(இந்தக் குறிப்புகளை நான் டிஸெம்பர்2016 வாக்கில் எழுதினேன்; ஆனால், பல வேலைகளுக்கிடையில் இதனைச் சரிபார்த்துப் பதிவு செய்ய முடியவில்லை. இப்போது, டிமானடைஸேஷன் விவகார போராளிக்கூவான்தனங்களெல்லாம் – நிதர்சன உண்மைகளால் நொறுக்கப்பட்டாலும் – இதனை இப்போதாவது பதிப்பிக்கிறேன். நன்றி!)
தாமிரவருணியைக் காப்பாற்றுவதும், போராளிக்குண்டிகளும்
March 30, 2017
தமிழகத்தில் இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கவேண்டும் (ஏனெனில் தமிழகத்தில் நடப்பது போன்ற அத்தைச் செய்யாதே இத்தைத் தொடாதே வகையறா அழிச்சாட்டியப் போராட்டங்கள் நடப்பதுபோல வேறெங்கும் நடப்பதில்லை!) என்றாலும் – சுமார் ஐந்து லட்சம் இளம் போராளிக்குண்டிகள் மட்டுமே இருக்கின்றன என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். (என்னைப் போன்ற) முதுகுண்டிப் பெருவழுதிகளை விட்டுவிடுவோம்… Read the rest of this entry »
நுனிப்புல்மேயர், நெகிழ்வாலஜிஸ்ட் எஸ்ரா அவர்களிடம் பாவப்பட்ட ஜீவன்களான ஐன்ஷ்டீன் + தாஸ்தயெவ்ஸ்கி படும்பாடு :-(
March 25, 2017
#நம்ப_எஸ்ராடா
…தமிழகத்து எழுத்தாளப் பெருமகனார்கள் பலப்பலருக்கு இயல்பாகவே இருக்கும் சாபக்கேடு – இந்த நுனிப்புல் மேய்ந்து மட்டுமே, முடிந்தால் – அதிலும் அந்த நுனிகளின் உலர்ந்தமொண்ணை விளிம்புகளை நக்கிக்கொண்டு மட்டுமே மினுக்கிக் கொண்டலைவது. இந்த நெடிய பாரம்பரியத்தின் காரணமாக – ஏதோ ரெண்டு சுட்டிகள் இணையத்தில் எந்த எழவைப் பற்றியோ இருக்கின்றன எனக் குத்துமதிப்பாகவே கூக்ள்மதிப்பாகவோ தெரிந்துகொண்டதும் உடனே அதனை ஈயடிச்சான் காப்பியடித்து அதனுடன் மானேதேனே எனக் கலந்துகட்டி இஷ்டத்துக்கு டர்புர்ரென்று ஜென் கன் டின் பன் என ஜாங்கிரி ரீல் சுற்றி ஒரு அரைவேக்காட்டுச் சோற்றை அடுப்பிலேற்றியிறக்கி, அதனைச் கஞ்சியுடன் சுடச்சுடத் தமிழர்களின் சொட்டைத்தலைகளில் கவிழ்த்தி விடுவார்கள். ஆ! எங்கிருந்தோ சுடச்சுடச் சுட்ட சூடான கஞ்சி. சாவுக் கெராக்கிகள். #வோத்தாடேய்!
ஒருகாலத்தில் நான் அமெச்சூர் ரேடியோ கிறுக்கனாக(வும்) (HAM Radio Operator, so my ham handedness continues, hamen!) இருந்தேன். விடலைப் பருவத்தில் என் மனதைக் கொள்ளைகொண்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. (இந்த அழகான பொழுதுபோக்கு பற்றிய இந்திய சுட்டி. அமெரிக்க விவகாரம்) Read the rest of this entry »
புதுதில்லி சென்று விவசாயி ‘ப்ரொட்டெஸ்ட்’ செய்வது எப்படி
March 21, 2017
அசிங்கமாக இருக்கிறது :-( – விவசாயிகள் என்ற பெயரில் தில்லி ஜந்தர்மந்தர் எழவில் நடந்துகொண்டிருக்கும் அலங்கோலம்! வெட்கம் பிடுங்கித் தின்கிறது… தில்லி நண்பன் (அண்மைய அறிமுகம்) சொல்கிறான் – உங்கள் ஊரில் மேலிருந்துகீழ்வரை எல்லோரும் நடிகர்களே! (உண்மைதான்! நாங்கோ #தெராவிடனுங்கோடா!) Read the rest of this entry »
தோஹாடாக்கீஸ், தொழில்முறை ட்விட்டர் உளறலாளச் சான்றோர், முழு-தமிழகச் சேற்றுக்கு ஒரு பிடிச் சேறு பதம்…
March 20, 2017
நம் கீபோர்டுகளைக் கொண்டு நம்மை இணைத்துக் கொள்ளலாம் வாரீர்!! #தகூபிகடா, #ங்கொம்மாள
ஞானத்தங்க நடிகர் சிவகுமார், கௌரவஎன்ஆர்ஐ, கங்கைகாவிரி இணைப்பு, இஸ்ரோ மங்கள்யான் – சில புரிதல்கள்
March 15, 2017
ஒரு செல்லமான எடுத்துக்காட்டாக – அண்ணன் அரவிந்தன் கண்ணையன் அவர்கள், அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். ஒரு மகாமகோ என்ஆர்ஐ. அதனால்தான் அவருக்கு, தொலைதூரத்திலிருந்து விஷயங்களை வெகுநுணுக்கமாக அறிந்துகொண்டு ஐயம் திரிபற அலசமுடிகிறது. அதாவது – செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்தும் டைம்லைனில் வம்புகளைக்கேட்டும் திட்டவட்டமாக – பொதுவாகவே இந்தியாவைக் கரிசனத்துடன் கரித்துக்கொட்ட, திட்டும்வட்டமாக முழு உரிமை இருக்கிறது. Read the rest of this entry »
“தயைசெய்து எங்களுக்கு உதவி செய்வதை நிறுத்தவும்”
March 12, 2017
அண்மையில் படித்த பல புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இது. Read the rest of this entry »
#ங்கொம்மாள, இந்தக் கோமாளிகளின் அணிவகுப்புக்கு ஆதியும் இல்லை… பொற்க்கவே முட்யலியேடா! எப்ப சான்ஸ் கெட்ச்சாலும் வொளறிக்கொட்டிக்கினே போய்க்கினுக்கீறீங்களேடா, சாவுக்கெராக்கீங்களா! Read the rest of this entry »
*பகீர் செய்தி* … … *பயபீதி* … *படுபயங்கரம்*… … *மகா கோரம்*… :-( இந்த அவலத்தைக் கேட்பாரில்லையா? :-(
Hamaari πCycle
February 28, 2017
[Note: I do not ‘personally’ know the folks (= Sandhya & Sarit) behind this cutesy and effective math+science camp personally nor am I associated with this camp; but, I know of their good work and passion. So, if at all possible – please encourage yourselves and therefore–>> your children and them. Thanks!]
நம்பிக்கை, அவநம்பிக்கை, அறிவியல்… பொறியியல்!
February 26, 2017
அவ்வப்போது – சீண்டுவதற்காகவும், உருப்படியான உரையாடல்களுக்கான கருப்பொருளாகவும் – என் சொந்தப் பிள்ளைகளை உள்ளடக்கிய ஒரு சிறிய, குறுகிய வட்டத்துக்கு (=இளசுகளுக்கும் பொடிசுகளுக்கும் மட்டுமே! வயது வந்தவர்களுக்கும் சமூகவளைத்தலங்களில் படுபிஸியாகப் பணிபல புரிந்து உலகத்தைத் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டிருக்கும் கருத்துப்பெருச்சாளிகளுக்காக அல்ல!) இம்மாதிரி, இணையத்திலிருந்து பீராய்ந்த – அறிவியல், கணிதம், பொறியியல், புதிர்கள், வரலாறு, அழகானபுத்தகங்கள் இன்னபிற தொடர்பான விஷயங்களை அனுப்புவேன். Read the rest of this entry »
திருவண்ணாமலையில் புதிய மிருகக்காட்சிசாலை!
February 24, 2017
(அல்லது) திமுக தீவட்டிக்கொள்ளைக்காரர்களின் அறப் போராட்ட நாடகம்.
தமிழக அரசியலென்றால் நம் கருணாநிதி வகையறாக்களைப் பற்றி அமர்க்களமாகக் கிண்டல் செய்வார். அண்ணாதுரை மாதிரி வழவழாகொழகொழா வெற்றிலை நடுங்கல் பேச்சிற்குப் பின் கரகரத்தகுரலில் கருனாநிதிபோலஆரம்பித்து திடீரென்று எம்ஆர் ராதா மாதிரிப் பேச ஆரம்பித்து எம்ஜிஆர் வரை ஒரு ரவுண்ட். இன்னொரு ரவுண்ட் ஆரம்பித்தால் – அவருடைய சொந்தக் கட்சியிலிருந்து ஆரம்பித்து ஈவேரா ஊடாக நேருகாந்திஅம்பேட்கரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒரு பிடிபிடித்துவிட்டுத்தான் ஓய்வார். மூளையுள்ள, சிந்திக்கும் ஆசாமி. ஆனால், அவர் பேச்சில் நானுமேகூட கேள்விப்பட்டிருக்காத திராவிடக் கொச்சை வசைகளும் இருக்கும். :-)) ஆகவே.
Read the rest of this entry »
தனியார் அதிபொறியியல் கல்வி, திராவிடம், கல்வித்தந்தையம் – மூன்று விஷயங்கள் – வெட்கக்கேடு :-(
February 22, 2017
இதில் மூன்று விஷயங்கள்: 1) எஸ்கேபி கருணா என்ற மனிதரைப் பற்றி அரைகுறை நண்பர் ஒருவர் சிலாகித்து பின்னூட்டம் எழுதியதால், நான் அதனைத் தொடர்ந்ததன் முடிவு; ஏனெனில் தொங்கல் கேஸாக என்னால் இதனை விட்டுவிடமுடியாது, இது நம் தமிழகத்துப் பிள்ளைகளின் கல்வியைக் குறித்தவொரு பிரச்சினை 2) பொறியியலாளர்களின் பொறியில் அகப்பட்ட நண்பரொருவர் எழுதிய கடிதம் 3) பெங்களூர் ‘ஏரோ இந்தியா’ விமானக் கண்காட்சியில் நம் சராசரி இளைஞப் பொறியியலாளர்களின் பங்களிப்பு குறித்து.
ராம், திருவண்ணாமலை எச்கேபி, கல்லூரி எச்கேபிகருணா என்பவரால் நடத்தப்படுகிறது. இவர் திமுக சார்பினராக இருந்தாலும் நேர்மையானவர். எனக்கு அறிமுகமானவர். இலக்கிய ஆர்வலர். உங்கள் மதிப்புக்குரிய ஜெயமோகன் இவருடைய சிறுகதையை ரசித்து பரிந்துரை செஉதிருக்கிறார்.
அந்தக் கல்லூரிக்கெஇத்ரான உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்விர்கள் என நம்புகிறேன்.
கருணாநிதி பெருங்குடும்பக் கருமாந்திரம் >> சசிகலா குறுங்குடும்பக் கருமாந்திரம்: சில குறிப்புகள்
February 18, 2017
சசிகலாக்களைக் குற்றம் சொன்னால், ஜெயலலிதாக்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்கிறார்கள். ஆம். தமிழகத்துக்கென (திமுக கொள்ளையர்கள் போலல்லாமல்) சிலபல நல்ல காரியங்களை தம் இயல்பான திராவிடத்தனத்தை மீறிச் செய்திருந்தாலும், அகங்காரமிக்க ஜெயலலிதாக்களும் இந்த ஊழல் குட்டையில் உழன்ற உலுத்தர்களே. அமோகமாகக் கொள்ளையடித்தவர்களே. செத்தார்கள் என்று பண்பு(!) பார்த்து, ச்சூ கொட்டுவது எனக்கு முடியாது. ஆகவே ச்சீ! – ஒழிந்தார்கள் சரி, ஆனால் ஒழியவேண்டியவர்கள் என ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களே!
…இந்தத் திராவிடலை உடன்பிறப்புகள், அதுவும் ‘திராவிடப் பொதுவாழ்வில் தூய்மை’ எனும் நேனோ தூசியை 100000000000X பூதக் கண்ணாடி வைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் – ஆகவே, போயும் போயும் இந்தக் கருணாநிதிகளைப் போற்றி ஆராதிப்பவர்கள், இந்தக் குற்றம்காணும் விஷயத்தை ஜெயலலிதாவோடு மட்டும் நிறுத்திவிடுவார்கள். என்னவோ கருணாநிதிகளும் இசுடாலிர்களும் கனிமொழிகளும் பண்பாளச் சத்தியசந்தர்கள் போல, தமிழகத்தின் மேன்மைக்காக மட்டுமே உழையோவுழை எனக் கண் துஞ்சாமல் மெய் நோக்காமல் உழைத்துவருபவர்கள் போல… உண்மையாகவே, இது ஒரு நகைக்கத்தக்க பிரச்சினைதான். :-)
ஏனெனில் ஊழலின், திராவிடத்துடன் பிறந்த கருமாந்திரங்களின் முழுமுதல் ஊற்றுக்கண்ணுக்குச் செல்லவேண்டாமோ? சசிகலா ஈயங்களைப் பார்த்து திமுக பித்தளைகள் இளிப்பதைப் பார்த்துக்கொண்டு நாம் நமட்டுச் சிரிப்புகளை மட்டுமே நல்கிக்கொண்டு இருக்கக்கூடாதல்லவா?
ஜிரொ டனிகூசி – குறுங்குறிப்புகள்
February 16, 2017
சில நாட்கள் முன் இவரும் (=Jiro Taniguchi) போய்ச்சேர்ந்துவிட்டார் என இன்று அறிந்துகொண்டேன்: Japanese manga artist Jiro Taniguchi dies aged 69
போங்கடா போங்க, போக்கத்த பேமானீங்களா!
February 12, 2017
ஆயிற்று, அந்தோணீ மார்க்ஸ் அவர்களின் உளறிக்கொட்டலில் ஆரம்பித்து, அவரைப் பின் தொடரும் அரைவேக்காட்டுத் தாந்தோணி அரைவாளிகள் ஊடாக, ‘விடுதலை’யின் தறுதலைவர் வீரமணி அவர்கள் வரை, அமோகமாகக் கருத்துச் சொல்கிறார்கள். சதி என்கிறார்கள். அடுத்து என்னவெல்லாம் நடக்கும் எந்தக் கட்சி எப்படிப்போகும் என்று ஆரூடம் சொல்கிறார்கள்! Read the rest of this entry »
மகாமகோ ஃபேஸ்புக்டிவிட்டர்வாட்ஸப் விஞ்ஞானிகள் (அல்லது) யேஸ்ஸுவே! பாவப்பட்ட என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்! :-(
February 9, 2017
இந்த தட்டச்சரிப்பாளனுங்கோ இப்டீ ரவுண்டு கட்டிக்கினு அறிவொரைங்கள சான்றோக்கூமுட்டெத்தனமா கொட்த்துக்கினே கீராங்களேடா! நான் இன்னாடா செய்வேன்! றொம்ப படுபயங்கரபீதியாக் கீதேடா! பேதீ வர்தேடா! Read the rest of this entry »


