பாஸ்டன், ஓட்டம், ஆஹா – சில குறிப்புகள்
October 23, 2016
எனக்கு ஓடுவது(ம்) பிடிக்கும்.
1983-4 வாக்கில், சுமார் ஒரேயொரு மாத ஓட்டப் பயிற்சிக்குப் பின் முழு மாரத்தான் ஓடித்தான் தீருவேன் என அப்படியொரு ஓட்டத்தை முட்டாள்தனமாக ஓடி – அதன் முடிவில் தள்ளாடி மாரடைத்துக் கண்மங்கி மயங்கி விழுந்த பைத்தியக்கார மஹாத்மியமும் நடந்திருக்கிறது. :-)
பாஸ்டனூர் சுற்றிப் புராணம் – சில குறிப்புகள்
October 21, 2016
கடந்த பதினைந்து-இருபது ஆண்டுகளாக, இந்தக் ‘கடவுளின் சொந்த நாடு’ எழவுக்குச் செல்வதை தவிர்த்து வந்திருக்கிறேன் என்றாலும், இக்காலங்களில், என்னுடைய இந்த அடிப்படை உரிமையை நிலை நாட்ட முடியவில்லை. எடுத்துக்கொண்டிருக்கும் காரியம் அப்படி. காலத்தின் கந்தறகோளம்தான் இது, வேறென்ன சொல்ல…
ஜான் பெர்ரி பார்லொ – ஒரு கோரிக்கை
October 12, 2016
இதனைப் படிக்கப்போகும் ஓரு சிலருக்கு இந்த விண்ணப்பம் (= SkyBread ©எஸ்.ரா; ஆனால் மன்னிக்கவும், இது விண்ஆப்பம் அல்ல – இதனை அவர் எப்படிப் பெயர்த்துத் தள்ளுவார் என்பதை நினைத்தாலே எனக்கு ஏடாகூடமாகக் கதிகலங்குகிறது! அது SkyAngloIndian என விரியுமோ என்ன எழவோ!).
(குறைந்த பட்சம் – அந்த எழவெடுத்த அமெரிக்க ஸிலிக்கன்வேலி பகுதியில் வசிக்கும், அமெரிக்கத் தேர்தல் தொடர்பாக உட்கார்ந்த இடத்திலிருந்தே நக்கல் கருத்துகளை உதிர்க்கவேண்டிய ஜனநாயகத்தேவை அவசியம் இருந்தாலும் வேலைவெட்டியற்றுத் தொடர்ந்து இந்த ஒத்திசைவுக்கு வரும் பாவப்பட்ட அந்த மூன்று நண்பர்களுக்காவது இந்த விண்ணப்பம்! டேய் பசங்களா – வங்கிக் கணக்கில், மாதாமாதம் ஏறிக்கொண்டிருக்கும் டாலர்களை சும்மாச்சும்மா எண்ணிக்கொண்டே, அதேசமயம் சீப் ஃளைட்டுகளுக்காக, ‘டீல்’களுக்காக ஏங்கிக் கொண்டே இருக்காமல் – பெண்பிள்ளை வளர்ந்துகொண்டிருப்பதால் (ஆகவே ‘வேர்களைத் தேடுவதாக’ பாவலா பண்ணிக்கொண்டு) இந்தியாவுக்குக் கண்டிப்பாக அடுத்த வருடம் மூட்டையைக் கட்டிக்கொண்டு போய்ச் சேர்ந்தேயாகவேண்டும் என வெட்டிக் கனவு கண்டுகொண்டிருக்காமல் – உருப்படியான அமெரிக்கக் காரியங்களுக்கும் உதவி பண்ணுங்கடா. ங்கொம்மாள… பெருஸ்ஸா க்ரீன்கார்டும் குடியுரிமையும் வாங்கிக்கினுதானாடா அமெரிக்காவ முன்னேத்தப் போற்றீங்க? போக்கத்தவனுங்களா…)
சரி. ஜான் பெர்ரி பார்லொ – இந்த இணைய உலகத்திலும் அதற்கு அப்பாற்பட்டும் பலதளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் மகாமகோ மனிதர். *பொக்கிஷம்*. அவருடைய ஆரோக்கியத்துக்காக, மருத்துவச் செலவுகளுக்காக இந்தக் கோரிக்கை. முடிந்தால் – நம் அனைவராலும் உதவப்படவேண்டிய நபர்தான் அவர்.

-0-0-0-0-0-0-0-0-0- Read the rest of this entry »
மடையர்கள்: நான், தொப-முதல்வாதிகள், தொ. பரமசிவம் + பாவப்பட்ட நெட்டைப் பனைமரம் – சில குறிப்புகள்
October 7, 2016
பனைமரமே, பனைமரமே, ஏன் தொப வாயில் விழுந்தாய் பனைமரமே… :-(
ஹ்ம்ம்ம்… வேறென்ன பிலாக்கணம் வைக்க… :-(( Read the rest of this entry »
தேவை: எடுத்ததை முடிக்கும் செயலூக்கம் கொண்ட புத்திசாலி இளம் பிராயத்தினர்…
September 28, 2016
(15) < (இளமை) < (மறுசுழற்சித்_தருணம்-1.5**) என்றறிக.
ஆனாலும், முழுவிவரங்ளையும் தெரிவிக்காமல் மனதாற உங்களைக் காயடிக்கக்கூடாது – ஆகவே…
அஹ்மெத் ஷா மஸூத், பஞ்ச்ஷேரின் சிங்கம், ஆஃப்கனிஸ்தானின் ஒப்பற்ற தலைவன்: சில குறிப்புகள், படங்கள்
September 9, 2016
“எவ்வளவோ வரலாற்று நாயகர்கள் இருந்திருக்கிறார்கள்… ஆனால் அவர்களில் பலரும் – பாடப்படாமல், பேசப்படாமல், போற்றப்படாமல் ஏகோபித்த இருளில் மறைந்துவிட்டார்கள்; ஏனெனில் அவர்களைப் பற்றிய நினைவுகளை எழுதக்கூடிய வீரியம் மிக்கவர்கள் இல்லை…”
க்வின்டுஸ் ஹொராடியஸ் ஃளாக்கூஸ் (65 – 8; ஏசு பிறந்ததற்கு முன்னால்) (எனது மேற்கண்ட நிர்மூலத்தின் லத்தீன்வழி ஆங்கில மூலம்= Many heroes lived . . . but all are unknown and unwept, extinguished in everlasting night, because they have no spirited chronicler)
மகாமகோ அஹ்மெத் ஷா மஸூத், சந்தேகத்திற்கிடமின்றி நமது சமகால வரலாற்று நாயகன் தான்! பலப்பல போற்றுதற்குரிய கல்யாண குணங்களை உடையவன்; வாழ்க்கையைத் தீவிரமாக அணுகியவன், புத்திமான். பலவான். மிக முக்கியமாக, அவன் மிக அற்புதமான மனிதன்.
சர்வ நிச்சயமாக, நான் மகாமகோ வீரியமுள்ள எழுத்தாளன் என்றெல்லாம் இல்லை. ஏன், சொல்லப்போனால், நான் எழுத்தாளனேகூட அல்லன். ஆனால், அஹ்மெத் ஷா மஸூத் போன்றவர்கள் மறக்கப் படவே கூடாது. அவர்கள், அபூர்வமாகவே பூக்கும் விடிவெள்ளிகள்.
ஆகவேதான் இதனைப் பதிக்கிறேன்..
கல்வி, பயிற்சி, கணிநிகள், சாத்தியக்கூறுகள், புகைப்படங்கள்: சில தெலங்காணா குறிப்புகள், சிந்தனைகள்
August 13, 2016
இக்காலங்களில் நான் சார்ந்து இயங்கும் நிறுவனம் மூலமாக சிலபல – சுவாரசியமான ஆனால் நடைமுறையில் அயர்வுதரும் – கல்வி தொடர்பான ‘ஆராய்ச்சிகள்’ நடந்துகொண்டிருக்கின்றன.
பாரதத்துக்கான புதிய கல்விக்கொள்கையும், நம்முடைய செல்லங்களான விடுதறுதலை இசுடாலிர் வகையறா ஞானக்கொழுந்துகளும்
August 11, 2016
…என் கண்ணே பட்டுவிடும்போலவிருக்கிறதே! உடனடியாக ‘விடுதலை’க்குத் திருஷ்டி கழித்து அதன் உள்ளேயும் வெளியேயும் மசுத்துக்குக் கூட ஒன்றுமேயில்லாத மண்டையின் மேல் ஓங்கி ஒரு பூசணிக்காயைப் போட்டு அதனை (=மண்டையை) உடைத்தால்தான் சரியாகும் போலவிருக்கிறதே! என்ன செய்ய!! :-( Read the rest of this entry »
கபாலி புராணம்: சில சத்தீஸ்கட் குறிப்புகள்
August 3, 2016
என் ஊர்சுற்றிப் புராணங்களில், சுயப்பிரதாபங்களின் ஒரு அங்கமாக – தற்போது சத்தீஸ்கட் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்றான தம்தரீ-யில் இருக்கிறேன். முன்னமே சிலபல முறை நான் சென்றிருக்கும் பிரதேசம்தான் இது.
மன்னிக்கவும். ஆனந்தவிகடவிடுதலை நக்கீர நியாஸ்அகமது வகையறாக்கள், ஊடகப்பேடிகளோ ஊடகப்பொறுக்கிகளோ அல்லவேயல்லர்!
August 1, 2016
ஏனெனில் அவர்களை அப்படியழைத்தால், அது அக்மார்க் ஊடகப்பொறுக்கிகளும், தரம்தாழ்ந்த ஊடகப்பேடிகளுமான ஸன் டீவி, என்டிடிவி, ‘த ஹிந்து’ போன்ற உதிரி ஊடகக் குழுமங்களுக்கு நான் செய்யும் துரோகம். Read the rest of this entry »
பாரதத்துக்கான புதிய கல்விக் கொள்கை (2016) வரைவு/வடிவமைப்பு – சில குறிப்புகள், கோபங்கள்
July 27, 2016
ஹ்ம்ம்ம்…
எந்தவொரு விஷயத்திலுமே நான் ஒரு பெரிய மயிராண்டி சண்டியர் அல்லன் என்றாலும், என் பங்களிப்புகள்(!) கிறுக்குத்தனமான சுயமைதுன வகையறாவைக் சார்ந்தவை என எனக்கு நன்றாகவே தெரிந்தாலும் – என்னால் முடிந்தவரை என் காமாலைக்கண் கருத்துகளை(!) – அழுத்தம்திருத்தமாக, துளிக்கூட வெட்கமோ மானமோ மனக்கிலேசமோ இல்லாமல் சொல்வதை – சிலபல விஷயங்களைத் தொடர்ந்து துளிக்கூடக் கவலையேயில்லாமல் செய்வதை – ஒரு பெருவியாதியாகவே கொண்டிருக்கிறேன். ஏடாகூடமான நகைச்சுவையுணர்ச்சி மட்டுமே என்னைக் கடைந்தேற்றும் என நம்புகிறேன். அற்பப் பெருமையடித்துக்கொள்ளல்களில் கிடைக்கும் இன்பம்ஸ் அலாதியானவைதான், அல்லவா?
Read the rest of this entry »
புதிய கல்விக்கொள்கை (2016), வாஸிம் மனெர் – மராட்டிய இளம் திரைப்படக்காரர்: சில கொறிப்புகள்
July 26, 2016
சில சமயங்களில்தான் அத்திபூத்தாற்போல சிலவாய்ப்புகள் ஏற்படுகின்றன.
…கல்வி மண்ணாங்கட்டி தெருப்புழுதி சமூகவியல் பல்கலைக்கிழங்கள், சொத்தைப் பல்செட்டுகள் என ஆனந்தமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் இக்காலங்களில் – வாரம் ஒருமுறை மும்பய் மாநகருக்குப் பயணம் செய்து, லேகிய வியாபாரிகள் பழநி லயன் டாக்டர் காளிமுத்து, சேலம் கவிராஜ் டாக்டர் சிவராஜ் வகையறாக்கள்போல பேச்சோதிபேச்சு பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில்…
12ஜூலை. எனக்குப் பிடித்தமான பல கவிஞர்(!)களில் நா. முத்துக்குமார் அவர்களும் ஒருவர் என ஒரு இளம் பிரக்ருதி நினைத்திருக்கிறார். ஆகவே, மேதகு நாமு அவர்களுக்கு 12ஜூலை அன்று பிறாண்டும் நாள் எனும் கோலாகலமான செய்தியை, நான் அறிந்துகொண்டேன். ங்கொம்மாள, ரொம்ப முக்கியம். (இந்த அரிய அற்பச் செய்தியையும், அந்த மகாமகோ மனிதருடைய சினிமாக் கவிதையுளறல் ஒன்றையும், வெகுவாக நெகிழ்ந்து, தேவையற்ற ஆவலுடன் எனக்கு அனுப்பியுள்ள இளம் அரைகுறையின் மின்னஞ்சல் முகவரி, இன்று முதல் ஸ்பேம் ஃபில்டர் செய்யப்படுகிறது. ஸர்ட்டிஃபைட் அரைகுறைகளுடன் எனக்கு ஒத்துவராது. நன்றி! என் நேரத்தை எப்படி வீணடிப்பது என்பது என் உரிமை. சர்வ நிச்சயமாக அரைகுறைகள் அதனை மீறமுடியாது. மிக்க நன்றி!)
எச்சரிக்கை: இந்தப் பதிவில் சுமார் 1850 வார்த்தைகள் இருக்கின்றன. பாவம், நீங்கள்!
…ஔரங்கசீப் புராணம்
July 10, 2016
முதலில் சிலபல விஷயங்களைத் தெளிவுபடுத்திவிடவேண்டும்: ஔரங்கசீப் எனப் பொதுவாக அறியப்படுபவர் மலினமான, சீப் உற்பத்தி சீனாக்கார சாமான்*.
எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேண்டுமானால், செங்கோமணமுதல்வாதம் பிடித்தமானதாக இருக்கலாம்; ரஷ்யர்கள் படுசெல்லமானவர்களாகவும், அவர்களது இலக்கியம் (கோமணமல்ல!) தூக்கிப்பிடிக்கப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால் பாவப்பட்ட ஃப்யோதோர் தோஸ்தோயேவ்ஸ்கி அவர்களை, அவர் பெயரில் ஆரம்பித்து, துல்லியமாகவும் முறையாகவும் கற்பழிப்பதை, அவர் தயவுசெய்து விட்டுவிடவேண்டும். Read the rest of this entry »
ஹேஷ்டேக்வக்ரன் புராணம்
July 2, 2016
இவ்வண்டம் #க்குகளால் ஆக்கப்பட்டது. ஸர்வம் #மயம் ஜகத். Read the rest of this entry »
எனக்குப் பிடித்தமான அமெரிக்க நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியர் அவர்களும், நம்முடைய பல அறிவுஜீவிகளும்…
June 30, 2016
ஹ்ம்ம்… கடந்த சில நாட்களாக, எடுத்துக்கொண்டிருக்கும் கல்வி(!) தொடர்பான பணிகள் (= living the myth of sisypus) தொடர்பாக – பலருடன் சந்தித்து உரையாட (=கேட்டுக்கொள்ள) வேண்டியிருந்தது… இவர்களில் பெரும்பாலோர் கல்வித்துறை சார்ந்தவர்கள், பல்கலைக்கழகங்கள், கஞ்சிக்கலயத் தன்னார்வ(!)அமைப்புகள் சார்ந்தவர்கள் — சிலர் பேராசிரியர்கள், பலர் நடுவாந்தரம், சிலபேர் இளம் மாணவர்கள். பெரும்பாலும் கல்வியியல்/சமூகவியல் தொடர்புடையவர்கள்.
நம் பள்ளிக் குழந்தைகளுக்காக, காத்திரமான ‘மாதிரி’ பரிசோதனைச் சாலைகள்: இந்திய அரசின் அழகான திட்டங்களில் ஒன்று
June 28, 2016
இது சென்ற பதிவின் (= இந்த நாட்டில் (இக்காலங்களில்) தொடர்ந்து நடக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்கள், பெரிதாகத் தம்பட்டம் அடிக்கப்படாமலேயேதான் இருக்கின்றன… 25/06/2016) தொடர்ச்சி…

