இர்ஃபன் ஹபீப், ரொமிலா தாபர் போன்ற ‘வரலாற்றாய்வாளர்கள்’ + தஹிந்துத்துவா அரைகுறைகள்: இவர்களைப் புரிந்துகொள்வது எப்படி
April 1, 2016
முதலில், மேற்கண்டவற்றை அணுகுவது தொடர்பான என் சொந்தக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்திவிடவேண்டும்.
என்னுடைய முதற் கோட்பாடு / தியரம் (=தேற்றம்): இவர்களை இவர்களுடைய பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொண்டால் மட்டுமே (only understanding them) போதும்; தேவையில்லாமல் இவர்களை, இவர்களது ‘த்தோ கடாசறேண்டா, ங்ஙொம்மாள புட்சிக்கோடா…‘ வகையறா கயமைக் கருத்துப் புகைக்குண்டுகளை ஒப்புக்கொள்ளவேண்டிய அவசியமே துளிக்கூட இல்லை (no need to agree with them at all!), என்பதை மட்டுமே ஒப்புக்கொள்ள முடிந்தால் அதுவே போதுமானது.
இரண்டாம் கோட்பாடு: குசுக்களை விடுவது என்பது உயிரிகளுக்கான அடிப்படை நியதிகளில் ஒன்று. ஆகவே, அந்த அளவில் மிகவும் போற்றத்தக்கவேண்டிய ஒன்றே. குசுக்களே இல்லாத வாழ்க்கை என்பது, ஆரோக்கியமில்லாதது என்பதற்கு அப்பாற்பட்டு, சம்பந்தப்பட்ட உயிரிகளை அழிவுக்கு இட்டுச் செல்லும் ஒன்று.
இரண்டாவதின் துணைக்கோட்பாடு: நான் மேற்கண்ட பேராசிரிய வகையறாக்களின் அடக்கப்படுவதை/அழிவை விரும்பாதவன். ஆகவே அவர்கள் வெளிவிடும் பலவிதமான கருத்துக் குசுக்களை முகர்ந்து – அவை முகம் சுளிக்கவைத்தாலும், குசு விடுவதென்பது அடிப்படை மனிதவுரிமைகளில் ஒன்று என்பதை உணர்ந்து அமைதி அடைபவன். நம் பாரதம் போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் – தாராளமாக, பொதுச் சபையில் டர்புர்ரென்று ஆங்காரக் குசு விடுவது என்பதை – நம் நடைமுறை வாழ்க்கையின், கருத்துச் சுதந்திரத்தின் நியதியாக எடுத்துக்கொள்பவன்.
இரண்டாவதின் துணைக்கோட்பாட்டின் உறுதுணைக்கோட்பாடு: இருந்தாலும், மெத்தப் படித்த பேராசிரியர்கள் – அறிவுஜீவிகள், கறாரான ஆய்வுகளுக்குத் தங்களையும் உட்படுத்திக்கொள்ள வேண்டியவர்கள் – என் வரிப்பணத்தில் தேசத்துக்கு, எம் மக்களுக்குப் பணி செய்பவர்கள் போன்றவர்கள் – இப்படி பகிரங்கமாகப் பொய்மைக் குசுக்களை அட்ச்சுவுடும்போது – கொஞ்சம் சங்கடமடைபவனாக இருந்தாலும் அதிகமாகவே ஆச்சரியமடைபவன். ஏனெனில் நான், நம் வரிப்பணமும் தேசஉபரியும் – இப்படிக் குசுக்களாக, குசுமுதல்வாதங்களாக மாறும் ரசவாதத்தை அறிவியல் பூர்வமாக அணுக முயற்சிப்பவன். இருந்தாலும், குசுக்களுக்கும் கருத்துரிமை உண்டு என்பதை மிகுந்த பணிவுடன் உணர்பவன்.
ஆகவே.
-0-0-0-0-0-0-
இவர்களுடைய புத்தகங்கள் அனைவற்றையும் படித்திருக்கிறேன்; ஆனால் இவர்களுடைய அனைத்து ஆய்வுக்கட்டுரைகளையும் படிக்கவில்லை, எனக்குச் சக்தியில்லை – கடந்த ஏழெட்டு வருடங்களாக ஆராய்ச்சிச் சஞ்சிகைகளில் இவர்களால் எழுதப்பட்டவைகளை நான் படிக்கவில்லை; அதாவது, இவர்களால் 2011 வரை எழுதப்பட்ட புத்தகங்களையெல்லாம் படித்திருக்கிறேன் – ஆனால், பின்னர் இவர்களைச் சுத்தமாக விட்டுவிட்டேன்; ஏனெனில், இவர்களிடமிருந்து நேரிடையாகக் கற்றுக்கொள்ளவேண்டிய கருத்தாக்கங்கள், அணுகுமுறைகள் என எனக்கு எதுவுமேயில்லை. இதனை வெறுப்பினால் சொல்லவில்லை, எனக்கு வெறும் மாளா வருத்தம் மட்டுமே.
…ஆனால் – வரலாறுகளைப் பற்றி எப்படிச் சிந்திக்கக்கூடாது, எப்படி உண்மைகளைத் திரித்துத் திரித்துத் திரியாவரங்களைச் செய்யவேண்டும், அடிப்படையற்ற பொய்களைத் திரும்பத் திரும்பத் தொடர்ந்து நாக்கூசாமல் சொல்லியே அவற்றை ஸ்தாபன ரீதியாக நிறுவிவிட முடியும் போன்ற எதிர்மறை விஷயங்களை இவர்களிடமிருந்துதான் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். பேராசான்களுக்கு நன்றி.
பேராசிரியர் ஹபீப் அவர்களுடன் ஒருமுறை மட்டுமே அளவளாவியிருக்கிறேன்; ஆனால் பேராசிரியையாயினி தாபர் அவர்களுடன் ஒரு முறை (என் பக்கத்திலிருந்து மிகப் பணிவாக) வாக்குவாதம் ஒன்றையும் செய்திருக்கிறேன். இவையெல்லாம் நடந்தது சுமார் 10-15 வருடங்களுக்கு முன்னர்.
ஒருகாலத்தில் எனக்கு, பேராசிரியர் ஹபீப் அவர்களிடம் மதிப்பும் மரியாதையும் இருந்தது. அதே அளவு மரியாதை இப்போதும் இருக்கிறது – அதாவது அந்தக் காலத்தில் அவருடைய செயல்பாடுகளுக்கும் அவருடைய எழுத்துகளிடமும் இருந்த அளவு; ஏனெனில் நானும் ஒருகாலத்தில் மார்க்ஸிய சிந்தனைமுறைகளில் பரிசுத்தமாக ஊறியிருந்தவன் தான்.
ஆனால் பேராசிரியையாயினி தாபர் அவர்களிடம் எனக்குத் துளிக்கூட மரியாதையேயில்லை. ஏனெனில் அவருடைய பின்புலமும், ஆராய்ச்சிகளின் தகுதியும், அவருடைய ஈர்ப்புகளும் அப்படி. அவர் கூசாமல் பொய்கள் பலவற்றைத் தொடர்ந்து சொல்பவர். அவருடைய பிறழ்வுகளைப் பொறுமையாகவும் பணிவுடனும் சுட்டிக்காட்டினாலும், அஅறிவியல் தனமாக அவற்றை அணுகுபவர். அடிப்படையில் குறைகுடம்.
நம்முடைய சமகாலப் பிரச்சினை என்னவென்றால், சராசரித்தனமான பேராசிரியர்களான இவர்கள் போன்ற மாக்களைச் சுற்றித் தொடர்ந்து ஒரு இளைஞர் பட்டாளம் எழும்பிக்கொண்டிருக்கிறது; இப்பட்டாளத்தினர் – பெரும்பாலும் சிரத்தையற்ற, பரந்த வாசிப்பற்ற, குவியத்துடனான படிப்பறிவற்ற, வழிப்படுத்தலோ நெறிப்படுத்தலோ அற்ற அதிமேம்போக்கான அரைகுறைகள். சுயவெறுப்பிலும், மேலைத்தத்துவ மோகங்களிலும், வெற்றுப் போராளித்தன நுரைதள்ளல்களிலும் ஈடுபட்டு குட்டையைக் குழப்பிக்கொண்டிருப்பவர்கள்.
இதன் ஒரு எடுத்துக்காட்டு, ஜேஎன்யு எனும் வியர்த்தத்தின் மேதகு கண்ணையாகுமார். மிக்க நன்றி. இந்தப் பையன் மானாவாரியாக உளறிக்கொட்டுவதைப் பார்த்தால், இவன் ஒரு உயராராய்ச்சி மாணவன் என்றே என்னால் நம்பமுடியவில்லை! ஆனாலும் இவன் ஒரு ஜேஎன்யு இளைஞன், அதனால் செறிவான அனுபவங்கள் பெறாமலிருந்திருக்கலாம்… ஆக, பின்னொரு காலத்தில் இந்தப் பாவப்பட்ட பையன், விடலைத்தனத்தினை உதிர்த்துவிட்டு மேலெழும்புவானோ?
ஹ்ம்ம்ம்… ஆனால், எதிர்காலங்களில் இவர்கள் இப்படியே இருந்தால், நிச்சயம் கடந்துவிடப்படுவார்கள் (=will surely be tossed into the dustbins of their own ahistorical & scheming narratives) அல்லது கடாசப்படுவார்கள்; அல்லது (என்னைப் போலவே) கடந்து விடுவார்கள் – சுயமாகச் சிந்திக்க முயல்வார்கள், காமாலைச் சாக்கடைகளிலிருந்து மேலெழும்புவார்கள்.
இவை என் விழைவுகள், அவ்வளவுதான்!
பேராசிரியர் ஹபீப் அவர்களுடைய பேட்டியிலிருந்து சில பகுதிகளை ஒரு பத்திச் செய்தி வடிவில், தஹிந்துத்துவா (இது ஹிந்துத்துவா அல்ல, வெறும் சுயவெறுப்பிய இடதுசாரித்தனமான அரைகுறைத்துவா என்றறிக!) ஆங்கில தினசரியில், ஒரு அரைவேக்காட்டுத் தலைப்புடன் வந்திருக்கிறது, முடிந்தால் அதனைப் படித்துப் பார்க்கவும்: இர்ஃபன் ஹபீப்: பாரதமாதா கருத்தாக்கம் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதொன்று
“Bharat Mata has nothing to do with India’s ancient or medieval past. It is a European import. Notions of motherland and fatherland were talked about in Europe,” Prof. Habib said, delivering a lecture in the memory of late historian Bipan Chandra at Jawaharlal Nehru University.
…Later, talking to The Hindu on the sidelines of the event, Prof. Habib elaborated on his statement. “Bharat is mentioned in ancient India. It was first used in an inscription of King Kharavela in Prakrit. But representation of the country in human form as a mother or father was unknown in ancient India or medieval India,” he said. “This was an idea that emerged in Europe with the rise of nationalism, and it was found in Britain, Russia, etc.”
(இது குறித்த, பேராசிரியராரின் மேடைப்பேச்சினை நான் பார்க்கவில்லை; ஆக, அவர் இப்படித்தான் சொன்னாரா என்பது சரியாகத் தெரியவில்லை; ஆகவே இப்பத்தியில் வந்திருக்கும் விஷயங்களை வைத்தும், பேராசிரியராரின் உலகமறிந்த, நான் பல பத்தாண்டுகளாக அவதானித்துள்ள கருத்தாக்கங்களை முன்வைத்தும் மட்டுமே இப்பதிவை எழுதியிருக்கிறேன்; ஆனால், அவர் அப்படிச் சொல்லவில்லை, தஹிந்துத்துவா அதனைத் தன் வழமையேபோலத் திரித்துவிட்டது என்று சுட்டிக்காட்டினால், நான் என்னை மிக்க மகிழ்ச்சியுடன் திருத்திக்கொள்வேன்)
ஆச்சரியம், ஆச்சரியம்! எப்படித்தான் இப்படி அட்ச்சு வுடுகிறாரோ! இப்படியெல்லாம் பகிரங்கமாக, மிகப் பெருமையுடன் தன் அறியாமையை வெளிப்படுத்தி உளறிக்கொட்டினால், இவருக்கும் யுவகிருஷ்ணா போன்ற நம்முடைய சொந்த திராவிட விடலைகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்தான் என்ன?
ஆனால், பேராசிரியர் ஹபீப் அவர்களின் வீழ்ச்சி என இதை விவரிக்க மாட்டேன். ஏனெனில், அவர் பலப்பல ஆண்டுகளாக அங்கேதான், அதல பாதாளத்திலேதான், குடியும் குடித்தனமுமாக அமர்க்களமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் இன்னமும் கீழேபோகச் சாத்தியக் கூறுகளே இல்லை. மன்னிக்கவும்.
-0-0-0-0-0-0-
பேராசிரியையாயினி ரொமிலா தாபர் போன்றவர்கள் விசித்திரமான பிரக்ருதிகள்.
…அவர் தன்னுடைய ‘ஸோமநாதா‘ அபுத்தகத்தை வெளியிட்டிருந்த சமயம். அதற்கும் முன்னரே இப்புத்தகத்தின் மையக்கருத்தான கஸினியின் மெஹ்மூத் விவகாரங்கள் பற்றியெல்லாம் ஆராய்ச்சிக் கட்டுரைகள்(!) சிலவற்றை அவர் எழுதியிருக்கிறார். அவற்றைப் படித்துவிட்டு நான் ஏற்கனவே அரண்டு போயிருந்தேன். ஏனெனில் அவற்றில் அடிப்படை ஆய்வுமுறைகள் இல்லை, வெறும் தர்க்கரீதியற்ற கருத்துக்குவியல்கள் மட்டுமே இருந்தன. எதையாவது நிரூபிக்கத் (!) தேவையென்றால் ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்வார், இன்னொரு நிரூபணத்திற்கு அதே விஷயத்தைக் கடாசிவிடுவார். வெகுகறாரான அஆராய்ச்சிப் பார்வை, வேறென்ன சொல்ல.
சரி. அச்சமயம், ஒரு கலந்துரையாடலில் (சுமார் 70-80 இருந்திருக்கலாம்) அப்புத்தகம் தொடர்பாகப் பேசினார்; நானும் வேண்டாவெறுப்பாகத்தான் அங்கு சென்றிருந்தேன் – ஏனெனில் என் இடதுசாரி நண்பன் ஒருவனும் அதில் பேசினான் (=சிற்றுரை) + அவன் ஒரு நல்ல காஃபி வாங்கித்தருவதாகவும் சொல்லியிருந்தான், ஆகவே எனக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது என்பதை நீங்கள் புரிந்துகொண்டுவிட்டீர்கள் அல்லவா? ;-)
‘கேள்வி நேரம்’ சமயம், மறுபடியும் மறுபடியும் கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ‘கேள்விகளைக் கேளுங்கள்!’ ‘எந்த கேள்வியாக இருந்தாலும் பரவாயில்லை!’ ‘இந்தியா ஒரு மதவெறி தேசமாக ஆகாமல் இருக்க உரையாடல்கள் தேவை!’ ‘இன்னமும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன!’ – என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தனர்; ஆனால் யாரும் விவாதங்களை எழுப்பவேயில்லை. சும்மா ‘இந்தியா, வெட்கம் வெட்கம்’ என்கிறரீதியில் பினாத்திக்கொண்டிருந்தார்கள்.
…ஓரளவுக்கு மேல் பொறுக்கமுடியாமல் போய் – நான் (ஆங்கிலத்தில்) பேராசிரியையாயினி அவர்களிடம் சொன்னேன் – மிகமிகப் பணிவாகத்தான்: எனக்குப் படுகிறது – நீங்கள் மார்க்ஸிய முறைப்படிக்கூட உங்கள் கருத்தாக்கங்களைச் சமைத்துக்கொள்ளவில்லை என்று. ஒருகால் நான் சொல்வது தவறாக இருக்கலாம், ஆனால் நான் திருத்திக்கொள்கிறேன், நன்றி.
அவருடைய எழுத்துகளிலிருந்து ஒரு எடுத்துக்காட்டையும் கொடுத்தேன்.
இப்போது என்ன சொல்லவருகிறீர்கள் எனக் கேட்டார்.
நான் சொன்னேன் – ‘எதையாவது நிரூபிக்கத் (!) தேவையென்றால் ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்கிறீர்கள், ஆனால் இன்னொரு நிரூபணத்திற்கு அதே விஷயத்தைக் கடாசிவிடுகிறீர்கள்; கறாரான அகழ்வாராய்ச்சிச் சான்றுகள், சமகால வரலாற்றுப் பதிவுகள் வேண்டும் – அவற்றின் மூலமாகத்தான் பல விஷயங்களை அவதானிக்க முடியும் என்கிறீர்கள்; ஆனால் அப்படிப்பட்ட சான்றுகளைக் காண்பித்தால் அவற்றை நான் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று ஒதுக்குகிறீர்கள். சில சமயம் சான்றுகளே இல்லாமல் பொதுப்புத்திக் கருத்தாக்கங்களைச் சொல்லி, அவற்றை நிறுவுகிறீர்கள். நம் வரலாறுகளை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும் என விழையும் மாணவனாகிய எனக்கு, உங்களைப் போன்ற கற்றறிந்தவர்களிடமிருந்து கற்க ஆசைப்படும் எனக்கு – இவையெல்லாம் சங்கடம் தருகின்றன. என் பார்வை தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.‘ [‘ஸிட் டௌன்!’ ‘எக்ஸ்பெல் ஹிம்!’ கூச்சல்கள்]
அவர் சொன்னார்: அறியாமையால் பேசுகிறாய். புத்தகத்தின் அடர்த்தித் தன்மை உனக்குப் புரியாமல் போயிருக்கலாம். வரலாற்றைப் படிப்பதற்கும் ஒரு பயிற்சி வேண்டும். நீ ஒரு வரலாறு மாணவனா? [கைதட்டல்கள்]
அவர் கேட்டார்: என் புத்தகத்தில் உனக்குப் பிடித்தமான, உன்னால் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம் என ஒன்றுகூட இல்லையா? [கைதட்டல்கள்]
அவர் எனக்கு பதில் சொல்லப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டதால், நான் சொன்னேன்: அம்மணி, அப்படிச் சொல்ல மாட்டேன், உங்களுடைய புத்தகம் ஒரு அழகான புனைவு, அதன் ஒவ்வொரு பக்கத்தையும் படித்தேன். நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய பிற புத்தகங்களிலிருந்து இது மிகவும் வேறுபட்டு இருக்கிறது.
சபையில் எழுந்த சலசலப்பும் அடங்கியது. எனக்கும் இன்னொருவர் சபைக்குச் சென்று அங்கு வம்பு செய்யும் ஆசையுமில்லை; மேலும் காஃபி எனும் கேரட் என் முன் நடனமாடிக்கொண்டிருந்ததே!
ஆனால், அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தவர் உணர்ச்சி வசப்பட்டு – என்னைப் பார்த்துக் கத்தினார்: நீ என்ன காக்கி நிஜாரா? ஃபாஸிஸ்டா? காந்தியைக் கொன்றவர்களிடம் எனக்குப் பேசமுடியாது! வெளியே போ!! (தமிழ்நாடாக இருந்திருந்தால், ஊக்கபோனஸாக – நீ பாப்பானா என்றும் கேட்டிருப்பார்கள்!) :-)
நான், அணிந்துகொண்டிருந்த வெள்ளை வேட்டியை ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துக்கொண்டு சொன்னேன்: ஐயா, நான் வெறும் வேட்டிதான். மேலும் நீங்கள் ஃபாஸிஸ்ட் என்று சொன்னதைச் சரியான உச்சரிப்பில் ஃபாஸ்ஷிஸ்ட் என்றுதான் சொல்லவேண்டும். நன்றி.
ரொமிலா சொன்னார்: அவனை விட்டுவிடு. அவன் அறியாமையில் பேசுகிறான்.
-0-0-0-0-0-0-
பண்டைய கால பாரதத்தைப் பற்றி, மேல்வளர்ந்த இந்தியாவைப் பற்றிப் படிக்க, அகழ்வாராய்ச்சி செய்ய பேராசிரியையாயினி அவர்களுக்கு அக்கால சமகால வரலாறுகள் தெரிந்திருக்க வேண்டும்; அரபு, பர்ஷிய மொழிகளிலோ, ஸம்ஸ்க்ருதத்திலோ, பாலி மொழியிலோ, ப்ராக்ருதங்களிலோ – இவற்றில் சிலவற்றிலாவது ஆழ்ந்த புலமை இருக்கவேண்டும். ஆனால்…
நுண்மான் நுழைபுலம் அறியும் விழைவு வேண்டும்; காமாலைக் கண் கூடாது. ஆனால்…
விமர்சனங்களை காத்திரமான உரையாடல்களின் மூலமாக, கறாரான ஆய்வு முறைகள் மூலமாக எதிர்கொள்ள முடியவேண்டும். ஆனால்…
என்னைச் சொறிந்துவிடு, உன்னைச் சொறிகிறேன் என்கிற திராவிட ஆராய்ச்சி மனப்பான்மை கூடாது, நேர்மையான ஆராய்ச்சிக்கு அது ஒத்துவராது. ஆனால்…
விருதுகளுக்கும், பதவிகளுக்கும் ஆசைப்படலாம், கிடைத்தால் வாங்கிக்கொள்ளலாம்; ஆனால், நாய் போல அலையக்கூடாது – அப்படியே அலைந்தாலும், அவற்றுக்காக இரட்டை வேடங்கள் போடக்கூடாது. ஆனால்…
உளறிக்கொட்டக்கூடாது. சமூகத்தில் தன் பொறுப்பையும் பதவியையும், தான் ஆற்றக்கூடிய பங்கையும் உணர்ந்து சபையில் பேசவேண்டும். ஆனால்…
என்னுடைய தனிப்பட்ட சோகம் என்னவென்றால், பேராசிரியர் இர்ஃபன் ஹபீப் அவர்களும் ரொமிலா தாபர்கள் அளவுக்குத் தன்னைத் தாழ்த்திக்க்கொண்டுவிட்டார் என்பதுதான்…
April 1, 2016 at 10:33
when scholars take political stand , this will be the result. If I need to write in People’s democarcy, I need to accept the stand of the political party.
End Result : half baked misinterpreted history..
April 1, 2016 at 10:46
Along with the languages you mentioned , tamil is equally important, after the identification of jambai edicts, we are entering new uncharted territories. But, our historians will anyway dismiss such critical proofs, including the bulk of sangam and vedic texts…
Relationship between mauryas/Pandyas and velir kings are rarely touched upon. (anyway, our own state governments doesn’t care for these things)
Rama and Ayodhya by meenakshi jain (she is the daughter of girilal jain – hindu politics supporter) . This book shows , how habib and thapar’s misinterpret history along with our shourie’s eminent historians . But, this book has to be read with caution, else we will be completely swayed over.
April 1, 2016 at 10:56
Dear Ravi, I understand that Tamil is very important – along with Sanskrit, to interpret our histories.
But, within the scope of work of Romila Thapar, Tamil is peripheral.
I was lamenting about her lack of depth even in cases where she should be.
I agree with your take; what we need foremost are a sense of balance and continuous revalidation of our ideas based on new evidences that emerge, in a cross disciplinary manner.
Thanks for your views.
April 4, 2016 at 23:05
[…] […]
April 6, 2016 at 08:56
If you want to challenge Romila Thapar do that by writing a detailed critique of her works or at least a sharp critique of one of her books. Why neither you nor Jayamohan have written a well informed critique of her or on the works by Marxist historians. There are history journals that would publish critique of views of contemporary historians after rigorous peer review. You and/or Jayamohan should write such critiques and get them reviewed by journals. Reputed journals in history don’t charge you anything for publishing. So what prevents you both from doing that.
April 6, 2016 at 15:17
Dear Tamil_Underdog, Greetings.
And, I thank your for your advice. But, I can only speak for myself.
I have written (TWICE in the past) to EPW, with detailed refutations
etc (EPW had published, earlier, glowing tributes masquerading as ‘reviews’ – to the works of Romila Thapar) which they did not want to publish, I think. Now, I do not say that there is cabal that is operating there which is squishing the dissent about writers of dissent. But…
When a learned and remarkable person like Prof Dharma Kumar can be shafted royally by the likes of EPW, small fries like me do not matter at all; may be the so called scholarly journals, want to remain scholarly for a given value of scholarship, what do you think.
Anyway, Internet is a great leveller, and you do not have to take me seriously.
I recall your underdoggish views in general, and I do not have time to waste, thanks!
April 6, 2016 at 18:24
ரொமீலா தாப்பர், இர்ஃபான் ஹபீப்……….. கும்பலுடன் கோவிந்தா போடும் …………..
நபர்களில் ஒருவர் *புபுல் ஜெய்கர்*…………
ஹிந்துஸ்தானத்து சிலா விக்ரஹங்கள் என்றால் இந்த அம்மிணிக்கு ரொம்ப இஷ்டம் :-(
April 24, 2016 at 17:40
I suggest reading Koenraad Elst’s Indology site.
i suspect our historians approach is based on a false moral equivalence.
The reaction of these historians to those who disagree with them is to question their credentials as they are unable to dispute facts.
It is indeed sad,