வரிக்கு வரி தவறாக, ஆனால் மாளா தன்னம்பிக்கையுடன், ஒரு வரலாற்றுத் துணுக்குக் கட்டுரையை எழுதி மினுக்குவது எப்படி?
April 22, 2015
(அல்லது) இதுதாண்டா டேட்ட்ட்ட்டா ஸைன்டிஸ்ட்ட்ட்ட்ட்ட்!
… எவ்வளவு தெகிர்யம் உங்களுக்கு! எப்படியென்றா கேட்கிறீர்கள்?
இப்படித்தான். (ஆனால் இது ஆங்கிலத்தில் இருக்கிறது! – Imagining a Buddhist India!!)

சகலடேடாவல்லவன் “அட அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ, தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…” வருகிறார், ஒதுங்குங்கடா முண்டங்களா… (படம் இங்கிருந்து)
…புரமா புறமா புறம்போக்கா எனப் புரியாத, தெரியாத கலங்கிய நிலையில் – நள்ளிரவில் (அதிகாலை 2 மணி!) என்னத்தையோ எதற்கோ தேடி, புறநானூறு கண்டடைய நினைத்தால், அங்குபோய் நின்றேன்… மன்னிக்கவும். உடனே புறமுதுகு வாங்கிவிட்டேன். பை ஒன், டேக் ஒன் ஃப்ரீ மகாமகோ டீல்!
இப்போது எனக்கு இரு புறமுதுகுகள். அதுவும் back to back. இருந்தாலும் வலிக்கிறது. என்ன சொல்லவருகிறேன் என்றால்…
கருணாநிதியின் வரலாற்றறிவையே, யுவகிருஷ்ணனாரின் பிரத்யேக ட்ரேட்மார்க்கான – கடுகையும் பிளந்து அதனையும் குறுகத் தரித்த அஞ்ஞானத்தையே பரவாயில்லை என ஆக்கிவிட்டார் இவர்.
…காலம் போகிற போக்கில், வெறுப்படைந்து, என்னுடைய படு வெள்ளைக்காரச் செல்லமான, ‘டுப்பாக்கிகள் – கிருமிகள் – எஃகு’ புகழ் ஜேரட் டையமன்ட் போன்றவர்களுக்கெல்லாம்கூட கோவில்கட்டிக் கும்பாபிஷேகம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப் படப்போகிறேனே என்பதை நினைத்தால்… (பார்க்க: மானுடவியலாளரான ஜேஸன் அன்ட்ரோஸியோவின் – அரைகுறை ஆய்வாளரான ஜேரட் டையமன்ட் புத்தகத்தின் மீதான அழகான, ஆழமான விமர்சனத்தை… )
இந்த ஜேரட் டையமன்ட் கந்தறகோளத்தைச் சிலாகித்து, தமிழ் இளைஞர் ஒருவர் எழுதியுள்ள/பேசியுள்ளதன் கட்டுரை – பாவம்தான். இப்படி ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு புல்லரிப்பு பெற்று – ‘யாம் பெற்ற மசுர்க்கூச்செறிதல் பெருக இவ்வையகம்’ என ஒரு இளைஞர் குழாம் மேலெழும்பி வருவது, எனக்கு அடிவயிற்றுக் கலவரத்தையளிக்கிறதும்கூட. :-(
சரி.
இந்த ‘புர/றம்’ மனிதர் அடிப்படையில் யார், எவர் ஆணாபெண்ணா என்று நான் அறியேன் – ஆனால் அவருடைய கண்டமேனிக்கும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அட்ச்சுவுடும் தன்மையைப் பார்த்தால், அவருடைய பின்னூட்டக் கருத்தை அவதானித்தால், குளுவானியம் எனும் வியாதியால் நிரந்தரமாகவும், மாளா அகங்காரத்துடன் (=என்னைப் போலவேதான்!) பீடிக்கப்பட்டவர் என – ஆகவே ஒரு கருணையற்ற குடுகுடுக்கை ஆண் எனத்தான் படுகிறது. நிச்சயமாக, பெண்கள் இப்படி உளறிக்கொட்டி நான் பார்த்ததே கிடையாது!
மேலும், அவரே சொல்லியிருப்பதுபோல் அவர் இந்த கந்தறகோள புது அறிவியலான துணுக்குவியல் விற்பன்னர் (Data Scientist!) என அறிவதும் எனக்கு மிகச் சங்கடமாகவிருக்கிறது.
ஏனெனில் டேட்டா ஸைன்டிஸ்ட் எனத் தன்னை அழைத்துக்கொண்ட இன்னொரு பக்காஅரைகுறையிடம் சிலகாலம் முன் பேச நேர்ந்து மனம் பேதலித்தது நினைவுக்கு வருகிறது… அவனுக்கு ஸைன்ஸ் (‘அறிவியல்’) என்றாலே என்னவென்று தெரியவில்லை, பாவம்! இருந்தாலும் நான் காதையும் வாயையும் மூடிக்கொண்டு பவ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவனுடன் வந்திருந்த அவன் தகப்பன், எனக்குத் தெரிந்தவன், பாவம்.
ஆம். காக்கையின் மகாமகோ கனத்தினால்தான் பனம்பழம் விழுந்தது அல்லவா? ஆகவே, இதுதாண்டா டேட்டா ஸைன்ஸ்!
“A big computer, a complex algorithm and a long time does not equal science.” — Robert Clifford Gentleman
… ஒரு பச்சை க்ராஃப் காகிதத்தை எடுக்கவும். சிவப்பு டேஞ்சர், ஒத்துவராது.
ஆனால் பச்சை, வோக்கே ஸவுன்ட் ஹார்ன். கண்ணைப் பார் சிரி. புரெ நஸர்வாலே, தேரா முஹ் காலா. நாம் இருவர் நமக்கு இருவர். நாம் இருவர் நமக்கு ஒருவர். எனக்கு நீ, உனக்கு நான், நமக்கு ஏன். மழை நீரைச் சேமியுங்கள். பெண்ணுக்குத் திருமண வயது 21. ப்லாக் எழுதுவதென்பது பாலியல் பலாத்காரத்துக்குச் சமம்.
அந்த பூஜ்யம்தான் வரலாறென்றறிக.
ஆச்சரியம் தரும் வகையில் இதே வகை சித்திரம் தான் விரியும் – மற்ற சில டேட்டா ஸைன்ஸ் விவரப் பின்புலங்களிலும்:
- எக்ஸ்-X திசையில் மொட்டைத் தலைகள் அல்லது அமாவாசைகள்
- வை-Y திசையில், முறையே முழங்கால்கள் அல்லது அப்துல்காதர்கள்
பூஜ்யர் புறமானார் அவர்கள் மேலும் பலப்பல பலவிதமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ‘… ங்கொம்மாள, துறை சார்ந்த ஒரெழவு அறிவும் தேவையில்லடா, அல்லாமே டேட்டா ஸைன்ஸ் தாண்டா, படம் வரெஞ்சி பாகங்களை குறிப்போண்டா, சோறு கண்டயிடமே சொர்க்கலோவண்டா‘ ரீதியில் – வரலாற்றையும் டேடாஸைன்ஸ் ஆக்கிவிட்டார்! அவருடைய மாளா தன்னம்பிக்கையை மெச்சத் தோன்றினாலும் அவற்றைப் படிக்கவே பயமாக இருக்கிறது.
யாராவது தயவுசெய்து துணைக்கு வருகிறீர்களா? ப்ளீஸ்??
டேடா ஸய்ன்டிஸ்ட் என்ற வகையில் ஒருவர் தன்னைக் கனகம்பீரமாக அழைத்துக் கொள்வதே சங்கடமாகவும் நகைக்கத் தக்கதாகவும் இருக்கிறது. ஆனாலும், நான் இக்காலங்களில் நிறைய ப்லாக் பதிவுகளை எழுதுவதனால், இனிமேலிருந்து என்னைச் சந்தோஷமாக ப்லாக் ஸைன்டிஸ்ட் என அழைத்துக்கொள்ளலாம் எனும் சாத்தியக் கூறு ஆசுவாசமளிக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும்.
4 வருடங்கள் போல – அணுக்கருவுலைகளில், சூரியனுக்கு உள்ளே, வெள்ளைக் குள்ளன்களுக்குள்ளே நடக்கும் வித்தைகளை, விந்தைகளை இன்னும் பலவற்றைக் கணித்து (பங்கு மார்க்கெட், வங்கி செயல்பாடுகள், எரிமலை வெடிப்பு, ஸெல்களுக்குள்ளே நடப்பது எனப் பலதுறைகளிலெல்லாமும்) அவற்றுக்கான புள்ளியியல் ரீதியான பல்வடிவ சித்திரங்களை வரையும் – பிரத்யேக ஹார்ட்வேர் வடிவமைக்கப்பட்டு அதற்கு ஒரு கணிநி மென்பொருளை வடிவமைக்கும் குழுவில் பணிசெய்துகொண்டிருந்தேன்.
இதன் மகத்தான ஹார்ட்வேர் அமெரிக்க ராணுவத்தினுடையது. மென்பொருள் பெரும்பாலும் எங்களால் வடித்தெடுக்கப் பட்டது. இதனைக் குத்துமதிப்பாக அதிஉயர் செயல்பாடுகளின் அறிவியல்ரீதியான கணிப்பு (HPTC) என கொடக்மொடக்கென்று மொழிபெயர்த்தெடுத்துச் சொல்லலாம்.
டெரா பைட் அளவு டேடாவை சாவகாசமாக, 9-10 நாட்கள் எடுத்துக்கொண்டு நொறுக்கி, அதில் உள்ள செய்திகளைப் பெறுவது, பின்னர் அவற்றின்மீதான புரிந்துகொள்ளக்கூடிய சித்திரங்களை விரிப்பது என்பது மகோன்னதம்தான்!
நான் விக்கிபீடியா படித்துவிட்டு, பிபிஸி டாகுமென்டரி பார்த்துவிட்டு – திடீரெக்ஸ் ஞானம் பெற்று அனைத்து விஷயங்களையும் கரைத்துக்குடித்து விட்டதாக உணர்பவன் அல்லன். நான் பிபிஸி ஆவணத்தைப் பார்க்கவில்லை. விக்கிபீடியா கட்டுரையை இன்று படித்தேன்.
ஆனால் – பிபிஸி தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள, இவரால் சுட்டப் பட்டுள்ள, புத்தகங்களையாவது இவர் படித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. படித்திருந்தால் இப்படி ஒரு அவசர திடீரெக்ஸ் ஞானத்தை அள்ளித் தெளித்திருக்க மாட்டார்தான்! (நான் ஹில்ட வீற்ட்ட் அம்மணியின், க்றிஸ்டொஃபர் பெக்வித், மைக்கெல் ட்ரொம்ப், ஹ்யூக் கென்னெடியின் சில புத்தகங்களைப் படித்திருக்கிறேன். வீற்ட்ட் அம்மணியின் சைனா பற்றிய புத்தகங்களை (ஸிவில் ஸர்வீஸ்?) படித்திருக்கிறேன்)
ஓரளவு தமிழக, இந்திய, உலக வரலாறையும் அறிந்து கொள்ள முயலும் மாணவனாகவே – என் வாழ்க்கையில் இருந்திருக்கிறேன்; கடந்த சுமார் முப்பத்தைந்து வருடங்களாகவே இப்படித்தான் என் உபரி நேரத்தைச் செலவழித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை புவியியல், அறிவியல், கணிதம் போன்றவையும் வரலாற்று ரீதியான இயல்கள், துறைகள் தாம். பல்வகை, பன்முக வரலாறுகளின் மாணவனாக, ஒருவன் இவற்றை அவதானித்தால் செல்லக் கூடிய தூரங்கள் அதிகமாக இருக்கலாம் என்பது என் எண்ணம். மகாமகோ அறிவியலாளரும், மதிக்கத்தக்க சான்றோருமான ஜேபிஎஸ் ஹல்டேன் அவர்களுடைய கட்டுரைக்களஞ்சியம் ஒன்றின் தலைப்பு சொல்வது போல் – எதற்குமே வரலாறு உண்டுதான். (everything has a history)
… அதனால் தான் சொல்கிறேன் – இந்த புறம் கட்டுரை, ஒரு பிரமிக்கவைக்கும் அபத்தக் களஞ்சியம்.
- சீனர்களும் அரபியர்களும் ‘உலக மேலாண்மைக்காக’ கிபி 751ல் போரிட்டனர் எனும் முதல் கருதுகோளே தவறு! (எங்கிருந்து கடன்வாங்கப்பட்டது இந்த அதி அற்புத ஞானம்? துர்கெஸ்தானில் யாருடைய அதிகாரம் செல்லும் என்பதற்கும், ‘உலக ஆக்கிரமிப்பு’ எனும் உளறலுக்கும் என்ன தொடர்பு? கேர்ரிங்டன் குட்ரிச் படித்திருக்கிறாரா இவர்?)
- இந்த ‘ மூடப்பட்ட தரைவழி மார்க்கம்’ எனும் கோட்பாடே தவறு. (அது இந்த டலஸ் யுத்ததுக்குப் பின்னும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது)
- அதனால் தான் கடல்வழி மார்க்கங்கள் ஏற்பட்டன என்பது அபத்தத்துக்கு மேல் அபத்தம். (அதற்கு முன் ஒரு எழவு கடல்வழி வியாபாரமும் நடக்கவில்லையா என்ன? தரைமார்க்கத்தில் என்ன பொருட்கள். தளவாடங்கள் எடுத்துச் செல்லப் பட்டன? கடல்வழியில் அவை யாவை??)
- சோழ ‘பொற்காலத்துக்கும்’ மத்தியஆசிய தரைவழி மார்க்கம் ‘மூடப்படலுக்கும்’ என்ன, எப்படித் தொடர்பு? என்ன காரணிகள்? (இந்த அரைகுறை ‘பட்டர்ஃப்ளை எஃபெக்ட்’ மாதிரி ஒரு கயாஸ் கந்தறகோளமா இது? ‘டேட்டா ஸைன்டிஸ்ட்’ ஒருவர் இந்தியாவில் குசு விட்டால், அதே சமயம் அமெரிக்காவில் ஒபாமா மூக்கை மூடிக்கொண்டால் – இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு என்று நிறுவிவிட முடியுமா என்ன?)
- இதிலிருந்து பௌத்தம் இந்தியாவிலிருந்து ‘மறைந்ததற்கு’ ஒரு காரணத்தைச் சுட்டுகிறார்! (டெட்லெஃப் கேன்டொவ்ஸ்கி, டிஸி அஹிர் புத்தகங்களை – அவர்களுடைய இது தொடர்பான ஆராய்ச்சிகளையாவது படித்திருக்கிறாரா? இதுபற்றி அம்பேட்கர் எழுதியதையாவது படித்திருக்கிறாரா?)
- சீனாவில் பௌத்தம் வளர்ந்ததும், சீன சுற்றுலாப் பயணிகள் குறைந்ததும் இதற்குக் காரணமாம்! (முதலில் வந்தவர்களெல்லாம் ஸில்க் பாதைவழியாகவா, காரகோரம்-ஆஃப்கனிஸ்தான் வழியாகவா வந்தார்கள்?)
- ஹிந்து மதம் (என்னைப் பொறுத்தவரை இதுவே தவறு – ஹிந்துமதங்கள் எனச் சொன்னாலாவது ஓரளவு ஒப்புக்கொள்ளலாம்!) டலஸ் யுத்தத்துக்கு அடுத்த 300 வருடங்களில் மறுமலர்ச்சியடைந்ததால் – இந்தியாவில் புத்தமதச் சிந்தனைகள் அழிந்துவிட்டனவாம்! (அப்போது, பௌத்தச் சிந்தனைகளைப் போற்றியெடுத்த நாலந்தா அழிந்தது 1193-1300ல் இல்லையா? முன்னமேயே அழிந்ததா? இந்த மறுமலர்ச்சியென்பது பௌத்தத்தைத் துரத்தியதா, மெல்லமெல்ல ஆட்கொண்டதா? அல்லது ஸுக்ரிதி மூலமாக பௌத்தமும் தொடர்ந்ததா? இங்கும் ஹிந்துமதங்களின் ஒரு அங்கமாக அல்லது அதற்கு இணையாக ஒரு நவீன பௌத்தப் பாரம்பரியம் தொடராவிட்டால், அம்பேட்கர் போன்றவர்கள் எப்படி பௌத்தத்தைத் தெரிவு செய்திருப்பார்கள்?)
- பின்னர் மோதி பற்றி ஒரு குத்தல் அரைகுறைத்தனம். (இதைப் பரவாயில்லை, அரசியல் கருத்துதிர்க்க ஒரு மகாமகோ டேடா ஸைன்டிஸ்டாகவே இருந்தாலும்கூட – உரிமை உண்டுதானே என விட்டுவிடலாம்… அரைகுறைகளுக்கும் கருத்துரிமை வேண்டும்தானே!)
- பின்னர் ஒரு மாரடைக்க வைக்கும் ஹேஷ்யம் – அராபியர்கள், இந்த டலஸ் போரில் தோல்வியடைந்திருந்தால், இந்தியாவில் நாமெல்லாம் மன்டாரின் பேசிக்கொண்டிருப்போமாம்! என்ன உளறல் இது!
- தகரடப்பா புறம் கூறிப் பிழைக்கும் பிழைப்பும் ஒரு பிழைப்பா, சொல்லுங்கள்?
கண்டமேனிக்கும் பீலா வுடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? இப்படியெல்லாம் அட்ச்சுவுடும்போது கூச்சமாகவே இருக்காதா?
இம்மாதிரி அரைவேக்காட்டு இளைஞர்களைப் படித்தால் கோபம்கோபமாக வருகிறது. என்ன செய்ய?
… இவற்றுக்கு அப்பால்… தடாலடி-திடீரெக்ஸ்-ஞானி.காம் தளத்தின் அதிபதியான புறமானார் அவர்கள், ஒரு பின்னூட்டத்தில் சொல்கிறார்:
“Ending the Tang dynasty is a different matter. But land routes were closed because of the Battle of Talas. No one really disputes that.”
ஆ! இவர் சைனாவையும் படிக்கவில்லை. பட்டுத் தடம் (ஸில்க் ரூட்++ உள்ளடக்கிய தரைத்தடங்கள்) பற்றிய வரலாற்றையும் அறியவில்லை. சும்மனாச்சிக்கும் இப்படி அட்ச்சுவுடுகிறார். முரட்டுத்தனமான, தகுதிக்கு மீறிய தன்னம்பிக்கை நல்லதுதான். ஆனால் இப்படியெல்லாம் அரைகுறைக்குடமாக ‘பம்பரம் தொகுறுதல்’ தேவையா?
இவர் வரலாற்றாளர் அல்லர். யோசித்தால், இவர் விஷயங்களைக் கற்றுக் கொள்ள முயற்சிக்கும் ஒரு மாணவன் கூட இல்லை. பின்னெதற்கு இப்படியெல்லாம் கலந்தடித்துக் கதம்பசோற்றைப் பரிமாறுகிறார்?
வெறுமனே அரசியல், படம், புள்ளியியல், கோட்டியல், டேட்டா ஸைன்ஸ் என்றெல்லாம் தொடர்ந்து பிலுக்கிக் கொண்டிருந்தாலே அது போதுமானதே? ஏன் இப்படி வலிந்துகட்டிக்கொண்டு தன் அறியாமையைப் பிரகடனப் படுத்திக் கொள்ள வேண்டும்?
ஆக – பத்து டெட் பேச்சுகளைப் புல்லரிக்கப் பார்த்து விட்டு, கொஞ்சம் ஆர் கற்றுக்கொண்டு, மெஷின் லேர்னிங் என சாதாகற்றலையும் விட்டெறிந்து, டேடா மைனிங் என்று மேலோட்டமான அகழ்வாராய்ச்சி செய்து – ஒரு வாரத்துக்குள்ளேயே நானும் டேட்டா ஸைன்டிஸ்ட் என வளைய வரலாமோ?
வந்தேண்டா டேட்டாஸைன்ஸ்காரன்
அடடா டேடாப்பத்தி பாடப் போறேன்
புது டேட்டா சுட்டு ஆடப்போறேன்
(வந்தேண்டா…)
April 22, 2015 at 12:45
Mr Ramasami, puram is the famouse nilakandan rajaraman of clemson, sc. highly immature fellow. a truly terrible douchebag. super rich. don’t waste your time on him. he is a male, obv.
I was his classmate at sastra. my bad. details at http://madrasink.com/2006/10/28/will-this-guy-ever-get-laid/
April 22, 2015 at 16:06
Mr. Ramasami, I forgot to add this. checkout his tweets at https://twitter.com/puram_politics. he gives free advice to everyone who does not need it. he is a fine example of a troll.
April 22, 2015 at 20:20
அய்யா அனாமதேயம், சுட்டிகளைப் படித்து இன்புற்றேன். இன்னொரு நண்பரிடமும் கேட்டு, இந்த புரம் யார் என அறிந்தேன். பராக்கிரமம் மிக்கவர்தாம் போலும்.
ஆனால், நீங்கள் சுட்டியிருக்கும் விஷயங்களில் உள்ள விடலைத்தனமான அக்கப்போர்களில் எனக்கு அவ்வளவு சுவாரசியம் இல்லை. அவர் தலை சொட்டையா இல்லையா என்பது என் பிரச்சினையல்ல.
அவர் தலைக்குள் ஏதாவது இருக்கலாமோ எனத்தான் நான் சந்தேகப்படுகிறேன் – அவ்வளவுதான்.
நன்றி, அடுத்தமுறையாவது பின்னூட்டத்தைத் தமிழில் எழுதலாமே!
April 23, 2015 at 17:46
i thought i was helping you identify puram puke nilu andlook what I get in return :-(
April 24, 2015 at 07:58
Sir, thank you very much for all the information. But, I intend wasting no more time on this asinine ineffectual douchebag – Nilakantan Rajaraman AKA ‘puram_politics.’
The thing is, though I like the purampokku puram puke pun in your ‘name’ – I find your references to this lousy chap, a little too adolescentish for my comfort, sorry; may be all these jibes have a long history. So, each unto his own.
Please keepup your feuds with that useless chap.
Goodluck (as one of my friends advised about this gent) with throwing kallu-s in saakkadai. And, leave this blog alone.
Best:
__r.
August 26, 2015 at 07:55
Feel free to write whatever you fancy. But that was not a TV program. It was a podcast. You may want to correct that when you aren’t frothing in the mouth.
And if you want to not be all frothy, come over and I’ll buy you a beer.
August 26, 2015 at 08:36
?