அய்யய்யோ! அண்டைய நாடான தமிழ் நாடு மீது, இந்தியா போர் தொடுத்திருக்கிறதாமே! ஆ!
December 29, 2016
ஆனால்… புறநானூற்றுக் காலத்தில் ஆனை கட்டிப் போரடித்த தமிழனுக்கு, மொழிப்போர் இனப்போர் தன்மானப்போர் சுயமரியாதைப்போர் ஈழப்போர் அக்கப்போர் எனப் போர்பல கண்ட மரத்தமிழனுக்கு, நீளநீள மெகாமகோ தொலைக்காட்சி ஸீரியல்களையும் வைத்து தொழில் நுட்ப ரீதியாகவும் தொடர்ந்து போரடிக்கும் தமிழனுக்கு – இந்தப் போர் எம்மாத்திரம்! ஹ்ஹ.
“இந்தியா அண்டை நாடான தமிழ்நாடு மீது போர் தொடுப்பதாகவே தலைமைச் செயலாளர் வீட்டின் மீது துணை இராணுவ முற்றுகை நடவடிக்கையை காண வேண்டியிருக்கிறது” (5:02 PM – 21 Dec 2016) https://twitter.com/luckykrishna/status/811534774938411008
…இந்த நகைச்சுவையை வேறு, ஒன்பது பேர் ‘லைக்’ செய்து, மீள்கீச்சல் எழவையும் செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால்… ஒர்ரே புல்லரிப்புத்தான்,போங்கள். குறைந்த பட்சம் 9+1 அரைகுறைகள் நம் தங்கத் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என இதனால் அறியப்படுகிறதோ?
ஆனால், இவர்களும் ஒரு ஜோக்காகத்தான் இதனை ரீட்வீட் செய்திருப்பார்களோ என்ன எழவோ! ஒரு நட்பு(!) எழவுக்காகக் கூட இவர்கள் இதனைச் செய்திருக்கலாம். பாவம், இவர்களை நொந்துகொண்டு என்ன பயன். :-(
பின்குறிப்பு: அடேய், இதனை அனுப்பிக்கொடுத்த சோமாறீ! கண்ட அற்பவுளறல் விஷயத்தைப் போக்கற்று எனக்கு அனுப்பியதற்காக முதலில் உன்மேல் எனக்குக் கோபம் வந்தாலும், என்னை அலாதியாகவும் அமோகமாகவும் கிச்சுக்கிச்சு மூட்டிய செய்திதான் இது. ஆக, மண்டையில் அடித்துக்கொண்டு வொனக்கு ஒரு ஸலாம் வெச்சிக்கறேன்! நன்றிபா!
பின்பின்குறிப்பு: யுவகிருஷ்ணா அவர்கள் விடலைத்தன+நகைச்சுவை அட்டைக்காப்பிக்கடை வலைத்தளத்தைத் தான் நடத்திவருகிறார் என்று இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் ஒரு உடன்பிறப்பாக, கொசுறாக நகைச்சுவை ட்விட்டர் கீச்சல்களையும் நடத்தி அவருடைய அள்ள அள்ளக் குறையாத நகைச்சுவை உணர்ச்சியை வாரிவாரி இத்தரணிக்கே வழங்குவதை இன்று அறிந்து கொண்டு இறும்பூதடைந்தேன்!
எழவும் கற்றுமற!
ஆமென்.
- அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்…
- திராவிட (எதிர்ப்)பக்கங்கள்…
- போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்
January 17, 2017 at 12:06
நிஜமாகவே இந்தியா அண்டைநாடான தமிழ்நாட்டின்மீது போர் தொடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு தடையைத்தான் சொல்கிறேன். உள்நாட்டுப் பசு இனத்தைக் காப்பதென்றால் இந்துத்துவா பொந்துத்துவா பார்ப்பனீயம் என்றலறுபவர்கள் காளை என்பதால் தலையைச் சொறிந்துகொண்டு நேர் எதிர் நிலைப்பாடு எடுக்க வேண்டி வந்துள்ளதே, இந்தப் பரிதாபத்தைக் கண்டுகொள்ள மாட்டீர்களா? தமிழன் 5000 வருஷமாக ஏமாற்றப்படுகிறானே, அதைத் தட்டிக் கேட்க மாட்டீர்களா? அடலேறென புறப்பட்டுப் பதிவு போட்டிடு தம்பி!
July 3, 2018 at 20:04
[…] […]