நம் தமிழர்களின் அதிசயிக்கவைக்கும் அறியாமையும், அது குறித்து நாம் கொண்டிருக்கும் பெருமையும் 

December 1, 2013

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (11/n)

சாளரம் #5: தமிழகத்தில் பொதுவாக – மானுடப் பரிணாமம், இனம், மொழி, இயக்கம், வர்க்கம், ஜாதி, போராட்டம், கட்சி, அரசியல், அரசு போன்ற அடிப்படைகளின் மீது சரியான புரிதல்கள் இல்லை; போராட்டங்களும், இயக்கங்களும் – அரசியல் கட்சிகள் போலல்லாமல் இன்னொரு வித ஜந்துக்கள்  என்றுகூட நாம் புரிந்துகொள்ள மாட்டோம் – ஆக, கந்தறகோளங்களை நம் புரிதல்களாக அவதானித்து, மகாமகோ கர்வத்துடன், பொறுக்கமுடியாத இறுமாப்புடன் பவனி வருபவர் நாம்.

இதற்கு – தமிழ், திராவிடம், இனம் என ஆரம்பித்த தமிழ்த்தேசிய அரசியல் – பிரித்தானியக் காலனிய வேலை வாய்ப்புகளில் ஒரு சாராரே உட்புகுகிறார்கள் எனக் கருதி, இன்னொரு சாராருக்கும் பங்கு வேண்டும் என ஆரம்பித்து – பின்னர் வேறு எதற்கோ  ஆரம்பித்தோம் எனக் கட்டுக்கதைகளை உருவாக்கி, அதற்குப் பின்னர் திராவிட இயக்கமாய் உருமாறி – அதற்குப் பின் தேய்ந்துபோய் கட்டெறும்பு ஆகிவிட்டதும் ஒரு காரணம். (Tamil nationalistic (actually notionalistic) politics – from where it started off – hankering after colonial jobs – is now mainly indulging in the continual institutionalization of sheer lumpen stupidity.)

இந்தக் கட்டெறும்பு அளவிலும்கூட, இதற்கு மீயறிவு துளிக்கூட இல்லாத காரணத்தால், தன்னைப் பற்றிய கருத்தாக்கம் யானையளவு; இந்தக் கட்டெறும்புக்கு, தன்னுடைய பழைய கழுதையளவு இருந்திருந்த ஆகிருதி கிடைக்குமா என்று கொஞ்சம் பேராசை – ஆக ‘தமிழ்’ ஈழப் பிரச்சினையைக கையில் எடுத்துக் கொண்டு (ஒரு எழவையும் புரியாமல்தான்) குடுகுடுப்பைக் காரன்போல ஆட்டிக் கொண்டிருக்கிறது.

-0-0-0-0-0-0-0-0-

இனம், வர்க்கம், வர்ணம், ஜாதி, கேஸ்ட், மனு நீதி, உயர்நீதிமன்றத்தில் மனு, முன்ஜாமீன் மனு தள்ளுபடி, ஐநாவில் மனு, இட ஒதுக்கீடு போன்றவற்றைச் சுற்றிச்சுற்றி மட்டுமே வலம் வருவது, தேசம் தேசியம் குறும் தேசியம், இந்தியா – தேசிய இனங்களின் சிறைக்கூடம், தமிழகம் – குறுந்தேசிய இனங்களின் சிறைக்கூடம், சிறைக்கூடம் – வன்மையாகச் சிரைத்துக்கொண்டபின் குளிக்க நீர் சேந்த உபயோகிக்கும் நீண்ட குடம், இனவாதம், வாதஇனம் (a racy argument, that is! Or, is that an argumentative  race??), பேரினவாதம், இனப்படுகொலை, சர்வதேச இனப்படுகொலைத் தடுப்புச் சட்டம், ஐநா சபை, ஜெனீவா நீதிமன்றம், உண்ணாவிரதம் (இருவகை: அடையாளமுள்ளது, அடையாளமற்றது), அறப் போராட்டம் (அரப்  போராட்டமாக மரம் வெட்டுதலாகக்கூட விரியும் இது) — என்கிற ரீதியில் ஒன்றையுமே புரிந்துகொள்ளாமல் வார்த்தைகளைச் சுற்றிச் சுற்றி அவற்றின் மையங்களுக்கும் புரிதல்களுக்கும் கிட்டேகூடப் போகாமல், தள்ளாடிக் கொண்டு நடப்போம்.

  இனம் குறித்த அறியாமையை எப்படிப் புரிந்துகொள்ளலாம் / பதிப்பாசிரியர்கள்: ஷனன் ஸலிவன், நான்ஸி டுவனா / ஸுனி ப்ரெஸ் / 2007 / அமேஸான்

இனம் குறித்த அறியாமையை எப்படிப் புரிந்துகொள்ளலாம் / பதிப்பாசிரியர்கள்: ஷனன் ஸலிவன், நான்ஸி டுவனா  / ஸுனி ப்ரெஸ் / 2007 / அமேஸான்

நான் மிகவும் மதிக்கும் அம்மணிகள் ஷனன் ஸலிவன், நான்ஸி டுவனா – இருவரும் இனம், ஆண்மை, பெண்ணியம் போன்ற விஷயங்களைப் பற்றி கறாராகவும், அடிப்படை நேர்மையுடனும் ஆராய்வதோடு மட்டுமல்லாமல் சில புத்தகங்களை எழுதி, மேலதிகமாக, தொடர்புடைய சமகால சமூகவியல், சமூகமானுடவியல், மனோதத்துவவியல் ஆராய்ச்சியாளர்களின் எழுத்துகளையும் தொகுத்தளித்திருக்கிறார்கள்.

இவற்றில் முக்கியமானது, இந்த இனம் குறித்த அறியாமைகளை, அவற்றின் ஆதாரசுருதிகளை ஆராயும் எபிஸ்டெமாலாஜி (எப்படி கருத்துகளைப் புரிந்து கொள்கிறோம், எப்படி அர்த்தங்களை உருவாக்கிக் கொள்கிறோம் என அலசும் மிக மிக  முக்கியமான தத்துவவியல் துறை) புத்தகம்.

இப்புத்தகத்தின் மையப் பாடுபொருட்கள் யாவையென்றால் – வெள்ளைக்கார மேட்டிமை மனோபாவம் உருவாவது, அதற்கு அறியாமையைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம், அதற்கான தத்துவச் சட்டகங்கள் போன்றவை. ஆனால், நமது தமிழகக் கலாச்சாரச் சூழலில் இதனை திராவிட அரைவேக்காட்டு மேட்டிமை என்கிற கந்தறகோளச் சித்தாந்தத்தை முன்னெடுத்து பீடு நடை போடும் நம்முடைய செல்ல திராவிட இயக்கவாதிகளைக் குறிப்பதாகவும் இந்தப் புத்தகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விரிக்கலாம்.

திராவிட(!) இயக்கம் (!!) – அடிப்படையில் அறிவியல்பூர்வமாகவோ, வரலாற்று நிகழ்ச்சிகளின், பிரத்யட்சச் சமூகக் காரணிகள் மீதோ எழுப்பப்படாமல், கட்டமைக்கப் படாமல்  — உளுத்துப்போன கீழ்க்கட்டுமானங்களின் மேல் எழுப்பப்பட்ட சீட்டுக்கட்டுக் கோட்டை. ஆகவே இந்தக் கோட்டையைச் சீவிச் சிங்காரித்து இயக்கத்தலைவர்கள் அரசியல், பொருளாதார ஆதாயங்களுக்காகப் பவனி வருவதற்கு, மக்களை அறியாமையில் ஆழ்த்தி, அவர்களை மொண்ணையாக்கி வைத்திருப்பது மிக முக்கியம். இக்காரியங்களுக்கு தமிழகத்தில் திரா விட இயக்கங்களுக்கு உதவியாக இருப்பது – உள்ளீடற்ற அடுக்கு மொழி சார்ந்த மேடைப்பேச்சுகளும், திரைப்பட/தொலைக்காட்சி அற்பத்தனங்களும் தாம். நக்கீரன், உயிர்மை, விடுதலை, த ஹிந்து போன்றவைகளும் இவற்றுக்குத் துணைபோகும் ஜந்துக்கள் தாம்.

இந்தப் புத்தகத்தின் இறுதி முடிவு: “The book concludes that understanding ignorance and the politics of such ignorance should be a key element of epistemological and social/political analyses, for it has the potential to reveal the role of power in the construction of what is known and provide a lens for the political values at work in knowledge practices.”

தமிழர்கள் முட்டாட்களாக இருப்பது, அறியாமையில் உழல்வதென்பது, நடைமுறை திரா விட இயக்க அரசியலில் ஒரு இன்றியமையாத  அங்கம்.

தமிழகத்தில் — நம்முடைய சமகாலப் பண்பாட்டின் வருந்தத்தக்க வீரியமற்ற நிலையானது, ஒரு தற்செயல் நிகழ்வேயல்ல.  நம் அறியாமையானது – தேவைமெனக்கெட்டுப் பேணப்பட்டு, போஷகம் செய்யப்பட்டு வருவதுதான்.

-0-0-0-0-0-0-0-0-0-

தேசியம் - ஒரு விமர்சனரீதியான அறிமுகம் / ஃபிலிப் ஸ்பென்ஸர், ஹொவார்ட் வொல்மன் / 2002 / ஸேஜ் / அமேஸான்

தேசியம் – ஒரு விமர்சனரீதியான அறிமுகம் / ஃபிலிப் ஸ்பென்ஸர், ஹொவார்ட் வொல்மன் / 2002 / ஸேஜ் / அமேஸான் – பல விதமான, கருத்துகள் சார்ந்த புத்தகங்கள் படிக்க நேரமில்லாமல் இருந்தால் — சமீப காலத்தில் வந்த இப்புத்தகத்தைப் படித்தால் ஒரளவு கோர்வையாகவே நம்முடைய கருத்தாக்கங்களை மேலெழுப்பிக் கொள்ளலாம்.

தேசம் தேசியம் குறுந்தேசியம், சிறைக்கூடம் என்று உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும் பலருக்கு (அதாவது நான் நேரிடையாக பேசி அறிந்து கொண்டுள்ள ஒரு மாதிரியான  தங்களுக்குத் தாங்களே  பட்டம் கொடுத்துக்கொண்ட சான்றோர்களுக்கு) இவையெல்லாம் என்னவென்றே தெரியாமல், ஆனால் தங்களுக்கு அனைத்து விஷயங்களும் புரிந்து விட்டது போல நினைப்பு. எல்லோரும் ராமசாமி  ஆக முடியாதல்லவா? ! ;-)

ஏதோ, நம்முடைய சென்னையிலுள்ள கிண்டி ரேஸ் வகையறாக்களை ‘கிண்டி இனம்’ என்கிற வகையில் நாம் புரிந்துகொண்டு,  கிண்டி ரேஸ் மானத்தை (இன மானம்!) வாங்காமல் இருந்தால் சரி, கிண்டி குதிரை ரேஸ் ஒழிக்கப்பட்டால், அதை ஒரு இனப் படுகொலையாகப் பார்த்துக் கூக்குரலிடாமல் இருந்தால் சரி. (ஹ்ம்ம்ம்… எனக்கு இப்போது ஒரு சந்தேகம்: பத்ரி கிண்டியில் வசிப்பவர் – ஆக, இந்த மனிதர், ஒரு கிண்டிப்பேரினவாதியோ?)

எட்றா காய்தத்த… எள்த்றா அட்க்கு மொளீல ஒரு மனுவ… அனுப்றா  ஐநாவுக்கும் இங்கிலாந்து கேமரூனுக்கும் அத்த… மொதல்ல இந்தப் பேரினவாதீங்க்ள ஒளிக்கணும், அப்பால  பேரில்லாதனவாதீங்க்ள ரவுண்டு கட்லாம்…

-0-0-0-0-0-0-0-0-

நம்மை மிகவும் துன்புறுத்துவை, இந்த இசங்கள். அந்த இசம், இந்த இசம் என்று மானாவாரியாக வார்த்தை எலுமிச்சம்பழ மூட்டைகளைத் திறந்து உருட்டி விடுவதில் நமக்கு நிகர் நாமே! இதற்குப் பெயர் இசமிசம் அல்லது தமிழிசம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

யாராவது செய்வதை நமக்குப் பிடிக்கவில்லை, நம்மால் செய்யமுடியாததைச் செய்கிறார் என்றால், நாம் அதனைச் செய்ய முயன்றால் வழுக்கி விழுந்துவிடுவோமென்றால் அவர் பாசிசம் (ஃபாஸ்ஷிசம் அல்ல) செய்கிறார் என்போம்.

இந்தியப் பாரம்பரியத்துக்குத் தேவையற்ற – உள்ளீடில்லாத கோட்பாடுகள் சார்ந்து செக்கு மாடுகள் போலச் சுற்றிச்சுற்றி அதன் குவிமையத்தை அணுகாமல், பொதுவாக நம் மக்கள் (குறிப்பாக —  நமது பராக்கிரமம் மிகுந்த அறிவுஜீவிகள், படிப்பாளிகள்) வருவதை செக்குலரிசம் என்போம்.

இப்படிப்பல வேடிக்கைகள் – நாம் பொருளையோ பின்புலங்களையோ அறியாமல் கந்தறகோளமாகக் கலைச் சொற்களை உளறிக் கொட்டுவது.

-0-0-0-0-0-0-0-0-0-

ஸ்ரீலங்கா பிரச்னையையும் ஒரு இழவு புரிதலும் இல்லாத இந்த இசங்கள் மூலமாகத்தான் அணுகுகிறோம். ரேஸிசம், ஃபாஸிஷ்ம் என – அதுவும் ராஜபக்ஷ உடைத்தால் பொன்குடம், பிரபாகரன் உடைத்தால் மண்குடம் என்கிற ரீதியில். இல்லாவிட்டால் ஜெனோஸைட், வார் கிரைம்ஸ், யூஎன் ரெஸெல்யூஷன் என ஆங்கிலத்திலேயே ‘பீட்டர்‘  விட்டு நம் அரைகுறை மேதைமையைக் காண்பிப்போம்.

நம்முடைய தொலைதூர ஈழ ஆதரவு, கூக்குரல் பற்றிய ஒரு புத்தகம் கீழே!

வெளியே (புலம் பெயர்ந்த) வாழ்வு / ஊய்வின் சுக்ரெலூத் / ப்லூடோ ப்ரெஸ் / 1999 / பெரும்பாலும் அழகாகக், கோர்வையாக எழுதப் பட்டுள்ள இப்புத்தகம் - ஸ்ரீலங்காவிலிருந்து பெயர்ந்து நோர்வே நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை மையமாக வைத்து எழுதப் பட்டுள்ளது; இவர் சொல்லியிருக்கும் சில விஷயங்கள் காலாவதியாகியிருந்தாலும் - இந்த ‘தொலைதூர தேசபக்தி’ வகையறாவை ஒரளவு புரிந்துகொள்ள உதவுகிறது.

வெளியே (புலம் பெயர்ந்த) வாழ்வு / ஊய்வின் சுக்லெரூத் / ப்லூடோ ப்ரெஸ் / 1999 / அமேஸான்; பெரும்பாலும் அழகாகக், கோர்வையாக எழுதப் பட்டுள்ள இப்புத்தகம் – ஸ்ரீலங்காவிலிருந்து பெயர்ந்து நோர்வே நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை மையமாக வைத்து எழுதப் பட்டுள்ளது; இவர் சொல்லியிருக்கும் சில விஷயங்கள் காலாவதியாகியிருந்தாலும் – இந்த ‘தொலைதூர தேசபக்தி’ வகையறாவை ஒரளவு புரிந்துகொள்ள, இப்புத்தகம் உதவுகிறது.

இந்தத் தொலைதூர ‘தமிழ்’ஈழக் கூக்குரலை, பாதுகாப்பான பிரதேசங்களிலிருந்து எழுப்பப்படும் கோஷ்டங்களை – அதாவது, ஸ்ரீலங்காவில் இருந்து வெளியேறியிருக்கும் தமிழர்கள், உரத்துச் சொல்வதைக்  கூடத் தலையில் அடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ளலாம்.

ஆனால், நம்மூர்த் தமிழர்கள் மூர்க்கமான ஃப்லெக்ஸ் பேனர்கள் வைத்து வாயோர நுரை தள்ள உளறிக் கொட்டுவதுதான் நாராசம்.

எப்படி அற்பத்தனமாக, நம்முடைய ஆட்கள் —  காமன்வெல்த்  நாடுகளின் கூட்டம் (=அற்ப great britain சின்னஞ்சிறிய இங்கிலாந்த் நாட்டின் விடுவிக்கப்பட்ட அடிமைகள்) ஒரு பெரிய புண்ணாக்கையும் சாதிக்கப்போவதில்லை என்றாலும் அதுதான்  ஒரு பெரிய உலகப் பிரச்சினை போல, அதனை பகிஷ்கரித்தால்தான் ஸ்ரீலங்கா தமிழர்கள் ஜென்மசாபல்யம் அடைவார்கள் என்பது போன்ற சித்திரத்தை விரிக்கிறார்கள்?

ஒட்டேந்தி ‘white man’s burden‘ புகழ் கேமரூனின் யாழ்ப்பாணக் கையாட்டல்களுக்கெல்லாம் ஒரு கயமை ஒப்புதல் கருத்தை முன்வைக்கிறார்கள். இதே போல் இந்த ஆளை டப்ளின் போய், மன்னிப்புக் கேட்டு – இவர்கள் பிடித்து வைத்திருக்கும் வடக்கு அயர்லாந்தையும் விட்டுக் கொடுக்கவா சொல்வார்கள், நம்முடைய அரைகுறைகள்? ஃபாக்லாந்தை, அர்ஜெண்டினாவுக்கு திருப்பியா கொடுக்கச் சொல்வார்கள் நம் தமிழினக் காரர்கள்?

அசிங்கமாக இருக்கிறது – நம் தமிழர்கள், தொடர்ந்து ஸ்ரீலங்கா தமிழர்களைக் படு கேவலப்படுத்தும், அவர்களுக்கு மகாமகோ தொந்திரவு கொடுக்கும் செயல்கள்…

எப்போதுதான் நாம், திரா விட அரசியலின், அதனுடைய  – அறியாமையில்  நம்மை வலுக்கட்டாயமாகக் கவிழ்த்தும் போக்கில் இருந்து விடுதலை பெறப் போகிறோம்?

0-0-0-0-0-0-0-

அடுத்தது…  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (12/n)

தொடர்புள்ள பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

3 Responses to “நம் தமிழர்களின் அதிசயிக்கவைக்கும் அறியாமையும், அது குறித்து நாம் கொண்டிருக்கும் பெருமையும் 

 1. Yayathi Says:

  Thanks for the write-up and recommending few more books. Though I have not had a chance to read them, I have made an attempt to deconstruct my “ignorance” about “Dravidian” by first coming up with a definition of the construct that makes it and analyzing it as it applies to different phases and leaders of that movement and others in the past, present and immediate future. In doing so, I see convergence with your arguments, though the framework and narration differ in style and for a comment it has become lengthy. I do not endorse any particular person/party and have tried to be as objective as I could within the limitations of this framework.

  The Dravidian construct has five dimensions – Political (Anti Nationalism/ Regionalism/Federalism/Independent nation), Economical (Rent seeking – Reservation/subsidies/freebies), Cultural (Tamil vs. Hindi & others), Social (Anti Brahmin) and Religious (Atheism/Anti-Hindu). Of these, the Justice Party used three dimensions (Anti Nationalism, Reservation, Anti Brahmin) and Periyar used all five (with Anti-Brahmanism as the core and other four as derivatives) in his arguments; Anna used three (dropped Independent nation and atheism). MGR further diluted it by dropping Anti Brahmanism and was cautious on Cultural (within Indian nationalism) and employed (Reservation/freebies) in the Economical dimension – JJ followed MGR’s path except on Srilankan Tami issue. On the Srilankan Tamil issue, MGR’s actions, IMO, were more genuine (though questionable for providing military training) than any other Indian leader and was not just a ploy to identify with Tamil cause. Key strategy of both MGR/JJ is whatever Karunanidhi does, do it better than him or/and ahead of him.

  Karunanidhi would use any and all of these dimensions – the difference between him and Periyar is that Periyar saw the five dimensions together and for him the word and its meaning went together whenever he said something; but for Karunanidhi, he would use any or combination of these dimensions depending on the situation and how beneficial they are to him. Also, for him words (or actions) and its meanings are derived only within a particular narrative. Certain times, the symbols and the narratives were effective in creating tangible cultural construct (e.g. Anti-Hindi) and certain other times used as “Branding” exercises ( Anna’s naming of Madras state as Tamil Nadu instead of actually getting independent Tamil nation) and remaining times just “plain failures” (like the breakfast to lunch fasting, quote about Rama’s Engineering degree) – but as an effective screenwriter, he always would be on the look out to associate symbols/narratives within these dimensions. Whether he wins or not, he would be the key player in the field.

  Ramadoss (Junior MK) is trying to re-calibrate this five dimensional construct by replacing the Brahmin Vs. Non Brahmin with Dalit Vs. Non-Dalit as the social cause; exhibiting rent seeking for MBC reservation; espousing Tamil Vs. Kannada (Veerappan), Telugu (seeking Tirupathi), and finally asking for North Tamil Nadu as separate state. Vaiko, though silent on religion/Brahmins, his overarching identification with “Tamil” cause and his stubborn/direct nature makes him more suitable as a social leader (like Periyar) than a political leader.

  The Congress, BJP, and the Communists at the national level want to engage with the state parties based on “Principal – Agent” model, focusing only on the dividends (seats) and their own “Stock” price. If they want to replace the Dravidian construct, they would have to do more to the marginal sections (rent seekers) with something more tangible and more competitive than offered by state parties, provide a more flexible, inclusive governance model whereby the state governments can participate more on national issues like foreign affairs, trade etc. – after all, states are key centers of productivity; finally, they really have to improve on how they communicate to the TN people – they need to come up with better stories (narratives/symbols).

  Now, coming to Vijayakanth – probably the most confused man right now- the party has “Dravidian” in the name and he thinks he is Junior MGR, and he could be clustered with MGR and JJ when it comes to the Dravidian construct but for the very same reason, there is nothing that would distinguish him either from JJ, who has already taken hold of that particular space (besides being more powerful and experienced than him). Perhaps, that also could be reason he may be able to split the anti-incumbency votes going to other opposition parties!

  On your question, when are we going to liberate ourselves from this “ignorance” about “Dravidian” – perhaps may be when someone replaces this with yet another “ignorance” :-)

 2. க்ருஷ்ணகுமார் Says:

  \\\ On your question, when are we going to liberate ourselves from this “ignorance” about “Dravidian” – perhaps may be when someone replaces this with yet another “ignorance” :-) \\\

  Is that a doomsday prophecy :-)

 3. Yayathi Says:

  அறியாமை – இரு வகையாக பார்க்கலாம்:
  (அ) அறி இயலாமை – பணம், நேரம், வசதி,சூழ்நிலை அல்லது வேறு ஒரு காரணமாக அறிந்து கொள்ள முடியாமல் போவது – எந்தெந்த காரணங்கள் என்று தெரிந்து கொண்டால் அதற்கேற்றவாறு தீர்வு காணலாம்.
  (ஆ) அறி மாயை – அரைகுறையாக புரிந்து கொள்வது, (ஒரு) சித்தாந்த கோட்பாடுகளின் வரைமுறைகளுக்கு உள்ளேயே உலகின் எல்லா கேள்விகளுக்கும் பதில்களை தேடுவது, தான் அறிவுஜீவி என்று அல்லது தன்னை தனிப்பட்டு காட்டிகொள்வதற்காகவே பிரயத்னபட்டு பிம்பத்தை உருவாக்குவது (ராமசாமியின் சொற்களில் “இசமிசம்,தமிழிசம்,பாசிசம்,செக்குலரிசம்” என்று அழைக்கப்பட்டது )
  – இந்த “அறி மாயை”காரர்களுக்கு ஒரு மாயையில் இருந்து விடுபட இன்னொரு மாயைதான் தீர்வு :


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s