கல்பாக்கம்! கூடங்குளம்!! நியூட்ரான் ஆய்வு மையம்!!! நச்சுக் கிருமி ஆராய்ச்சிகள்!!!! மீத்தேன் எரிவாயு!!!!! பச்சைவயல்காடுகள் கபளீகரம்!!!!!! பன்னாட்டு நிறுவனங்கள்!!!!!!! ஊழல் முதலாளியம்!!!!!!!! பெருச்சாளி அரசியல்வாதிகள்!!!!!!!!! தட்டச்சு வீரதீர இணையப் போராளிகள்!!!!!!!!!! அய்யய்யோ!

… ஏற்கனவே மேற்கண்டவற்றால் கண்டமேனிக்கும் பீதியில் இருக்கும் – திராவிடம் போன்ற மொக்கைப் படுபயங்கரங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும், பொட்டல் காடாகப்பட்டுக்கொண்டிருக்கும் நம் தமிழகத்தில்…

… இப்போது இன்னொரு அசுரன்!  பெயர் – டைஹைட்ரஜன் மோனாக்ஸைட்! ஆ! அய்யோ!!

Read the rest of this entry »

29 வருடங்கள் முன் – இந்த ஃபெப்ருவரி 17 அன்று 1986ல், ‘கே’ போய்ச்சேர்ந்தார்.

‘கே’ அவர்களை நான் ஓரளவு படித்திருக்கிறேன். அவருடைய கருத்துகளைப் பற்றிப் பலருடன் விவாதமும் செய்திருக்கிறேன் – மகாமகோ தருமு ‘ப்ரமிள் பானுசென்ரென்’ சிவராமு அவர்கள் உட்பட!

இதில், எனக்கு நினைவிலிருக்கும் ஒரு சுவாரசியமான விஷயம் – ‘கே’ சென்னையில் ஆற்றிய அவருடைய கடைசிச் சொற்பொழிவில் (4, ஜனவரி, 1986), தருமுசிவராமு அவர்களால் தேவைமெனக்கெட்டு ஏற்படுத்தப்பட்ட,  நம்பவேமுடியாத ஒரு சிறு சலசலப்பும் அடங்கும். நானும் என்னுடைய சில நண்பர்களுடன் அந்தச் சொற்பொழிவுக்குச் சென்றிருந்தேன்.  விக்கித்துப் போனேன். (இது ஒரு தனிக்கதை)
Read the rest of this entry »

கனிமொழி அவர்களின் மகாமகோ கவிதைகளைப் படித்துவிட்டு இக்காலம் வரை – அவருக்குத் தமிழைக் கண்டாலே அதிவெறுப்பு என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன்? அநியாயமாகத்  தவறு செய்து விட்டேனோ??

“… அ.தி.மு.க. அரசிற்கு தமிழ் உணர்வு இல்லை. எனவே தான் சிறீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள பயணிகள் தங்கும் விடுதிக்கு யாத்ரிகர் நிவாஸ் என பெயர் இட்டுள்ளனர். அழகிய தமிழ் பெயரில் அதை அழைக்க அரசுக்கு மனம் இல்லையா?”

— — கனிமொழி (தன்மானம் காக்க தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் – கனிமொழி பேச்சு – (ஞாயிறு, 08 பிப்ரவரி 2015))

ஹ்ம்ம்ம்… இருக்காதுதான். நிச்சயம் நான் தவறு செய்யவில்லை எனத்தான் தோன்றுகிறது. அவருக்குத் தமிழ் ஒத்துவராதுதான். ஆனால், ஆனால்… தொழில்முறை  திராவிடனின் தமிழுணர்வு என்பது சும்மா ஆடுமா, சொல்லுங்கள்? :-)

Read the rest of this entry »

[இதன் முந்தைய இரு பாகங்கள்…]  [1] முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (1/n) 10/02/2015   [2] முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (2/n) 12/02/2015

மேலும், கல்வி என்பது ஒரு ஒற்றைப்படைப் பார்வையில் “நல்லா படிச்சி, வேல கெடச்சி, கண்ணாலம் கட்டி, கொளந்த பெத்து” எனச் சுருக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப் படக்கூடாது என நினைக்கிறவன் நான்.  இவற்றைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.  [தொடர்ச்சி…]

1.  பணம்: முதலில், நம் வாழ்வின் அடிப்படைத் தேவைகளின் ஒன்றான ‘பணம்’ என்பதைப் பற்றி, சிறிது தர்க்கரீதியாக, ஆழமாகப் பார்க்கலாம். ஏனெனில், இவ்விஷயத்தில் சமனநிலைக்கு வருவது நம் எல்லோருக்கும் முக்கியம்தான்.

உங்களுக்கு – தினந்தோறும் குடும்பத்தைப் பேணுவதும், தினசரி வாழ்க்கையை எதிர்கொள்வதுமே பிரச்சினைகளாக இருக்கலாம் என்பது எனக்கு ஓரளவுக்குப் புரிகிறது. ஆம் – நான் இக்கடிதத்தில், கீழே குறிப்பிட்டிருக்கும் பல விஷயங்களுக்கு, ஓரளவுக்குப் பணம் தேவைதான். ஆனால் அபரிமிதமான அளவுக்குத் தேவையல்ல – ஏனெனில், பெரும்பாலும் உங்கள் குழந்தைகள் பொறுத்த உங்கள் கரிசனத்தை, அன்பை, அரவணைப்பைக் காட்ட – உங்களுடைய நேரத்தை அவர்களுக்காகவும் ஒதுக்குவதே போதுமானது.

இருந்தாலும் இதை நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. கீழ்கண்டவற்றை – உங்கள் வாழ்க்கையை நோக்கிய என் புரிதலின் மீது கட்டமைத்திருக்கிறேன் என்பதையும் – தவறுகள் இருப்பின், அவற்றைத் திருத்திக்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன் என்பதையும் உங்களுக்குக் தெரிவிக்கிறேன்.

Read the rest of this entry »

[இதன் முந்தைய பாகம்… 1/n] இந்நிகழ்வுகளுக்குப் பின்னர்கூட ஒருவரும் அவற்றைப் பற்றி ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை – ஆனால் உங்களில் பலரை அடுத்த நாட்களில் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். நீங்கள் வந்துபோய்க்கொண்டுதான் இருந்தீர்கள். சரி.

[தொடர்ச்சி…]

நானும், ஒரு பத்து நிமிடம் பார்த்துவிட்டு, என்ன சொல்லியும் குழப்பம் அடங்காததால், கூட்டம் முடிந்து விட்டது என்று சொல்லி, அறையை விட்டு அலுப்புடன் வெளியேறி விட்டேன். ஏறத்தாழ இம்மாதிரி, ஒருமுறையல்ல – இருமுறை நடந்தது, உங்களுக்கு நினைவிருக்கிறதா? முதலில் எனக்கு இவற்றையெல்லாம் பார்த்து-கேட்டு மிகமிகக் கோபம் வந்தாலும் உங்கள் ஒருவரையும் துளிக்கூட அவமரியாதையாகப் பேசவில்லை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

உண்மை இப்படி இருக்கையில், உங்களில் சிலர், இம்மாதிரி கூட்டங்களை நான் ஏன் கூட்டுவதில்லை என முறையீடு செய்வது திகைப்பாகவே இருக்கிறது. வெட்டிக் கேளிக்கைகளுக்குத் தான் திரைப்படங்கள் இருக்கின்றனவே!

பலவருடங்களாக, தேவைமெனக்கெட்டு நம் சமூகத்துடன் ஊடாடி வரும் எனக்கு, நம் தமிழ்ச் சமூகத்தை நினைத்து எப்போதுமே ஆச்சரியம் கலந்த வருத்தம்தான். வெறுப்பு இல்லை – ஏனெனில் எனது குவியம் என்பது பெரும்பாலும் உங்கள் குழந்தைகள் மீதுதான். மேலும் நாமெல்லாரும் காலாகாலத்தில் போய்ச் சேரவேண்டியவர்கள் – ஆனால், நம் குழந்தைகள் அப்படியல்லர்; அவர்களுடைய எதிர்காலம் அவர்களுக்காக ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

Read the rest of this entry »

சிலர், மற்ற மனிதர்களுக்கு உதவியென்று ஏதாவதைச் செய்தால் – அதற்கான பிரதிபலனை, பதில் உதவியை எப்படிப் பெறுவது என்று சதா நோக்கியவண்ணம் இருப்பர். மற்றும் சிலர், இந்த பதிலுதவி பெறுவதில் இவ்வளவு மும்முரமாக இருக்க மாட்டார்கள் – ஆனால் அவர்களுக்குத் தாங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தது பின்புலத்தில் இருக்கும் – ஆகவே, அந்த உதவியை, ஒரு கடனாகத்தான் பாவிப்பர்.  ஆனால் இன்னும் சிலர் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள். அவர்கள் திராட்சைக்கொடியைப் போன்றவர்கள் – ஒரு பிரதிபலனையும் பார்க்காமல் கனிகளை உற்பத்தி செய்து கொண்டிருப்பார்கள். அளித்த உதவிகளுக்குப் பின்னர் மற்றவேலைகளுக்குத் தொடர்ந்து சென்று கொண்டேயிருப்பார்கள்… நாம் அப்படித்தான் இருக்கவேண்டும்.

மார்க்கஸ் ஆரீலியஸ், ரோமன் சக்ரவர்த்தி.  (தியானங்கள் / எழுதிய வருடங்கள்: 0161 – 0180 ஸிஇ / மொழிபெயர்ப்பு: க்ரிகரி ஹெய்ஸ் / பக்கம் 55 / ரேன்டம்ஹவ்ஸ்,  நியூயார்க் / என்னிடமிருக்கும் பதிப்பு 2002 / நான் இப்புத்தகத்தை வெகுவாகப் பரிந்துரை செய்வேன்.)

http://www.amazon.com/Meditations-New-Translation-Marcus-Aurelius/dp/0812968255

புத்தகத்தின் அட்டை

நம் கீதை சொல்வதும், அடிக்கோடிடுவதும் இதனைத்தான். ஆனால் நான் பரிணாம வளர்ச்சியற்றவன். கிடந்து உழன்று கொண்டிருக்கும் சாதாரணன் தான். ஆகவே – நான், சக்ரவர்த்தி அவர்களின் பகுப்பில்,  இந்த  ‘முதல் சிலர்’ வகையறாக்களில்  இருப்பவன். இப்படிச் சொல்வதில் எனக்குக் குற்றவுணர்ச்சியோ போதாமையோ இல்லை; வெறும் வருத்தம்தான். ஏனெனில் நான் போகவேண்டிய தூரம் அதிகம். Read the rest of this entry »

2013 மார்ச் திங்கள் எட்டாம் தேதி! நினைவிருக்கிறதா?

… வரும் மார்ச் எட்டாம்தேதி – தமிழக மாணவக் குஞ்சாமணிகளின் யுகப்புரட்சி வெடித்துக் கிளம்பிய தினத்தின் இரண்டாம் ஆண்டு கருமாந்திர திவசம்! இதற்கு இன்னும் சரியாக ஒருமாதம்தான் இருக்கிறது!

இது – தினவெடுத்த மாணவமணிகள், தங்கள் தமிழீழக் கனவுகளைக் கைமுஷ்டிகளின் ஏந்தி குவலயபீடங்கள் போல ஆர்ப்பரித்துக் கிளம்பிய தினம்!!

தமிழக மாணவமறவர்கள், ஈழத்தைக் காப்பதற்காக ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் ஷாமியானாக்களில் வாடி வதங்கிய தினங்கள்!!!

பேருந்துகளின் மீது கல்விட்டெறிந்து, கோஷ்டம் பல போட்டுக்கொண்டு, டீவிகேமராக்களுக்கு முன் ஆர்பாட்டம் செய்து தளுக்காக மினுக்கிக்கொண்டு,  ‘தமிழ்’ஈழத்தை வடதுருவ ஆர்க்டிக் பிரதேசத்தில் தேடிக்கொண்டு, வெறி தலைக்கேற குத்தாட்டம் ஆடி, புட்டத்தைச் சொறிந்துகொண்டு பவனிவந்த காலங்கள்…

Read the rest of this entry »

ஒரு மாஜி துணை விரிவுரையாளரே, பெரும்பேரும்புகழும் பெற்ற பேராசிரியராகத் தன்னைக் கருதிக்கொண்டு, வெட்கமில்லாமல் பலரால் அப்படியே விளிக்கப்பட்டுக்கொண்டு கடந்த பல மாமாங்கங்களாக, ஒரு திராவிட இயக்கத் தலைவராய், முதிர்ந்த வயதில், மகாமகோ பெருமையுடன் பவனிவரும்போது….

… ஒரு இப்போதைய ‘அப்பாவி‘ இளைஞன், திராவிட இயக்க மறவன், சொல்லின் சிங்கம், ஜால்ராக்களின் ஜிங்கம், பப்பரப்பா பத்திரிகையாளர்களில் பர்க்காதத்,  சினிமா விமர்சனத்தில் வின்சென்ட்கேன்பி, புரட்சிக்காரர்களில் சேகுவேரா, பிரபாகரன்களில் புலி, புளிகளின் கொட்டை, காஃபியில் நரசூஸ், காப்பியின் ஸெராக்ஸ் —  பிற்காலப் பேராசிரியனாய், பின் நவீனத்துவத் திராவிடப் பேராசானாய் – 2040 வாக்கில் அறியப்படமாட்டானா என்ன?

ஏனெனில், நம் தமிழ்த்திருநாட்டில் எப்போதுமே ஜனரஞ்சக நாயகர்கள் தாம் வழிகாட்டுபவர்களாக, சமூகத்தை மேல் நடத்திச் செல்பவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? :-(
Read the rest of this entry »

என்னால் சிலசமயங்களில், சிலவிஷயங்களை நேரிடையாகப் புரிந்துகொள்ளமுடியாதபோது, என்னுடைய செல்லங்களான சில கருதுகோள்களின் ஊடாக அவற்றை அவதானிக்க முயல்வேன். இதன் காரணமாகத்தான் ஒருவருடம் முன்புபோல, ஒரு காட்டுரை வரிசை எழுதப்பட்டது. (= தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??)

இந்த பெருமாள் ‘மாதொருபாகன்’ முருகன் விஷயத்திலும் அப்படித்தான்.

Read the rest of this entry »

பாவப்பட்ட ஜீவனான,  கருத்துரிமைப் பிரகடனங்களிடும் சக வீரத்தமிழ்ப் போராளிகளால் முட்டுக்கொடுத்து நிற்கவைக்கப்படவேண்டிய பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்ட மாஜி நக்ஸலைட் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு, ஏதோ என்னாலான ஆதரவு. ஹ்ம்ம்ம்…

Read the rest of this entry »

பெருமாள்முருகன் அவர்களின் பாதிநரைத்த தாடியையும் (=வெள்ளைத்தாடியொரு பாகன்?) – நெற்றியின் கவலைவரிகளையும், அவரது கையறு நிலையையும் பார்த்தால் கண்றாவியாக இருக்கிறது.

…அசப்பில், என்னை நான் எவ்வளவோமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு நெகிழ்ந்துகொண்டிருக்கும்போது என் பிம்பம் எனக்கு அனாதிகாலம் தொட்டு அறிவுரையை மௌனமாக காலத்தின் நீட்டிப்பில் உரக்க வழங்குவது போன்ற ஒரு உணர்ச்சி! ஒருமாதிரி ஜென் பௌத்த நிலைதான்.  எனக்கு நானே தன்னில்தானே அமைதியடைந்து என்னைப் பார்த்து சிரித்துக்கொள்வேன். அந்தச் சிரிப்புகள் என்னைப் பார்த்து அழும், பாவம்! என்னமோ தெரியவில்லை, இப்போது எனக்கு என் நண்பரும், பேராசானும், நகைச்சுவையுணர்ச்சி கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவேயுள்ளவருமான எஸ்ரா அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். YesRaw! HeeHaw!!

Read the rest of this entry »

எப்படி?

எப்படி?

எப்படி?
Read the rest of this entry »

இப்படிப் பெருமைப்படுவதால் நான் சிறுமைப்படுவதாக உணரவேயில்லை! ஏனெனில் நான்  கருத்துவெடிகுண்டுகளைக் கண்டமேனிக்கும் வீசிக் கொண்டிருக்கும் மயக்கம் கொண்ட  ஒரு கவைக்குதவாத சாய்வு நாற்காலி அறிவுஜீவிப்போராளியல்லன் – வெறும் சாமானியன் தான். மன்னிக்கவும்.

… இன்று நமது குடியரசு தினம், அமைதியாக வீட்டில் கழிந்துகொண்டிருக்கிறது. ஏதேதோ சிந்தனைகள் – ஆக, அவை தொடர்பாக அலைக்கழிக்கும் நினைவுகளும் எண்ணக்கோவைகளும்.

மகாமகோ மாறன் சகோதரர்களின் ஊழல்கூத்து என்பது ஒரு தொடரும் சோகம்!

சென்னையின் அப்போதைய லயோலா கல்லூரியில் படித்து, தங்கள் பராக்கிரமங்களால் – இந்தியாவுக்கும், குறிப்பாகத் தமிழகத்துக்கும் மகத்தான பணியாற்றிவரும் தலைசிறந்த பழையமாணவர்கள் இவர்கள்தாம் என்பது நாம் பெருமைப்படத் தக்கதே! (அதேசமயம், லயோலாவின் இப்போதைய மாணவர்கள் 2013 ஸ்டூடென்ட் ப்ரொட்டெஸ்ட் குஞ்சாமணிகளுக்கே இலக்கணமான அதிஅற்புத மேதாவிகளாகத் திகழ்ந்து, ஒரேசமயத்தில் தமிழகத்தையும் ஸ்ரீலங்காவையும் – ஏன் இவ்வுலகத்தின் வடக்கு துருவப் பிராந்தியங்களையுமேகூட உய்விக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்ததே!)
-0-0-0-0-0-0-

மத்திய  தகவல்துறை/தொலைத்தொடர்புத் துறை ‘அமைச்சராக’ இருந்தபோது, படுகேவலமாகவும் படுமோசமான பிச்சைக்காரத்தனமாகவும் – தன் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்தே திருட்டு ‘ஸப்-கான்ட்ரேக்ட்’ ;-) எடுத்து தன் வீட்டிலிருந்தும் ஒரு எக்ஸ்சேஞ்ச்(!) நடத்திய மேதகு தயாநிதி மாறன் அவர்களின் கூத்துகள் அம்பலமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்…

Read the rest of this entry »

எந்த மசுத்தை எங்கே யாருக்குப் புடிங்கினாலும் ஏதாவது ஒரு திராவிட டொக்கு மூலையில் மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கும் ஒரு திராவிடத் தமிழன் புண்பட்டே தீருவான் என்பது தமிழகத்தின் மாளா, மீளாத் திராவிடத் தலைவிதிகளில் ஒன்று.

… ஆனால் அதற்கு, சோம்பேறித் தமிழனான அவன் — — பெண்-பெண்ணின்மை, ஆண்-ஆணின்மை, திருநங்கை-திருமதிநம்பி, ஜாதி-ஜாதியின்மை, மதம்-மதச்சார்பின்மை, புண்-புண்ணின்மை, சீழ்-சீழின்மை, சினிமா-உப்புமா என்றெல்லாம் விலாவாரியாக, பொதுவாக மூளை-மூளையின்மை எனக் காரணம் கொடுப்பான் என்பது ஒரு நடைமுறை உண்மை; சார்லி ஹெப்டொ கொலைகாரர்களே, அடிப்படையில் திராவிடர்களாமே! அய்யய்யோ!!

தமிழனுக்கு பண்படுதல் என்பதே புண்படுதல்தான்!

திராவிடத் தமிழன் = Mad ஒரு பாகன்

திராவிடத் தமிழன் = Mad ஒரு பாகன்

Read the rest of this entry »

மூன்று வாரங்கட்கு முன்னால் பள்ளியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு ஆள், வீச்சறிவாள் கும்பலால் துரத்தித் துரத்திக் கொலைசெய்யப்பட்டார். இது ஏதோ பழைய கணக்கு தீர்த்தலுக்காக என +1.

ஐந்தாறு நாட்களுக்கு முன்னால் எங்கள் பள்ளி வாயிலில் இருந்து 120 மீட்டர் தொலைவில் ஒரு பட்டப்பகல் வழி மறிப்புக் கொலை. இப்போது இந்தப் பக்கமும் +1. படு கோரம். ரத்தக் களறி. பதிலுக்குப் பதில் திராவிடப் புறநானூற்று வீரம்! கொலை செய்யப்பட்டவர் ஓடியிருக்கலாம், தப்பிக்கூடப் பிழைத்திருக்கலாம். ஆனால் நான்கைந்து வருடங்கள் முன் அவர் ஒரு சுயதொழில்முனைவோனாக இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவர் காலிலேயே ஒரு குண்டு விழுந்து, பாவம், ஒருகால் போய்விட்டிருந்தது. ஆகவே.

அடுத்து… … …

Read the rest of this entry »

ஓரிருமாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது: நண்பர் ஒருவருடன் மாமலைகளையும் (ஹரல்ட் கார்ஃபின்கெல், எர்விங் காஃப்மன்) அதலபாதாள மடுக்களையும் (ஆஇரா வேங்கடாசலபதியின் பிரமிக்கவைக்கும்  ‘ஆராய்ச்சி!’, ஜேஆர்ஆர் டோல்கீனின் அலுப்பு சராசரிக் களஞ்சியமான  ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்‘) பற்றியெல்லாம் சுகமாக அளவளாவிவிட்டு திரும்பி வீட்டுக்குவந்து, மாலைக்கடனெழவுகளை முடித்துவிட்டு, யார்யார் மின்னஞ்சல்களில் திட்டியிருக்கிறார்கள் எனப் பார்க்கலாம் எனக் கொஞ்சம் கணினி முன் உட்கார்ந்தால் ஒரு அதிர்ச்சி!

பார், யாருக்கெல்லாம் இந்த விருது கிடைக்கலாம் என்று  புளகாங்கிதமுற்ற நண்பனின் பரவசம். “தமிழ்ஹிந்து-வில் எப்படி மெனெக்கெடுகிறார்கள் பார்!” அந்த சுட்டி எழவு இங்கேயிருக்கிறது: சாகித்ய விருது இந்த ஆண்டு யாருக்கு?

Read the rest of this entry »

மகாமகோ தட்டச்சுவீரனும், திடீரெக்ஸ் ஞாணியும், அலுங்காத நலுங்காத விரல்நுனிப் போராளியும் ஆன, எனதருமை பெங்காலி பாபு[1], மின்னஞ்சலில் சுமார் இரண்டு மாதங்கள் முன் ஒரு ஆராய்ச்சி ஆவணத்தை அனுப்பியிருந்தான் – அதனுடன் தான் மேற்கண்ட இளக்காரப் பிலாக்கணத்தையும் அனுப்பியிருந்தான்.

சரி. அதன் சாராம்சத்தைக் குறிப்பிடுவதற்கு முன்னால் – ஏன் இதனை அனுப்பினான் என்ற கேள்வி எனக்குள் எழும்பி என்னை அரித்ததைக் குறிப்பிடவேண்டும். “ஏண்டா, நான் இதைப் படிக்கவேண்டும்?” எனக் கேட்டதற்குப் பதில்  “ஃபெர்கூஸன் நிகழ்ச்சி!” – ஒரு கருப்பன் அக்கிரமமாகத் தண்டிக்கப்பட்டமை + பின்விளைவுகள். அமெரிக்காவே பற்றியெறிகிறதே தெரியாதா, அறிவிலியே! அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிந்து, இனவாதம் நொறுங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை!”

<இங்கு, பெங்காலிபாபுவின் உணர்ச்சிகளைப் பொங்கவைக்கும், முக நரம்புகளைத் தெறிக்கவைக்கும், ரத்தத்தைச் சுண்டவைக்கும், உட்கார்ந்த இடத்திலிருந்தே முஷ்டிதூக்கிய லால்ஸலாம் (=புரட்சிகர செவ்வணக்கம்!) ஒன்றை இலவச இணைப்பாக கற்பனை செய்துகொள்ளுங்கள்!>

ஒரு வழியாகச் சென்றவாரம்தான் அதனைச் சுமார் இரண்டு மணி நேரம் செலவழித்துக் கவனமாகப் படித்தேன்.  இருந்தாலும், பெங்காலிபாபுவால் சுட்டப்பட்டதே? ஒவ்வொரு வரியையும் உன்னிப்பாகப் படிக்கவேண்டுமே! பின்னர் தானே, வரிக்கு வரியாகவும், சாராம்சமாகவும் விமர்சனம் செய்ய முடியும்? ஆகவே. (அந்த ஆவணம்:  Are Emily & Greg more employable than Lakisha & Jamal? A field experiment on labor market – authored by Mariyann Bertrand & Senthil Mullainathan – மரியான் பெர்ட்ரன்ட் & செந்தில் முல்லைநாதன் (ஆ! தமிழர்!!)  எழுதிய – “லகிஷா, ஜமால்களை விட எமிலி, க்ரெக்குகளுக்கு வேலை கிடைப்பது சுளுவா? வேலைவாய்ப்புச் சந்தையிலொரு களப் பரிசோதனை)

இது ஒரு சராசரித்தர ஆராய்ச்சி ஆவணம்தான். என் நோக்கில் – இவ்வாவணம், ஒரு பரிசோதனை அளவில் இருக்கிறதே தவிர ஒரு சீரிய ஆய்வு என்கிற முறையில் இல்லை. பல சிடுக்கல்கள் – ஆனால் வெகுசுலபமான சிடுக்கவிழ்த்தல்கள்!

ஆனால் அந்த ஆவணத்தைப் பற்றிய பதிவல்ல  இது. பெங்காலிபாபு எழுப்பிய இளக்காரக் கேள்வியை எதிர்கொள்ளும் வகையாகத்தான்!

Read the rest of this entry »

சர்வ நிச்சயமாக, அவன் அப்படி இல்லவேயில்லை! தன்னை இப்படிச் சொல்லிக்கொள்பவன், விவரித்துக் கொள்பவன் ஒரு அயோக்கியன் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. (கொஞ்சம் தேவையற்ற கருணையுடன் இதனைச் சொல்லவேண்டுமென்றால் – அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, பிறரையும் ஏமாற்றுபவன். அவ்வளவுதான்!)

நவீனகுளுவானிய கட்டுரை [=0] ஒன்றின் மேலான எதிர்வினையான – என் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுடைய கட்டுரையின் [1] மீதான ஒரு எதிர்வினையாக, சில மேலதிகமான கருத்துகளை கொஞ்சம் காட்டமாகவே கொடுக்கும் என்னுடைய காட்டுரைகள் –  [2], [3], [4]  இவற்றைப் படித்துவிட்டு முடிந்தால் தொடரவும்.(பின்புலம்: டிஸிஎஸ் நிறுவனம், தனக்குத் தேவையற்ற 25000 வேலையாட்களை – அவர்கள் தங்களைச் செழுமை செய்துகொள்ள உதவிகரமாக,  சராசரித்தனத்திலிருந்து மேலெழும்ப ஏதுவாக – வெளியே அனுப்பப்போகும் சாதாரணச் செய்தி)

… ஐடி/தகவல் நுட்ப வேலையாட்கள் தொடர்பான பல சுவாரசியமான பரப்புரைகள் பதவிசாகப் பரப்பப் பட்டுக்கொண்டே வருகின்றன. சில அப்பாவிகள் இதனையும் நம்பியும் விடுகின்றனர் என்பது தான் சோகம்!

“ஐடி துறையில் வேலை கொடுத்துக்கொடுத்துப் பிழிந்து எடுத்துவிடுவார்கள்!”
“ஐடிகாரர்களுக்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது! முதலாளிகள் ரத்தத்தை உறிஞ்சி விடுவார்கள்!”
“வேலை ஸ்திரம் இல்லை! எப்போது வேண்டுமானாலும் கழுத்தைப் பிடித்து வெளியே துரத்தி விடுவார்கள்!”
“லாபம் பார்த்தவுடன், அந்த முதலாளிகள் மூட்டையைக் கட்டிக்கொண்டு போய் விடுவார்கள்”
“திருட்டு முதலாளிகள் விரித்த வலை தெரியாமல், பாவம் இளைஞர்கள் சிக்கி விட்டார்கள்!”
“கடன் வாங்க ஊக்குவிக்கிறார்கள்!”
“நடுவரிசை அதிகாரிகள், மிட்டில் லெவெல் மேனேஜர்கள் நிர்வாகத்துக்குத் தாளம் போட்டு அடிமட்ட (அதிமட்ட?) ஊழியர்களை நசுக்குகிறார்கள்!”
 எனப் பலவாறாக…

ஐயாமார்களே, கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமேயில்லாமல் குளுவான்களால் பரப்பப்படும் இந்தப் பொய்மைகளை நீங்கள் இன்னுமா  நம்புகிறீர்கள்? இவை உண்மையா என்று பரிசோதிக்கவே மாட்டீர்களா? :-(

Read the rest of this entry »

ஜெயமோகன் அவர்களுடைய கட்டுரையின் [1] மீதான ஒரு எதிர்வினையாக, சில மேலதிகமான கருத்துகளை கொஞ்சம் காட்டமாகவே கொடுக்கும் என்னுடைய காட்டுரைகள் –  [2], [3].  இவற்றைப் படித்துவிட்டு முடிந்தால் தொடரவும்.(பின்புலம்: டிஸிஎஸ் நிறுவனம், தனக்குத் தேவையற்ற 25000 வேலையாட்களை – அவர்கள் தங்களைச் செழுமை செய்துகொள்ள உதவிகரமாக,  சராசரித்தனத்திலிருந்து மேலெழும்ப ஏதுவாக – வெளியே அனுப்பப்போகும் சாதாரணச் செய்தி)

முதலில் மூன்று வெவ்வேறூ எதிர்வினையாளர்களின் மின்னஞ்சல் கருத்துகளின் சாராம்சம்:

1.  எனக்கு, கஷ்டத்திலிருப்பவர்களிடம், கடும் துன்பத்தில், திக்குத் தெரியாமல் வாடுபவர்களிடம் கரிசனம் இல்லை. மனிதாபிமானமேயில்லை.

2. நான் ஒரு மேட்டிமைவாதி (elitist!). உச்சாணிக் கொம்புகளில் இருக்கும் ஆட்களைப் பற்றி மட்டும்தான் எனக்குக் கவலை. என் பார்வையில், கீழே இருப்பவர்களெல்லாம் ஒதுக்கத் தக்கவர்கள், வெறுக்கப் படவேண்டியவர்கள்.

3. ஜெயமோகன் மேல் பொறாமையுடன் புழுதி வாரியிறைக்கும் கும்பலில் நான் ஐக்கியமாகி விட்டேன். நான் அவருடன் நேரடியாக கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்வதை விடுத்து, எதிர்க்கருத்து சொல்லி, ஒத்திசைவில் பதிவிடுகிறேன். நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்ளக் கூடிய விஷயங்களை இப்படியா வெளியில் கொட்டுவது, கல்லெறிவது?

Read the rest of this entry »