“வெகு ஜனங்களுக்காக எழுதப்படும் வரலாற்றில் நேர்மை வேண்டும் (அல்லது) வரலாறு என்ற பெயரில் கதை சொல்வது வரலாற்றுக்கு இழைக்கப்படும் துரோகம்”
May 5, 2024
நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்கள் அண்மையில் தமிழில் வந்துள்ள pop-history (இதை டமால்டுமீல் வரலாறு எனப் பெயர்க்கலாமா?) புத்தகங்கள் சிலவற்றைப் படித்துள்ளார் என்பது தெரிகிறது. பொன்னியின்செல்வன் பேரிலும் கொஞ்சம் வருத்தம் இருப்பதாகவும்…
அதன் விளைவான ஆதங்கம்: வரலாறு மிக முக்கியம் அமைச்சரே அவசியம் இதனைப் படிக்கவும்.
அவருக்கு என்னாலான, எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆதூரம்/ஆசுவாசம் தர முடியக்கூடிய விஷயம் இது ஒன்றுதான்,
அதாவது இது ‘ஒத்திசைவு க்யாரண்டி’ – நான் எக்காலத்திலும் டமால்டுமீல் தமிழக உளறாறு என எத்தையாவது தடிமன் வெண்முரசு எழுதி அவர் தலையில் ஐந்து படிகளைக் கட்டமாட்டேன்.
இதைப் படிக்கும் உங்களுக்கும் கவலைவேண்டேல் எனும் க்யாரண்டிதான்.
-0-0-0-0-
ஆனால்.
என் இளந்தலைவர் உதை இசுடாலிர் – அமைச்சராகவே மாட்டேன் எனச் சொல்லி, அமைச்சரும் ஆகி, தான் திருடிய செங்கல் ஒன்றைத் தூக்கிக் கொண்டு சுற்றி வந்து மக்கள்பணியாற்றுவது ஒரு முன்னோட்டக் கவலையளிக்கிறது. மேலும், நான் திராவிடச் சூழலில் வளர்ந்தவன். கருந்தோல் தடிமன் தாஸ்தி. என் எருமைசரீரத்தின் மேல் மழை விழுந்தால் என்ன மண்ணாங்கட்டி விழுந்தாலென்ன என… …
ஆக.
அப்படியே ஒரு குட்டிவெண்முரசை, ஏன் சிறுடமாரங்களை (ம்ம்ம் – இந்தத் தலைப்புகள் பரிசீலனையில் இருக்கின்றன: “தட்டித் தூக்கிய களப்பிரர்கள்!” – “வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கட்டம் கட்டி வீழ்த்திய பார்ப்பனர்கள்!” – “ரிக்வேதம் எழுதப் பட்டதே செந்தமிழில்” – “ஆரிய ஹரப்பா தந்தைவழி நாகரிகமும் திராவிட ஹரம்மா தாய்வழிச் சமூகமும்” – சிறார்களுக்காக எழுதப்படக் கூடிய எஸ்ராமகிருஷ்ணத்தனமான “இளங்கோ: சங்ககால கன்றுக்குட்டி” … …) நான் எழுதவேண்டிய துர்பாக்கிய நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீதரனார் தான் ஜவாப்தாரி.
மன்னிக்கவும்.


May 13, 2024 at 18:28
I am so eager to read it!, Pl start writing