ஜல்லிக்கட்டு, ஜல்லியடித்தல், ஜல்லிக்கட்டுடைத்தல் (பாகம் 2/3)

January 24, 2017

முதல் பாகம். அதாவது மாடொரு பாகம்.

முன்னதைப் படிக்காவிட்டால் இந்தப் பாகம் புரியாது; ஆனால் உங்களுடைய பிரச்சினை என்னவென்றால், என்னுடைய அலாதியான எழுத்து இஷ்டைலில்,  முதல் பாகத்தையும் எழவு புரிந்துகொள்ளமுடியாது; எனக்குமே கூட அப்படித்தான். இதனைப் புரிந்துகொண்டுதான் மேலே படிக்கமுடியும். சரி, இதனையாவது புரிந்துகொண்டீர்களா? ;-)  நன்றி!

 -0-0-0-0-0-0-

…எது எப்படியோ – அவன் என்னைப் பார்த்து – “you tamil?” எனக் கேட்டுப் பின்னர் “நீங்கள் ஜல்லிக்கட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்றானே பார்க்கலாம்.  :-(

cringing_statue-france-paris-jardin-des-tuilleries(தொடர்ச்சி, அயர்ச்சி – அய்யோ! இந்தக் கழுதைகளுடன் பேசுவது ரொம்ப அவசியமா? (cringing_statue-france-paris-jardin-des-tuilleries))

பெரும்பாலும் ஆங்கிலத்திலும் கொஞ்சம் தக்கணியிலும் நடைபெற்றது இந்த நரையாடல்.
…பொதுவாகவே எனக்குக் குளுவான்களோடு அவ்வளவு ஒத்துவராது. ஆனாலுமேகூட, எடுத்தவுடன் விட்டேற்றியாகப் பேசுவது சரியில்லை என நினைப்பவன்.  ஆகவே, சிரித்துக்கொண்டே மரியாதையுடன்  “இளைஞனே, எனக்கு இது ஒத்துவராது; நீங்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறீர்கள் – அதில் நான் புகுந்து ஒருபக்கம் சார்ந்து வாதாடுவது ஒத்துவராது. மன்னித்துவிடுங்கள்; நான் இப்படி ஓரமாக உட்கார்ந்து அவ்வப்போது உங்கள் உரையாடல்களைக் கேட்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் தாராளமாக வேறெங்காவது உட்கார்ந்துகொள்கிறேன்; இடையூறுக்கு மன்னிக்கவும், நன்றி,” என்றேன்.

அவன் விடவில்லை –  “இந்த விஷயத்தில் நீங்கள் மௌனம் சாதித்தால், அது தமிழனை விட்டுக்கொடுத்தாற்போல ஆகிவிடும். நாட்டு நடப்பில் உங்களுக்கு ஈடுபாடில்லையா?”

நான் சொன்னேன் – “தம்பீ, இந்த ஆவேசம் ஆவேஷமெல்லாம் (=emotional melodrama) எனக்கு ஒத்துவராது. எனக்கு வயதாகிவிட்டது, என்னை விட்டுவிடுங்கள்!”

அவன் தொடர்ந்தான் – “தமிழகத்தில் பேரலை, மாணவர்கள் எல்லோரும் வீதிக்கு வந்துவிட்டார்கள்! பெரிய மனிதர்களெல்லாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள். அறப்போர் நடந்துகொண்டிருக்கிறது!”

அயர்வாக இருந்தாலும் சொன்னேன் – “தமிழகத்தில் பேரலை அடிப்பதற்கெல்லாம் ஒரு பெரிய உந்துதல் தேவையேயில்லை. குட்டி நடிகை மட்டி நடிகனைக் காதலிக்கிறார் என்றால் அவர்களைச் சுற்றிக் கோடிக்கணக்கில் அணிதிரண்டு புல்லரித்துக்கொள்வார்கள். …இனவாதப்பேடித்தனத்தாலும், குறுங்குகுழுமனப்பான்மையினாலும் உந்தப்பட்ட – வெறுப்புமுதல்வாத கும்பல்களையும் பொறுக்கிகளையும் திரட்டுவது எளிது. இந்தப்  பொறுக்கிகள் ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்டை,  பள்ளிப்பேருந்துமீது அறப்போர்க் கல்லெறிந்து அரங்கேற்றியபோது நான் அடிபட்ட பள்ளிக்குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறேன்; அற்ப, தொலைதூரப் புல்லரிப்புகளைத் தவிர்த்துக் கொள்ளவும்.

மேலும், பெரிய மனிதர்கள் செயல்பாடுகள் எல்லாம் அப்படியே ஒத்துக்கொள்ளப் படவேண்டிய அவசியமில்லை – அவர்கள் துறைகளில் அவர்கள் மேதாவிகளாக இருக்கலாம், அவ்வளவுதான்; அதற்காக அவர்கள் சொல்வதெல்லாம் உன்னதமில்லை.

அறப்போர் என்பதெல்லாம் பம்மாத்து. ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் எழவர்களின் அறப்போர்களினால் நான் மிகவும் அவதிப்பட்டிருக்கிறேன், மன்னிக்கவும். மேலும், எனக்கு தமிழகத்தில் இப்போது என்ன நடக்கிறது என்பது சரியாகத் தெரியாது, தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை, கிண்டல் செய்கிறீர்கள் என நினைக்கிறேன், விட்டுவிடுங்கள்.”

ஆனால் – அவன் அவனுடைய ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டலை விட்டுவிட்டு ஜல்லிக்கட்டை என் தலையில் கட்ட முயன்றுகொண்டிருந்தான். நடுநிலையுடன் ஏதாவது சொல்லக்கூடாதா என்றான். “நிறைய படிக்கிறீர்கள், நல்லதாக நாலு வார்த்தை சொல்லலாமே!”

எனக்கு மறுபடியும் கொஞ்சம் சந்தேகம் – இந்தப் பையன் ஒருகிண்டல் விளையாட்டு போல, தன் சகமாணவர்களுடைய மகிழ்ச்சிக்காகக் கோமாளித்தனமாக என்னை இப்படிப் பிடுங்கியெடுக்கிறானோவென்று. ஆக, கொஞ்சம் மென்றுமுழுங்கிக்கொண்டு சொன்னேன் – “நான் அறிவாளி கிறிவாளி (=intellectual ineffectual) என்றெல்லாம் இல்லை. 100% நல்லவனோ சமன நிலை மிகுந்தவனோகூட அல்லன்.  சொல்லப்போனால், என்னிடமேகூட நான் வெறுக்கும் விஷயங்களும் இருக்கின்றன, இவற்றை மீறித்தான் செயல்பட முயன்றுகொண்டிருக்கிறேன், என்னை விட்டுவிடுங்கள் – என் கருத்துகள் உங்களுக்கு உதவுமா என்றே எனக்குச் சந்தேகம்! மேலும் நான் நடுநிலைமைக்காரனேயல்லன்! கடமைகளைப் பற்றிப் பேசாமல் உரிமை பற்றி மட்டும் பேத்தும் கோழைவாத நடு நிலைமைத்தன ஜேப்படிக்காரர்களை அடிமனதிலிருந்து வெறுப்பவன். எனக்குச் செல்லமான விருப்புகளும் வெறுப்புகளும் எக்கச்சக்கம்; எனக்குப் பிறவேலைகளும் இருக்கின்றன. உங்களுக்கு நான் தேவையே இல்லை. நீங்கள் வளர பொலிய என் வாழ்த்துகள், நன்றி!”

அடுத்து அவனிடமிருந்து வந்தது ப்ரம்மாஸ்திரம் – “தமிழனுக்குத் தமிழன் இதுகூடச் செய்யமாட்டீர்களா?”

எனக்கும் அலுப்புடன் கோபம் வந்துவிட்டது.  இம்மாதிரி விஷயங்களை நான் அடிமனதிலிருந்து வெறுப்பவன்.  ஜாதிக்கு ஜாதி கூதிக்குக் கூதி தமிழ்க்கூவானுக்குத் தமிழ்க்கூவான் பேடிக்குப் பேடி எனப் பேசிக்கொண்டலையும் குழுவாத, குறுகிய மனப்பான்மைகொண்ட ஜேப்படிக்காரர்களைத் துச்சமாக நினைப்பவன். #வோத்தாடேய் என ஆரம்பித்து அந்த அரைவேக்காட்டானை அர்ச்சனை செய்யாமல் இருப்பதற்கு நான் மிகவும் பிரயத்தனப் படவேண்டியிருந்தது

மேலும், நான் ஜல்லிக்கட்டாயப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. இருந்தாலும் – இவர்கள் என்னைக் கிண்டலே செய்ய முயன்றுகொண்டிருந்தாலும் – கடைசியில் இந்த விடலைகளை ‘ரெண்டுல ஒண்ணு’ பார்த்துவிடுவது ஒழித்துவிடுவது என முடிவு செய்தேன் — “நிஜமாகவே நான் பேசவேண்டும் என்கிறாயா? அப்படியென்றால் இரண்டுமூன்று நிமிடங்கள் பேசத் தயார். ஆனால் சர்வ நிச்சயமாக நான் உங்கள் இருவர் பக்கமும் வக்காலத்து வாங்குவதாக இல்லை, சரியா? நீங்களெல்லாம் உருப்படாத வெட்டிப்பேச்சு விடலை வியாபாரிகள் எனத்தான் நினைக்கிறேன்.  உங்கள் இருதரப்புகளிலும் அமோகமாக ஓட்டைகள் இருக்கின்றன. மேலும்,  நான் பேசும்போது என்னை நிறுத்தச் சொல்லக்கூடாது. ஏனெனில், நீங்கள் ஜேஎன்யு விடலைப்பையன்களும் அல்லர் – நான் அந்த பாவப்பட்ட பேராசிரியர் மகரந்த் பரஞ்ச்பெயும் அல்லன் – ஏன், பேராசிரியனுமேகூட அல்லன், கூறுகெட்ட வெறும் பணியாளன் மட்டுமே.

JNU’s Kanhaiya Kumar Goes Berserk And Shouts At His Professor

JNU professor exposes Kanhaiya, asks if he checked facts before making the speech

… but, am sorry – I don’t suffer fools gladly, even much less so with halfbakery.com jokers; get it?”

நான் சொல்லவந்தததைப் புரிந்துகொண்டார்களா, சொன்னதைப் புரிந்துகொள்ள முயற்சித்தார்களா என்பது கூட எனக்கு இன்னமும் சந்தேகம்… இருதரப்பினருமே ‘way to go’ என்றார்கள். hi5க்கள். பெருசு பேச்சில் கோமாளித்தனத்தைக் கண்டுபிடித்து இறும்பூதடையலாம் என நினைத்திருக்கலாம். சொறிபிடித்த கிழக்கோட்டான் என்ன பெரிதாகச் சொல்லிவிடப் போகிறது என்ற எண்ணமும் ஊடாடி இருக்கலாம். நுணல்கள் எப்படியும் தம் வாய்களாலும் கெடும். இரு தரப்பினரும் நினைத்திருப்பார்கள் – எதிர்த் தரப்புக்கு எதிராகச் சொல்வதை நாம் உபயோகித்து விவாதித்து இன்னும் கொஞ்சம் டீ குடித்து மேலதிகமாக அப்பன்/அரசன் பணத்தை, தம் வாழ்க்கைகளை வீணடிக்கலாம் என்று. பாவம்.

அயோக்கிய அற்பச் சோம்பேறிகளுக்கு, அரைவேக்காட்டான்களுக்கு விமோசனம் என்பது அவர்கள் ஜென்மத்தில் இல்லை.

-0-0-0-0-0-0-

மேலும் வளவளாவென்று இந்த எழவெடுத்த சம்பவத்தைப் பற்றி எழுதாமல் நான் பேசியதில் (2-3 நிமிடங்களல்ல – சுமார் 15-20 நிமிடங்கள் பேசியிருப்பேன் என நினைக்கிறேன், பாவம் அந்த விடலைகள்) சில மையப் புள்ளிகளைப் பற்றிமட்டும் கீழே கொடுக்கிறேன்.

விடலைகளின் தரப்புகளிலிருந்து சில அரைவேக்காட்டுத்தனமான க்ஷீணித்த விவாதங்களும் இருந்தன. ஆனால் ஒட்ட நறுக்கிவிட்டேன், மன்னிக்கவும்.

சரி. கோபத்துடன் பேச ஆரம்பித்தால் கெட்டவார்த்தைகளும் ஏகோபித்து வந்துவிடுகின்றன; ஆங்கிலமாக இருந்தால், இது மேலதிகமாகச் சரளமாகிவிடுகிறது, என்ன செய்ய! :-(  ஆனால் இதனை எழுதும்போது அந்தக்கோபம் இல்லை – முடிந்தவரை சரியாக நான் சொன்னதை எழுதவேண்டும் எனமட்டுமேதான் தோன்றுகிறது; ஆனாலும் நான் சொல்லாத விஷயங்களை – பழுப்பு நிறத்தில் கொடுத்திருக்கிறேன், சரியா?

-0-0-0-0-0-0-

தேசத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன – வெறுமனே டீவியில் தினசரியில் முக்கிய முதல்பக்கச் செய்தியாக வருகிறது என்பதற்காக மட்டுமே அல்லது வாட்ஸ்அப் ட்விட்டர் ஃபேஸ்புக் எழவுகளில் ஸ்டேட்டஸ் போடுவதற்காகவோ — கண்டகண்ட விஷயங்களைப் பற்றியும் வெட்டி அக்கப்போரில் ஈடுபடுவது எனக்கு ஒத்துவராது, உங்களுக்கும் ஒத்துவரக் கூடாது. இது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கும் சரி, எதிர்ப்பாளர்களுக்கும் சரி – இருதரப்பினருக்குமே இது வெட்டி டைம்பாஸ்தான்; ஜல்லிக்கட்டுக்குத் தடை என்பது விவாதிக்கப்படவேண்டியதுதான் – ஆனால் வாயோர நுரைதள்ளி வெறிபிடித்து வாரக்கணக்கில் அலைவதற்கு ஒரு முகாந்திரமாக அதனை உபயோகித்துக்கொள்வது சரியில்லை. உங்களுடைய செல்லமான நோம் சாம்ஸ்கி என்ன சொல்கிறார் – we’re defined by our actions, not our words, அல்லவா?

செய்துமுடித்தேயாகவேண்டிய காரியங்கள் என பலப்பல இருக்கின்றன. இவற்றைச் செய்யாமல், ஏன், செய்வதைக் குறித்த சிந்தனைகூட இல்லாமல் – சுளுவாகச் செய்ய முடிந்த மேம்போக்கான காரியங்களை மட்டும், அதுவும் வெட்டி வீரவிளையாட்டுகளை மசுர்க்கூச்செறிக்க அரங்கேற்றுவது பித்தலாட்டம். படுமோசமான மோசடி. அயோக்கியத்தனம்.

எவ்வளவோ கிராமாந்திரக் குழந்தைகள் படிப்பேயில்லாமல், ஏன், உணவுகூட இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கும்போது – தாம்பாளத்தட்டில் நீட்டப்பட்ட வசதிவாய்ப்புகளை வைத்துக்கொண்டு எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டு இங்கு வந்து படிக்கிறேன் என்ற பெயரில் உதவிப்பணத்தில் பம்மாத்து செய்து நடனமாடுவது அநீதி.

அடுத்த பதிவிலும் இது தொடரும்போலிருக்கிறதே! ஐயகோ! :-( 

4 Responses to “ஜல்லிக்கட்டு, ஜல்லியடித்தல், ஜல்லிக்கட்டுடைத்தல் (பாகம் 2/3)”

  1. Aathma Says:

    Nobody can be politically incorrect and paint themselves villain on this ticklish issue than you sir, yet truth..Truth..

  2. Aathma Says:

    But I feel the Ban is unnecessary and govt making false promises year after year..Making them wait till last minute..Strange situation..State govt wants jallikattu.. Opposition wants jallikattu..PM wants jallikattu..CM wants jallikattu..All parties want the event held..Yet nothing happens..For years together.. Please opine on this..


  3. நல்லவேளை நீங்கள் ஃபேஸ்புக் ஏரியாவில் இல்லை. இதை அங்கு எழுதியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கும் போதே பயமாக இருக்கின்றது. வழக்கமாக சினிமா மீம்ஸ்களை லைக்கிக்கொண்டும், ஷேர் செய்து கொண்டிருக்கும் அனைவரும் வெறித்தனமாக, தமிழுணர்வொடு, இந்திய எதிர்ப்பை கலந்து குழும்பு வைத்து கொட்டிகொண்டிருக்கின்றனர்.

  4. nparamasivam1951 Says:

    கடைசியில் திங்கட்கிழமை கிளைமாக்ஸ்!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s