மடையர்கள்: நான், தொப-முதல்வாதிகள், தொ. பரமசிவம் + பாவப்பட்ட நெட்டைப் பனைமரம் – சில குறிப்புகள்

October 7, 2016

பனைமரமே, பனைமரமே, ஏன் தொப வாயில் விழுந்தாய் பனைமரமே… :-(

ஹ்ம்ம்ம்… வேறென்ன பிலாக்கணம் வைக்க… :-((

சிலபல மாதங்களுக்கு முன், பெரியவர் தொ. பரமசிவன் அவர்களின் பனைமர ஆராய்ச்சிப் பராக்கிரமத்தைப் பற்றிச் சில பதிவுகளை எழுதியிருந்தேன்.
… அவற்றில் – ஒருகாலத்தில் நானுமே மதித்த பெரியவர் தொபெ அவர்களின் — இக்காலங்களில் பொதுவாகவே அட்ச்சுவுடும் தன்மையைப் பற்றிக் கொஞ்சம் கிண்டலாகவே எழுதியிருந்தேன். இது சிலருக்குப் பிடிக்கவில்லை – நீ சொல்வதற்கெங்கே ஆதாரம் ஏவாளம் எனக் கேட்டார்கள். என்னவோ தொப அவர்கள் தன் மனம்போன போக்கில் எழுதியவையெல்லாம் பெரிதாக ஆதாரபூர்வமாக எழுதியதுபோலக் கரித்துக்கொட்டினார்கள் – அவற்றை படித்துச் சிரித்துவிட்டுக் கடாசிவிட்டேன் என்பது வேறு விஷயம்… ஏனெனில்  தொப அவர்கள் புனைவிலக்கியக்காரராகப் பரிணாம வீழ்ச்சி பெற்றுப் பலகாலம் ஆகிறது அல்லவா! ;-)

சரி. அது தொடர்பாக, சென்ற மாதம் நான் விழுப்புரம் சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்களையும் வரைந்த சில படங்களையும் சான்றுகளாகக் கொடுக்க விழைகிறேன்.

-0-0-0-0-0-0-0-

தொப அவர்கள் செப்பியது போல டுபாக்குர் பொறியியலாளர்களாக நம் பண்டமிழ் மக்கள் இருந்திருந்தால் அவர்களுடைய கால்வாய்கள் மதகுகள் வடிவமைப்பு இப்படித்தான் இருந்திருக்கும்…

imag0169(வரைந்த படங்களுடன் என் கோணாமாணா கையெழுத்தில் சில குறிப்புகளையும் எழுதியிருக்கிறேன்! ஆராய்ச்சி செய்து படித்து இன்புறவும், நன்றி!)

ஆனால், நல்லவேளை – தொப அவர்களின் பழிப்புரைக்கு மாறாக நம் மூதாதையர்கள், திராவிடர்கள் அல்லர் – அவர்கள் மூளையுடன் தான் பணி செய்திருக்கிறார்கள்!

imag0171

பாவம் –  அவர்கள் பகுத்தறிவின் தெய்வத்தால் ஆட்கொள்ளப்படவில்லை. ஆகவே உள்ளே நோண்டப்பட்ட பனைமரக் குழாய்கள் மூலமாக, வெள்ள நீருடன் மூச்சுமுட்ட  வெளியேறவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருந்திருக்கவில்லை…

-0-0-0-0-0-0-0-

சரி, கீழே அண்மையில் நான் எடுத்த (சில ஏரிப்புற மதகோரப் பனம் தண்டுகளின்) புகைப்படங்கள்…

imag0107

மேலே: ஒரு நன்கு வளர்ந்த பனைமரத்தின் தண்டு – இது அடுத்தவருடத்து மதகுத் தடுப்புக்காகக் கொணரப்பட்டது  – இதில் இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்கவேண்டும்: 1) இதன் உட்பகுதி குடையப் படவில்லை – அது தொப அவர்களின் கற்பனைக் குழாயல்ல 2) இதன் விட்டம் ஒரு ஒன்றரை ரெய்னோல்ட் பேனா அளவுக்குக் கூட இல்லை – அதுவும் மேற்தோலெல்லாம் சேர்த்துத்தான்! இந்த எழவுக் ‘குழாயின்’ மூலம் மனிதர்கள் வெளிவரவேண்டுமா என்ன? pipe dreams எனச் சொல்வார்களே, தொப அவர்களுடைய மேலான கட்டுரை இவ்வகைதானோ? ;-)

imag0109மேலே: இதுவும் அதேபோலக் கொணரப்பட்ட மரத்தண்டு. இதிலும் நீங்கள் கவனிக்கவேண்டும்: லுங்கியை டப்பாக்கட்டுக் கட்டிக்கொண்டு படமெடுத்துக்கொண்டிருக்கும் என்னுடைய நிழல்தான் அந்த பனைமரத்தின்மீது படிந்திருப்பது  – மேலும், இதில் சரியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனாவானது என் ‘குறி’யீடு எனவும் கருதவும்…

imag0108மேலே: உளுத்துப்போன ‘சென்ற வருடத்தில் மதகுவாசலுக்காக’ உபயோகப்படுத்தப்பட்ட மரம் – ஒரே வருடம்தான் இது தாங்கியிருக்கிறது!

imag0111மேலே:  அதே உளுத்துப்போன மரத்தின் இன்னொரு பகுதியைப் பிரித்திருக்கிறேன் – சுற்றளவு பற்றித் தெரிந்துகொள்வதற்காக இரண்டு பேனாக்களை வைத்திருக்கிறேன்…

-0-0-0-0-0-0-

பண்டமிழ்ப் பனைமர ஆராய்ச்சியை, நம் மேதகு தொப அவர்கள் இப்படிச் செய்யவேண்டாம், தொடரவேண்டாம், கண்டமேனிக்கும் அட்ச்சுவுடவேண்டாம் என்கிற தாழ்மையான கோரிக்கையுடன் இக்காட்டுரையை முடிக்கிறேன்.

இதற்கும் நொள்ளை சொல்லத் திராவிடர்கள் இருப்பார்கள் என எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர்களைப் பாவம், போக்கற்ற மடையர்கள் என விட்டுவிடலாம், ‘ஆவற வேலய’ அதாவது வேறு ஜோலியைப் பார்க்கலாம் என்றுதான் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். அல்லது திட்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

நன்றி. வணக்கம். வந்தனம். நமஸ்தே. நமோஷ்கார்.

9 Responses to “மடையர்கள்: நான், தொப-முதல்வாதிகள், தொ. பரமசிவம் + பாவப்பட்ட நெட்டைப் பனைமரம் – சில குறிப்புகள்”

 1. gopi Says:

  பிடுங்க வேண்டிய அடைப்பை வெளிப்புறம் வைத்திருந்தால் ஏரி வெள்ளத்தில் குதித்து மூச்சை அடக்கி பனையில் தலையை கொடுக்க வேண்டியதில்லை அல்லவா சும்மா ஓரமாக நின்றே புடுங்கியிருக்கலாமே அடைப்பை

 2. Kannan Says:

  Photos look like it is morphed :( we want to have it checked at some US labs

 3. RC Says:

  அய்யா,
  ”மடையர்” என்ற சொல் தொடர்பாக நான் சமீபத்தில் படித்த புத்தகத்தில் இருந்து ஓர் குறிப்பு.
  நூலின் பெயர்: ‘நாயக்கர் காலம் – இலக்கியமும் வரலாறும் ‘திரு.அ .ராமசாமி அவர்கள் எழுதியது.அவர் A.KRISHNASWAMY எழுதிய ‘the tamil country under vijayanagar empire’ நூலை மேற்கோள் காண்பித்து ”ஆயங்கார கிராம” அமைப்பில் உள்ள 12 உறுப்பினர்களில்
  //கர்ணம்,மணியம்,தலையாரி,புரோகிதர்,பொற்கொல்லர்,மடையன்,கொல்லன்,தச்சன்,குயவன்,வண்ணான்,அம்பட்டையன்,செருப்பு தைப்பவன் //
  இதில் “நீர்கண்டி அல்லது மடையன்”என்பவன் கிராமத்தின் நீர்ப்பாசன பொறுப்பைக் கையாள்பவனாக இருந்துள்ளான் என்று குறிப்பிடுகிறார்.

  இலக்கியம் துணை கொண்டு வரலாற்றை உணர முயற்சிக்கும் நூல் இது. கிராம அமைப்பைப் பற்றி நேரடியாக ”பள்ளோ” அல்லது வேறு வகை பாட்டோ இல்லை எனினும் தனிப்பட்ட உறுப்பினர்கள் பற்றி இலக்கியத்தில் சான்று உள்ளது என்று பொருள் வரும்படி குறிப்பிட்டுள்ளார்.

  நீங்கள் எழுதிய “பதிவின் மையத்தை” ஒட்டியது இல்லை எனினும், அந்த சொல் தொடர்பாக அறிய நேர்ந்ததால் பகிர நேரிட்டது.

  தங்கள் பார்வைக்கு..


  • அய்யா, மிக்க நன்றி. :-) நீராவாரி முறைமைகள் இருந்திருக்கின்றன. மடையர்களும் இருந்திருக்கிறார்கள், இல்லையெனச் சொல்லவில்லை. மடையர் எனும் சொல் நளபாகம் செய்பவர்களைக் குறிப்பிடவும் பயன்பட்டுள்ளது. ஆனால் தொ.ப அவர்கள் சொன்னதுபோல் பனைமரமும் உபயோகப் படவில்லை. மடையர்கள் உயிரைப் பணயம் வைத்து பனைமரக் குழாய்கள் வழியாகச் சென்று தங்கள் வீரதீரத்தைக் காண்பிக்கவுமில்லை.

   அவ்வளவுதானய்யா நான் சொல்ல வந்தது. :-)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s