எஸ்ராபீடியனின் செந்தில்-கவுண்டமணீயம்
August 26, 2015
விக்குபீடியனான எனக்கு இப்படித் தொண்டை வறண்டு விக்குகிறதே! யாராவது குடிப்பதற்கு நீர் கொடுத்துத் தொலைக்க மாட்டார்களா? க்க்… க்க்…
…வேதாளராமசாமியாகித் திரும்ப எஸ்ராமுருங்கமரம் ஏறினால்தான் தாகம் தீருமோ? விக்கல் போகுமோ?? எம்குறை அகலுமோ??? பிறவிப் பயனை அடைவேனோ????
காப்பு
பாவம், என் மரியாதைக்குரிய நண்பர். அவரது வாழ்க்கையில் பல பிரச்சினைகள்: எடுத்துக்காட்டாக – தமிழ் விக்கிபீடியா!
அவருக்கு யாராவது உதவமுடியுமா?
…ஏதோ என்னளவில் என்னால் முடிந்தது, என் அய்யன் விக்கின விநாயகனுக்குப் பிரார்த்தனை செய்து, நண்பருக்கு நல்ல புத்தியைக் கொடுத்து, சித்தியையும் ஊக்கபோனஸாக அளிக்கவேண்டுமென்று அவரிடம் வேண்டிக்கொள்வதுதான்.
கவுண்டமணி: டேய், இன்னாடா ஆச்சி?
க: டேய் விக்கிமண்டையா, என்னாடா பம்முற, வாய்க்குள்ளாற இன்னாடா?
செ: இத்தாண்ணேய் – க்க் பனாரசு பான் பீடா!
க: டேய் வாயப் பொளக்கதாடா! அத்து பீடாவோட பொண்டாட்டி போல இருக்குதே!
செ: மன்னிச்ருங்கனண்ணைய், அது ஹி ஹி.. க்க்
க: யெதிர்கால மொதலமைச்சர் அன்புமணி அய்யா வொன்ன இப்ப பாத்தாருன்னா நீ அவ்ளோதாண்டா, பீடிவாயா!
செ: க்க் அண்ணேய், இனிமே பீடி குடிக்கமாட்டேண்ணய் க்… க்
க: டேய் விக்கிபீடியா, இப்ப இன்னாடா தொண்டைக்குள்ளாற?
செ: அத்தாண்ணேய் எஸ்ரா! வாய்க்குள்ள குந்திக்கினு கூவிக்கினு இருக்காரண்ணய்… க்க்
க: இன்னாடா இது புதுசா இருக்கு, இன்னாடா கூவ்றாரு?
செ: “எனது படைப்புகள் குறித்து ஆய்வு செய்து மூன்று பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள், பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள், ஒன்பது கல்லூரிகளில் எனது புத்தகம் பாடமாக வைக்கபட்டுள்ளது.”
க: அப்போ வெ. ராமசாமி அய்யாவோட ஆய்வு எல்லாம் இன்னாடா ஆச்சி? அவரோட வொளப்புக்கு டாக்டர் இல்லே. டாப்டக்கர் பட்டமே கொடுக்கலாமேடா!
செ: ஆடிப்பட்டம் தேடி வதென்னு சொல்வாங்க… எஸ்ரா கதெ பட்ச்சிட்டு வதெ பட்டு வொடம்போட பார்ட்டெல்லாம் ஒருமாரி ஆடிக்கினே இருந்தா பட்டம் கெட்ச்சிடும் அண்ணே! சும்மா வெமர்சனம் பண்ணா விக்கல்தான் வரும்! க்க்
க: ஒட்றா டேய்! சந்தடிசாக்குல எஸ்ரா தன்னோட அடுத்த நாவலையும் எளுதிட்டாராண்டா – விக்கிரம ஊர்வசியம்! அது – ஒரு காலொடஞ்ச கிரம சாமியாரு விக்கிக்கினே ஊருக்குள்ளாற போயி மக்கள வசியம் பண்றதப் பத்தின ஒரே மண்டெகொட்ச்சல் முன்பழையத்துவக் கதையோ!
செ: இல்ல பாஸ். அது அவரோட ஈங்க்லீஸ் விக்கிபீடியா என்ட்ரிய, தமிள்ள அவ்ரே அவ்ரோட பாணில மொளிபெயர்த்துக் கொடுத்துருக்காரு. அவ்ளோதான்! பயப்படாதீங்க!!
க: இண்டர்னெட் மண்டையா! அப்போ தமிள்இது சரியா, ஈங்க்லீஸ்அது சரியா?
செ: ரெண்டும் வொண்ணுதான் பாஸ்.
க: டேய் உப்புமாபாண்டவத் தலையா, இன்னாடா சொல்றே?
செ: உப்புமா தன்னைத்தானே பார்த்து குத்ச்சி குத்ச்சி சிரிச்சிக்குதுண்ணைய்!
க: டேய் இன்னாடா ஸொல்ற, தேசாந்திரியா!
செ: அண்ணைய், இன்னும் பல மொளிகள்ள – மலையாளம், ஜெர்மன், பிரெஞ்சு வங்காளம், கன்னடம், தெலுங்கு அல்லாத்திலையும் அவரோட விக்கிபீடியா குறிப்பு எள்தப்போறாராம் எஸ்ரா!
க: மக்களின் பேராதரவு பெற்ற கோபால்பல்பொடி மண்டையா, இன்னாடா வொளர்றே!
செ: அப்பால, அதெயெல்லாம் டமிள்ல மொளிபெயர்க்கணுமாம்!
க: தலெ சுத்துதே!
செ: “ஏழு இலக்கிய உரைகளும் ஏழு உலகச் சினிமா சார்ந்த உரைகளும் நிகழ்த்தியிருக்கிறேன், இரண்டும் மிகப்பெரிய வாசக வரவேற்பை பெற்றவை.”
க: சினிமாமண்டையா! அதென்னடா ஏழு வொலகச் சினிமா? அவ்ரு போன மிச்ச ஆறு வொலகம் எங்கடா! பெரிய்ய விண்வெளி ஆராய்ச்சியாளராடா எஸ்ரா?
செ: அண்ணைய், அவ்ரு முற்றும் உணர்ந்த ஞானி! பொறாமைல பேத்தாதீங்கண்ணைய்!
க: டேய் இலக்கியவாயா! அவ்ரோட வாசகர்களெல்லாம் குண்டுகுண்டா தொப்பையும்தொந்தியுமா இருப்பாங்களாடா? எப்டீடா அவ்ரு ‘மிகப்பெரிய வாசக வரவேற்பை’ன்னிட்டு எள்தறாரு…
செ: “நான் எழுதியுள்ள எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா ஆகிய இரண்டு வரலாற்று நூல்கள் இந்திய வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் முக்கிய நூல்கள் ஆகும்.”
க: இன்னாடா எம்ஃபில் தலையா, இந்த நூல்கள வெச்சி பட்டம் விட முடியுமா? பேதி வருதே! நானுங்கூட எனது வழுக்கைத் தலை, விக்கால் மறைக்கப்பட்ட தலை அப்டீன்னிட்டு ரெண்டு நூல அட்ச்சுவுட்லாமேடா!
செ: “கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களைச் சந்தித்து உரையாற்றியிருக்கிறேன், நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களிடம் வரலாறு, இலக்கியம் பண்பாடு குறித்துப் பேசியிருக்கிறேன்.”
க: ஏண்டா யாமவாயா – டமிள் நாட்ல எஞ்சினீயருங்கோ கலெஅறிவியல் பசங்கொ – எனிமா கொடுத்தாப்ல பேஸ்தடிச்சிக்கினு ஏனிப்டீ அலையரானுவன்னிட்டு பாத்தா இத்தானா ரீஸன்?
செ: “எப்போது எழுத துவங்கினேன், எத்தனை ஆண்டுகளாக எழுதி வருகிறேன். இதுவரை எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ”
க: டேய் ஒற்றெழுத்துமண்டையா! தொணையெழுத்துக்கு பதிலா, அவ்ரு ஒற்றெழுத்துன்னிட்டாவது எள்திர்க்கலாமேடா! இனிமேதாண்டா அவ்ரு எள்தவே ஆரம்பிக்கணும்… அதுக்குள்ளாற இன்னாடா துயில் கலெஞ்சு பூட்டாரு?
செ: “எனது கதை கர்ணமோட்சம் குறும்படமாக்கபட்டு தேசிய விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது, ”
க: டேய் இலக்கியத் தலையா! தமிளுக்கு கதிமோட்சமே இல்லையாடா? இன்னாடா ரெஸ்டே குடுக்காம அட்ச்சுவுட்டுக்கினு இருக்கியே! இப்ப சொல்லு: இன்னிக்கு எவ்ளோ எஸ்ரா கதெ பட்ச்சே?
செ: என்னைய நல்லா அட்ச்சுருங்க அண்ணைய். அவ்ரோட கதெ படிக்கற பாவத்துக்கு வொங்ககிட்டயே அடி வாங்கிடறேன்…
க: ஏண்டா?
செ: அடிதாண்ணேய் அது!
சுபம்.
அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )