ஜிட்டு ‘கே’ கிருஷ்ணமூர்த்தி – சில குறிப்புகள்
February 17, 2015
29 வருடங்கள் முன் – இந்த ஃபெப்ருவரி 17 அன்று 1986ல், ‘கே’ போய்ச்சேர்ந்தார்.

படம் இங்கிருந்து.
இதில், எனக்கு நினைவிலிருக்கும் ஒரு சுவாரசியமான விஷயம் – ‘கே’ சென்னையில் ஆற்றிய அவருடைய கடைசிச் சொற்பொழிவில் (4, ஜனவரி, 1986), தருமுசிவராமு அவர்களால் தேவைமெனக்கெட்டு ஏற்படுத்தப்பட்ட, நம்பவேமுடியாத ஒரு சிறு சலசலப்பும் அடங்கும். நானும் என்னுடைய சில நண்பர்களுடன் அந்தச் சொற்பொழிவுக்குச் சென்றிருந்தேன். விக்கித்துப் போனேன். (இது ஒரு தனிக்கதை)
-0-0-0-0-0-0-0-0-
இதற்குமுன் ‘கே’ அவர்கள் 1983 வாக்கில் (என நினைக்கிறேன்!) நான் படித்துத்கொண்டிருந்த கல்லூரிக்கு வந்திருந்தார்; பிரதி புதன் கிழமையும் விடாமல் நடந்து கொண்டிருந்த (இப்போதும் நடந்து கொண்டிருக்கும்!) எக்ஸ்ட்ரா ம்யூரல் லெக்சர் வரிசைக்காக – அதாவது படிப்பு, பரீட்சைகளுக்கு அப்பாற்பட்டு பலவிதமான, சுவாரசியமான, முக்கியமான, அடிப்படைவிழுமியங்களைப் பற்றிய என, பலப்பல விஷயங்களைப் பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கும் சொற்பொழிவு வரிசை. அக்காலத்தில், இவற்றை மாணவர் சமூகமே ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தது.
சொற்பொழியும் மனிதர்களில் பலவிதமான வெளியாட்கள்/வெளிநாட்டார்கள் – பெரும்பாலோர் தத்தம் தொழில்களில்/துறைகளில் விற்பன்னர்கள், அறிஞர்கள், சான்றோர்கள். மிகப்பல, அற்புதமான திறப்புகளை, நான் இவற்றிலிருந்து பெற்றிருக்கிறேன் என்பதையும் நான் இங்கு பதிவு செய்யவேண்டும்.
பார்வையாளக் கேள்விஞானிக் குளுவான்களில் என்போன்ற ஏட்டறிவு அபரிமிதமாக இருந்து – உலகஞானம், அனுபவஅறிவு என்பதெல்லாம் துளிக்கூட இல்லாத அகங்காரத்தினால் வீங்கிய, திமிரில் மிதந்துகொண்டிருந்த இளைஞர்கள். ஆக. இக்கூட்டங்களில் சுவாரசியமான விவாதங்களுக்குக் கேட்பானேன்!
ஆனால் – ‘கே’ அவர்களுடையது ஒரு சொற்பொழிவாக இல்லை. முதலில் இருந்தே அதனை அவர் ஒரு உரையாடலாகத்தான் நடத்திக்கொண்டு போனார்.
நானும் ‘கே’ அவர்களுடன் விடாமல் உரையாடினேன்; ஆனால், அடக்கத்துடன், பண்புடன் தான் – நான் அதற்காக மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது. உங்களால் இதனைப் புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன்! ;-) சுற்றிச் சுற்றி அவரும் நானும் கேள்விகளைக் கேட்க, என்னுடன் பல சகோதரக் குளுவான்களும் சேர்ந்துகொள்ள – ‘கே’ அவர்கள் பொறுமையாகக் கேள்விகளை (கண்ணீரில்லாமல்) வெங்காயம் போல அடுக்கு அடுக்காக உரிக்க – கூட்டம் ஒரளவுக்கு இனிதாகவே முடிந்தது.
இப்போது?
(அப்போதைய என்னைப் பற்றி, இன்று நான் நினைத்தால், எனக்குக் கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. அதேபோல, இப்போதைய என்னை, பலபத்து வருடங்களுக்குப் பின் வெட்கத்தோடு நினைவுகூறுவேனோ? அல்லது இதுதான் பரிணாம வளர்ச்சியென்பதா?)
பின்னர், அவருடைய பெரும்பாலான புத்தகங்களைப் படித்தேன். அண்மையில் கூட, சிலரிடம் இதுபற்றி விவாதித்தேன். தீப்பொறி பறக்க என்றெல்லாம் இல்லை – அமைதியாகத்தான். நல்லவேளை.
இதன் ஒரு இந்திய மறுபதிப்பு, வெறும் ரூ 225/-க்கு கிடைக்கிறது.
என்னுடைய செல்ல வினவு கும்பலில் இருந்து திராவிட இயக்கம் வரை பலரையும், இன்னும் பலவற்றையும், இதனூடே கொஞ்சம் அமோகமாகவே புரிந்துகொள்ளலாம்.
‘கே’ அவர்கள், ஒரு ஒரிஜினல் தத்துவஞானி என்று அழைக்கப்படுவதில் எனக்குச் சில சங்கடங்கள் உண்டு. ஆனாலும் – எனக்கு அவரிடத்தில் பிடித்தது – எதையும் தொடர்ந்து, சுற்றிச் சுற்றிக் கேள்விகேட்கும் தன்மை, விடை கிடைக்கும் வரை ஓயாமல் பலதிசைகளிலிருந்தும் கேள்விகளை, அவற்றின் பின்புலங்களை அணுகும் மனப்பான்மை. ‘ஜிலேபி சுற்றுவது எப்படி?’
மேலும் அவருடைய நேரிடைத்தன்மை அற்ற நூட்ல்ஸ் எழுத்தும் எனக்குப் பிடிக்கும். ‘என்னை நீங்கள் பின்பற்றவேண்டாம்’ என நேரிடையாகச் சொன்னதும் பிடிக்கும்.
ஆனால், என்னால் புரிந்துகொள்ளவே முடியாதவை – பாபுஜி குறித்த அவருடைய கருத்துகளும், … இன்னமும் சிலவும். ஆனாலும் – இவை, ‘கே’ அவர்களின் அடிப்படைச் சிந்தனைகளின் நீட்டம்தான். அவருடைய எண்ணப்போக்குகளுடன் பெரும்பாலும் ஒத்திசைவுடன் இருந்தவைதான் இவை. அவை துருத்திக்கொண்டு நிற்கவில்லைதான். அவை எனக்கு ஒத்துவந்தனவா, வருமா என்பது வேறு விஷயம்; பின் அவருடைய சொந்த செயல்பாடுகள் வேறு! துருத்திக்கொண்டு நிற்பவை அவை!
‘கல்வி’ என்பதன் ‘குறிக்கோள்’ என்னவாக இருக்கக் கூடும்?
“One real goal of education is to leave a person asking questions.”
ஹ்ம்ம்…
தொடர்புள்ள பதிவுகள்:
February 17, 2015 at 09:42
EML is a platform for the IIT Madras campus community to interact with speakers from diverse fields.
The Extra Mural Lectures (EML) series was launched in the early 1980s by a group of enterprising students. EML sessions are in the form of lectures, debates and discussions around topics concerning the society and science. The series provides the students an opportunity to interact with highly accomplished and reputed speakers from diverse background, and hence promotes a culture of intelligent and thought-provoking discourse into matters relating to contemporary society.
Over the years, the series has exposed the students of the Institute to lectures by extraordinary minds like A. P. J. Abdul Kalam, Y. V. Reddy, T. N. Seshan, V. S. Sampath, Montek Singh Ahluwalia, N. R. Narayanamurthy, Jeffrey Archer, and M. S. Swaminathan among many others
Visit us at Facebook on : http://www.facebook.com/eml.iitm
https://students.iitm.ac.in/eml/?page_id=31
July 4, 2020 at 18:37
[…] […]
July 4, 2020 at 19:13
” இதன், ஒரு இலவச வடிவம் குடென்பர்க் தளத்தில் கிடைக்கிறது)… ”
correct link for THE THEORY OF THE LEISURE CLASS
pls update..(Html Version)
http://www.gutenberg.org/files/833/833-h/833-h.htm
July 4, 2020 at 19:21
thanks, I will
July 4, 2020 at 19:31
One think for sure, JK’s teaching transforms “young brains” to the point of appreciating / observing you (thoughts) and your surroundings from there all learnings can happen, including rejecting him!! :)
July 4, 2020 at 19:37
Sir, thanks. Because, you could be talking about our Jayakanthan. 🐸🤔
July 4, 2020 at 20:49
இவர் செகரட்டரி ராஜ்கோபால் மனைவியுடன் ஜல்சா பண்ணார்
July 4, 2020 at 21:52
Yes. If you haven’t already, please read Radha Sloss’ book.
Per se, I won’t consider this to be bad thing – am not a moralist. But the immature and slimey Krishnamurti, ALSO tried to drive a wedge between that married couple. This was adharmic; unethical.
And, when Rajagopal was dishonestly accused of certain things and support was drummed up to isolate him – JK never went to his rescue, though Rajagopal dedicated his LIFE to JK. JK stabbed him in the back.
Slimey.
July 4, 2020 at 22:45
:(
October 12, 2021 at 23:41
https://youtu.be/iqvDsVlAHx8 நீங்கள் போயிருந்த ஜே கிருஷ்ணமூர்த்தியின் கடைசி சொற்பொழிவு இது தானா? இதில் 27. 55 நொடிகளில் ஒருவரை ஜேகே கடிந்து கொள்கிறார் இது தான் நீங்கள் குறிப்பிடும் சலசலப்பா? நன்றி.
October 13, 2021 at 10:12
ஆம். 🙏🏿
தருமுசிவராமு! (அந்த ‘வெறித்துப் பார்த்தவர்’ அவர்தாம் – கொஞ்சம் ஹிப்னாடிஸ/மனோவசியப் பயிற்சியும் அவருக்கு இருந்தது என நினைவு; உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் -. அவர் தரமான, நவீன கவிஞர்+சிந்தனையாளர்களில் உச்சிகளில் இருந்தவர் – இக்காலங்களில் கவிதைகழுதை எனக் கடித்துக் மினுக்கிக்கொண்டு அலையும் போகஸ் மப்பு பெருந்தேவி கும்பல்களின் கண்களுக்கு எட்டாத தூரத்தில்/உயரத்தில் சஞ்சரித்தவர்!
ஆனால் – அவரும் பலவிஷயங்களில் கொஞ்சம் வருத்தமும் வெறுப்பும் தரும் விதத்தில் நடந்துகொண்டார் என்பதும் உண்மைதான். இருந்தாலும் அவர் ஒரு பெரும் கவிஞர்.Some our our finest folks are so bleddy complex personalities, oh what to do….
சரி.
இதற்குப் பின்னரும் நிலைமை கொஞ்சம் மோசமாகவே கசமுசாவாகியது – ஜிட்டு கொஞ்சம் நிதானம் தவறினார்கூட. (ஆனால் அதெல்லாம் பழங்கதை)
October 13, 2021 at 13:12
நன்றி வயது முதிர்வும் நோயும் அவ்வாறு அவரை நிதானம் தவற வைத்திருக்கலாம்