கூறுகெட்ட திராவிடத்தில் இதெல்லாம் சகஜமப்பா

December 12, 2016

பொதுவாகவே, நம் தங்கத் தமிழ் நாட்டில், திராவிடத்தின் ‘வீறு’ குறித்த பிரமைகள் அதிகம்.

இருந்தாலுமேகூட இந்த வீங்கடிக்கப்பட்ட — ‘பாரீர், திராவிட இயக்கத்தில் நடப்பதை! ‘அப்படிப்பட்ட’ ‘ஆனானப்பட்ட’  ‘பழம்பெருமை வாய்ந்த’  ‘இயக்கத்துக்கு’ இப்படியொரு நிலையா வரவேண்டும்? — வகையறா புலம்பல்களில், பிற திராவிடலை இயக்கங்களின் (= திமுக உடன்இறப்புகள்)  அஇஅதிமுக-வினரின் தொடர்ந்த ‘காலில் விழும்’ குறித்த கிண்டல்களில் — இப்போது நகைச்சுவை உணர்ச்சி அளவுக்கு மீறிக் கரைபுரண்டோடுகிறது.

கொள்கையாம், சுயமரியாதையாம்! தன்மானத் தமிழனாம்! ஈனப் பெருமையாம்! அதுவும், போயும்போயும் இந்தக் கொள்ளைக்கார  திராவிடலை இயக்கங்களிலாம்!! இந்தப் பொம்பளைப்பொறுக்கிகளின் முகத்தில் காறித்துப்பத்தான் வேண்டும், வேறென்ன சொல்ல.

அயோக்கியத் திராவிடப் பெருந்தலைவர்கள் தாங்கள் களவாடிய பணத்தை அளவுக்கு மீறி ஜெரித்து புளிச்சேப்பம் விட்டுக்கொண்டே செல்லும்போது பின்பக்கம் ஒழுகும் நரகல்லை நக்கிக்கொண்டு அதில் தமக்கும் ஏதாவது  ‘புல்லுக்கும் ஆங்கே கசியுமாம்’ சில்லரை கிடைக்காதா என நாக்கைச் சுழற்றிக்கொண்டு ஏங்கும் திராவிடலைகள் – அற்ப அலப்பரை ஜிங்குசிக்காக்கள் – இப்படியெல்லாம் பிலாக்கணம் வைப்பது – இவர்கள் இப்படியேதான் அதலபாதாளத்தில் இருப்பார்கள் என ஐயம்திரிபரத் தெரிந்தாலும், ஆச்சரியமாகவே இருக்கிறது.

-0-0-0-0-0-0-

ஜெயலலிதா போய்ச் சேர்ந்தார். All created things must move on. Recycling is the ultimate truth. There is nothing else that can be called eternal truth. So.

சரி. ஜெயலலிதா போய்ச் சேர்ந்தபின், சசிகலா காலில் விழுகிறார்கள் – பல அஇஅதிமுகவினர். இதில் என்ன ஆச்சரியம் வேண்டிக் கிடக்கிறது? பழைய கழிசல்கள் கழிவதிலும் புதிய வழிசல்கள் வழிவதிலும் என்ன புதிய செய்தி இருக்கிறது? மேலும் இது திராவிடப் பாரம்பரியம்தானே?

கருணாநிதிகளுக்கும் சசிகலாக்களுக்கும் இடையே எதாவது வித்தியாசம் கித்தியாசம் இருக்கிறதா என்ன?  பாரம்பரியமிக்க தீவட்டிக்கொள்ளைக்காரர்கள் புதிய தீவட்டிகளைப் பார்த்து எப்படித்தான் இளிக்கமுடியும், சொல்லுங்கள்?

கருணாநிதி காலில் திமுகவினர் விழுவதில்லையா? (அந்தக் கருணாநிதியே தன்னை விட்டுவிடும்படிக்குக் கெஞ்சிக் கூத்தாடி இந்திராகாந்தி காலடி மண்ணில் (உம்ம்ம்… வார்த்தைகளால், கெஞ்சல்களினால்) புரளவில்லையா?  சர்வ நிச்சயமாக, பிஹாரில்  ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களிடம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து தன்னைக் காப்பாற்றும்படிக்கு விண்ணப்பிக்கவில்லையா?  தறுதலைப்புலிகளுக்கு அளவுக்குமீறிச் செல்லம்கொடுத்த விவகாரத்தில் அந்தக்காலப் பிரதமர் சந்திரசேகரின் காலைப் பிடிக்கவில்லையா? (சந்திரசேகர் பிடிபடவில்லை என்றதும் அவரை வறுத்தெடுக்கவில்லையா?)

இசுடாலிர் பேசாத அசிங்கங்களா? செய்யாத அற்பத்தனங்களா? பண்ணாத ஊழல்களா? ஆனாலும் இசுடாலிர் காலடியில் விழுந்து திமுகவினரும் புதுமணத்தம்பதிகளும்தான் புரளவில்லையா? அவரும் சும்மனாச்சிக்கும் ஒருபக்கம் முகத்தைச் சுளித்துக்கொண்டு அதேசமயம் இன்னொரு பக்கம் புன்முறுவல் பூத்து மகிழவில்லையா?

‘நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல’ புகழ் அண்ணாத்துரையாரிடம் இவர்களெல்லாம் கூழைக்கும்பிடு போடவில்லையா? அதேசமயம், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர் முதுகில் குத்தவில்லையா?

அந்த அடுத்த திராவிடக் கட்சி தலைவர்களுடைய காலணியை (காலடியைக்கூட அல்ல, இதனை உயர்மட்டத் தலைவர்கள் மட்டுமே செய்யமுடியும்!) அந்தக் கட்சியினர் நக்கிப் பைசா பெயறாதா என  ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த அடுக்காத திராவிடக் கட்சியினர் அவர்களை நக்கல் செய்துகொண்டிருப்பர்.  சிலகாலத்துக்குப் பின் காட்சி (அல்லது ஆட்சி) மாறும் – நடிகர்கள் மாறுவர்; ஆனால் அவர்களுடைய நடிப்பு என்பது அடுக்கு மொழி பொறுக்கி நடை, அவர்களுடைய செயல்பாடு என்பது தமிழகத்தைக் கற்பழிப்பது, அவ்வளவே! இது ஒரு சோகத் தொடர்கதை; எந்தக் கட்சியாயிருந்தால் என்ன, திராவிடலை நக்கீரர்கள் நக்கீரர்களே.

திராவிட இடுக்கண் வந்தால் நக்குக. திராவிடம் தோன்றின் நக்குதலோடு தோன்றுக. என்ன சொல்லவருகிறேன் என்றால் – அதிகார மையங்களின் பொச்சுகளை – திராவிடத் தொண்டகுண்டர்கள் ஒரு நாளுக்காவது நக்காமல் இருந்தால் – அன்றிலிருந்தாவது தமிழகம் உருப்பட வாய்ப்பு, ஒரு வேளை உருவாகிவரலாம். ஆனால் நக்குதல் என்பது  திராவிடத்தில் ஊறிய கல்யாணகுணம்.  இடம்பொருள்ஏவல் கண்டறிந்து நக்குதலின் மூலமாகவும், மேலிடங்களுக்குத் தேவையான கப்பம் கட்டி ஏப்பம் விடுவதாலும் கூட்டுக்கொள்ளைகளைச் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கும் குறுநிலமன்ன கும்பலானது உலகுக்கே இவ்விஷயங்களில் உதாரணமாகத் திகழ்கிறது.

…திராவிடம் ஒழிந்தால்தான், தமிழகம் சுபிட்ச நிலையை அடையமுடியும்.

இந்த நீக்குதலுக்கான துருப்புச்சீட்டுகள் காங்கிரஸ் கட்சிகளிடமும், பாரதீய ஜனதா கட்சியிடமும், இடதுசாரிகளிடமும் தான் இருக்கின்றன. பாமக-வில் ஓரளவுக்கு இருக்கின்றன. இன்றிருக்கும் நிலைமை இப்படித்தான்.

இந்தக் குப்பை நீக்குதலை நான் ஆவலுடனும், நம்பிக்கையுடனும் எதிர்பார்க்கிறேன். மேரா ஶ்வச் பாரத் மஹான். ஹா(ன்)ஜி.

நன்றி.

-0-0-0-0-0-

இந்த அழகில் ஷங்கர் ஐயர் எனும் ஒரு பிரகிருதி (இந்த ஆள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ‘த மண்டு’ அரைகுறைகள் இவருக்குப் பயிற்சி கொடுத்திருப்பார்களோ? அல்லது அதிசராசரிக் கட்டுரையொன்றை ஒப்பேற்றுவது எப்படி என்பதைப் பிரத்தியேகமாக ஆஇரா வேங்கடாசலபதியின் காலடியில் அமர்ந்து தெரிந்துதெளிந்துகொண்டிருப்பாரோ?) கட்டுரையொன்றை எழுதி அந்த எழவையும் ஒரு நண்பப்பிரகிருதி :-( எனக்கு, ஏகத்துக்கும் அதைச் சிலாகித்து அனுப்பி வைத்திருக்கிறார். பிரச்சினை என்னவென்றால், அக்கால/சமகால வரலாற்றினை துக்கிணியூண்டு கூட அறியாமலேயே வாயில் விரலை வைத்துச் சூப்பிக்கொண்டு எழுதப்பட்டிருக்கும் திராவிட வாழ்த்துரை இது.

“தமிழ் நாடு + திராவிட அரசியலில் இருந்து, முன்னேற்றத்துக்கான படிப்பினைகள்”

ஆ! அய்யய்யோ!!

சும்மனாச்சிக்கும் எங்கோ உட்கார்ந்துகொண்டு நாலு வலைத்தளங்களை மேய்ந்துவிட்டு மேதாவித்தனமாக அட்ச்சுவுட்ட காட்டுரை இது. (எனக்கும் பெங்களூரில் ஒரு அறிமுகம் இப்படியிருக்கிறார். சுமார் 30 ஆண்டுகள் ‘டவுன்ஸவுத்’ பக்கமே போகாமல் அங்கேயே அமர்ந்துகொண்டு தெள்ளிய நீரோடை போல ‘டவுன்ஸவுத்’ பற்றிய படுஸீரியஸ் சமூகவியல் அகழ்வாராய்ச்சிக் கட்டுரைளை வெளியிடுவார். அவற்றைப் படித்து அவரைக் கலாட்டா செய்வதில் எனக்கும் அவ்வளவு இன்பம்ஸ். அவர்  ஒரு திராவிடச் சுயமரியாதைப் போலி, ஆனால் a lovable rogue and of course, an armed chair intellectual. வருத்தத்துக்குரிய விதத்தில் இவை பெரும்பாலும் தனிச்சுற்றுக்கு என இருக்கும், ஆகவே வெளியிடமுடியாத சூழ்நிலை)

மேலும், மேதகு ஷங்கர் ஐயர் அவர்களின் கட்டுரையானது யுவகிருஷ்ணா பாணியில் வெட்டி ஒட்டி கொஞ்சம் மாற்றி எழுதப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள்:

எடுத்துக்காட்டு #1:
ஒரிஜினல்:HMIL is the manufacturing hub for small cars to the global market and exports to over 100 countries covering Europe, Africa, Middle East, Asia Pacific regions.
…as a result of Hyundai, more than 200 South Korean companies have now established manufacturing bases in Chennai.
http://www.tamilnadugim.com/partnersinprogress/hyundai/
காப்பி:Chennai is the hub for Hyundai’s small cars exported to over 100 countries. The Hyundai facility alone lured over 200 Korean companies to set up units in Tamil Nadu.
இன்னொரு உண்மை என்னவென்றால் – ‘நூறு நாடுகளுக்கு மேல்’ என்று நிகழ்காலத்தில் எழுதுவதெல்லாம் ஸாரி கொஞ்சம் ஓவர். இந்த எழவையெல்லாம் சரிபார்க்காமலா ஒரு ப்லூம்பர்க் கட்டுரை எழுதப் படுகிறது?

எடுத்துக்காட்டு #2:

லக்ஷ்மண் சந்திரசேகர் (இவர் சீனாவின் ஷாங்கை-ல் இருக்கும் டோங்ஜி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிபவர்) அவர்கள் எழுதிய புத்தகம் ஒன்றிலிருந்து (=இந்தியாவில் தொழில்முனைவது) பலப்பல வரிகள்/கருத்துகள் எடுக்கப்பட்டுள்ளன: Doing Business in India, A Framework for Strategic Understanding

எனக்கு இந்தப் புத்தகத்தின் மேலும் விமர்சனங்கள் இருக்கின்றன என்பது வேறு விஷயம். :-(

சரி. மேலும் பலப்பல நகைச்சுவைகளுக்கு – மண்டையில் (+*ண்டையில்) அடித்துக்கொண்டு, மேதகு ஷங்கர் ஐயர் அவர்களின் சொதப்பலைப் படிக்கவும்: Lessons In Progress From Tamil Nadu And Dravidian Politics (Source: BloombergQuint)

…Jayalalithaa saw the opportunity and rolled out the red carpet – and an array of incentives. Folklore has it that by day four Hyundai had an office to work out of. However, a few months later, in May 1996 Tamil Nadu went to polls too. AIADMK was trounced. DMK led by K Karunanidhi came to power. Regime change though, did not result in reversal or change in policy.

ஹண்டே நிறுவனத்தினர் ஜெயலலிதா சமயம் தொழில்முனைய ஆரம்பித்திருந்தாலும், பின்னர் கருணாநிதி வந்தவுடனும்கூட ஒரு பிரச்சினையுமில்லாமல் தொழிலுக்கு ஆதரவு நல்கப் பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஷங்கர் அய்யரார்.  :-) ஹண்டே நிறுவனம் ‘வேண்டுமளவு கவனித்தும்கூட’ கருணாநிதிகளிடம் பட்டபாடு சாமானியமானது அல்ல; 1996 சமயம் இந்த எழவுகளின் உள்ளடி வேலைகளைப் பற்றி நன்கு அறிந்துவெந்துகொண்டிருந்த என்னைப் போன்றவர்களிடம் அவர் இது தொடர்பாகப் பேசியிருக்கவேண்டும். ஆனால், சாய்வு நாற்காலி ஆராய்ச்சியில் இதெல்லாம் ஒத்துவராது அல்லவா? :-( மீண்டும் நன்றி. :-((

-0-0-0-0-0-0-

பின்குறிப்பு: இந்த ப்லூம்பர்க் எழவுக்கட்டுரையை அனுப்பிய நண்பர், ஒரு திராவிட அபிமானியாக இருந்தாலும், பொதுவாகவே ஒரு அறிவாளிதான் (மன்னிச்சுடு பாஸ்!). ஆனாலும் எனக்கு ஒரு சுட்டியை அனுப்புவதற்கு முன்னால், அதனைச் சரியாகப் படித்து அதன்மீது சிறிதாவது ஹோம்வர்க் செய்திருக்கவேண்டாமா? யாராவது வாந்தியெடுத்தால் அதனை அப்படியே லைக் எழவு ஒன்றைச் செய்து எனக்கு அனுப்பிவிடுவதா? குப்பைகளைப் படிப்பதற்கு அவருக்கு வேண்டுமானால் நேரமிருக்கலாம் – மூளை சரியாக வேலை செய்யாமலிருப்பதால் (a momentary lapse of reason?) அல்லது வரலாற்றறிவு இல்லாததால், இதனைச் சிலாகிக்கக்கூடச் செய்யலாம்.

ஆனால் எந்த மசுத்துக்கு இதனை எனக்கு அனுப்பிவைக்கலாம் எனத் தோன்றுகிறது? கிண்டலுக்காக மட்டுமே என்றால்கூடப் பரவாயில்லை; ஆனால் பரவச உணர்ச்சியுடன் தானே இவர் இதனை எனக்கு அனுப்பியிருக்கிறார்? :-(

திராவிட (எதிர்ப்)பக்கங்கள்…

3 Responses to “கூறுகெட்ட திராவிடத்தில் இதெல்லாம் சகஜமப்பா”

  1. Anonymous Says:

    ராம், முடிந்தால் உங்கள் திராவிட எதிர் பக்கங்களில் இந்த லிங்கையும் சேர்த்து கொள்ளவும். சர்காரியாவில் ஆரம்பித்து இப்பொது வரை உள்ள திராபைகளின் குறிப்புக்கள் :(

    https://drive.google.com/file/d/0B8jhnbm2-nZfMnRuTkVGemtJRnM/view


    • யார்பா இத்தூ? அதே Computan FloweryHillockan? அதாவது ஒன்டாரியோ லண்டன் கணியன் பூங்குன்றன்? எவ்ளோ பேர் பா இப்டீ கெளம்பிகீறீங்கோ??? ;-)

  2. Anonymous Says:

    Computan FloweryHillockan. சிரித்து மாளவில்லை அய்யா :))) ராமகிருஷ்ணனின் தாக்கம் உங்களின் மேல் இவ்வளவா.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s