மால்கம் ஆதிசேஷய்யா, திராவிடக் கதிரியக்கம், குறுந்தொகை, அரைவேக்காட்டுத்தனம், மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ், ஆகவே மீண்டும் சலபதி (ஸ்ஸ்ஸ்… தாங்கமுடியவில்லை!): சில துணுக்குறுதல்கள்
December 20, 2016
பேராசிரியர் + வரலாற்றாளர் + மொழிபெயர்ப்பாளர் + ‘த மண்டு’ தினசரியின் ஆஸ்தான அறிவுஜீவிகளில் ஒருவர் + ஆ + அய்யய்யோ புகழ் — ஆஇரா வேங்கடாசலபதி அவர்களுடைய வீரதீரப் பராக்கிரமங்களை ஏகத்துக்கும் ‘புகழ்கிற’ சந்தடி சாக்கில், அவருடைய ‘த மண்டு’ தினசரிக் கட்டுரைகளைச் சிலாகிக்கிற போதெல்லாம் — அவர் பணி(!) புரிந்துகொண்டிருக்கும் MIDS நிறுவனத்தையும், நான் என்னவோ தேவையேயில்லாமல் ‘புகழ்கிறேன்’ என என் கிழட்டு நண்பர் ஒருவர் (80+) பிலாக்கணம் வைத்திருக்கிறார் – மேலும் கெட்டவார்த்தைகளை அளவுக்கதிகமாக உபயோகிக்கிறேன் ;-) என்றும் அபாண்டமாகப் பொய் சொல்கிறார்.
கிழவனாரின் அபாண்டத்தைக் கடாசிவிட்டு – பாதிக் கிழக்கோட்டானாகிய நானும் அவருடைய குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நம் பேராசிரியச் சலபதியாரின் அதிஅற்புதத் திறமைக்கு, அவர் பணிபுரியுமிடம் MIDS எப்படி ஜவாப்தாரியாக முடியும், ஹ்ம்ம்?
-0-0-0-0-0-0-
ஆனால் – இன்னொரு தவறையும் தொடர்ந்து, ஏறக்குறைய 40 வருடங்களாகச் செய்துவருகிறேன்; அதுதான் படிக்கும் விஷயங்களைப் பற்றிக் குறிப்பெடுத்துக்கொள்வது.
…பழைய குப்பைகளெல்லாம் இப்போது படிக்கப் படிக்க, அவை மிகமிகச் சுவாரசியமாகவே இருக்கின்றன. அவற்றில் பல அக்கால திராவிட அற்பத்தனங்கள் சார்ந்த நகைக்கவைக்கும் வெட்கக்கேடுகள்! 8-)
கடந்த சில மாதங்களாகவே, என்னுடைய புத்தகங்களை, பழைய பத்திரிகைகளை எனக்குப் பிடித்தமான நண்பர்களுக்குத் தானம் தந்துகொண்டிருக்கிறேன். இதற்காக அலமாரி அலமாரியாகப் போய், பேய் போல வடிகட்டிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் என்னிடம் இருக்கும் புத்தகங்களை எல்லாம் நான் விரும்புபவன் என்றாலும், அவற்றில் பலவற்றை நான் – படிப்பதையே விடுங்கள், தொட்டுப் பார்த்துக்கூடப் பல வருடங்கள் ஆகிவிட்டன. நிலைமை இப்படி இருக்கையிலே, என்னிடம் அப்புத்தகக் குவியல்கள் இருப்பது சரியேயில்லை எனத் தோன்றுகிறது. பிறத்தியாரிடம் அவை இருந்தால், அவற்றை அவர்கள் விரும்பிப் படிப்பவர்களாக இருந்தால் அது ஒரு நல்லவிஷயம்தானே? மேலும், வீட்டிலும் இடம் ஒரு பெரிய பிரச்சினையாகிக்கொண்டு வருகிறது.
சரி… இப்படி நான் அல்லாடிக்கொண்டிருக்கையில், தூசி படிந்த பழம்புத்தக மூட்டை ஒன்றைத் தட்டிப் பார்த்தபோது – என்னுடைய 1971-73 வருடக் குறிப்பேடுகள் கையில் மாட்டின. அதிலிருந்துதான் இந்த மாணிக்கம்.
-0-0-0-0-0-0-
ஆனால் – அவர் திரும்பியது சென்னை மாநகருக்கு என்பதை நினைவில் நிறுத்தவும். அச்சமயம்தான் நம் பாவப்பட்ட தமிழகத்தை இந்த திராவிட அயோக்கியர்கள், அரசு யந்திரங்களின் மூலமாகவும் கபளீகரம் செய்ய ஆரம்பித்த காலகட்டம் என்பதையும்தான்.
இப்போது ‘ஒரு கமர்ஷியல் ப்ரேக்!’ – ஒரு குறுந்தொகை விளம்பரம்:
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?யானும் நீயும் எவ் வழி அறிதும்?செம் புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
… ஆக… ஆனானப்பட்ட மால்கம்மார் அவர்களும் திராவிடத்துடன் செம்புலப் பெயல் நீர் போலக் கலந்து அரைவேக்காட்டுமைய நீரோட்டத்தில் ஐக்கியமானார். (புணரப்படுவது, முயங்குவது போன்றவற்றையெல்லாம் ‘சாய்ஸ்’ எழவில் விட்டுவிடவும். நன்றி!)… 1971 வாக்கில், இந்த மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் எழவை ஆரம்பித்தார்.
மால்கம்மார் 1971ல் செய்தது முதற்கோணல். அந்தக் கோணல்மீது பயணம்செய்து சலபதியார் இன்றும் செய்துகொண்டிருப்பது முற்றும்கோணல்.
இந்தக் கோணல் எப்படி, எப்போது முற்றும்? ஹ்ம்ம்ம்??
-0-0-0-0-0-0-
டிஸெம்பர் 14, 1971 அன்று கருணாநிதி அவர்களின் தலைமையில் ஒரு விழா நடந்திருக்கிறது.
ஆம். நீங்கள் மிகச் சரியாகவே கணித்தீர்கள்; இது கருணாநிதி அவர்களுக்கு நடந்த ஒரு பாராட்டுவிழா; இதற்கு முகாந்திரம்: ‘கவியரங்கில் கலைஞர்’ நூல் வெளியீடு.
ஜால்ராக்களுக்குக் கேட்கவா வேண்டும், அதுவும் மிகைஜால்ராவின் வெட்கமற்ற விசிறியான கருணாநிதி அவர்களின் தலைமையில் அவருடைய புகழைப் பாடும் புத்தகமே வெளியிடப்படுகிறது என்றால்…
சரி, இதுவும் பரவாயில்லை. திராவிடச் சாக்கடைக் கலாச்சாரத்தில் இதுவும் சகஜமப்பா என விட்டுவிடலாம். ஆனால் இந்த அற்பத் துதிபாடி விழாவில், மேதகு மால்கம் ஆதிசேஷய்யா அவர்கள் பேசியதில் ஒரு சிறிய பகுதியைக் கீழே தருகிறேன்.
“…உலகத்திலுள்ள 500 நாடுகளின் தலைவர்களில் மூன்று பேர் மட்டுமே கவிஞர்கள், இலக்கியவாதிகளாக இருந்திருக்கிறார்கள்!
சீன நாட்டின் தலைவர் மாசேதுங், செனகல் நாட்டின் தலைவர் லியோபோல்ட் செதார் செங்கர், தமிழ் நாட்டின் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகிய மூவருமே அந்தப் பெரும்புகழுக்கு உரியவர்கள்!“
(ஆதாரம்: தமிழரசு பத்திரிகை; 16-12-71 இதழ் + அதே தேதியிட்ட முரசொலி குறிப்பு; என்னுடைய தூசிபடிந்த குறிப்புகளிலிருந்து எடுத்த விஷயம் இது. தவறேதேனும் இருந்தால் தாராளமாகத் திருத்திக்கொள்கிறேன்; நன்றி.)
கேவலம். :-( இப்படி முட்டாள்தனமாகவா பேசுவார் ஒரு மெத்தப்படித்த, லொயொலா கல்லூரி அறிவுஜீவி? லொயொலா கல்லூரி என்றாலே, இரண்டொரு விதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்டு, வடித்தெடுத்த அரைகுறைத்தனம்தானோ? அல்லது திராவிடத்தில் கல்வியாளர் நிலை என்பது இதுதானோ? அல்லது கல்வியாளர்களின் வீழ்ச்சிக்கு, அறிவுஜீவிகளின் – அதிகாரவர்க்கத்தை நக்கும் தன்மைக்கு இவரைப் போன்றவர்கள்தான் அடிகோலினார்களோ?
இந்த மேற்கோளில் உள்ள ஜால்ராத்தனத்திற்கு வருவதற்கு முன் – ஒரு விஷயம். இப்போது (2016 டிஸெம்பர்) நம் உலகத்தில் 196 நாடுகள் இருக்கின்றன. 1971 வாக்கில் இந்த எண்ணிக்கை 182ஆக இருந்தது. அவ்வளவுதான். எங்கிருந்துதான் இந்த ஆதிசேஷய்யனார் இந்த 500 எண்ணிக்கையைப் பிடித்தார் என்பது அவருக்கே வெளிச்சம்! ஒருவேளை புறநானூறிலோ அல்லது திராவிடத் திராபை இயக்கங்களின் வரலாற்று உளறாறுகளிலிருந்தோ இந்த அற்புத எண்ணிக்கையை அவர் பெற்றிருக்கக் கூடுமோ என்ன எழவோ!
இந்த மால்கம்மாரின் வீழ்ச்சி என்பது திராவிடக் கதிரியக்கத்தினால்தான் ஏற்பட்டிருக்கவேண்டும்…
சரி. பிற்காலத்தில் (1990கள்) செக்கஸ்லோவேகியாவின் பிரதமரான அரசியல்வாதி வக்ஸ்லாவ் ஹேவல் – பலப்பல மாமாங்கங்களாகக் கவிதைகளை எழுதிக் குவித்திருந்தது ஒருவேளை மால்கம்மாருக்குத் தெரிந்திருக்காது என விட்டுவிடலாம்.
கவிதைகளைத் தொடர்ந்து எழுதியும்கூட பிற்காலத்தில் அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்ட்டரையும் விட்டுவிடலாம் – ஏனெனில் அவர் அதிபரானது சர்வ நிச்சயமாக 1971க்குப் பின்னர்தான் என நினைவு.
ஆனால் அந்த எழவெடுத்த இனவாதியான ‘ஸர்’ வின்ஸ்டன் சர்ச்சில் (இரண்டாம் பெரும்போர்க்கால இங்கிலாந்தின் பிரதமர்) தன் இலக்கிய எழவுகளுக்காகவும், ஆவேசமூட்டும் மேடைப்பேச்சுகளுக்காகவும் 1953ல் ஒரு நொபெல் பரிசையே (=இலக்கியத்துக்காக!) பெற்றதை இந்த மால்கம்மார் அறியவில்லையா?
சரி. மால்கம்மார் பொது உலகஞானம் குறித்த அறியாமையில் இப்படிப் பேசிவிட்டார் என விட்டுவிட்டாலுமேகூட…
-0-0-0-0-0-0-
சரி. இந்த மால்கம்மார் தொடங்கிய நிறுவனம் தான் இந்த மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ். MIDS.
இந்த மாதிரி – திராவிடத்தால் பீடிக்கப்பட்ட ஒரு நபர் தொடங்கிய ஒரு MIDS அமைப்பு என்பது, காலாகாலத்தில் இளிக்கவேண்டியதுதானே முறை, சொல்லுங்கள்?
மகாமகோ சலபதி அவர்கள் மீது கண்டமேனிக்கும் குற்றம் காணும் காமாலைக்கண்ணர்களான என்னைப் போன்றவர்கள், இனிமேலாவது அவரை விட்டுவிட்டு – அவருடைய பேராசானார் மால்கம்மார் அவர்களை நோக்கிப் பயணம்(!) செய்யவேண்டும்.
ஆனால், என்னைப் போன்றவர்கள் அதைச் செய்வார்களா என்பது தான், இந்தத் தேசத்தின்முன் இருக்கும் கேள்வி! வேறென்ன சொல்ல? :-(
பின்குறிப்பு: இந்த MIDS நிறுவனத்தின் உச்சாணிக் கிளையில் பணிபுரியும் பேராசிரியர் க்ருஷ்ணா அவர்களை, பல மாமாங்கங்களாக நேரடியாகவே அறிவேன். சிலமுறை இவர், என் வீட்டுக்கு வந்திருக்கிறார்கூட. படிப்பாளி. பண்பாளர். மென்மையானவர். என் மதிப்புக்கும் மரியாதைக்குமுரியவர்தான் அவர். ஆனால் அவர் மீதுள்ள என் மரியாதை என்பது ஆட்டோமேடிக்காக MIDS நிறுவனத்துக்கும் ஏற்றப்பட்டு மாற்றப்படக் கூடியதல்ல. ஏனெனில் அந்த நிறுவனத்தில் பலர், அதலபாதாள அளவில் இருப்பதால் சராசரித்தனம் என்பது அங்கு அதிசராசரித்தனமாகி விட்டது. மன்னிக்கவும்.
மேலதிகமாக மண்டையில் அடித்துக்கொண்டு படிக்க – சலபதி சலசலப்புகள்
December 20, 2016 at 09:10
Hi,
Person mentioned in the below link (S.Neelakandan) is also from MIDS.
http://www.jeyamohan.in/33222
December 20, 2016 at 09:15
Sir, Rajaram – I do not know about this book or its author.
I am aware of a few (very few) exceptions over there. Mine is a generalization based on a significant sample size. ARV is a stellar sample.
Thanks!
December 20, 2016 at 10:49
மால்கம் ஆதிசேஷய்யாவை திரு.ஜெயமோகன் அவரது வலைத்தளத்தில் இவ்வாறு புகழ்ந்து எழுதி இருக்கும்போது(http://www.jeyamohan.in/666#.WFi3K2ewvMk)
“இந்தக் கல்விமுறைக்கு நாம் அன்றைய கல்வியமைச்சர் அரங்கநாயகம், மால்கம் ஆதிசேஷய்யா மற்றும் வா.செ.குழந்தைச்சாமி போன்ற கல்வியாளர்களுக்கு கடமைபப்ட்டுள்ளோம்.”
நீங்கள் அவர் ஒரு தடவை கருணாநிதியை ‘வெட்டியாக’ புகழ்ந்து இருப்பதை வைத்து இப்படி போட்டு தாக்கி விட்டீர்களே இது நியாயமா?
December 20, 2016 at 13:40
Dravida dhrabagal mela irukira adheedha kobathinale, neenga solra ellathayum cross check pannama namburen. Between checked few articles by Aravinda n Kannayan he does sounds knowledgeable. Avarum thiru salapathy’ara thoichu kaya pottu kittu irukar.
December 20, 2016 at 14:39
Sir, Shiva!
Caveat emptor. :-) Don’t trust anyone. Everyone is given to his biases.
I am willing to revise my views based on new evidence or those data that I have not factored in.
However my views are all based on available evidence.
Yes. I am glad to say that Aravindan Kannaiyan and I have quite a few common opinions. Actually, I like him for certain things. Unfortunately, all this does not mean anything.
December 21, 2016 at 19:03
//டிஸெம்பர் 14, 1971 அன்று கருணாநிதி அவர்களின் தலைமையில் ஒரு விழா நடந்திருக்கிறது.
அப்போது இருந்தே இந்த மனிதர் இப்படித்தானா?
//500 நாடுகளின் தலைவர்களில்
:)))))
தயவுசெய்து நேரம் கிடைக்கும் போது இதைப் போல பழைய விஷயங்களை எழுதவும். அப்போது பிறந்தே இராத என்னைப் போன்றவர்களுக்கு இந்த திராவிட திராபை கும்பலை பற்றி அறிய உதவும்.