மசாலாதோசையை முப்பத்தெட்டு ரூபாய்க்கு விற்று, சூட்டோடுசூடாக மோதி-ஒபாமா போன்றவர்கள் அவரவர்கள் நாட்டை, உலக நிலவரங்களை நிர்வகிப்பதைப் பற்றி, அணுசக்தியைப் பற்றி மேலான அறிவுரைகள், திடுக்கிடவைக்கும் கருத்துகள் பலவற்றை வாரிவாரி (ஆயிரம் வார்த்தைகளுக்குள்) தாராளமாக வழங்குவது எப்படி?

January 28, 2015

எப்படி?

எப்படி?

எப்படி?

… … இப்படித்தான்.

ட்ரூமன் கபோடி (Truman Capote) எனும் எனக்குப் பிடித்த எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர், திரைப்பட வசனகர்த்தா – ஜேக் கெருவாக்  (Jack Kerouac)எனும் எனக்கு ‘ஒரு மாதிரி’ பிடித்தமான இன்னொரு எழுத்தாளரின் எழுத்தைப் பற்றிச் சொன்னது, இன்று நினைவுக்கு வருகிறது:
That’s not writing, it’s typewriting.

இதைத் தமிழ்ப்படுத்தியெடுத்தால் நீர்த்துப் போய்விடும். :-(

கருத்துரிமை காப்போம், சரி. அதாவது, கருத்து சொல்பவர்களின் உரிமையையும் காப்போம், அதுவும் சரிதேன்! ஆனால், இந்த பாவப்பட்ட கருத்துகளின் உரிமைகளை நாம் ஏன் கண்டுகொள்ளவே மாட்டேனென்கிறோம்? ஏன் அவற்றை அல்லாடவைத்து துவைத்து எடுக்கிறோம்? ஏன் டமால்பணாரென்று கருத்துக்குண்டுகளை வீசிக்கொண்டேயிருக்கிறோம்? முன்னேபின்னே என்று ஒன்றுமேயில்லாமல், ஒரு தருக்கமோ சிந்தனையோ அல்லாமல், அனாதைகளாக, பரிதாபப்படத்தக்க ஜீவன்களாக ஏன் அவற்றை உலாவ விடுகிறோம்?

ஆக, கருத்துகுண்டர் தடைச் சட்டம் என ஒன்று வரவேண்டுமோ, என்ன எழவோ!

குறிப்பு:  வயிறு குலுங்க, கண்ணீர் தாரைதாரையாகப் பெருக, வாய்விட்டுச் சிரிக்க, அழுத்தங்களை நீக்கிக்கொள்ள – என் நடைமுறை வாழ்க்கை ஒத்துவராதபோது நான் நிபந்தனையற்றுச் சரணடையும் நகைச்சுவை இணையத் தமிழ்த் தளங்கள் இதுவரை – வினவு, விடுதலை, எஸ்ரா, லக்கிலூக். இதனுடன் !நிசப்தம் மிகப் பெருமையுடன் சேர்ந்து கொள்வதை, ஐவரானதை ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வேறு வழியில்லை.

வருங்காலங்களில் அவர் மேலும், மேன்மேலும் தட்டச்சு செய்ய எல்லாம் வல்ல, தற்போதைய பாபுலர் கடவுளான திருச்செங்கோட்டான் அருளட்டும் என, கிழக்கோட்டானாகிய நான் மனமாறப் பிரார்த்திக்கிறேன். ஆமென்.

Yes. I have been embraced by the dark. :-(

இம்மாதிரி தளங்கள் வேறேதும் இருந்தால், அவற்றைப் பரிந்துரைக்க முடியுமா? தயவுசெய்து??

நன்றி. வணக்கம்.

அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (31/12/2014 வரை )

7 Responses to “மசாலாதோசையை முப்பத்தெட்டு ரூபாய்க்கு விற்று, சூட்டோடுசூடாக மோதி-ஒபாமா போன்றவர்கள் அவரவர்கள் நாட்டை, உலக நிலவரங்களை நிர்வகிப்பதைப் பற்றி, அணுசக்தியைப் பற்றி மேலான அறிவுரைகள், திடுக்கிடவைக்கும் கருத்துகள் பலவற்றை வாரிவாரி (ஆயிரம் வார்த்தைகளுக்குள்) தாராளமாக வழங்குவது எப்படி?”


  1. எஸ்ரா ஒரு டமாசான ரைட்டர்தான். ‘எறும்புக்கும் காது கேட்கும் என்பது விந்தைதான் இல்லையா? யானையும் காலை உணவை அவசரமாகத்தான் உண்கிறது என்பது ஆச்சரியம் அல்லவா? யாவரும் வெயிலைக் குடித்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தபடியே இருக்கிறார்கள் இல்லையா?’ என்று அவர் நம்மைக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போது இல்லை, அல்ல என்று நெகேட் செய்து கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கிறது.

    நிசப்தம் இன்னொரு சக்கையான நடை.’கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள். நேரம் இல்லை. வார இறுதி. பக்கந்தான். போய்ப்பார்க்கலாம். டவுன் பஸ்ஸில் 2 ரூபாய் கட்டணம். ஆனால் பயமாக இருந்தது’ – என்றபடியாக போர்ஹேவுக்கு சவால் விடும் நடை.

  2. Kailash Says:

    உங்களுக்கு என்ன சார் பிரச்சினை ?


    • அய்யா கணேஷ்கைலாஷ்!

      அவர் வெகுதூரத்த்தில் இருக்கும் ஒபாமா, இஸ்ரேல் ஒழிக, முதலாளி ஒழிக, பன்னாட்டு நிறுவனம் ஒழிக, ஒசோன் ஓட்டை, பன்னாட்டு வர்த்தகம், அணுசக்தி என்றெல்லாம் மேலான கருத்துகளை வாரிவாரி வீசும்போது…

      … நான், வெறும் ஒரு சக தமிழனின் தட்டச்சு வேகத்தைப் பற்றி கருத்து சொன்னால், உங்களுக்கு என்ன சார் பிரச்சினை?

      அவருடைய நகைச்சுவை உணர்ச்சியை மெச்சித்தானே அய்யா கருத்துதிர்த்திருக்கிறேன்?

      இப்படிக்கு:

      முருகன்பழநி.
      பின்குறிப்பு: அல்லாமே கர்த்துரிமேதாம்பா!

  3. A.Seshagiri. Says:

    இப்போதைக்கு எனக்கு தெரிந்த ஒரே தளம் இதுதான்.சிரிப்புக்கும்,பொழுது போக்குக்கும் நான் கியாரண்டி! :-). இன்றைய பதிவில் பட்டையை கிளப்புகிறார்!

    https://mathimaran.wordpress.com/

  4. சரவணன் Says:

    //மற்றபடி, நான் ஜுவினைல் பார்வையுள்ளவன் என்றால் தாங்கள் தாராளமாக என்னை ஒதுக்கிவிட்டுச் செல்லலாம். ///

    மணிகண்டன் எழுதுவது அரைகுறை என்றால் நீங்கள் அவரை ஒதுக்கிவிட்டுச் செல்லலாமே!

    இணையத்தில் வேறு பதிவுகளா இல்லை? நீங்களே பரிந்துரை கேட்டதால் இதைத் தருகிறேன்.

    • A.Seshagiri Says:

      உண்மையிலேயே சூப்பர் தளம்.ஐயோ புல்லரிக்குது!


    • அய்யா சரவணன், படித்தேன். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எவ்வளவு பேர் இப்படி கிளம்பியிருக்கிறார்கள் என நினைத்தால் பயமாகவே இருக்கிறது. ஆகவே உங்களுக்கு நன்றியெல்லாம் கிடையாது, சரியா?

      இதையெல்லாம் படிப்பதற்கு உங்களுக்கு, கைவசம் நேரம் அதிகமாகவே இருக்கிறதோ? ;-)

      எல்லாம் என் நேரம்! வேறென்ன சொல்ல.

      எனக்கு என் செல்ல மணிகண்டர்களே போதும். போதும் என்ற மனமே புண் செய்யும் மருந்து. ஆளை விடும்!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s