எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேண்டுமானால், செங்கோமணமுதல்வாதம் பிடித்தமானதாக இருக்கலாம்; ரஷ்யர்கள் படுசெல்லமானவர்களாகவும், அவர்களது இலக்கியம் (கோமணமல்ல!) தூக்கிப்பிடிக்கப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால் பாவப்பட்ட ஃப்யோதோர் தோஸ்தோயேவ்ஸ்கி அவர்களை, அவர் பெயரில் ஆரம்பித்து, துல்லியமாகவும் முறையாகவும் கற்பழிப்பதை, அவர் தயவுசெய்து விட்டுவிடவேண்டும். Read the rest of this entry »

(அல்லது) ஹர்ஷ் மந்தர், அருந்ததி ராய், தீஸ்தா ஸெதல்வாத் (இப்போது மெஹ்தி ஹஸன்): நவீன நஸ்ருத்தீன்களும் கோதுமைமாவை துணிக்கொடியில் உலர்த்தல்களும்…

ஒரு பழைய முல்லா நஸ்ருத்தீன் கதையொன்று நினைவுக்கு வருகிறது:

முல்லாவின் அடுத்தவீட்டுக்காரர், முல்லாவிடம் கொஞ்சம் கோதுமை மாவு கடன்கேட்டு வருகிறார்.

முல்லா சொல்கிறார்: அய்யய்யோ, இப்பத்தான்  என்னிடம் இருந்த கோதுமைமாவையெல்லாம் தோய்த்துத் துணியுலர்த்தும் கொடியில் உலரப் போட்டிருக்கிறேன்!

அவீகாரர் கேட்கிறார்: எப்படியய்யா கோதுமைமாவை அப்படி உலர்த்தமுடியும்? ரொம்ப கஷ்டமாச்சே!

முல்லா: அய்யா, புரிந்துகொள்ளுங்கள். கடன் கொடுக்க விருப்பமில்லாத என்னால், கோதுமைமாவை வைத்து வெகு சுலபமாக என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்… (இக்கதையின் ஒரு அழகான ஆங்கில வடிவம்)

… ஆம்.  மோதி, குஜராத் என்றால் அவைகளுக்கு எதிராக, என்ன விதமான பொய்யையும் வாய் கூசாமல் மறுபடியும் மறுபடியும் சொல்லி மட்டுமே ஸ்தாபனம் செய்து கோதுமைமாவைத் துவைத்துக் கொடியில் உலர்த்திக் காயவைக்க முடியும்.

—000—

… பெங்காலி ‘நஸ்ருத்தீன்’ பாபுவுக்கு மிகவும் சந்தோஷம். “மோதி-யைப் பற்றி இங்கிலாந்தில் உறைந்திருக்கும் மேதகு மெஹ்தி ஹஸன்  அவர்களே எழுதியிருக்கும் இங்கிலாந்தின் ந்யூஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் வந்திருக்கும் கட்டுரையப் படி மொதல்ல” என்று ஒரு குறுஞ்செய்தி.  அவர்களே  என்று எழுதியதற்குக் காரணம் – இதே ஹஸன் அவர்கள் முன்னம் எழுதிய ஒரு கட்டுரைக்கான சுட்டியை அவர் அனுப்பி, நான்  சிலாகித்திருந்ததுதான். (இதே ஈபிடபிள்யு-தர கருத்துதிர்க்கும் பெங்காலியை முன்வைத்து முன்னமும் எழுதியிருக்கிறேன்)

என்னுடைய பழவினைப்பயன் தான் இம்மாதிரி ஆட்களுடன் எனக்குச் சகவாசம் ஏற்பட்டுள்ளது. போங்கடா என்றாலும் விட மாட்டேனென்கிறார்கள் – எனக்கும் இவர்களுடன் முழுமையாகக் கத்தரித்துக் கொள்வதில் விருப்பமில்லை; ஏனெனில், இவர்களுடைய பல  பிறபக்கங்கள் ஒப்புக்கொள்ளக்கூடியவையாகவே இருக்கின்றன; என்னுடைய பிரச்சினை என்னவென்றால், தங்கள் அரைகுறைத்தனத்தைத் திரும்பத் திரும்ப பகிரங்கமாகப் பறைசாற்றுவது அவர்களுக்கு அவ்வளவு வெல்லமாக மாறி விட்டிருக்கிறது, இக்காலங்களில்.

இத்தனைக்கும் தமிழென்பதைச் சுட்டுப் போட்டாலும் படிக்க முடியாது அவனுக்கு. நான் மோதி-யைப் பற்றித் தமிழில் எழுதுவது ஒன்றையும் படிக்காமலேயே அவனுக்குக் கூடுதல் வெறி – எப்படியடா என்னை வீழ்த்தலாம் என்று. எனக்கு வெறுப்பேற்றுகிறேன் என்று எதையாவது செய்துகொண்டேயிருக்கிறான். (அவனுக்கு இதில் வெற்றிதான்!) Read the rest of this entry »

 

ஒத்திசைவு

ஒத்திசைவு