ஈவெரா ‘பெரியார்’ ராமசாமி அவர்களுடைய இரு முக்கியமான கருத்துகள்
December 25, 2016
விளக்கம் #1
(19 ஜூன் 1949, விடுதலை தினசரி – ‘விளக்கம்’ எனும் தலைப்பில் வந்த அவருடைய கட்டுரையிலிருந்து)
“நம்பிக்கையான ஒருவர் எனக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு யாரும் கோபித்துக்கொள்ளக் கூடாது. கோபிக்கிறவர்களோ, குறை கூறுகிறவர்களோ அப்படிப்பட்ட ஒருவரைச் சொன்னால் நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன். நம் இயக்கத்துக்கு தொண்டாற்ற, முழு நேரத் தோழர்கள், தங்களை முழுவதும் ஒப்படைப்பவர்கள் யார் இருக்கிறார்கள் – யார் இருந்தார்கள்?“…இன்றைய அரசியல் நிலையில், அரசியலாருக்கு நாம் அழிக்கப்படவேண்டுமென்ற அவசியத்தில் இருக்கிறது. இதற்கு நம்மில் ஒரு ஆளாவது தன்னுடைய அழிவை லச்சியம் செய்யாமல் பலி ஆகவேண்டியது அவசியமான காரணமாகும்… அந்தப் பலிக்கு முதலாவது தகுதி நான் என்றுதான் உண்மையாகக் கருதி இருக்கிறேன்…
விளக்கம் #2
(28 ஜூன் 1949, விடுதலை தினசரியில் பிரசுரிக்கப்பட்ட அவருடைய அறிக்கையிலிருந்து)
“… மற்றும் நான் நாணயஸ்தர்கள் என்றும், இயக்கத்தினிடமும் என்னிடமும் உண்மையான பற்றுடையவர்கள் என்றும் நம்பின தோழர்கள் பலர், ஆயிரக் கணக்கில் ரூபாய்களை மோசம் செய்துவிட்டதைக் கண்டும், கண்டுபிடித்தும் வருகிறேன். சிலர் இன்னமும் என்னை மோசம் செய்து வருவதாக அய்யம் கொண்டும் உறுதிகொண்டும் வருகிறேன்.“இந்த நிலையில் என்னைப் பற்றியும், இயக்கத்தைப் பற்றியும், இயக்க நடப்பைப் பற்றியும் எனக்குப் பின்னும் ஓரளவாவது இயக்கம் நடைபெறவேண்டும் என்பதைப் பற்றியும் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டியதைப் பற்றியும் மிகக் கவலையுடனும் பற்றுடனும் சிந்தித்து நடக்கவேண்டியவனாக இருக்கிறேன்…
விளக்கம்#2க்கு விளக்கம்#3: 1938 வாக்கிலிருந்தே, கலைஞர் கருணாநிதி அவர்கள் ‘இயக்க’த்துடன் ஈடுபாட்டுடன் இணைந்து கொண்டிருந்தார் என்பதும், 1949 வாக்கில் அவர் வயது 25தான் என்பதையும் தெரிவிக்கக் கடைமைப்பட்டு, 1) எப்படியும் நான் -மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோட முயற்சிக்கவில்லை என்பதையும், 2) விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதையும் 3) ஆக நீங்கள் தீவிரமாக யோசித்து உங்கள் முடிவுக்கு நீங்கள் வரவேண்டும் என இறைஞ்சி, சர்க்காரியா கமிஷன் என்ன சொன்னது என்பதைப் பரீசிலிக்கவும் விண்ணப்பிக்கிறேன்.
December 27, 2016 at 18:26
கடைசில ரெண்டு பழமொழில……………ஹ ஹ ஹா