தமிழர்களின் மக்கட்தொகை வளர்ச்சி, ‘சங்க காலம்,’  நம் பெருமிதம் – குறிப்புகள்

October 12, 2022

‘…ற்றொம்ப நீளம்:அத்னால படிக்கமாட்டோம்’ வகை tl;dr (too long; didn’t read) சோம்பேறி அன்பர்களுக்கு:

மக்கட்தொகை, பொருளாதாரம், எழுத்தாளர் விகிதம், இலக்கியத் துய்ப்பாளர்கள் போன்ற கோணங்களில் பார்த்தால், ‘சங்க காலம்’ என்பது அவ்வளவு தொன்மையானதோ பரந்துபட்டதோ அல்ல – அனேகமாக அது பிற்பாடு அமோகமாக கற்பனை செய்யப்பட்டதொன்றாகத்தான் இருக்க முடியும்.

இந்தப் பதிவு, ஒருமாதிரி குண்ஸ் வகை ‘back of the envelope’ கணிப்பு + கருதுகோளை உள்ளடக்கியது; எண்ணிக்கைகள் துல்லியம் எனச் சொல்ல முடியாது என்றாலும் அவை ஓரளவு தர்க்கரீதியுடனே அணுகப் படுகின்றன. மற்றபடி, ymmv.

0

இதில் நிறைய புள்ளிவிவரங்களும் (முடிந்தவரை அநியாயமாக இருக்காமலிருக்க முயற்சித்திருக்கிறேன்) கொஞ்சம் எண்ணிக்கை ஜிம்னாஸ்டிக்ஸ் வகையறாவும் அனுமானங்களும் இருக்கின்றன; எல்லாம் ஒருமாதிரி நம் தமிழகத்தின் லட்சணங்களையும் கல்யாண குணங்களையும் நாம் புரிந்து கொள்ள ஆரம்பிப்பதற்கு ஒருமாதிரி முதற்படி என மண்டையில் அடித்துக் கொண்டு, தொடர்ந்து படிக்கவும்.

2022:

தற்போது தமிழக வாசிகளின் எண்ணிக்கை சுமார் ஏழரை கோடி என வைத்துக் கொள்ளலாம். அதில் திமுக/திக திராவிடர்கள், தமிழ்தேசியர்கள், பிற தமிழ் அறியாதவர்கள், சிறு பிள்ளைகள், படிப்பறிவு அற்றவர்கள், வாசிப்பில் ஈடுபாடு இல்லாதவர்கள் என 50+% சதவீதத்தை ஒதுக்கிவிட்டால் தேர்பவர்கள் மூன்று கோடி எண்ணிக்கை. (அ)

இலங்கைத் தமிழர்கள், தமிழகத்திலிருந்து அம்ரீகா.ஐரோப்பா மேற்காசிய நாடுகள் போன்ற மக்களின் பேராதரவு பெற்று அகதிகளாகவும் பணிகளில் பஜனை செய்பவர்களாகவும் இருப்பவர்களின் எண்ணிக்கையைத் தோராயமாக 50 லட்சம் எனக் கொள்ளலாம். (ஆ)

அ சார்பினர்களில் சுமார் 1% மும்முரமாகத் தமிழ் படிக்கக் கூடியவர்களாக இருக்கலாம்; = மூன்று லட்சம் பேர்,

ஆ சார்பினரில் இவர்கள் சுமார் 10% ஆக இருக்கலாம்; ஏனெனில் வெளி நாடு சென்றால் ஒன்று ஒர்ரேயடியாக வெளி நாட்டு ஜால்ரா செய்பவரும் அல்லது தாய்மொழித் தாகம் அதிகமாகி அமோகமாகத் திணறுபவர்களும் அதிகம்; ஆக இந்த வகையறாக்கள் = ஐந்து லட்சம் பேர்.

அ + ஆ = மொத்தம் 8 லட்சம்.

இவர்களில் காசு கொடுத்துப் புத்தகங்களை வாங்கிப் படிப்பவர்கள் என பத்து சதவீதம் இருக்கலாம்; ஆக 80,000. இது அதிக பட்சம். (இ)

இதில் தினப்புளுகு தினகரன் ஹிந்து-தமிழ் ஜூனியர்விகடன் போன்றவற்றின் பப்பரப்பா வாசகர்ளைச் சேர்க்கவில்லை; ஏனெனில் 1) அவை பப்பரப்பா 2) சங்ககாலத்தில் ஜூவி இருந்திருக்கவில்லை.  டீவி / யூட்யூப் ரசிகர்களையும் சேர்க்கவில்லை; ஏனெனில் 1) அவை பப்பரப்பா 2) சங்ககாலத்தில் யூட்யூப் இருந்திருக்கவில்லை

…பொதுவாக எழுத்தாளர்களும் அவ்வப்போது புத்தகங்களை விலை கொடுத்தோ / கொடுக்காமலோ வாங்கிப் படிப்பவர்கள்தாம். ஏனெனில் காப்பி அடிக்கவேண்டும், ‘ஐடியா’க்களைப் பெற்று உல்ட்டா செய்யவேண்டும், சகஎழுத்தாளர்களின் லட்சணத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது போன்ற அவசியங்கள் அவர்களுக்கு இருக்கின்றன.

இந்த எண்ணிக்கையில் சுமார் பத்தாயிரம் பேர் எழுத்தாளர்களாக இருக்கலாம். அதில் பலர் அற்ப மானுடப் பதர்களான கவிதை ராக்கதர்களாகவும் கட்டுரை வேதாளங்களாகவும் ஏன், ப்ளாக்கர்களாகவும் இருக்கலாம். இவர்களில் பலர் ட்விட்டரில் இலக்கிய/கல்வி சேவை செய்யும் ஜந்துக்களாகவும் இருக்கலாம். 10,000 பேர். (ஈ)

ஏனெனில்.

எந்தக் கொம்பன் எந்த ப்ளடி ஆக்கத்தை எழுதினாலும், 5-10 வருடங்களில் பத்தாயிரம் காப்பிகள்/படிகளுக்கு மேல் புத்தகம் விற்றதாகச் சரித்திரமே இல்லை. (இதற்கு ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம், பொன்னியின்செல்வன் போன்ற ‘வெரி பாபுலர் வெறி’ மரக்கூழ்கள் போல – இதில் பலர், புத்தங்களைப் படிக்கவே படிக்காமல் வாங்கி அலமாரியில் அடுக்கிக் கொண்டு, அதற்கு முன்னர் ஒரு ஷெல்ஃபி எடுக்கும் சுயதம்பட்ட ஜீவன் அலப்பரைகளாகவும் இருக்கலாம்! ஐய்யய்யோ! வலிக்கிறதே!!)

என்ன சொல்கிறேன் என்றால், சுமார் எட்டுகோடி மனிதர்களில், சுமார் 10,000 பேருக்குத்தான் ஓரளவு தமிழில் கோர்வையாக எழுதவோ, ஆழ்ந்து படிக்கவோ முடியும். இந்த எண்ணிக்கை முன்னேபின்னே இருக்கலாம் – ஆனால், சர்வ நிச்சயமாக இது 1000 பேர் என்றோ, லட்சம் என்றோ ஆக முடியாது.

அதாவது, இ ஆசாமிகளுக்காக ஈ வகையறாக்களால் எழுதப்படுபவைதான் தமிழ் எழுத்துகள்/ஆக்கங்கள் போன்ற ப்ளட்டிஹெல்கள்.  கவனிக்கவும்; நான் தரத்தைப் பற்றிச் சொல்லவேயில்லை.

அது வேறு ஒரு சோகக் கதை. :-(

சாராம்சமாக:

‘தமிழ்’ திரளின் மக்கள்தொகை  = எட்டு கோடி.

இதில் ‘எழுதுபவர்கள்’ = 10, 000. (இதற்கே நான் இப்படிப் புலம்புகிறேனே எனத் தோன்றவில்லை?)

இதில் பொருட்படுத்தத் தக்க அளவில், சரியான கறார் தரத்துடன்  (சகல துறைகளையும் சார்ந்து) தமிழில் எழுதக் கூடியவர்கள் 10 சதவீதம் இருந்தால் அது மிக அதிகம்.

அதாவது அது, 1000. அவ்வளவுதான். வெட்கக் கேடு, ஆனால் இதுவே மிகை அதிக பட்சம் எனலாம்.

இந்த ஆயிரம் பேரிலும் ஊறுகாய், வரலாறு, தனிமனிதக் குறிப்புகள், உல்ட்டாக்கள், சுயமுன்னேற்றம், சேகுவேரா, புரட்சிப்பூபாளம், தமிழ்தோசையம், தெராவிடம், கொத்துபுரோட்டா வகைகள் அதிகம். ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளக்கூடிய ‘இலக்கியம்’ எனப் பார்த்தால் சுமார் 20 பேர் தேறலாம். இதே சமயம், ‘சங்ககால’த்தில் ஊறுகாய் புத்தகம் எழுதுபவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் எனவும் அனுமானிக்கிறேன்.

பாரதத்தின் தற்போதைய மக்கட்தொகை = சுமார் 150 கோடி.என வைத்துக் கொள்ளலாம்.

அதாவது தமிழ் ‘தெரிந்த’ ஆசாமிகள் (அகதிகள் உட்பட) = சுமார் எட்டுகோடி.

அதாவது, பாரதத்தின் மக்கட்தொகையில் நாம் சுமார் 5.3 சதவீதம்.

ஏறத்தாழ வரலாற்றுக் காலத்திலும் சதவீதம் அப்படியேதான் இருந்திருக்கவேண்டும். இதற்குப் பின்னர் வரலாம்.

2

தமிழகம் என்பது மிகச் செழுமையான பிரதேசம் என்றெல்லாம் கிடையாது. டெல்டா பகுதிகளில் அல்லது ஆற்றங்கரைகளில் ஏரிக்கரைகளில் எனத்தான் செழுமை – அதாவது விவசாயம் செய்வதற்குத் தோதான இடங்கள்.

தமிழகத்தில் வற்றாத ஜீவ நதிகள் என்றில்லை. கனிம வளமும் அதிகமில்லை. நெய்வேலியின் வரலாறெல்லாம் அண்மைய ஒன்றுதான்; சேலம், கரூர் பகுதிகளில் ஏதோ கொஞ்சம் இரும்புக் கனிமங்கள் கிடைத்தன என்பதும் உண்மைதான்.

இங்கிருந்து நாம் பெரிய அளவில் ‘அந்தக் காலத்தில்’ ஏற்றுமதி செய்தோம் என்பது உண்மையல்ல; நாம் செய்தது முத்துக் குளித்தல், சில கண்ணாடிப் பொருட்கள்; கேரளப் பகுதியில் இருந்து மிளகு, உருக்கு இரும்பு போன்றவற்றை ஏற்றுமதி செய்திருக்கிறோம். பல வாசனை திரவியங்கள்/ஸ்பைஸஸ் கேரளத் துறைமுகங்களுக்குக் கீழை நாடுகளில் இருந்து கொணரப் பட்டு மேற்படி ஆஃப்ரிக / மேற்காசிய அதற்கும் மேலே ரோமுக்கு எல்லாம் சென்றிருக்கின்றன.

பேராசிரியர் ராஜன் குருக்கள் அவர்கள் (ஒருமாதிரி மார்க்ஸிய வரலாற்றாளர், ஆனாலும் கொஞ்சம் கறார்தன்மையுடன் விவாதிக்கும் வகை)  இது குறித்து ஒரு அலசலைச் செய்திருக்கிறார்.

அவர் ஸ்தாபித்துள்ள கருத்து: தமிழகம் அப்போது (வரலாற்று காலத்தில் பொதுயுக ஆரம்பங்கள் – முதற்சில நூற்றாண்டுகள், அதாவது நாம் ‘சங்க காலம்’ என அட்ச்சிவுடுவது) சிறுகுறு குலக்குழுக்களால், சிறு பகுதிகளில் ஆளப்பட்டு வந்தது;  அவர்கள் பெரிய அளவில் ஏற்றுமதி செய்திருக்க முடியாது, செய்யவும் இல்லை.

மேலும்.

உபரித் திரட்டல் என்பது நமக்குப் பல்லவர்கள் காலத்தில் இருந்துதான் குறிப்பிடத் தக்க அளவில் லபித்திருக்கிறது. (சரி, பாண்டியர்களையும் சேர்த்துக் கொள்கிறேன்)

வணிகம், பொருளாதார உபரிகளின் விளைவாகத்தான் ஒரு பண்பாடு வளர்கிறது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். பொருளாதார வளர்ச்சியால் தாம் இலக்கியங்கள், பிற பொழுதுபோக்குகள் சாத்தியமாகின்றன.

அதே சமயம் நாம் பாரதத்தின் பிற பகுதிகளை எடுத்துக்கொண்டால்…

பாரதத்தின் வட பகுதியில் ஏன் ‘கும்மிடிப் பூண்டிக்கு வடக்கே’ கூட பலப்பல பெரும் ஆறுகள் இருக்கின்றன; அவை முழுவதுமாக வற்றுவதே இல்லை. கனிம வளங்களும் இருக்கின்றன. உபரித் திரட்டல் அங்கு அதிகம். பெரும் துறைமுகங்கள் அங்கு இருந்திருக்கின்றன, இருக்கின்றன. பலவிதமான பொருட்கள் (வெறும் கண்ணாடி மணிகளும், முத்தும் சங்கும் மட்டுமல்ல) ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப் பட்டிருக்கின்றன. ஒரு எடுத்துக்காட்டாக பர்கிஸா என்று குறைந்த பட்சம் 2000 ஆண்டுகளுக்கு முன் அழைக்கப்பட்ட, தற்போதைய குஜராத் பகுதியில் இருக்கும் பருச் (Bharuch) துறைமுகம்.

3

ஐக்கிய நாடுகள் சபையானது, பலப்பல இடங்களில் இருந்து சேகரித்த தரவுகளின் மேற்பட்டு, மக்கள்தொகை வளர்ச்சிக்கான எண்ணிக்கைகளிலிருந்து உருவாக்கிய படம் கீழே.

இதில், பொதுயுகம் முன் 10000 ஆண்டிலிருந்து (இன்றிலிருந்து சுமார் 12000 ஆண்டுகட்கு முன்பிலிருந்து) 2021 ஆண்டு வரை, மக்கள்தொகை வளர்ந்ததற்கான, வெகுவாகவே ஒப்புக் கொள்ளக் கூடிய ட்ரெண்ட் கொடுக்கப் பட்டிருக்கிறது.

அதாவது ‘1’ வருடத்தில் உலக மக்கட்தொகை 23 கோடி; பாரதத்தினுடையது 7.5 கோடி.

தற்காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதுயிது (எல்லாம் பிஹார், ஜார்கண்ட், மேற்குவங்காளம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கட் மாநிலங்களுக்கு நன்றியுடன் தான்!) என இருப்பதால் அதன் மக்கட்தொகை கொஞ்சம் அதிக விகிதத்தில் ஏறியிருக்கிறது என்றாலும், அன்றைக்கு – அதாவது, பொதுயுகம் 1 ஆண்டின் போது, தமிழகப் பகுதியின் மக்கட்தொகை என்னவாக இருந்திருக்கும்?

அன்றைய பாரத மக்கட்தொகையில் சுமார் 5.3% சதவீதம் என்றே எடுத்துக்கொள்ளலாம்.

சுமார் 2000 வருடங்கட்கு முன்பு, அது 0.053 X 7.5 கோடி = 39.75 லட்சம்.

சரி, இதனை 40 லட்சம் என வைத்துக் கொள்வோம். அதாவது இது – தற்போதைய கோவை (30 லட்சம்) +திருப்பூர் (10 லட்சம்) பெருநகரங்களின் கூட்டு மக்கட்தொகை.  இந்தத் தொகை, தமிழகம் முழுவதும் (கேரளம் உட்பட) விரிந்திருந்தது எனவும் வைத்துக் கொள்வோம்.

…நாம் முன்னமேயே பார்த்தோம்; தற்போதைக்கு சுமார் 8 கோடி தமிழர்களில் சுமார் 10000 பேர் மட்டுமே ஓரளவுக்கு நன்றாகத் தமிழை எழுதவும் பேசவும் தெரிந்திருக்கிறார்கள். ஓரளவு புத்திசாலிகளும் கூட.

இந்த ‘சங்ககால’  40 லட்சத்தில் எவ்வளவு பேர் அப்படி இருந்திருக்கலாம்?

40, 00, 000 X 10000 / 800, 00, 000 = 500

அதாவது முழு தமிழகப் பரப்பில், சுமார் 500 பேர் இருந்திருக்கலாம். அவ்வளவுதான்.

இதில் பொருட்படுத்தத் தக்க அளவில் தரத்துடன் எழுதுகிறவர்கள், சுமார் 50 பேர். அவ்வளவு மட்டுமே. ‘சங்க இலக்கியத்தை’ எழுதியிருப்பவர்கள் இந்த எண்ணிக்கையில்தான் இருந்திருக்கவேண்டும் – அதாவது, அவர்கள் உண்மையிலேயே பொதுயுக ஆரம்பத்தில் உயிருடன் இருந்தார்களென்றால்… ஆனால் அது அப்படியில்லை.

இந்த 50 என்பதும் ஒரு மிகை மதிப்பீடு. ஏனெனில் அந்தக் காலத்தில் தொலைத் தொடர்பு இல்லை, காகிதம் இல்லை, ஊடகங்கள் என்றால், அதிக பட்சம் ஓலைகள் + அரங்கேற்றப் பட்ட நாடகங்கள் வகையறா.

+ சமூகப் பொருளாதார உபரிகள் உருவாக்கம் என்பதும் முக்கியம் – அதாவது சிறுகுறு அரசர்கள் எந்த அளவுக்கு கலாச்சார-எழுத்துப் பண்பாட்டுக்கு ‘சங்ககாலத்தில்’ உதவியிருக்கமுடியும் என்பதைக் குறித்தும் நாம் யோசிக்க வேண்டும்.

சரி.

இந்த 50 பேர் எழுதியிருப்பதைப் புரிந்துகொள்ளக் கூடிய நிலையில் 8X மக்கள் இருந்திருப்பார்கள் – அதாவது சுமார் 400 பேர். (இந்த விகிதம் முன்னமேயே வரையறுக்கப் பட்டது; (இ)/(ஈ))

இதில் புரவலர்கள் – அரசர்கள், பெருங்குடியினர் போன்றோர் அடக்கமாக இருந்திருப்பார்கள். அவ்வளவுதான்.

ஒரு விஷயம் என்னவென்றால், இம்மாதிரி எண்ணிக்கைகள் இருக்கும்போது – அக்கால இலக்கியங்கள் பரந்துபட்ட தன்மையுடன் இருக்க முடியாது; சமூகத்தில் முக்கியமான இடங்களில்/பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு ஒருமாதிரி கேளிக்கைகளாகவே இருந்திருக்க முடியும். மேட்டிமைத் தனத்துடன் மட்டுமே இருந்திருக்க முடியும்.

4

நம் செல்ல கதையாடல்களான முப்பெரும் மூவேந்தர்கள் பக்கம் வரலாம். சேர சோழ பாண்டியர்கள். இவர்கள் இந்த 50 பேரைப் பிரித்துக்கொண்டால் – தலா 15. (சோழர்கள் சங்கயிலக்கியத்தோடு தொடர்புடையவர்களா எனக் கேட்டுக்கொண்டு வராதீர்கள் – ஆம்-இல்லை என இரு பதில்களையும் அதற்குக் கொடுக்கமுடியும்)

இந்த அழகில் இமயம் வரை சென்றிருக்கிறார்களாமே சங்ககால மன்னர்கள்? அதுவும் பெரும்படை சொறி சிரங்குகளுடன்? இமயத்துப் புளியமரத்தில் புளிக்கொடியை வேதாளத்தின் உதவியுடன் ஏற்றினார்களாமே? லச்சினையைப் பதித்தார்களாமே? (நம் பிரச்சினை என்னவென்றால், நம் சுகமாக கற்பனைகளே, படுபீதியளிக்கும் வரலாறுகளாகிவிடுகின்றன, என்ன செய்ய…)

என்ன சொல்கிறேன் என்றால், இத்தினியூண்டு எண்ணிக்கைகளை வைத்துக்கொண்டு சங்கம் (அதாவது பலப்பல சங்கங்கள்) வைக்க முடிந்திருக்குமா?

அதிகபட்சம் அது பின்னொரு காலத்தில் அரசவையால் ஸ்பான்ஸர் செய்யப் பட்ட ஒரு குழுவாகத் தான் இருந்திருக்க முடியும்; ‘ரூம்பு போட்டு ரோசிச்சி’ ஆதிகாலத்தைக் கற்பனை செய்து மானேதேனே பண்ணிச் செய்யப் பட்டதாகத் தான்  ‘சங்க இலக்கியம்’ இருக்கவேண்டும்.

இந்தச் சங்க இலக்கியங்கள், அந்த இலக்கியங்களின் பாடுபொருட்களாக இருந்த பாமரர்களைப் பற்றியும் அரசர்கள் பற்றியும் வீரதீர காமங்களைப் பற்றிப் பாடியதை, நாம் பரந்துபட்ட மக்களுக்காகப் பாடியதாக நினைத்துக் கொள்கிறோம். மாறாக, அவை நாடக-காவியத் தன்மையுடன் இருக்கும் (முற்காலத்தைப் பற்றிய), பிற்கால எழுத்துகளாக இருக்கலாம் என்பதற்கும் + அவை உயர் வர்க்கத்தினரின் கேளிக்கைகளுக்காகப் புனையப் பட்டமையாக இருக்கலாம் என்பவற்றுக்கே சாத்தியக் கூறு அதிகம்.

சில சங்கயிலக்கியங்களை, பாணர்கள் வாய்மொழியாகப் பாடியமை ஆவணப்படுத்தப் பட்டதாகவும் நினைத்துக் கொள்கிறோம். நம் சங்கயிலக்கியங்களைப் படித்தால், அவை பாமரர்களால்-பாணர்களால் எழுதப் பட்டதுபோலவா தோன்றுகிறது?

சங்க இலக்கியங்களில் பல அழிந்துவிட்டன என (நான் உட்பட) பிலாக்கணம் இடுகிறோம்.- ஆனால் என்றுமே அவ்விலக்கியங்கள் ஏகோபித்து மக்களால் போற்றப் பட்டிருக்கமுடியாதுதான்…

ஏனெனில் அவை ஒரு சில சிறுகுழுக்களிடம் மட்டுமே இருந்திருக்கவேண்டும் அல்லவா? அந்தக் குடும்பங்களின் பிறகாலத் தலைமுறைகள் போஷகம் செய்யப்படாமல் நலிந்து போனால் ‘உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா’ என்றுதானே ஆகியிருக்கும். அவற்றின் படிகள் (எடுக்கப் பட்டிருந்தால்) அவற்றைக் காபந்து செய்வதற்கும் புரவலர்கள் வேண்டாமா?

(இந்த நோக்கில் பார்த்தாலும் சிவை தாமோதரம் பிள்ளை அவர்களும் உவேசாமிநாதைய்யர் அவர்களும் அலுப்பில்லாமல் ஓடியோடிச் செய்த ‘சங்க இலக்கிய மீட்புக்’ காரியங்கள் அற்புதமானவை! பிற சிலபலரும் இப்படிச் செய்திருக்கிறார்கள். இதே போல, ஒவ்வொருமுறை கம்பராமாயணத்தைப் படிக்கும்போதும் அதன் சுவடிகளைப் பாதுகாத்தவர்களின் கொடையையும் தொழிலொழுக்கத்தையும் எண்ணி மகிழ்கிறேன், ஆச்சரியப் படுகிறேன்!)

…இன்றும் சங்க இலக்கியம் பங்க பலக்கியம் எனப் பேசுபவர் தான் அதிகம்; அவற்றை முழுவதும் சுவைத்துப்(!) படித்திருப்பவர்கள் மிகச் சொற்பமாகவே இருப்பர். நாம் சிண்டைப் பிய்த்துக்கொண்டு அல்லாடும் ‘மனு ஸ்ம்ருதி’ புத்தகத் தொகைக்கும் அதே கதிதான். (திருக்குறள் கதி  கொஞ்சம் பரவாயில்லையாக இருக்கலாம் – ஏனெனில் திருவள்ளுவர் அரசுபஸ்களில் விளம்பரம் கொடுத்திருக்கிறார் + நம் பாரதப் பிரதமர் நரேந்த்ரமோடி அவர்களும் தொடர்ந்து, சலிப்பேயில்லாமல் தமிழுக்கும் திருக்குறளுக்கும் மட்டையை வீசுகிறார்…)

இந்த அழகில் வாயோர நுரைதள்ளல். தேவையா? “கல் தோன்றி, கல்வி தோன்றா காலத்தில்” பிறந்தவைதான் சங்கயிலக்கியம் திணை பனை எல்லாம்… ப்ளட்டி போங்கடே!

-0-0-0-0-

(அவ்வப்போது, இம்மாதிரிப் பிரச்சினைகளைக் கிண்டும் பதிவுகள் தொடரும்… பாவம் நீங்கள்!)

6 Responses to “தமிழர்களின் மக்கட்தொகை வளர்ச்சி, ‘சங்க காலம்,’  நம் பெருமிதம் – குறிப்புகள்”

  1. Sridhar Says:

    அதே காலத்தில் கங்கை சமவெளியின் சில ஆயிரமாண்டுகளாகத் தொடர்ந்து இருந்து வரும் மக்கட்தொகை, அரசாட்சி, இலக்கியங்களை ஒப்பிட்டால் தமிழ் இலக்கியங்களின் உண்மையான நிலைமை புரியும். உள்ள இலக்கியங்களும், தொடர்ந்து பிற சமூகங்களும் நிகழ்ந்த பரிமாற்றங்களால் மட்டுமே சாத்தியம் என்பதும் தெரிய வரும்.


    • ஒப்புக் கொள்கிறேன். .நீங்கள் சொல்வது 100% சரி.

      நான, பாரதத்தின் பிற பகுதிகளில் என்ன நடந்திருக்கலாம் என்பதை அனுமானிக்க முயற்சிக்கவில்லை – ஆனால், அது ஆங்கே தொக்கி நிற்கிறது, எனத் தற்போதைக்கு விட்டுவிட்டேன். இன்னொன்றையும் சொல்ல வேண்டும் – க்ரேக்க இலக்கியங்கள், அவை புனையப் பட்ட காலம் குறித்த ருசுக்கள்,  நம் தமிழக வரலாறு/புனைவுகளைப் போலல்லாமல் – அதற்கு மாறாக காத்திரமான எடுத்துக்காட்டாக இருக்கின்றன – இதற்குப் பல்வேறு காரணங்கள்.

      சங்ககாலம் எனும் பெரும்புனைவு பற்றி ஒவ்வொரு வெங்காயத் தோலியடுக்கடுக்காக உரிக்க வேண்டும். கடைசியில் எது மிஞ்சும்? (நான் சங்கபங்க இலக்கியம் அதன் அழகான தரம் கற்பனைகள் பற்றிச் சொல்லவில்லை – மாறாக, அதன் வரலாற்றைப் பற்றிய நம் கஞ்சாப்புகைசூழ் பிரமைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்; கவனிக்கவும்!)

      (உங்களுக்கு நன்றி. இந்தக் காட்டுரையைப் படிக்க  முயற்சித்திருக்கும், வரலாறு காணாத விதமாக இதுவரை ரெண்டுபேரில் ஒருவராவது எதிர்வினையாற்றியது பற்றி…)

  2. ரவி Says:

    ஐயோ,
    அப்படியானால் தலையானங்கான, வெண்ணிபரந்தலை “போர் “களெல்லாம் வெறும் 100 பேர் கம்பு கழிகளுடன் மோதிக் கொண்ட கோஷ்டி பூசல் தானா? இமய வரம்பில் மீன்கொடியை பறக்க விட்டவர் பத்ரிகாசல யாத்திரை கோஷ்டியினரா ? மனம் வெதும்புகிறதய்யா…

  3. nandhakumar muthusrinivasan Says:

    Very logical. I think we should extrapolate this argument to architecture, water management for agriculture and art (chitthannavasal).


    • Thanks and what you are saying, has grounds for exploration. Definitely.

      The point is that, in those days of preDravidian non-dumbness and non-chestthumping, the knowledge traditions were freely pursued if they were indeed the best, workable practices.

      And our ‘Tamil’ foreparents knew that there were only advantages to borrowing good stuff.

      But the DraviDumbos have thick skulls, and a separatist agenda.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s