அறியாக் குழந்தைகளை மதராஸாக்களில் சேர்த்து, அவர்களை மதவெறித் தற்கொலைக் கொலைகாரர்களாக மாற்றுவது எப்படி – சில குறிப்புகள்
February 3, 2016
டெட்.காம் இணைய தளத்தில் உள்ள 8 நிமிடங்களே ஓடும் ஒரு சிறு வீடியோ ஒன்றின் ட்ரேன்ஸ்க்ரிப்ட்-ன் (உரையாடல்/பேச்சு/வசன வடிவம்) தமிழ்மயமாக்கம் இது.
[ஷர்மீன் ஒபைத்-சினாய்]
ஷர்மீன் ஒபைத்-சினாய் (Sharmeen Obaid-Chinoy – 2012ல் ஒரு ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் விருதைப் பெற்றவர்!) எனும் பாகிஸ்தானிய திரைப்படக்காரரினால் மிகுந்த இடர்பாடுகளுக்கிடையில் எடுக்கப் பட்டுள்ள இப்படம், இந்தியாவின் – ஆகவே, இந்தியமுஸ்லீம்களின் மேன்மையையும், நல்லிணக்கத்தையும் விரும்பும் ஒவ்வொருவராலும் அவசியம் பார்க்கப் படவேண்டியதொன்று: Inside a school for suicide bombers
பொறுமையாக இதன் மொழிமாற்றத்தைச் செய்த நண்பருக்கு மிக்க நன்றி. அவர் தன்னை யார் என்று வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை – காரணம்: தேவையேயற்ற வெறுப்புமிழல்களுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ளவேண்டாம் என்ற எண்ணம்தான் என நினைக்கிறேன். இதில் நான் சில திருத்தங்கள் செய்திருக்கிறேன் – ஆகவே இந்த ட்ரேன்ஸ்க்ரிப்டில் பிழை இருந்தால் அது என்னைச் சாரும்; ஆனால், அதன் சரியான தன்மைக்கு இந்த நண்பரே காரணம்! அவருக்கு மீண்டும் என் நன்றி.
-0-0-0-0-0-0-
சரி. மேலே கொடுக்கப்பட்ட சுட்டியில் அப்படத்தைப் பார்க்கலாம்; அதன் வசனவடிவம் கீழே:
தற்கொலைப் படையினரை உருவாக்கும் ஒரு பள்ளியின் உள்ளே
ஷர்மீன் ஓபைத்-சினாய்
00:12 இன்று தற்கொலைப் படையினராக பரிணாமவளர்ச்சி[வீழ்ச்சி?]யடையும் குழந்தைகளை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சிப்போம். 2009 ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 500 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
அந்த வருடம் நான், தற்கொலைப் படையினராக மாற பயிற்சி மேற்கொண்ட சிறுவர்களுடனும், வேலைக்கு ஆள் சேர்ப்பவர்கள் போல் இவர்களைத் தேர்ந்தெடுத்து உயிருள்ள போர் சாதனமாக மாற்றும் தாலிபான் அமைப்பினருடனும் இருந்தேன். எது இவர்களை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயன்றேன்.
00.42 என்னுடைய சமீபத்திய ஆவணப்படமான “தாலிபானின் குழந்தைகள்” – ல் இருந்து எடுத்த ஒரு சிறு காணொளித் துண்டினைப் பாருங்கள்.
00.50 ( பாடல்)
00.54 தற்கொலைப் படையினரை உருவாக்கும் பள்ளிகளை, தாலிபான்கள் தாங்களே நடத்துகிறார்கள். வறுமையில் வாடும் குடும்பங்களைத் தெரிவு செய்து, பெற்றோர்களிடம் பேசி, குழந்தைகளை அனுப்பச் சம்மதிக்க வைக்கிறார்கள்.
இந்தக் குழந்தைகளுக்கு தங்குவதற்கு இடமும் உணவும் அளிக்கப்படும். சில சமயம் பெற்றோருக்கு மாதா மாதம் ஒரு சிறு தொகையும் வழங்கப்படும்.
தாலிபானின் ஒரு பிரச்சார காணொளி எங்களுக்குக் கிடைத்தது. அதில், சிறுவர்களுக்கு – தற்கொலைப்படைத் தாக்குதல்களுக்கும் ஒற்றர்களைக் கொல்வதற்கும் பல விதமான நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றன.
1:26 ஸ்வாத் பகுதி விவசாயக் குடும்பம் ஒன்றில் இருந்து வந்து மதறாஸாவில் படித்து, பின்னர் தாலிபானில் ஒரு வருடம் முன்பு இணைந்த ஏழை இளைஞனின் பெயர் ஹஸ்ரத் அலி. அப்போது அவன் வயது 13.
1.42 (கேள்வி) உங்களைப் போன்றவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கு உங்கள் வட்டாரத்தில் உள்ள தாலிபான் என்ன செய்தது ?
1.47 ஹஸ்ரத் அலி: முதலில் எங்களை மசூதிக்கு அழைத்து போதனை செய்வார்கள். பிறகு மதராஸாவிற்கு அழைத்து சென்று குர்ஆனில் உள்ளவற்றைச் சொல்லிக் கொடுப்பார்கள்.
[ஹஸ்ரத் அலி]
1.57 (ஷர்மீன் ஓபைத் சினாய்) அதன் பிறகு பல மாதங்களுக்கு இந்த இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கிறார்கள்.
2.02 ஹஸ்ரத் அலி: இயந்திரத் துப்பாக்கிகள், கலாஷ்னிகொவ், ராக்கெட் லாஞ்சர்கள், கைக்குண்டுகள், பிற குண்டுகள் – போன்றவற்றை உபயோகிக்கக் கற்றுத் தருவார்கள். இவற்றைக் காஃபிர்களுக்கு [=அல்லாவை நம்பாதவர்கள்] எதிராக மட்டுமே உபயோகிக்கச் சொல்வார்கள். பிறகு தற்கொலைத் தாக்குதலை நடத்தப் பயிற்சியளிப்பார்கள்.
2.20 (கேள்வி): உங்களுக்கு தற்கொலைத் தாக்குதல் நடத்த விருப்பம் உண்டா ?
2. 22 ஹஸ்ரத் அலி : அல்லாஹ் அதற்கான வலிமையை அளித்தால்.
2.28 (ஷர்மீன் ஓபைத் சினாய்) நான் ஆராய்ந்த வரையில், இளைஞர்களைச் சேர்த்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதை மிகவும் திறம்படவே தாலிபான்கள் செய்து வருகிறார்கள்.
இது ஐந்து படிகள் உள்ள செயல்முறை.
(1) முதலில் கிராமப்புறங்களில் வாழும் வறுமையில் வாடும் அங்கத்தினர் அதிகமுள்ள குடும்பங்களை தெரிந்து கொண்டு அவைகளை அணுகுவார்கள். குழந்தைகளுக்கு உணவும் உடையும் தங்க இடமும் அளிப்பதாக வாக்களித்து, பிள்ளைகளைக் குடும்பத்தில் இருந்து பிரிப்பார்கள். பின்னர் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள, தங்கள் கொள்கைகளைப் பரப்பும் தீவிரவாதப் போக்கு கொண்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
2.59 (2) இதன் அடுத்த கட்டம் – குழந்தைகளுக்கு எழுதவோ, படிக்கவோ புரியவோ செய்யாத அரபி மொழியில் அவர்களுடைய புனித நூலான குர்ஆனைச் சொல்லிக் கொடுப்பது. இதனால் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். தங்கள் விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்றவாறு அந்த ஆசிரியர்கள், அதிலுள்ளவற்றைத் திரித்துக் கற்றுக் கொடுப்பதை நான் நேரில் கண்டேன்.
இந்தச் சிறுவர்களுக்கு செய்தித்தாள் படிப்பது, வானொலி கேட்பது, ஆசிரியர்கள் பரிந்துரைக்காத புத்தகங்கள் படிப்பது இவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறும் குழந்தைகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு எந்த வகையிலும் சரியான தகவல்கள் வரமுடியாமல், தாலிபான் முழுமையாக இருட்டடிப்பு செய்துவிடுகிறது.
3.41 (3) இந்தக் குழந்தைகள் தங்கள் வாழும் உலகை வெறுக்க வேண்டும் என்பதற்காக அவர்களை அடிக்கிறார்கள். அதையும் நானே பார்த்திருக்கிறேன்.
ஒரு நாளைக்கு 2 முறை அவர்களுக்கு காய்ந்த ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே உணவு. அவர்களை மிக அரிதாகவே விளையாட அனுமதிக்கிறார்கள். இச்சிறுவர்கள் கிட்டத்தட்ட கைதிகள் – அந்த இடத்தை விட்டுச் செல்லவோ தம் வீட்டிற்குப் போகவோ முடியாது. இவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் வசதியும் வாய்ப்பும் பெற்றோரிடம் இல்லை.
4.11 (4) அடுத்து, தாலிபானின் மூத்த உறுப்பினர்கள் இளையவர்களிடம் உயிர்த் தியாகம் செய்வதன் பெருமைகளை பற்றி கூற ஆரம்பிக்கிறார்கள்: அவர்கள் இறந்த பிறகு சென்றடையும் சொர்க்கத்தில் பாலாறும் தேனாறும் இருக்கும், அளவற்ற உணவு கிடைக்கும், 72 கன்னிப்பெண்கள் அவர்களுக்காக காத்துக்கொண்டிருப்பர்கள் என்று புகட்டப்படுகிறது. மேலும், உயிர்த்தியாகம் செய்தால் அவர்களுடைய நண்பர்கள், அண்டை வீட்டார், அப்பகுதியில் உள்ளவர்கள் எல்லோரும் அவர்களை வீரன் என்று புகழ்வார்கள், பெருமைப்படுவார்கள் என்றும் சொல்லி மூளைச்சலவை செய்யப்படுகிறது.
4.47 (5) தாலிபானிடம் உள்ள பிரச்சார வழிமுறை அதிகபட்ச [எதிர்மறை] விளைவுகளைத் தரக்கூடியது என்று நான் நம்புகிறேன். அவர்கள் உபயோகிக்கும் காணொளிகளின் இடையே ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இறந்து கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் புகுத்தப்படுகின்றன. பொதுமக்களின் உயிரைப்பற்றி மேற்கத்திய அரசுகளுக்கு எந்த வித அக்கறையும் இல்லை. அதனால் அவர்களுக்கு உதவி செய்யும் தங்கள் அரசாங்கமும், மக்களும் தண்டிக்கப்படுவது தவறு அல்ல என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது.
இதன் மூலம் அவர்கள் கூறும் செய்தி இதுதான் – கடந்த இரண்டு வருடங்களில் பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 6000 பொதுமக்கள் ஒரு பொருட்டல்ல.
மீண்டும் மீண்டும் இவ்வாறு சொல்லப்பட்டு அறிவு முடக்கம் செய்யப்பட்ட இக்குழந்தைகள், இஸ்லாமுக்குப் பெருமை சேர்க்கும் ஒரே வழி இதுதான் என்று எந்த நேரமும் வெடிக்கத் தயாராக உள்ள மனித வெடிகுண்டாக மாறி விடுகிறார்கள்.
5.35 இப்போது படத்திலிருந்து மேலும் ஒரு பகுதியைப் பாருங்கள்.
5.41 இந்தச் சிறுவனின் பெயர் செநோலா. உடலில் வெடிகுண்டைக் கட்டி வெடிக்க வைத்து தன்னையும் மேலும் 6 பேரையும் கொன்றான். சாதிக் என்ற இளைஞன் கொன்ற மக்கள் 22 பேர்.
[சாதிக் – இந்தச் சிறுவன்தான் தற்கொலைக்கொலைகளைச் (22!)செய்தான் என நம்ப முடிகிறதா?]
மெசூத் என்ற சிறுவன் கொன்றவர்களின் எண்ணிக்கை 28.
[மெசூத் – புன்னகையுடன் பேசும் இக்குழந்தைகளை, இரக்கமற்ற கொலைகாரர்களாக மாற்றும் ரசவாதத்தைச் செய்ய, வெறிமுதல்வாத இஸ்லாம் ‘ப்ரேன்டி’னால் முடியும் என்பதை நம்ப முடிகிறதா?]
தாலிபான் நடத்தும் தற்கொலைப் பள்ளிகளில் பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியம் செய்ய ஒரு தலைமுறையை சேர்ந்த சிறுவர்களை தயார் செய்து வருகின்றனர்.
(ஒரு இளைஞனிடம் கேட்கப்பட்ட கேள்வி )
6.12 ஷர்மீன் ஓபைத் சினாய்: நீ தற்கொலைத் தாக்குதல் நடத்த விரும்புகிறாயா?
6.15 ( இளைஞன்) : என் குடும்பம் [= தந்தை] அனுமதித்தால் நிச்சயமாக. என் வயதுள்ள இளைஞர்கள், அல்லது என்னை விடச் சிறியவர்கள் தற்கொலைப் படையினராக தாக்குதல்கள் நடத்தியுள்ளது எனக்கு மிகவும் உத்வேகமளிக்கிறது.
6.34 ஷர்மீன் ஓபைத் சினாய்: தற்கொலைத் தாக்குதல் நடத்துவதால் உனக்கு என்ன ஆசி கிடைக்கும்?
6.39 ( இளைஞன்) : இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் என்னிடம் ” ஏன் இப்படி செய்தாய்? ” என்று கேட்பார். “அல்லாவே! உங்களை சந்தோஷப்படுத்தவே இதைச் செய்தேன். காஃபிர்களிடம் சண்டையிட்டு என் உயிரை உங்களுக்கு அளித்தேன்” என்று பதில் சொல்வேன். என் குறிக்கோள் என்ன என்று அல்லா பரிசீலிப்பார். இஸ்லாமிற்காகத் தீமையை ஒழிக்க வேண்டும் என்பது என் இலக்கு என்பதால் அவர் எனக்கு சொர்க்கத்தை அருள்வார்.
7.21 (பின்னணிப் பாடல்)
… …
தீர்ப்பு நாளின் போது
என் அல்லாஹ் என்னை அழைப்பார்
என் உடலை மீண்டும் இணைப்பார்
ஏன் இதைச் செய்தாய் என
என் அல்லாஹ் என்னைக் கேட்பார்
… …
:-(
7.36 ஷர்மீன் ஓபைத் சினாய்: யோசித்துப் பாருங்கள். இந்த சூழ்நிலைகளில் நீங்கள் வளர்ந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ? இந்த உலகில் வாழவா அல்லது மறுமையில் புகழுடன் இருக்கவா? எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
என்னிடம் ஒரு தாலிபான் ஆசாமி சொன்னது நினைவுக்கு வருகிறது, “இந்த போரில் எப்போதும் பலியாடுகள் இருந்துகொண்டே இருக்கும்.”
7.55 நன்றி.
-0-0-0-0-தமிழாக்கம் முடிந்தது-0-0-0-0-
கஷ்மீரிலும் இப்படிப்பட்ட மதராஸாக்கள் இருக்கின்றன. இவற்றில் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டவைகள், புற்றீசல் போல வேறு இடங்களில் முளைக்கின்றன – அல்லது பாகிஸ்தான் வசமுள்ள கஷ்மீர் பகுதிகளுக்குப் புலம்பெயர்க்கப்படுகின்றன. மேற்கு வங்காளத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் இவை அரசல் புரசலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன; இவை முடக்கப்படாமல் மிகரகசியமாக நடத்தப் படுகின்றன. (என் தோழி கில்ய்ஸ் இவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் – கில்யஸ்: மேலும் சில நினைவுகள் + இந்திய/நடைமுறை இஸ்லாம்: சில குறிப்புகள் 09/04/2015)
பிரச்சினை என்னவென்றால் – முஸ்லீம்களுக்காக, மேன்மையை விழையும் முஸ்லீம்களால் நடத்தப்படும் ‘அ-ஜிஹாத் விழிப்புணர்ச்சி’ (Jihad monitor / Extremism watch) அமைப்புகள் இல்லை. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமான பற்றாக்குறை: ‘மேன்மையை விழையும் தலைமை’ இன்னமும் உருவாகவில்லை.
[இந்தக் குழந்தை, இஸ்லாமிக் ஸ்டேட் கும்பலால் மூளைச்சலவை செய்யப்பட்டு, தற்கொலைப் படையில் இருக்கிறது. சோகம் என்னவென்றால், இது யேஸீதிக் குழந்தை – இதன் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்துவிட்டு, ஆண்குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு, பயிற்சி கொடுத்து அதன் மனத்தை மாற்றி, வெறிவாத இஸ்லாமைப் புகட்டி, அதனை ஒரு எதிர்கால படுகொலைக்காரனாகவே மாற்றிவிட்டார்கள், பாவிகள்! இம்மாதிரி குழந்தைகளை, யேஸீதிகளையே கொத்துக்கொத்தாகச் கொல்ல உபயோகிக்கிறார்கள்!]
…எனக்குத் தெரிந்த அளவில், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மதராஸாக்களில் ஆயுதப் பயிற்சியோ, தற்கொலைப் பயிற்சியோ இல்லை, நல்லவேளை – ஆனால் வெறுப்பியப் பயிற்சி வெகுவாகவே அளிக்கப்படுகிறது. படிப்பும் – அதிக பட்சம் அரபுமூலக் கொர்ஆன் மூலமாக – ஒன்றையும் புரிந்து கொள்ளாமல், அதிகபட்சம் மௌல்விகளின் காமாலைப் பாடபேதத்தை மட்டும் கேட்டுக்கொண்டு – அதுவும் டப்பா அடித்து ஒப்பிக்க வேண்டும். பாவம், குழந்தைகள்! :-(
கேட்பவர்களுக்கு வெறிகொடுக்கும், ரத்தத்தைச் சுண்டச் செய்யும் இமாமத்கள், பிரசங்கங்களே இவற்றில் மிகவும் அதிகம். நானே பலப்பல இப்படிப்பட்ட பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறேன். ‘படிக்கும்’ குழந்தைகளுக்கு, ஓரினச் சேர்க்கை பலாத்காரங்கள் வேறு இலவச இணைப்பாகக் கிடைக்கும்.
…இது ஒரு சோகமான விஷயம்தான். நெடுநாள் நோக்கில் இம்மாதிரி விவகாரங்கள் இந்திய முஸ்லீம்களைத் தனிமைப் படுத்தவேசெய்யும் – ஏனெனில், இம்மாதிரி வெறி-வெறுப்பிய மதராஸாக்களில் படிக்கும் – ஆகவே மனப் பிறழ்வு அடைந்த பாவப்பட்ட குழந்தைகள்தாம், பின்னர் புது மசூதிகளுக்கு வேலைக்குப் போகும். விஷம் தொடரும். இது நல்லதுக்கே இல்லை. எனக்கு, இந்தக் குழந்தைகளைப் பார்த்தாலே வயிற்றைப் பிசைகிறது.
-0-0-0-0-0-0-
மிகமிகக் குறைந்த எண்ணிக்கை மதராஸாக்களில் மட்டுமே, குழந்தைகளுக்கு – மதவெறியற்ற கல்வி, ஆங்கிலம், கணிநிகள் எனப் பயிற்சி கிடைக்கிறது. இவற்றில் படிக்கும் குழந்தைகள் பாக்கியவான்கள் – அண்மையில் இப்படிப்பட்ட ஒரு (வட கர்நாடக) மதராஸாவுக்குச் சென்றிருந்தேன். அதன் தலைமை மௌல்வி, ஒரு இளைஞர், மிகுந்த இடர்பாடுகளுக்கு இடையில் கல்வி புகட்டிக் கொண்டிருக்கிறார்.
…ஆனால் சலிப்பாக இருக்கிறதென்றும் சொன்னார் – பிரம்மச்சாரியாகத் தனியாக இருந்தவரை [மதராஸா கமிட்டி] வெறியாளர்களைச் சமாளிக்க முடிந்திருக்கிறது – ஆனால் இப்போது திருமணம் ஆகி, குழந்தையும் வெளிவர இருக்கிறது! மேலதிகச் சிடுக்கல் என்னவென்றால், அவர் குடும்பத்தினர் மேல், கமிட்டியினரின் சித்திரவதை ஆகாத்தியங்கள் அதிகம். அவருடைய மனைவியை ‘ஷட்டில்காக்’ புர்க்காவுடன் (வடகர்நாடகச் சூட்டிடிலும் புழுக்கத்திலும்கூட!) எல்லா நேரத்திலும் இருக்க அழுத்தம் கொடுக்கிறார்கள். சோகம்.
ஆனால் அவர், தம் குடும்பத்தையும் குழந்தையையும் ஜாக்கிரதையாகக் கடைத்தேற்றவேண்டுமல்லவா? ஆகவே பாவம், குழப்பத்தில் இருக்கிறார். உடனடியாக வேறு வேலைகள் கிடைக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை; ஆனால் இவர் தன் வேலையை ராஜினாமா செய்தால், அதற்கு வெகுசுளுவாக வேறு (=அரைகுறை) ஆட்கள் கிடைத்துவிடுவர். சிக்கல். அதேசமயம் தன் பள்ளிக்குழந்தைகளிடம் கரிசனம். அவர்களை அனாதரவாக விட்டுவிட்டுப்போக மனதேயில்லை. பலதலைக் கொள்ளியெறும்பு. என்னுடன் பிற பகுதிநேர வேலைகளுக்கு வரவும் அவருக்கு ஒத்து வரவில்லை. மதராஸாக்களில் மட்டுமே பணிசெய்ய விரும்புகிறார். குழப்பம், குழப்பம். கனடாவுக்குக் குடிபெயர்ப்பு முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.
அவ்வளவு சுளுவா என்ன, கனடாவுக்குப் புலம் பெயர்வது? (ஆனால், இப்படித்தான் சரியான தலைமை வளரக்கூடிய சாத்தியக்கூறுகள் கரைந்துபோகின்றன. தானும் மேன்மையுற்று பிறரையும் கையைப் பிடித்து அழைத்துகொண்டுசெல்லும் மனப்பான்மையுடய நல்லோர்களுக்கு – அமைப்பு ரீதியான ஆதரவு என்பதையே விடுங்கள், உபத்திரவமும் அச்சுறுத்தலும் தான் அதிகம்.)
எது எப்படியோ… :-(
…இந்திய முஸ்ம்களுக்கு – அரேபிய ஸலாஃபி-வஹ்ஹாபி ப்ரேன்ட் இஸ்லாமிடமிருந்து, அவர்களுடைய கயமைத் தலைவர்களிடமிருந்து விமோசனம் கிடைக்குமா? :-((
February 3, 2016 at 13:38
VERY very important post. THANK you sir
February 3, 2016 at 16:36
Sir, you are most welcome.
Sadly, writing about this is something relatively easy – it took some coordination and a few hours’ effort of two people, but arriving at a meaningful solution to this problem is…
I wish we had a ‘wipe & dissolve’ technique for civilizations, but then…
I really love to imagine (and hope) that, a crop of determined and enlightened muslim youth would do to Indian Islam, what Kurds have beautifully managed to do for their Islam.
February 3, 2016 at 14:07
இந்த மதரசா குழந்தைகளை எண்ணி வருத்தம் அடைகிறேன். முஸ்லிம் பர்சனல் லா போர்டு என ஒன்று உள்ளது என தெரியும். அவர்கள் ஏன் இதில் தலையிட்டு நல்ல கல்வி அளிக்க முயற்சிக்க கூடாது.
February 3, 2016 at 16:31
அய்யா, இது சட்டம் தொடர்பான விஷயம் அல்ல. கல்வி தொடர்பானது. அதுவும் மதம் சார்ந்த கல்வி! அந்த அமைப்புக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. பார்க்கப்போனால், அந்த அமைப்பில் இருப்பவர்கள், முஸ்லீம்களின் மேன்மைக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானவர்கள். (உங்களுக்கு, அந்த பாவப்பட்ட ஷாபானு அவர்களுடைய வழக்கு விவரம் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன்)
ஆனால் மாநில அளவில் இயங்கும் வக்ஃப் அமைப்பு இதில் ஈடுபட கொஞ்சமாவது சாத்தியக்கூறு இருக்கிறது – இதுதான் சிலபல பாரம்பரிய மசூதிகள் தொடர்பான சொத்துகளை (மதறாசாக்கள் உட்பட) நிர்வகிக்க முயலும் ஒன்று – இதிலும் ஆயிரம் ஊழல்கள்; இதுவும் கல்வி எனும் விஷயத்தில் தலையிட முடியாது – வெறும் கட்டிடம் / கட்டமைப்பு / வாடகை / நன்கொடை மேலாண்மை போன்றவற்றை மட்டுமே செய்யமுடியும்.
ஆனால் மதராஸா கமிட்டிகள்தாம் இவற்றினை மேற்பார்வை செய்பவை, நடத்துபவை; இவை ஆங்காங்கே இருக்கும் மசூதிகளில் இருந்து இயங்குபவை; இவற்றினை ஒருங்கிணைத்து காத்திரமான, தற்காலத்திற்கேற்ற கல்விப்புலம் என ஒன்றை அமைப்பது என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை; மேற்கு வங்காளத்தில் பல நல்ல முயற்சிகள் (அரசு சார்பாக) செய்யப்பட்டுள்ளன, குஜராத்தில் நிச்சயமாக பல நல்ல விஷயங்கள் நடக்கின்றன – ஆனால்…
ஒரு சில மசூதிகளில் நடக்கும் நல்ல விஷயங்களூம் (மஹாராஷ்டிரத்தில் ஒரு மதராஸாவில், ஒரு மௌல்வி மற்ற மதங்களைப் பற்றியும் பாடங்கள் எடுத்தார்; மத நல்லிணக்கத்தின் அவசியத்தைப் பற்றியும்கூட; நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்) விசனம் தரும் வகையில் ஒடுக்கப்படுகின்றன; பரந்துபட்ட முஸ்லீம் சமுதாயத்தில் இம்மாதிரி முயற்சிகளைப் பரவலாக்குவது, இக்காலங்களில் கொஞ்சம் கஷ்டம்தான்!
ஆனால் அரசு என்ன நல்லது செய்ய முயன்றாலும், வக்கிரமாக அவற்றை எதிர்ப்பவர்களே அதிகம். மதவுரிமை மண்ணாங்கட்டி என்று ஸெக்யூலர்த் தனமாகப் பேசிக்கொண்டே, அழகான-மணியான குழந்தைகளின் எதிர்காலத்தில் மண்ணை வாரிப் போடுகிறார்கள். அமைதியைக் குலைக்கிறார்கள்.
முதலில் பொதுவான ஸிவில் சட்டம் எனவொன்று வரட்டும், அதற்குப் பின்தான் எதுவுமே சாத்தியம்!
கொடிது, கொடிது – ஸெக்யூலர்காரர்களின் அயோக்கியத்தனம் கொடிது! வேறென்ன சொல்ல.
February 4, 2016 at 07:32
மேற்கு வங்காளத்தில் பல நல்ல முயற்சிகள் (அரசு சார்பாக) செய்யப்பட்டுள்ளன//
என்னது, எம்ஜியார் செத்துட்டாரா ??
February 4, 2016 at 07:44
அய்யா, எனக்குப் புரியவில்லை. உதவவும்! (ஏதோ கிண்டலென்று புரிகிறது, ஆனால்…)
February 4, 2016 at 12:29
இன்னமும் நீங்கள் கொல்கத்தா மம்தா அம்மாவை நம்புகிறீர்களா ?? வோட்டுக்காக , அவர் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் .. மால்டா விவகாரம், ஒரு சிறு பொறிதான்
February 4, 2016 at 12:36
இருந்தாலும் எம்ஜியார் புரியவில்லை! :-(
(இந்த நல்ல விஷயங்களை மம்தா அம்மணி செய்யவில்லை; அதற்கு முந்தைய கம்யூனிஸ்ட் அரசுதான் செய்தது! அதிலும் பாவம், ஏகக் குடைச்சல்கள்…)
February 3, 2016 at 22:21
சதி, சதி, இது இஸ்ரேலிய அமேஏஏஏஏரிக்க சதி. அதை அப்படியே வாந்தி எடுக்கும் உங்கள் பார்ப்பன சதி :))
February 4, 2016 at 07:50
அய்யா கோல்ட்பேர்ல்,
ஒரு திருத்தம்: முதலில் ஏகாதிபத்திய சதி. பின்னர் அமெரிக்க சதி + தொட்டுக்கொள்ள யூதசதி; பின்னர் ஹிந்துத்துவ சதி. எல்லாவற்றுக்கும் பின்னர்தாம் பார்ப்பன சதி. ஒரு வரைமுறையே இல்லாமல், நியதியில்லாமல் – மொட்டைப் பாப்பான், சொட்டை கொண்டான் (=சோ!) போலப் பேசுகிறீர்களே, நியாயமா?
ஆனால் நன்றியும். ஒரு கோரமான பதிவுக்கு, நிதர்சன நிலவரத்துக்கு – நகைச்சுவைதான் அருமருந்து.
February 4, 2016 at 09:36
ஐயா,
தங்களின் பார்வைக்கு
http://tamil.thehindu.com/opinion/columns/article8191819.ece
February 4, 2016 at 12:46
to give a opinion on wahabism, why the author has to tread into hindutva?? unable to understand, may be due to fear of repercussions.
February 4, 2016 at 13:02
தான் நடுநிலைமைக்காரன் என்று நிறுவிக்கொள்ள, மனிதர்கள் அந்தர்பல்டிகள் பலவற்றை அடிப்பதைத் தாங்கள் அறியவில்லை.
‘இப்டி ஸொல்றியே’ என்று கேட்டால் ‘நான் அப்டீயும் ஸொன்னேனே’ எனலாம் அல்லவா? மேலும் அரசியல்சரி என்று ஒரு எழவு இருக்கிறதல்லவா?
இவற்றைப் படிக்கும் நாம் தான் அன்னபட்சிகளாக இருக்கவேண்டும். நன்றி.
February 5, 2016 at 09:04
ஐயோ பாவம் ரவி சார்! உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை! இதற்கு பெயர் தான் “போலி மதசார்பின்மை” இது இந்த கட்டுரை எழுதின சமஸ்க்கும் இது போன்று புல்லரிப்பு கட்டுரைகளை வெளியிடும் ‘ஹிந்து ‘குழுமத்திற்கும் உரித்தான ஓன்று.அது சரி இக்கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களை படித்தீர்களா?