பேலியோ டயட் எழவு – சில மேலதிகக் குறிப்புகள்

December 15, 2016

பேலியோ டயட் மஹாத்மியம் குறித்த என் கடவுள் வாழ்த்துகளைப் (ஒன்று, இரண்டு) பற்றி நண்பர் வெங்கடேசன் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார்:

கடவுள் வாழ்த்து எல்லாம் நல்லா இருக்கு சார். மெயின் மேட்டருக்கு வாங்க. ஏன் பேலியோ உடல் நலத்திற்கு கேடுன்னு சொல்றீங்க? அறிவியல் தரவுகளோடு எழுதுங்க சார்.

யோவ் வேங்கடேசு,

பேலியோ எழவு என்பது சர்வ நிச்சயமாக, உடல் நலத்துக்குக் கேடு மட்டுமே எனச் சொல்லவரவில்லை, சொல்லவில்லை. ஆனால், கீழ்கண்டவற்றைச் சுற்றித்தான் விரிவாகச் சொல்லப்போகிறேன் – ஆனால் எப்போது இது நடக்கும் என்று இப்போதைக்கு என்னால் சொல்லமுடியாது. ஏனெனில் அக்கப்போர் (=கடவுள் வாழ்த்து) சண்டைகள் போடுவது கொஞ்சம் சுலபம்; அறிவியல் தரவெழவுகளுடன் ஒரு ஸீரியஸ் கட்டுரை எழுவதென்பது அப்படியல்ல. நானும் இப்போது கொஞ்சம் நேரக் கெடுபிடியில் இருக்கிறேன்.

ஆகவே.

1. பேலியோ எழவின் சில கூறுகள் (=வெள்ளைச் சர்க்கரையை ஒதுக்குதல்)  ஒப்புக்கொள்ளக் கூடியவையே – இந்தக் கூறுகளும் எனக்குத் தெரிந்தே சுமார் 170 வருடங்களாகப் பலர் (நம் காந்தி உட்பட) சொல்லிக்கொண்டு வந்திருப்பவையே. ஆனால், அப்பலர், நம் பேலியோ தீவிரவாதிகள் போலப் பொய் சொல்லவில்லை.

2. எந்த எழவையும் அளவோடு செய்தால், அது அமிர்தம் – இல்லாவிடில் அது திராவிடம்.

3. உலகப் பிரச்சினைகள் அனைத்துக்கும் ஒரே விடைதான் என வெறி பிடித்து அலைபவர்கள் ஜிஹாதிகள் தவிர வேறெவர்?

4. ‘பேலியோ’ எழவென்பது  பல உணவுவழிகளில்/முறைமைகளில் ஒரு வழி, அவ்வளவுதான்; அதுவும் முழுமையானதொன்றல்ல அது.

5. பேலியோலிதிக் (கற்காலம்) சமயங்களில் அக்கால ‘மனிதர்கள்’ இந்த எழவுகளைச் சாப்பிட்டரர்கள் அல்லது சாப்பிடவில்லை என இந்த இக்காலக் கோமாளிகள் சொல்வது 90% பம்மாத்து.

6. அரிசி வகை புற்களின் விதைகளை (ஸீரியல்கள்) அக்காலத்தில் கற்கால மனிதர்கள் சாப்பிடவேயில்லை என்பது நகைக்கத்தக்க உளறல். அதேபோல மிருகக் கொழுப்பையும் மாமிசத்தையும் அவர்கள் அபரிமிதமாக உண்டார்கள் என்பதும் ஒரு கந்தறகோளப் புரிதல்.

7. ஆகவே, இந்தப் புதுமோஸ்தர் ஃபேஷன் – ‘பேலியோ’ என அழைக்கப்படுவது ஒரு மிகப்பெரிய மோசடி. மேலும் பேலியோ (=paleo)என்றால் பழைய என்று மட்டுமே அர்த்தம் விரியும்.  கற்காலம் மண்ணாங்கட்டிக்காலம் தெருப்புழுதிக்காலம் என்றெல்லாம் விரியாது. lithosஎன்றால் கல் தொடர்பானது. paleolithicஎன்றால் கற்காலத்திய எனப் பொருள்.

8. மேலும் இந்த பேலியோலிதிக் காலம் என்பது சுமார் 2, 600, 000  வருடங்கள் முன்பிலிருந்து சுமார் 8000 வருடங்கள் முன்வரை – இடைப்பட்ட  காலம். இந்த நெடிய காலகட்டத்தில் பலப்பல விதமான உணவுகள் இருந்திருக்கின்றன. அவையும் இடத்துக்கு இடம் மாறுபட்டிருக்கின்றன. நிலைமை இம்மாதிரி இருந்திருக்கையிலே, பேலியோலிதிக் காலம் முழுவதும் ஓரேமாதிரி உணவுதான் இருந்ததென்றால், அது எவ்வளவு அபத்தம்? (நம் சாம்பாரையே எடுத்துக்கொள்ளுங்கள் – 400  வருடங்களுக்கு முன்பு அது இல்லை. நம் செல்ல இட்லி கூட, கண்டுபிடிக்கப்பட்டு 800 வருடங்கள்கூட ஆகவில்லை; உணவு வகைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. நாம் இப்போது சாப்பிடும் காய்கறி வகைகளுக்கும், சுமார் 10000 ஆண்டுகளுக்கு முந்தைய அவற்றின் மூலங்களுக்கும் சம்பந்தமேயில்லை – அந்த் அளவுக்கு நிறத்திலும், அளவிலும், சத்திலும் ஏகோபித்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன!)

9. அக்காலத்தில் ‘வேட்டை’ என்பது எப்படி இருந்திருக்கும், மக்கட்தொகை என்ன, புவியியற்கூறுகள் எப்படி இருந்திருக்கும் – அபரிமிதமாக மாமிசம் புசிக்கக் கிடைத்திருக்குமா என்பதையெல்லாம் இந்த பேலியோஜிஹாதிகள் கருத்திலேயே கொள்ளவில்லை.

10. இயல்பான உடலுழைப்பை நம் சமூகத்துக்கு-சுற்றுச்சூழலுக்குக் கொடுப்பதற்கு மாறாக, வலுக்கட்டாயமாக ஜிம்களுக்குச் சென்று அதனையும் ஒப்பேற்ற முயலும் மூன்றாம்தர முட்டாட்கள் தாம் இந்தப் பேலியோ வெறியர்கள்…  கற்கால மனிதர்களுக்கு வீங்கிய பைஸெப்ஸ் (biceps) ட்ரைஸெப்ஸ் (triceps) சிக்ஸ் பேக் அப்ஸ் (6pack abs)எல்லாம் இருந்ததாக அகழ்வாராய்ச்சியில் இல்லை. எனக்குத் தெரிந்த அளவில் அவர்கள் ‘ஸெல்ஃபி’ எழவுகளை எடுத்து இணையத்தில் போட்டு மினுக்கிக்கொண்டதாகவும் இல்லை. மன்னிக்கவும்.

11. கற்கால ஆசாமிகள் திடகாத்திர பலபுஜவான்களாக இருந்தாகவெல்லாம் படுபீதியளிக்கும் அகழ்வாராய்ச்சிகள்  சொல்லவில்லை. அவைகள் எல்லாம் – சாதாரண மனிதர்களைத் தான் சுட்டுகின்றன.

12. நம் உடற்கூறு இயங்கும் விதம், பற்களின் தன்மை, பரிணாம வளர்ச்சி போன்ற பலவற்றையும் சுத்தமாகக் கருத்தில் கொள்ளாமல் அட்ச்சுவுடப்படுவது இந்த ‘பேலியோ’ அபுரிதல். அகழ்வாராய்ச்சி – துறைசார் விற்பன்னர்களின் / நிபுணர்களின் சமனமான கருத்துகள் போன்றவற்றையே விடுங்கள்.

13. பேலியோவுக்காக அட்ச்சுவுடப்படும் பிரத்யட்ச தரவுகளில் 1) உடற் பருமன் குறைதல் 2) பலம் அதிகரித்தல் 3) ஆரோக்கியமாக உணர்தல் போன்றவை – பலப்பல பிற காரணங்களாலும் ஏற்படுபவைதான்…

14. மதவெறி அளவுக்கு இந்த paliomyelitis வியாதி பீடித்திருப்பது சோகம்.

…ஆகவே, சிறிது பொறுத்திருங்கள்; இன்னொரு ஃபேஷன் வந்தவுடன் இந்த பேலியோ வெறியர்களெல்லாம் இதனை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.

அடுத்த ஃபேஷனுக்கான என் பரிந்துரை – ஜாலியோ.

ஜாலியோ முறையில் கிடைத்ததையெல்லாம் குற்ற உணர்ச்சி இல்லாமல் ஜாலிலோ ஜிம்கானா எனச் சாப்பிடலாம். வாழ்க்கையை நாம் இறக்கும் வரை அனுபவிக்கலாம்.

திருப்பூர் கல்யாணங்களில் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என ஜமாய்க்கலாம்.

அதற்குப் பின் வரும் உணவு ஃபேஷன்: ஜமாயோ!

நன்றி.

பின்குறிப்பு: அவசர வேலையிருக்கிறது. என் வீட்டு வாசலில் கட்டிப்போட்டிருக்கும் நாயின் பின்னங்கால்களைச் சாப்பிடவேண்டும். கற்கால மனிதனைப் போல ஒரு ஈட்டி(!) செய்து வைத்திருக்கிறேன்; அதை வைத்துத்தான் அதனை வேட்டையாடப் போகிறேன். நானும் பேலியோ டயட் மஹாத்மியத்துக்கு மாறி விட்டேன். மிக்க நன்றி.

பின்பின் குறிப்பு: நேற்று அதே நாயை வேட்டையாடி முன்னங்கால்கால்களைச் சாப்பிட்டேன். அதற்காக, ஏன் அது தத்தித்தத்தி நடக்கவேண்டும். இதன் பின்னாலுள்ள பேலியோ அறிவியலை நான் புரிந்துகொள்ளவேண்டும்.

பின்பின்பின்குறிப்பு: கால்களெல்லாம் வெட்டப்பட்டால் நாய்களுக்கு நடக்கமுடியாதாமே? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஃபேஸ்புக் ட்விட்டர் பேலியோ விற்பன்னர்களிடம் இதன் அறிவியல் பின்புலம் பற்றிக் கேட்டுக்கொள்ளவேண்டும்.

பேலியோ உணவு சாப்பிட்டு வளர்ந்த என் மூளைக்கே இந்த விஷயங்கள் புரியவில்லை என்றால், பாவம் நீங்கள், எப்படித்தான் இப்படிப்பட்ட உண்மைகளை உணரப்போகிறீர்களோ, தெரியவில்லை.

இப்போதைக்கு இவ்வளவுதான். மறுபடியும், மறுபடியும் நன்றி.

21 Responses to “பேலியோ டயட் எழவு – சில மேலதிகக் குறிப்புகள்”


 1. Dear Ram,
  This my First comment to your post. My pet accidentally had access to NIYANDAR SELVAM twit. Then it disappeared / ran away from my home.

  Thanks
  Navin

  (PS: I am hefty person )


  • Dear Navin,

   Thanks! But about the Neander Selvam kinda folks – I would only say that ‘Forgive them my Lord, they know NAUGHT what they are eating.’

   Actually, I do not know anything about this chap apart from a few tweets of his and some of his facebook kinda posts that somefriend fwded to me.

   He appears to be a well meaning guy, but has a brand of conversion fervour, that I am not able to relate to, that’s all!

   Thanks!

 2. K.Muthuramakrishnan Says:

  “‘குண்டாக இருக்கும் சிங்கத்தையோ, புலியையோ, ஓநாயையையோ யாரும் பார்த்ததுண்டா? இவை எல்லாம் இறைச்சியை மட்டுமே சாப்பிடுகின்றன. குண்டாக இருப்பவை எல்லாம் முழுக்க முழுக்க தாவர உணவு மட்டும் உண்ணும் யானை, காண்டாமிருகம், நீர்யானை போன்ற மிருகங்களே’ என்றார் ஹார்வி.”
  மேற்படி கருத்தாக்கம் பேலியோ குருஜி திரு.நியாண்டர் செல்வம் அவர்களுடைய கட்டுரை தின்மணி நாளிதழ் 12 ஜூலை 2015 ல் வெளியானதில் உள்ள‌து.
  என‌து கேள்வி: தாவர உணவு மட்டுமே உண்ணும் குதிரைகள், மான்கள், ஆடுகள்,காளைகள் எல்லாம் குண்டாக இல்லையே.எனவே தாவர உணவுதான்
  உடலைக் குண்டாக்குகிறது என்பது எப்படி சரியாகும்.?


  • :-)

   அய்யா, செல்வம் அவர்களின் கட்டுரையின் சுட்டியை அனுப்பமுடியுமா?

   இவர் அட்ச்சுவுடுவதற்கு ஒரு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. புற்றீசல் போலக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள் இந்த யுவகிருஷ்ணாக்கள்! :-(


 3. நியாண்டர் செல்வன் அவர்களின் தொடர் கட்டுரைகள். http://www.yarl.com/forum3/topic/159818-பேலியோ-டயட்/

  தினமணி web page load ஆவதற்குள் தாவு தீர்ந்துவிடும் என்பதால் இந்த லின்க்.

   • karthi Says:

    சுவாமி, நியாண்டர் செல்வன் அவர்களின் தொடர் கட்டுரைகள் முழுதும் படித்தீரா! OMG. !! சுருக்கிக் கொடுங்களேன் , தங்களுக்கு கூடுதல் புண்ணியமாகட்டும்


   • அய்யா!

    தாங்கள் என் நலம்விரும்பியா என்றே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது! :-)

    நான் – இப்படிப்பட்ட கருமாந்திரங்களையெல்லாம் படிக்கும்படிக்கு உங்கள்மீது அழுத்தம் கொடுக்கிறேனா?

    வருத்தத்துடன்,

    பாவப்பட்ட ஜீவன், வெ. ராமசாமி


 4. // He appears to be a well meaning guy, but has a brand of conversion fervour
  உன்மைதான்

  //வெள்ளைச் சர்க்கரைக்கு நிகராக அரிசியும் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகரிக்கவே செய்கிறது // – “பேலியோ டயட்” கட்டுரைத் தொடரில்

  வெள்ளைச்சீனி, மைதா, அரிசி , சிறுதானியங்கள் ஆகிய உணவுபொருட்கள் எல்லாமே சாப்பிட்டால் இரத்ததில் ஏற்றும் சர்க்கரையின் அளவு ஒன்றுதான் என்பதே நியாண்டர் செல்வனின் கருத்து. அது ஒரு மிகைபடுத்தல்தான்.

  பொதுவாக நம் நாட்டு உணவுகளில் protein-to-carbohydrate விகிதம் குறைவு மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது. அதாவது புரதம் குறைவாகவும், மாவுச்சத்து அதிகமாகவும்.

  நம் சைவ உணவுகளில் பால், பருப்புகளிலும் protein-to-carbohydrate விகிதம் குறைவு. தமிழ்நாட்டில் அசைவ உணவு உண்பவர்களுக்கும் மாமிசம் என்பது சோற்றுக்கு தொட்டுக்கொள்வதுதான். we have craving for rice may be due to sudden rise and fall of insulin level after eating rice.

  மேலும் பருப்பு, பயறு, கொட்டை(nuts !) வகைகள்; காய்கள்; பழங்கள்; தானியங்கள் ஆகியவற்றை விட மாமிசம், மீன், ஆடு மாடுகளின் ஈரல் போன்ற உள்ளுறுப்புகள், முட்டை ஆகியவற்றில் protein, minerals, vitamins சத்துகளின் bio availability , density அதிகம் உள்ளது.

  எனவே மாமிச வகைகளை உணவில் அதிகரித்து , தானிய பருப்பு வகைகளை குறைத்து உண்பது ஆரோக்கியமானதுதான்.

 5. Prabhu Raja Says:

  I think he should change him name to “neanderthal selvam”, the new converts see others like shit eaters, it’s too difficult to be around them.


  • Yeah, Prabhu!

   I feel that all these bravado spouting fellas need to be packed off to some sub-saharan, sahel like country and THEN be advised pursue their ‘paleo’ living models. Let us see for how long they would survive with their much pontificated about, but REAL ‘paleo’ *&^$# lifestyles.

   The fact is that, – ALL these goddam paleo evangelicals 1) Drive around in cars 2) Buy their meat in shops 3) Do NOT grow any thing except possibly their bodily hair 4) Flex their muscles in lame Gyms etc etc… this hypocrisy listing is endless.

   This kinda selective idiocy tickles me. May be it is merely double standards, strutting about like virile peacocks.

   Truly and verily – these fellas are at best, Jokers. At worst, they are charlatans.

   • Prabhu Raja Says:

    You’re right, they are just bunch of bad jokers, but as a whole I can see this as a psychological support system, just like any random Amway, RMP guys, Jehovah witnesses, etc.

    Fitness, money, religion all are just reasons for them, the real reason is they just need a cult to follow just cannot operate independently.

 6. Anonymous Says:

  Caveman diet revealed: http://www.cbc.ca/news/technology/caveman-raw-toothpicks-1.3898878

  Few quotes from the article: If you’re trying to follow a diet similar to what a caveman ate roughly 1.2 million years ago, you may want to add uncooked grass and meat to your routine. From the tartar samples, archeologists found various fibres including plants, animal tissues, a scale from a butterfly’s wing and a fragment of an insect leg.

  இந்த பேலியோ பதர்களும் சமைக்காத புல்லையும் மாமிசத்தையும் சாப்பிட்டு தொப்பையை குறைக்கட்டும் :)

 7. Venkatesan Says:

  கற்கால மனிதர்கள் என்ன உண்டார்கள் என்ற ஆராய்ச்சியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொதுவாகவே கணிதவியல் மாணவன் என்ற முறையில், எனக்கு இந்த வரலாற்று ஆய்வுகள் மீதே எப்போதும் சந்தேகம் உண்டு. எப்படி நாலஞ்சு பானைச் சில்லு, சுவற்றுக் கிறுக்கல்கள், பாடல் வரிகள் போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆணித்தரமாக அடிச்சு விடுகிறார்கள் என்ற ரீதியில். இந்த வாதத்தை விட்டு விடுவோம்.

  அதே போல ஜிம்மில் நிறைய பேர் டிரட்மில் மீது ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் சைக்கிள் குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனமாக சுருங்கிவிட்டது. இதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.

  பேஸ்புக்கு வெளியே பேலியோ மனிதர் யாரையும் எனக்குத் தெரியாது (தமிழ்நாட்டுக்கு வெளியே வசிப்பதனால் இருக்கலாம்). அந்த வகையில் ஜிகாதி பற்றி நேரடி அனுபவம் இல்லை. மதவெறி என்ற அடிப்படையில் பேலியோ x வெஜிடேரியன்ஸ் எப்படி ஒப்பிடுவீர்கள்? இரண்டாமவர்கள் கூட ரொம்ப ஸ்ட்ரிக்ட். கல்யாணத்தில், விமானப் பயணத்தில் என தங்கள் உணவு முக்கியம் என்று சொல்கிறார்கள். சுத்த சைவ ஓட்டல்கள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  முக்கியமாக சீரியல்ஸ், பருப்பு வகைகள் உடலுக்கு கேடானவையா? நிலக்கடலை பாவமானதா? LCHF எப்படி? LCHF++ = பேலியோ எப்படி? நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.

 8. Anonymous Says:

  //அறிவியல் தரவுகளோடு எழுதுங்க சார்
  //கற்கால மனிதர்கள் என்ன உண்டார்கள் என்ற ஆராய்ச்சியில் எனக்கு நம்பிக்கை இல்லை.

  முரணாக இருக்கிறதே. சரி விடுங்கள்.

  //பேஸ்புக்கு வெளியே பேலியோ மனிதர் யாரையும் எனக்குத் தெரியாது (தமிழ்நாட்டுக்கு வெளியே வசிப்பதனால் இருக்கலாம்). அந்த வகையில் ஜிகாதி பற்றி நேரடி அனுபவம் இல்லை.

  ஜிஹாதிக்கும் தமிழ்நாட்டுக்கு வெளியே வெளியே வசிப்பதற்கும் என்ன சம்பந்தம்? சரி இதையும் விட்டு விடுவோம்.

  1. //முக்கியமாக சீரியல்ஸ், பருப்பு வகைகள் உடலுக்கு கேடானவையா? நிலக்கடலை பாவமானதா? – இந்த அளவுக்கு யோசித்தால் மண்டைதான் வெடிக்கும்.எந்த உணவையும் அளவோடு உண்டு முடிந்த வரை எந்த இடத்திற்கும் நடந்து சென்றாலே போதும்.

  2. பேலியோ, கலிலியோ, டிகாப்ரியோ என்று ஆராயாமல் நம் வீட்டிலேயே உள்ள நல்ல ஆரோகியத்துடன் கூடிய பெரியவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்று தெரிந்து கொள்வது நலம். அதற்கும் மேலாக உடம்பை காப்பாற்ற பழைய தமிழ் நூல்களை படித்து பாருங்கள். உதாரணம் திருமூலரின் திருமந்திரம் – அட்டாங்க யோகம்.

  இதற்கும் மேல் இந்த விஷயத்தில் விவாதிக்கப் போவது இல்லை.

  • Venkatesan Says:

   // இதற்கும் மேல் இந்த விஷயத்தில் விவாதிக்கப் போவது இல்லை.

   சரி உடுங்க.

 9. karthi Says:

  நம் மக்களுக்கு ரொம்ப பிடிக்க ஒரு காரணம் , நல்லா தீனி திங்க ஒரு வாய்ப்பு. பேலியோ – டையட் என்பதை விட , வேட்டை என்பதே சரி.

  நான் ஒரு யோகா கிளாஸ் செய்ததில் 10kg மேல் எடை குறைந்தது (எதிர்பார்க்கவில்லை). அதை சொன்னால் ‘ம்’ போட்டு கொண்டு கடந்து விடுவார்கள்.


 10. திரு.பா.ராகவன் எழுதிய ‘வெஜ் பேலியோ’ என்ற கட்டுரையை இப்போதுதான் படித்தேன்.
  அதன் சுட்டி இதோ:
  https://othisaivu.wordpress.com/2016/12/15/post-687/

 11. bmniac Says:

  Michael Pollan is a respected food writer who often writes in NY times. He is very knowledgeable and sensible. (I had to experiment with diets as I had a massive heart attack about 18 years ago and learnt to survive without any intervention including medication except for occasional aspirin and a high fibre largely plant diet. And had to learn a great deal about food)
  Pl see http://grist.org/food/michael-pollan-explains-whats-wrong-with-the-paleo-diet/ and
  http://www.prevention.com/weight-loss/weight-loss-tips/health-pros-and-cons-paleo-diet and
  http://www.health.com/weight-loss/how-bad-for-you-is-the-paleo-diet-really

  This ought to be enough to clear misconceptions.
  Incidentally from ancient times in India the tradition of meat eaters was as a rule to eat only the meat of wild hunted animals(lean meat) and rarely domesticated ones(high fat)

  Any more disputations is a waste of time


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s