அசிங்கமாக இருக்கிறது :-( – விவசாயிகள் என்ற பெயரில் தில்லி ஜந்தர்மந்தர் எழவில் நடந்துகொண்டிருக்கும் அலங்கோலம்! வெட்கம் பிடுங்கித் தின்கிறது… தில்லி நண்பன் (அண்மைய அறிமுகம்) சொல்கிறான் – உங்கள் ஊரில் மேலிருந்துகீழ்வரை எல்லோரும் நடிகர்களே! (உண்மைதான்! நாங்கோ #தெராவிடனுங்கோடா!) Read the rest of this entry »

இதில் மூன்று விஷயங்கள்: 1) எஸ்கேபி கருணா என்ற மனிதரைப் பற்றி அரைகுறை நண்பர் ஒருவர் சிலாகித்து பின்னூட்டம் எழுதியதால், நான் அதனைத் தொடர்ந்ததன் முடிவு; ஏனெனில் தொங்கல் கேஸாக என்னால் இதனை விட்டுவிடமுடியாது, இது நம் தமிழகத்துப் பிள்ளைகளின் கல்வியைக் குறித்தவொரு பிரச்சினை 2) பொறியியலாளர்களின் பொறியில் அகப்பட்ட நண்பரொருவர் எழுதிய கடிதம் 3) பெங்களூர் ‘ஏரோ இந்தியா’ விமானக் கண்காட்சியில் நம் சராசரி இளைஞப் பொறியியலாளர்களின் பங்களிப்பு குறித்து.

Read the rest of this entry »

இலவச இணைப்பு: அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!

வாலிப, வயோதிக அல்லது சுக்ரீவப ‘நின்று ஆடும்’இளவல் தமிழகத்துத் தமிழ் நண்பர்களே!

தமிழகத்தில் நகைச்சுவை உணர்ச்சி அதிகமாகிக்கொண்டு வருகிறது. ஆகவே, இன்றைய தினம் நீங்கள், துக்கத்தில் ஆழ்ந்து மனம்பேதலித்து சட்டையைப் பிய்த்துக்கொண்டு கோமணமில்லாமல் (cow no-smellingly ©எஸ்ராமகிருஷ்ணன்) அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்கிறேன்.
Read the rest of this entry »

மன்னிக்கவும். கருணாநிதி அவர்கள் 1960களிலேயே உலகம் போற்றும் கடற்புல உயிரியல் ஆராய்ச்சியாளராக இருந்திருக்கிறார்! மிக முக்கியமாக, கடற்சார் பாலூட்டி உயிரினங்களைப் பற்றி அசத்தவைக்கும் அதியுன்னத அகழ்வாராய்ச்சிகளைச் செய்து நம் செல்ல திராவிட இனமானத்தை விண்ணோக்கிச் செலுத்தியிருக்கிறார்! சுயமரியாதையைச் சூடுபறக்கப் பரப்பியிருக்கிறார்!! பகுத்தறிவைத் தொகுத்தளித்திருக்கிறார்!!! இதற்காகவே இவருக்கு ஆருடத்துக்கான 2017 நொபெல் பரிசு கொடுக்கப்படவிருக்கிறது என்பதைத் தரணி அறியும்! ஆனால், கேடுகெட்ட நமக்குத்தான் இவருடைய மேதமையைச் சரியாக மதிக்கத் தெரியவில்லை. ஹ்ம்ம்… Read the rest of this entry »

#1. திராவிட இயக்கத் தோழர்கள் ஒருவரிடம் கூட, ஈவெரா அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
#2. ஈவெரா அவர்களைக் சுற்றி இருந்த பல திராவிட இயக்கத் தோழர்கள், களவாணிகள்.

Read the rest of this entry »

பேராசிரியர் + வரலாற்றாளர் + மொழிபெயர்ப்பாளர் + ‘த மண்டு’ தினசரியின் ஆஸ்தான அறிவுஜீவிகளில் ஒருவர் + ஆ + அய்யய்யோ புகழ் — ஆஇரா வேங்கடாசலபதி அவர்களுடைய வீரதீரப் பராக்கிரமங்களை ஏகத்துக்கும் ‘புகழ்கிற’ சந்தடி சாக்கில், அவருடைய ‘த மண்டு’ தினசரிக் கட்டுரைகளைச் சிலாகிக்கிற போதெல்லாம் — அவர் பணி(!) புரிந்துகொண்டிருக்கும் MIDS நிறுவனத்தையும், நான் என்னவோ தேவையேயில்லாமல் ‘புகழ்கிறேன்’ என என் கிழட்டு நண்பர் ஒருவர் (80+) பிலாக்கணம் வைத்திருக்கிறார் – மேலும் கெட்டவார்த்தைகளை அளவுக்கதிகமாக உபயோகிக்கிறேன் ;-) என்றும் அபாண்டமாகப் பொய் சொல்கிறார்.

கிழவனாரின் அபாண்டத்தைக் கடாசிவிட்டு – பாதிக் கிழக்கோட்டானாகிய நானும் அவருடைய குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நம் பேராசிரியச் சலபதியாரின் அதிஅற்புதத் திறமைக்கு, அவர் பணிபுரியுமிடம்  MIDS எப்படி ஜவாப்தாரியாக முடியும், ஹ்ம்ம்? Read the rest of this entry »

…என் கண்ணே பட்டுவிடும்போலவிருக்கிறதே! உடனடியாக ‘விடுதலை’க்குத் திருஷ்டி கழித்து அதன் உள்ளேயும் வெளியேயும் மசுத்துக்குக் கூட ஒன்றுமேயில்லாத மண்டையின் மேல் ஓங்கி ஒரு பூசணிக்காயைப் போட்டு அதனை (=மண்டையை) உடைத்தால்தான் சரியாகும் போலவிருக்கிறதே! என்ன செய்ய!! :-( Read the rest of this entry »

30.5.2016 திங்கள் காலை, சென்னை பெரியார் திடல் துரை.சக்கரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று:  தீர்மானம் 5(!) Read the rest of this entry »

பொய்கள், அண்டப் புளுகுகள், புள்ளியியல் விவரணைகள் – என, ஒரு ஆங்கிலப் பதம் (= Lies, Big lies & Statistics) உண்டு. Read the rest of this entry »

குடமுருட்டி குண்டனார், இந்தத் தள்ளாத வயோதிக வயதில் இப்படியெல்லாம் ஜன்னிகண்டதுபோல் உளறிக்கொட்டுவது ரொம்ப அவசியமா?

Read the rest of this entry »

என் திருவாரூர் நண்பர் ஒருவர் (இவரது நம்பகத்தன்மை அதிகம்) இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்குத் தெரிவித்துள்ளபடிக்கு:

அவருக்கு நேரடியாகத் தெரிந்தே திருவாரூர் சட்டசபை தொகுதியின் விஜயாரூரம், கிடாரம்கொண்டான் பகுதிகளில் திமுக சார்பாக பணம் அமோகமாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது! (நண்பர், பணத்தை வாங்கிக்கொள்ளாமல் திமுக களவாணிகளைத் திட்டி அனுப்பிவிட்டார்)

Read the rest of this entry »

இதுதான் – பரந்துபட்ட மாபெரும் குடும்ப ஊழல்களின், அயோக்கியத்தனங்களின், மாளா கொள்ளைகளின், கடைந்தெடுத்த கயமைகளின், தமிழக வளங்களைச் சுரண்டுதல்களின், நம் அடிப்படை அறவுணர்ச்சிகளைக் கீழ்மைப்படுத்தலின், நெடிய பாரம்பரியத்தைச் சிறுமைப் படுத்தலின்,  கமுக்கமான ஜாதிவெறியின், ஊடகப் பேடித்தனத்தின், தமிழை ஒழித்தலின், நம் மக்களை சுயகௌரவமற்ற பிச்சைக்காரர்களாகவும் + மொடாக்குடிகாரர்களாகவும் + திரைப்படரசிகக் குஞ்சாமணிகளாகவும் ஆக்கியதின், ஜோடனை செய்யப்பட்ட வரலாறுகளின், சுரணையற்ற வெட்கங்கெட்டத்தனத்தின் – மகாமகோ ஊற்றுக்கண்.

இது ஒழிந்தால், பிற திராவிடக் கொள்ளைக்காரக் கட்சிகளும் உள்ளீடற்ற பிற திராவிடலைத்தனங்களும் ஒவ்வொன்றாக உதிர்ந்துவிடும் – இது என் திடமான நம்பிக்கை.

Read the rest of this entry »

எனக்கு இது மாளா ஆச்சரியம் தரும் விஷயம்.  ++ அரைகுறைகளின் சொம்புதூக்குதல்களையும் அவர்களுடைய அற்ப மலைப்பையும் அவதானிக்கும்போதெல்லாம் ஏற்படும் அலுப்பும் சலிப்பும், ஊக்க போனஸ்.

Read the rest of this entry »

#பெரியார்பிறந்தமண்-ணுக்கு ஜே!

#பெரியார்புதைந்தமண்-ணுக்கு ஜேஜே!!

… உண்மையாகத்தான் சொல்கிறேன். கிண்டலெல்லாம் இல்லை. இது ஒரு படு ஸீரியஸ் ‘க்ஷேத்திராடன’ பயணக் கட்டுரை – அதற்கு முஸ்தீபாக,  பெரியார் பற்றிய சில குறிப்புகள், அவ்வளவுதான்.

Read the rest of this entry »

கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் பற்றி,  எட்டாம் வகுப்புவரையாவது படித்திருக்கக் கூடும் நீங்கள் – மனப்பாடப் பகுதிகளின் காரணமாக அறிந்துகொண்டிருக்கலாம்.

ஆனால் அவர் பழைய ஃபேஷன்!

புதிய ஃபேஷன் மாடல், நம் மகாமகோ ஊக்கு வாணிகர் தான்! அவர் மட்டுமே தான்!! இவரை விட மாணவர்கள் மேல் கரிசனம் உடைய, சமூகப் பொறுப்புணர்ச்சி உடைய, ஆகப்பெரிய தலைவர் இருக்கத்தான் கூடுமா?

Read the rest of this entry »

முதலில் ஒரு விளம்பரம்!

நாளை சென்னை கலாக்ஷேத்ராவில், இளம் கற்றுக்குட்டி நாட்டியக் காரர்களுடன் இசுடாலிர் பரதநாட்டியம் ஆடப் போகிறார்!

அனைவரும் அலைகடலென ஆர்பரித்துச் செல்லவும். (ஆனால் ஸெல்ஃபி வேண்டாமே!)

-0-0-0-0-0-0-

…பிரச்சினை என்னவென்றால்,  தளபதி இசுடாலிர் மெட்ரோ சகபயணியை சில மாதங்கள் முன்பும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை நேற்றும்  கன்னத்தில் அறைந்ததாகச் சொல்லப்படும் வதந்திகள் – வதந்திகள் மட்டுமே! Read the rest of this entry »

அய்யாமார்களே! இது ஒரு துர்சொப்பனமும் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு தலைமுடிகளையும் பிய்த்தெறிந்து யோசித்து, மண்டைகாய்ந்து, தருக்கபூர்வமாக அதி நுண்கணிதச் சமன்பாடுகளையும், குறியீட்டுப் படிமவியலையும் கலந்தடித்து, நான் அடைந்திருக்கும் மகாமகோ முடிவுதான் இது!

என்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா? கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை! :-(

சரி.  இந்த முடிவுக்கு நான் எப்படி வந்தேன் என நீங்கள் கேட்காவிட்டாலும் இதனை விளக்கத்தான் போகிறேன். கவலை வேண்டேல்!
Read the rest of this entry »

அல்லது, ம்ம்ம்…  இது மாணவ குண்டர் மன்றமா? மெகா ஸ்டூடென்ட்ஸ் கான்க்லேவ் (=Mega Students Conclave!) என்பதை,  ‘மாபெரும் மாணவர் மன்றம்’ என்று முழி பெயர்த்திருக்கிறார்களே, பாவிகள்! தமிழ்த் துரோகிகள்!! இவர்களுக்குக் கொலைமாமணி பட்டத்தை அளிக்கவாவது அடுத்த முதல்வராக முக இசுடாலிர், வர முடியுமா? :-(

Screenshot from 2015-09-12 20:18:50
Screenshot from 2015-09-12 22:21:31+போனஸ்: மாணவமணிகளுக்கு இசுடாலிரின் அறிவுரை!

…துப்புரவாக வேலைவெட்டியற்று காலட்சேபம் செய்துகொண்டிருந்தால், சில சமயம், நம் தமிழ் நாட்டின் செல்லங்களான ‘யூத்து’களுடன் ஜாலியாக அளவளாவிக்கொண்டு விலாநோகச் சிரிக்கலாம்!

Read the rest of this entry »

பகீர் செய்தி!

சென்னை, 23 ஜூலை, 2015:  முன்னதாக, தன்மானத் தலைவர் நிகரிலா திராவிடர் திலகம், இனமானச் செம்மல், கி. வீரமணி அவர்கள், சிங்கப்பூர் சென்றிருந்தபோது  சொகுசாக ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன்னுடைய செல்லமான கற்பனைக் கோவேறுகழுதை****யின்மீது ஆரோகணித்து ‘அமெரிக்க உளவியல் சங்கம்’ பற்றிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பை அவரோகணித்தார்.

மேலும் ‘திராவிட உளறியல் சங்கம்’ எனும் தன் சொந்த சங்கத்தின் சங்கதிகளையும் கலந்து கமகமா என்று பரிமாறினார். அதாவது பரி நரியாகி, நரி சொறியாகி மாறி மாறி, படு அற்புதமாகக் காட்சிதந்து பரிமாறப்படும் திராவிளையாடல் புராணக்கதைதான் இது! Read the rest of this entry »

(அல்லது) ஏகபோக திராவிடக் காப்பிக்கடை நிறுவனரும், தழுவல் சக்ரவர்த்தியுமான மானமிகு யுவகிருஷ்ணனாரும், பிதுங்கிவழியும் பாற்சுரப்பிப் படங்களும்

…இவருக்கு வெட்கம் என்பது துளிக்கூட இல்லை. மானத்தையே விடுங்கள் – ஏனெனில், அவர் ஒரு திராவிடலை என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்; கஜினியின் மொஹெம்மத் கொள்ளை அடித்தே காலத்தை ஓட்டியது போலத்தான், இவரும் வெட்டியொட்டியே ‘தொழிலை’ நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரிகிறது;  இருந்தாலும், பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக இழிவுபடுத்தி, ஒரு போகப் பொருளாக மட்டுமே ஆண்குறி வீங்க சிந்திப்பவர்(!) எனப் பிரத்தியட்சமாகத் தெரியவரும்போது – சீ, இந்த இளைஞனா திருந்தப் போகிறான் என்று தோன்றுகிறது.

Read the rest of this entry »