இன்னொரு புத்தகப் பொக்கிஷம், தமிழ்வசை: இலவசக் குறிப்புகள்

June 21, 2014

(அல்லது) டக்ளஸ் ஹோஃப்ஸ்டேட்டர்: கெடல், எஷர், பாஹ்: ஒரு முடிவற்ற தங்கப் பின்னல்

1977லேயே வெளிவந்திருந்தாலும், இதனை நான் முதலில் படித்தது 1982ல்தான் என நினைவு. என்னுடைய கல்லூரி நூலகத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது அகஸ்மாத்தாகக் கிடைத்த பொக்கிஷம்; உலகமே அற்புதமாகிவிட்டது எனக்கு! 5 நாட்கள் தொடர்ந்து உட்கார்ந்து, நோட்டுப்புத்தகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டு படித்து முடித்தேன். படிக்கப் படிக்க பிரமிப்பு. இப்படியெல்லாம் கூட புத்தகங்களை எழுதமுடியுமா என்று. படித்து விட்டு சுமார் மூன்று நாட்கள் தொடர்ந்து சொக்கிப்போய் இதனைப் பற்றியேதான் பேச்சு, மூச்சு எல்லாம். எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் – இரண்டு பாவப்பட்ட  பேராசிரியர்கள் உட்பட – ஒரேயடியாக அதன் புகழ்தான்! அந்தக் காலத்தில், கல்லூரி விடுதியில் என் மாடியில் இருந்த என் சகமாணவர்கள் என்னைப் பார்த்தாலே பின்னங்கால் பிடறியில் பட ஓட ஆரம்பித்து விடுவார்கள் – பாவம். :-)

இந்த கிறங்கல் கலைந்து சமன நிலைக்கு வர, எனக்குக் கொஞ்ச நாட்களாகியது. ஐந்து முறைக்கும் மேலாக இந்த நூலகக்கடன் புத்தகத்தை துணைநூலகருடன் சண்டைபோட்டு நீட்டிப்பு செய்து (ஒவ்வொரு முறையும் 14 நாட்கள்) – கடைசியில் வேறு வழியேயில்லாமல், திருப்தியேயில்லாமல், வேண்டாவெறுப்பாகத் திருப்பிக் கொடுத்தேன்.

தலைமை நூலகர் நாஸிர் அஹெம்மத் அவர்களுக்கு ஒரே ஆச்சரியம் -பரீட்சை சமயத்தில் பரீட்சைகளுக்குத் தேவையான புத்தகங்களைப் படிக்காமல், இந்த குண்டு புத்தகத்தைப் போய் மாய்ந்து மாய்ந்து படிக்கிறானே இவன் என்று. அப்படி என்னதான் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்று நமட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டே கேட்டார். கந்தறகோளத் தமிழ் வழிக்கல்வியில்  ‘ நேர்நேர் தேமா, நிறைநேர் புளிமா’ எனப் படித்திருக்கும் எனக்கு, அப்போதும்  ஆங்கிலம் சரியாகப் பேச வராது – ஆக, ஏதேதோ சொல்லி ஏகத்துக்கும் வெட்கப் பட்டுக்கொண்டு வியர்க்க விறுவிறுக்க டெலெக்ஸ் நடை ஆங்கிலத்தில் பேசி(!) – அவர் என்னைச் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே படபடப்புடன் வெளியே ஓடிப்போய்விட்டேன்! (ஆனால், அப்போது நடந்துகொண்டிருந்த பரீட்சைகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன்! ஏனெனில், அவற்றில் ஆங்கிலத்தில் எழுதத்தான் வேண்டுமேதவிர பேசவேண்டிய அவசியமேயில்லையே, நல்லவேளை!)

அதன் பிறகு சுமார் 15 வருடங்கள் போல ஒவ்வொரு வருடமும் ஒரு முறை இதனைப் பாராயணம் செய்தேன். ஒவ்வொரு முறையும் விதம் விதமாக பிரமிப்புகள்!

கர்ட் கெடல் (Kurt Gödel) அவர்களின் தர்க்க ஸாஸ்திரம்  + மாரிட்ஸ் கொர்னேலிஸ் எஷர் (Maurits Cornelis Escher) அவர்களின் கோட்டோவியங்கள், படங்கள், நுணுக்கமான மரவேலைச்சிற்பங்கள் / இழைப்புகள் / செதுக்கல்கள் + யோஹான் ஸெபாஸ்டியென் பாஹ் (Johann Sebastian Bach) அவர்களின் மகத்தான இசை – இவை மூன்றையும் இணைத்து, இன்னமும் பல திடமான விஷயங்களைச் சேர்த்துப் பல அழகான கட்டுரைகள்; லூயிஸ் கேரல் (Lewis Carroll) அவர்களின் அழகான  ‘அலிஸின் அற்புதவுலக’த்தையும்,  ‘முகம் பார்க்கும் கண்ணாடியினூடே’வையும் உபயோகப் படுத்தி, பலவிதமான அழகான உத்திகளினூடே – மனித மனம், மூளை வேலை செய்யும் விதம், தத்துவம், கணிதம், இசை, தர்க்கம், ஓவியம் எனப் பல தளங்களில் விரிந்து – மறு உட்சுழற்சியுடனும் (ரிகர்ஷன்), நகைச்சுவையுணர்ச்சியுடனும், சிலேடைகளுடனும், புதிர்களுடனும் பல பரிமாணங்களில் ஊடாடி கிட்டத்தட்ட 800 பக்கங்களில் – எனக்குப் பல அற்புதமான திறப்புகளை அளித்த புத்தகம் இது.

ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிய பரிமாணங்களை வெளிக்காண்பிக்கும் இந்தப் புத்தகத்தைப் படிப்பது என்பது – வெங்காயத்தின் அடுக்குகளைக் (ஆனந்தக் கண்ணீர் வழிய) பிரிப்பது போன்றது. சொல்லப் போனால் – அதன் கருவென்பது, மேற்குறிப்பிட்ட கூறுகளுக்கு அப்பாற்பட்டு, மனித சிந்தனை உருவாவதைப் பற்றி, அது ந்யூரோன்களால் கட்டமைக்கப்படுவதைப் பற்றி, நாம் எப்படி விஷயங்களை அறிந்து கொள்கிறோம் என்பதைப் பற்றித்தான். அதாவது தன்னை அறிந்து கொள்ளல் என்பதைத்தான், தாம் எனும் நிகழ்ந்துகொண்டிருக்கும் அற்புதத்தை அறிந்துகொண்டு ஆச்சரியமுறத்தான்! அஹம் ப்ர்ஹ்மாஸ்மிதான்.

… பின்னர், என் முதல் ‘பெரிய’ சம்பளத்தில் வாங்கிய முதல் புத்தகம் என்பது இந்த ஜிஇபி.  பின்வந்த காலங்களில், மேலதிகமாகச் எட்டு  பிரதிகளை வாங்கி என் சிஷ்யகோடிகளுக்குத் தானமும் கொடுத்திருக்கிறேன். (இவர்கள் அனைவரும் என்னுடன் இன்னமும் தொடர்பில் இருக்கிறார்கள். ஆச்சரியம், ஆச்சரியம்!)

-0-0-0-0-0-0-0-

மனப்பிறழ்வால் ஏற்பட்ட ஆர்வக்கோளாறின் காரணமாக, சில வருடங்களுக்குமுன் இதன் சில பக்கங்களை மொழிபெயர்க்க முயன்றேன் -ஆனால் சரியாகவே வரவில்லை, திருப்தியே இல்லை; எனக்குத் தெரிந்த வரையில், என்னுடைய மிகச்சிறிய குருவி மூளைக்கு எட்டிய வரையில் – இம்மாதிரிப் புத்தகங்களை பிறமொழிகளிலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கக்கூடிய ஆர்வமும், ஆழ்ந்த படிப்பும், தளரா முனைப்பும், திறனும் உடைய மனிதர்கள் நம் தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. இதனை வேறு வழியேயில்லாமல் ஆங்கிலத்தில்தான் படிக்கவேண்டும்போல.

… தமிழில் இம்மாதிரிப் புத்தகங்கள் எழுதப் படுவதற்கோ, படிப்பதற்கோ – அவசியமான சிந்தனை மரபோ, படிக்கும் முனைப்போ, விலைகொடுத்து வாங்கும் வாசகர்களின் ஆதரவோ துளிக்கூட இல்லை என்பது சோகம்தான். மேலும் யோசிக்கிறேன் – இம்மாதிரிப் புத்தகங்கள் தமிழில் அடுத்த 100 ஆண்டுகளில்கூட எழுதப்படுமா என்பது எனக்குச் சந்தேகமே!

… இந்த அழகில், நம் பொக்கிஷங்களுள் ஒன்றான தமிழை (=திரா விடத் தமிழ் அல்ல!), பரந்து பட்ட மக்களிடம் எடுத்துச்செல்ல, செழுமையும் ஆழமும் கொடுக்க – ஜெயமோகன், வாசெ குழந்தைசாமி போன்றவர்கள் யோசனைகளை, திறப்புகளை முன்வைத்தால் (முடிவுகளைக் கூட அல்ல!)  – முணுக்கென்று முட்டாள் தமிழர்கள் (=கீபோர்ட் போராளிகள் + அறிவுஜீவிப் பிதாமகர்கள்+ ஈனமானக் காவலர்கள்) கோபப்பட்டு உணர்ச்சிவசப் பட்டு, வசைபாட ஆரம்பித்துவிடுகிறார்கள்! எனக்கும்தான் கோபம்கோபமாக வருகிறது. திராவிடத் தமிழர்களைப் போல பழைய ஊசிப்போன குசுக்களை விட்டுக்கொண்டிருக்காமல், பழம்பெருமை மட்டும்பேசி (=பேசிமட்டுமே!)  புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்காமல் இவர்களுக்கு ஏன் இந்த வேலை. எனக்கு அவமானமாகவே இருக்கிறது.

தமிழ்வசை என்பதும் தமிழர்களுக்கு உணர்ச்சிப் பிரவாகத்தை அளிக்கக் கூடியது என்பதை நினைக்கும்போதே எனக்கு மயிர்க் கூச்செறிகிறது.

டமிளுக்கு எதிறாக அனி திரலும் துரோகிகலின் கபாளங்கலை உடைக்கவேண்டும்போள் ஆவேஷம் வருகிறது.

ஆற்ப்பறித்து வா அடளேரே! கொக்கறிக்கும் கொங்கனவர்கலின் கொட்டத்தை, அவர்தம் கொளுப்பை அடக்குவோம். கொட்டையை நசுக்குவோம்!  வால்க, தமிள்வசை இயக்கம்! வெள்க அதன் புகல்!!

… மரத் தமிழர்களின் உலகளாவிய மக்கட்தொகை கிட்டத்தட்ட ஏழரை  கோடியாமே? அப்படியா என்ன? :-(

ஒரே மான் மார்க் குடையின் கீழ், உலகத்தை  ஆண்டாண்டு காலமாய் அனாதிகாலம்தொட்டு ஆண்டுவரும் – எனக்குப் பிடித்த, என்னைப் பீடித்த தன்மானத் தமிழினம் சனி  கிரகத்துடன் தொடர்புடையதோ??

ஆனாலும் பரவாயில்லை. எனக்கு என் தமிழ்மீதான காதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். :-)

-0-0-0-0-0-0-0-

… எது எப்படியோ, பிள்ளையார் பிடிக்க ஆரம்பித்து குரங்குகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறேன். தவறுதான்.

… … ஆ! இரண்டு வருடங்கள் முன்பு ஜிஇபி- புத்தகத்தை மறுபடியும் ஒருமுறை படித்தேன். அதே பிரமிப்புதான். இதுவும் யாம் பெற்ற பேறுதான். ஆகவே இவ்வையகமும் பெறவேண்டும் என்கிற விழைவும்.

தமிழில் – இணையத்தில் கிடைக்கும்படியாக யாராவது இதனைப் பற்றி எழுதியிருக்கிறார்களா எனப் பார்த்தேன்.

(1) ‘வெங்கட்’ என்பவர் நடத்தும் வீட்டிற்பழக்கியவெங்காயம் அல்லது குடும்பஸ்தனாக்கப்பட்ட வெங்காயம் (இந்த மொழிபெயர்த்தெடுத்தல் தேவையா?) – domesticated onion – எனும் தளத்தில் இதனைப் பற்றி ஒரு குறிப்பு வந்திருக்கிறது.  அதில் தமிழில் அவர் 2005ல் எழுதியிருப்பது:

இப்படியான ஒரு புத்தகத்தை எழுத தனிமனிதனுக்குச் சாத்தியமுண்டா என்று கடந்த பதினைந்து வருடங்களாக நான் கேட்டுக்கொண்டிருக்கும் புத்தகம் ஒன்று உண்டு. அது Douglas Hofstadter எழுதிய Godel, Escher, Bach : An Eternal Golden Braid. இப்படியான ஒரு புத்தகத்தை நான் கண்டேனில்லை.

அய்யா வெங்கட், எனக்கு உங்கள் மேல் திடீரெக்ஸ் காதல் வந்துவிட்டது. ஜாக்கிரதை. தங்களுடைய மற்ற எழுத்துகளையும் படிக்கவேண்டும். :-)

… ஆனால், ‘வெங்கட்’ அவர்களுக்கு ஈவெரா ‘பெரியார்’ அவர்களுடன் ஏதோ பிணக்கோ? wild onionஆன எனக்கு இதுதான் தோன்றுகிறது. ;-) )

(2) ஜெயமோகன் தளத்தில், இதனைப் பற்றி ஒரு 2011 வாசகரின் சிறு குறிப்பு இருக்கிறது; இந்த முரளி என்பவர் யார்?

அவ்வளவுதான்!

… மஸ்ஸாசூஸெட்ஸ் தொழில் நுட்பக் கழகம் இந்த புத்தகத்தின் மீதான ஒரு முழு ஸெமெஸ்டர் பாடத்திட்டத்தை வைத்திருக்கிறது – இதன் 2007 வருட வகுப்புகளின் பல வீடியோ பேருரைகள்லெக்சர்கள் (இலவசங்களுக்காக, திருட்டுத் தரவிறக்கங்களுக்காகக் கிடந்து அலையும் என்னைப் போன்ற சகதமிழர்களுக்காகவென) காணக் கிடைக்கின்றன: Gödel, Escher, Bach: A Mental Space Odyssey

-0-0-0-0-0-0-0-

ஃப்லிப்கார்ட் தளத்திலிருந்தும் இப்புத்தகம் கிடைக்கிறது. வாங்கிப் படிக்கவும். இல்லாவிட்டால் கடன்வாங்கியாவது படிக்கவும்.

வேறுவழியேயில்லாமல் இருந்தால் இணையத்திலிருந்து திருட்டுத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். …

ஏழைகளும் சோம்பேறிகளுமான தமிழர்களுக்கு வேறுவழியேயில்லை, திருடித்தான் சாப்பிடவேண்டும் என்பது ஏழையும் சோம்பேறியுமான – மேலதிகமாக மரத்தமிழனான எனக்குத் தெரியாதா?

வால்க களைஞ்சர். வலர்க அவர் ஆரம்பித்த திருட்டுச் சீர்கேடுகள், தொடரும் கோடிகள், கேடி சகோதரர்கள்! பொலிக அவற் வாரிசுகல்! வலற்க மாணாட மயிராட. அடுத்த முறை கலைஞ்சர் ஆச்சியில் அணைத்து தமிள் பிலிம்களும் இலவசம். எல்லா தமிள் தொளைக்காட்சி சேனள்கலும் இளவசம்! ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானாடமயிராடவில் பங்குபெற வாய்ப்பு!

வெள்க அம்மா இலவச இன்டெர்நெட் திட்டம். ஓடுக ரேஷன் கடைக்கு. அள்ளுக இலவச டவுன்லோட் 1000GB மாதந்தோறும்.

பொங்கல் பரிசாக, 2015 ஜனவரியில் இலவசக் கோமணங்களும், மேலதிக இலவச இணைப்பாக, கம்பீரமும் ஆண்மையுமற்ற திராவிடத் தமிழர்களுக்கு (=100%) சீனாவில் தயாரித்த ப்ளாஸ்டிக் குஞ்சாமணிகளும்…

2015 சித்திரை மாதத்தில் இந்த இலவச முன்இணைப்புகளுக்குக் காற்றடிக்கும் பம்புகளும் இலவசம்.

தமிளர்கலே டமிலர்களே!

இத்தை வாங்கினால் அத்து இலவசம்!

அத்தை வாங்கினால் மாமா இலவசம்!!

ஒரு எழவையும் வாங்காமல் இருந்தால் உலகமே இலவசம்!!!

நாங்கோ டமிளனுங்கோ, மாறாதப் பேரின்ப நீராடிக்கினே இர்ப்போண்டா!!!!

ஆமென்.  :-(

-0-0-0-0-0-0-0-

பின்குறிப்பு: ஆம், இந்த புத்தகமும் அந்த முப்பத்திச் சொச்ச பொக்கிஷங்களில் ஒன்று. எழுதப்பட்டு கிட்டத்தட்ட 35 வருடங்களானாலும் தொடர்ந்து பாராயணம் செய்யப்பட வேண்டியது.

11 Responses to “இன்னொரு புத்தகப் பொக்கிஷம், தமிழ்வசை: இலவசக் குறிப்புகள்”

 1. jag673 Says:

  One of the first 3 books i purchased from Amazon.com in 1999 :-)

  Ramanan

 2. Venkat Says:

  அன்பின் ராமசாமி, என் வலைப்பதிவில் பின்னிணைப்பு வழியாக இங்கே வந்தடைகிறேன். கோடல் ஈஷர் பாக் – உங்களையும் பிடித்தாட்டியிருப்பதைக் கேட்க மகிழ்ச்சி. உங்கள் தளத்தின் பல கருத்துகள் என்னை பிரமிக்க வைக்கின்றன. நான் சொல்ல விழையும், …அதனினும் மேலாக, நான் செய்ய விழையும் பல விடயங்களை சர்வசாதாரணமாக நீங்கள் நிகழ்த்திக் காட்டுகிறீர்கள். வணக்கங்கள்.

  Domesticated Onion – என்பதை ‘வீரியமில்லா வெங்காயம்’ என்றும் மொழிபெயர்க்கலாம். வெங்காயமாக இருக்கவிழையும், இயலாத, வெற்றடுக்குளாலானவனின் புலம்பல்கள் அவை.

  நான் தொடர்புகொண்ட இந்தத் தளத்தையும் பார்க்கவும். http://puebloscience.org/ பிறிதொரு சமயத்தில் அறிவியல் கல்வி குறித்து உங்களுடன் உரையாட வேண்டும். இந்தியாவிற்கு இதை எடுத்துவர ஆசை.

 3. Sreedharan Says:

  By any chance, are you nanganallur Ramji (brother of Giri)?

 4. S.Nagarajan Says:

  “அதன் பிறகு சுமார் 15 வருடங்கள் போல ஒவ்வொரு வருடமும் ஒரு முறை இதனைப் பாராயணம் செய்தேன். ஒவ்வொரு முறையும் விதம் விதமாக பிரமிப்புகள்!”
  I bought this book after reading about it in your blog. To me, GEB surely is worth reading every year for the next 15 years! I wish I had heard of it earlier.


 5. […] நான் அண்மையில் டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர் எனும் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் […]

 6. Sivaraman Says:

  Thank you!! I have borrowed a Hardcover from the local library. Its unputdownable, to say the least!

  you might like this article http://www.rudyrucker.com/blog/2012/08/01/memories-of-kurt-godel/


  • அய்யா, நாகர்கோவில் பழவிலையில் இதெல்லாம் கிடைக்கிறதா? In which case am impressed! (அல்லது) இது கிடைத்தது அந்தக் கேடுகெட்ட அமெரிக்க ஸான்ஃப்ரான்ஸிஸ்கொ பகுதி அரசு நூலகமொன்றிலா?


 7. […] செல்லமும் உள்ளம்கவர் கணிநிவனுமான டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்  அவர்களுடைய இந்த நேர்காணலும்  […]


 8. […] …அப்போது அனுபவங்கள் குறைவானதால், சிலவிஷயங்கள் புரிந்தன – பல அப்படியில்லை – ஆனால் கொஞ்சம் கலங்கிவிட்டிருந்தேன்; பின்னர், 1985வாக்கில் அன்னம் அதன் மூன்றாம் பதிப்பை வெளியிட்டபோது, என் பகுதிநேர வேலைச்சம்பளத்தில் இரண்டாவதாக வாங்கி அசைபோட்ட புத்தகம் இது. முதலாவதாக வாங்கியது: கெடெல்-எஷர்-பாஹ். […]


 9. […] or a study and immediately go ballistic or get into a bewitched trance. (one exception was there as Godel Escher Bach, but then, I had some background in all the three basic warps & wefts of that […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s