலதிகமான எடுத்துக் காட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
வெகு அண்மையில் நடந்த விஷயம்: சித்திரைப் பௌர்ணமி – பாமக மாமல்லபுரம் விழா – பாமக_வன்னியர்களுக்கும், விசிகே_தலித்களுக்கும் இடையே மரக்காணம் சுற்றுப்புறத்தில் வன்முறை உரையாடல்கள் – பொதுச் சொத்து நாசம் – பொய் / ஜாதிவெறி அறிக்கைகள்.
குறுகிய காலத் தாக்கத்து – இவை மட்டும் பெரிதாகப் பேசப்படும்: டாக்டர் ராமதாஸ் பொய் சொல்கிறார், பொதுச்சொத்து நாசத்தை பாமக இழப்பீடு செய்யவேண்டும், பாமகவின் ஜாதிவெறிப் பேச்சுக்கள், வன்முறைகளைத் தடுக்கவேண்டும். உடனடி தண்டனை கொடுக்கப்படவேண்டும், இன்னபிற இன்னபிற. Read the rest of this entry »
சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (1/2)
November 15, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (3/n)
முந்தைய பதிவுகள்:
- பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்? 02/11/2013
- தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (1/n) 12/11/2013
- தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (2/n) 14/11/2013
சாளரம் #1: மாற்றங்களை, நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, அவற்றைப் பற்றி அவதானிக்கும்போது, நமக்குப் பொதுவாக நிதானமே இருப்பதில்லை. அவற்றின் காரணமாக – உடனடியாக, மிகக் குறைந்த கால அளவில், பல பெரிய சாதக விளைவுகள் ஏற்படும் என்று எண்ணிக் குதூகலம் அடைவோம், அல்லது பாதகங்கள் ஏற்படும் எனப் படு பயங்கர பீதியுறுவோம், அதீத உணர்ச்சிகளுக்கும் புல்லரிப்புகளுக்கும் இரையாவோம்.
அதேசமயம் – நாம், அம்மாற்றங்களினால், நிகழ்வுகளினால் – நெடிய கால அளவில், மெதுவாக, திடமாக நடக்கும், நடக்கப்போகும் சாதக/பாதக விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவே மாட்டோம். அப்படியே எண்ணிப் பார்த்தாலும், அவற்றை, அவற்றின் தாக்கத்தை – மிகமிகக் குறைவாகவே மதிப்பிடுவோம்.
தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (2/n)
November 14, 2013
முந்தைய இரு பதிவுகள்:
- பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்? 02/11/2013
- தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (1/n) 12/11/2013
ஆக, மேலே (அல்லது) கீழே படிக்குமுன் நீங்கள் கீழ்க்கண்ட சுட்டிகளைப் படித்தால் நலம். (இந்த விவரணைகளுக்குப் பின்புலம்: ஸ்ரீலங்காவில் காலங்காலமான தமிழர்கள் பிரச்னை குறித்து, திடுதிப்பென்று முழித்துக்கொண்டு 2013-ல் – இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆடிய ‘போர் ஆட்டம்’ – மாணவர்கள் படித்துக் கரை கண்டுவிட்டதால், அவர்களும் கூடச் சேர்ந்து கலந்தடித்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்!’ மேற்படி, இந்த களப்பிணியாளர்கள், போராளி, வீரசோழச்சேரப்பாண்டிய தமிழிளைஞ இத்யாதிகள், வினோத ஜந்துக்கள் பற்றிய என் குறிப்புகள்)
- மொதல்ல ஒங்க வகுப்பறைய பெருக்கிச் சுத்தம் பண்ணுங்கடா
- மொதல்ல மாட ஓட்டக் கத்துக்குங்கடா, அப்றம் புத்தபிக்ஷுக்கள தெர்த்தலாம்…
- மாணவர் போர் ஆட்டம் – பின்னூட்டம், விளக்கம்++
- போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள்
- குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள்
- மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு
- இதுதாண்டா தமிழ் இளைஞன்!
- ஆர்ட்வீனொ, ரொபாடிக்ஸ், இளைஞர்கள்(ஐயோ!),
- இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்!
- இதுதாண்டா போராளி!
-0-0-0-0-0-0-0-
சரி. வேண்டுமளவு தன்னிலை விளக்கம், முன்னெச்சறிக்கை போன்றவைகளைக் கொடுத்தாகி விட்டது.
ஆக, நம் உலகத்தை அதன் உட்கூறுகளை, அதன் ஊக்கிகளைப் புரிந்துகொள்ள – இவை ஏன் இப்படி நடக்கின்றன, ஏன் அப்படி நடக்கக்கூடாதா, மற்ற இடங்களில் இம்மாதிரி இல்லையே, ஏன் நாம் இப்படி இருக்கிறோம் – போன்ற அடிப்படைக் கேள்விகளைப் பல வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். Read the rest of this entry »
தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (1/n)
November 12, 2013
இப்பதிவுகளுக்கான ஒரு இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல்: பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்? (02/11/2013) இது 0/n – அதாவது முதல் பதிவு.
எச்சரிக்கை: 1) இந்தப் பதிவு வரிசை – பல மாதங்கள் முன் பத்ரிக்கு ஒரு கடிதம் போல எழுதப் பட்டது; ஆகவே, நான் கொஞ்சம் எடிட் செய்தாலும், வெட்டி-ஒட்டுவேலை செய்தாலும் – சில காலாவதியான விஷயங்களும் இருக்கின்றன. 2) இப்பதிவுகள் சுமார் 15 போல வரலாம். ஆக, உங்கள் உயிருக்காக ஓடவேண்டுமானால் தாராளமாக ஓடலாம். 3) ஆனால், மேலே படிக்கப் போகிறீர்களானால், அவசியம், இந்த வலைப்பூவின் முகப்பில் வலது பக்கத்தில் இருக்கும் பக்கங்களில் இதனைப் படிக்கவும்: ராமசாமி – யாரில்லை?
பத்ரியின் கேள்விகள்:
* What is your take on the solution to Sri Lankan issue going forward?
* What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?
* What is the role of Tamil Nadu mainstream parties and fringe groups? Why should they be shunned by the civil society and concerned citizens?
* What should Tamil Nadu students do at all – when they see things going all messy? Should they not get angry at all? Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?”
சரி. பத்ரி கேட்டிருப்பதன் சாராம்சம் – 1) ஸ்ரீலங்கா பிரச்னைகளும் 2) ஸ்ரீலங்கா தொடர்பான தமிழகப் பிரச்னைகளும் – பற்றியவை.
ஆனால், சுமார் ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே, தமிழகக் கொதிப்பெல்லாம் வழக்கம்போல அடையாள உணர்ச்சிப்பிழம்புகள், ஃப்லெக்ஸ் தட்டி அடையாள உண்ணாவிரதங்கள், அடையாளக் கல்லெறிதல்கள் நடந்தபின்னர் பின்புறத்தில் (=குண்டிப்பட்டையில்) ஒட்டிக்கொண்ட மண் தட்டிவிட்டுக்கொள்ளப்பட்டு, அடங்கிப்போயிருந்தாலும், டெஸோக்கள் தஸ்புஸ்ஸோக்களாக உருமாறியிருந்தாலும், அவருடைய கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் பெறப்படவேண்டியவையே. Read the rest of this entry »
பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி: தமிழ் (தமிழில் அல்ல) எழுதுவதற்கு ஆங்கில துணை வரிவடிவம் – சிந்தனைகள்
November 9, 2013
ஒரு வழியாக, இந்த தமிழ் எழுத்துரு, வரிவடிவம். வரியுருக்குறி வகையறா சச்சரவை முடிந்தவரை முழுதும் படித்துத் தெரிந்து கொள்ள முயன்றேன்.(நம் தமிழ் விஷயத்தில் என்னை மிகவும் இம்சிக்கும் பிரச்சினைகள் பலவற்றில், இந்த வரிவடிவமும் ஒன்று)
ஜெயமோகன் அவர்களின் கருத்து என்பது ஒரு யோசனையாக ஆரம்பித்து, நடிப்புத் தமிழர்களால், கோமாளித்தனமாக எதிர்கொள்ளப் பட்டு, நம் தமிழர் பண்பாட்டின் இன்னொரு கூறை, எனக்குத் தெளிவு படுத்தியிருக்கிறது. முதலில் நான், இந்த சச்சரவைப் புரிந்து கொள்ள முயன்றதால், என்னுடைய 2 மணி நேரம் வீணாகியிருக்கிறது என நினைத்தேன்; ஆனால், இந்த வேலையைச் செய்ததனால், எனக்கு ஒரு முக்கியமான படிப்பினை ஒன்று கிடைத்ததால் இது பரவாயில்லைதான்.
அந்த படிப்பினையாவது: நிச்சயமாக, மெல்லட் டமிள் இணிச் சாவாது. ஆனாக்க, றொம்ப பைத்தியம் மேறி கைகொட்டிக்கினு சிறிக்கும்…
ஏண்ணாக்க, டமிள்ல மசுர்க்கூச்செறிய இணமாணத்தோட வாய்ஸ் வுட, எளுத, ஒரு மசுத்துக்கும், ஒர் எளவுக்கும் ஒரு வுஷயத்தப் பத்தியும் படிச்சிர்க்கவோ, தெர்ஞ்சிர்க்கவோ வோணவே வோணாம்! இன்னா நான் சொல்றது… பிர்ஞ்சிதா நயினா??
… நம் தமிழர்களின் அற்புதமான நகைச்சுவையுணர்ச்சியை மெச்சுவதைத் தவிர, எனக்கு வேறுவழியே இல்லை. Read the rest of this entry »
நம் தமிழ்த் திரைப்படங்களில் அறிவியல் படும் பாடு!
November 8, 2013
உபயம்: ஸ்ரீமான் வை ‘வைகோ’ கோபால்சாமி அவர்கள்.
உபஉபயம்: ஸ்ரீஸ்ரீ க்ரேவிடி(2013) எனும் பொருளீர்ப்பு சக்தி ஹாலிவுட் ரீல்.
நம் தமிழைக் கூறு போட்டுக் கூவி விற்கும், ’உலகத்தின் வரலாறிலேயே முதல் முறையாக’ ஃப்ரீ ‘ஆஃபர்’ (இத்தை வாங்கினால் அத்து ஃப்ரீ, அத்தை வாங்கினால் மாமா ஃப்ரீ!) கொடுக்கும் நல்லுலகத்தினரால், அறிவுஜீவி குமாஸ்தாக்களால் — ஏற்கனவே –
- அய்யய்யோ_அணுசக்தி,
- அடேங்கப்பா_மரபணு,
- வணக்கத்துக்குரிய திருவாளர் கடவுள்(!) துகள்(!!),
- கந்தறகோளக் கயாஸ் கோட்பாடு,
- உலகின் முதல் குரங்கு, திராவிடக் குரங்கு, (புதுமைப்பித்தன்?)
- உலகின் முதல் கழுதை, திராவிடக் கழுதை, (புதுமைப்பித்ததாசன்??)
- பாவப்பட்ட ஜென் கவிதைக் கட்டுடைப்பு,
- ஜென் கவிஞர்கள் பொழுது விடிந்தால், வழக்கமாக சாலையோர வேசிகளிடம் போவது,
- ஷ்ராதிங்கனார் அவர்களின் பூனை,
- வௌவால்கள் குருட்டு ஜென்மங்கள்,
- கமுக்கமாகப் காப்பியடிப்பது எப்படி,
- கம்பன் என்ன பெரிதாகத் தமிழுக்குச் செய்துவிட்டான் அரைகுறை ராமாயணம் ஒன்றை எழுதியதைத் தவிர,
- நயாகரா வீழ்ச்சி! = வயாக்ரா எழுச்சி!!
…உள்ளிட்ட பல சிடுக்கல் பிரச்சினைகள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட்டு செரிக்கப் பட்டுள்ளன என்பதை – இந்த ஒத்திசைவை வேண்டாவெறுப்பாக ஒத்திசையாமல் தலையில் அடித்துக் கொண்டு படிக்கும் பாவப்பட்ட வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் (=எண்ணி, பத்து பேர்! இது கொஞ்சம் அதிகம்தான்!) அறிவீர்கள்.
மங்களமண்டலத்தியல் கண்டு தெளிவோம்!
November 7, 2013
கிட்டத்தட்ட ஒரு வருடம்போல, இந்த மங்கள்யான் சாகசத்தின் பயணத்தைக் கவனித்து வந்திருக்கிறேன்.
எனக்கு ஒரே சந்தோஷம்தான். நமது சூழலில் — தடைக்கற்களை மீறிய மாபெரும் தாண்டல்கள், அதியுயரக் குதிப்புகள் நடந்து கொண்டிருக்கும் சமயங்களில் வாழ முடிவதற்கு, ஆச்சரியங்கள் நடக்க நடக்க நாம் தெரிந்துகொள்ள முடிவதற்கெல்லாம், நாம் மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்தான்!
நேற்று காலை, வழக்கம்போல ஒரு பதினைந்து நிமிட உரையாடற்பேச்சில், என் குழந்தைகளுக்கு மங்கள்யான் பற்றிக் கொஞ்சம் சொன்னேன். அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்குப் பதிலாக, கொஞ்சம் என் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டேன்.
அவர்களில் சிலருக்கு – மங்கள்யான் என்றால், ஏதோ இந்தியா ஒரு ராக்கெட் விட்டு ‘மங்களமாக’ நடக்கப்போவதால் அப்படிப் பெயர் வைத்திருக்கிறார்கள் என எண்ணம். ஒரு பத்தாம் வகுப்புப் பையனுக்கு மங்கள் பாண்டே என்று ஒரு ‘தேசபக்திப் படம்’ வந்திருக்கிறது பற்றித் தெரிந்திருந்ததால் – அதன் தொடர்பாக இருக்கும் என்றான். எனக்கு இப்படி ஒரு திரைப்பட இழவு வந்ததே தெரியாது – யாருங்கடா ஹீரோ இதுல, அந்த விஜய்குஜய்யா (‘இல்ல ராம், அது வேறமொழிப்படம்’) என்று கொஞ்சம் சிரித்துக் கொண்டே ஆரம்பித்தோம். ஒரு நேபாலி பையன் சரியாகச் சொன்னான் – அவனுக்கு மங்கள்வார் என்றால் செவ்வாய்க் கிழமையென்று தெரிந்திருந்தது. Read the rest of this entry »
நம் வளமையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு தேடல்… (ஒரு பணிமனை)
November 6, 2013
எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பேராசிரியர் திரு ராஜகோபாலன் அவர்கள் நடத்தும் பணிமனை – பேண்தகுநிலை மிகுந்த எதிர்காலத்தை நோக்கிய ஒரு தேடல் – அதாவது ‘Exploring a sustainable future’ டிஸெம்பர் எட்டாம் தேதியில் இருந்து பதினான்காம் தேதி (இந்த 2013 வருடம்தான்) வரை நடைபெறுகிறது.
ராஜகோபாலன் அவர்கள், இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களில் (IIT-சென்னை, IIT-கான்பூர்) பணி புரிந்தவர். சுற்றுப் புறச் சூழலியலில், ஆழிகள் மேன்மைப் படுத்தப்படல், சமூகவியல், காந்திய சிந்தனை, வாழ்வியல், ஹோமியோபதி போன்ற பல தளங்களில் பணியாற்றியவர், பணி ஆற்றுபவரும் கூட. (இவர் போன்றவர்கள் – நல்லோர், கடற்கோள் இந்தியாவைத் தாக்கியபோது செய்த பணிகள், பின்னர் ஊக்கமூட்டிய புனருத்தாரண, சீரமைப்புப் பணிகள் – பொதுவாக வெளியே தெரிய வருவதே இல்லை)
பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்?
November 2, 2013
பல மாதங்களுக்கு முன், இந்த மாணவர் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ போராட்ட விசித்திர ஜந்துக்களைப் பற்றி, என் நேரடி அனுபவங்களை முன்வைத்து, கொஞ்சம் காட்டமான கட்டுரைகள் சில எழுதியிருந்தேன்.
… உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம் – அக்காலகட்டத்தில் – இந்த மாணவமணிகள், ஃப்லெக்ஸ்தட்டி குஞ்சாலார்டுகள் போன்றோர், தமிழ் நாட்டையே சிலகாலம் போல ஸ்தம்பிக்க வைத்தது போலச் சித்திரத்தை விரித்து, போரோட்டமோதி போராட்டம் செய்து, பேருந்துகள் மேல் கல்விட்டெறிந்து — ‘தமிழ்’ ஈழத்தை, ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்ததும், ராஜபக்ஷவைத் தூக்கில் போட்டதும், அமெரிக்காவை விட்டு ராஜபக்ஷவை ஒரு இனஒழிப்பாளியாக அறிவித்ததும்!
அய்யய்யோ! இப்படியெல்லாம் நடந்ததை மறந்து விட்டீர்களா என்ன?? பின்னதெல்லாம் நடக்கவேயில்லை என்று நீங்கள் சொல்லுவீர்களானால், உங்கள் தமிழினத் துரோக முகம் வெளிப்பட்டு விடும், ‘பூனைக்குட்டி’ வெளியே வந்துவிடும்… ஜாக்கிரதை!
ஆர் மகாதேவன் – சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 7 புதிய நீதிபதிகளில் ஒருவன்!
October 25, 2013
மிகவும் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.
காலையில் என் அப்பா தொலைபேசியில் கூப்பிட்டார்: “டேய், உன் நண்பன் ஹைகோர்ட் ஜட்ஜாயிட்டான்; பேப்பர் படிச்சியா?”
எனக்குத்தான் நாளிதழ் கிட்டே போகும் பழக்கமே இல்லையே – ஆக, பறந்தோடி வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவரிடம், முந்தா நாள் செய்தித்தாளை யாசித்துப் படித்தேன். Read the rest of this entry »
முதல் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (1/3)
இரண்டாம் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (2/3)
19. சோட்டாபீம் போன்ற அற்ப கேலிச்சித்திர அசிங்க அதிகுண்டக் கோமணர்கள் இல்லாமல், வாழ்க்கையில் வீரத்தையும், விடாமுயற்சியையும் – எப்படித்தான் குழந்தைகள் மனதில் பதிய வைப்பது? கேளிக்கை முறை ஊடக நிகழ்ச்சிகளினால் மட்டும்தானே குழந்தைகளுக்கு இவ்விழுமியங்களைக் காண்பிக்க முடியும்? சேர்ப்பிக்க முடியும்?
ஆம். இது மிக வருந்தத்தக்க, ஆனால் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.
வேறு வழியில்லை. பஞ்சதந்திரமும், ஹிதோபதேசமும், இதிஹாசங்களும், புராணங்களும், ஐங்காப்பியங்களும் சொல்லாத, சுட்டாத விஷயங்களை, மிகுந்த நயத்துடன், மிகத் தெளிவாக சோட்டாபீம் அவர்கள் காண்பிக்கிறார்கள். எனக்குப் புல்லரிக்கிறது.
அடிப்படை அறங்களின் ஒரு அங்கமான நேர்மை, தைரியம் போன்ற அடிப்படை விழுமியங்களை, பெற்றோர்களாகிய நம்மால் பல்வேறு அழுத்தங்களால் நம்முடைய குழந்தைகளுக்குப் புகட்டமுடியாமல் போகும்போது, யாராவது தொலைக்காட்சியில் இவற்றைக் காண்பித்தால் என்னைப் போன்ற உலுத்தர்கள், புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்தச் சனியன்களுக்கு வேறு வேலையில்லை. மேலும் உங்களுடைய குழந்தைகள், சோட்டாபீம் படம் வரைந்த மேல்சட்டைகளை அணிந்து கொண்டு உங்களைப் பார்த்துச் சிரிக்கும்போது, உங்கள் இதயம் உருகிவிடாதா? Read the rest of this entry »
முதல் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (1/3)
10. ஆனால், தொலைக்காட்சியில் நாம் இப்போது பார்க்கும் விஷயங்கள், கண்+செவி கொண்டு நம்மை அடையும் செய்திகள், பிற்காலத்தில் நமக்கு உபயோக கரமாக இருக்கலாமில்லையா? எதிர்காலத்தின் நாம் உபயோகிக்கக்கூடும் நினைவுகள், தற்காலத்திய இந்த்ரியத் துய்த்தல்கள் மூலமாகவே உருவாக்கப் படுகின்றன அல்லவா?
நாம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நம் நினைவில் எவ்வளவு நாட்கள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நேரிடையாகவோ மறைமுகமாகவோ எவ்வளவு கற்றுக் கொள்கிறோம், கற்றுக் கொண்டவைகளிலிருந்து நாம் எவ்வளவு சதவிகிதத்தை உபயோகித்து நம்மை உய்வித்துக் கொண்டிருக்கிறோம், மகிழ்வித்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் யோசித்தால் நலம்.
பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கு – ஒரு நீண்டகால தாக்கத்து என்பது இல்லை. அவை சாதாரணமான துய்த்தல்கள் தான். அதிக பட்சம் One night stand போன்றவைதான். Read the rest of this entry »
எச்சரிக்கை: இந்தப் பதிவில் 1) ஏன் தொலைக் காட்சி என்பது வெறுக்கப் படவேண்டியதொன்று 2) அதனால் ஒரு சில நன்மைகள் தப்பித் தவறி இருந்தாலும் – உண்மையில் அது எவ்வளவு தீமை செய்கிறது 3) தொலைக்காட்சி முதல்வாத அடிப்படைவாதிகளுக்கு (Television Fundamentalists!), சோம்பேறிப் பார்வையாளர்களுக்கு எதிராக என்றெல்லாம்…
… பிரகடனங்கள் இல்லை. மன்னிக்கவும்.
ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் பின்னொரு சமயம் எழுத முயற்சிக்கிறேன். 8-)
மாறாக – என் பார்வையில் – குழந்தைகளுடனான ஒரு குடும்பச் சூழலில், சராசரித் தர (அறிவு, பொருளாதாரம், பார்வை, அனுபவங்கள் இன்னபிற) பெற்றோர்களால் – தங்கள் வீட்டில், தொலைக்காட்சியில்லாமல் என்னதான் செய்யக் கூடும் என்பதை மட்டுமேதான் இப்பதிவில் விவரிக்கப் போகிறேன்; இங்கு ஒரு முக்கியமான விஷயம்: எனக்குத் தெரியும் – நானும் ஒரு சராசரித்தனமான ஆள்தான் – அகஸ்மாத்தாக ஒரு கணவன், தந்தை போன்ற பல பாத்திரங்களில், குணசித்திர வேடங்களில் நடிப்பவன்தான். இன்னும் முக்கியமாக, நான் ஒரு அறிவுஜீவி கிறிவுஜீவியென்றெல்லாம் இல்லை.
ஆகவே, கடந்த சுமார் 30 வருடங்களாகத் தொலைக்காட்சியின் கிட்டவே போகாமல் காலம் தள்ளியிருக்கும் ஒரு சாதாரணன் என்கிற முறையில் மட்டுமே இந்தக் கேள்வி-பதில் நடைப் பதிவு நீளும். யோசித்துப் பார்த்தால், இந்தக் கேள்விகளை எல்லாம், என்னிடம் பலபேர் பல சமயங்களில் கேட்டிருக்கிறார்கள்; விதம் விதமான பதில்களையும் பெற்றிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். அவர் மகனை, மேதகு சோட்டாபீம் அவர்களிடமிருந்து மீட்க வேண்டுமாம். ஆக, இந்தப் பதிவு; வழக்கம்போல, யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம் !
Read the rest of this entry »
டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு)
October 15, 2013
கடந்த நான்கு மாதங்களில் இலியட் + ஆடிஸ்ஸி காவியங்களைப் பிழிந்து, சக்கையை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்ததை, உதவியாக இருந்த புத்தக ஜாபிதாவைப் பற்றியென்று — இரண்டு பதிவுகளில் எழுதியிருந்தேன்; பாவம் அந்தப் பிள்ளைகள். (ஏன், நீங்களும் தான்!)
இதன் தொடர்ச்சியாக, இந்த டீடலஸ்+இகரஸ் (Daedalus, Icarus) கதைகளை, சென்ற பத்து நாட்களில் – நான்கு நாட்கள் (மொத்தமாக சுமார் ஒன்றரை மணி நேரம்) என் குழந்தைகளுக்குச் சொன்னேன்.
எது எப்படியோ…
இந்த டீடலஸ், ஸிஸிபஸ் (Sisyphus) கதைகளெல்லாம் எனக்குப் பிடித்தமானவை. இதற்கு முக்கியமான காரணம், டீடலஸ் பாத்திரம் – இவன் ஒரு நல்ல பொறியியலாளன், கண்டுபிடிப்போன், கட்டமைப்போன் – என்பவை மட்டுமல்ல, அவன் மனிதனின் உட்கிடக்கையின் உன்னதங்களும் சகல கீழ்த்தரங்களும் உள்ளவனாக – ஒரு சாதாரணனாகச் சித்திரிக்கப் படுவதனாலும்தான் எனக் கருதுகிறேன்.
<–/-0-0-0-0- குறிப்பு #1 -0-0-0-0-\–>
கொஞ்சம் அதிகமாகவே சுருக்கமாக இந்த டீடலஸ், இகரஸ் (கிரேக்க) கர்ண பரம்பரைக் கதைகளை – அவற்றின் ஒருவிதமான கதையாக்கத்தைக் கொடுக்கிறேன்: Read the rest of this entry »
ஸ்ரீலஸ்ரீ சொம்பேஸ்வரானந்த தம்பிரான் மஹாமஹோ பெரிய சந்நிதானேந்திர பூர்வாஸ்ரம மௌல்வி அப்துல் ஹமீதாச்சாரிய நேதி மனுஷ்யபுத்திர மஹராஜ் நாகநந்தியார்
October 7, 2013
முதலில், சில பத்திகள் – புத்தகச் சந்தை பற்றி… பின்னர் ‘கவிஞர்’ கதை.
இன்று பகல்நேரத்தில் எனக்குச் சுளையாக நான்கு மணி நேர அவகாசம் கிடைத்ததால், ஆங்க்லோ-ஃப்ரெஞ்ச் நெசவாலைத் திடலில் புதுச்சேரி அரசு நடத்திக் கொண்டிருக்கும் புத்தகச் சந்தைக்குச் சென்றிருந்தேன்; சிறிய அளவில் சுமார் 80த்திச் சொச்சம் கடைகளே விரிக்கப் பட்டிருந்தாலும் – அதன் மேலாண்மை ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. (வழக்கம்போல, குடி நீர், கழிப்பறை வசதிகளெல்லாம், சந்தைக்குச் செல்பவர்களையே விடுங்கள் – சந்தையில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்களுக்குக் கூட பரிதாபமான கட்டுமானங்கள் தான்; இதைத் திருத்த பலபத்தாண்டுகளாகும் எனத்தான் நினைக்கிறேன்.)
வாங்கும் புத்தகங்களுக்கு 25% கழிவு; நுகர்வோர் ரொக்க ரசீதுகள் அனைத்தும் புதுச்சேரி அரசின் கலை-பண்பாட்டுத்துறை கொடுத்திருக்கும் பில்-புத்தகங்களில் போடப்பட்டன. அரசு இந்தக் கழிவில் 15%த்தை கடைக் காரர்களுக்குத் திரும்பிக் கொடுத்துவிடுமாம். ஆக – புத்தகத்தை வாங்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஏகக் கெடுபிடி. வெளிவாசலில் – பில்களையும் புத்தகங்களையும் மாய்ந்து மாய்ந்து சரிபார்த்து ஒவ்வொன்றிலும் ‘15% DISCOUNT – NOT FOR RESALE’ என ரப்பர்ஸ்டாம்ப் அடித்துக் கொடுத்தார்கள். ஏனென்று கேட்டால் சில கடைக்காரர்கள் அரசு கொடுக்கும் தள்ளுபடியைக் கயமையாகக் ‘கறக்க’ மறுபடியும் மறுபடியும் புத்தகங்களையும், பில்களையும் மறு சுழற்சி செய்தவண்ணம் இருந்ததால் தான் என்றார்கள்.
என்னவாக இருந்தாலும் நாம் வாங்கும் புத்தகங்களிலெல்லாம் இப்படி அச்சடித்துக் கொடுத்தது ‘இந்த டம்ப்ளர் வசந்தாபவனிலிருந்து திருடியது’ என வசந்தாபவன் காரர்களே அவர்கள் டம்ப்ளர்களில் பொறித்துக் கொள்வது போல, கொஞ்சம் அசிங்கமாகவே இருந்தது, என்ன செய்ய… Read the rest of this entry »
(அல்லது) விதண்டாவாதம் செய்வது எப்படி?
(அல்லது) எதையும் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று ஆகாத்தியம் செய்வது, பிலாக்கணம் வைப்பது ரொம்ப லேசு!
முதலில் இந்த அயர்ச்சியளிக்கும் பின்னூட்டத்தைப் படிக்கிறீர்களா? (இதே தொனியில் இரண்டு மின்னஞ்சல்களும் வந்திருக்கின்றன)
அய்யாமார் அவர்களே,
வெறுமனே செய்தித்தாள்களையும் (=குப்பைகள்) படித்து, அரைகுறை தொலைக்காட்சிகள் பார்த்து, கற்பனாசக்தியால் பல விஷயங்களை ஆய்ந்தறிந்து பல கருத்துகளையும், காழ்ப்புகளையும் வளர்த்தெடுக்கலாம். ஆனால்…
1. வருந்தத் தக்க வகையில், உங்கள் பின்னூட்டத்தில் – சில உண்மைகளும் (அதாவது மோதி குஜராத்தின் முதலமைச்சர் போன்றவை), உண்மைகள் அல்லாதவையும் (= மிச்சம் இருப்பவை) இருக்கின்றன. நான் பின்னவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். Read the rest of this entry »




