அரவிந்தன் நீலகண்டன் & அரவிந்தன் கண்ணையன்: ஒற்றுமையில் வேற்றுமை

August 31, 2015

அரவிந்தன் கண்ணையன் அவர்கள் எழுதிய, முகாந்திரமேயில்லாத, அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவே முயற்சிக்காத ஆங்கில மேட்டிமைதொனி முன்முடிவுக் கட்டுரைக்கு பதிலாக – லாவணித் தமிழ்க் கட்டுரையொன்றை எழுதலாமா வேண்டாமா, எழுதினாலும் (எனக்கேகூட!) ஏதாவது உபயோகம் இருக்குமா என யோசித்துக்கொண்டிருந்தேயிருந்தாலும், குறிப்புகளையும்  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

என் நண்பர் ஒருவரிடமும் இதன் அவசியமின்மை/அவசியம் பற்றி அறிவுரை கேட்டிருந்தேன். அவர் பதில் எப்போதும்போலவே சமனத்துடன் இருந்தது = ‘எழுதவேண்டுமென்றால் இப்படி எழுதலாம், ஆனால் அப்படி வேண்டாம்!’ அய்யா, நன்றி! :-)

…அயர்வாகவே இருக்கிறது. பள்ளிக்கு பள்ளி பயணம் செய்துகொண்டு தலைசுற்றிக்கொண்டு இருக்கும் சமயத்தில் இந்த அக்கப்போர் எழவுக்கெல்லாம் ஏது நேரம் எனத் தளர்ந்து சலித்துக்கொண்டிருக்கும்போது – இன்றுகாலை என் நண்பரொருவர் அனுப்பிய சுட்டியைப் படிக்க நேர்ந்தது.

அது அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் தினமணிக் கட்டுரை: மெக்காலே கல்வியும், பிபனாஸியின் முயல் குட்டிகளும்

அநீ அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கணித/அறிவியல் தொடர்பான சில புத்தகங்களைப் படித்திருக்கிறேன்;  1983ல் பிப்லியா இம்பெக்ஸ் வெளிக்கொணர்ந்த ‘அழகான மரம்‘ எனும் இந்தியக் கல்வி பற்றிய ஸ்ரீதரம்பால் அவர்களின் மிகமிக முக்கியமான புத்தகத்தை –  என் கல்லூரி நூலகத்திலிருந்து நான்தான் முதலில் புதுக் கருக்குக் குலையாமல் கடன்வாங்கிப் படித்தேன். பின்னர் பலப்பல ஆண்டுகளுக்கு, ஸ்ரீதரம்பால் அவர்களுடன்  நேரடித்தொடர்பில் இருந்திருக்கிறேன். (மெக்காலேயும் நானும் 07/11/2012)

…இக்காலங்களில், என்னளவில் ஏனோதானோவென்று கல்விக்கான முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறேன். குழந்தைகள் எந்தச் சுக்கையாவது கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நான் தொடர்ந்து கற்றுக்க்கொண்டிருப்பவை நிறைய.

சரி. அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் சமன நிலை நிரம்பிய கட்டுரை, பல கேள்விகளை எழுப்புகிறது, புரிதல்களுக்குத் தேவையான சிலபல வரலாற்றுப் பின்புலங்களை முன்வைக்கிறது. அதற்காகவாவது – தமிழ் தெரிந்த, கல்வியின் தற்கால நிலையைப் பற்றிக் கவலைப்படும் ஒவ்வொருவராலும் இக்கட்டுரை அவசியம் படிக்கப்பட்டு அசைபோடப்படவேண்டும்.

-0-0-0-0-0-

சமயம் வாய்க்கும்போதெல்லாம், அநீ அவர்களின் கட்டுரைகளை ஓரளவு நிறையவே படித்திருக்கிறேன். அவர்மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவரது வரலாறு+அறிவியல் அறிவும் சமகால நடப்புகளின்மீதான அவதானிப்புகளும் எனக்கு மிகவும் உவப்பானவை.

ஆனால் – அக அவர்களின் ஆங்கிலக் கட்டுரைகளில் ஒருசிலவற்றைத்தான் (< 5) படித்திருக்கிறேன் – அவற்றின்மேல் அவ்வளவு மரியாதையில்லை, பெரும்பாலும் ‘இப்படியெல்லாம் கூட எழுதக்கூடுமா‘ எனக் கொஞ்சம் ஆச்சரியம் மட்டுமே! இருப்பினும் குறைந்த பட்சம் 40-50 அக கட்டுரைகளைப் படித்துவிட்டுத்தான் ஒரு திடமான மதிப்புக்கு/மதிப்பின்மைக்கு வரமுடியும் எனத் தோன்றுகிறது.

ஏனெனில், நான் அக எழுத்துகளைப் படித்த தற்போதைய அளவில், அநீ அவர்களுடைய கட்டுரையின் கடைசிவரிகளில் எழுதியிருப்பதைக் கொஞ்சம் மாற்றி:

அரவிந்தன் கண்ணையன் அவர்களின் மனவோட்டத்தின் பின்னணியில், தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே பிரபுவின் நகைப்பொலிதான் எனக்குக் கேட்கிறது.

என்று சொல்லத்தான் தோன்றுகிறது. :-(

ஹ்ம்ம்ம்… எது எப்படியோ, பார்க்கலாம், காலம் எப்படி விரிகின்றதென்று…

எப்படியும் எனக்கு, அக அவர்கள் பற்றிய என் சிந்தனைப்போக்கு –  தவறென்று நிரூபித்துக்கொள்ளவே ஆசை.

தொடர்புள்ள பதிவு:

7 Responses to “அரவிந்தன் நீலகண்டன் & அரவிந்தன் கண்ணையன்: ஒற்றுமையில் வேற்றுமை”

 1. Deeban Says:

  AK content is not as good as his use of language . He once wrote an article on why vivekananda study circle should not exist in IIT and why people like AN should never enter IIT campus. IF you can see what AN talked in the campus was academical . HE talked about the Phantom Limb , VIlayanur and other scientific matters.

  AK promotes the idea of the “ignorant east ” and the “enlightened west” . His articles on USA internal politcs are readable. On the other hand . Aravindan Neelakandan has written some detailed well cited articles in THinnai.com ,Tamilhindu and Dinamani.

  I would like to see a detailed deconstruction of both AK and AN if you find time .

 2. gopalasamy Says:

  I think you need not reply to Aravindan Kanaiyan. There was no substance in his article. Don’t waste your time. I worked in thermal power stations in middle east for more than 30years. I never saw any good American engineer in my service. To my surprise, their English language level was also not commendable. In this connection, I endorse Sashi Tharur.


 3. ராமசாமி சாருக்கு வணக்கம். ஒரு வழியாக நான் எழுதி நானே பென்குவின் பார்ட்ரிட்ஜ் வழியாக வெளியிட்டு உள்ள Thirukkural – Translation – Explanation: A Life Skills Coaching Approach என்ற நூல். amazon.in ல் kindle E book ஆகவும் மெல்லிய அட்டைப் புத்தகமாகவும் வெளி வந்துள்ளது. விலை ரூ.169/- தாங்கள் அன்பு கூர்ந்து amazon.in சென்று அதை வாங்கிப் படிக்கவும். பல நூறு குறட்பாக்களுக்கு புதிய பொருள் ஆன்மிக உளவியல் பொருள் தந்துள்ளேன்.
  புத்தகம் வாசிப்பதில் ஒரு ஆலையைப் போல ஏராளமான நூல்களை வாசித்து அவற்றின் பலனை எந்தவித எதிர்பலனையும் எதிர்பார்க்காமல் எங்களுக்கு வழங்கி வரும் தாங்கள் அடியேனது நூலையும் போனால் போகட்டுமென்று படிப்பதைப்பொருட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறேன்.
  அடுத்து தமிழில் ’திருக்குறள் – ஓர் ஆன்மிக உளவியல் உரை’ என்ற நூலை தமிழில் எழுதி யாராவது பதிப்பகத்துக்காரர்கள் கிடைப்பார்களா என பார்த்துக்கொண்டு உள்ளேன்.
  நன்றி வணக்கம்.
  அர.வெங்கடாசலம்

  • சரவணன் Says:

   ///அடுத்து தமிழில் ’திருக்குறள் – ஓர் ஆன்மிக உளவியல் உரை’ என்ற நூலை தமிழில் எழுதி யாராவது பதிப்பகத்துக்காரர்கள் கிடைப்பார்களா என பார்த்துக்கொண்டு உள்ளேன்.///

   *** பல நூறுகளுக்கு மேல். யாரும் வாங்க இயலாது. ****

   நீங்கள் ஏன் கீழே உள்ள சுட்டிக்குச் சென்று உங்கள் நூலை வெளியிடக் கூடாது? உங்கள் புத்தகம் இலவசமாக வெளியிடப்படும் என்பதால் யார் நினைத்தாலும் வாங்க–அதாவது தரவிறக்க முடியுமே!

   http://freetamilebooks.com/how-to-publish-your-works-here/


 4. கிண்டில் நூலின் விலைதான் ரூ.169/- சாஃப்ட் காபியின் விலை சொல்ல மாட்டேன். பல நூறுகளுக்கு மேல். யாரும் வாங்க இயலாது.
  அர.வெங்கடாசலம்.

 5. Venkatachalam Says:

  திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை என்ற நான் எழுதிய நூல் பழனியப்பா பிரதர்ஸ் சால் வெளியிடப்பட்டு உள்ளது


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s