மாதொருபாகன், முட்டாள்தனம், குயுக்தி, ஸுக்ரிதி: சில குறிப்புகள்

February 3, 2015

என்னால் சிலசமயங்களில், சிலவிஷயங்களை நேரிடையாகப் புரிந்துகொள்ளமுடியாதபோது, என்னுடைய செல்லங்களான சில கருதுகோள்களின் ஊடாக அவற்றை அவதானிக்க முயல்வேன். இதன் காரணமாகத்தான் ஒருவருடம் முன்புபோல, ஒரு காட்டுரை வரிசை எழுதப்பட்டது. (= தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??)

இந்த பெருமாள் ‘மாதொருபாகன்’ முருகன் விஷயத்திலும் அப்படித்தான்.

-0-0-0-0-0-0-0-

இந்த ‘மாதொருபாகன்’ நாவல் ஒரு மூன்றாம்தர, வெகுசாதாரணமான படையல் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. தமிழர்களை திராவிட இயக்கங்களை, ஓரளவு புரிந்துகொண்டுள்ளதாக நினைத்துக்கொண்டிருக்கும் எனக்கு — அதில் இருக்கும் சில விஷயங்களால்  ‘புண்படுதல்’ நிகழ்ந்திருக்கிறது என்பதிலும் ஐயமில்லை.

ஆனால் இந்த விஷயத்தில், ஒரு தமிழச் சமூகமாக, நம் எதிர்வினைகள் (ஆதரித்தும் எதிர்த்தும்) அதீதமாக இருக்கின்றன என்பதுதான் என் கருத்து. இந்த முட்டியடி எதிர்வினைகள் காரணமாக இந்த அதிசராசரித்தனம் என்பதற்குத் தேவைக்கதிகமான விளம்பரம் கிடைத்து, படையல் வீங்கடிக்கப்பட்டு அது ஒரு தரமான வரலாற்று ஆவணம் என்று விரிவடையவும், தமிழகம் ஒரு இருட்டுக்கொட்டகை எனவும், இதெல்லாம் ஹிந்துத்துவாபொந்துத்துவா வெறித்தனத்தின் ஊழியாட்டம் எனச் சித்திரம் விரியவும் சாத்தியக்கூறுகள் அதிகம். இதற்குத்தானே நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு காத்திருக்கிறார்கள், பப்பரப்பா ஆசாமிகள்?

வென்டி டொனிகர் போன்றவர்களின் அரைவேக்காட்டுக் கருத்துகளைத் தாண்டிக்கொண்டு போகாமல் – அதனை நினைத்துநினைத்து அதீதமாகக் குமுறி அந்த அம்மணியின் அரைகுறை ஆராய்ச்சிக்கு விளம்பரம் தேடிக்கொடுத்தது போலத்தான் இது. ஆகவே முகாந்திரமேயில்லாமல், பாரத வரலாறும், பண்பாடும் அதனுள் பொதிந்திருக்கும் ஹிந்து மதங்களும் – முற்போக்குவயிற்றுப்போக்கர்களால் பழிக்கப்படும்.

பாரத மதங்களின் முக்கியமான ஊடாடும் தன்மையென்பது என்பது முடிவிலா உரையாடல் – தம்மை விமர்சித்துக்கொண்டு, எதிரும்புதிருமாக விவாதித்து, தொடர்ந்து தம்மை மேலெழுப்பிக்கொள்ளும் தன்மை. ஆனால் இம்மாதிரி மேம்படுத்திக்கொள்ளல் இல்லவேயில்லை என்று நிறுவ, இம்மாதிரி கொதித்தல்கள் அதீதமாக விளம்பரப்படுத்தப்பட்டு – சப்புக்கொட்டிக்கொண்டு உபயோகிக்கப்படும்.
-0-0-0-0-0-0-0-

பாரதத்தின் மைய நீரோட்டங்களான அணுகுமுறைகளில் ஒன்று – ஸுக்ரிதி: இதன் பலவிதமான அர்த்தங்களில் சில = சகிப்புத் தன்மை; மாற்றுச் சிந்தனைகளை – அவற்றை ஒப்புக்கொள்ளமுடியாமலிருந்தாலும் கூட,  அவற்றுடன் ஒத்திசையமுடியாமல் இருந்தால்கூட –  அவற்றுக்கான சித்தாந்தரீதியான அடித்தளங்களைப் புரிந்துகொண்டு, வேற்றுப்பார்வைகளுக்கும் மதிப்புகொடுத்து அவற்றை வரவேற்கும், அவற்றுடன் உரையாடும் பண்பு. மாற்றுச் சிந்தனைகளையும் போஷிக்கும் கலாச்சாரம். மாற்றுச் சிந்தனைகளைத் தொடர்ந்து உரமாக இட்டுக்கொண்டிருந்தால்தான், சமூகத்தில் சட்டகரீதியான இறுக்கங்கள் தளறும் – என்பதை உணர்ந்துகொள்ளும் பரிமாணம்.

அதனால்தான், விதம்விதமான ஆனால் வெகுவாகப் போற்றத்தக்க மனிதர்களான டாக்குரும், காந்தியும், அம்பேட்கரும், விவேகானந்தரும், நேருவும்,  நாராயணகுருவும், ஷங்கர்குஹா நியோகியும் தழைக்கமுடிந்தது. அதனால்தான் ஈவெரா ‘பெரியார்’ போன்ற மனிதர்களும் ஊடாட முடிந்தது. அதனால்தான் ஒற்றைப்படைச் சிந்தனையற்ற பலவிதமான பாதைகளையும் தரிசனங்களையும் உள்ளடக்கிய பாரத மதங்களில், பண்பாட்டுக்கூறுகளில் என்னைப் போன்ற நாஸ்திகர்களும் ஐக்கியமாக முடிகிறது. ஆகவேயும்தான் என் பாரதம் மஹோன்னதமானது.

-0-0-0-0-0-0-0-0-

பழமை என்பதாலேயே ஒன்று அருவருத்து வெறுக்கத்தக்கதாக, அல்லது போற்றத்தக்கதாக ஆகிவிடாது. புதுமை என்பதும் அதேபோலத்தான் – புதுமை என்றாலே புளகாங்கிதம் அடையவேண்டுமென்றோ (=போற்றுதல்) அல்லது பயமடையவேண்டுமென்பதோ (=வெறுத்தல்) இல்லை. நமக்கு முரணியக்கங்கள் தேவை. தொடர்ந்த பரிசீலனைகள் தேவை. ஸுக்ரிதி தேவை.

இன்னொன்று, நாம் பரிணாமவளர்ச்சியென்பதைத் தொடர்ந்து பேணி வருபவர்கள் என்பதால், தொடர்ந்து மேன்மையடைந்துவருபவர்கள் என்பதால்  – கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளவேண்டும் அல்லவா? நகைச்சுவையுணர்ச்சியை வளர்த்திக்கொள்ளவேண்டும் அல்லவா? நம்மைப் பார்த்து நாமே விழுந்துவிழுந்து சிரித்துக்கொள்ளவேண்டுமல்லவா?

இல்லாவிட்டால் சார்லிஹெப்டொ கொலைகார இஸ்லாமிய வெறியர்களுக்கும், அற்ப இஸ்லாமிக்ஸ்டேட்காரர்களுக்கும், ஸலாஃபி வஹ்ஹாபியர்களுக்கும் – மற்றவர்களுக்கும் (பெரும்பான்மை சாதா முஸ்லீம்கள் உட்பட) என்ன வித்தியாசம்?

-0-0-0-0-0-0-0-
என்னுடைய ஆழமான நம்பிக்கைகளில் ஒன்று:

 “Never ascribe to malice, that which can be adequately explained by stupidity.” (ஹேன்லன் கோட்பாடு / Hanlon’s Razor)

அதாவது – முட்டாள்தனத்தால் விளைந்தது என்கிற வகையில் முழுமையாகப் புரிந்துகொள்ளத்தக்க எந்த நிகழ்வும் – வெறுப்பின், வன்மத்தில், குயுக்தியின் பால் விளைந்தது எனக் கருதப்படக் கூடாது.

ஆகவே, என்னைப் பொருத்தவரை – பெருமாள்முருகன் பார்வையில், அவர் படையலில் – முட்டாள்தனமும், அரைகுறைத்தனமும் இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக வெறுப்போ வன்மமோ இல்லை. அவருடைய எழுத்து, சிடுக்கலில்லாத எளிமையான அடுக்குவரிசைப் பரிமாணங்களற்ற  இலக்கியமற்ற எழுத்து. மேலும் அவர் வெறுப்புமுதல்வாத ஆசாமியல்லர் – அவர் ஒரு மாஜி நக்ஸலைட் ஆகிவிட்டதனால்!

முக்கியமாக – அவர் நிச்சயம் ஒரு ‘பெரியார்’ அல்லர். அவரிடம் ஒரு இனம் புரியாத ஆழ்ந்த சுய/திருச்செங்கோட்டு வெறுப்பு இல்லை.

ஆகவே, பாவம் அவர்.

எனக்குத் தேவை: ஸுக்ரிதி.

தொடர்புள்ள பதிவுகள்:

7 Responses to “மாதொருபாகன், முட்டாள்தனம், குயுக்தி, ஸுக்ரிதி: சில குறிப்புகள்”

  1. க்ருஷ்ணகுமார் Says:

    அன்பின் ராம்

    நம்து செல்ல தமிள் கூரும் நல்ளுலகத்தில் எத்தினியோ பேர் இந்த விஷயத்தப் பிச்சி பீறாஞ்சிருக்கிறார்கள்.

    இந்த வ்யாசத்தில் ஒரு சமன்வயம் காணக்கிட்டுகிறது. தம்மாத்தூண்டுன்னாலும் சரி தெளிவு இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    இந்த ஸுக்ரிதி: சொல் தம்மாத்தூண்டுக்கும் கொறச்சலா ஸம்ஸ்க்ருதம் தெரிஞ்ச என்னைப் பாடாய்ப்படுத்தி விட்டது.

    மோனியர் வில்லியம்ஸ் அகராதியில் பார்க்க விழைந்தேன். (என்ன அகராதி!!!! இவனுக்கு என்று நீங்கள் நெனக்கலாம் :-) )

    sukRti – सुकृति என்ற சொல்லை மட்டிலும் இந்த அகராதி ஏற்கிறது.

    f. well-doing , good or correct conduct Pan5cat.
    [L=245519] acting in a friendly manner , kindness MW.
    [L=245520] virtue ib.
    [L=245521] the practice of religious austerities ib.
    (H3B) सु–कृति [L=245522] mfn. righteous , virtuous Cat.
    (H3B) सु–कृति [L=245523] m. N. of a son of मनु स्वारोचिष Hariv.
    (H3B) सु–कृति [L=245524] m. of one of the 7 ऋषिs in the 10th मन्व्-न्तर ib. BhP.
    (H3B) सु–कृति [L=245525] m. of a son of पृथु VP.

    அதன் பொருள்களாக அகராதி சுட்டுபவையை மேலே பகிர்ந்திருக்கிறேன்.

    sukruti …… sukrutiH………..sukRtiH…………. காணக்கிட்டவில்லை.

    தாங்கள் எழுதிய தமிழ் வடிவமான விஸர்க்கத்துடன் கூடிய ****ஸுக்ரிதி : ******** என்ற சொல் குழப்பம் தருகிறது. கூடவே அதன் பொருளும்.

    மாற்றுச் சிந்தனையுள்ள சித்தாந்தங்கள் ஒன்றுபட்டும் (ஆமாம்………உரையாடலில் சாம்யதைகளும் கூடக் காணக்கிட்டுகின்றனவே. ஒரேடிக்கா வேறுபாடுகள் மட்டிலும் என்று கிடையாது) மாறுபட்டும் தொடர்ந்து உரையாடி வந்துள்ளதை…………இன்று உரையாடி வருவதை தாங்கள் அழகாக விளக்கியுள்ளமை அருமை………….

    ஆனால் இந்த ஆதர்சமான செயல்பாட்டுக்கு தாங்கள் எடுத்தாண்ட *சொல்* ………… தவறா என்று தெரியவில்லை…………தவறோ என்று………. மோனியர் வில்லியம்ஸ் அகராதியில் பார்த்த படிக்கு…… தெளிவைத் தரவில்லை.


    • அய்யா க்ருஷ்ணகுமார்,

      நான் ஸம்ஸ்க்ருதத்தில் எழுதப் பட்டவைகளை எழுத்துக்கூட்டிப் படிக்கும் நிலையில் உள்ள ஒரு ஆரம்பநிலை மாணவன் தான். சரியா?

      நான் குறிப்பிடுவதும், நீங்கள் குறிப்பிடும் இதே सुकृतिயைத்தான். முதலில் இதனை ஸுக்ர்தி என எழுதலாமா என யோசித்து பின் ‘தமிழ்ப்படுத்தி’ ஸுக்ரிதி என எழுதினேன்.

      இப்போது ஒரு கதை: சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், ஒரு முறை ஸ்ரீ தரம்பால் அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, அவருடன் — கம்பி மாதிரி ஒல்லியாகவும், முகமெல்லாம் கருணையும், பாண்டித்தியமும் ஒழுகும் சித்பவன்காரர் ஒருவரும் (90+) இருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே மகாமகோ மேதைகள் எனச் சிலசமயம், நம்மால் சிலரை உணர்ந்துகொள்ளமுடியுமல்லவா? அவர் அப்படித்தான்.

      கூட இருந்த ஆஸாதி பசாவ் ஆந்தோலன்காரரான (=’சுதந்திரத்தைக் காப்பாற்று’ இயக்கம்) ராஜீவ் தீக்ஷித் http://en.wikipedia.org/wiki/Rajiv_Dixit போன்றவர்கள் ஸ்ரீ தரம்பால் அவர்களை என்னென்னமோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். சுவாரசியமான விவாதங்கள். காரத்தன்மை மிக்கவையும் இளமைத் துடிப்பால் விசிறப்பட்டவையுமான பல பார்வைகள், கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சுமார் 11 மணிக்கு ஏறக்குறைய எல்லோரும் கிளம்பிப் போனபோது – நாங்கள் மூவர் மட்டுமே இருந்தோம்.

      மறுபடியும் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ பற்றிப் பேச்சு கிளம்பியது. அதுவரை உன்னிப்பாக உரையாடல்களைக் கவனித்தாலும் ஒன்றுமே பேசாத அந்த பெரியமனிதர் – நடுக்கமற்ற, தெளிவான குரலில் சுமார் 4 மணி நேரம் போல – காலை 3 மணி வரை, தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். நான் கேட்ட சில அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ‘ஆஹா’ தருணங்கள். இந்தியாவைப் பற்றியும் பாரதத்தைப் பற்றியும் இன்னும் பல செறிவான பார்வைகள் கிடைத்தன. நான் கொடுத்து வைத்தவன்.

      அப்போது அவர் உபயோகித்த பல நுணுக்கமான பதங்களில் ஒன்று – सुकृति, நான் உபயோகப் படுத்தியுள்ள அர்த்தத்தில்.

      நான் இம்மாதிரி அர்த்தத்தில் ஸுக்ரிதியைக் கேள்விப்பட்டதில்லையே என்று சொன்னதற்கு, அவருடைய பதில் – ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு டிக்ஷனரி மூலமாக மட்டுமே பல விஷயங்களை அணுகமுடியாது அல்லவா? ஸம்ஸ்க்ருதத்தில் – பலவகைகளில், பேச்சுவழக்குகளில், தொன்மங்களில் இந்த குறியீட்டு விரிவாக்கல் (~symbol overloading) இருக்கிறது என்றார். காளிதாஸனிடமிருந்து ஒரு மேற்கோள் கொடுத்தார் என மங்கலாக நினைவு.

      ஆகவேதான் – நான் ‘பாரதத்தின் மைய நீரோட்டங்களான அணுகுமுறைகளில் ஒன்று – ஸுக்ரிதி: இதன் பலவிதமான அர்த்தங்களில் சில =’ என எழுதினேன்.

      ப்ரூவர்’ஸ் டிக்ஷனரி போல ஒன்று ஸம்ஸ்க்ருதத்திற்கு இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? http://books.google.co.in/books?id=MvAJAQAAMAAJ&source=gbs_similarbooks
      ஏன், நம் தமிழுக்குக் கூட இப்படிப்பட்ட ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும்தானே?

      குறிப்பு: இந்த சித்பவன்காரரைப் பற்றிப் பின்னொரு சமயம் எழுதுகிறேன்.

  2. Kishore Mahadevan Says:

    அருமையான கட்டுரை. நீங்கள் எழுதிய (நான் வாசித்த) முக்கியமான கட்டுரை என்று எனக்குத் தோன்றுகிறது.

    நான் திரும்பத் திரும்ப படித்த பகுதி — “பழமை என்பதாலேயே ஒன்று அருவருத்து வெறுக்கத்தக்கதாக, அல்லது போற்றத்தக்கதாக ஆகிவிடாது. புதுமை என்பதும் அதேபோலத்தான் – புதுமை என்றாலே புளகாங்கிதம் அடையவேண்டுமென்றோ அல்லது பயமடையவேண்டுமென்பதோ இல்லை. நமக்கு முரணியக்கங்கள் தேவை. தொடர்ந்த பரிசீலனைகள் தேவை”

    அன்புடன்
    கிஷோர்

  3. aekaanthan Says:

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த ஸுக்ரிதியினால்தான் இந்த தேசம் இன்னும் நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கிறது. இனியும் நிற்கும் எனத் தோன்றுகிறது. அவ்வப்போது காலை இழுத்து கவிழ்த்துவிட சில அல்பசக்திகள் முயன்றாலும்.

    சித்பவன்காரரைப்பற்றிய உங்கள் கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
    -ஏகாந்தன்


  4. கொஞ்ச நாட்களுக்கு முன்பு படிக்க நேர்ந்த ஒரு மேற்கோள்

    It is the mark of an educated mind to be able to entertain a thought without accepting it.

    Aristotle

    இதுதான் ஞாபகம் வந்தது மேலே கூறபடுவதுதானே ஸூக்ரிதி सुकृति


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s