அலி அம்ஜெத் ரிஸ்வி (Ali A. Rizvi)  எனும் டொரன்டொ நகர இளைஞர் எழுதியுள்ள மிக அழகான, தெளிவான, மிகமிக முக்கியமான கட்டுரையின் மொழிமாற்றம் இது. ‘மிதவாத’ முஸ்லீம்கள் எனத் தம்மைக் கருதிக்கொள்பவர்களும், இந்திய இஸ்லாமின் தொடர்ந்த பின்னடைவினால்  வருத்தம் கொண்டிருக்கும், ஆனால் அதன் மேன்மையையும், வளர்ச்சியையும் விரும்பும் அனைவரும் அவசியம் இந்தக் கட்டுரையைப் படிக்கவேண்டும்.

Read the rest of this entry »

ஹாஸன் ரட்வான் அவர்கள், லண்டனில் உள்ள இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் பதினைந்து வருடங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். முஸ்லீம் குழந்தைகளுக்காக, நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார். இஸ்லாம்/கடவுள் என்பவற்றைப் பொறுத்தவரை தன்னை ஒரு அறியவொண்ணாக் கொள்கையாளன் (=அக்நோஸ்டிக், agnostic) என விவரித்து, விரித்துக்கொள்கிறார்.
Screenshot from 2016-02-17 15:10:02
தன்னுடைய சுயசரிதையை, பளிச்சிடும் நேர்மையுடன் எழுதியிருக்கிறார் – அது இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.

Read the rest of this entry »

நடைமுறை இஸ்லாமின் மீது அறிவார்ந்த, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைக்கும் முஸ்லீம் சான்றோர்கள் சிலரின் (முடிந்தவரை இளைஞர்களின்) கருத்துகளை, மொழி மாற்றம் செய்து, முடிந்தபோதெல்லாம் தொடர்ந்து பதிப்பிப்பதாக ஒரு எண்ணம்; தற்கால முட்டியடி எதிர்வினைவாத இணைய இஸ்லாமியச் சூழலில் இம்மாதிரி மாணிக்கங்கள், சமனத்தன்மை மிக்கவர்கள் – பொதுவெளியில் இப்படிப் பட்டவர்த்தனமாகப் பேசுவது, இயங்குவது என்பவை நடக்கத்தான் செய்கின்றன என்றாலும், அவை அபூர்வமே!  ஆகவேதான் எனக்குத் தோன்றுகிறது – இவற்றை, இம்மாதிரிக் குரல்களை முடிந்தவரை முறையாக ஆவணப் படுத்தவேண்டும்.  (இந்த வரிசையில் முதலாவது; இரண்டாவது இது; ஓடிவந்து உதவ நான்கைந்து அன்பர்கள் முன்வந்துள்ளதால் இது சாத்தியமாகி இருக்கிறது, அவர்களுக்கு என் நன்றி!)

Read the rest of this entry »

டெட்.காம் இணைய தளத்தில் உள்ள 8 நிமிடங்களே ஓடும் ஒரு சிறு வீடியோ ஒன்றின் ட்ரேன்ஸ்க்ரிப்ட்-ன் (உரையாடல்/பேச்சு/வசன வடிவம்)  தமிழ்மயமாக்கம் இது.

Screenshot from 2016-01-31 16:34:03
[ஷர்மீன் ஒபைத்-சினாய்]

Read the rest of this entry »

பலப்பல வருடங்களாக இவரைப் பற்றிச் சிலபல அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டு / அறிந்துகொண்டிருக்கும் எனக்கு, அடுத்த  இரு வருடங்களிலாவது இவர் தங்கியிருக்கும் சித்ரகூட் பிரதேசத்திற்கு செல்லவேண்டும், அவரிடம் உரையாடவேண்டும் என்ற அரிப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக,  இவ்வரிய சந்தர்ப்பம் இன்று வாய்த்தது.

இம்மாதிரி அபூர்வமான மனிதர்களுடன் பழக, பேச – அழகான, செறிவான அனுபவங்களைப் பெறக் கொடுப்பினை வேண்டும் – ஆனால் எந்த எழவைச் செய்து புண்ணியம் தேடிக்கொண்டதால், எனக்கு இம்மாதிரி விஷயங்கள் சாத்தியமாகியிருக்கின்றன என்பது எனக்கு, சத்தியமாக இந்த வினாடி வரை தெரியவில்லை.

Read the rest of this entry »

இப்பதிவு ரொம்பவே நீளம் – சுமார் 1600 வார்த்தைகள். சிலபல சங்கடம் தரும் படங்களும் இருக்கின்றன. நீங்கள் எந்தப் பார்வையிலிருந்து இதனைப் படிக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, இது கொஞ்சம் வருத்தம்தரும் பதிவாக இருக்கலாம்; நிதானமாகப் படிக்கவும்; உங்களுடனேயேகூட உரையாடிக்கொள்ள இதனை, வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால், தேவையேயற்ற கோபம் வேண்டாம். சும்மனாச்சிக்கும் பொங்கவேண்டாம். அதிதீவிர உணர்ச்சிவசப் படலும் வேண்டாம். எப்படியும், ஞமலித்தனமான பின்னூட்டங்கள் கடாசப்படும். நன்றி.

Screenshot from 2016-01-10 08:36:06

எதற்காக இவற்றைப் பற்றியெல்லாம் எழுதுகிறேன் என்ற நியாயமாக கேள்வி உங்களுக்குள் எழுந்தால், இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கட்டுரைகளையும் படித்து ஒரு திடத்துக்கு வரவும்: இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)

Read the rest of this entry »

மூன்று நாட்களுக்கு முன் இடப்பட்ட ஒரு பின்னூட்டத்தின் மூலமாகத்தான், அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர் அவர்களை, ஸவூதி அரசாங்கம், ஜனவரி  2, 2016  அன்று சிரச்சேதம் செய்த கோரத்தைப் பற்றிய விவரத்தை அறிந்து கொண்டேன். (எனக்குப் பொதுவாக – பப்பரப்பா டீவியோ, தினசரிகளோ,  இணையச் செய்திகளோகூட ஒத்துவரமாட்டா)
Read the rest of this entry »

السهل الممتنع

December 21, 2015

= அல்ஸஹ்ல் அல்மம்தானி.

இந்த அரேபியப் பொன்மொழி சொல்வது போல, சுலபமான வழியென்பது கண்டடைவதற்கு அரிதுபல பிரச்சினைகளுக்கு சுலபமான சிடுக்கவிழ்த்தல்கள் சாத்தியம் இல்லை. Yes, there is NO silver bullet kinda solution whatsoever, for NP Complete/hard problems.

படிப்பறிவில்லாத, யோசிக்கும் திறமையுமில்லாத வெறும் பப்பரப்பா பரப்புரைகளை மட்டுமே காரியார்த்தமாக நம்பும் பலரைப் போல இவற்றை மட்டுமே நம்பும் இடதுசாரி வாயோர நுரைபொங்கும் அடிப்படைவாதிகளும் தொழில்முறை அறிவுஜீவிகளும் சொல்வதற்கு மாறாக இஸ்லாமிக் ஸ்டேட் கும்பல் என்பது அமெரிக்கர்களின் குழப்படிகளினால், இஸ்ரேலிய மொஸ்ஸாத் உளவு ஸ்தாபனத்தால் உருவாக்கப் பட்டதல்லஇப்பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்கள் பழமைவாத இஸ்லாமிலும் + கறாரான, தற்காலத்திற்கேற்ப செழுமைப் படுத்தப்படாத மதப்புத்தகப் புரிதல்களாலும்தான் இருக்கின்றன.

Read the rest of this entry »

பெஷ்மெர்கெ (Peshmerga), ஒய்பிஜி (YPG), ஒய்பிஜே(YPJ) போன்றவை – தகுந்த பயிற்சியும், யுத்த தளவாடங்களும், ஏன், உண்ணஉணவும் கூடச் சரியாகக் கிடைக்காமல் இருந்தாலும் கூட — ஈவிரக்கமற்ற பொறுக்கிமுதல்வாத அயோக்கிய இஸ்லாமிக்ஸ்டேட் விஷத்தை, தொடர்ந்து தளராமல், சளைக்காமல் – உலகத்து மக்கள் அனைவர் சார்பாகவும், ஏன், நம் இந்தியத் தமிழர்கள் சார்பாகவும் கூடப்  போராடும் மனோதைரியமும் ஞானவைராக்கியமும் படைத்தவை!  இவை  கர்ட் அமைப்புகள் என்ற உண்மையை நான் மறுபடியும் மறுபடியும் சொல்லத் தேவையில்லை…
Screenshot from 2015-04-08 21:52:07தர்மயுத்தம் எனவொன்று இருக்குமா என்று யாராவது கேட்டால், வெகு தைரியமாக தயக்கமேயின்றி நான் சொல்வேன்:

அது கர்ட் மக்கள் திரள்கள்,  தங்கள் சுய நிர்ணய உரிமைக்காகச் சில நூற்றாண்டுகளாக இரான், இராக், ஸிரியா, துருக்கி பிரதேசங்களின் பயங்கரவாத அரசாங்கங்களுடன், ஸவுதிஅரேபிய வஹ்ஹாபியத்துடன் — இப்போது முழு முனைப்புடன் வஹ்ஹாபி​-ஸலாஃபி இஸ்லாமிய வெறியர்களுடனும் தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கும் பன்முனை யுத்தம்தான். Read the rest of this entry »

First things first, dear fellers and fellerinas…

Let me upfront say that, I am big sucker for very beautifully produced and content rich books – and of course – soulful, deep, lilting music.

…and, without much ado, I move on to my recommendations, please!

Read the rest of this entry »

எனக்குப் பிடித்தமான – சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய ஜேஜே: சில குறிப்புகள் எனும் புதினத்திலிருந்து:
1.3.1943: அறிய ஆவல் இல்லவே இல்லை. எட்டிப் பார்க்கிறார்கள். ஒட்டுக் கேட்கிறார்கள். எதை எதையோ. திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா வெகு சிறப்பாக நடை பெறுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு க்றிஸ்தவன் கூட ஆர்வத்தினாலோ, குறுகுறுப்பினாலோ, அறிந்துகொள்ளும் ஆவலினாலோ, அழகுணர்ச்சியினாலோ, அல்லது வேடிக்கையுணர்வினாலோ அங்கு போய் எட்டிப்பார்த்ததாகத் தெரியவில்லை. (பக்கம் 158, முதற் பதிப்பு 1981)

எனக்கு சமயம் வாய்க்கும்போதெல்லாம்,  குறிப்பிட்ட சில விஷயங்களை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவும் அல்லது சிலவிஷயங்களை அனுபவித்தேயாகவேண்டும் என்ற பேராசை காரணமாகவும் – பலப்பலமுறை  சர்ச்களுக்கும் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பலமுறை யூதர்களின் ஸினகாக்குகளுக்கும், பௌத்த விஹாரங்களுக்கும், மசூதிகளுக்கும், ஜைனக் கோவில்களுக்கும், குருத்வாராக்களுக்கும் – ஒரேயொரு முறை பார்ஸீகளின் நெருப்புக் கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அழகு. சடங்குகள் வெவ்வேறு, பிரார்த்தனைச் சட்டகங்கள் வெவ்வேறு. ஆனால் எல்லாவற்றிலும் ஒருவிதமான திருப்தியளிக்கும் ஒத்திசைவு.

Read the rest of this entry »

…நண்பர் மொஹெம்மத் அவர்கள், கீழ்கண்ட பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்:

ராமசாமி சாருக்கு மிக்க நன்றி.மிக விரிவான சிந்திக்க வைக்க கூடிய பதிவு.நான் நீங்கள் சொல்வது போல் அரைகுறைதான்.போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் தான்.கேள்விப்பட்ட சில விசயங்களையும் சொல்லிவிட்டேன்.முழுக்க நம்பிக்கை சார்ந்தவன் தான்.ஆனால் இஸ்லாமை அறிந்து கொள்ளவும் முயன்று கொண்டிருக்கிறேன்.

Read the rest of this entry »

அதாவது: மொஹெம்மத் நபி அவர்களின் வழி நடத்தலில் ஒரு ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற மனிதரெல்லாம் உருவாக முடியும்  என்றால் ராமசாமியாக நான், வெறும் ஒரு அப்துல்லாவாகப் பதவியிறக்கம் பெறமுடியாதா என்ன?  :-)

இது சென்ற பதிவின் (=இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015) தொடர்ச்சி. அதாவது – இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (7/n) Read the rest of this entry »

இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாபபழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள்  (6/n) என்றறிக. இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n. ஐந்தாம் பகுதி: 5/n.

கொர்-ஆன், இஸ்லாம் மத ஸ்தாபகர் மொஹெம்மத் நபி அவர்கள், அக்கால அரேபியச் சூழ்நிலை போன்ற விஷயங்கள் பற்றிய என் குறிப்புகளுக்கு ‘மொஹெம்மத்’ எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் அன்பர் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ஆனால், என் வழக்கம்போல அங்கேயே பதிலிடாமல், உரையாடலின் அவசியம் கருதி,  தனியாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.

Read the rest of this entry »

இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாபபழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள்  (5/n) என்றறிக.

இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n.

…எது எப்படியோ, மற்ற இந்தியர்களைப் போலவே நம் சக இந்திய முஸ்லீம்களும் (குறிப்பாக என் தமிழக முஸ்லீம்களும்) ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய, தங்களுக்குள்ளேயும் பிறபண்பாடுகளுடனும் பொறுமையுடன் உரையாடவேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். இந்த ஆத்ம/சுய பரிசோதனைக்கு எவரால் உதவமுடியுமோ அவர்கள் உதவினால் அது ஒட்டுமொத்த மானுடமேன்மைக்குக்கூட உதவும் எனவும் நினைக்கிறேன்.
Read the rest of this entry »

பயப்படாதீர்கள்.

இது அஞ்சலியல்ல. ஏற்கனவே – என் தாயார் கடந்த இரண்டு நாட்களாக, வரைமுறையே இல்லாமல் அப்துல்கலாம் புகழ் பாடிப்பாடியே, அவருக்குப் பதில் என்னுடைய உயிர் போயிருக்கக்கூடாதா, எனக்கும் 78 வயதாகிவிட்டதே, மஹான் போய்விட்டாரே – எனத் தொடர்ந்து கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கிறார். எனக்கு இந்தத் தொல்லையைத் தாங்க முடியவில்லை.  ஆகவே.

ஆனால் – என்னுடைய இருவேறு நண்பர்கள் எனக்கு அனுப்பியுள்ள செய்திகளிலிருந்து (அனுப்பியவர்களின் நம்பகத் தன்மையைக் கருதி) கீழ்கண்டவைகளைக் கொடுக்கிறேன்…

Read the rest of this entry »

இந்த  (இந்தியா – சமூகம் – இஸ்லாம் – முஸ்லீம் – நான்: சில குறிப்புகள்) வரிசையின் முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி. இது நான்காம் பகுதி. இந்த வரிசையில் இன்னமும் இரண்டு பதிவுகள் வரலாம்.

சரி. எனக்கு இதுவரை கிடைத்துள்ள செறிவான அனுபவங்களில் சிலவற்றைப் பற்றி இப்பதிவில் எழுதலாமென எண்ணம்.

Read the rest of this entry »

(அல்லது) முஸ்லீம் சான்றோர்கள்-சிந்தனையாளர்கள், தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் அவரவர்களின் சொந்தக் காரணங்களிளால் காரியஅமைதி காக்கும்போது — அற்ப அரைகுறை ஜிஹாதிகளை ஆகர்ஷித்து அவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது எப்படி :-)

Read the rest of this entry »

(அல்லது) இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில கருத்துகள் (2/3)

இந்த வரிசையில் முதல் பதிவு: இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில கருத்துகள் (1/3); இதனைப் படித்து விட்டுத் தொடரலாம் – உங்களுக்கு இதனைப் படித்தேயாக வேண்டுமென்றால்…

(தொடர்ச்சி) இப்பதிவு வரிசையை,  நான் இப்போது எழுதுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்:

-0-0-0-0-0-0-

காரணம் #1. அண்மையில் ஆம்பூரில் நடத்தப்பட்ட அட்டூழியம். பொதுச்சொத்துகள் படுமோசமாக, வேண்டுமென்றே உசுப்பிவிடப்பட்ட உதிரி முஸ்லீம் சமூகத் திரள்களினால் நாசம் செய்யப்பட்டமை.

Read the rest of this entry »

(அல்லது)  ரமதான் மாத மனஅழுத்தங்கள்

… என் மகன், அவன் வகுப்புக் குழந்தைகளுடன் பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை கிராமத்துக்கு – சென்றவாரம் போயிருந்தான்; மதியத்திலிருந்து சாயங்காலவேளை வரை அவர்கள் அங்கு கழித்திருக்கிறார்கள். மாலை மயங்கும் நேரத்தில் அக்கிராமத்தினர் அன்புடன் அளித்த இஃப்தார் விருந்தில் (ரமதான் நோன்பு முடிக்கும் தருணம்) கலந்துகொண்டு, அங்குள்ள மதறாஸாவின் குழந்தைகளுடன் அளவளாவி கண்டமேனிக்கும் இனிப்புகளை சந்தோஷமாக, வயிறு உப்ப உண்டுவிட்டு – வீட்டுக்கு வந்து,  இரவு உணவுவேண்டாம் என்று சொல்லித் தூங்கியே விட்டான். :-)

என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: ... [நாம் வீட்டில் பாடும்] அல்லாஹூ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் - அதன் பெயர் முஸ்தஃபா. அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது... ...

என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: … [நாம் வீட்டில் பாடும்] ‘அல்லாஹூ’ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் – அதன் பெயர் ‘முஸ்தஃபா.’ அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது… …

… ஆனால் தூங்குவதற்கு முன் அவனுடைய தினம் அங்கு எப்படிக் கழிந்தது என்பதைப் பற்றி + அந்த மதறாஸாக் குழந்தைகளின் வாழ்க்கைமுறையைப் பற்றி அவன் அறிந்துகொண்டதை, ஒரு நீள லெக்சராகக் கொடுத்தான். (இது பற்றியும்  இது தொடர்பான இன்னும் சில விஷயங்களைப் பற்றியும் இன்னொரு சமயம்…)

சுபம்.

ஆனால் இப்பேச்சு கொடுத்த உந்துதலால், மேலதிகமாகச் சிலபல காரணங்களால், நான் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். :-(

Read the rest of this entry »