பகீர் செய்தி! எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு *********!!

August 13, 2015

மன்னிக்கவும்; இந்தப் பதிவை வைத்துக்கொண்டு, ‘விடுதலை’ வீரமணி அவர்கள், ‘சீனர்கள், ஸெராமிக்டைல் கற்காலத் தமிழர்களே!‘ எனச் சினமுடன் சீறும் சிறுத்தை அறிக்கையைச் செவ்வனே வெளியிட்டால், பின்னர் சீமார்சீனார் மேற்கொண்டு, தமிழ்சீனத்துக்காக ‘நாம் தமிழ்ச்சீனர்‘ எனவொரு இயக்கத்தை ஆரம்பித்து, ஒரு சீன் போட்டால் – அந்த எழவுகளுக்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியவேமுடியாது; முதலில் இதனைச் சொல்லிவிடுகிறேன். ஏனெனில், திராவிடப் பகுத்தறிவின் பொற்காலம் அப்படிக் கெட்டுக் கிடக்கிறது! எந்தப் புத்தில், எந்த திராவிட ஜீபூம்பா இருக்குமோ, நானறியேன்!

-0-0-0-0-0-0-

இன்னொன்று: இதனை நான் உங்கள் காலில்விழுந்து இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்… தயவுசெய்து இந்த பரம ரகசியத்தை வேறு யாரிடமும் (முக்கியமாக, விமலாதித்த மாமல்லனிடம்) சொல்லிவிடாதீர்கள்.  இதற்கு, உங்கள் கீபோர்ட்மீது அடித்துச் சத்தியம் செய்யவும்…

அந்த ரகசியம் என்னவென்றால்… நான் பலபத்தாண்டுகளாக எஸ்ரா அவர்களின் எழுத்து(!)களை மண்டையில் அடித்துக்கொண்டு படித்து, அவருடைய தமிழானது, ஒரு அற்ப தமிழ்வாசகனான என்னுடைய தமிழைவிடவும் படுகேவலமாக இருக்கிறது எனக் கருதுகிறேன் அல்லவா? உங்களுக்கு, அவருடைய எழுத்துகளுடைய தன்மையின் காரணம் தெரியுமா??

கிட்டே வாருங்கள். இது ஒரு மகாமகோ ரகசியம்! இதனை இன்றுதான் தெரிந்துகொண்டேன்!!

எஸ் ராமகிருஷ்ணன், ஒரு சீன யாத்ரீகராம்! யுவான் சுவாங் அவர்களின் தலைமுறையினர்வேறாம்… :-(

நீங்கள் ஐந்தாம் கிளாஸ் வரை படித்திருக்கலாம் என்று கருதுவதற்கு,  முதற்கண் என்னை  மன்னிக்கவும். சரி. உங்களுடைய ஐந்தாங்க்ளாஸ் வரலாற்றுப் புத்தகத்தில், முதுகில் ஒரு அலங்காரமூங்கிற்கூடையைச் சுமந்து கொண்டு,  நீளக்கம்பி மீசையை வழியவிட்டுக்கொண்டு, தலையிலிருந்து இடுப்புவரை மட்டும் உடம்பை வைத்துக்கொண்டு அலையும் சைனாக்காரர் படம் ஒன்றைப் பார்த்திருப்பீர்களே! சாட்சாத் அதே யுவான் சுவாங்தான்!  (சிறுவயதிலிருந்து எனக்கு இந்தக் கேள்வி: வரலாற்றுப் புத்தகங்களில் உள்ள அனைத்து வரலாற்று நாயகர்களுக்கும், இடுப்புக்குக்கீழே, ஏன் ஒரு பகுதியும் இல்லை? நிலைமை இப்படி இருக்கையில், அவர்களுக்குக் குழந்தைகள் எப்படிப் பிறந்திருக்கும்? கேள்விகள், கேள்விகள்…)

ஹ்ம்ம்ம்… எது எப்படியோ, வாத்தியார் சொல்வதைக் கேட்டு அவர் (வாத்தியாருடையதை அல்ல) படத்தை வரைந்து பாகங்களைக் குறித்திருப்பீர்களேயானால் உங்களுக்கு நான் சொல்வது விளங்கும். ஆனால், நான் சொல்வது விளங்காமல் இருப்பதால்தானே தொடர்ந்து இந்த ஒத்திசைவு எழவையும் தொடர்ந்து படிக்கிறீர்கள்!

…இருந்தாலும்… சொல்லவே வெட்கமாக இருக்கிறதே! ஒரு சீன வம்சாவளியினர் கஷ்டப்பட்டு, தமிழ் அலக்கியத்தைத் தளராமுயற்சியுடன் எழுதுவதை இப்படி கேலி செய்துகொண்டிருந்து விட்டேனே!

எனக்கு மன்னிப்பு உண்டா? :-(

கருத்துப்படம்: தமிழ்ச்சேவையின் முப்பெரும் சீனர்கள்: மார்க்கோ போலோ, எஸ்ரா, சீனார்

கருத்துப்படம்: தமிழ்ச்சேவையின் முப்பெரும் சீனர்கள்: மார்க்கோ போலோ, எஸ்ரா, சீனார் (ஹ்ம்ம்… இவர்களுக்கும் இடுப்புக்குக் கீழ் ஒன்றும் இல்லையோ?)

-0-0-0-0-0-0-

 ‘அட்ச்சுவுடல் திலகம்’ எஸ்ரா அவர்களின், இரக்கமோ கருணையோ துளிக்கூட அற்ற அட்டூழியங்களுக்கு அளவேயில்லை!

Screenshot from 2015-08-13 10:02:17
“பஷீரை சந்தித்த போது சீன யாத்ரீகன் மார்க்கோ போலோவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தது போன்ற அனுபவமேயிருந்தது.”  (http://www.sramakrishnan.com/?page_id=70)

ஆமாமய்யா எஸ்ரா, ஆமாமாம்!

மார்க்கோ போலோ ஒரு சீன யாத்ரீகர்! ஏனெனில், இட்டலி (இத்தாலி) சீனாவின் ஒரு அங்கம்!! ஆனால் சட்டனி அப்படியல்ல, சரியா?

மேலும், இத்தாலி என்பதே  ‘இந்த தாலி‘ என்ற தமிழ்ச் சொற்றொடரின் சுருக்கமே! (ஆனால் அய்யன்மீர், விடுதலை வீரமணி அவர்களிடம் மட்டும் இதைப் பற்றித் தயவுசெய்து சொல்லிவிடாதீர்! இல்லாவிடில், பராக்கிரமம் மிக்க அவர், அந்த நாட்டையே அறுத்து விட்டெறிந்து விடுவார்!)

மஸ்ஸொலினி (=முசோலினி) ஒரு தமிழ் மாது; அதுமட்டுமல்ல, அவர் ஹேமமாலினியின் அத்தைபெண்!!

ஸோனியா காந்தி ஒரு இத்தாலித் தமிழச்சி. ஆகவே, அவருடைய பாட்டியான மஹாத்மா காந்தி ஒரு தமிழச்சி!

…அது மட்டுமல்லாமல், காந்தி, முக அழகிரியின் மனைவியும்கூட!

ஆகவே – முக அழகிரி ஒரு இத்தாலிய யாத் ரீகன்! அவரைச் சந்தித்தபோது, ரொனல்ட் ரீகன் நினைவுடன் டொனல்ட் டக் ஒன்றும் இலவச இணைப்பாக, ஆடித் தள்ளுபடியாக ஆடிக்கொண்டே வந்தது. அதுவும் எழவு க்ளக் ம்ளக் என்று ஏதேதோ சொல்லிக்கொண்டுவேறு!

… அது என்னைப் பார்த்தபோது, நான் அதைப் பார்த்து புத்தி பேதலித்து வாயிலிருந்து நெடுங்குருதி பொங்க, இயல்பாகவே ரத்தம் கக்கி, யதார்த்தமாகச் செத்தேன்!

வாத் டு யூ மீன்?  அந்த வாத்து, கவாத்து எடுக்கப்பட்ட ஒன்றாதலால், அதனால் மீன் சாப்பிடமுடியாதாம்.

வாத்துண்டாம் நல்ல மனமுண்டாம்.

உங்களுக்கு நல்வாத்துகள்.

-0-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்ம்…

நான் நிபந்தனையற்றுச் சரணடைந்து, எஸ்ராவல்களில் ஐக்கியமாகி, அவரைப் போலவே யோசித்துப்(!) பார்த்தால்…

…நானும் சுமார் இரண்டுமூன்று மாதம் முன்புபோல பத்ரி சேஷாத்ரியைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது – அப்போது எனக்கு,  மலையேறி, சாட்சாத் பத்ரிநாத் சென்ற அனுபவமே ஏற்பட்டது. கிழக்கு பதிப்பக மாடிப்படி ஏறிஏறி மாளவில்லை. :-(

ஏ ஆர் ரஹ்மானைச் சந்தித்தேன்! அப்படியே நரசுஸ் காப்பி குடித்த அனுபவம்!

பழம்பெரும் (=Fruit Getting ©எஸ்.ராமகிருஷ்ணன்) இந்தி நடிகை ஜீனத் அமன் அவர்களைப் பார்த்தேன்! அப்படியே சீனத்து அம்மனைப் பார்த்ததுபோலவே இருந்ததால், நெகிழ்ந்து கன்னத்தில் போட்டுக்கொண்டேன். திவ்ய தரிசனம்.

உருளைக்கிழங்கு போண்டா ஒரு ப்ளேட் சாப்பிட்டேன். மைசூர்போண்டா சாப்பிட்டுக்கொண்டே – அப்படியே மைசூருக்கு ஒரு உருளியில் உருண்டுகொண்டே சென்ற அனுபவம்!

சீமானைச் சந்தித்தேன்; அப்போது எனக்கு, பைத்தியக்கார ஆஸ்பத்திரி நினைவுக்கு வந்தது.

பிரபாகரனை உயிருடன் பார்த்தேன். பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்பும் நெடுமாறன் அவர்கள், என்னை அவரிடம் அழைத்துக்கொண்டுபோனார். ஆ! அடப்பாவிகளா, திரும்ப பூலோகத்துக்கு நான் போகவே முடியாதா?

திருட்டு டீவிடி படம் பார்த்து நெகிழ்ந்தேன். அறவுணர்ச்சியின் மேன்மையைப் பற்றி ஹிட்லர் மௌனமாகச் சொன்னதை எழுதவேண்டும் என தனக்குத்தானே சிரித்துக்கொண்டேன். அடுத்த சென்னைப் புத்தகக கண்காட்சிக்கு, ‘உலகத் திருட்டுப்படங்கள்‘ என நான் எழுதப்போகும், ஒரு புத்தகத்தை மயிர்மை வெளியிடும் அல்லவா?

–0-0-0-0-0–

…இப்படி எல்லாவற்றையும் ஒரு சுற்றுச்சுற்றிக் கடேசியில் மார்க்கோ போலோ பக்கமே திரும்பிப் போனால் – அந்த எழவு,  டாடா கம்பெனிக்காரன் செய்யும் ஒரு பேருந்தாமே!

Screenshot from 2015-08-12 01:48:10

அசைக்கமுடியும் ஆதாரம்: பேருந்தின் முன்பக்கத்தில் டாடா (TATA) என்று எழுதப்பட்டிருப்பதற்கு வலதுபக்கம் மார்க்கோ போலோ (marcopolo) இருக்கிறார், கூர்ந்து கவனிக்கவும்!

அய்யோ!

…ங்கொம்மாள, அப்போ பேருந்துகளெல்லாம் சீன யாத்ரீகர்களோ?

ஒர்ரே குழப்பமாக இருக்கிறதே, என்ன செய்ய! :-(

-0-0-0-0-0-0-

…அதே எஸ்ராவலிய நேர்காணலில் இருக்கும் பலப்பல பிற முத்துக்களில், ஒரேயொரு மேலதிக எடுத்துக்காட்டையும் இலவச இணைப்பாக அளிக்கிறேன்:
கர்ப்பிணி ஒருத்தி நடந்துவரும் போது அவள் வயிற்றில் உள்ள குழந்தை தன் இருப்பிடத்தில் இருந்து நகரவேயில்லை ஆனால் குழந்தையும் பலமைல் துரம் கடந்து தானே செல்கிறது. இது யதார்த்தமா , இல்லையா?

ஆ! எஸ்ரா!! ஏன் இப்படியொரு போடு போடுகிறீர்கள்? (இருந்தாலும், எனக்குள் ஒரு இனம்புரியாத நெகிழ்வு!  டேய் எங் கோமணம் நழுவுதுடா, ஆ! அய்யோ!)

இந்த கர்ப்பிணிப்பெண்யதார்த்தவாதத்தைப் படித்துவிட்டு எனக்கு இதயம் இனித்து, கண்கள் பனித்து, மூத்திரம் சொட்டி, பேதி எடுத்து, சளியொழுகி, வாந்தி வருகிறதே!

அந்தப் பாவப்பட்ட பெண் வெகுதூரம் நடந்ததால்தான் தூரத்தின் கால் தேய்ந்து உடைந்து, துரம் ஆகிவிட்டதோ?

இதுதான் யதார்த்தமோ? :-(

அதெப்படி கர்ப்பப்பையிலிருந்து அந்தக் குழந்தை மேலேறி, வயிற்றுக்குப் போக முடிந்திருக்கிறது? அது ஏதாவது பின்நவீனத்துவ எழவுக் குழந்தையோ?

தலெ சுத்துதேப்பா! :-((

எஸ்ராமகிருஷ்ணன் ஆடுறார் – ஒத்திக்கோ, ஒத்திக்கோ
சீனாவோட யாத்ரீகன் தான் – ஒத்துக்கோ, ஒத்துக்கோ!
சுபம்.
 அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (31/12/2014 வரை )

15 Responses to “பகீர் செய்தி! எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு *********!!”


  1. சிரித்து மாளவில்லை :) வாழ்த்துகள்!

  2. Ramanan Says:

    Laugh out Loud :D

  3. பொன்.முத்துக்குமார் Says:

    ஐயா சாமி, கண்ணுல தண்ணி வந்துடிச்சி. ஏங்க இப்படி ஒரு கொலவெறி :)) ஐயோ ஐயோ ஐயய்யோஓஓஓஓ

  4. க்ருஷ்ணகுமார் Says:

    சீன யாத்ரிகர் மட்டுமா. பழங்குடியினருக்காகப் போராடும் மகேஸ்வததாதேவியை கண்டடைந்த சந்தோஷத்தை விட்டு விட்டீர்களே.

    மகேஸ் வத தா தேவி

    அஃதாவது ஆரியக் கடவுள் மகேஸ்வரனை வதைத்தெடுக்கும் தானைத் தமிழரது தனித்தமிழ்த் தேவி இவர் ……….

    மே 2014 தேர்தல் முடிவிற்குப் பிறகு கன்னத்தில் குழி விழ கள்ளச்சிரிப்புடன் உலகோருக்குக் காட்சியளித்த ராகுல் காந்தியாரைக் கண்டபோது என்ன ஒரு சந்தோஷம் கிட்டியதோ……. சற்றொப்ப ……அதே சந்தோஷம் ஆரியக் கடவுளை வதைத்தெடுத்த மகேஸ் வத தா தேவியய்க் கண்டபோது ஐயன் எஸ் ரா அவர்கட்குக் கிட்டியதாக அறியக்கடவீர்.

    இப்படியெல்லாம் சந்தோஷம் ஒரு தமிழருக்குக் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் பாவம் பழங்குடியினருக்காகப் போராடியே இருக்க மாட்டார் மஹாச்வேதா தேவி


    • அய்யா க்ருஷ்ணகுமார்!

      எனக்கு இருப்பதோ ஒரேயொரு உயிர், ஒரே உடம்பு, பத்து விரல்கள் – ஆனால், கால் விரல்களையும் சேர்த்து தட்டச்சு உதையச்சு செய்தால்கூட இந்த எஸ்ராவல்களில் ஒரு சிறுபகுதியைக் கூட என்னால் தடுத்தாட்கொள்ளமுடியவில்லையே என்பதை நினைத்தால்… என் நெஞ்சு வெடித்து விடும் போலிருக்கிறது… இந்த சராசரிப் பிரகிருதியை ‘ஆவன’ செய்ய ஒரு பெரிய சேனையால் தான் முடியும். அதற்குள் விகடனில் வேறு இன்னொரு தொடர்வதையாம்! ஓட்றா டேய்! (மன்னிக்கவும்)

      இந்த அழகில் – நீங்கள் வேறு, அதைச் செய்யவில்லையே இதைப் பார்க்கவில்லையே என்கிறீர்கள்!

      யோவ் கொமாரு, வொனக்கு கருணயே இல்லபா! ஆள வுடு!

  5. Anonymous Says:

    சார், எஸ்ரா விமலாதித்த மாமல்லனுக்கு என்ன தொடர்பு? ஙே …புரியலையே


    • பாவி அனாமதேயக்காரரே! இதற்கெல்லாமா பாலபாடம் எடுக்கவேண்டும்? டென்வர் பக்கம் யாரையாவது கேட்கவேண்டியதுதானே!

      விமலாதித்த மாமல்லனின் இயற்பெயர் நரசிம்மன்!

      காரணப் பெயர் நரசிம்மம்! மானுடச்சிங்கன்!! நர நர… அழகியசிங்கருக்கு மருமகன் முறை! டாப்டக்கர் சிங்கர்.

      அய்யா, அவருக்கு இந்த எஸ்ரார்கோ போலோ விஷயம் தெரிந்தால், ஏற்கனவே கனகோபத்துடன் வீட்டுவாசற்படியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் அவர், தன் கூரிய நகங்களால், அவர் (=எஸ்ரா) வயிற்றைக் கிழித்து குடலை மாலையாகப் போட்டுக்கொண்டு விடுவார்…

      ஒரு மகாமகோ குடலைமாடன் அவர்! ஜாக்கிரதை.

      ஆயிரம் இருந்தாலும், நான் எஸ்ரா அவர்களின் டாப்கன் ரசிகன் அல்லவா? அவருக்கு ஏதாவது கேடு வந்தால் நான் அதனைச் சும்மா பார்த்துக்கொண்டிருக்கமுடியுமா, சொல்லுங்கள்?

      ஜெய் மார்க்கோ போலோ, எஸ்ரா கீ! (எஸ்ரா சாலீஸா எனும் பஜனையில் ஒரு வரிதான் இது! இதற்கும் ஙே என்று வந்துவிடாதீர்கள்!)

      நன்றி.

      • Sivakumar Viswanathan Says:

        மார்க்கோ போலோவை விடுங்கள் அய்யா. அந்த இரண்டரை வரிகளில் உள்ள ஒற்றெழுத்து மேட்டருக்கே ஓட ஓட அடிப்பவர் மாமல்லன். பிறகு எஸ்ரா அவர்களுக்கு ஹிந்தி ‘மார்க்கே போலோ’ தான்.

  6. Venkatesan Says:

    வாய் தவறி சொன்னதுக்கு இவ்வளோ கலாட்டா பண்றீங்க. அப்புறம் நீங்க எடுத்து போட்ட எஸ்ரா மேற்கொளில் முக்கியமான வார்த்தை “போன்ற”.


    • யோவ், இப்ப இண்ணான்ற? கொமட்ல குத்தட்டா??

      இவ்ரு பேஸ்றத நீ நேர்ல கேட்ருக்கியா! நான் தலெமேலே கைய வெச்சிக்கினு குந்திக்கினு கேட்டுக்கினு – எவ்ளோ நேரம் ப்பட்டா, செத்ருப்பேன்?

      வாய் தவறி பேஸ்னாரா? ன்னாங்கடா பேஸ்றீங்க! சின் பசங்களா…

      அவ்ரு பீலா மேல பீலா வுட்டுக்கினே இர்ப்பாரு… எங்கள மாறீ கெளம்கட்டெங்க ஸும்மா குந்திக்கினே குஸு வுட்டுட்டு ஸலிச்சி போவ்ணுமா?

      அவ்ரூ வாய்தவ்றீ மட்டுமேதாண்டா பேஸ்வாரு… எப்பனாச்சி ஒள்ங்கா பேசி எள்தி ஏதாவது கதே கீதாடா??

      யோவ் வெங்கடேசு… பெத்த படிப்பு பட்ச்சிட்டு, ஆராய்ச்சி பண்ணிக்கினு எங்கயோ தில்லில குந்திக்கினு இப்டி எஸ்ரா ரசிகர்மண்றம் நட்த்றியேபா! வொனக்கே நல்லாகீதா?

      அன்புடன்,

      மெட்றாஸ் பாஷா
      You like YesRaw; but, I like to have him cooked and eaten. YesCooked. Yes, such a kook he is, it is a pleasure to eat him half-boiled. grrr

  7. elavasam Says:

    இந்த பதிவு சம்பந்தப்பட்ட கமெண்ட் இல்லை. (அப்படியும் சொல்ல முடியாது எஸ்ரா, லக்கி, வா மணி வரிசையில் அடுத்த மாணிக்கத்தை அறிமுகப்படுத்துவதால் சம்பந்தம் இருக்கிறதுதான்!)

    உங்கள் அன்பான கவனத்திற்கு – https://medium.com/@elavasam/கற்றது-தமிழ்ன்னா-ஏன்யா-கரன்சி-நோட்டைக்-கிழிக்கற-726564e28c35?source=fb-7b67d894b1a4-1439637381581


    • அய்யா ‘இலவசம்,’

      எனக்கு இந்த ராம் யாரென்று தெரியாது – மேலும் தற்கால சினிமாக்காரர்கள் என்றால் கொஞ்சம் அலர்ஜிவேறு.

      உங்கள் மீடியம் பதிவைப் படித்தேன். இந்த ராம் அரைகுறையைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆகவே விடியோவைப் பார்க்க எனக்குத் திராணியில்லை.

      ஏற்கனவே கண்டகழுதைளினால் நொந்துபோயுள்ள என்னை மன்னித்த விடுங்கள்.

      எப்படியும் எனக்கு ஓரளவு அறிமுகமானவர்கள் அளிக்கும் சுட்டிகளைத்தான் நான் படிப்பேன் – ஏனெனில் பலர் அளிக்கும் சுட்டிகளின் சராசரித்தனம் என்னை சலிக்கவைக்கிறது. நீங்கள் யார்?

      தெரிவிக்க விருப்பமில்லையானாலும் பரவாயில்லை; கண்ட கழுதைகளின் விடியோக்களைப் பார்த்து மனக்கிலேசம் அடையவேண்டாம்.

      தூங்குவதற்குமுன் பல துலக்கவும், இது முக்கியம்.

  8. Venkatesan Says:

    அன்புள்ள ரா,
    எல்லாம் பழுப்பு எனும்போது எஸ்ரா எழுத்து மட்டும் கருப்பு மட்டுமே கொண்டிருக்க இயலாது. வெளுப்பும் இருக்க வேண்டும். அவரது ‘கதாவிலாசம்’ நூல் சமகால தமிழ் புனைவெழுத்து பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாத என் போன்றவர்களுக்கு ஐம்பது முக்கிய கதைசொல்லிகளை அறிமுகம் செய்கிறது. இவர்களில் சிலரை பற்றிய விரிவான பதிவாக ‘வாசக பர்வம்’ அமைந்துள்ளது. ‘துணையெழுத்து’, ‘தேசாந்திரி’ போன்றவை அவரின் அனுபவப் பதிவுகள். இவற்றில் ‘மானே தேனே’, ‘நெகிழ்ச்சி’ போன்றவை கலந்திருப்பது உண்மைதான். மேலும், அனுபவங்கள் பற்றிய நேர்மையான பதிவுகளாக இல்லாமல் கற்பனை கலந்தும் இருக்கின்றன. இக்காரணங்களால் உங்களுக்கு அவை பிடிக்காமல் இருக்கலாம். மாறாக, இவை இப்படி இருக்கின்றன என தெரிந்தும், என் போன்றோருக்கு இவை பிடித்திருக்கின்றன. ‘புளியோதரையில உப்பு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு’ என்று சிலருக்கு தோன்றுவதில் தவறென்ன? அவரவர் ரசனை, விருப்பம். மற்ற கட்டுரை தொகுப்புகளுக்கும் இந்த விவரணை பொருந்தும். அவரது கதைகள், நாவல்கள் என்னை ஈர்த்ததில்லை. நிச்சயம் மற்ற பலருக்கு பிடிக்கும்.

    நீங்கள் வரையறுக்கும் தரத்தில் அவரது எழுத்து இல்லாமல் போகலாம். சரி, இதனால் என்ன கேடு வந்து விட்டது? பிடித்தவர் படிக்கிறார்கள். மற்றவர்க்கு படிக்க வேறு நூல்கள் உள்ளன. எஸ்ரா நூல்கள் மீதான விமர்சனங்கள் தவிர, நீங்கள் சொல்லும் உச்சத் தரத்தில் அமைந்த தமிழ் நூல்களை நீங்கள் அறிமுகம் செய்வது இன்னும் பயனுள்ளதாக இருக்கும் ‘அல்லவா’?

    இதனை எழுதுவதற்கான காரணம் எஸ்ரா மீதான ஈர்ப்பல்ல. தமிழ் இணையவெளியில் எல்லாரையும் கிழித்துப் போடுகிறார்கள். காந்தி, பாரதி, காமராஜர், பெரியார் என யாரையும் விட்டுவைப்பதில்லை. சமீபத்தில் அப்துல் கலாமை கூட கூறு போட்டார்கள். எஸ்ராவை இந்த வரிசையில் நான் வைக்கவில்லை. பொதுவில் அயர்ச்சியாக இருக்கிறது. எல்லாரையும் தூக்கி குப்பையில் வீசியபின் மிச்சம் யார் இருப்பர்?

    அன்புடன்,
    வெங்கடேசன்
    பிகு: தில்லியில் இருந்து மாற்றலாகி, தற்போது பெங்களூருவில் வசிக்கிறேன். ‘ஆராய்ச்சி’ என்ற பெயரில் அதே டுபாக்கூர் வேலை.


    • அய்யா வெங்கடேசன், நீங்கள் சொல்வது சரிதான். ஒப்புக்கொள்கிறேன். எனக்கே அயர்வாகத்தான் இருக்கிறது. இலக்கியத்துக்கு அருகேகூடப் போகலாம், ஆனால் இலக்கியக்காரர்களுக்கு அருகே சென்றால் கொஞ்சம் பிரச்சினைகள். ஏன், எனக்கு அருகாமையில் சென்றாலே சிடுக்கல்கள்தான்.

      உங்கள் வழிதிருத்தலுக்கு நன்றி. மற்றொருசமயம் விரிவாகப் பார்க்கலாம்.

      அன்புடன்

      அடியேன்.

  9. க்ருஷ்ணகுமார் Says:

    ராம். இதை எங்கே எழுதுவது தெரியவில்லை. இங்கே எழுதிவிட்டேன். தமிழ் மக்களுக்கு தயவு செய்து ஹிந்தியின் அவச்யம் பற்றி நீங்கள் அவச்யம் எழுத வேண்டும்.

    https://www.facebook.com/pakshirajan.ananthakrishnan

    ஹிந்தித் திணிப்பு பற்றி ஸ்ரீமான் பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன் அவர்கள் ஃபேஸ்புக்கில் விவாதம். அருமையான விவாதம். நடுவில் நம்ம பூவண்ணன் சாரும் வழக்கம் போல தாளிச்சிருக்கார். மிகச் சுவையான நேர்த்தியான ஃபோகஸ்ட் விவாதம். வாசித்துப்பாருங்கள்.

    par sarkaari daftaron mein hindi ka isthemal karunanidhi jayalalithaa se poes garden mein milne jaise……… yeh mujhe manzoor nahi hai.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s