தோஹாடாக்கீஸ், தொழில்முறை ட்விட்டர் உளறலாளச் சான்றோர், முழு-தமிழகச் சேற்றுக்கு ஒரு பிடிச் சேறு பதம்…

March 20, 2017

இந்த ட்விட்டர் அரைகுறைகளுடைய (அதுவும் அறிவிலித் தமிழ்க் குளுவான்களின்) வதந்திகளுடன் காத்திரமாகப் பொருதவேண்டுமானால் – அது சுமார் பத்தாயிரம் ஆட்களுக்கு முழு நேர வேலையைத் தரும் என நினைக்கிறேன். இதற்காக ஒரு அகில இந்திய அளவில் (எதிர்காலத் திட்டம்) அல்லது குறைந்த பட்சம் தமிழக அளவிலாவது, ஒரு கட்சியை ஆரம்பிக்கலாமா என நினைக்கிறேன் – “தமிழ்க் கூமுட்டைகளைப் பின்னேற்றும் கழகம்” – தகூபிக!

நம் கீபோர்டுகளைக் கொண்டு நம்மை இணைத்துக் கொள்ளலாம் வாரீர்!! #தகூபிகடா, #ங்கொம்மாள

-0-0-0-0-0-

முகாந்திரம்: தோஹா​டாக்கீஸ் என, தன்னை ட்விட்டரில் அழைத்துக்கொள்ளும் (தமிழும் ஓரளவுக்குத் தெரிந்துகொண்டிருக்கும் எனப் படுகிறது) அற்ப மானுடப் பதர் ஒன்று, இப்படி உளறிக் கொட்டியிருக்கிறது!
(https://twitter.com/dohatalkies/status/843317049996668932)

… இந்த ஞானப்பழ ட்வீட்டின்  ஜனரஞ்சகமான சாராம்சம்:

இந்திய விஜிலன்ஸ் கமிஷனின் ஸர்வர் கெட்டுப்போய்விட்டது! நவம்பர் 28 2016 வரை அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து விஷயங்களும் அழிக்கப்பட்டுவிட்டன!! லஞ்சலாவண்யத்துக்கு எதிரான அதிவுயர் நிறுவனமான இதிலுள்ள – ஊழல்வாத அதிகாரிகளின் விவரங்களும் மாயம்!!! மோதியின் சாதனை! #த்த்தூ [எச்சில் தெறிப்புக்கான படம்]

இதற்குப் போய், எந்த ட்விட்டர் உளறலுக்கும் நடக்கும் விஷயம் போலவே, ஓடிவந்து 8 லைக்குகள் 13 ரீட்வீட்டுகள்! முட்டாக்கூவான்கள், மூளைகளை வீட்டு லாக்கரில் பத்திரமாக வைத்துவிட்டு வெளியே உலாவிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு குஞ்சாமணிக்காவது அடிப்படை அறிவென்பதிருக்கிறதா? அப்படியில்லா விட்டாலும், குறைந்த பட்சம் விஷயங்களைச் சரி பார்க்கும் எண்ணமாவது இருக்கிறதா?

அல்லது தோஹாடாக்கீஸ்காரருக்கும் தன் பொய் வதந்தியை ஒப்புக்கொண்டு தன்னைத் திருத்திக்கொண்டு முன்னேறும் பாங்காவது இருக்கிறதா? அறிவிலிச் சாக்கடையில் ஊறிய மட்டைகள். முட்டாப் புண்ணாக்குகள். (புண்டைகள் எனத்தான் எழுதவந்தேன், ஆனால் எனக்கே(!) கொஞ்சம் மோசமாகப் பட்டதினால் எடுத்துவிட்டேன். நன்றி!​)
-0-0-0-0-

தோஹா டாக்கீஸ்காரரின் ட்வீட்டிலிருந்து எனக்குத் தெரியவருவது என்னவென்றால்:

  1. ஜந்துவாருக்கு, ஐடி குமாஸ்தாவிய முக்கியச் செயல்பாடான வெட்டியொட்டுதல் கைவந்த கலை.
  2. இவர் தமிழ்வாணத்தனமாக, மாஸ்டர் ஆஃப் ஆல் ஸப்ஜெக்ட்ஸ்! எல்லா துறைகளிலும் சும்மா புகுந்து விளையாடுகிறார், துரை!
  3. இப்படியே தொடர்ந்தால் – ஜந்துவாருக்கு நொபெல் பரிசிலிருந்து கலைமாமணி விருது வரை — ஏன், திருமாவளவன் ராமதாஸுக்கு அன்புடன் கொடுத்த ‘தமிழ்க் குடிதாங்கி’ விருதாவும்கூட கிடைக்கும். ஏனெனில் ஜந்துவாருக்கு ஞானம் அப்படிப் பொங்கிப்பொங்கி வழிகிறது! அப்படி தமிழ் ஞானமார்க்கங்களைத் தாங்கு தாங்குவெனத் தாங்குகிறார், பாவம்!
  4. ஜந்து என்ன உளறினாலும் – அந்த உளறலைப் பின் தொடர 10600 பேர் தயார். கிஂளம்பிற்று காண் அறிவிலிகளின் படை! நம்ப தமிழகம் நல்லா வெளங்கும்டா!
  5. ஜந்துவுக்கு பேக்அப் என்பதையே விடுங்கள் – அதாவது டேடா தொடர்பானவற்றை மேலாண்மை செய்வதைக் குறித்த விவரங்கள் (back-up, restore, vault, RAID… …) ஒரு எழவும் தெரியவில்லை. ஆனால் எழவு தெரிந்திருக்கிறது. ஷ்ராடிங்கெரின் பூனை விவகாரம் போல – மூளையில்லை, ஆனால் திரியாவரம் இருக்கிறது. அற்பக் குளுவான்!
  6. இந்திய அரசு மூலமாக மேலாண்மை செய்யப்படும் எந்தவொரு டேடா ஸர்வரும் – முறையாக தின/வார/மாத வாரியாகப் பிரதி (back-up) எடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்படுகின்றன. டேடா காணோம், அழிந்துபோய்விட்டது, ஃபைல் தொலைந்துவிட்டது போன்ற திராவிடத்தனமான உளறல்களுக்குச் சாத்தியக்கூறுகளே இல்லை.
  7. மன்மோஹன் சிங் ஆண்டபோதும் இப்படித்தான், இப்போது மோதி ஆளூம்போதும் இப்படித்தான். ஏன் தோஹாடாக்கீஸ் பிரதரமானால்கூட அப்படித்தான்! (பேச்சுக்குச் சொல்லவில்லை – போயும்போயும், இசுடாலிர் சசிகலாக்களெல்லாம் முதலையமைச்சராக விரும்பும்போது பாவம் தோஹாடாக்கீஸுக்கு இம்மாதிரி உரிமை இல்லையா என்ன?)
  8. மேலும் ரேக் மௌண்டட் ஸர்வர்கள் என்பது வேறு – இந்த ஜந்து இணையத்தில் சுட்டுப் போட்டிருக்கும் பொட்டி என்பது வேறு.
  9. ரெய்ட் டிஸ்க்குகள் – அவை ஒருங்கிணைக்கப்படுவது என்பவை வேறு மாதிரியானவை – அரைகுறையார் காண்பித்திருப்பதுபோல் இல்லை – சும்மனாச்சிக்கும் பொட்டியிலிருந்து உருவிப் போட்டிருப்பதெல்லாம் முக்கியமல்ல. அற்பத்தனத்துக்கும் ஒரு அளவு வேண்டும். அய்யா தோஹாடாக்கீஸார் ஒரு திராவிடக் குஞ்சாமணியோ, எனக்குச் சந்தேகமாக இருக்கிறது…
  10. மத்திய விஜிலன்ஸ் கமிஷன் இந்த வதந்திபற்றிய ஒரு குறிப்பை வெளியிட்டிருக்கிறது – இதைக்கூடவா படிக்கமுடியாது? மேலாண்மைக்காக, மேம்படுத்தலுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை இப்படியா திரிப்பது?
  11. ஆனானப்பட்ட கூக்ள் ஸர்வர்களே சமயத்தில் மண்டியிட வைக்கப்பட்டிருக்கும்போது, இணையத்தின் நடைமுறை உண்மைகளை, நடப்புகளைக்கூடவா புரிந்துகொள்ளமுடியாது? (ஆனால் தோஹாடாக்கீஸ் போன்ற சோம்பேறிச் சொம்புகளுக்கு வதந்திபரப்புதல்களில் இருக்கும் சுறுசுறுப்பு இருக்கிறதே, அம்மம்மா!)
  12. ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றியும் புழுதியை வாரி இறைக்கலாம். மோதி மேலும் கூட, தேவைப்படும்போது காத்திரமாக விமர்சனம் வைக்கலாம். மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்தலாம்.
  13. நம்பகத்தன்மை வாய்ந்த  தரவுகள் இருந்தால் தாராளமாக வசைபாடலாம். ஆனால் வாய்கூசாமல் பொய் சொல்லக்கூடாது. வதந்திகளைப் பரப்பக்கூடாது.
  14. இதேமாதிரி வதந்திகளை (தோஹாடாக்கீஸ் இப்போது இருக்கக்கூடும்) கத்தார் அல்லது ஸவுதி அரேபியா போன்ற நாடுகளின் அரசுகளைப் பற்றி தெகிர்யமாக – செய்தி என்கிற பெயரில் பரப்பமுடியுமா? அவை உண்மையாகவே இருந்தால்கூட அவற்றைப் பகிரங்கமாக வெளியே சொல்லமுடியுமா? தோஹாடாக்கீஸ் போன்ற தைரியசாலிகளுக்கு இதெல்லாம் முடியாது – ஏனெனில் அவர்களுக்குத் தெரியும், இப்படி ஏடாகூடமாகச் செய்தால் மாறுகால் மாறுகை மாறுகொட்டை வாங்கிவிடுவார்களென்று! ஆக வாலைச் சுருட்டிக்கொண்டு இருப்பதுதான் உத்தமம் அல்லவா?
  15. ஆனால், இதே கோழைவாத தோஹாடாக்கீஸ்கள் அதே சமயம் இந்தியாவைப் பற்றிய பொய்களைத் தாராளமாகப் பரப்பலாம்! முதுகெலும்பற்ற பேடிகள், வேறென்ன சொல்ல!
  16. ஹ்ம்ம்ம்… இந்த அழகில், இந்த தோஹாடாக்கீஸ் அரைகுறை ஜந்துவுக்கு – அதனுடைய ப்ரொஃபைலில் ஜேக் நிக்கல்ஸன் படம் ஒன்றுதான் கேடு!  பாவம் என்னருமை நிக்கல்ஸன், கண்ட கழுதைகளிடம் மாட்டிக்கொண்டு, பாவம் திண்டாடுகிறார்…
சரி. எது எப்படியோ — தோஹாடாக்கீஸ் போன்றவர்கள், ஒரு மசுறையும் புரிந்துகொள்ளாமல், ஏன் அறிந்துகொள்ள முயற்சிகூடச் செய்யாமல் ஏகோபித்து உளறிக்கொட்டினால், வெறுப்பிய வாந்தி எடுத்தால்… ….என்னைப் போன்றவர்களிடமிருந்து இலவச இணையவுதை கிடைப்பதையும் ஆனந்தத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.

ஆக, இந்த ஜந்து உபயோகித்த அதே எதிர்வினை ஏவுகணை அதே ஜந்துவின் மீது ஏவப்படுகிறது…

#த்த்தூ [எச்சில் தெறிப்புக்கான படம்]; நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு, வேறென்ன சொல்ல!

வெட்கங்கெட்ட தோஹாடாக்கீஸ் வகையறா போக்கற்றவர்களுக்கு நீதி: தன் எச்சில் தன்மேலேயே தெறிக்கும்; ஆக, துப்பும்போது எதிர்க்காற்றின் வீரியம் பற்றி யோசித்துத் துப்பவும்.
-0-0-0-0-

கண்ட தறுதலைக் கழுதைகளின் பொதுச்சபை கனைத்தல்களுக்கெல்லாம் எதிர்வினை செய்யவேண்டிய அவசியமில்லை என்றாலும் – அறிவிலிகளின் ஆட்டம் சகிக்கமுடியாத அளவுக்குப் போய்க் கொண்டிருப்பதால் இது.

சென்ற இரண்டு வாரங்களாக தில்லியும் கதி என அலைந்துகொண்டிருக்கிறேன். கணிநி பரிசோதனைச் சாலைகள், கல்வி, ஆசிரியர் பயிற்சி எனப் பலப்பல விஷயங்களுக்காக சிலபல சந்திப்புகள் உரையாடல்கள் என ஆனந்தமாகப் பொழுது போய்க்கொண்டிருந்தது. இவையெல்லாம் நன்னம்பிக்கை தரும் விஷயங்கள்.

என் ஐஸி அமைப்பில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாறுதல்கள், முன்னெடுப்புகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். சீனாவிலிருந்து வரும் டிடிஓஎஸ் குசுக்கள் போன்ற சில்லறைத்தனங்களையும் பற்றி மட்டுமில்லாமல், டேடா துணுக்குகள் எப்படிச் சேகரம் செய்யப்படுகின்றன, அதன் அடுக்குமுறை வ்டிவமைப்பு (டேக்ஸானமி, ஆன்டாலஜி என…) எப்படி, டேடா பாதுகாப்பு எனப் பல விஷயங்கள் அடிபட்டன… ஏப்ரலில் இது குறித்து சில மேம்பாடுகள் விவாதிக்கப்பட இருக்கின்றன – நானுமேகூட அந்த உரையாடலுக்குச் செல்கிறேன்.

எதற்கு இதையெல்லாம் சொல்லவருகிறேன் என்றால் – நம் மத்திய அரசில் விற்பன்னர்கள் இருக்கிறார்கள், முணைப்பும் நம்பிக்கையும் மிக்கவர்கள் இருக்கிறார்கள்; இவர்களில் பெரும்பாலும் இளரத்தம், ஆக ஆர்வமும் சக்தியும் மிக்கவர்கள் – கண்மணிகள் தொடர்ந்து உழைக்கிறார்கள் – தோஹாடாக்கீஸ் வகையறாக்கள் போலல்லாமல்… அற்பத்தனமில்லாமல்…

நம் மத்திய அரசு — இப்போது திறமையும் செயலூக்கமும் நிறைந்தவர்களால் நிர்வகிக்கப்படவும் வழிகாட்டப்படவும் வாய்த்திருப்பது நம் நல்லூழ்.

… இரண்டு நாட்களுக்குப் பின் ஒத்திசைவு மின்னஞ்சற்பெட்டியைத் திறந்தால் – இந்த ட்வீட் உளறலை எனக்கு அனுப்பிவைத்திருக்கிறான்,  நண்ப சாவுக்கெராக்கி. ரொம்ப முக்கியம்டா! (டேய் வொனக்கு இந்த ட்வீட்ட பட்ச்சிட்டு அவ்ளோ எரிச்சலாயிருந்திச்சின்னா ஏண்டா  நாயே, நீயே இந்தமாறீ கள்தேங்கள எதித்திக்கினு பேசக்கூடாது? நீயும் கத்தார்லதானடா இருக்கே!  அங்கன பொத்திக்கினு நண்பனா இர்ந்திட்டு என்னப்போயி உசுப்பி விட்றியே!  உர்ப்ப்டுவியாடா சோமாறீ!)

அலுப்பும் கோபமும் என்னை மேற்கண்ட பதிவை எழுதவைத்தன.  அவ்வளவுதான்!

**** வாழ்க தகூபிக! வளர்க தகூபிக!! ****
***** ஒழிக முட்டாக்கூவான்கள்! *****

ஆமென்.

5 Responses to “தோஹாடாக்கீஸ், தொழில்முறை ட்விட்டர் உளறலாளச் சான்றோர், முழு-தமிழகச் சேற்றுக்கு ஒரு பிடிச் சேறு பதம்…”

  1. Ramuk Says:

    I am not sure, if you had an opportunity to read thishttp://viduthalai.in/headline/139860-2017-03-19-11-02-23.html


    • This Viduthalai is indeed shitty. Just like the shitheads that run it.

      This Harendra Kosia was dismissed from NTC for graft – after a due, legal admin process; but then, after he got out – he complained against the officials who dismissed him, with the CVC.

      Now he is playing the card, much like how this scumbag Karnan (of cal high court) is doing. Dont bother about these things.

      I was actually at the Bhikaji Cama Place office of CVC two weeks back – there is NOTHING getting fudged there. Believe me.

      Viduthalai is LYING, and I do not blame it on its normal cluelessness, sorry.

      __r.

  2. ravi Says:

    ram, leave it, he is yet another ranter from tamilnadu..

  3. பொன்.முத்துக்குமார் Says:

    இந்த மாதிரி மூளையில்லா முண்டங்கள்ளாம் எந்த தைரியத்துல “த்தூ”-ல்லாம் சொல்லுதுன்னு தெரியலை. மொதல்ல இத கண்ணாடி முன்னாடி நின்னு (அல்லது மல்லாந்து படுத்து) சொல்லி / செஞ்சி-க்கணும்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s