வாடிக்கையாளர்களுக்கொரு நற்செய்தி! நாம்தமிழர் சீமாரின் புதிய பிரகடனம்!! + மூன்று குறிப்புகள்

August 4, 2015

நாம்தமிழரும் என் ஒர்ரே அபிமானத் தலைவருமான சீமான் அவர்கள், அண்மையில் வெளியிட்டிருக்கும் பயபீதி அளிக்கும் பிரகடனம்:
எனக்கு மூலம், பௌத்திரம், தறுதலைப்புலியாதரவு போன்ற தீராவியாதிகளுடன், அண்மையில் ஜிஹாத் வியாதியும் பிடித்திருக்கிறது!

ஆதாரம்:

அண்மையில் நண்பர் ஒருவர், மனம் வெதும்பி, நொந்துகொண்டு அனுப்பிய புகைப்படம் (கோயமுத்தூரில் எடுக்கப்பட்டது - அவருக்கு நன்றி சொல்லவேண்டுமா, அல்லது என் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தியதற்கு அவர் மண்டையில் செல்லமாக ஒரு குட்டு தரவேண்டுமா என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை!)

அண்மையில் நண்பர் ஒருவர், மனம் வெதும்பி, நொந்துகொண்டு அனுப்பிய புகைப்படம் (கோயமுத்தூரில் எடுக்கப்பட்டது – அவருக்கு நன்றி சொல்லவேண்டுமா, அல்லது என் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தியதற்கு அவர் மண்டையில் செல்லமாக ஒரு குட்டு தரவேண்டுமா என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை!)

எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? ஆக, இதனை அணுஅணுவாக, சென்டிமீட்டர் சென்டிமீட்டராக ரசித்தேன்!

மிக முக்கியமாக பிரபாகர எழவுப் படம் ஒன்றைப்போட்டு, அதற்குக் கீழே அறப்போராட்டம் என்றும் கதறுவதைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பு தாளவில்லை! (ஒருவேளை கழுத்தை அறுக்கும் போர்வெறியாட்டங்களைத்தான் அறப்போராட்டம் என்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது!)

எது எப்படியோ…

வீழ்ந்துவிடாது வீரம்!

மண்டியிடாது மரணம்!!

குண்டியிடாது குதம்!!!

ஆம்!
எதுகையிடாது மோனை!
கும்ப கரணம் தப்பினால் செம்ம மரணம்!!
அடுக்குமொழியில்தான் பொறுக்கிநடை!!!

! எனக்கே வீரத்தில் நரம்புகள் எல்லாம் தெறித்து ரத்தம் சுண்டிவிட்டது. ஒர்ரே உணர்ச்சிக் கொந்தளிப்பு! தயவுசெய்து யாராவது எனக்கு உதவிசெய்து – இனவிரோதிகளை, காஃபிர்களை அடையாளம் காண்பித்தால் நான் அவர்களின் கழுத்துகளைச் செல்லமாக அறுத்தெடுக்கத் தயார்!

வீரவேல் வெற்றிவேல்! இனமானம் வாழ்க!!

ங்கொம்மாள, எங்கடா அந்த வாகை, ங்கோத்தா, அத எப்டீடா சூட்டிக்றது… நாங்கள்ளாம் பொற்னானூற் வீரங்கடா!!

-0-0-0-0-0-0-0-

எனக்கு,  இந்த போஸ்டர் / சுவரொட்டி / ஒட்டுவாரொட்டி தொடர்பாக இரு மகாமகோ ஆச்சரியங்கள்:

#1.  இந்த பாபுலர் ஃப்ரன்ட் ஜந்து பற்றி, கொஞ்சம் வரலாறு:  (இந்த எழவெல்லாம், நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம்தான்; ஆனால் நாம் தமிழர்களானதால் நமக்கு மறதி கொஞ்சம் அதிகம் என்பதால்…) தீவிர/வெறி இஸ்லாம்வாத ஸிமி (Students Islamic Movement of India,  இஸ்லாமிய மாணவர்களின் இயக்கம்) என்பது வெகு தீவிரமாக இயங்கி வந்த ஒரு கும்பல். பலப்பல கொலைகள், வெடிகுண்டுகள் எறியல் போன்ற வெறுப்புக் குற்றங்களை நடத்திய இந்த இயக்கம் – ஸவுதி அரேபிய பிச்சைப் பணத்தாலும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ (Inter Services Intelligence பாகிஸ்தானிய ராணுவத்தின் உளவு/சதிப்பிரிவு) அமைப்பாலும் போஷகம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்டது; இந்தியாசார் வெட்கங்கெட்ட தொழில்முறை மனிதவுரிமைக்காரப்  பேடிகளின் செல்லக் குழந்தையிது.

பலமுறை விட்டுவிட்டுத் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம் – கடைசியில் 2008 என நினைக்கிறேன் – ஒருவழியாக ஒருமனதாகத் தடை செய்யப்பட்டது; ஆனால் இதே அமைப்பு வேறு பெயரில் ‘பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ – பிஎஃப் என மினுக்கிக் கொண்டு உயிர்த்தெழுந்திருக்கிறது. பழமைவாத வெறுப்பிய ஸலாஃபிய-வஹ்ஹாபியத்தையும், அதன் சகோதரனான  வன்முறை ஜிஹாத்தையும் தொடர்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கும் இந்த நச்சு அமைப்பு, இந்த ஜன்மத்திலும் பலப்பல மார்க்ஸிஸ்ட்களையும் ஸ்வயம்ஸேவக்க்குகளையும் படுகொலை செய்திருக்கிறது. ஊக்கபோனஸாக, அதே போஷகர்கள்!

இதற்குப் பல நிழலான உப/சகோதர(!) அமைப்புகள், நாடெல்லாம் – ஸோஷியல் டெமொக்ரடிக் பார்டி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என ஆரம்பித்து இந்தச் சுவரொட்டியில் இருக்கும் பல கிரேக்கத்தொன்ம ஹைட்ரா வகை ஜந்துக்கள்;  இவை பலவகைகளிலும் முஸ்லீம்களை அறியாமையில், பயத்தில், ஏழ்மையில், தனிமையில் வைத்திருக்க ஆவன செய்துகொண்டே இருக்கின்றன.

போதாக் குறைக்கு இவர்களுடன் ஜவாஹிருல்லாவின் மனித(!)நேய(!!) மக்கள் கட்சிவேறு, கேட்கவேண்டுமா வெறுப்பியப் பிரச்சாரத்துக்கும், பாவப்பட்ட முஸ்லீம்கள் தனிமைப்படுத்தப் படலுக்கும்…!

நான் இரண்டுமூன்று நாட்களுக்குமுன் போன ஒரு பெங்களூர் மசூதி உட்பட – நான் இதுவரை சென்றிருக்கிற ஒவ்வொரு தமிழக மசூதியிலும் இந்த் பாபுலர் ஃப்ரன்ட் நடமாட்டம் (சுவரொட்டிகள் மட்டுமல்லாமல், அதன் ஊழியர்களும்) இருப்பது, இந்திய முஸ்லீம்களுக்கு நல்லதேயல்ல, இந்தியாவையே விடுங்கள்.

இம்மாதிரி ஜந்துக்கள் – முஸ்லீம்களை ஒழிக்கவென்றே, ஜனநாயக பாரதத்தை அழிக்கவென்றே அவதரித்திருக்கும் அமைப்புகள் – எப்படி இவ்வளவு தைரியமாக இந்தியாவில் உலா வரமுடிகிறது?

#2.  ஒரு சமயத்தில் – விடுதலைப் புளி பிரபாகரனுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம்களுக்கும் ஒத்து வரவில்லை – இதற்குப் பல காரணங்கள்; ஆனால் விடுதலைப்புளிகள் – அவர்கள் உதிரி வழக்கம்போல – மானாவாரியாகக் கொன்றது பாவப்பட்ட சாதா முஸ்லீம்களை. ஒரு சமயம், ஒரு மசூதிக்குள்ளேயே துப்பாக்கி யுத்தம் நடத்தி, இஸ்லாமிக் ஸ்டேட்காரர்களைப் போல அவர்களைக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் அற்ப ஜிஹாதிகள் என்றால் இதனைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அது அப்படியல்ல. போய்ச் சேர்ந்தவர்கள் பாவப்பட்ட முஸ்லீம்கள்.

நிலைமை இப்படி இருக்கையிலே, இப்போது – ஒரு கமுக்கமான  தீவிர இஸ்லாம்வாத அமைப்பின் பல உபஅமைப்புகள் ஒன்று சேர்ந்து மாவீரன் சீமாரின் கீழே அணி திரண்டு, அதுவும் கொலைகாரப் பிரபாகரன் புகைப்படத்தை எழவு வேறு போட்டுக்கொண்டு போராளிக் குசுக்களை விடுவது என்பது ஆச்சரியம் தான்! ம்ம்ம், ஆனால் யோசித்தால் இந்த இஸ்லாமிய வெறியர்களுக்கு சாதாரண முஸ்லீம்கள் முக்கியமேயல்லதானே! ஜிஹாதிகளின் வெறிச் சதியாட்டங்களுக்குப் பின்னவர்கள் வெறும் பலியாகவேண்டியவர்கள் (=cannon fodder) தானே!

இதனால் என்ன தெரிகிறதென்றால் – இந்த பாபுலர் ஃப்ரன்ட் தீவிர இஸ்லாம்வாத உதிரிகள் வளர்வதன் காரணமாக, முஸ்லீம்கள் மேலும்மேலும் பிரச்சினைகளிலும் படுகுழியிலும் விழப்போகிறார்கள். கேடுகெட்ட பிரபாகரன் படத்தின்கீழ் இவர்கள் அணி திரள்வதே இதற்குச் சாட்சி!

கொடிது, கொடிது – இந்திய/தமிழக முஸ்லீம்களுக்கு சரியான தலைமை வாய்க்காதது மட்டுமல்லாமல் – அது வெறியர்களிடம் போய்ச் சேர்வது.

#3. இது ஒரு கவலை:  சீமான்கள் அமோகமாகக் கிண்டல் செய்யப்படுகிறார்கள் என்றாலும், எனக்கே அவர்களைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகுதய்யா என்றாலும் – என் ஊர்ச்சுற்றல்களில் எனக்குப் படுவது என்னவென்றால், வேலைவெட்டியற்ற விசிலடிச்சான் குஞ்சப்பத் தமிழ் இளைஞர்கள், மேலும்மேலும் சீமான் வகையறாக்கள் பின்னால் அணி திரள்வது அமோகமாக நடக்கிறதோ, அல்லது இது என் தொடரும் பிரமையா? (பார்க்க, இன்னொரு சீமார் பதிவு: இதுதாண்டா தமிழனின் பேராண்மை இழப்பீடு! 27/11/2013)

…ஏனெனில் திராவிடத் தலைவர்கள் (இந்தத் திராவிடத் தலைவர்களின் பேரணியில் நான் திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்களைக் கூட நிச்சயம் இணைப்பேன்) அனைவருமே நம்பகத்தன்மையைப் பெரும்பாலும் இழந்துவிட்டார்கள்; ஆக,  நீண்டகால நோக்கில் அற்ப வெறியாளர்களிடம், உதிரிகளிடம் நம் இளம் அறியாமைச் சிங்கங்கள் அகப்பட்டுக்கொண்டுவிடக்கூடாதே, வெட்டி வன்முறைப் பாதைகளை அடையக்கூடாதே என்று எனக்குக் கொஞ்சம் கவலையாக  இருக்கிறது.

இது இப்படியாகாது என்று யாராவது எனக்குச் சொன்னால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். :-(

-0-0-0-0-0-0-

தொடர்புள்ள பதிவுகள்:

11 Responses to “வாடிக்கையாளர்களுக்கொரு நற்செய்தி! நாம்தமிழர் சீமாரின் புதிய பிரகடனம்!! + மூன்று குறிப்புகள்”

  1. nparamasivam1951 Says:

    இரு வருடங்களுக்கு முன் நான் சீமானை ஒரு பொருட்டாக எண்ணவில்லை தான். ஆனாலும் நம் தமிழக வாலிபர்கள் இவனையும் ஒரு தலைவனாக அங்கீகரித்து விட்டார்கள். எனக்குப் பின் பத்து பேர் இருந்தால் நானும் ஒரு தலைவன் தான். இவனையும் ஜவஹிருல்லா வையும் பெரிய மனிதன் ஆக்கியது அதிமுகாவின் சாதனை. தமிழ் இளைஞர் கள் தமிழகத்தை விட்டு சற்று வெளியில் வந்து பார்த்தால் தான் தாங்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டு உள்ளனர் என்பது புரியும்.


    • …ஆனால், ஒரு எண்ணம்: ஈவெரா பெரியாராலேயே தமிழகத்தைத் துப்புரவாக ஒழிக்கமுடியவில்லை – இந்த ஜிஹாதிகளும், சீமான்களுமா அதனை ஒழித்துவிடப் போகிறார்கள் – என்பதும் ஒரு ஒண்ணரைக்கண் பார்வையோ?

  2. ravi Says:

    இது இப்படியாகாது என்று யாராவது எனக்குச் சொன்னால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். :-(

    கவலை படாதீர்கள் .. டாஸ்மாக் இருக்க பயம் ஏன் !!


    • சரிதான், கூட இந்த தமிழ்ச் சினிமா எழவும் இருக்கிறது; கிரிக்கெட்டும்போக முடியும். இருந்தாலும்…

    • Sivakumar Viswanathan Says:

      டாஸ்மாக்கை வீழ்த்தவும் புரட்சிப்’படை’கள் கிளம்பிவிட்டதாக அறிகிறேன். அந்த ஆறுதலும் இனி இ(அ)ங்கில்லை. ஆங்கோர் டாஸ்மாக் பொந்தினில் வைத்த அற(ரை)வேக்காட்டுத்தீயில் வீழ்வது நாமாக இல்லாவிடினும் தேர்தல் நேரத்து ஒட்டாக இருக்கட்டும். வால்க புர்ச்சி

  3. Manohar Says:

    Sir, when i went to Hosur 2 weeks back i saw a small poster in front of the Dargah there (the one near Chennai silks now, Dargah bus stop).
    It had some pictures of guys and said Owaisi fan club!

  4. A.Seshagiri. Says:

    சார்,கடந்த இரு நாட்களாக ‘குசு’வாக போட்டு தாளிக்கிறீர்கள் :-(
    உங்களின் கொதிப்பு அடங்க இன்னொரு ‘குசு'(சாரி) ‘கொசு’.இன்று ‘ஜெமோ’ தளத்தில் பார்த்தது.நம் வாசகர்களுக்காக.
    http://www.jeyamohan.in/77515#.VcBcZGewvMk

  5. Hema Says:

    Sir
    உங்களிடம் தமிழ் விளையாடுகிறது . உங்களின் கட்டுரைகளை படித்தவுடன்
    என்னை அறியாமலே புன்னகை .☺……ஆனாலும் உமது (நமது ) ஆதங்கம் நியாயமானதுதான் .
    Hema

  6. ulakabathan Says:

    Super


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s