தேவை: எடுத்ததை முடிக்கும் செயலூக்கம் கொண்ட புத்திசாலி இளம் பிராயத்தினர்…
September 28, 2016
(15) < (இளமை) < (மறுசுழற்சித்_தருணம்-1.5**) என்றறிக.
பின்புலம்: சத்தீஸ்கட், மிஸோரம், தெலெங்காணா, ராஜஸ்தான் மாநிலங்களில் – அவற்றிலுமேகூட வளர்ச்சியைக் காணாத பிராந்தியங்களில் உள்ள சிலபல அரசுப் பள்ளிகளில், கல்வி தொடர்பான முயற்சிகளில் (மதிக்கத்தக்க ஒரு குழுவுடன் இணைந்து) ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். பட்டுக்கொண்டிருக்கிறேன். கற்றுக்கொண்டிருக்கிறேன்.
-0-0-0-0-0-0-0-
நிகழ்ந்துகொண்டிருக்கும் அழகுகளான கணிநிகளை ஜாலியாக மடியில் வைத்துகொண்டு அவற்றின்மூலமாகச் சாத்தியப்படும் பல்வேறு விகசிப்புகளை அனுபவிக்காமல், இணையத்தை ஆக்கபூர்வமாக உபயோகிக்காமல் – வெறுமனே பொட்டிதட்டிக்கொண்டு எழுப்பப்படும் சமூகவலைத்தளக் காட்டுக்கூச்சல்களுக்கும், உட்கார்ந்த இடத்திலிருந்தே அரங்கேற்றப்படும் அமோகப் போராளித்தனங்களுக்கும், தமிழ்த் திரைப்படப் புல்லரிப்பு டவுன்லோட்களுக்கும், வெட்டிநக்கல்களுக்கும் அப்பாற்பட்டு – கணிநிகள் மூலமாகவுமேகூட கற்றுக்கொள்ளல் சாத்தியம் என்ற தொடர்ந்த நம்பிக்கையில் இருக்கிறேன்.
டிங்கரிங் (tinkering) என்பதைப் பொதுவாகவே என் மதமாகக் கொண்டிருக்கிறேன் – அது கணிநி தொடர்பாக இருந்தாலும் சரி, வெல்டிங் ஆனாலும் சரி, மின்னியலானாலும் சரி, தச்சுவேலையானாலும் சரியே.
-0-0-0-0-0-0-0-
ஆகவே.
இம்மாதிரி விஷயங்களுக்காக என்னுடன் வேலை செய்வதற்கு இளம் ஆண்களும் பெண்களும் – அதிகபட்சம் ஏழு பேர் தேவை.
மேலும், இந்த ஒத்திசைவு எழவின் மூலம் அறிமுகமான இரண்டுமூன்று நண்பர்கள் – இதுகுறித்த விவரங்களைக் கேட்டு எழுதியிருக்கிறார்கள் – இந்த அறிவிப்பு அவர்களுக்காகவும்தான். நன்றி. :-)
குறிப்புகள்:
1. என்னுடன் வேலை செய்யவேண்டும். இது எனக்கேகூட கொஞ்சம் பிரச்சினைதான். A layer of tiredness separates the ambitions and outcomes. ஆகவே, நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவேண்டும். மேலும் என்னுடைய விசித்திரமான நகைச்சுவையுணர்ச்சியுடன் உங்களுக்கு மல்லுக்கட்ட முடியவேண்டும். இருமுறைக்கு நான்கு முறை படுதீவிரமாக யோசிக்கவும்.
2. ஆங்கில அறிவு ஒரு பிரச்சினையேயல்ல. வெறும் – ஆனால் நல்ல அறிவு மற்றுமே போதுமானது. அதேசமயம் ஏட்டறிவு ஒத்துவராது. கொஞ்சம் இன்ஸ்பெக்டர் வரையாவது இருக்கவேண்டியது முக்கியம்.
3. இந்த வேலை அடுத்த சுமார் **18 மாதங்களுக்கு மட்டுமே. கான்ட்ராக்ட். சம்பளம் ஓரளவுக்கு (எடுத்துக்காட்டாக – நான் 11 வருடங்கள் முன் வாங்கிய சம்பள அளவின் நான்கில் ஒரு பாகத்தைத் தான் இன்று பெறுகிறேன்) இருக்கும். சர்வ நிச்சயமாக, அமோகமாக இல்லைவேயில்லை. கூக்ல், மைக்ரொஸாஃப்ட் வகையறா சம்பள பஜனை கிடையாது. ஏன், டிஸிஎஸ் அளவுமே கூட. (வேலைகள் நல்லபடியாக நடந்தால் – இந்தப் பணி இன்னமும் 7 வருடம் போல ஓடலாம்; ஆனால் இப்போதைக்கு 18 மாதங்கள்தான்!)
4. பொதுவாகவே, இந்தக் குழுவில் எந்த எழவு இடஒதுக்கீடும் இல்லை. ஆனால் ஒரேயொரு செல்ல விதிவிலக்கு: திராவிடர்களுக்கு என்று இடஒதுக்கீடு இருக்கிறது. = 0%. கவனிக்கவும். (ஏனெனில் – திராவிடர்கள் எனும் அரசியல்வகையினர், திருடித்தின்னத்தான் லாயக்கு; மிஞ்சிமிஞ்சிப் போனால், கூட்டம் போட்டு பிரியாணி பரிமாறி மொடாக்குடி குடித்துவிட்டு பேச்சோதிபேச்சு பேசுவார்கள். கர்நாடகாவுக்கும் ராஜபக்ஷவுக்கும் இங்கிருந்தே சவால் விடுவார்கள், பேடிகள். தொழில்முறைக் குசுவாளர்கள். இவர்களால் சமூகத்துக்கு ஏற்படும் ஒரே உபயோகம் – இந்த ஜந்துக்கள் அரங்கேற்றும் ‘பந்த்’ வகையறாக்களின்போது அன்றாடங்காய்ச்சிகள் வயிற்றில் அடிக்கப்படுவதுதான், அற்பர்கள்! இவர்களை வைத்துக்கொண்டு என்னால் மாரடிக்கமுடியாது, நன்றி)
6. சும்மனாச்சிக்கும் கன்ஸல்டன்ஸி (CONsultancy), மேகம் (Cloud), ஃப்ரேம்வர்க் (Framework), மொபைல் அப்ஸ் (MobileApps), டேட்டாஸைன்ஸ் (Data Science), க்வாலிட்டி ப்ராஸெஸ் (Quality Process), துறை விற்பன்னன் (Domain Expert) என்று உளறிக்கொட்டி பஜனை செய்துகொண்டிருப்பவர்கள் தாராளமாக அப்படியே ஆனந்தமாகத் தொடரவும், அதாவது, எந்த தொண்டியிலிருக்கிறீர்களோ, அங்கேயே தொடர்ந்து உட்கார்ந்துகொண்டு அமோகமாக ஜல்லியடிக்கலாம். நன்றி.
7. முதல் மாதத்தில் – தினம் 8 மணி நேரமாவது என் நேரடி மேற்பார்வையில் வேலைசெய்யவேண்டும். அதன் பின்னர் – உங்களுக்கும் எனக்கும் பரஸ்பர நம்பிக்கை வந்தபின் – உங்களிடம் நீங்கள் செய்யவேண்டிய வேலை கொடுக்கப்படும். எப்படிச் செய்வீர்களோ என்ன செய்வீர்களோ, நீங்கள் அதனைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்கவேண்டும். உங்கள் நாற்காலிக்கு வந்து தினசரி பெஞ்ச் தேய்க்கவேண்டிய அவசியமேயில்லை.
சரி.
என்னுடன் பணிசெய்ய நீங்கள், ‘கற்றுக்கொள்ளும் மனப்பான்மை’ மிக்கவராக, ஆகவே வெட்டிப் பிலாக்கணம் மட்டுமே வைக்காதவராக இருக்க வேண்டியது அவசியம். இதைத் தவிர, கீழ்கண்ட வகையறாக்களில், சிலவற்றிலாவது உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நலம்.
உங்களுக்கு, நீங்கள் பணியாற்றும் துறையில் சொல்லிக்கொள்ளும்படியான ஈடுபாடும், நுண்மான் நுழைபுலம் அறியும் விழைவும் இருக்கவேண்டும். கீழ்கண்ட துறைகளில் உங்களுக்குக் கொஞ்சமேனும் பாண்டித்தியம் தேவை.
அடுத்த 1.5 வருடங்களில் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் பலப்பல. ஒவ்வொரு நாளும், குறைந்தபட்சம் ஒரு புதிய விஷயத்தையாவது நாமெல்லாம் கற்றுக்கொள்ள நான் உத்திரவாதம். (இதற்கு முன்னாலும் இம்மாதிரி விஷயங்களை – நம் இளைஞர்களை வைத்துக்கொண்டு செய்திருக்கிறேன்; இவர்களில் ஒருவர்கூட தான் ஏமாற்றமடைந்ததாகச் சொன்னதேயில்லை (இதுவரை). இவர்களில் பலர் இன்னமும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.)
உங்களுக்கு என்னைக் கட்டிக்கொண்டு மாரடிக்க முடியும் எனப்பட்டால், அவசியம் என்னை ஒத்திசைவு.ராமசாமி@ஜிமெய்ல்.காம் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். (gmail othisaivu com ramasami என இந்த முகவரியைப் புரிந்துகொள்ளவும். @ என்றால் @ – மேலும், . என்றால் .)
மின்னஞ்சல் அனுப்ப, கடைசித்தேதி 8 அக்டோபர், 2016.
அதில் இருக்கவேண்டிய இணைப்புகள்/விவரங்கள்:
1. ஒரேயொரு A4 பக்கத்தில் – நீங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் (12 பாயின்ட் எழுத்தளவுக்குக் குறையாமல்); தொடர்பு தொலைபேசி எண் வேண்டாம். பரிந்துரைப்பாளர்களும் வேண்டாம். தேவைக்கதிகமான ஜல்லியடித்தல்களைத் தவிர்க்கவும். ஏற்கனவே நான் வெறுத்துப் போயிருக்கிறேன் என்பதை மனதில் கொள்ளவும்.
2. நீங்கள் பங்கேற்றிருக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்த – கணிநி, மின்னியல் தொடர்பான சுட்டிகள் இருந்தால் கொடுக்கவும். (உதாரணமாக கிட்ஹப் வகையறாக்களில் ஆவணப்படுத்தப்பட்ட உங்கள் பங்கு)
…திராவிடக் காயடிப்புகளையும் மீறி, இன்னமும் மிகவும் போற்றத்தக்க இளைஞர்கள் இருக்கின்றார்கள் எனும் என் நம்பிக்கையின் பேராசையின் காரணமாகத்தான் இப்படியொரு அறிவிப்பைச் செய்கிறேன் – அழகானவர்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது, என்ன செய்ய… ஆனால் – Things that MUST be done, HAVE to be done cheerfully. So. :-)
எனக்கு உங்களைத் தொடர்புகொள்ளவேண்டும் எனப்பட்டால் தொடர்பு கொள்வேன். அவ்வளவுதான்.
எப்படியும் – அடுத்த பத்து நாட்களுக்குள் நான் உங்களைத் தொடர்பு கொள்ளவில்லையென்றால், தப்பித்தீர்கள்.
பிற பின். இந்த விவகாரம் எப்படி விரிகிறது எனப் பார்க்கலாம்… நம்பிக்கைகள், நம்பிக்கைகள்… :-)
September 29, 2016 at 10:15
Awesome, I wish you good luck in getting the right recruit, However i wish to say that i’m a 60% fit in the desirable attribute and attitude & interest category, on the technical front 20% . This is my first post here, I’m a avid reader of your blog for the last couple of years.
You Rock !!!
September 29, 2016 at 13:52
> இவர்களால் சமூகத்துக்கு ஏற்படும் ஒரே உபயோகம் – இந்த ஜந்துக்கள் அரங்கேற்றும் ‘பந்த்’ வகையறாக்களின்போது அன்றாடங்காய்ச்சிகள் வயிற்றில் அடிக்கப்படுவதுதான்
இவ்வரி நீங்கள் எண்ணியது போல் தான் வந்துள்ளதா ?
September 29, 2016 at 18:08
அய்யா வினோத், அப்படித்தான் என எண்ணம். :-(
என்ன சொல்லவந்தேன் என்றால் – இப்படி அன்றாடங்காய்ச்சிகளுக்கு அவர்கள் கொடுக்கும் உபத்திரவம்தான் அவர்கள் செய்யும் நல்ல விஷயம் என்றால் – பார்த்துக்கொள்ளுங்கள், அவர்கள் செய்யக்கூடிய (அதாவது செய்துகொண்டிருக்கும்) விஷயங்கள் எவ்வளவு எதிர்மறையாக இருக்குமென்று! அயோக்கியத் தனமானவை, பேடித்தனமானவை என்று…
ஹ்ம்ம்… நான் இந்தமாதிரித்தான் எழுதவந்தேன்…. ஆனால் குரங்கு பிடிக்க திராவிடனாக முடிந்த கதையாகி விட்டதோ? ;-)