விடுதலை வீரமணி: கருணாநிதி தன் ஓய்வு வயதை உயர்த்தக்கூடாது!
June 9, 2016
30.5.2016 திங்கள் காலை, சென்னை பெரியார் திடல் துரை.சக்கரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று: தீர்மானம் 5(ஆ!)
டாக்டர் கலைஞர் ஓய்வு வயதை உயர்த்தக் கூடாது!
மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றுபவரின் ஓய்வு வயதை 100லிருந்து 125 வயதாக உயர்த்துவதாக கலைஞர் கருணாநிதி அறிவித்திருப்பதானது – பல்லாயிரக்கணக்கான இளம் தலைவர்களுக்கான கட்சிப் பணியை, முக்கியமாக இளம் தளபதி (வயது 63 மட்டுமே!) ஸ்டாலினின் பணியைத் தடை செய்வதாகும்.
குடும்பக்குழுப் பரிந்துரையின்கீழ் 99 சதவீத அடிப்படையில் கட்சிக்கொள்ளைப் பொறுப்பாளர்களாகப் பணியாற்றும் பிற்படுத்தப்பட்ட தலைவரின் குடும்ப சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பதவி உயர்வும் பாதிக்கப்படும்; பொறுப்பில்லாமல் தாழ்த்தப் பட்ட இன்னபிற 1 சதவீதர்களுக்கான வாய்ப்பும் பறிபோவதால் இந்த முடிவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு திமுகவைக் கேட்டுக்கொள்கிறது. இல்லையெனில் உரிய வகையில் போராட்டத்தில் இறங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
-0-0-0-0-0-0-0-
மேற்கண்ட பகடிப் பழிப்புரைக்கு ஆதாரம்(!): http://viduthalai.in/headline/123175-2016-05-30-10-00-30.html
தீர்மானம் 5(ஆ) :
டாக்டர்கள் ஓய்வு வயதை உயர்த்தக் கூடாது!
மாநில, மத்திய அரசின்கீழ் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு வயதை 60லிருந்து 65 வயதாக உயர்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதானது – பல்லாயிரக்கணக்கான இளம் மருத்துவர் களுக்கான அரசுப் பணியைத் தடை செய்வதாகும்.
மண்டல்குழுப் பரிந்துரையின்கீழ் 27 சதவீத அடிப்படையில் மருத்துவர்களாக பணியாற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பதவி உயர்வும் பாதிக்கப்படும்; தாழ்த்தப் பட்டவர்களுக்கான வாய்ப்பும் பறிபோவ தால் இந்த முடிவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது. இல்லையெனில் உரிய வகையில் போராட்டத்தில் இறங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
குறிப்பு: கலைஞர் அவர்கள், உண்மையில், ஒருமுறையல்ல – இரு முறை டாக்டர் பட்டத்துடன் பட்டொளி வீசிப் பகுத்தறிவு வானில் பறந்துள்ளவர் என்பதை நினைவுகூறவும். நன்றி.
-0-0-0-0-0-0-0-
எப்படியெல்லாம் சுழல்கிறது, கண்டமேனிக்கும் சமூகநீதித்தனமாகப் பொத்தாம்பொதுவாக அட்ச்சுவுடும் திராவிடத் தன்மான நாக்கு! ;-)
மருத்துவர்கள் என்றால் ஒரு விதி – ஆனால், திமுக என்றால் இன்னொரு தலைவிதி – வேறென்ன சொல்ல!
…தர்க்கரீதியான சிந்தனைக்கும் திராவிடத்தனத்துக்கும் ஒரு தொடர்புமில்லை என்பதை மறுபடியும் மறுபடியும் பெரும்பாடுபட்டு நிரூபிப்பதில், விடுதலைவீரமணியாருக்கு நிகர் இப்பூவுலகில் யாரிருக்கிறார்கள், சொல்லுங்கள்… ;-)
June 10, 2016 at 11:15
நீங்களும் எவ்வளவோ முயற்சி செய்கிறீர்கள். ஆனால் ஒன்னும் நடக்கல…. முயற்சி திருவினையாக்கும்.
June 10, 2016 at 11:20
அய்யா, ஆசிர்வாதத்துக்கு நன்றி.
June 11, 2016 at 20:20
தீர்மானம் 5(இ) அய்யா வீரமணி அவர்களின் ஓய்வு வயதை அவர் வாழ்நாள் முழுவதும் என மாற்றப் பட வேண்டும். இவ்வாறு தீர்மானம் ஒன்றும் இருந்திருக்குமே, நீங்கள் குறிப்பிடவில்லையே.
June 11, 2016 at 22:55
:-)))