டமிளனின் பேச்சுத்திறம் & தமிள் யூட்யூப் நேர்கோணல் / களந்துரையாடள் அட்ராஸிட்டிஸ்
November 4, 2022
தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்; பேச்சோதி பேச்சு.
1
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாயொடு முன்தோன்றி மூத்தகுடி’… எப்பப் பார்த்தாலும் சைக்கிள் வால்வ்ட்யூப் கேப் கிடைத்தாலும் வெட்டிப் பேச்சு, ‘ஒடுக்கி விட்டான்’ பிலாக்கணம், ‘ஆரியம் நசுக்கிவிட்டது’ ஒப்பாரி, ‘எங்கள் மண்டைமேல் ஹிந்தி கவிழ்த்தப் படுகிறது’ என ஒப்பற்ற மூக்குகளிலிருந்து திராவிடச் சளி ஒழுக, ஒர்ரே அழுவாச்சி.
வரைமுறையற்ற முட்டாள்தனமும் அகந்தையும் கலந்து கட்டிய ஏச்சு. தனிப்பெரும் தமிழனின் மட்டற்ற மட்டரகமான, கவைக்குதவாத திண்ணைப் பேச்சு. உச்சரிப்புகளைக் கூடச் சரியாகச் செய்யச் சிரத்தையற்ற “தமிளிள் இறுக்கும் ‘ள’ வேறெந்த மொளியிளும் இள்ளை” வகை முஷ்டி மைதுனங்கள்.
பேச்சு, பேச்சு, பேச்சு…
அதுவும் வாய் ஓயாமல் பேச்சு. பேசுவது பேச்சு, பேசப்படுவது மொழியாமே, ப்ளடி.
ஒரு விதமான பின்புலமோ, அறிவார்ந்த நோக்கோ, அடிப்படை புத்திசாலித்தனமோ இல்லாத அளப்பரிய அளப்புகளுடனான, மேலான மேலோட்டமான வெட்டி அரட்டை! அதுவும் இளைஞர்களின் அனைத்தும்அறிந்த அதிமேதாவித்தனமான வாந்திப்பேச்சு – ஆனால் இந்த அற்ப எழவுகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள் பிலுக்கிக் கொள்வதைப் பார்த்தால்… … சோகமோ சோகம்! புதுமைத் திராவிடனிவன் சொல்லும் செயலும் பொய்மையே கொண்ட கலிக்குத்தான் புதிதன்றி, வெறும் சாதா தமிழர்களாகிய நமக்கில்லைதான்!
… Tamil political culture (or public discourse) is not a sound one, but is merely a noisy & loud one. இப்படிச் சொன்னால் சில அன்பர்களுக்குக் கோபம் வந்துவிடுகிறது, என்ன செய்ய. ஆனால் இதுதான் உண்மை. + Dravidians & Tamil Supremacists are channeling their inner donkeys all the friggin’ time.
எது எப்படியோ! இது குறித்துச் சிறிது யோசித்தால், அது ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியதோ வெட்கித் தலைகுனிய வேண்டியதொன்றோ அல்ல.
ஏனெனில்.
1) வெறும் பேச்சை மட்டுமே மூலதனமாகக் கொண்டு – அதாவது, உணர்ச்சிகர உச்சாடன ‘அடுக்குமொழி பொறுக்கி நடை’ எனும் எழவை மட்டுமே வைத்துக்கொண்டு – ‘அறிஞர்’ அண்ணாவிலிருந்து ஆரம்பித்து ‘கலைஞர்’ கருணாநிதி, ‘தீப்பொறி’ ஆறுமுகம் ஊடாக, ‘சைதை’ சாதிக், ‘நாஞ்சில்’ சம்பத் வகையறாக்கள் வரை – முன்னொட்டு தண்ட ‘அறிஞர்’ களிலிருந்து பின்னொட்டு ‘ஆர்’கள் வரை, ஆபாசச் சொற்றொடர்களையும் இரட்டைஅர்த்தம் தொனிப்பு விஷயங்களின் வழியே, மசாலாக்களையும் சேர்த்து, தொடர்ந்து பொய்களைச் சொல்லிச் சொல்லியே, பேசிப் பேசியே திராவிட ஆட்சியைப் பிடித்து, தமிழர்கள்+பிறர்கள் குரல்வளைகளை ஒரு சேர நெறித்துவிடும் பராக்கிரம் மிக்க அயோக்கியத் திராவிடர்களின் பிரதேசம் இது.
2) நம் தமிழகத்தின் போக்கற்ற திராவிட/தமிழ்தேசியச் சோம்பேறி இளைஞர்கள் போல, பாரதத்தின் பிற பகுதிகளில் – ஏன், உலகத்தில் வேறெந்த பிரதேசத்திலும் இல்லை என்றே சொல்வேன். ‘திரைப்படக் கோமாளி’களின் குஞ்சாமணிகளையும், கோமாளினிகளின் பாற்சுரப்பிகளையும், தனித்தமிழ்-தமிழுயர் வாத பேமானிகளின் சுழலும் நாக்குகளையும் பொழுதன்னிக்கும் பிடித்துத் தொங்கிக் கொண்டு, போராளித்தன #தமிழேண்டா ரவுடிப் பேச்சுகளில் அற்பப் பொறுக்கித்தனமாக ஈடுபடுவதே இவர்கள் வாடிக்கையாகி விட்டது. இந்தக் கும்பலில் ஒரேயொருவராவது போற்றத்தக்க, உண்மையாலே மெச்சத்தக்க சிறுகாரியம் ஒன்றையாவது செய்திருக்கிறார்களா என்றால் – என் கண்ணில் ஆயிரம் லிட்டர் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு வருடக் கணக்காகத் தேடினாலும் – ஒரு முடியும் தெரியவில்லை.
ஆகையால், சல்லீஸாகத் தள்ளுபடி ஆஃபரில் அமோகமாக அள்ளிக் கொள்ளக்கூடிய பேச்சில் மட்டுமே குவியம் கொண்டுள்ள தமிழ இளைஞர்கள், எனக்குப் பெரிதாக ஆச்சரியம் தரவில்லை.
2
சரி.
கடந்த சில மாதங்களாக, இந்த தமிள் யூட்யூப் நேர்கோணல் / களந்துரையாடள்கல் சிலவற்றை ஒரு மாதிரியாக அரைக்கண் வழியாகப் பார்க்கும்படிக்கும், காய்கறி நறுக்கும்போதும், பாத்திரங்களைக் கழுவும்போதும், முதியோர் பராமரிப்பு செய்யும்போதும் – தலைபேசி (ஹெட்ஃபோன் தானுங்க இது) வழியாகக் கேட்கும்படிக்கும் சில வாய்ப்புகள்(!) வாய்த்திருக்கின்றன.
பொதுவாகவே, இவை நல்ல கேளிக்கைகள். மேலும் இவற்றுக்கு ஒருமாதிரி சிலபல டெம்ப்ளேட்கள் இருக்கின்றன. இவற்றைக் கண்டுகொண்டதும் இன்னமும் இறும்பூது.
ஏனெனில் எந்தெந்தக் கேள்விகளை எந்தெந்த அரைகுறை கேட்கப் போகிறது என்பதை அனுமானித்து, அச்சுஅசலாக அவற்றையே இந்த தண்டங்கள் கேட்பதையும், பல ‘விற்பன்னர்’களும் ‘நிபுணர்’களும் ‘விமர்சகர்’களும் சொல்லப் போவதை ஆரூடம் சொல்லி அவற்றையே அவர்கள் பினாத்தும்போது… ஏற்படும் மசுர்க்கூச்செறிதல் இருக்கிறதே…
மீசை சிறிதாக அரும்பிக் கொண்டிருக்கும், முளைத்து அரை விதை இலைகூட விடாத இளைஞர்களின் – தர்மாவேசமும், மந்தஹாஸமும், வித்யாகர்வமும், நக்கலும் கொப்பளிக்கப் பறை சாற்றப்படும் அறிவார்ந்த அறிவுகளின் எல்லைகள்… விகசிக்க வைப்பவை.
சரி, குறிப்பாக இம்மாதிரி நரையாடல்களில் சிலபல சூட்சுமங்கள் என இருக்கின்றன, அதாவது அல்காரிதம்கள். எம்மாதிரி மேலான பார்வைகளை இவர்கள் ‘தர்க்கரீதி கையேட்டு வரைமுறைபடி’ முன் வைப்பார்கள் என்பதைக் குறித்து… இவற்றில் சிலவற்றைக் கீழே குறிப்பிடுவதில் உள்ளபடியே எருமை (செவ்வெறுமை தமிழெருமை) அடைகிறேன். நன்றி!
– அ-ன்னு சிலர் பேசறாங்க, அதன்மீது உங்க கர்த்து என்ன?
– ஏ-ன்னு குற்றசாட்டு வெக்கறாங்க, நீங்க அத எப்படி எதிர் கொள்றீங்க?
– அ பத்தி ஆ-ன்னு இ சொல்றார் – நீங்க அதப் பத்தி என்ன நெனக்கறீங்க?
– நீங்க முயல்வளர்ப்புத் துறைல பல ஆண்டுகளாக இருக்கீங்க, நேத்து ஒரு புத்தகத்ல ஒரு விஷயம் பட்ச்சேன், “நான் புட்ச்ச முயலுக்கு ஐந்தேகால்”ன்னிட்டு. ஆனாக்க எப்படி இந்த உண்மைக்கு மாறா உங்க கிட்ட இருக்கற முயல்ங்களுக்கெல்லாம் நாலே கால்தான் இருக்குதுண்றீங்க? இது எப்டீங்க நியாயம்?
– நான் ஐஏஎஸ் பரீட்சைக்கு பட்ச்சிட்ருக்கேன், அந்த ஸிலபஸ்லேர்ந்து மட்டும் தான் கேள்வி கேட்பேன். சங்ககாலத்தில் ஐஏஎஸ் -ல ஒரு தமிழனும் இல்லை, நான் வெரிஃபை செஞ்சிருக்கேன் – ஆனாக்க நீங்க, இந்திய தேசியம் பேசறீங்க, தமிழகத்த சங்ககாலத்லேர்ந்து நசுக்கிக்கிட்டு இருக்கீங்க. இது சரியா?
– ஐநா சபேல தமிளதான் அலுவலகமொழியா அறிவிக்கோணும், ஏன்னாக்க அதுதான் உலகத்துலேயே ஆதிமொழிண்றாங்க. இது எப்ப நடக்கும்ண்றீங்க?
– உங்கள மாரீ எலிவளர்ப்பில் ஈடுபடுபவர்களைக் காண மகிழ்ச்சி. ஹிந்துத்துவா தமிழ் நாடு உள்ளாற பூராம இருக்க நீங்க என்ன தந்திரோபாயம் வெச்சிருக்கீங்க.
– நேத்து ராத்ரி தூக்கம்வராம எணையத்தை மேஞ்சிட்டிருந்தபோது , ஸ்ட்ரேட்டஜி ண்றத எழுத்துகூட்டி வாசிச்சேன். இப்ப, இந்தியாவை 3000 ட்ரில்லியன் பொருளாதாரமாக்க நிறைய ஸ்ட்ரேட்டஜி வெச்சிருக்கேன், அதப் பத்தி உங்களுக்குச் சொல்லி உங்க ஆமோதிப்ப பெறலாமா?
– இப்ப தமிலகம் இந்தியாலேர்ந்து பிரிஞ்சி போச்சின்னாக்க, உலகத்துலேயே பொருளாதார ரீதில முதல் நாடாக விளங்கும்னு உதய்ணா சொல்றாரு, நீங்க அது பத்தி விளக்க முடியுமா?
– ஆர்எஸ்எஸ் எப்டியோ தமில்நாட்ல நொளஞ்சிடிச்சி – இப்ப அதை அப்டியே வெர்ட்டி ஈளம் பக்கம் அனுப்சிவுட்டோம்னா தமிள் வாளும்னுட்டு நெறய்ய பேர் பேசிக்கறாங்க… ஒரு பெருச்சாளி வளர்ப்பாளரா நீங்க எப்டி இத பாக்கறீங்க? ராமர்சேதுக்கு அடீல ஒரு வளைய தோண்டி அவங்கள சிங்களவன் மேல ஏவி விட முடியுமா?
– அண்ணன் செந்தமிலன் சீமான், தேசியத்தலெவர் பெரபாகரனே தன்னோட கையால சமெச்சிபோட்ட ஆமெவடெயோட ஆமை கறியும் சாப்பிட்டதாகச் சொல்லியிருக்காரு… நீங்களும் புலிகள் இயக்கத்தோட இணெஞ்சு பணி செஞ்சிருக்கீங்க… இனத் தலெவர் பெரபாகரனுக்கு ஆமெவடே செய்யத் தெரியுமா? ஆமெ முட்டேல அவ்ரு அவ்ளோ அளகா ஆமெலேட்டு பண்ணிப் போட்டார்ண்றது உண்மைதானே?
– தமிளன்கள் மறியாதைக்கு பேர்போனவங்க. கடமே கன்னியம் கட்டுப்பாடு நம்க்கு முக்கியம். மாட்றான் தோட்டத்து மல்லிகெயும் மணக்கும்னு சொல்றவங்க. இப்படி நாம்ப இருக்கறதாலதான் மாட்டுமூத்திரம் குடிக்ற சங்கீங்க இங்க நக்கிக்கிட்டு இருக்காங்க, அசுரவேகத்துல வளர்றானுவ… இவனுங்கள ஒளிக்காட்டா திராவிடம் தோற்கும்ண்றாங்க, இது சரியா?
– மோடீ வாயால வடெ சுட்றாருன்னு உதய்ணா சொல்லியிருக்காரு. இது பத்தி சங்ககாலத்திலேயே அண்ணல் அம்பேத்கார் சொல்லியிருக்கார்னு பெரியார் சொல்லியிருக்கார். இது பத்தி மோடீ என்ன நெனக்கிறார்னு நீங்க கருதறீங்க?
– நான் பிஏ (இங்கிலீசு) அஞ்சு அட்டெம்ப்ட்ல அரியர்ஸெல்லாம் ‘பேப்பர் சேஸ்’ செஞ்சி ஒரு அமௌன்ட் கொட்த்து க்ளியர் செஞ்சிட்டேன். என்ஐடி ஐஐடி எல்லாம் சுத்த டுபாக்குர், நீங்க என்ன நெனக்கறீங்க?
– நான் எஸ்ஸெல்ஸி பட்ச்சிட்டு வெட்டியா யூட்யூப்ல உருட்டக்கட்டய சுத்திட்ருக்கேன், ஆனாக்க அண்ணாமலெ ரொம்ப பேசறாரு, அவருக்கு நாவடக்கம் தேவைன்னு ஏன் நெனெக்கமாட்றீங்க?
– ஹோல்ஸேல் ப்ரைஸ் இண்டெக்ஸ் அப்டீங்கற ஒரு அளவை மூலமா திருப்பூர்ல ஜவுளி வியாபாரத்துக்கே ஒரு சுணக்கம் வந்து, வெறும் ஓட்டைகளை தெச்சு விக்கவேண்டி வந்திட்டுது, விலைவாசி உயர்வு அதனால இன்னமும் பொருளாதார அழுத்தம் ஏறிட்டுதுன்னு நிபுணர்கள் சொல்றாங்க. இது தொடர்பா ஏன், அமெரிக்கா ப்ரெஸிடெண்ட் பின் லேடன், மோடிக்கு அழுத்தம் கொடுக்கலன்னு நெனக்கறீங்க? ஐ நா சபைல இது குறித்து சீனா ஒரு கோரிக்கை வெச்சிருக்குண்றாங்க, நீங்க அது சரீண்றீங்களா?
– சிறிய அளவுகோல்ல பெரிய பொருளாதாரம் நெம்ப கஷ்டம்ண்றாங்க… வொங்க கருத்து என் கருத்தோடதான் ஒத்துப்போவும்னு நான் நெனெக்கறேன், நீங்க?
– மார்வாடிகள ஒளிக்கணும்றதுல நமக்கு மாட்றுக் கர்த்தே இல்ல. ஆனாக்க கொங்குப் பகுதில அவ்னுங்க கோலோச்சற்த்துக்கு மார்-கொங்கை என ஏதாவது சதித்திட்ட உள்குத்துப் புரிதல் இருக்கும்னு நீங்க நெனக்கறீங்களா?
– வட இந்தியன் படையெடுத்து வந்து இன அளிப்பு பண்றான், நம்ப வேலைங்கள எல்லாம் புடிங்கிக்கறான்… இப்ப இங்க ஓட் போடப்பாறான், தமிழகத்துல அடுத்த சிஎம் அவனுங்கதான்றாங்க – இது குறித்து தமிளகத்தோட அடுத்த சிஎம் நம்ப சூப்பர் மார்வாடி தயாநிதி மாறன்ண்றீங்க்ளா?
– எனக்கு ஆபாசமான கேள்வி கேக்கறது பிடிக்காது, ஆனாக்க ஏன் தமிள் திரையுளகத்தில நடிகைங்கள அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிக்க சொல்றாங்க, நடிகர் மேல அப்டி டிமேன்ட் வைக்க மாட்றாங்க… இப்படி பரவலா பேசிக்கற விஷயம், தமிழகத்தையே உலுக்கும் பிரச்சியையில்லையா? இது குறித்து ஏன் மோடி ஒரு வெள்ளை அறிக்கை தரமாட்டேண்றாரு?
– வீரப்பர் ஜீஸஸ், அவரு தமிள்தன்மாண வீரத்தோட, அப்பப்ப அவ்ருக்குக் கெட்ச்ச அப்பத்த யேஸ்ஸு மாரீ பிரிச்சி கொடுத்தாரா இல்லியா?
– ஆர்எஸ்எஸ் இப்ப உள்ளாற வந்திரிச்சி, இன்னும் அவங்க கொலெ செய்யவே ஆரம்பிக்கல – இந்தியா முழுசும் கிட்டத்தட்ட நூறு வர்ஷமா அப்டியே இருக்குது… கொலை செஞ்ச தடயம் ஒண்ணுகூட நூறு வருஷமா கெடக்காம இருக்கற்த்துக்கு ஹிந்துத்துவாதான் காரணம்னு சொல்றாங்க, நீங்க என்ன சொல்றீங்க?
– அண்டார்ட்டிகாவில் திமிங்கலங்களுக்கு பிரச்சினை ஏற்படுதுன்னு சொல்றாங்க, அதப்பத்தி தனித்தமிள் தேசியம் பேசற உங்களோட கருத்து என்ன?
– தமிள் தோசையம்தான் தமிள் தேசியமா மாறிட்டுதுன்னு அயோத்திதாசர் சொல்லியிருக்கார். ஏன் அது இப்போது அதிரடியாக வளர்ந்து தமிள்பரோட்டாயமாக ஆக மாட்டேன்றதுன்னு நெனக்கிறீங்க?
– ப்ரெக்ஸிட் பிரச்சினையப் பத்தி ரிஷி சுணக்கு பிணக்கு ஏற்படுத்துவாரா அப்டீன்னிட்டு சில இங்கிலாந்து குடிமக்கள் குறிப்பிடறாங்கன்னு கேள்விப் படறேன், அதப் பத்தி ஏன் மோதி கருத்து சொல்லலன்னிட்டு சொல்றீங்களா?
– சந்தனப்போராளி வீரப்பர் நினைவாலயம் இதுவரை இல்லை, அவருக்கு குருபூஜையும் செய்வதேயில்லை – இதற்கு என்ஐஏ குடைச்சல்தான் காரணம்னு சொல்றாங்க. இதற்குக் காரணமான அமித்ஷாவ அடக்கறத்துக்கு அண்ணாமலை என்ன செஞ்சிருக்கார்?
– இன்னர் லைன் பர்மிட் பத்தி என்ன நெனக்கறீங்க? பானிபூரி பான்பராக்குங்க இங்க வந்து ஆக்கிரமிக்கறாங்க, இவனுங்க்ள மட்டுப் படுத்தணும்… அமெரிக்கா வுள்ள போணும்னாக்க நாம்ப விசாபர்மிட்டுன்னு வாங்கிக்கிட்டுதானே போவோணும்?
– ஆந்திரப் பிரதேசம் கேரளம் கர்நாடகம் போன்ற அயல் நாடுகள்ளேர்ந்து இங்க குடி வந்துடாங்க! தமிளகமே வந்தேறிங்களோட வேட்டைக்காடா மாறிட்ச்சின்னு அய்யா பள நெடுமாறண் சொல்றார். தமிளர்கள் வெளிநாடுகள்ல போய் ஸெட்டில் ஆவுறமாரீ விஷயம் இல்லியே இது, இல்லீங்க்ளா?
– தமிளகத்துல அசுரவேகத்துல தொளில் வளர்ச்சி ஏற்பட்டுருக்கு. ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் கெடைக்குது, நாம்ப தான் சூப்பர்ஸ்டார். நெம்ப தன்னிறைவாய்டிச்சி… அதனால தான, தமிளனோட சொந்தத்தெறமய வெச்சிக்கினுதான் அவன் வெளி நாட்ல, வடநாட்ல எல்லாம் வேலதேடி செட்டில் ஆவுறான்?
– தமிள்குடிகள் தனித்தமிழ் ‘செம்பானிபூரி தமிள்பானிபூரி’ இயக்கம்னிட்டு ஒரு பரந்துபட்ட பானிபூரி இயக்கத்த முன்னெடுக்க வேண்டிய காலம் வந்திட்டுதுன்னு நான் நெனக்கறத நீங்க ஆமோதிக்கிறீங்க்ளா?
– நீங்க சட்டைக்குள்ள பூணூல் போட்டுப்பீங்களா வெளீல போட்டுப்பீங்களான்றது தான் பார்ப்பனீயத்துக்கும் பார்ப்பனீயத்துவாக்கும் உள்ள வித்தியாசம்றாங்க, நீங்க எப்பிடி?
– திருமிகு ஆட்டோசங்கரார், அயோத்தியாகுப்பம் வீரமணியார், பங்க் குமாராரார்னு எவ்வளோ தமிள் மறவவீரர்கள், புறனானூற்றுக் குடிகள் இங்க இருந்திருக்கிறாங்க, ஆனால் அவ்ங்க புகள் பாடப் படுவதேயில்ல… செந்தமிளன் சீமான் ஒர்த்தர்தான் இப்படி தேடித்தேடி வீரவணக்கம் செலுத்தறாரு… நாம் ஏன் அவங்கள பொறக்கணிக்கிறோம்?
– ஜேம்ஸ் பாண்ட் 007 ஜாக் ரையன் எல்லாம் பாத்துருக்கேன், ஆனா ஏன் சங்கர்லால் துப்பறிகிறார்ன்றதெல்லாம் தமிள் படமா மாற்றதில்லை? இதுக்கு பின்னாடி இருக்கற ஆரிய சதியப் பத்தி ஏன் மத்திய அரசு ஒன்றும் பேசுவதில்லை? அண்ணாமலை இதையெல்லாம் வெளக்காம, ஆர்பாட்டம் பண்ணிட்ருக்காருங்கறத நீங்க எப்படி பாக்கறீங்க?
– தமிளுக்கு நம் செம்மொளிக்கு ஒண்ட்றிய அரசு என்ன செஞ்சிருக்கு? தமிளகத்துல விதிக்கற வரிப்பணத்த தமிளனுக்கு செலவளிக்காம பானிபூரிகாரன்மேல ஏன் செலவளிக்கணும்?
…
…
(பொறுக்கிகள் நடத்தும் சேனல்களை (யூடூப்ருட்டஸ்+) நான் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் பார்க்கமுடியவில்லை, இதில் எனக்குச் சந்தோஷமே!)
3
மேற்கண்டதுபோல உளறல்களுக்கு அப்பாற்பட்டு – நம் நேர்கோணலிஸ்ட்கள் முக்கியமாகச் செய்வது: கோல்போஸ்ட் நகர்த்தல்கள். குதித்துக் குதித்துத் தாவி, கேள்விக்கு மேல் முன்பின் தொடர்பற்ற உதவாக்கரை கேள்வி(!)களைக் கேட்டு, தன் கருத்துகளைப் பகிர்வதற்காக அழைக்கப் பட்டுள்ளவர்களைச் சுற்றித் தட்டாமாலை ஆடி, உளறிக்கொட்டும் திறம்.
அதாவது முதலில் இந்த நேர்கோணலிளைஞப் பேடிகள், X என்று ஒன்றை ஒருவிதமான முகாந்திரமும் இல்லாமல், படு தெகிரியத்துடன் சொல்வார்கள்.
இதற்கு பாவப்பட்ட நேர்கோணிக்கப் படுபவர், நீங்கள் சொல்லும் X சரியில்லை. மாறாக Y என்பதுதான் சரி என, தரவுகளுடன் (கூறுகெட்ட அறிவிலி நேர்கோணலிளைஞ குறுக்கீடுகளின் இடையே) நிறுவுவார்.
இதற்கு நேர்கோணலிளைஞர் ஒரு பதிலையும் அளிக்காமல், ஒரு மசுரையும் உள்வாங்கிக் கொள்ளாமல், ஒரு பெரிய தொடர்புமில்லாமல், “அப்ப Z சரீன்றிங்க்ளா?”
நேர்கோணிக்கப்படுபவர்: “நான் எப்போது Z சரீன்னு சொன்னேன்? அதப் பத்தி பேசவேயில்லையே!”
நேர்கோணலிளைஞர்: “சரி, அப்ப அந்த O மனிதர் சொன்ன W சரீல்லன்னு சொல்றீங்களா?
நேர்கோணிக்கப்படுபவர்: “அந்த O யார்னே எனக்குத் தெரியாது, அவரு என்ன சொன்னாருன்னும் தெரியாது. இப்ப Z சரியா சரியில்லையான்றதையா கேக்க வர்ரீங்க? இல்லேன்னா Wவையா??”
நேர்கோணலிளைஞர்: இல்ல, அந்த O அவர்கள், சங்க காலத்துல தமிழன்ட்ட கத்திக்கப்பல் செய்யற தொழில் நுட்பம் இருந்திச்சு; அத வெச்சிக்கிட்டுதான் ராஜேந்திரசோழன் ஆஸ்ட்ரேலியா பக்கத்துல இருக்கற ஸ்டீவிஜயம்ண்ற நாட்டை வென்றார்னு சொல்லியிருக்கார். இதற்கு உங்ககிட்ட மாற்றுக் கருத்து இருக்கான்னு கேட்க எங்க சேனல் நேயர்கள் விரும்பறாங்க…
நேர்கோணிக்கப்படுபவர்: சார், இப்ப O சொன்ன Z அல்லது W பத்தி கேக்கறீங்களா, இல்ல ஸ்டீவிஜயம் பத்தியா?
நேர்கோணலிளைஞர்: இல்ல, நீங்க சொன்ன Y சரியில்லைன்னிட்டு தேவநேயப் பாவாணரும் மறைமலையடிகளும் சொல்லியிருக்காங்க. அதனாலதான் O அவர்களுக்கு ஓ போட்றோம்.
நேர்கோணிக்கப்படுபவர்: எப்ப அப்படி சொன்னாங்க? Y சரிண்றத்துக்கு தரவுகள் காத்திரமா கொடுத்தேனே!
நேர்கோணலிளைஞர்: ஆனாக்க O சொன்ன Z விஷயம் சரிதானே?
நேர்கோணிக்கப்படுபவர்: எப்படி நீங்க X Z எல்லாம் சரீண்றீங்க? நான் இல்லண்றனே!
நேர்கோணலிளைஞர்: “அப்ப நீங்க Xஓட ஒத்துப் போறீங்கன்னு சொல்ல வர்றீங்க, இல்லியா? நன்றி!”
நேர்கோணிக்கப்படுபவர்: “ஐயோ! இல்லீங்க! X சரியில்லை. Y என்பதுதான் சரி.”
நேர்கோணலிளைஞர்: “ஆனா, நீங்க முன்னுக்குப் பின் முரணா பேசறீங்க… அயோத்திதாசர் என்ன சொல்றார்னா…”
நேர்கோணிக்கப்படுபவர்: “தம்பீ, நீங்க சொல்ற X, வெளிய வந்தது 2020ல – அயோத்தியார் எப்பவோ பூட்டாரே!”
நேர்கோணலிளைஞர்: “நான் பேசும்போது குறுக்கிடாதீங்க… நான் சொல்லவந்தது தொ. பரமசிவன் ஐயா, ஹரப்பா அகழ்வாராய்ச்சி முடிவுகளோட மதுரை பக்க திருப்பரங்குன்ற சதுரெழுத்துகளை பொருத்தினாரா இல்லியாண்றத முன்வெச்சி… ….”
நேர்கோணிக்கப்படுபவர்: “ஐயோ தம்பீ! நீங்க இன்ன கேள்வி கேக்கறீங்கன்னு தெளிவா, எந்தப் பேரையும் சொல்லாம, எதையும் மேற்கோள் காட்டாம சொல்ல முடியுமா?”
நேர்கோணலிளைஞர்: “அப்ப, நல்லா வழிக்கு வாங்க… காஞ்சீபுரம் அய்யங்கார் அக்கினிகோத்திரம் தாத்தாச்சாரியார்ங்க்ற பார்ப்பணர், நக்கீரன் கோவால் பத்திரிகேல வேற யாருக்கும் தெரியாதமாரீ ஸீக்ரெட்டா கொட்த்த பேட்டி பரபரப்பாயி புத்தகமாக வெளி வந்துர்க்கு, அத்தப் பட்ச்சீர்க்கீங்க்ளா?”
நேர்கோணிக்கப்படுபவர்: “பட்ச்சிர்க்கேன், அதுல ஒண்ணுமே சரியில்லயே!”
நேர்கோணலிளைஞர்: “பார்ப்பனர்களுக்கு வெலெ போனவங்கதான் ஒங்கள மாரீ பேசுவாங்கன்னு சொல்லப்படுது. இப்ப மனு நீதிய எடுத்துக்கிட்டோம்னா, சூத்திரன் தேவடியா மவன்னு இருக்குன்னு பெரியார் சொன்னது உண்மையா இல்லியா? ஒத்துக்கறீங்களா இல்லியா?”
நேர்கோணிக்கப்படுபவர்: “அவரு அப்டி சொன்னார்ண்றது உண்மை… ஆனாக்க…”
நேர்கோணலிளைஞர்: “குறுக்ககுறுக்க இடை மறிக்காதீங்க, நான் சொல்றத முழுசும் கேளுங்க… அப்ப அது உண்மைதான்ண்றீங்க இல்லியா?”
நேர்கோணிக்கப்படுபவர்: “மறிக்கலியே… நீங்கதான்…. ஐயோ! இப்ப நாம்ப என்ன பேச ஆரம்பிச்சோம்றதே கொழப்பமா இருக்கே…”
நேர்கோணலிளைஞர்: “இதுலே என்னங்க கொளப்பம் கிளப்பம்னிட்டு? இது பெரியார் மண்ணுங்க, அது அப்படித்தான்…. ப.அருளீ ஒரிஸ்ஸா பாலுண்ற வரலாற்று ஆராய்ச்சியாளரோட சேந்து… ….அவங்க என்ன சொல்றாங்கனாக்க… …”
நேர்கோணிக்கப்படுபவர்: “ஐய்யய்யோ! என்னெ வுட்றுங்க, தயேசெஞ்சி… நீங்க மொதல்ல எப்பவோ சொன்ன Xஐயே ஒத்துக்கறேன்… வொங்க பார்வேதான் 100% சரீ!”
நேர்கோணலிளைஞர்: “எங்களோடு இணைந்து இத்தனை நேரம் உரையாடி உங்களுடைய பல கருத்துகளைப் பகிர்ந்ததற்கு எங்கள் ‘மெல்லத் தமிள் இனிபேசிச் சாகும்’ நிறுவனம் சார்பாக நன்றி. வணக்கம்.”
4
இன்னொரு வகை என்னவென்றால், இதே இளைங்கர்களும் இளைங்கிகளும் – கண்ட கழுதைகளை (ஆ! இந்த இடத்தில் பாரிசாலன், மன்னர்மன்னன், சத்தியவேல் முருகனார், ப அருளி, போன்ற பெருஞ்சான்றோர்களைக் குறிப்பிடவில்லை – கழுதைகள் கோபித்துக் கொண்டு விடும், தேவையா சொல்லுங்கள்?) ஸ்டூடியோவில் வந்து உட்காரவைத்து அவர்கள் சொல்வதையெல்லாம் வாயில் ஈ போவதுகூடத் தெரியாமல் ஈ என்று இளித்துக் கொண்டு கேட்டு இறும்பூதடைந்து கொண்டிருப்பார்கள்… நம் தண்ட நேர்கோணலாளர்கள இளைங்கர்களின் பராக்கிரமமே தனி…
கீழே இந்த உளறாலாளர்களின் சில முத்துகள்:
“சங்ககாலத்தில் லெமூரியா, எகிப்து கிரீசு வரை நீளமாக நீட்டப்பட்டிருந்தது!”
“கைபர்போலன் வழியே ஆரியப் பார்ப்பன வந்தேறிகள் வந்ததற்கு முன்பே ஆதிகம்யூனிசம் கண்ட மக்கள், திராவிடர்கள்!”
“தமிழ் வெறும், இந்த உலகத்துக்கு மட்டும் ஆதிமொழியல்ல; அது, அண்டத்துக்கும் அப்பாற்பட்ட பேரண்டங்களுக்கே ஆதி மொழி!”
“தமிழகத்தில் சாதிகள் இருந்திருக்கவேயில்லை, வெறும் குடிகள் தாம்! அதுவும் மொடாக்குடிகள்! ஆதித்தமிழர்களிடையே வேற்றுமையோ ஏற்றத்தாழ்வுகளோ இருந்திருக்கவேயில்லை!”
“கள்தோன்றி க்வாட்டர் தோன்றாக் காலத்தே வாயொடு டாஸ்மாக் முன்தோன்றி மூத்தகுடி!”
“ஆதி மதுரை ஸ்ரீமுனியாண்டிவிலாஸ் ஆதிமிலிடேரி தொல்ஓட்டலே, தமிழ்ச் சைவம் என்பதன் ஊற்றுக்கண்!”
“திருக்குறள் என்பதே திருக்கள் என்பதன் மரூவிரிவாக்கமே! எனெனில் நாம் தான் மூத்தகுடி.”
“தமிழ்ச் சைவம் என்பது வேறு, ஆரிய வந்தேறி அசைவம் என்பது வேறு!”
“சிந்துசமவெளி நாகரிகம் என்பதே சந்துசமவேளிர் நாகரிகம் மட்டுமே! வேளிர்வெளிதான் இந்தியா!”
“ஆரிய வந்தேறிகளை அடித்து விரட்டினால் நம் தமிழகம் தாமே வளரும்.”
“அலாஸ்கா என்பதே திராவிடம்தான்! அல்லம் + சுக்கு என்ற திராவிடப் பதத்தின் மரூவுவே அது. சுக்கு என்றால் காய்ந்த இஞ்சி. அல்லம் என்பது தெலுங்கு இஞ்சி. இரண்டுமே இஞ்சியைக் குறிப்பவை. இஞ்சி என்பது திராவிட வேர்ச்சொல். அங்கு சென்ற வெள்ளைக்காரனுக்குக் கஷாயம் வைத்து விருந்தோம்ப விரும்பிய சங்ககால திராவிடன், உங்களுக்கு எது வேண்டும், அல்லமா சுக்கா எனக் கேட்டிருக்கிறான் – அதுதான் அல்லா + சுக்கா அல்லாசுக்கா என மாறி விட்டது! பாருங்கள், அல்லாசுக்கா பக்கத்ல கனடா – அதுவும் திராவிடக் கன்னடம் பேசிக்கொண்டிருந்த பகுதிதான்… அப்டியே கீளே வந்தாக்க மச்சாசூசெட்டுசுல சேலம். எல்லாம் நம்பவூருதான்… யாதும் ஊரே யாவரும் கேளீர்…”
“யூதசதிதான் உலகத்தையே ஆட்டுவிக்கிறது என்பது உண்மையானாலும், இந்தியாவைப் பொறுத்தவரை அந்தச் சதியாளர்கள் பார்ப்பனர்கள்தாம் என பெரியாரே சொல்லியிருக்கிறார்…”
முதற்சங்ககாலத்துலதான் ஆதிமனிதன் தோன்றினான். அவன்தான் ஆதிதமிழனும் கூட. ஆதன். இதுதான் ஆதம் ஆகிவிட்டது. ஆதன் கேட்டான், ‘நான் வந்திட்டேன், ஈண்டு எவள் என்னுடன் புணர்வாள்?’ – இதற்கு பதில்சொல்லிய ஆதிபத்தினி தான் எவள். இது ஏவாள் ஆகி ஈவ் என, வந்தேறி ஆரியப் பார்ப்பனர்களால் குறுக்கி ஒடுக்கப் பட்டது தெரியுமா?”
“ஹரப்பா என்பதே அரப்பா, சொல்லப்போனால் அறப்பா. தமிழில் பா வழி யாக்கப்பட்டு அறம் பேசும் காப்பியம் எது? திருக்குறள்! ஆகவே திருவள்ளுவர் ஆதிஅரப்பர். சிந்துசமவெளி நாகரிகம் ஆதித் தமிழம். பிற்காலத்தில் நம் முப்பாட்டன் நாற்பூட்ட அரப்பர்கள், அரக்கர்களாக அவாளால் ஆக்கப்பட்டது தெரியாதா?”
…
…
5
இந்த மாதிரி நிலைமை இருப்பதற்குப் பல காரணங்கள்:
இந்த இளைஞ தண்டங்களில் ஒருவருக்குக் கூட – அறிவியல், பொறியியல் – ஏன், அவ்வளவுதூரம் போவானேன்… அடிப்படை எண்கள், கூட்டல்கழித்தல் கணிதம், அடிப்படைப் புள்ளியியல் என படிப்பறிவோ தன்னறிவோ சுயசார்போ இல்லாமை. மாறாக ஒப்பேற்றும் வெறும் திராபைப் படிப்பு – யெலக்கியம், திறனாய்வு, திராவிட சிந்தாந்தத்தில் க்வாண்டம் கம்ப்யூட்டிங், ஆதித் தமிழனின் நேனோ தொலிள் நுட்பம்… …
சொல்லப்போனால் இந்தப் படிப்பும் கூடப் பெரிய விஷயம் இல்லை; மாறாக, தன்முனைப்பு இருக்கவேண்டும், விஷயங்களைக் காத்திரமாகத் தெரிந்துகொள்வதில், சமரசமில்லாமல் பேசுபொருட்களின் ஆதாரசுருதிகளை நாடிச் செல்வதில் குவியம் இருக்கவேண்டும், அடிப்படை நேர்மையும் வேண்டும். ஆனால், அம்மணிகளே அம்மணர்களே – இதில் ஒன்றுமே இல்லாத தற்குறிகள்தாம் நேர்கோணலிளைஞர்களாக இருக்கின்றன.
கையில் ஒரு ஃபோன் வைத்துக்கொண்டுத் துழாவி இணைய கூக்ள் விக்கிபீடியாக்களில் துரிதகதியில் தேடி, எந்தவொரு துறையிலும் அரைமணி நேரத்திலேயே குபீரெனக் குதித்தெழுந்து திடீரெக்ஸ் வல்லுநர்களாகி மினுக்கிக் கொள்ளும் சாத்தியக்கூறுகள்.
…ஆனால் நல்லவேளை – இந்தக் கடன்வாங்கிக் கழுத்தறுப்பு அரைகுறைக் கேஸ்களான டமில்க்ராம்சி தமிழ்மார்க்குசு போன்ற தண்டங்களும் இந்த யூட்யூப் ஜோதியில் இதுவரை கலக்கவில்லை என்பது நாம் செய்த புண்ணியம்தான்.
6
சிலபல விடிவெள்ளிகளும் இருக்கிறார்கள்தாம். எனக்கு, இணையத்தில் வெகு நேரம் ஆனந்தமாக மேயக் கொடுப்பினை இல்லாவிட்டாலும் இவர்களில் சிலரைக் கண்டுகொண்டிருக்கிறேன்.(இதுவரை நான் சுமார் 40+ மணிநேரங்கள் பார்த்திருப்பேன், பொதுவாகவே 2X வேகத்தில், அதுவும் தள்ளித்தள்ளி ஓட்டித்தான் நான் பேச்சுக்கச்சேரிகளைப் பார்க்கும் வழக்கம் – ஆக இது 150+ மணிநேரங்கள் )
– நான் பார்த்தவரையில் பொதுவாகவே மதிக்கத்தக்க, சமனம் கொண்ட தேசப் பற்றுள்ள, நாட்டுமக்கள் மேல் கரிசனம் கொண்ட சில இளைஞர்கள் +பேரிளைஞர்களும் இருக்கிறார்கள்: கிஷோர் கே ஸ்வாமி, ரங்கராஜ் பாண்டே, ராஜவேல் நாகராஜன், மாரிதாஸ், கார்த்திக் கோபிநாத்++ இன்னபிற ‘கட்சி சார்பற்றவர்கள்’ இவற்றில் அடங்குவர்.
– நேர்காணல் கொடுத்து, தம் கருத்துகளைத் தெளிவாகவும் பொறுமையாகவும் வெளிப்படுத்தும் சிலரையும் (யூட்யூப் மூலமாக) அறியும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்; இவர்களில் சிலர்: எழுத்தாளர் பிரபாகரன், மேஜர் மதன், லெஃப்ட்னண்ட் கர்னல் தியாகராஜன், பிஆர் ஸ்ரீநிவாஸன், பத்ரி சேஷாத்ரி, ஸ்ரீராம் சேஷாத்ரி.
– கட்சிகளைப் பொறுத்த மட்டில் – திராவிடக் கட்சிகளிலும் (நான் எதிர்பார்த்தது போலவே), மிகுந்த சோகம் கொடுக்கும் விதமாக, கம்யூனிஸ்ட்-தமிழ்தேசிய வகையறாக்களிலுமே கூட, ஒரு குப்பை கூட உருப்படியாகக் கிடையாது. ஒரு படிப்போ வாசிப்போ, விஷயங்களைக் குறித்த தெளிவான புரிதல்களோ இல்லை. கண்டமேனிக்கும் அட்ச்சிவுடும் தண்ட திராபைகள். காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும், நான் பார்த்தமட்டில், அவர்கள் தலைவி-தலைவர்களிடமிருந்து வழிவதை (அசட்டுத்தனமும் அயோக்கியமும் கலந்த கஸ்மாலத்தைச் சொல்கிறேன்) நக்குவதற்கே பாவம், நேரம் கிடைக்கவில்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.
– பாஜக+ கட்சிகளில் சிலர் உண்மையாகவே ஜொலிக்கிறார்கள்: அண்ணாமலை, புதியதமிழகம் கிருஷ்ணசாமி, சிடிஆர் நிர்மல்குமார், நாராயணன் திருப்பதி, அமர்பிரசாத் ரெட்டி (இவருடைய பதிலடி அடாவடிப் பேச்சும் நன்றாகவே இருக்கிறது, ஆனால் வரம்பு மீறுவதில்லை), செல்வகுமார், திருச்சி சூர்யாசிவா (இவருடைய இயல்பான த்த்தா வகை ‘கெட்டவார்த்தை’ப் பிரயோகங்கள் படுதமாஷ்)++
…ஆனால் பாவம் – இவர்களெல்லாம் பொறுமை பூஷணங்கள். கண்டகண்ட அரைகுறைகளுடன் உரையாட நேர்ந்தாலும் – துளிக்கூடச் சிரிக்காமல், நக்கலும் செய்யாமல் முடிந்தவரை நாகரிகமாகவே தம்பக்கக் கருத்துகளை முன்வைக்கிறார்கள்.
-0-0-0-0-0-
(மேற்கண்ட ஜாபிதாக்களை ஏன் எழுதுகிறேன் என்றால் – முதலுக்கே மோசமில்லை என என்னை நானே தேற்றிக் கொள்ளத்தான்; மேலும் கவனிக்கவும் – இன்னமும் பலப்பலர் நன்றாகவே சேனல் நடத்திக் கொண்டிருக்கலாம், மேற்கண்டவர்கள் என் கண்ணில் பட்டனர், அவ்வளவுதான்!)
((மட்றபடி தமிள் நேர்கோணள்வாத இளைங்கர்கல் பட்றிய எண் கறுத்துகளுக்கு மாட்றுக் கறுத்துகள் எண உங்கலிடம் இறுந்தாள், தெறிவிக்கவும், அள்ளது, தெரித்து வோடவும்.))
–
-0-
November 5, 2022 at 08:03
:)
வேற லெவல் (இதையும் தமிழன் வொக்கபிலரியில் சேர்த்தால் புண்ணியமாய் போகும்.)
November 6, 2022 at 17:38
மன்னிக்கவும்; எழுத்துப் பிழையைத் தவிர்க்கவும்.
அது வேற ரெவல்.
நன்றி.
November 6, 2022 at 18:26
நான் சொன்ன வார்த்தையின் குட்டிதான் இது, தளத்தின் வெறுப்பாசிரியர் இதையும் சேர்க்க வேண்டும்.
November 10, 2022 at 14:53
ஐயோ! சேர்த்துக் கொண்டேன்! ஆளை விடும், ப்ளடி.
November 5, 2022 at 14:25
ஐயா,
பலே,சம்பவம்(இன்றைய இளைஞர் மொழி) செய்து விட்டீர். பொறுப்பு துறப்பு (சமூக அக்கறையின்மை) என்ற கயவாளித்தனத்தை விட்டுவிட்டீரே?
November 6, 2022 at 17:42
சரிதான் – ஏற்கனவே 2300 போல வார்த்தைகளாகி விட்டன ஆகவே வெளியே கடாசவேண்டியதாகிவிட்டது…
பொறுப்புத் துறப்பு என குறிப்பிடப்படுவது ஒரு சடங்குதான்; ஏனெனில் பொறுப்பில்லாமல் பேசுவதுதான் பெரும்பாலும் நடக்கிறது.
ஆகவே, இம்மாதிரி தண்டங்கள், ‘பொறுப்பின்மைத் துறப்பு’ எனத்தான் கட்டியங்கூற வேண்டும்; அதாவது அவர்கள் தம் பொறுப்பின்மையைத் துறக்கப் போவதில்லை – தங்கள் பொறுப்பின்மையால் தமிழ் மரமண்டைகளுக்கு ஏற்படக்கூடும் வியாதிகளுக்கு அவர்கள் பொறுப்பேற்க முடியாது எனத்தான் அவர்கள் சொல்லவருகிறார்கள் என நினைக்கிறேன்.
—
November 6, 2022 at 11:31
நான் வசிக்கும் பெங்களூரில் உங்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் உங்களுடைய அனுமதி வேண்டுகிறேன் மேலும் சங்கத்தை நடத்துவதற்கு கை செலவு மற்றும் பைச்செலவிற்கு தனியாக பட்டியல் அனுப்பி வைக்கிறேன்.🥴🤪
November 6, 2022 at 17:45
யோவ்! அதுதான் தற்போதைய ஹெட்க்வார்ட்டர்ஸ். தலைமை அலுவகச் செயலாளர் பதவி வேண்டுமானால் கொடுக்கப் படும்.
பச்சை நோட்டுகளாக (1000 தாள்கள்) எண்ணித் கொடுத்துத் துணிக அக்கருமத்தை.
November 6, 2022 at 18:24
Small என்றால் மைக்ரோ
Small என்றால் மைக்ரோ
Small என்றால் மைக்ரோ
போதுமா? போதுமா?
பாவம் இளைஞர். எதோ முயல்கிறார்.
சற்று நுழை புழை தந்தால் பாய்ந்து விடுவீர்களே
November 10, 2022 at 14:54
என்னாதூ? சிறிய என்றால் உங்கள் காகமா?
November 7, 2022 at 11:10
Dear Ramasamy, Thank you very much for writing on this topic, so many times I just become bogged down by the stories and the stupid conclusion, the ill health or social condition=brahmin atrocities, the movement of other state people=brahmin people playing politics, the equation developed by this bloody DK group DMK, any social issues-Brahmin people are the reason. and their saviour is the all in all Periyar, bloody hell, pathetic people involved in throwing nonsense on others and projecting themselves as the savior of the backward, socially un touched population, what a crap. The ywill say Periyar may be from karnataka, but he live for tamil people. These bloody dravidian speakers say, aryan invasion, we do not know nor history is clear, these brahmins aryan people brought the social ill well. Thanks Once again, can keep on writing the multiple dastardly standards these people maintain and throw mud on others, who is there to stop? just like a dog barking at the mountain.. leave and go.
November 10, 2022 at 16:41
Sir, while it is true that Bs are being singled-out for harassment, it is important for all of us to realize that, we should internalize the ‘parable of the pedestrian’ and rise above the existential realities to shape our futures. Because agency-free victimhood does not help at all. Ultimately our dharmic society will suffer too.
So.
Or because, one of the foundational principles of life & evolution is: inequality; nature/universe does not care for equality because it is an artificial construct, only entropy matters.
So, relax sire, and let us do what we can, given what we are and where we are located at this particular point in time and space. Rta will take care of the rest.
November 7, 2022 at 16:13
Good Morning Sir, You indeed have lot of patience and have spent considerable time in watching/ hearing these Youtube channels. Some worthy additions … Srirangam Rengarajan Narasimhan, ( Extremely patiently explains his points even to the most idiotic questions) Kolahala Srinivas, Jambavan TV … Aswathaman of TN BJP
We indeed get some good interviews in Dinamalar some times …especially one interview of Sai Deepak. The interviewer was also quite sensible.
Regards. K. Ganapathi Subramanian
November 10, 2022 at 16:43
Sir, thanks for the reco. May be there are more. Will check them out as and when I get the time.
Mostly I do not watch these channels – I only ‘hear’ them, mostly while doing other things/chores.
I wanted to do a reasonable sampling before dissing them, that’s all.