அஹ்மெத் ஷா மஸூத், பஞ்ச்ஷேரின் சிங்கம், ஆஃப்கனிஸ்தானின் ஒப்பற்ற தலைவன்: சில குறிப்புகள், படங்கள்
September 9, 2016
“எவ்வளவோ வரலாற்று நாயகர்கள் இருந்திருக்கிறார்கள்… ஆனால் அவர்களில் பலரும் – பாடப்படாமல், பேசப்படாமல், போற்றப்படாமல் ஏகோபித்த இருளில் மறைந்துவிட்டார்கள்; ஏனெனில் அவர்களைப் பற்றிய நினைவுகளை எழுதக்கூடிய வீரியம் மிக்கவர்கள் இல்லை…”
க்வின்டுஸ் ஹொராடியஸ் ஃளாக்கூஸ் (65 – 8; ஏசு பிறந்ததற்கு முன்னால்) (எனது மேற்கண்ட நிர்மூலத்தின் லத்தீன்வழி ஆங்கில மூலம்= Many heroes lived . . . but all are unknown and unwept, extinguished in everlasting night, because they have no spirited chronicler)
மகாமகோ அஹ்மெத் ஷா மஸூத், சந்தேகத்திற்கிடமின்றி நமது சமகால வரலாற்று நாயகன் தான்! பலப்பல போற்றுதற்குரிய கல்யாண குணங்களை உடையவன்; வாழ்க்கையைத் தீவிரமாக அணுகியவன், புத்திமான். பலவான். மிக முக்கியமாக, அவன் மிக அற்புதமான மனிதன்.
சர்வ நிச்சயமாக, நான் மகாமகோ வீரியமுள்ள எழுத்தாளன் என்றெல்லாம் இல்லை. ஏன், சொல்லப்போனால், நான் எழுத்தாளனேகூட அல்லன். ஆனால், அஹ்மெத் ஷா மஸூத் போன்றவர்கள் மறக்கப் படவே கூடாது. அவர்கள், அபூர்வமாகவே பூக்கும் விடிவெள்ளிகள்.
ஆகவேதான் இதனைப் பதிக்கிறேன்..
இதற்கு முகாந்திரம் – ஜெயமோகன் அவர்களுடைய ‘வளரும் வெறி‘ எனும் 6, ஃபெப்ருவரி 2016 அன்று வெளிவந்த கட்டுரை.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இதனை நான் எழுத ஆரம்பித்தேன். அரையும் குறையுமாய் இருக்கும் என்னுடைய பலப்பல வரைவுப்பதிவுகள் போலவே இதுவும் பாவப்பட்ட நிலையில் இருந்தது; இன்று கொஞ்சம் சமயம் வாய்த்திருப்பதால் தூசிதட்டி இதனைப் பதிப்பிக்கிறேன். Read the rest of this entry »
(எனக்குத் தற்போது சுமார் 70 நிமிடங்களுக்கு இணைய இணைப்பு, ஒரு லேப்டாப் எழவுடன் கிடைத்திருக்கிறது; ஆகவே இந்தப் பதிவை அவசரம் அவசரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்; ஆகவே, என் தட்டச்சுத் தவறுகளை மன்னிக்கவும்!) Read the rest of this entry »
இர்ஃபன் ஹபீப், ரொமிலா தாபர் போன்ற ‘வரலாற்றாய்வாளர்கள்’ + தஹிந்துத்துவா அரைகுறைகள்: இவர்களைப் புரிந்துகொள்வது எப்படி
April 1, 2016
முதலில், மேற்கண்டவற்றை அணுகுவது தொடர்பான என் சொந்தக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்திவிடவேண்டும்.
இரண்டு நல்ல விஷயங்கள் இன்று, பாகிஸ்தான் தொடர்பாக நடந்திருக்கின்றன. ஒன்று: ஒரு விருது கொடுக்கப்பட்டது; இரண்டாவது: ஒரு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது.
[அலி அம்ஜெத் ரிஸ்வி] மிதவாத முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம்
February 29, 2016
அலி அம்ஜெத் ரிஸ்வி (Ali A. Rizvi) எனும் டொரன்டொ நகர இளைஞர் எழுதியுள்ள மிக அழகான, தெளிவான, மிகமிக முக்கியமான கட்டுரையின் மொழிமாற்றம் இது. ‘மிதவாத’ முஸ்லீம்கள் எனத் தம்மைக் கருதிக்கொள்பவர்களும், இந்திய இஸ்லாமின் தொடர்ந்த பின்னடைவினால் வருத்தம் கொண்டிருக்கும், ஆனால் அதன் மேன்மையையும், வளர்ச்சியையும் விரும்பும் அனைவரும் அவசியம் இந்தக் கட்டுரையைப் படிக்கவேண்டும்.
[ஷகீல் ஹாஷிம்] வன்முறைகளுக்குப் பின், இஸ்லாமின் ஒரு புதிய மறு உருவாக்கத்திற்கான நேரம் வந்துவிட்டது!
February 25, 2016
இங்கிலாந்தில் வாழும் ஷகீல் ஹாஷிம் எனும், பதினெட்டு வயதேயாகும் இந்த இளைஞன், ஒரு பள்ளி மாணவன்; இந்தச் சிறு வயதிலேயே ‘த எகனாமிஸ்ட்,’ ‘த ஸன்’ போன்ற பத்திரிகைகளில் கட்டுரை எழுதும் அளவுக்குத் திறன். இவன் போன்றவர்கள் (எல்லா விதங்களிலும்) வளர்ந்து, இஸ்லாமையும் முஸ்லீம் இளைஞர்களையும் கடைந்தேற்றுவார்கள் எனத்தான் படுகிறது. Read the rest of this entry »
[ஹாஸன் ரட்வான்] முஸ்லிம்களால் அவர்களது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்துகொள்ளமுடியும்: இஸ்லாமிக்ஸ்டேட்டுக்கு இதுவே சரியான பதில்!
February 17, 2016

தன்னுடைய சுயசரிதையை, பளிச்சிடும் நேர்மையுடன் எழுதியிருக்கிறார் – அது இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.
[ஸுலைமான் தாவுத்] இஸ்லாமிக்ஸ்டேட் கும்பல் நடத்திய பாரிஸ் கொலைகளுக்குப் பிந்தைய சிந்தனைகள்: சில குறிப்புகள்
February 6, 2016
நடைமுறை இஸ்லாமின் மீது அறிவார்ந்த, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைக்கும் முஸ்லீம் சான்றோர்கள் சிலரின் (முடிந்தவரை இளைஞர்களின்) கருத்துகளை, மொழி மாற்றம் செய்து, முடிந்தபோதெல்லாம் தொடர்ந்து பதிப்பிப்பதாக ஒரு எண்ணம்; தற்கால முட்டியடி எதிர்வினைவாத இணைய இஸ்லாமியச் சூழலில் இம்மாதிரி மாணிக்கங்கள், சமனத்தன்மை மிக்கவர்கள் – பொதுவெளியில் இப்படிப் பட்டவர்த்தனமாகப் பேசுவது, இயங்குவது என்பவை நடக்கத்தான் செய்கின்றன என்றாலும், அவை அபூர்வமே! ஆகவேதான் எனக்குத் தோன்றுகிறது – இவற்றை, இம்மாதிரிக் குரல்களை முடிந்தவரை முறையாக ஆவணப் படுத்தவேண்டும். (இந்த வரிசையில் முதலாவது; இரண்டாவது இது; ஓடிவந்து உதவ நான்கைந்து அன்பர்கள் முன்வந்துள்ளதால் இது சாத்தியமாகி இருக்கிறது, அவர்களுக்கு என் நன்றி!)
அறியாக் குழந்தைகளை மதராஸாக்களில் சேர்த்து, அவர்களை மதவெறித் தற்கொலைக் கொலைகாரர்களாக மாற்றுவது எப்படி – சில குறிப்புகள்
February 3, 2016
டெட்.காம் இணைய தளத்தில் உள்ள 8 நிமிடங்களே ஓடும் ஒரு சிறு வீடியோ ஒன்றின் ட்ரேன்ஸ்க்ரிப்ட்-ன் (உரையாடல்/பேச்சு/வசன வடிவம்) தமிழ்மயமாக்கம் இது.

[ஷர்மீன் ஒபைத்-சினாய்]
தொடரும் ‘அல் அன்ஃபல்’ – சில குறிப்புகள்
January 12, 2016
இப்பதிவு ரொம்பவே நீளம் – சுமார் 1600 வார்த்தைகள். சிலபல சங்கடம் தரும் படங்களும் இருக்கின்றன. நீங்கள் எந்தப் பார்வையிலிருந்து இதனைப் படிக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, இது கொஞ்சம் வருத்தம்தரும் பதிவாக இருக்கலாம்; நிதானமாகப் படிக்கவும்; உங்களுடனேயேகூட உரையாடிக்கொள்ள இதனை, வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால், தேவையேயற்ற கோபம் வேண்டாம். சும்மனாச்சிக்கும் பொங்கவேண்டாம். அதிதீவிர உணர்ச்சிவசப் படலும் வேண்டாம். எப்படியும், ஞமலித்தனமான பின்னூட்டங்கள் கடாசப்படும். நன்றி.

எதற்காக இவற்றைப் பற்றியெல்லாம் எழுதுகிறேன் என்ற நியாயமாக கேள்வி உங்களுக்குள் எழுந்தால், இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கட்டுரைகளையும் படித்து ஒரு திடத்துக்கு வரவும்: இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)
அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: இரான் அரசின் இரட்டைவேடமும், நடைமுறை இஸ்லாமின் பெரும்பாலும் கதிமோட்சம் இல்லாத நிலைமையும்
January 8, 2016
மூன்று நாட்களுக்கு முன் இடப்பட்ட ஒரு பின்னூட்டத்தின் மூலமாகத்தான், அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர் அவர்களை, ஸவூதி அரசாங்கம், ஜனவரி 2, 2016 அன்று சிரச்சேதம் செய்த கோரத்தைப் பற்றிய விவரத்தை அறிந்து கொண்டேன். (எனக்குப் பொதுவாக – பப்பரப்பா டீவியோ, தினசரிகளோ, இணையச் செய்திகளோகூட ஒத்துவரமாட்டா)
Read the rest of this entry »
السهل الممتنع
December 21, 2015
= அல்–ஸஹ்ல் அல்–மம்தானி.
இந்த அரேபியப் பொன்மொழி சொல்வது போல, சுலபமான வழியென்பது கண்டடைவதற்கு அரிது… பல பிரச்சினைகளுக்கு சுலபமான சிடுக்கவிழ்த்தல்கள் சாத்தியம் இல்லை. Yes, there is NO silver bullet kinda solution whatsoever, for NP Complete/hard problems.
படிப்பறிவில்லாத, யோசிக்கும் திறமையுமில்லாத – வெறும் பப்பரப்பா பரப்புரைகளை மட்டுமே காரியார்த்தமாக நம்பும் பலரைப் போல – இவற்றை மட்டுமே நம்பும் இடதுசாரி வாயோர நுரைபொங்கும் அடிப்படைவாதிகளும் தொழில்முறை அறிவுஜீவிகளும் சொல்வதற்கு மாறாக — இஸ்லாமிக் ஸ்டேட் கும்பல் என்பது அமெரிக்கர்களின் குழப்படிகளினால், இஸ்ரேலிய மொஸ்ஸாத் உளவு ஸ்தாபனத்தால் உருவாக்கப் பட்டதல்ல; இப்பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்கள் பழமைவாத இஸ்லாமிலும் + கறாரான, தற்காலத்திற்கேற்ப செழுமைப் படுத்தப்படாத மதப்புத்தகப் புரிதல்களாலும்தான் இருக்கின்றன.
ஃபில் கேம்பியன்: இஸ்லாமிக்ஸ்டேட் அட்டூழிய கும்பலுடன் பொருதுவது எப்படி? (+ சில கோரிக்கைக் குறிப்புகள்)
October 20, 2015
பெஷ்மெர்கெ (Peshmerga), ஒய்பிஜி (YPG), ஒய்பிஜே(YPJ) போன்றவை – தகுந்த பயிற்சியும், யுத்த தளவாடங்களும், ஏன், உண்ணஉணவும் கூடச் சரியாகக் கிடைக்காமல் இருந்தாலும் கூட — ஈவிரக்கமற்ற பொறுக்கிமுதல்வாத அயோக்கிய இஸ்லாமிக்ஸ்டேட் விஷத்தை, தொடர்ந்து தளராமல், சளைக்காமல் – உலகத்து மக்கள் அனைவர் சார்பாகவும், ஏன், நம் இந்தியத் தமிழர்கள் சார்பாகவும் கூடப் போராடும் மனோதைரியமும் ஞானவைராக்கியமும் படைத்தவை! இவை கர்ட் அமைப்புகள் என்ற உண்மையை நான் மறுபடியும் மறுபடியும் சொல்லத் தேவையில்லை…
தர்மயுத்தம் எனவொன்று இருக்குமா என்று யாராவது கேட்டால், வெகு தைரியமாக தயக்கமேயின்றி நான் சொல்வேன்:
அது கர்ட் மக்கள் திரள்கள், தங்கள் சுய நிர்ணய உரிமைக்காகச் சில நூற்றாண்டுகளாக இரான், இராக், ஸிரியா, துருக்கி பிரதேசங்களின் பயங்கரவாத அரசாங்கங்களுடன், ஸவுதிஅரேபிய வஹ்ஹாபியத்துடன் — இப்போது முழு முனைப்புடன் வஹ்ஹாபி-ஸலாஃபி இஸ்லாமிய வெறியர்களுடனும் தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கும் பன்முனை யுத்தம்தான். Read the rest of this entry »
9/11 நிகழ்வுக்குப் பின், முஸ்லீம் இளைஞர்களுக்கு மேலதிகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி? (1/4)
September 22, 2015
சுமார் இரண்டரை வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? (26/02/2013)
அப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:
இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)
- முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
- முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
- எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?
பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் / விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக, ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)
-0-0-0-0-0-0-
இதில் இரண்டாவதை இந்தப் பதிவு வரிசையில் எழுதுகிறேன்: முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
மசூதிக்கும் போகும் மன்னாரு
September 7, 2015
1.3.1943: அறிய ஆவல் இல்லவே இல்லை. எட்டிப் பார்க்கிறார்கள். ஒட்டுக் கேட்கிறார்கள். எதை எதையோ. திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா வெகு சிறப்பாக நடை பெறுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு க்றிஸ்தவன் கூட ஆர்வத்தினாலோ, குறுகுறுப்பினாலோ, அறிந்துகொள்ளும் ஆவலினாலோ, அழகுணர்ச்சியினாலோ, அல்லது வேடிக்கையுணர்வினாலோ அங்கு போய் எட்டிப்பார்த்ததாகத் தெரியவில்லை. (பக்கம் 158, முதற் பதிப்பு 1981)
எனக்கு சமயம் வாய்க்கும்போதெல்லாம், குறிப்பிட்ட சில விஷயங்களை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவும் அல்லது சிலவிஷயங்களை அனுபவித்தேயாகவேண்டும் என்ற பேராசை காரணமாகவும் – பலப்பலமுறை சர்ச்களுக்கும் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பலமுறை யூதர்களின் ஸினகாக்குகளுக்கும், பௌத்த விஹாரங்களுக்கும், மசூதிகளுக்கும், ஜைனக் கோவில்களுக்கும், குருத்வாராக்களுக்கும் – ஒரேயொரு முறை பார்ஸீகளின் நெருப்புக் கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அழகு. சடங்குகள் வெவ்வேறு, பிரார்த்தனைச் சட்டகங்கள் வெவ்வேறு. ஆனால் எல்லாவற்றிலும் ஒருவிதமான திருப்தியளிக்கும் ஒத்திசைவு.
மறுபடியும் ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத், ஸ்ரீரங்கப்பட்டணத்தின் ஜமா மஸூதி – சில குறிப்புகள், எண்ணங்கள்
August 25, 2015
“ராமசாமி சாருக்கு மிக்க நன்றி.மிக விரிவான சிந்திக்க வைக்க கூடிய பதிவு.நான் நீங்கள் சொல்வது போல் அரைகுறைதான்.போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் தான்.கேள்விப்பட்ட சில விசயங்களையும் சொல்லிவிட்டேன்.முழுக்க நம்பிக்கை சார்ந்தவன் தான்.ஆனால் இஸ்லாமை அறிந்து கொள்ளவும் முயன்று கொண்டிருக்கிறேன்.
அதாவது: மொஹெம்மத் நபி அவர்களின் வழி நடத்தலில் ஒரு ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற மனிதரெல்லாம் உருவாக முடியும் என்றால் ராமசாமியாக நான், வெறும் ஒரு அப்துல்லாவாகப் பதவியிறக்கம் பெறமுடியாதா என்ன? :-)
இது சென்ற பதிவின் (=இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015) தொடர்ச்சி. அதாவது – இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (7/n) Read the rest of this entry »
இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாப–பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள் (6/n) என்றறிக. இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n. ஐந்தாம் பகுதி: 5/n.
கொர்-ஆன், இஸ்லாம் மத ஸ்தாபகர் மொஹெம்மத் நபி அவர்கள், அக்கால அரேபியச் சூழ்நிலை போன்ற விஷயங்கள் பற்றிய என் குறிப்புகளுக்கு ‘மொஹெம்மத்’ எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் அன்பர் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ஆனால், என் வழக்கம்போல அங்கேயே பதிலிடாமல், உரையாடலின் அவசியம் கருதி, தனியாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.
இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாப–பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள் (5/n) என்றறிக.
இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n.
…எது எப்படியோ, மற்ற இந்தியர்களைப் போலவே – நம் சக இந்திய முஸ்லீம்களும் (குறிப்பாக என் தமிழக முஸ்லீம்களும்) ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய, தங்களுக்குள்ளேயும் பிறபண்பாடுகளுடனும் பொறுமையுடன் உரையாடவேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். இந்த ஆத்ம/சுய பரிசோதனைக்கு எவரால் உதவமுடியுமோ அவர்கள் உதவினால் – அது ஒட்டுமொத்த மானுடமேன்மைக்குக்கூட உதவும் எனவும் நினைக்கிறேன்.
Read the rest of this entry »

