பாரதத்துக்கான புதிய கல்விக் கொள்கை (2016) வரைவு/வடிவமைப்பு – சில குறிப்புகள், கோபங்கள்
July 27, 2016
ஹ்ம்ம்ம்…
எந்தவொரு விஷயத்திலுமே நான் ஒரு பெரிய மயிராண்டி சண்டியர் அல்லன் என்றாலும், என் பங்களிப்புகள்(!) கிறுக்குத்தனமான சுயமைதுன வகையறாவைக் சார்ந்தவை என எனக்கு நன்றாகவே தெரிந்தாலும் – என்னால் முடிந்தவரை என் காமாலைக்கண் கருத்துகளை(!) – அழுத்தம்திருத்தமாக, துளிக்கூட வெட்கமோ மானமோ மனக்கிலேசமோ இல்லாமல் சொல்வதை – சிலபல விஷயங்களைத் தொடர்ந்து துளிக்கூடக் கவலையேயில்லாமல் செய்வதை – ஒரு பெருவியாதியாகவே கொண்டிருக்கிறேன். ஏடாகூடமான நகைச்சுவையுணர்ச்சி மட்டுமே என்னைக் கடைந்தேற்றும் என நம்புகிறேன். அற்பப் பெருமையடித்துக்கொள்ளல்களில் கிடைக்கும் இன்பம்ஸ் அலாதியானவைதான், அல்லவா?
பலப்பல ஆண்டுகளாக அனுதினமும் விதம்விதமான 2-3 புத்தகங்களைத் தொடர்ந்து, முடிந்தவரை குறிப்பெடுத்துக்கொண்டு படித்து, கோட்பாடுகள் சட்டகங்கள் பற்றிய ஏட்டளவு அறிவுடன் மினுக்கிக்கொண்டும் புலம்பிக்கொண்டும் அலைந்தாலும் – என் சுயானுபவங்கள் மூலமாக மட்டுமே அந்த அறிவுப்புலங்களை அணுக, அவைகுறித்த காத்திரமான (அதாவது என்னளவில்) முனைவுகளில் ஈடுபட முயற்சிக்கிறேன். வெறுமனே பேசிக்கொண்டு அலைவது எனக்கு ஒத்துவராது – ஆனால் உங்களுக்குப் புரிந்திருக்கும், வெறுமனே எழுதிக்கொண்டலைவது எனக்கு ஒத்திசைவைத் தருகிறது – ஆகவே இன்னமும் பிடித்தமானது, அய்யய்யோ!
…இந்த முயற்சிகளில் வெகுசில சமயங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகள். சில சமயம் ‘எப்படியாவது அடுத்தமுறை’ வெற்றிகள். பலசமயங்களில் கிணற்றிலிடப்பட்ட மொண்ணைக்கற்கள். இருந்தாலும், எந்த முனைவெழவையும் அம்போ என்று விட்டுவிட்டு வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவதாக இல்லை. ங்கோத்தா, விட்டேனாபார்டா டேய் தான்.
சரி. கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, நமது புதியகல்விக்கொள்கை வடிவமைப்பு பற்றிய நம் மத்திய அரசின் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்து வருகிறேன். அதற்கான பரிந்துரைகள், கருத்துகள் – பொதுமக்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் சான்றோர்களிடமிருந்தும் கேட்கப்பட்டபோது, நானும் ஒரு போக்கத்த சாதாரணப் பிரஜையாக நீளம்நீளமாக இரண்டு முறை என் விழைவுகளை (சுமார் ஒருவருடன் முன்னர் என நினைவு) அனுப்பியிருக்கிறேன். அதிலிருந்து இரண்டுமூன்று அடைப்புக்குறிகள் இந்தக் கொள்கைவரைவில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து புளகாங்கிதமும் அடைந்திருக்கிறேன். (நன்றி!) (நன்றி!!)(நன்றி!!!) (வாழ்த்த வயதில்லை, சுணங்கி மகிழ்கிறேன்!)
இந்தச் சாதனையைக் குறித்து எனக்குநானே வழக்கம்போல மிகப்பெருமிதமாகவே கொடுத்துக்கொள்ளும் அடைப்புக்குறி மலர்ச்செண்டுதான் இது: ((((((())))))) – a bouquet of parentheses. :-) [ஜேடி ஸாலிங்கர்: “I privately say to you, ol’ pal – please accept from me, this unpretentious bouquet of earlyblooming parentheses: (((()))).” ஆஹா! :-)) இது ஸாலிங்கர் அவர்களுடைய ‘ஸெய்மர்: ஒரு அறிமுகம்’ எனும் நாவலில் வந்தது என்பதென் நினைவு…]
கடந்த இரண்டுமூன்று வாரங்களாக புதியகல்வித்திட்ட வரைவுகள்/பரிந்துரைகள் பற்றிய தீவிரமான விவாதங்களில் சிலபல மனிதர்களுடன், நிறுவனங்களுடன் ஈடுபட்டு வருகிறேன் – அதாவது, பெரும்பாலும் ஒரு தனிக்கிறுக்கனாகவும், நான் தற்போது சார்ந்திருக்கும் ஒரு சமூகவியல் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் தான் இந்த எழவுகள். நன்றி.
அடுத்த வாரமும் இவ்விஷயமாக ஒத்தகருத்துடையவர்கள் ஒன்றுகூடி அளவளாவி – பெங்களூர், மும்பய் பின்னர் கடைசியில் தில்லி சென்று மற்றவர்களுடைய கருத்துகளையும் ஒருங்கிணைத்து – எங்கள் பரிந்துரைகளை, கோரிக்கைகளை, நம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையினரிடம் (=MHRD) சமர்ப்பிப்பதாக ஒரு திட்டம். [நண்பர்கள் தில்லி செல்வார்கள்; எனக்கு அலுத்துவிட்டது – எனது எல்லை மும்பயோடு முடிகிறது; ஊருக்குப் போய் இன்றாவது தாடியைச் சிரைத்துக்கொள்ளவேண்டும், எனக்குத் தாளவில்லை; எவ்வளவு நாட்கள்தான் இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்களைப் போல தாடிவுட்டுக்கொண்டு ஆனால் இன்டெல்லெக்சுவல்தனமாக விட்டத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டு சொறிந்துகொண்டிருக்கமுடியும் சொல்லுங்கள்?]
-0-0-0-0-0-0-
முதலில், இந்த புதிய கல்விக் கொள்கை (2016) வரைவு/வடிவமைப்பு (புககொவ) பற்றிச் சில விஷயங்களை நாம் அறிந்துகொள்வது மிக முக்கியம் என நினைக்கிறேன்.
எந்தவொரு அரசுசார் நடவடிக்கையையும் போலவே புககொவவில் அரசியல், முரணியக்கங்களை முயங்கவைத்தல், பலவிதமான மக்கள் திரள்களின்/நிறுவனங்களின் அபிலாஷைகளை உட்புகுத்துதல், ஆகவே முரண்பாடுகளை மழுங்கவைத்தல், அவற்றின் சாராம்சங்களை ஒருங்கிணைத்தல், அறம்சார் விழைவுகளை முன்னெடுத்தல், முன்னேற்றதை நோக்கிய விழைவுகள் என, பலப்பல சரடுகள் கோர்க்கப்பட்டு இருக்கின்றன. மேலதிகமாக, இணையத்துக்கு நன்றியுடன், பொதுமக்களிடமிருந்தும் தொடர்ந்து, நேரடியாகப் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன.
அரசியல் செயல்பாடுகளானவை – மானுடச்சமூக ஒருங்கிணைப்புகளில், முன்னோக்கிய பாய்ச்சல்களில் மிகமுக்கியமான அங்கங்கள். அரசியலை, பொத்தாம்பொதுவாக அரசியல்வாதிகளை வெறுப்பது – ‘அவன் அரசியல் பண்றான்’ என்று நக்கலாகப் பேசுவது – நம் பொறுப்பின்மையையும் முதிர்ச்சியின்மையையும் மட்டுமே குறிக்கும். நம் குடும்பங்களிலும், நண்பர் குழாம்களிலும் இல்லாத அரசியலா? குடும்பங்களை நண்பர்களை வெறுக்கிறேன் என்று பினாத்துவது வெறும் பைத்தியக்காரப் புளகாங்கிதத்தைத்தானே தரும்? ஆம், புககொவவிலும் அரசியல் இருக்கிறது. இது இல்லாமலிருந்தால்தான் பிரச்சினை.
சரி. இந்த 2016 கல்விக்கொள்கை விழைவுக்கு முன்னால் வந்த கொள்கை – 1986ல். அதாவது, சுமார் 30 வருடங்களுக்குப் பின் வரவிருப்பது இது. 1986க்கும் பின் சிலபல சட்டங்கள் (நம் ஆர்டியி (2009) – எலிமென்டரி கல்விக்கான உரிமைச் சட்டம் உட்பட) நேரடியாகக் கல்வி தொடர்பாகவும், அப்படி இல்லாமலும் வந்திருக்கின்றன.
இந்த 2016 கொள்கைக்கு, மதிப்புக்குரிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி டிஎஸ்சுப்ரமணியன் அவர்கள் தலைமையில் ஐவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுப் பணியாற்றியது; இதில் உள்ள பிறரும் மூத்த அதிகாரிகள் + அனுபவமிக்கவர்கள்; ஒருவர் மிகவும் மதிக்கத்தக்க கல்வியாளர். அசுர உழைப்பு உழைத்திருக்கிறார்கள். மொத்த கல்வியுலகத்தை முப்பத்திமூன்று தொகுதிகளாகப் பிரித்து அமோகமாகவும் பொதுவாகவே ஆழமாகவும் மேய்ந்திருக்கிறார்கள்.
2015 ஜனவரியிலிருந்து அக்டோபர் முடிய இணையம் மூலமாகவும் (www.MyGov.in) மற்றபடியும் தொடர்ந்து பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. இதன் எண்ணிக்கை சுமார் முப்பதாயிரம். பாரதம் முழுவதிலிமிருந்து ஏறக்குறைய 100% பஞ்சாயத்துகளிலிருந்தும், தன்னாட்சி அமைப்புகளிலிருந்தும், அனைத்து மாநிலங்கள் + யூனியன் பிரதேசங்களின் (36) மாவட்ட / ப்ளாக்குகளிலிருந்தும் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன, யூஜிஸியிலிருந்து ஆரம்பித்து ncte, aicte, ncert என அனைத்து கல்வி தொடர்பான மத்திய அமைப்புகளிலிருந்தும், பலப்பல பல்கலைக்கழகங்களிலிருந்தும், அறிஞர்களிடமிருந்தும், தொழில்முனைவோர்களிடமிருந்தும், படிப்பாளிகளிடமிருந்தும், ஸிவில் ஸொஸைட்டி ஆசாமிகளிடமிருந்தும் பரிந்துரைகள் கேட்டு வாங்கப்பட்டுள்ளன. பாரதத்தை பூகோளரீதியாக ஆறு பகுதிகளாகப் பிரித்து அவை ஒவ்வொன்றிலும் பெரிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டங்களை நடத்தி – அப்பகுதிகளில் இருக்கும் பல்வேறு திரள்களின் விழைவுகள் பெறப்பட்டுள்ளன. குறுக்கிலும் நெடுக்கிலும் பாரதம் முழுவதும் பயணம் செய்து பலவிதமான மனிதர்களுடன் உரையாடி பலப்பலக் கருத்துகளைப் பெற்றும், பரிசோதனை முயற்சிகளைப் பார்த்தும், உரையாடியும் – பலவிதமான கருத்துக்குவியங்கள் பெறப்பட்டுள்ளன.
ஒருவழியாக, இந்த ஆவணம் பொதுப்பார்வைக்கு 27 மே, 2016 முதல் வைக்கப்பட்டது. இணையத்தில் தரவேற்றப்பட்டது.
இப்போது சுற்றில், பல்வேறு பரிந்துரைகளுக்காகவும், திருத்தங்களுக்காகவும், விஸ்தாரப் படுத்தல்களுக்காகவும் காத்துக் கொண்டிருப்பது – கல்விக் கொள்கைக்கான வரைவு/திட்டம் மட்டுமே. இது முடிவான ஆவணம் அல்ல. இவ்வாவணம் – மேலதிகமாகக் கருத்துகள் பெறப்பட்டு, பரிந்துரைகள் உள்வாங்கப்பட்டு செம்மைப் படுத்தப்படும். பின்னர் இது, நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பின் ‘புதிய கல்விக் கொள்கை (2016)’ ஆக முழுவடிவம் பெறும். அதனுடன் அதன் ஷரத்துகளைச் ‘நடைமுறைச் செயல்படுத்தப்படல்களுக்கான சட்டகம்’ ஒன்று திட்டவட்டமாக, தெளிவாக மேலெடுக்கப்படவேண்டிய செயல்பாடுகள் குறித்து பரிந்துரைக்கப்படும். யார் யார் என்னென்ன செய்யவேண்டும், நிதித்தேவைகளை / செலவினங்களை எப்படி மேலாண்மை செய்யவேண்டும்வகையறாக்கள் பற்றியும் குறிப்புகள் இருக்கும்.
இந்தப் பரிந்துரைகள்+தணிக்கைமுறைகள் மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக மாநிலங்களுக்கும் பிற மத்திய அமைச்சகங்களுக்கும் அனுப்பப்படும் – அவையனைத்தும் சால்ஜாப்பு சொல்லாமல் அமல்படுத்தப்படவேண்டியவை, அதாவது, நம் தன்னார்வக்கோளாறுமிக்க நீதிமன்றங்கள் குறுக்குசால் ஓட்டினாலொழிய… மாநிலங்கள் தங்கள் எல்லைகளுக்குள் தம் கொள்கைகளையும் வகுத்து எதிர்காலத்தில் அவற்றை அமல் படுத்தலாம் – அல்லது நம் செம்மொழித் தமிழ்நாடு போல, இடஒதுக்கீட்டளவுகளை 99.99% போல சமூகநீதித்தனமாக ஏற்றிக்கொள்ளலாம்; கல்விமாமாக்களை ஊக்குவித்து கச்சத்தீவை மீட்டு ராஜபக்ஷவைத் தூக்கில் போட்டு இலவசக்குசுக்களைவிட்டு திராவிட இனமானம் காத்துக்கொண்டிருக்கலாம்.
…நம் மக்களும் ஆனந்தமாக சினிமா புல்லரிப்புகளைப் பார்த்துக் கருத்துதிர்த்துக் கொண்டிருக்கலாம். #லவ்டேக்கபாலி #நன்றி
-0-0-0-0-0-0-0-
[ஆங்கிலம்] புதிய கல்விக் கொள்கை (2016) வடிவமைப்புக்கான டிஎஸ்ஆர் சுப்ரமணியன் கமிட்டி பரிந்துரைகள்: Report of the Committee for Evolution of the New Education Policy 2016
[ஆங்கிலம்] இப்பரிந்துரைகளிலிருந்து சிலவற்றை முக்கியமாகக் கருதியெடுத்து மனிதவளமேம்பாட்டு அமைச்சகம், கருத்துகளைப் பெறுவதற்காக சுற்றுக்கு விட்டுள்ள ஒரு ஆவணம்: Report of the Committee for Evolution of the New Education Policy 2016
[தமிழ்] பள்ளிக்கல்வி தொடர்பாக கருத்துகளையும் பரிந்துரைகளையும் சேகரம் செய்ய, தமிழ் நாட்டில் இந்தக் கமிட்டியினால் உபயோகப்படுத்தப்பட்ட கேள்விகளின் மாதிரி: schooledu-Tamil
[தமிழ்] உயர் கல்வி தொடர்பாக கருத்துகளையும் பரிந்துரைகளையும் சேகரம் செய்ய, தமிழ் நாட்டில் இந்தக் கமிட்டியினால் உபயோகப்படுத்தப்பட்ட கேள்விகளின் மாதிரி: higheredu-Tamil
இந்த எழவுகளையெல்லாம் எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் – இன்னமும் சில நாட்கள்வரை நாம் பரிந்துரைகளை அளிக்கமுடியும். ஜூலை 31, 2016 தான் அதற்குக் கடைசி நாள். (இன்று ஆகஸ்ட் 15 வரை இதனை நீடித்திருக்கிறார்கள்!)
இப்போது ஒரு கோரிக்கை: ஒத்திசைவை மண்டையில் அடித்துக்கொண்டு தொடர்ந்து படிக்கும் துர்பாக்கியவான்களாகிய உங்களுக்கு, ஏதாவது கல்வி பற்றி எதிர்காலம் பற்றிக் கவலை+கரிசனம் இருந்தால், நேரமும் இருந்தால், கருத்து தெரிவிப்பதில் விருப்பம் இருந்தால் – தயவுசெய்து மேற்கண்ட ஆவணங்களைப் படித்து – அமைச்சகத்துக்கு (http://mhrd.gov.in/nep-new) அவற்றைத் தெரிவிக்கவும். நன்றி.
இம்மாதிரி நல்ல விஷயங்கள் நடப்பதை நாம் கொண்டாடவேண்டாமா? திருவிழாக்கோலம் பூண வேண்டாமா? நம் தேசத்தின் முன்னேற்றத்துக்கான குறைந்தபட்ச பங்களிப்புகளைக்கூட நம்மால் அளிக்கமுடியாதா? சுளுவாக நம் கருத்துகளைத் தெரிவிக்க சட்டகங்களும் வாய்ப்புகளும் இருக்கையில், அவற்றைப் பற்றி காத்திரமாக விவாதிக்க நாமெல்லாம் முனையவேண்டாமா? அல்லது #லவ்டேக்கபாலி எழவுகளுக்கு மீறி நம்மால் ஒன்றுமே செய்யமுடியாதா? #லவ்டேக்கபாலிகள் தான் நமக்கு ஸாஸ்வதமா?
-0-0-0-0-0-0-0-0-
ஏனெனில், ஒரு எழவையும் தெரிந்துகொள்ளாமல் அட்ச்சுவுடுபவர்கள்தான் நம் அறிவுஜீவிய அறிவாளி குப்பைவாளிகள். (பார்க்க: “குலக்கல்வி முறையை மறைமுகமாக அமல்படுத்த அரசு திட்டமா…?“)
#லவ்டேக்கபாலிகள் ஒழிக!
-0-0-0-0-0-0-0-
August 7, 2016 at 18:34
Dear Ram,
It’s really pathetic to see people taking stand against something they didn’t even looked at. Members of our church were urged to sign the request that condones [Dear Sam, you meant condemns? __r] the New Education policy. The only reason provided was that this is against Christians. When I told our pastor politely that this decision and the act of urging the congregation to sign the petition is wrong, I was pronounced a sinner. I ended up arguing with fools ( most of them are my relatives) for the entire day. And all these brilliant people are not even ready to read the document. I sent the PDF copy and also my summary. No use. I can do more but I am a chronic lazzzzy bum. Complete Dravidian I think.
Sam Gnanamuthu
August 8, 2016 at 09:57
Dear Sam,
Thanks for your considered feedback; blogging acerbically about education and misc other things rather like the ‘myth of sisyphus,’ it is heartening to receive notes from folks like you, who are equally bothered about so many things that ail of society…
Please do write/post and share your thoughts – just checked your google+ pages, I could not see/read any posts!
Best, and we shall overcome. :-)
__r.
August 11, 2016 at 21:33
Sorry Ram. Yes I meant to type Condemn. Very bad this had happened in all the churches in the Diocese.