எப்படித்தான் தேடித்தேடி இந்த மாதிரி அரைகுறைகளைப் பிடிக்கிறார்களோ இந்த ஊடகப்பேடிகள்! Read the rest of this entry »

மகாமகோ பார்ஃபிட் (Derek Parfit) போன்றவர்களைப் பற்றி ஒரு நூறு வார்த்தைகளையாவது தமிழில் எழுதவேண்டும், அவர்கள் எழுதி நான் படித்துமுள்ள சிலபல புத்தகங்களைப் பற்றி, கட்டுரைகள் குறித்து என் மீதான அவற்றின் தாக்கத்தைக் குறித்து, என் விசனங்களையும் விகசிப்புகளையும் விவரித்து – குறைந்த பட்சம் ஒருகோடிட்டாவது காண்பிக்கவேண்டும் எனப் பலமுறை ஆரம்பித்து அப்பதிவுகளை நட்டாற்றில் விட்டிருக்கிறேன்; சுமார் 300க்கு மேம்பட்ட வரைவுப்பதிவுகள் இப்படிக் குறைப்பிரசவ ரீதியில் இருக்கின்றன! (தப்பித்தீர்கள்!) Read the rest of this entry »

ஆனால்… புறநானூற்றுக் காலத்தில் ஆனை கட்டிப் போரடித்த தமிழனுக்கு, மொழிப்போர் இனப்போர் தன்மானப்போர் சுயமரியாதைப்போர் ஈழப்போர் அக்கப்போர் எனப் போர்பல கண்ட மரத்தமிழனுக்கு, நீளநீள மெகாமகோ தொலைக்காட்சி ஸீரியல்களையும் வைத்து தொழில் நுட்ப ரீதியாகவும் தொடர்ந்து போரடிக்கும் தமிழனுக்கு – இந்தப் போர் எம்மாத்திரம்! ஹ்.

Read the rest of this entry »

மன்னிக்கவும். கருணாநிதி அவர்கள் 1960களிலேயே உலகம் போற்றும் கடற்புல உயிரியல் ஆராய்ச்சியாளராக இருந்திருக்கிறார்! மிக முக்கியமாக, கடற்சார் பாலூட்டி உயிரினங்களைப் பற்றி அசத்தவைக்கும் அதியுன்னத அகழ்வாராய்ச்சிகளைச் செய்து நம் செல்ல திராவிட இனமானத்தை விண்ணோக்கிச் செலுத்தியிருக்கிறார்! சுயமரியாதையைச் சூடுபறக்கப் பரப்பியிருக்கிறார்!! பகுத்தறிவைத் தொகுத்தளித்திருக்கிறார்!!! இதற்காகவே இவருக்கு ஆருடத்துக்கான 2017 நொபெல் பரிசு கொடுக்கப்படவிருக்கிறது என்பதைத் தரணி அறியும்! ஆனால், கேடுகெட்ட நமக்குத்தான் இவருடைய மேதமையைச் சரியாக மதிக்கத் தெரியவில்லை. ஹ்ம்ம்… Read the rest of this entry »

#1. திராவிட இயக்கத் தோழர்கள் ஒருவரிடம் கூட, ஈவெரா அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
#2. ஈவெரா அவர்களைக் சுற்றி இருந்த பல திராவிட இயக்கத் தோழர்கள், களவாணிகள்.

Read the rest of this entry »

பேராசிரியர் + வரலாற்றாளர் + மொழிபெயர்ப்பாளர் + ‘த மண்டு’ தினசரியின் ஆஸ்தான அறிவுஜீவிகளில் ஒருவர் + ஆ + அய்யய்யோ புகழ் — ஆஇரா வேங்கடாசலபதி அவர்களுடைய வீரதீரப் பராக்கிரமங்களை ஏகத்துக்கும் ‘புகழ்கிற’ சந்தடி சாக்கில், அவருடைய ‘த மண்டு’ தினசரிக் கட்டுரைகளைச் சிலாகிக்கிற போதெல்லாம் — அவர் பணி(!) புரிந்துகொண்டிருக்கும் MIDS நிறுவனத்தையும், நான் என்னவோ தேவையேயில்லாமல் ‘புகழ்கிறேன்’ என என் கிழட்டு நண்பர் ஒருவர் (80+) பிலாக்கணம் வைத்திருக்கிறார் – மேலும் கெட்டவார்த்தைகளை அளவுக்கதிகமாக உபயோகிக்கிறேன் ;-) என்றும் அபாண்டமாகப் பொய் சொல்கிறார்.

கிழவனாரின் அபாண்டத்தைக் கடாசிவிட்டு – பாதிக் கிழக்கோட்டானாகிய நானும் அவருடைய குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நம் பேராசிரியச் சலபதியாரின் அதிஅற்புதத் திறமைக்கு, அவர் பணிபுரியுமிடம்  MIDS எப்படி ஜவாப்தாரியாக முடியும், ஹ்ம்ம்? Read the rest of this entry »

பேலியோ டயட் மஹாத்மியம் குறித்த என் கடவுள் வாழ்த்துகளைப் (ஒன்று, இரண்டு) பற்றி நண்பர் வெங்கடேசன் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார்:

கடவுள் வாழ்த்து எல்லாம் நல்லா இருக்கு சார். மெயின் மேட்டருக்கு வாங்க. ஏன் பேலியோ உடல் நலத்திற்கு கேடுன்னு சொல்றீங்க? அறிவியல் தரவுகளோடு எழுதுங்க சார்.

Read the rest of this entry »

இந்தப் பேலியோ ‘மேல்மாடி காலி’களின் அலப்பரையும் வெறியும் தாங்கவேமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது!

“திருப்பூரில் உணவு இல்லன்னா கல்யாணத்தில் சாப்பிடமட்டோம்னு 1000 பேர் சொன்னதால் திருமணவிருந்தில் பேலியோ உனவு பரிமாறப்பட்டது”

Read the rest of this entry »

பொதுவாகவே, நம் தங்கத் தமிழ் நாட்டில், திராவிடத்தின் ‘வீறு’ குறித்த பிரமைகள் அதிகம்.

Read the rest of this entry »

நேர்கோணல் மூலமாகப் பெறப்பட்ட அய்யா திருமாவளவன் அவர்களுடைய கருத்துகள் சிலவற்றை  ‘கழித்துக்கட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் காட்டுவது போகாத ஊருக்கு வழி’ (=‘Demonetisation is a road to nowhere’) என்ற தலைப்பில், என்னுடைய பிரத்தியேகச் செல்லமான ‘த மண்டு’ பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.

Read the rest of this entry »

புரட்சிகர பென்ஸில் ஃபேக்டரி அவர்கள், போய்ச் சேர்ந்துவிட்டார். அவரது உடல், அவர் விருப்பப்படியே, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்பதை ‘த மண்டு‘ தினசரி மூலம் இன்று அறிந்துகொண்டேன். ஒர்ரே அந்தக்கால நினைவுகள்…

screenshot-from-2016-12-03-083749 Read the rest of this entry »

உப்புமா செய்யலாம்தான். ஆனால் உப்புமா மட்டுமேதான் செய்யவேண்டுமென்றில்லை. இணைய உப்புமா கிண்டப்படுவதையும் கிண்டல் செய்யவேண்டியதுதான்.

Read the rest of this entry »

!

November 28, 2016

screenshot-from-2016-11-28-205739

:-( என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்…

Read the rest of this entry »

இப்பூவலகம் முட்டாக்கூவான்களால் நிரப்பப்பட்டுள்ளது என்ற பிரத்யட்ச உண்மை அனைவரும் அறிந்ததுதான். ஆகவே என்னுடைய கேள்வி: எப்படா பக்கத்து அன்ட்ரொமெடா-என்ஜிசி224 கேலக்ஸீக்கு மெட்ரொ ரெய்லு விடப்போறீங்க?

தாங்க மிடியலயேடா இங்க… பேலியோ = மண்டேல-மேல்மாடீ-காலியோ அப்டீன்னிட்டு ரவுன்டு கட்டிக்கினு மொத்தறானுங்களேடா இங்க, யென்னோட சகஅறிவிலிங்க… ரெண்டே மாசத்துல மூணு பேலியோ முட்டாக்கூவான்ங்களண்ட பேச்சு கேக்கவேண்டி வந்துட்சேடா! :-(

Read the rest of this entry »

ஃப்ரிட்ஹொஃப் கப்ரா அவர்களின் மிகப் பிரபலமான  ‘இயற்பியலின் தாவோ’ (The Tao of Physics – 1975?) + ‘திருப்புமுனை’ (The Turning Point) போன்ற பிரமிக்கவைக்கும் அரைவேக்காட்டுத்தனங்களை விட, 1995 வாக்கில் வெளிவந்த அவருடைய ‘உயிரின் வலைப்பின்னல்’ (The Web of Life – A New Scientific Understanding of Living Systems) எனும் முக்கியமான புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஆக்கங்களில் ஒன்று. பின்னதின் மூலம், கப்ரா அவர்கள், தான் முன்னவற்றை எழுதிய படுபாவத்தைத் தொலைத்துவிட்டார் எனவே நினைக்கிறேன். Read the rest of this entry »

um… I meant ‘boot out’ :-(

Read the rest of this entry »

நம்மைப் என்னைப் போன்ற கூறுகெட்ட முட்டாக்கூ சோம்பேறி வாசகர்கள் – கதிமோட்சமேயில்லாமல் இந்தக் கோமகன்களின் வால்களைப் பிடித்து –  ஆராதித்துக்கொண்டும், ஆமோதித்துக்கொண்டும், கொம்புசீவி விட்டுக்கொண்டும் அமோகமாக அலைவதுதான்; எனக்கு இதில் சந்தேகமேயில்லை! :-( தேவையா இது? :-(

இது ஒரு முழுநீள, சமன நிலையற்ற பிலாக்கணம்; பொறுமையாகப் படிக்கவும் – அல்லது வழக்கம்போல ஓடவும். நன்றி! Mea Culpa. :-((

Read the rest of this entry »

* நிக, கடத வியாழகிழமை, செனை ஐஐடியில, எனருமை எரா ஒரு ‘கக கசடற’ வொலக எலகிய பேருரை அளிதிருகவேடு. அதகு செறவக யாராவது இனமு உயிரோடு இருதா தயவுசெது வெ. ராமசாமிய உடனடியாக போகால ரீதியி தொடபு கொளவு.

Read the rest of this entry »

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்திவிடுகிறேன்: எனக்கு, தேவரடியார்கள்  எனும் ஸெக்ஸ் பணி செய்பவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர்களுடைய சமூகப் பங்களிப்பையும், மனோதத்துவ ரீதியான சிடுக்கல் பிரச்சினைகளைக் கட்டவிழ்க்கும் தன்மையையும், இயற்கையான உணர்ச்சிகளுக்கு வடிகால் தரும் பண்பையும் மதிக்கிறேன் – அதாவது, அவர்கள் செய்வதும் உரிய சம்பளத்தை எதிர்பார்க்கும் ஒரு பணியே என்பதற்கு அப்பாற்பட்டும்கூட.
Read the rest of this entry »
அதிர்ச்சியளிக்கும் செய்தி – உலகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் சந்தேகாஸ்பதமான முறையில் மரணம்! 

இதற்கும் இஸ்லாமியத் தீவிரவாதம்தான் காரணமாகச் சொல்லப்படுமா, அல்லது மிகச்சரியாகவே, உலகத்திலிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குப் பின்னாலும் இருக்கும் ஹிந்துத்துவாதான்,  அதுவும் குறிப்பாக, நரேந்திரமோதிதான்  காரணம் என அறியப்படுமா?

மேலே (அதாவது கீழே) படித்தால், உங்களுக்கு இந்த விஷயத்தில் ஒரு தெளிவு வரலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்!

Read the rest of this entry »