[ஸுலைமான் தாவுத்] இஸ்லாமிக்ஸ்டேட் கும்பல் நடத்திய பாரிஸ் கொலைகளுக்குப் பிந்தைய சிந்தனைகள்: சில குறிப்புகள்

February 6, 2016

நடைமுறை இஸ்லாமின் மீது அறிவார்ந்த, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைக்கும் முஸ்லீம் சான்றோர்கள் சிலரின் (முடிந்தவரை இளைஞர்களின்) கருத்துகளை, மொழி மாற்றம் செய்து, முடிந்தபோதெல்லாம் தொடர்ந்து பதிப்பிப்பதாக ஒரு எண்ணம்; தற்கால முட்டியடி எதிர்வினைவாத இணைய இஸ்லாமியச் சூழலில் இம்மாதிரி மாணிக்கங்கள், சமனத்தன்மை மிக்கவர்கள் – பொதுவெளியில் இப்படிப் பட்டவர்த்தனமாகப் பேசுவது, இயங்குவது என்பவை நடக்கத்தான் செய்கின்றன என்றாலும், அவை அபூர்வமே!  ஆகவேதான் எனக்குத் தோன்றுகிறது – இவற்றை, இம்மாதிரிக் குரல்களை முடிந்தவரை முறையாக ஆவணப் படுத்தவேண்டும்.  (இந்த வரிசையில் முதலாவது; இரண்டாவது இது; ஓடிவந்து உதவ நான்கைந்து அன்பர்கள் முன்வந்துள்ளதால் இது சாத்தியமாகி இருக்கிறது, அவர்களுக்கு என் நன்றி!)

…இவ்வரிசையில் போட/சுட்டிக்காட்ட நம் தமிழ்முஸ்லீம் இளைஞர்களின் சீரிய கருத்து, கட்டுரை என ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்தேன் – நான் தேடிய மட்டும் கிடைக்கவில்லை; ஏனெனில், என் பார்வைக்குக் கிடைக்கும் கிட்டத்தட்ட 10-12 இஸ்லாமியத் தமிழ் சஞ்சிகைகள் (கடந்த 5 மாதங்களாக ஒன்றையும் படிக்கவில்லையென்ற பின்புலத்தில்) – குப்பைகளாகவும், மூடவெறுப்பியத்தைப் பரப்புபவைகளாகவும் மட்டுமே இருக்கின்றன; எனக்கு அறியவந்தவரை, இணையத்திலும் அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை – ஆனால், என் தேடல் முழுமையானது என்றெல்லாம் சொல்லவரவில்லை – ஆக, உங்கள் யாருக்காவது ஏதாவது, இது தொடர்பான காத்திரமான பரிந்துரை இருந்தால் தெரிவிக்கவும். நன்றி!

இவ்விஷயம் தொடர்பாக, எனக்கு நன்கு அறிமுகமாயுள்ள இரண்டு புத்திசாலி (தமிழ் முஸ்லீம்) இளைஞர்களையும் அணுகினேன்; இருவருமே உதட்டைப் பிதுக்கிவிட்டார்கள், இத்தனைக்கும் எனக்கு ‘ஒத்திசைவு’ தளத்தில் போட்டு ஐம்பதுபேர் படிக்க, உங்கள் கட்டுரையைக் கொடுங்கள் எனக் கேட்கவில்லை – அந்த ‘தமிழ் ஹிந்து’ அல்லது ‘தினமணி’ போன்ற தினசரிகளுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை – ஆனால் ‘அவசியம் எழுதவும்’ எனத்தான் கோரிக்கை விடுத்தேன். அவர்களுடைய பிரச்சினை – ‘எங்களுக்குப் பரவாயில்லை, ஆனால் ஜமாத்திடமிருந்து எங்கள் குடும்பங்களுக்குப் பிரச்சினை வரும்!’

எனக்குத் தெரிந்த அளவில், அப்படியொரு ஒரு மோசமான கருத்துச் சுதந்திரப் பிரச்சினை தமிழக முஸ்லீம்களுக்கு இருக்கிறதா எனச் சரியாக அனுமானிக்க முடியவில்லை; ஆகவே அவர்களிடம் திரும்பக் கேட்டேன். ஒருவர் மறுபடியும் மறுத்தார் – இன்னொருவர் அம்பேல். அவர்களுடனான நல்லுறவை, இப்படி அளவுக்குமீறி அழுத்தம் கொடுத்துச் சிதைப்பதும் எனக்குச் சரியாகப் படவில்லை. ஆனால் நான் முஸ்லீம் அல்லன் – ஆகவே அவர்களுடைய தனிப்பட்ட சிக்கல்களைப் பற்றி, பாவம், நான் எழுதுவது சரியல்ல, என்னால் அவர்கள் சமூகத்தின் எதிர்மறைக்காரர்களின் வீரியத்தைப் புரிந்துகொள்ள முடியாது என்றுதான் தோன்றுகிறது.

நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்? :-(

-0-0-0-0-0-

பின்புலம்: நவம்பர் 13, 2015 அன்று ஃப்ரான்ஸ் நாட்டில் – பாரிஸிலும், செய்ன்ட் டெனிஸிலும் இஸ்லாமிக் ஸ்டேட் கும்பல் அரங்கேற்றிய அராஜகம் – 130 அப்பாவிகள் கொலை; 350க்கும் மேற்பட்ட அப்பாவிகளுக்கு பலத்த காயங்கள்; + ஒழிந்த கொலைகாரர்கள் 7 பேர். அதன் பின் எழும்பிய பலவிதமான எதிர்வினைகள். வழக்கம்போல, தொழில்முறை மனிதவுரிமைச் சொம்புதூக்கி அபாலஜிஸ்ட்ளின் (apologists) ஊளை.  அமெரிக்கா,  மேற்கத்திய நாடுகள் தாம் இவையெல்லாவற்றுக்கும், ஏன், உலகத்தில் நடக்கும் எந்த அயோக்கிய விஷயத்துக்குமே காரணம் – பாவம், மற்றவர்கள் எல்லாம் வாயில் கட்டைவிரலை வைத்துக்கொண்டு சூப்புவதில் மட்டுமே விற்பன்னர்கள் அல்லவா?
Screenshot from 2016-02-06 08:02:54
[இம்மாதிரி, நம் இந்தியாவிலும், கயமை வாய்ந்த ‘அரசியல்சரி’த்தன அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள் – இதில் முக்கியமானவர்கள் ‘த ஹிந்து’ போன்ற தினசரிக்காரர்கள், தொழில்முறை பிச்சைக்கார மனிதவுரிமைவாதிகள், பர்க்கா தத், தீஸ்தா சீதளவாத் போன்ற ஊடகக்காரர்கள்;  ‘மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்’ என்கிற ரீதியில் இவர்களுடைய பரப்புரைகள், மிக சுவாரசியமானவை… நகைச்சுவை உணர்ச்சியில், செந்தில்-கவுண்டமணிகளை வெட்கம் கொள்ளச் செய்பவை…]
இன்னொரு பக்கம், இஸ்லாமிய வெறுப்பாளர்களின் அற்ப தூஷணை, சின்னத் தனம்; இஸ்லாமிய சார்பாளர்களின் ‘கொலைகளுக்கும் இஸ்லாமுக்கும் தொடர்பேயில்லை’ வகையறா முழுப் பூசணிக்காய்கள், பாதிக்கப்பட்ட அரசுகளின் கோபம், பொதுமக்களின் கையலாகாத்தனக் கைப்பிசைதல், என்னைப் போன்றவர்கள் மலங்கமலங்க விழித்தல்+வாயை மூடிக்கொண்டிருத்தல்… … இன்ன பிற…
இந்த பின்புலத்தில் நவம்பர் 14, 2015 அன்று, ஒரு ஃபேஸ்புக் பதிவாக, ஒரு நேர்மையான கட்டுரையை,  ஸுலைமான் தாவுத் எனும், போற்றத்தக்க சிங்கப்பூர்கார இளைஞர் (தற்போது இஷினொமகி, மியாகி ப்ரிஃபெக்சர், ஜப்பானில் வசிப்பவர்), தன் சகமுஸ்லீம்களை நோக்கி எழுதியுள்ளார்.

அதன் தமிழாக்கத்தை, டிகே அகிலன் அவர்கள் செய்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. அகிலன் அவர்கள் குறிப்பிடத்தக்க சிலபல கட்டுரைகளை (அறிவியல்!) சிறகு, சொல்வனம் போன்ற இணையப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். அவருடைய வலைத்தளம்: அகமாற்றம் – 2008லிருந்து இணையத்தில் எழுதுகிறார்போல!  நான் அண்மையில் தான் இதனைத் தெரிந்துகொண்டேன்.


-0-0-மொழிமாற்றம் ஆரம்பிக்கிறது-0-0-

இஸ்லாமிக்ஸ்டேட் கும்பல் நடத்திய பாரிஸ் கொலைகளுக்குப் பிந்தைய சிந்தனைகள்

[ஸுலைமான் தாவுத்,
தன் சகமுஸ்லீம்களை நோக்கி, அவர்கள் சார்பாக எழுதியுள்ள பதிவு]

…இந்தத் தாக்குதல்களுக்குப் பின், இவை மிகச் சிறிய பிறழ்வடைந்த குழுவினராலேயே செய்யப்பட்டுள்ளது என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறிய முஸ்லீம்கள் அல்லாத அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

ஒரு பயங்கரவாதியின் நோக்கம் வெறுப்பையும் முரண்பாடுகளையும் விதைப்பதுதான். அவற்றிற்குச் செவி கொடுக்காதிருப்பதன் மூலம் நீங்கள் அவர்களின் திட்டங்களை தோல்வியடையச் செய்கிறீர்கள்.

ஆனால் ஒரு முஸ்லீமாக, இது நம்முடன் தொடர்பில்லாதது என்று இத்தனை அவசரத்தில் நாம் உறுதிப்படுத்தியிருக்கக் கூடாது என்னும் என் விருப்பத்தையும்  இங்கு கூற விரும்புகிறேன்.

நான் தனிப்பட்ட முறையில் யாரையும் கொலை செய்ததில்லையானாலும், என் நண்பர்களோ உறவினர்களோ வன்முறையின் பக்கம் திரும்பியதில்லை என்றாலும், தீவிரவாதம், இஸ்லாமுடன் தொடர்புப்படுத்தத் தேவையான அனைத்தையும் கொண்டிருக்கிறது. நல்லெண்ணத்துடன்  கூடிய சகிப்புத்தன்மையுடன் நாமிருக்கவேண்டும் எனும் பெயரில் இதனை அணுகாமல் இருப்பது, இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது.

ஐஎஸ்ஐஎஸ் [இஸ்லாமிக்ஸ்டேட்] ஒரு முஸ்லீம் அமைப்பு. அது இஸ்லாமியப் பிரச்சினை. மிகத் தெளிவாக மீண்டும் கூறுகிறேன். ஐஎஸ்ஐஎஸ் ஒரு முஸ்லீம் அமைப்பு. அது இஸ்லாமின் இதயத்தில் உருவாகியிருக்கும் புற்று நோய். முஸ்லீம்கள் இந்தப்பிரச்சினையை நேரிடையாக எதிர் கொள்ளாதவரை, அது அகன்று விடாது.

 1. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலின்போது ‘அல்லாஹூ அக்பர்’ என்று முழங்குகிறார்கள்.
 2. அந்த அமைப்பில் சேர்க்கப்பட்டவர்கள், தங்கள் பாலியல் வன்முறைகளையும் பெண்களை அடிமைப்படுத்துவதையும் நியாயப்படுத்த குரானின் வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்கள்.
 3. தொல்பொருளாராய்ச்சியாளர்களையும் ஒரினச் சேர்க்கையாளர்களையும் இஸ்லாம் மதத்துக்கு மாற எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் கடவுள் நிந்தனையாளர்கள் என்று கூறி, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் எவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இல்லை. மேலும் புத்த மதத்தவர்களோ யூதர்களோ பாகன்களோ தாவோயிஸ்டுகளோ கத்தோலிக்கர்களோ விக்கன்களோ, ஹிந்துக்களோ – ஏன், ஸயின்டாலஜிஸ்டுகளோ கூட இந்த அமைப்பில் இல்லை.

ஐஎஸ்ஐஎஸ் ஒரு முஸ்லீம் அமைப்பு. அவர்கள் இஸ்லாமின் பெயரால் கொலை புரிகிறார்கள்.

Screenshot from 2016-02-04 22:23:59[மேற்கண்ட-கீழுள்ள படங்கள், ஸுலைமான் தாவுத் அவர்களின் பதிவில் இல்லை;  இவை ‘அபாலஜிஸ்ட்’ எடுத்துக்காட்டுகளாகச் சேர்க்கப்பட்டவை, அவ்வளவுதான்]

…ஆகவே  ‘அவர்கள் உண்மையான முஸ்லீம்கள் இல்லை’ என்றோ  ‘அவர்கள் முஸ்லீம்களே இல்லை’ என்றோ கூறாதீர்கள். எந்த ஒரு பெரிய அமைப்பையும் போலவே, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் அதன் அங்கத்தினர்களைப் பொறுத்த வரையில் – ஒரு அகன்ற பரப்புடன், வரிசைப்பாடுடன் இருக்கிறது.

அந்த வரிசைப்பாடின் ஒரு எல்லையில் எந்த நோக்கங்களும் இல்லாத, நிலைகொள்ளாத தன்மையுடைத்த, தங்கள் வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாத – வேறு வேலை கிடைக்காததால்  சிரியாவுக்குச் சென்ற பதின்மவயதினர் இருக்கிறார்கள். இவர்களுக்கு குரான் புத்தகத்தை இடமிருந்து வலமாக படிக்க வேண்டுமா இல்லை வலமிருந்து இடமாக படிக்க வேண்டுமா என்பது கூட தெரிந்திருக்காது. அதேசமயம், அந்த வரிசைப்பாட்டின் மறு எல்லையில் பயங்கரவாதத்தை நோக்கி மயங்கி வந்து சேர்ந்த மிகுந்த மதநம்பிக்கையுள்ள, குரான் புத்தகத்தை முழுவதும் படித்த, தினந்தோறும் தொழுகைகள் செய்யும் தொழில் வல்லுனர்கள் வணிக வல்லுனர்கள் கல்வியாளர்கள் போன்றவர்கள் இருக்கிறார்கள். இவர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெற்றியடையவேண்டும் என்ற குறிக்கோளைப் புனிதமான ஒன்று என உண்மையிலேயே நம்புபவர்கள். ‘கலீஃபா’ என்று அவர்களால் அழைக்கப்படும் அபுபக்ர் அல்-பக்தாதி, இஸ்லாம் இறையியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற மனிதர்.

அபாலஜிஸ்ட் சொம்புதூக்கிகளின் உலகமடா இது!

[அபாலஜிஸ்ட் சொம்புதூக்கிகளின் உலகமடா இது!]

முஸ்லீம் நாடுகளிலேயே முஸ்லீம்கள் கொடுமைப்படுத்தவும் கொல்லவும் படுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் இக்கொடுமையைச் செய்கிறது எனக் கருதவேண்டும் எனவே நான் நினைக்கிறேன்.

ஏனெனில் ஈராக், சிரியா, ஜோர்டான் போன்ற நாடுகளில், அமெரிக்க ராணுவத்தை விட அதிகமான முஸ்லீம்களை இவர்கள்தான் கொன்று குவித்திருக்கிறார்கள். இஸ்லாமின் பெயருக்கும் பெருமைக்கும், வேறு எந்த மேற்கத்திய நாடுகளை விடவும் அவர்களே அதிகத் தீங்கு செய்திருக்கிறார்கள். அமெரிக்கா, இஸ்ரேல், ஃபிரான்ஸ் ஜெர்மனி, ருஷ்யா போன்ற நாடுகள் இஸ்லாமுக்கு எதிரிகள் இல்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் இஸ்லாமின் மிகப்பெரிய எதிரி!

 
இந்தப் பிரச்சினையை நாம், நம் கையில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது நம் மதம் சார்ந்த பிரச்சினை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்தும் மதச்சார்பற்ற நாட்டிற்கான நமது விழைவை/ஈடுபாட்டை புதிப்பித்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

நான், என் வாழ்நாள் முழுவதும், மதச்சார்பின்மையின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து நம்பிவந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அந்த நம்பிக்கை மேலும் உறுதிப்பட்டுக் கொண்டே வருகிறது. மதம் என்பது,  தேசத்தை ஆள்வதற்கான ஒன்றல்ல! இது எந்த மதத்துக்கும் தேசத்துக்கும் பொருந்தும்.

 

ஐஎஸ்ஐஎஸ் என்பது அமெரிக்கா அல்லது பிரிட்டன் அல்லது ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளின் பிரச்சினை இல்லை. சிரியா அல்லது ஈராக்கின் பிரிச்சினையும் இல்லை.

அது முஸ்லீம்களின் பிரச்சினை. இதை உங்களால் ஒப்புக் கொள்ள முடியாவிட்டால் நீங்கள் உண்மையிலேயே ஒரு நல்ல முஸ்லீமும் இல்லை.

# சுதந்திரம்சகோதரத்துவம்சமத்துவம்
# [ஃப்ரெஞ்சுக்]குடியரசு நீடுழிவாழ்க

-0-0-மொழிமாற்றம் முடிந்தது-0-0-

3 Responses to “[ஸுலைமான் தாவுத்] இஸ்லாமிக்ஸ்டேட் கும்பல் நடத்திய பாரிஸ் கொலைகளுக்குப் பிந்தைய சிந்தனைகள்: சில குறிப்புகள்”


 1. Hi sir,

  Saudi Anthropologist — Saad Al-Sowayan: We Must Accept Change or Become Extinct

  Video:
  http://www.memritv.org/clip/en/5224.htm

  script:
  http://www.memritv.org/clip_transcript/en/5224.htm

  some of the hist best lines

  “We always have our eyes fixed on the past. We never look to the future. We stand in the way of change, trying to abolish the notion of change.

  “The world around us has changed. The world will not just let you be. You must adapt to it, or else a rope will be placed around your neck and you will be dragged along.”

  “People want to stop time at a certain point in history, and have things continue the way they were. They do not understand the contradiction in which they place themselves. In some aspects, they are very advanced: They fly planes, drive cars, use cellphones, and whatnot.

  “The Prophet Muhammad said that he would be proud of the Muslim nation among all nations. I don’t think that anyone can be proud of our nation right now, man.

  “Ever since the deterioration of Islamic culture, in all its religious and non-religious aspects, ever since the end of the golden age of the Arabs in Spain – what have the Arabs contributed to the world? Nothing. Ever since those days, they have not contributed a thing.”

  “What I said was that they should either keep only the sword, or keep only the phrase ‘There is no god but Allah.’ The presence of the sword alongside the phrase ‘There is no god but Allah and Muhammad is His Messenger’ give people unfamiliar with the history of Saudi Arabia the impression that we want to spread Islam by the sword. Sadly, people here welcome the delivery of such a message… My understanding is that the sword was meant to deliver justice, not to spread [Islam].


 2. இஸ்லாமிய சமயத்துக்குள் பன்மைத்தன்மையை பற்றிய கருத்துக்களை தேடும்போது இந்த கட்டுரை கிடைத்தது.
  http://www.islamicpluralism.org/438/getting-to-know-the-sufis

 3. saudi king salman Says:

  The real reason behind the Wahhabism is the BOOK, there is no denial about it.

  There are great differences between the Quranic interpretations of Ibadi Teachings vs Sunnite Teachings.

  The Ibadi movement is said to have been founded 20 years after the death of the Muslim prophet Muhammad, predating both the Sunni and Shia denominations. It is considered to be one of both moderation and tolerance toward other views and religions.

  Ibadi’s giving the abstract/lucid/generic meaning to the Quranic verses while the Sunni’s giving the black & white/ literal meaning that causes the issue (in fact, they are not giving, they couldn’t understand better than that is the right word, if I put it bluntly).

  For example, the “Seeing Allah” concept in Quran is interpreted as below:

  Ibid: The Ibadism maintain that Allah is not to be seen either in this World or in the World to Come. As for the Quranic verses which give the impression that Allah shall be seen, the “gazing” was explained as waiting the permission from their Lord to enter Paradise.

  Sunni: The Sunnites maintain that the believers will see their Lord on the Day of Resurrection: “Upon that day some faces shall be radiant, gazing upon their Lord.” (75:22-3) and the saying of the Prophet, peace be upon him: “You will see your Lord as you see the full moon; nothing will impair your view of Him; And if you are able to keep the dawn prayers and the midafternoon prayers, do it.”

  http://www.angelfire.com/ok5/ibadhiyah/ibadhisunni.html

  https://en.wikipedia.org/wiki/Differences_between_Sunni,_Shia_and_Ibadi_Islam

  Why did the Vatican train Muhammad and created Islam???மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s