இந்த #எஸ்ரா அவர்களை வைத்துக்கொண்டு என்னசெய்வது என்றே தெரியவில்லை :-(
July 9, 2016
எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேண்டுமானால், செங்கோமணமுதல்வாதம் பிடித்தமானதாக இருக்கலாம்; ரஷ்யர்கள் படுசெல்லமானவர்களாகவும், அவர்களது இலக்கியம் (கோமணமல்ல!) தூக்கிப்பிடிக்கப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால் பாவப்பட்ட ஃப்யோதோர் தோஸ்தோயேவ்ஸ்கி அவர்களை, அவர் பெயரில் ஆரம்பித்து, துல்லியமாகவும் முறையாகவும் கற்பழிப்பதை, அவர் தயவுசெய்து விட்டுவிடவேண்டும்.
சரி, தாங்களும் மண்டையில் அடித்துக்கொண்டு படிக்க அக்கப்போர்: தஸ்தாயெவ்ஸ்கி நாடகம்
-0-0-0-0-0-0-0-
எனக்கும் ரஷ்ய இலக்கியங்களைப் பிடிக்கும். ஹ்ம்ம் அதாவது இதுவரை அவைகளைப் பிடித்துவந்திருக்கிறது. ஆனால் எஸ்ரா அவர்களை ஒரு தமிழ் இலக்கியவாதியாக உருவாக்கியதே, அவர் தன் பள்ளிநாட்களில் படித்த ரஷ்ய இலக்கியங்கள்தான் என அவர் வாயாலேயே சொல்லக்கேட்டதும் எனக்குச் சே என்றாகிவிட்டது. என்ன செய்வது சொல்லுங்கள். :-(
https://www.youtube.com/watch?v=iuPUPIlH3rI
இந்த மாபாதகச் செயலைச் செய்த முதன்மைக் குற்றவாளிகள்: செகாவ், கார்க்கி, தல்ஸ்தோய், தோஸ்தோயேவ்ஸ்கி (இதனையும் எஸ்ரா அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்!)
-0-0-0-0-0-0-
சரி. எஸ்ரா அவர்கள் வாயிலும் கையிலும் பாவப்பட்ட தோஸ்தோயேவ்ஸ்கி விழுந்து புறப்படுகிறார் என்றால்…
அம்மணீ ஸுபெதா ஹமித் அவர்கள், #எஸ்ராவல் அவர்களின் நாடகத்தைப் பற்றி எழுதுகிறேன் பேர்வழியென்று தஹிந்துத்துவா தினசரியில் இப்படியொரு குத்தாட்டம் போட்டிருக்கிறார்!
— A ‘shadow’ to throw light on Dostoyevesky’s life
அதாவது Dostoyevesky – Dostoyevsky அல்ல! விட்டால் Dostowhiskey என்றுகூட எழுதியிருப்பார் போல!
இந்த தஹிந்துத்துவா அரைகுறை எழவையும் எஸ்ரா அவர்கள் தம் தளத்தில் மறுபிரசூரம் செய்துகொண்டுவிட்டார். வாழ்க.
http://www.sramakrishnan.com/?p=5562
பிரச்சினை என்னவென்றால் அம்மணீ அவர்கள் பலமுறை பலவாறாக, விதம்விதமாக இந்த ரஷ்யப் பாவத்தை எழுதியிருக்கிறார் – Dostoyeveky டாஸ்டொயெவிகி , ஒருவாறாகக் கடைசியாக Dostoyevsky – டாஸ்டொயெவ்ஸ்கி… முயற்சி செய்வினையாக்கும்? :-( பாவம், DostoyevsKEY எனவெல்லாம் எழுத அவருக்குச் சமயமில்லைபோலும்.
…முதலில் எனக்குத் தோன்றியது: சிரத்தையேயற்ற, படிப்பறிவும் அற்ற, விட்டேற்றி அரைகுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு எப்படித்தான் இந்த தஹிந்துத்துவா தொடர்ந்து ஒப்பேற்றுகிறதோ! சொரணையோ, கற்றுக்கொள்ளும் மனப்பான்மையோ இம்மாதிரிப் பத்தி எழுத்தாளர்களுக்குத் துளிக்கூட இல்லை – ஆனால் இவற்றையே விடுங்கள், வெறும் ஸ்பெல்லிங் எழவைக்கூடவா இவர்களுக்குச் சரிபார்க்கமுடியாது?
ஆனால், கொஞ்சம் யோசித்தால் – பிரச்சினை அம்மணீயிடம் இல்லை. எஸ்ராவிடம் தான் இருக்கிறது. ஏனெனில், சேறிடம் அறிந்து சேறு. அம்மணீ எழுதியது எஸ்ராவின் படையலைப் பற்றி.
…ஆகவேதான் இப்படியாகிவிட்டது. வேறொன்றுமில்லை. பயப்படவேண்டாம். எனக்கும் பயபீதி தெளிந்துவிட்டது! நிம்மதியாகத் தூங்கப்போகவும். நானும் போகிறேன், நன்றி.
July 10, 2016 at 17:09
Expecting an article Abdul sattar Edhi sir! Please write it before likes of S.Ra ruin it for us …
July 11, 2016 at 12:14
Dear, I have heard him speak only once and know of him only thru news reports. He has done an incredible amount of work, in spite of all the pessimism that pervades our mindscape.
However I do not have any personal data that I can mine for writing about him. I feel that, if at all one wants to know about him, there are always other things to access. (however, thanks to your prodding, albeit unrelated, I am going to write a short note about one of my youthhood heroes – an afghan one at that)
Best:
__r.