… Joseph Haydn’s jingoistic composition extolling the virtues of deutcheland and his emperor notwithstanding, I like (and love) my dear Haydn’s oratorios immensely – the seasons and the creation.
Yes. Children above all. Yeah!
| ஒத்திசைவு | प्रत्याह्वय | resonance | for nuclear power, gmo, space research, vaccines, s&t+++, the works… | supporter of the use of our brains-consciousness & the indefatigable human spirit | मेरा देश बदल रहा है | (λஸம்ஸ்க்ருதம்.λதமிழ்.λஹிந்தி.λஆங்கிலம்… …λகடந்தகாலம்.λஓளிரும்நிகழ்காலம்.λஜொலிக்கப்போகும்எதிர்காலம்.λகற்பனை.ஒத்திசைவு) சிந்தனை | 🕉️ नमस्ते सदा वत्सले मातृभूमे… 🇮🇳 | “… … இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது…” |
First things first, dear fellers and fellerinas…
Let me upfront say that, I am big sucker for very beautifully produced and content rich books – and of course – soulful, deep, lilting music.
அதாவது: மொஹெம்மத் நபி அவர்களின் வழி நடத்தலில் ஒரு ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற மனிதரெல்லாம் உருவாக முடியும் என்றால் ராமசாமியாக நான், வெறும் ஒரு அப்துல்லாவாகப் பதவியிறக்கம் பெறமுடியாதா என்ன? :-)
இது சென்ற பதிவின் (=இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015) தொடர்ச்சி. அதாவது – இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (7/n) Read the rest of this entry »
(அல்லது) இதுதாண்டா டேட்ட்ட்ட்டா ஸைன்டிஸ்ட்ட்ட்ட்ட்ட்!
… எவ்வளவு தெகிர்யம் உங்களுக்கு! எப்படியென்றா கேட்கிறீர்கள்?
இப்படித்தான். (ஆனால் இது ஆங்கிலத்தில் இருக்கிறது! – Imagining a Buddhist India!!)

சகலடேடாவல்லவன் “அட அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ, தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…” வருகிறார், ஒதுங்குங்கடா முண்டங்களா… (படம் இங்கிருந்து)
இதே விஷயங்கள், தலைகீழாக நடந்திருந்தால் நம் போலிப் போராளிகளும், சமதர்மப்பூங்காவினரும், ஊடகப் பேடிகளும் எப்படியெல்லாம் ஆடியிருப்பார்கள் என்பதை நினைத்தால்…
அய்யோ மூடர்காள், அந்த வேலைவெட்டியற்ற வரலாற்றாளர் சுப்பராயலுவின் சோழர் கதை, எழவெடுத்த நீலகண்ட ஸாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாற்றில் எழுதிய கதையெல்லாம் சோழர் வரலாறேயல்ல! மன்னிக்கவும்!
… Joseph Haydn’s jingoistic composition extolling the virtues of deutcheland and his emperor notwithstanding, I like (and love) my dear Haydn’s oratorios immensely – the seasons and the creation.
Yes. Children above all. Yeah!
… சிறு வயதிலிருந்து கடுமையான உடல் உழைப்பு (தங்கள் 140 அடி ஆழக் கிணற்றை இவரும், இவர் தந்தையாரும் மட்டுமே தோண்டியிருக்கின்றனர்) – வயல்களில் போராட்டம். தங்களுக்குத் தேவையான உணவு, சோப்பு, துணி என அத்தனை பொருட்களையும் அவர்களே தயாரித்துக் கொண்டிருந்தனர், வீட்டில்/பண்ணையில் உதவிக்கு வேறு ஆட்களை வைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் இரு விஷயங்களுக்குத்தான் வெளியே சென்று கடையில் நிற்க வேண்டியிருந்தது – 1) வெள்ளைச் சர்க்கரை – இதையும் ஏதாவது விசேஷங்களில்தான் உபயோகித்திருக்கிறார்கள்; 2) தேயிலை – இதன் தேவையும் சொற்பமே! மற்றெல்லாவற்றையும் அவர்களுடைய சிறு பண்ணையிலேயே தயாரித்துக் கொண்டனர்.
29 வருடங்கள் முன் – இந்த ஃபெப்ருவரி 17 அன்று 1986ல், ‘கே’ போய்ச்சேர்ந்தார்.

படம் இங்கிருந்து.
இதில், எனக்கு நினைவிலிருக்கும் ஒரு சுவாரசியமான விஷயம் – ‘கே’ சென்னையில் ஆற்றிய அவருடைய கடைசிச் சொற்பொழிவில் (4, ஜனவரி, 1986), தருமுசிவராமு அவர்களால் தேவைமெனக்கெட்டு ஏற்படுத்தப்பட்ட, நம்பவேமுடியாத ஒரு சிறு சலசலப்பும் அடங்கும். நானும் என்னுடைய சில நண்பர்களுடன் அந்தச் சொற்பொழிவுக்குச் சென்றிருந்தேன். விக்கித்துப் போனேன். (இது ஒரு தனிக்கதை)
Read the rest of this entry »
“சிலர், மற்ற மனிதர்களுக்கு உதவியென்று ஏதாவதைச் செய்தால் – அதற்கான பிரதிபலனை, பதில் உதவியை எப்படிப் பெறுவது என்று சதா நோக்கியவண்ணம் இருப்பர். மற்றும் சிலர், இந்த பதிலுதவி பெறுவதில் இவ்வளவு மும்முரமாக இருக்க மாட்டார்கள் – ஆனால் அவர்களுக்குத் தாங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தது பின்புலத்தில் இருக்கும் – ஆகவே, அந்த உதவியை, ஒரு கடனாகத்தான் பாவிப்பர். ஆனால் இன்னும் சிலர் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள். அவர்கள் திராட்சைக்கொடியைப் போன்றவர்கள் – ஒரு பிரதிபலனையும் பார்க்காமல் கனிகளை உற்பத்தி செய்து கொண்டிருப்பார்கள். அளித்த உதவிகளுக்குப் பின்னர் மற்றவேலைகளுக்குத் தொடர்ந்து சென்று கொண்டேயிருப்பார்கள்… நாம் அப்படித்தான் இருக்கவேண்டும்.”
மார்க்கஸ் ஆரீலியஸ், ரோமன் சக்ரவர்த்தி. (தியானங்கள் / எழுதிய வருடங்கள்: 0161 – 0180 ஸிஇ / மொழிபெயர்ப்பு: க்ரிகரி ஹெய்ஸ் / பக்கம் 55 / ரேன்டம்ஹவ்ஸ், நியூயார்க் / என்னிடமிருக்கும் பதிப்பு 2002 / நான் இப்புத்தகத்தை வெகுவாகப் பரிந்துரை செய்வேன்.)
நம் கீதை சொல்வதும், அடிக்கோடிடுவதும் இதனைத்தான். ஆனால் நான் பரிணாம வளர்ச்சியற்றவன். கிடந்து உழன்று கொண்டிருக்கும் சாதாரணன் தான். ஆகவே – நான், சக்ரவர்த்தி அவர்களின் பகுப்பில், இந்த ‘முதல் சிலர்’ வகையறாக்களில் இருப்பவன். இப்படிச் சொல்வதில் எனக்குக் குற்றவுணர்ச்சியோ போதாமையோ இல்லை; வெறும் வருத்தம்தான். ஏனெனில் நான் போகவேண்டிய தூரம் அதிகம். Read the rest of this entry »
பெருமாள்முருகன் அவர்களின் பாதிநரைத்த தாடியையும் (=வெள்ளைத்தாடியொரு பாகன்?) – நெற்றியின் கவலைவரிகளையும், அவரது கையறு நிலையையும் பார்த்தால் கண்றாவியாக இருக்கிறது.
…அசப்பில், என்னை நான் எவ்வளவோமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு நெகிழ்ந்துகொண்டிருக்கும்போது என் பிம்பம் எனக்கு அனாதிகாலம் தொட்டு அறிவுரையை மௌனமாக காலத்தின் நீட்டிப்பில் உரக்க வழங்குவது போன்ற ஒரு உணர்ச்சி! ஒருமாதிரி ஜென் பௌத்த நிலைதான். எனக்கு நானே தன்னில்தானே அமைதியடைந்து என்னைப் பார்த்து சிரித்துக்கொள்வேன். அந்தச் சிரிப்புகள் என்னைப் பார்த்து அழும், பாவம்! என்னமோ தெரியவில்லை, இப்போது எனக்கு என் நண்பரும், பேராசானும், நகைச்சுவையுணர்ச்சி கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவேயுள்ளவருமான எஸ்ரா அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். YesRaw! HeeHaw!!
சர்வ நிச்சயமாக, அவன் அப்படி இல்லவேயில்லை! தன்னை இப்படிச் சொல்லிக்கொள்பவன், விவரித்துக் கொள்பவன் ஒரு அயோக்கியன் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. (கொஞ்சம் தேவையற்ற கருணையுடன் இதனைச் சொல்லவேண்டுமென்றால் – அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, பிறரையும் ஏமாற்றுபவன். அவ்வளவுதான்!)
நவீனகுளுவானிய கட்டுரை [=0] ஒன்றின் மேலான எதிர்வினையான – என் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுடைய கட்டுரையின் [1] மீதான ஒரு எதிர்வினையாக, சில மேலதிகமான கருத்துகளை கொஞ்சம் காட்டமாகவே கொடுக்கும் என்னுடைய காட்டுரைகள் – [2], [3], [4] இவற்றைப் படித்துவிட்டு முடிந்தால் தொடரவும்.(பின்புலம்: டிஸிஎஸ் நிறுவனம், தனக்குத் தேவையற்ற 25000 வேலையாட்களை – அவர்கள் தங்களைச் செழுமை செய்துகொள்ள உதவிகரமாக, சராசரித்தனத்திலிருந்து மேலெழும்ப ஏதுவாக – வெளியே அனுப்பப்போகும் சாதாரணச் செய்தி)
… ஐடி/தகவல் நுட்ப வேலையாட்கள் தொடர்பான பல சுவாரசியமான பரப்புரைகள் பதவிசாகப் பரப்பப் பட்டுக்கொண்டே வருகின்றன. சில அப்பாவிகள் இதனையும் நம்பியும் விடுகின்றனர் என்பது தான் சோகம்!
“ஐடி துறையில் வேலை கொடுத்துக்கொடுத்துப் பிழிந்து எடுத்துவிடுவார்கள்!”
“ஐடிகாரர்களுக்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது! முதலாளிகள் ரத்தத்தை உறிஞ்சி விடுவார்கள்!”“வேலை ஸ்திரம் இல்லை! எப்போது வேண்டுமானாலும் கழுத்தைப் பிடித்து வெளியே துரத்தி விடுவார்கள்!”“லாபம் பார்த்தவுடன், அந்த முதலாளிகள் மூட்டையைக் கட்டிக்கொண்டு போய் விடுவார்கள்”“திருட்டு முதலாளிகள் விரித்த வலை தெரியாமல், பாவம் இளைஞர்கள் சிக்கி விட்டார்கள்!”
“கடன் வாங்க ஊக்குவிக்கிறார்கள்!”
“நடுவரிசை அதிகாரிகள், மிட்டில் லெவெல் மேனேஜர்கள் நிர்வாகத்துக்குத் தாளம் போட்டு அடிமட்ட (அதிமட்ட?) ஊழியர்களை நசுக்குகிறார்கள்!”
ஐயாமார்களே, கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமேயில்லாமல் குளுவான்களால் பரப்பப்படும் இந்தப் பொய்மைகளை நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள்? இவை உண்மையா என்று பரிசோதிக்கவே மாட்டீர்களா? :-(
வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி!
ஒரு வழியாக, அட்டைப்படம் தயாராகி விட்டது – இதைச் சரி செய்வதற்குள் நான் உண்மையிலேயே நொந்து நூலாகிவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
… பல புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன – இன்னும் எவ்வளவு என உறுதியாக முடிவாகவில்லை. இப்போதைக்கு ஏழு புத்தகங்கள் மட்டுமே நிச்சயம்.
அனைத்தையும் இதுவரை என் நண்பர் பத்ரி சேஷாத்ரி அவர்களின் உழக்கு பதிப்பகமே வெளியிடுகிறது – சென்ற வருடம் என் மொழிபெயர்ப்பு ஒன்றை இவர்கள் வெளியிட்டு அது சக்கைப்போடு போட்டு, தமிழ்ப் பதிப்பக உலகிலேயே முதல் முறையாக, முதல் ஆண்டிலேயே இரண்டு பிரதிகள் விற்றது நினைவில் இருக்கலாம்… அத்தனையும் சீமார் அவர்கலுடைய ஆவேஷப் படத்தைப் போட்டதற்காகவே விட்றது என்றாள் பார்த்துக்கொல்லுங்கல். எள்ளாப் புகலும் நாம் டமிளர் இயக்கத்துக்கே!
இந்தப் புத்தகத்தைப் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே! ஒத்திசைவின் மூன்றாண்டுகால மகாமகோ வரலாற்றில் ஏகோபித்த ஆதரவு பெற்ற பதிவுகளில் இதுவும் ஒன்று. ;-) அப்பதிவில், பின்னட்டைக் குறிப்புகளும் படிக்கும்படியாக விரிக்கப் பட்டிருக்கின்றன. பாவம், நீங்கள். ஆகவே…
“… There is a goddess of Memory, Mnemosyne; but none of Forgetting. Yet there should be, as they are twin sisters, twin powers, and walk on either side of us, disputing for sovereignty over us and who we are, all the way until death.”
–- Richard Holmes in “A Meander through Memory and Forgetting” (an essay off: Memory: An Anthology/ Wood Harriet Harvey, Byatt AS / Chatto & Windus, 2008/

ராஜனி திராணகம (படத்துக்கு நன்றி: http://thakavalgal.blogspot.in/2009/09/blog-post_9857.html)
பிரபாகரனின் விசிலடிச்சான்புலிக் குஞ்சப்பர்களால், ராஜனி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 35தான்! நெற்றிப் பொட்டில் சுடப்பட்டு, இறந்து, அவர் கீழே வீழ்ந்ததற்குப் பின்னரும்கூட, பின் மண்டையில் இரண்டு தடவை மேலதிகமாகச் சுட்டு தங்கள் அற்பத்தனத்தை நிரூபித்துக் கொண்டார்கள் – சுட்டவர்கள்.
சரியாக 25 வருடங்கள் முன் – 1989ல் கொலைவெறி எல்டிடிஇ கும்பலால் அழித்தொழிக்கப்பட்ட ஸ்ரீலங்கா தமிழரான இவர் – யாழ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், ஒரு (மெய்யாலுமே) மனிதவுரிமைக் காரராகவும் இருந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தின் ‘மனிதவுரிமைக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள்‘ எனும் அமைப்பின் தொடங்கிகளில் ஒருவர். (இவரை ஒரு பெண்ணியவாதி என்று குறிப்பிட்டு, எனக்கு, இவர் ஆகிருதியை குறைத்து மதிப்பிட ஆசையில்லை)
அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர், இளமையில் சில ஆண்டுகள் எல்டிடிஇ அமைப்பில் இருந்தாலும் – மனம் மேம்பட மேம்பட, சிந்தனைகள் விரிவடைய, அனுபவங்கள் கற்றுத்தர – பின்னாட்களில் – எல்டிடிஇ உட்பட பல தமிழக் கூலிப்படை வன்முறை இயக்கங்களின், ஸ்ரீலங்கா அரசின் ஏதேச்சாதிகாரத்திற்கு எதிராகவெல்லாம் பலமாகவே குரல் கொடுத்து வந்தவர். (இவர் ஐபிகேஎஃப்-க்கும் எதிராகக் கருத்துடையவராக இருந்தார்; பல சமயங்களின் இவரும் பரப்புரைகளுக்கு மயங்கினார்தான்)
இவருடைய கணவர் – தயாபால திராணகம, சிங்கள பௌத்தர்; நம்முடைய 2013 ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ புகழ் போராகோமாளித்தன மாணவமணிகள் போலல்லாமல், அரசியல் நிலவரம் அறிந்த, அறிவுள்ள மாணவர் தலைவர் – நேர்மையாளர். கொழும்பு பல்கலைக் கழகத்தில் ராஜனி படித்துக் கொண்டிருக்கும்போது, இவருடன் ஏற்பட்ட அறிமுகம் – ராஜனிக்கு இளம் 23 வயது திருமணத்தில் தொடர்ந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் என எனக்கு நினைவு.
புத்தகங்களைப் பிரிவது எனும் சோகம் (அல்லது மகிழ்ச்சி?) எனும் முந்தைய பதிவிற்குப் பின் கீழே (அல்லது மேலே) படித்தால் நலம்.
-0-0-0-0-0-0-0-0-

மந்தஹாசப் புன்னகையுடன் குட்டி கொர்-ஆன் படித்துக் கொண்டிருக்கும் பர்மாக்கார சந்தன புத்தர் – அவருடைய இடது காது மடலின் கீழ்ப்பகுதி கீழ் நோக்கி இருக்கவேண்டுமோ? (இங்கிருந்து)
… இந்த மாதிரி, புத்தகங்களை நான் சேமித்து வைத்துக்கொள்ளக் கூடாது, தேடித்தேடி வாங்கி பெரும்பாலும் ரசிக்கப் பட்டவையாக இருந்தாலும், அவற்றைப் போர்த்திப் போர்த்தி என்னிடமே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளக்கூடாது, அது சரியான தர்மமல்ல – புத்தகங்கள் தங்களைப் படிப்பவர்களுக்காகவே காத்திருக்கின்றன – ஆகவே, முடிந்தவைகளையெல்லாம் தானமாகத் தந்துவிடவேண்டும் என்பதற்கும் பல காரணங்கள்: Read the rest of this entry »
புத்தகாயண சூத்திரம்(*) – பாகம் 1
… சுமார் ஐந்து வயதிலிருந்து பலவகையான புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தாலும், சுமார் 35 வருடங்களாகத்தான் நான் புத்தகங்களை சொந்தப் பைசாவைக் கொடுத்து வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
மேலும், பல நூலகங்களிலிருந்தும் கடன்வாங்கிப் பல அழகான புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன் – முக்கியமாக சென்னையில் இன்றும் உள்ள, பழவந்தாங்கல் வட்டார, இந்தியத் தொழில்நுட்பக் கழக, சென்னை மாவட்ட மத்திய (=தேவனேயப் பாவாணர்), கன்னிமரா, சென்னை பல்கலைக்கழக, ஏலூர் (பெங்களூர்+சென்னை) போன்ற நூலகங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.
இதைத் தவிர பல ஊர்களின் பல பழைய புத்தகக் கடைகளிலும் – பெங்களூர், லக்னோ, கொல்கொத்தா, தில்லி, நாக்பூர் என, சில பிற நாடுகளிலும் – மயிலாப்பூர் தேசத்தின் பிரசித்தி பெற்ற ஆழ்வார் கடை உட்பட — எண்ணற்ற மணி நேரங்களை முதலீடு செய்திருக்கிறேன்.
… பலவிதமான அற்புத அனுபவங்களில், அண்டவெளிகளில் இப்புத்தகப் பக்கங்களினூடே சஞ்சரித்திருக்கிறேன். கனவா நனவா எனத் தெரியாத எண்ணப் பரப்புகளில் நீந்தியிருக்கிறேன். இத்தனைக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமேதான் என்னுடைய பெரும்பாலான படிப்புகள்/புரிதல்கள். மற்றமொழிகளில், நான் ஒரு நிரக்ஷரகுக்ஷிதான். :-(
இத்தனைக்கும், என்னுடைய தற்கால நிலைமையான – ஸம்ஸ்க்ருதத்தை, க்ரேக்கத்தை எழுத்துகூட்டி வாசித்துப் புரிந்துகொள்வதிலிருந்து, புரிந்து கொள்வதிலிருந்து நான் வெகுவாக முன்னேறியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை – இதற்கான பல காரணங்களில் ஒரு முக்கிய காரணம், மரியாதைக்குரிய ஆசான்கள்/குருக்கள் கிடைப்பது (கிடைத்தாலும்கூட அவர்களைக் கண்டுகொண்டு காலடியில் படிப்பது) எனக்கு அரிதாகிவிட்டிருக்கிறது; இந்த நிலைமையின் முக்கிய காரணங்களில், என் அகங்காரம் வகிக்கும் பங்கு அதிகம். ஆனாலும், குருவே வேண்டாமென்றாலும்கூட, இன்னொரு முக்கியமான முட்டுச் சந்துக் காரணம் – என்னுடைய நேர மேலாண்மையின்மை. (பாருங்கள், இப்படியே எழுதிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நான் விழையும் மற்றகாரியங்களின் மேல் கவனம் கொள்ளலாம் அல்லவா? வலைப் பதிவெழுதும் ஆர்வத்தையும் மீறி அதனைக் கடைந்தேறி மேலே செல்லவேண்டும் அல்லவா??) Read the rest of this entry »
(அல்லது) டக்ளஸ் ஹோஃப்ஸ்டேட்டர்: கெடல், எஷர், பாஹ்: ஒரு முடிவற்ற தங்கப் பின்னல்
1977லேயே வெளிவந்திருந்தாலும், இதனை நான் முதலில் படித்தது 1982ல்தான் என நினைவு. என்னுடைய கல்லூரி நூலகத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது அகஸ்மாத்தாகக் கிடைத்த பொக்கிஷம்; உலகமே அற்புதமாகிவிட்டது எனக்கு! 5 நாட்கள் தொடர்ந்து உட்கார்ந்து, நோட்டுப்புத்தகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டு படித்து முடித்தேன். படிக்கப் படிக்க பிரமிப்பு. இப்படியெல்லாம் கூட புத்தகங்களை எழுதமுடியுமா என்று. படித்து விட்டு சுமார் மூன்று நாட்கள் தொடர்ந்து சொக்கிப்போய் இதனைப் பற்றியேதான் பேச்சு, மூச்சு எல்லாம். எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் – இரண்டு பாவப்பட்ட பேராசிரியர்கள் உட்பட – ஒரேயடியாக அதன் புகழ்தான்! அந்தக் காலத்தில், கல்லூரி விடுதியில் என் மாடியில் இருந்த என் சகமாணவர்கள் என்னைப் பார்த்தாலே பின்னங்கால் பிடறியில் பட ஓட ஆரம்பித்து விடுவார்கள் – பாவம். :-)
இந்த கிறங்கல் கலைந்து சமன நிலைக்கு வர, எனக்குக் கொஞ்ச நாட்களாகியது. ஐந்து முறைக்கும் மேலாக இந்த நூலகக்கடன் புத்தகத்தை துணைநூலகருடன் சண்டைபோட்டு நீட்டிப்பு செய்து (ஒவ்வொரு முறையும் 14 நாட்கள்) – கடைசியில் வேறு வழியேயில்லாமல், திருப்தியேயில்லாமல், வேண்டாவெறுப்பாகத் திருப்பிக் கொடுத்தேன். Read the rest of this entry »
வெறுப்பும் சலிப்பும் தொடர்வதைகளாகத் தொடரும் காலங்களில், வாழ்க்கையின் அர்த்தம் என்ன, எனக்கும் என்னுள் பொதிந்திருக்கும் வெளியுலகத்திற்குமான தொடர்புகள் யாவை, இப்போது நான் என்னதான் செய்யவேண்டும் என, வேலைவெட்டியற்றுக் கேள்விகள் பொசுக்கும் நேரங்களில், ஆன்மாவை உருக்கும் மகாமகோ இசைகூட உதவிக்கு வரமுடியாத தருணங்களில், தோட்டவேலை சார்ந்த வியர்வை சொட்டும் உன்மத்த உடலுழைப்பினாலோ, நெடுநீள ஓட்டத்தினூடேயோ, கடினமான கணித/அறிவியல் கேள்விகளுக்கு உட்கார்ந்த வாக்கில் ஒரு நோட்டுப்புத்தகம் + பென்ஸிலின் உதவியோடு மட்டுமே கூட பதில் பெற விழையவோ முடியாத அச்சந்தர்ப்பங்களில் — மறுபடியும், மறுபடியும் நான் நிபந்தனையற்றுச் சரணடைவது என்பது, ஒரு முப்பத்திச் சொச்ச புத்தகங்களிடம் மட்டுமேதான். கடந்த 35 வருடங்களாக இப்படித்தான்.
“தாங்கள் எவ்வளவு பக்கங்களை எழுதியிருக்கிறோம் என்பதைப் பற்றி மற்றவர்கள் கர்வப் பட்டுக்கொள்ளட்டும்; ஆனால் நான், படித்த புத்தகங்களைப் பற்றிப் பிலுக்கிக் கொள்ளவே விரும்புவேன்.”
— ஹோற்ஹெ லூயிஸ் போற்ஹெஸ்
பயிர் வட்டங்கள் என்று உடும்புத்தைலவாதிகளால் அழைக்கப்படும் ‘crop circles’ளின் உள்ளே பயிர் இருக்காது. இதைப் பயிரற்ற வட்டங்கள் என்றுதான் அழைக்க வேண்டும். ஆனால் வெள்ளைக்கார முட்டாள்கள் இவற்றை இப்படித்தான் அழைக்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களை வாழ்த்தி, வணங்கி மகிழ்ந்து அவர்கள் காலடியில் விழுந்து புரண்டு – இந்தியாவில் ஒரு எழவு ‘பயிர் வட்டமு’ம் இல்லாத போதிலும் பயிர் வட்டம் பற்றி கப்ஸாக்களை, படு ஸீரியஸாக விடுகிறோம். இம்மாதிரி விஷயங்களைப் பதிப்பிப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்!
ஆனால் — அதேபோல மயிர் வட்டங்கள் என்பவையும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்துதெளிந்தோமில்லை! இவை பெரும்பாலும் வயதான ஆண்களின் உச்சந்தலைக்கும் பிடரிக்கும் நடுவில் திடுக்கிடும் வகையில், புரிந்துகொள்ளவே முடியாத வகையில், திகைக்கவைத்து விக்கித்துப் போக உதிக்கும் தலைமயிரில்லாத பகுதிகள் – அதாவது, இதனைப் படிக்கும் நீங்கள் ஆணாக இருந்து – உங்கள் வயது 45க்கு மேலான பட்சத்தில், உங்கள் பின்னந்தலையை யோசிப்பது போல் தடவிப் பார்த்தால் கொஞ்சம் வழுக்கும் பகுதிகள்தாம் இவை; ஆனால், ஒரு ஆணுக்கு ஒன்று என்று மட்டுமே, அம்மா இலவச வழுக்கைத் திட்டத்தின்படி அளிக்கப்படுவது இது. ஆகவே ஒன்று வாங்கினால் இன்னொன்றும் ஃப்ரீ எனக் கிடந்து ஞமலிபோல அலையவேண்டாம். மேலும், உங்கள் மண்டையில் ஒரு ஓளி வட்டத்திற்குத்தான் இடம். இன்னொன்று வந்தால், கொஞ்சம் – ரிஃப்லெக்டர் என்பதற்குப் பதிலாக இரு ஹெட் லைட்டுகள் போலக் கண்றாவியாகக் காட்சியளிக்கும் என்பதை மனதில் கொள்ளவும். உங்கள் பின்னால் அணிதிரண்டு ஆர்பரித்து வருபவர்கள் – கெக்கலி கொட்டிக் கண்கூசச் சிரிப்பார்கள் என்பதை உணரவும். Read the rest of this entry »