சமூகவளைத்தலப் பெருச்சாளிக் கூவான்களின் நெடிய பாரம்பரியமும், தொடரும் அவதாரங்களும்…
March 7, 2017
#ங்கொம்மாள, இந்தக் கோமாளிகளின் அணிவகுப்புக்கு ஆதியும் இல்லை… பொற்க்கவே முட்யலியேடா! எப்ப சான்ஸ் கெட்ச்சாலும் வொளறிக்கொட்டிக்கினே போய்க்கினுக்கீறீங்களேடா, சாவுக்கெராக்கீங்களா!
(நடைமுறை விஞ்ஞானக் குஞ்சுகளின், போராளிகளின் ஆர்ப்பரிப்புகளைச் சேகரம் செய்து இதனை விரிவாக்கலாம் என நினைக்கிறேன்)
…
குமாஸ்தாமுதல்வாதம் (இதுதான் முதலில் இருந்தது – இதுதான் முதல் வார்த்தை, இதுதான் கடவுளும்கூட. பைபிளிலேயே சொல்லியிருக்கிறது – உட்கார்ந்த இடத்திலிருந்தே அமர்க்களமாகக் குசுவிடுபவர்கள் பாக்கியவான்கள்; சமூகவலைத்தள ராஜ்ஜியம் அவர்களுடையது. ஆமென்.)
…
…
முதலாளிஎதிர்வாதிகள் (தாம் முதலாளியாகும் வரை)
…
புர்ச்சியாள கம்மூனிஸ்ட் (சேகுவேரா டீஷர்ட் போட்டுக்கொண்டால் போதும்)
…
பன்னாட்டு நிறுவன எதிர்முதல்வாதிகள் (அவற்றில் வேலை கிடைக்காதவர்களின் இயக்கம்)
…
அணைக்கட்டு உள்ளிட்ட கட்டுமான இஞ்சினீயர்கள் (தெஹ்ரி, நர்மதா அணைகளின் போது!)
…
நாட்டுமர (!)ஆர்வலர்கள் ஆகவே அந்நியமர(!!) எதிர்ப்பாளர்கள் (அய்யோ யூகலிப்டஸ் வகையறா பொய்கள் பரப்பப்பட்டபோது)
…
…
அணுசக்தி விற்பன்னர்கள் (கூடங்குளத்தின்போது)
அணுத்துகள் அறிவாளிகள் (நியூட்ரினோ சமாச்சாரத்தின்போது)
சாதிக்கெதிர் சமதர்மவாதிகள் (அவ்வப்போது ஏதாவது ஜாதிக்கொலை நடக்கும்போது)
பெண்ணியமுதல்வாதம் (கடலைபோட அலையும் தருணங்களில்)
விருதுஎதிர்வாதம் (தனக்கு விருது கிடைக்காதவரை)
… …
ராக்கெட் விஞ்ஞானிகள் (இஸ்ரோ ராக்கெட் விடும்போது அதைக் குறை சொல்லவேண்டுமல்லவா?)
பேலியோஎழவாளர்கள் (வேறு எதுவும் கொறிக்கக் கிடைக்காதபோது)
பொருளாதார நிபுணர்கள் (டீமானடைஸேஷன்போது)
சதிவலைச் சான்றோர்கள் (ஜெயலலிதாவின் இறப்பின்போது)
கலாச்சாரக் காவலர்கள் (ஜல்லிக்கட்டின்போது)
மாசுபடுவதற்கெதிரான போராளிகள் (நெடுவாசல் இன்னபிற)
தண்ணீர் எக்ஸ்பர்ட்ஸ் (கோகாகோலாஎதிர்வாதத்தின் போது)
…
மதங்களைப் பற்றிய ஏகாம்பரங்கள் (இந்த ஜக்கி வாசுதேவ் தொடர்பான வதந்திகளின் போது)
தடுப்புசக்தி ஊசிக்கெதிரான ஊசிப்போனராளிகள் (வாக்ஸின்களுக்கு எதிராக)
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் (இப்போது, அந்தப் பாவப்பட்ட வேலிகாத்தானுக்கு அல்லது சீமைக் கருவேல மரங்களுக்கு எதிராக)
…
…
எதிர்கால எக்ஸ்பர்ட் (எதிர்காலத்தில் என்ன மசுறு நடந்தாலும், அதில்! உடனடியாக!!)
#வோத்தாடேய், இதுங்களுக்கு அந்தமும் இல்லை!
இந்தப் பன்னாடைங்கொ, எத்தையாவது முட்டாக்கூத்தனமா கூவிக்கினே இர்ப்பாங்கடா, ஆவ்ரவேலயப் பாப்போண்டா!
March 8, 2017 at 06:26
:-))))
March 8, 2017 at 08:53
இந்த போராளிகளின் இருப்பு, இருக்கும் அல்லது வரவிருக்கும் வேலை இல்லா திண்டாட்டத்தை சுட்டிக்காட்டுகிறதோ?
நீங்கள் குறிப்பிட்ட துறைகளில் வேலையோ, தொழில் தொடங்க வாய்ப்போ இல்லாதபோது, திடிரெக்ஸ் போராளிகள் தோன்றுகிறார்கள்.
March 8, 2017 at 09:12
நீ கெளப்பு நய்னா…
March 8, 2017 at 13:50
சார்,இவர்களை ”பன்னாடை”ன்னு மட்டும் சொல்லாதீங்கோ பன்னாடைக்கு தமிழில் ‘பவித்திரம்’ (!)என்ற பொருளிருக்கிறதாக சமீபத்தில்தான் அறிந்தேன்.
March 9, 2017 at 04:59
‘ராஜ குலோத்துங்க’வை விட்டு விட்டீர்கள் :-)
August 13, 2017 at 01:42
:))
November 30, 2017 at 14:09
“எத்தையாவது முட்டாக்கூத்தனமா கூவிக்கினே இர்ப்பாங்கடா, ஆவ்ரவேலயப் பாப்போண்டா!”
முடியலயே!!
“12 நீர்த் தேக்கங்களுக்கு அருகில் உள்ளது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டியுள்ள வைகோ, இந்தத் (நியூட்ரினோ)திட்டத்திற்காக லட்சக்கணக்கான டன் பாறைகள் உடைபடும்போது, அதன் அதிர்வலைகள் நிச்சயமாக நீர்த்தேக்கங்களைப் பாதிக்கும் என அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ”
செய்தியின் சுட்டி : https://www.minnambalam.com/k/2017/11/30/1512025863
November 30, 2017 at 20:17
அய்யா, போதுமா? கொஞ்சம் ஓவராகவே என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறீர்!
March 23, 2020 at 20:18
[…] […]
May 5, 2020 at 17:12
[…] […]