மன்னிக்கவும். கருணாநிதி அவர்கள் 1960களிலேயே உலகம் போற்றும் கடற்புல உயிரியல் ஆராய்ச்சியாளராக இருந்திருக்கிறார்! மிக முக்கியமாக, கடற்சார் பாலூட்டி உயிரினங்களைப் பற்றி அசத்தவைக்கும் அதியுன்னத அகழ்வாராய்ச்சிகளைச் செய்து நம் செல்ல திராவிட இனமானத்தை விண்ணோக்கிச் செலுத்தியிருக்கிறார்! சுயமரியாதையைச் சூடுபறக்கப் பரப்பியிருக்கிறார்!! பகுத்தறிவைத் தொகுத்தளித்திருக்கிறார்!!! இதற்காகவே இவருக்கு ஆருடத்துக்கான 2017 நொபெல் பரிசு கொடுக்கப்படவிருக்கிறது என்பதைத் தரணி அறியும்! ஆனால், கேடுகெட்ட நமக்குத்தான் இவருடைய மேதமையைச் சரியாக மதிக்கத் தெரியவில்லை. ஹ்ம்ம்…
-0-0-0-0-0-0-
சரி. தமிழகத்தின் அதிகாரபூர்வமான திருடர்களான திராவிடர்களை அவதானிக்கும் போதெல்லாம், உடனடியாக அவர்களின் கண்மணிகளான கருணாநிதிகளின் நினைவு எனக்கு வந்து, அடிவயிற்றில் அமோகமாக அமிலம் சுரப்பது வழக்கமே. ஏனெனில், திராவிடத்தால் வீழ்ந்த தமிழகமும் – முக்கியமாக, நான் நேரடியாகப் பார்க்கப்பார்க்கவே திராவிடக் கல்வித்தந்தைகளும் மாமாக்களும் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேற்றும் கல்விக்கொள்ளை நாடகமும், தமிழ்த்தாயை அவர்கள் தொடர்ந்து வெட்கமேயில்லாமல் வன்புணர்ச்சி செய்வதும், போக்கற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கஞ்சினீயர்களாகவும் டாக்குட்டர்களாகவும் வடித்தெடுக்கப் போயும்போயும் இந்த ரவுடிக்கும்பல்களிடம் பணமூட்டைகளுடன் நிபந்தனையற்றுச் சரணடைவதும் – என்னை அசமனம் மிக்கவனாக ஆக்கிவிடுபவை…
நிலைமை இப்படி இருக்கையிலே…
எப்போதெல்லாம் வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் எனத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் நான், கிடைக்கும் சொற்ப இணைய நேரத்திலுமேகூட நிபந்தனையற்றுச் சரணடையும் தளங்களில், மூன்று தளங்கள் பிரமாதமானவை: (இவற்றின் முகப்புகளே போதும், உருண்டுருண்டு கெக்கலி கொட்டிச் சிரிக்கவைக்கும் தன்மை கொண்டவை இவை. இப்படியும் கூட முட்டாக்கூவான்கள் எழுதுவார்களா, அதையும் கூடத் தேடிப்போய்ப் படிக்கும் என்னைப் போன்ற தமிழ்க் கேனையர்கள் இருப்பார்களா என என்னை எப்போதும் எண்ணவைப்பவை)
இதில் முதல் ரேங்க் வாங்கி முன்னணியில் இருப்பது – வீரமணி அவர்களின் விடுதலை தினசரி
இரண்டாவது – விகடன்
மூன்றாவது – த ஹிந்து
நான்காவது – ‘சாய்ஸ்’ எழவில் வினவு தளத்தை விட்டுவிட்டேன் – அங்கு சென்றே பலமாதங்களாகிவிட்டன; எனக்குத் தான் அதைப் படிக்கக் கொடுப்பினை இல்லை – எனக்கு நன்றாகவே தெரிகிறது! ;-)
நிலைமை இப்படியும் இருக்கையிலே…
-0-0-0-0-0-0
என் நூலகத்துக்குச் சென்றவன் – பழம் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது அகப்பட்டது – இன்னொரு மகாமகோ நகைச்சுவை வரலாற்று உளறாறு. அதுதான் ‘தி.மு.க வரலாறு.’ (640 பக்கங்கள்!)
என்னிடம் இருப்பது இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு (ஜனவரி, 1963); சுமார் 25 வருடங்களுக்குப் பின் இதன்பக்கம் வந்திருக்கிறேன்! இருந்தாலும் – திராவிட லெமூரியா காலத்திலிருந்து தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழவீழ்ச்சியை ஆவணப்படுத்துவதன் ஒரு அங்கமாக இப்போதுமேகூட புதுக்கருக்கு மறையாத உளறாறு இது ஒன்றேதான் என்பதற்குப் பானை சோற்றையும் சாட்சியமாக அளிக்கமுடியும் – ஆனால் என் விலா இன்னமும் வலித்துக் கொண்டிருக்கிறதே, என்ன செய்ய!
சரி. இதனைப் படித்துப் படித்து விலாநோகச் சிரித்தாலும் – இந்த குண்டோதிகுண்டுப் புத்தகத்தின் கடைசியில் உள்ள வாழ்த்துரைகளில் ஒன்றை மட்டும் உங்களுக்குத் தருவதில் எருமையடைகிறேன்.
“உப்புக்கும் முத்துக்கும் இடமளிக்கும் கடல், உயிர் பறிக்கும் திமிங்கிலங்களுக்கும் இடமளிப்பதுபோல் வல்லவர்க்கும் நல்லவர்க்கும் இடம்தரும் வரலாறு, வஞ்சகர்களுக்கும் கோழைகட்கும் இடமளிக்கத்தான்* செய்கிறது. அதுவும் விடுதலை வரலாற்றில்** அத்தகையோர் குறிக்கீடு ஏராளம்! ஏராளம்!!
திறமை மிக்க நண்பர் டி.எம்.பார்த்தசாரதி அவர்கள் தரும் இந்த திராவிட இயக்க வரலாற்றில் தீய சக்திகளால் சுதந்திரப்போர் வீரர்கட்கு விளைந்த இடையூறுகள்*** – அவைகளைக் கெல்லி எறிந்த இயக்கம் பெற்ற வெற்றிகள் பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.
திரு. டி.எம்.பார்த்தசாரதி அவர்களின் இந்த நற்பணியை நாடு மறவாது. காப்பாற்றவேண்டிய திராவிடத்தின் கருவூலங்களில் இந்த ஏடும் ஒன்றாகும். ஒவ்வொருவரும் பேணி பாதுகாக்கவேண்டிய ஏடு, ‘தி.மு.க வரலாறு!’
-0-0-0-0-

இந்த மேற்கண்ட உளறலை எங்கிருந்து உரிப்பது என மலைப்பாகவே இருக்கிறது. சரி. ;-)
‘உயிர் பறிக்கும் திமிங்கிலங்கள்‘ என எழுதியிருக்கிறார். ஆனால் எனக்குத் தெரியும், அவர் கடற்சார் உயிரினங்களைப் பற்றிய ஒரு உலகப் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சியாளர் என்பது…
இருந்தாலும் – எப்படி எவ்வளவு உயிர்களைத் திமிங்கிலங்கள் பறித்திருக்கின்றன என்பதை அவர் கொஞ்சம் தரவுகளுடன் காண்பித்தால் புண்ணியமாகப் போகும். எனக்குத் தெரிந்து (என் மாமா ஒருவரே திமிங்கிலம்தான்!) அவை க்ரில் போன்ற எழவுகளைச் சாப்பிடுபவை, அவ்வளவுதான்!
மேலும், பலப்பல பாலூட்டிகளும் தயிரூட்டிகளும், ஏன் சீஸூட்டிகளுமேகூடக் கடலில் இருக்கும்போது, ஏன் இந்த திமிங்கிலத்தை மட்டும் எதுகை மோனை அடுக்குமொழி மண்ணாங்கட்டிதெருப்புழுதியென வம்புக்கு இழுத்திருக்கிறார் இந்தச் சீரிய ஆராய்ச்சியாளர் எனத் தோன்றுகிறது…
…ஆனால் அவர் தரவுகளைத் தரதரவென்று கொணர்ந்துதராமல் பதிலுக்கு – ‘நான் கருணாநிதியாகப் பிறக்காவிட்டால், திமிங்கிலமாகத்தான் பிறந்திருப்பேன்! ஆகவே எனக்கு திமிங்கிலங்களைப் பற்றிய பகுத்தறிவு அதிகம்!!’ என அவர் வழக்கம்போலவே திராவிடத்தனமாக அட்ச்சுவுட எவ்வளவு நேரமாகும், சொல்லுங்கள்? :-(
இப்போது அந்த மூன்று தன்னிலை விளக்கங்கள் குறித்து:
* வல்லவர்க்கும் நல்லவர்க்கும் இடம்தரும் வரலாறு, வஞ்சகர்களுக்கும் கோழைகட்கும் இடமளிக்கத்தான் செய்கிறது.
இதுதாண்டா தன்னிலைவாக்குமூலம் #1. ஆக, தன்னைப் பற்றியும் இந்த வரலாற்றுப் புத்தகத்தில் வந்திருக்கிறது என ஆனந்தமடைகிறார் போலும்!
** அதுவும் விடுதலை வரலாற்றில் அத்தகையோர் குறிக்கீடு ஏராளம்! ஏராளம்!!
இந்திய விடுதலைக்கானாலும் சரி, திராவிட இயக்க விடுதலை தினசரியானாலும் சரி – தம்மைப் போன்றவர்களுடைய குறுக்கீடு என்பது ஏராளம் எனக் குறிப்பிடுகிறார், நம் செல்ல ஆராய்ச்சியாளர்!
இதுதாண்டா தன்னிலைவாக்குமூலம் #2. இப்போதாவது புரிகிறதா – ஏன் இந்த விடுதலை தினசொறியானது திமுகவுக்கும் அதன் தலைவருக்கும் தொடர் ஜால்ரா அடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டதென்று?
*** வரலாற்றில் தீய சக்திகளால் சுதந்திரப்போர் வீரர்கட்கு விளைந்த இடையூறுகள்…
இதுதாண்டா தன்னிலைவாக்குமூலம் #3.
தான் ஒரு தீயசக்தி என நயமாக விளம்புகிறார். அது மட்டுமல்லாமல், தான் சார்ந்திருந்த கழகம் எப்படி சுதந்திரப் போராட்டத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வெள்ளைக்காரனுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்தது என்பதையும் இங்கு கோடிட்டுக் காண்பிக்கிறார்.
வாழ்க நீ எம்மான், வேறென்ன சொல்ல.
தலைவரே! உங்களுடைய நேர்மையை மெச்சி வாழ்த்த எனக்கு வயதில்லை. வணங்கி மகிழவும் எண்ணமில்லை. என்ன செய்ய… :-((
December 28, 2016 at 01:31
இந்த திராவிடம் பேசும் திருட்டுக்கூட்டம் ஒழியும் நாளே விடிவு காலம். வோட்டு போடுவதற்கு காசு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கும் மக்களை பார்க்கும்போது (கற்பனை இல்லை, எங்கள் ஊரில் நடந்தது) மிக அச்சமாக இருக்கிறது.
பசுமை விகடன் மட்டும் சற்றுப் பரவாயில்லை என்று தோன்றுகிறது. மற்ற அனைத்து விகடன் பத்திரிக்கைகளும் குப்பை :(