இதுதாண்டா மாணவர் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ போராட்ட நினைவுச் சின்னம்!
February 8, 2015
2013 மார்ச் திங்கள் எட்டாம் தேதி! நினைவிருக்கிறதா?
… வரும் மார்ச் எட்டாம்தேதி – தமிழக மாணவக் குஞ்சாமணிகளின் யுகப்புரட்சி வெடித்துக் கிளம்பிய தினத்தின் இரண்டாம் ஆண்டு கருமாந்திர திவசம்! இதற்கு இன்னும் சரியாக ஒருமாதம்தான் இருக்கிறது!
இது – தினவெடுத்த மாணவமணிகள், தங்கள் தமிழீழக் கனவுகளைக் கைமுஷ்டிகளின் ஏந்தி குவலயபீடங்கள் போல ஆர்ப்பரித்துக் கிளம்பிய தினம்!!
தமிழக மாணவமறவர்கள், ஈழத்தைக் காப்பதற்காக ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் ஷாமியானாக்களில் வாடி வதங்கிய தினங்கள்!!!

“மானத் தமிழினம் தூங்கிவிடாது மாணவர் எழுச்சிகள் தூங்கவிடாது….” :-))) அப்படியா என்ன? ;-)
ஜெகஜ்ஜால ஃப்ராடுகளில் ஒருவரான – இன்டர்நெட்டையே கண்டுபிடித்தாலும், ப்லூட்டோ கிரகத்திலேயே பட்டம் பறக்கவிட்டாலும், அநியாயமாகக் கண்டுகொள்ளப்படாத ஆனால் மற்றபடி புகழ்பெற்ற, மேதகு ஷிவா அய்யாதுரை (= “தென் ஆப்பிரிக்காவில் நடந்த நிறவெறி நடவடிக்கைகளைக் கண்டித்து அந்த நாட்டு கொடியை எரித்தேன்!” “பி.ஹெச்.டி. செய்துகொண்டிருந்தபோது, ஈராக் நாட்டுக்குள் படைகளை அனுப்பிய அமெரிக்க அரசுக்கு எதிராக தன்னந்தனியாக போராடினேன்!” “நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட்!” :-)))) போன்றவர்கள் அமெரிக்காவில் பாதுகாப்பாக உட்கார்ந்துகொண்டு, தமிழ்மாணவர்கள் ஆயுதப்புரட்சி செய்யவேண்டும் என உசுப்பேற்றிக்கொண்டிருந்த மசுர்க்கூச்செறியும் யுகங்கள்!
நம் தமிழகத்தின் செல்ல அரசியல் கட்சிகளின் ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என ஒரு எழவும் புரியாமல் உழன்றுகொண்டிருந்த காட்சிகள்…
… … அய்யய்யோ! பாவிகளே!! இந்த எழவுகளையெல்லாம் மறந்தே விட்டீர்களா? நம் தமிழ்க் கூவான்களுக்கு வரலாற்றுணர்வே கிடையாதுதான்… கேவலம், இரண்டு வருடங்கள்முன் உலகத்தையே, பேரண்டத்தையே – தமிழகத்தில் இருந்துகொண்டு – சில நாட்கள்போல ஆட்டிப்படைத்த புரட்சித்தீயை எப்படித்தான் நாம் மறக்கக்கூடும்??எப்படித்தான் நாம் கடைந்தேறப் போகிறோமோ! :-(
-0-0-0-0-0-0-0-0-0-
சற்றொப்ப இரண்டுவருடங்கள் முன்னர், சென்னைமாநகரின் பெரும்புகழ் பெற்ற லயோலா கல்லூரியில். சில அதிதீனியால் வயிறுவீங்கிமூளைசிறுத்து உபாதையுற்ற மாணவர்கள் எட்டுபேர்போல, தங்கள் ஆரோக்கியத்துக்காக உண்ணாவிரதம் செய்தது, அரசியல்சரியின் காரணமாக, ஈழப் பிரச்சினைகளுக்கு ஆதரவாக அவர்கள் கிளம்பியதாகக் கருதப்பட்டது. அங்குள்ள பாதிரிமார்கள் (கவனிக்கவும்; இவர்கள் மாரொருபாதிகள் அல்லர்! ஆகவே புண்படவேண்டாம்!! ஆகவே, எதிர்ப்புண்படலும் வேண்டாம்!!!) பாவம், வேலைவெட்டியற்று இதற்குப் போய் பரிசுத்த தூபம் போட்டனர்.
பின்னர் நிலைமை கட்டுக்கடங்காமல் போய், மாணவமணிகள் கல்விட்டெறிந்தும் இன்னும் பலவாறாகவும் தமிழகமெங்கும் பொதுவாழ்க்கையைக் குலைத்தனர். எதை ‘கவர்’ செய்வது – எரிப்பதையா, எறிவதையா, கத்துவதையா, உதைப்பதையா, துரத்துவதையா, உண்ணாமலுண்ணும் விரதத்தையா – என, நம் செல்ல பப்பரப்பா தொலைக்காட்சி அலைவரிசைகள், பாவம், அல்லாடிப்போய்விட்டன.
ஆனால் வழக்கம்போல – தமிழ்த் திரைப்படச் சிகாமணிகள் தங்கள் திரைப்படங்களை வரிசையாக வெளியிட்டபோது – இம்மாணவர்கள் அனைவரும், தங்கள் போராட்டத்தட்டிகளைக் கடாசிவிட்டு, நிபந்தனையற்று தியேட்டர்களில் சரணடைந்து – அவர்கள் சில நாட்கள் போல மறந்து விட்டிருந்த தொப்புள் வழிபாட்டினைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். ‘தல பெருசா குஞ்சாமணி பெருசா‘ எனும் உலகத்தைக் குலுக்கும் தத்துவார்த்த உரையாடல்களில் மறுபடியும் ஈடுபட ஆரம்பித்தனர். குட்டி நடிகநடிகைகள் விடும் குசுக்களை முகர்ந்துகொண்டே மனோவசியம் செய்யப்பட்டு அவர்கள் பின்னாலேயே அணிதிரள ஆரம்பித்துவிட்டனர். ஸ்ஸ்ஸ்… அப்பாடா!
ஆக, ஒருவழியாக, நம் தகத்தகாய மாணவமணிகளின் ஈழ ஆதரவுப் போராட்டம், சில சில்லரைத் திரியாவரங்களுடன் கோலாகலமாக முற்றுப் பெற்றது. சுபம்.
தமிழீழமாவது, ஆங்கிலீழமாவது… போங்கடா! **^ & % 8-$ !~
நம் நெஞ்சு அடித்துக்கொள்கிறதே! என்ன செய்ய! :-((
ஸ்டூடென்ட் வெறியர்களால் கல்லடிபட்ட பள்ளிக்குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய நினைவெல்லாம் எப்படி மறக்கும், சொல்லுங்கள்? :-(((
-0-0-0-0-0-0-0-0-
ஆகவேதான் நாங்கள் ஸொஸொ என்ற ஒரு அமைப்பினைத் தொடங்கியிருக்கிறோம். (SOSO – Supporters of StudentProtest Organization – இது கருணாநிதி அவர்களின் செல்லமான டெஸோ-வின் அத்தை மகள். இப்படிச் சொல்வதற்குள்ளேயே, முறைப்பெண் ஸொஸொவுக்கு கன்னம் சிவந்துவிடுகிறது பாருங்கள், சிறுக்கி! மாமோவ், வொம் பொண்ணெக் கொடேய்!!)
ஸொஸொ – மாணவர் போராட்டத்தின் பசுமையான நினைவுகளைப் பேண, நம் சமகால வரலாற்றினைப் பதிவு செய்ய தொடங்கப்பட்டுள்ள, ஒரு பொறுப்புணர்வு மிக்க முயற்சி.
அமைப்பின் சர்வாதிகாப்பி பொறுப்பு – இதில் நல்ல பயிற்சியுள்ள இளைஞ்ஜரான ‘யுவகிருஷ்ணா‘ அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கௌரவ ஆலோசகர்: மேதகு துச்சாதனனன், பிஏபிஎல். நான் ஒரு அமைப்பை ஆரம்பிக்கிறேன் என்று சொன்னதும், சொல்லாமல்கொள்ளாமல் இவர், வெண்முரசிலிருந்து குதித்தெழுந்துவந்து ஸொஸொ-வில் ஐக்கியமாகி விட்டார். பாவம், ஜெயமோகன். :-(
சட்ட ஆலோசகர்கள்: ஸொஸொ-வில் அங்கத்தினராக முதலில் ஓடிவந்த பலர், பின்னர் திரும்பி ஓடிப்போய் நீதிமன்ற வளாகங்களில் படுபிஸியாக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மிச்சம்மீதியிருப்பவர்கள், சட்டை கிழியாதவர்கள் – குறைந்தபட்சம் சட்டை ஆலோசகர்களாவது வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
சரி. கூட ஒடிவந்து உழைத்தே தீருவோம் என ஜோதியில் ஐக்கியமாகியுள்ள அனைவருக்கும் நன்றி.இனிமேல் ஐக்கியமாகவிருக்கும் அனைவருக்கும், என் இதயத்தில் மட்டும்தான் இடம் உண்டு. என்னுடைய கண்கள் பனிக்க, இதயம் இனிக்க அப்பெரும் பதவிகளைத்தான் கொடுக்கமுடியும்.
ஆனால், தொண்டர்குண்டர் படையில் தாராளமாகச் சொறிந்துகொண்டு சேரலாம். செயல்வீரர்களுக்கு எப்போதுமே இயக்கத்தில் இடம் உண்டு. கவனிக்கவும்: ஒரு நாளைக்கு ரெண்டு ஹாஃபும் ஒரு பிரியாணியும் மட்டுமே கொடுக்க முடியும். நன்றி.
-0-0-0-0-0-0-0-
ஸொஸொ-வின் முதல் பெரிய செயல்பாடாக – மாணவப் போராட்டத்துக்காக தங்கள் வாழ்வில் சில நாட்களை ஈந்த மாணவக் குஞ்சாமணிகளுக்கு ஒரு நினைவகம் (= கல்லறை, சமாதி) கட்டலாம் என எத்தனித்துள்ளோம்.
இதற்குச் சரியான இடம் பார்ப்பதற்குள் எங்களுக்கு நாக்கு தொங்கி விட்டது. மெரீனா கடற்கரை முழுவதும் இனிமேல் போய்ச்சேரப்போகும் திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இடஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாம்! ஆகவே சாமானியன்களுக்கு, வரலாற்றுப் புகழ்பெற்ற நிகழ்வுகளுக்கெல்லாம் இடம் கிடையாது என்று சொல்லி விட்டார்கள், பாவிகள்.
டெஸோ சமாதிக்கு அருகில் ஸொஸொவுக்கு ஒரு இடம் கொடுக்கமுடியாதா எனக் கேட்டதற்கு – டெஸோ சமாதியிலிருந்து அதன் பிரேதம் அவ்வப்போது உயிர்ப்பிக்கப் பட்டு மேலேழுப்பப்படுமாதலால், அது அருகில் குழிதோண்டி புதைக்கப் படும் மற்ற பூதப்பிரேதங்களுக்கு பிரச்சினை உண்டுபண்ணும் என்கிறார்கள். :-(
காந்தி, ராஜாஜி என வரிசையாக நினைவகங்களுக்கு இடையே துருத்திக் கொண்டிருக்கும் அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிட்யூட் வளாகத்தையாவது எங்களுக்குக் கொடுக்க முடியாதா, நாங்களும் ‘மாணவர் போராட்டம்’ எனும் புதுவகைப் புற்றுநோய்க்குத்தானே சமாதி கட்டிக்கொண்டிருக்கிறோம் என்றால், எங்களை ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள்.
கடைசியில், சென்னையின் புகழ்வாய்ந்த (மகாமகோ மாறன்கள் ஒருகாலத்தில் ‘படித்த’ பேறு பெற்ற கல்லூரி அல்லவா இது?) லயோலா கல்லூரியிலேயே அதன் பாதிரிமார்கள் இடம் கொடுக்கிறேன் எனச் சொல்லிவிட்டார்கள், பாவம்.
-0-0-0-0-0-0-
நினைவகத்தின் உத்தேச படம், அவசரத்திற்கு இதுதான் கிடைத்தது – இதுதான் சமாதிக்கு மேல் வைக்கப் படவிருக்கும் ஒரு சராசரி ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்காரனின் மார்பளவு சிலை. (அழகாக வந்திருக்கிறது அல்லவா?)
மேற்கண்டதற்குக் கீழேயுள்ள வாசகங்கள் தமிழில் இருக்கும். “இங்கே மீளாத் துயிலில் இருக்கிறான், மாணவப் போராளி!”
நினைவக அமைப்பிற்கான நிதிக்கொடை கேட்டு அனுப்பப்படும் எங்கள் அமைப்பின் கோரிக்கையின் முதல் பக்கம்:
இதனை அடுத்த ஒரு மாதத்திற்குள் கட்டியெழுப்ப முடியாது என்று தெரியும். ஆகவே, சினிமா ஸெட் போட்டும், கட்டிடங்களுக்கே டூப் போட்டும் (நினைவிருக்கிறதா? கருணாநிதி அவர்கள் கட்டிய அக்கால சட்டசபைக் கட்டிடத்திற்காக, ஒரு சினிமா செட் போடப்பட்டது??) மகத்தான் திராவிடப் பணி ஆற்றியுள்ள தோட்டா தரணி அவர்கள், இதற்கும் ஒரு ஸெட் போட்டுக் கொடுப்பார் என விழைகிறோம். பின்னர் சாவகாசமாக நினைவகத்தைக் கட்டிக் கொள்கிறோம்.
நாள்: 8 மார்ச், 2015
இடம்: லயோலா கல்லூரி வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை
தலைமை: வெ. ராமசாமி, எம்ஏ, எம்எல்
ஆராய்ச்சி வெளியீடு: ஷிவா அய்யாதுரை பிஎச்டி (அமெரிக்கா)
“இன்டெர்நெட்டைக் கண்டுபிடித்ததே நான்தான்!“
பட்டிமன்றம் ஒருங்கிணைப்பு: சாலமன் பாப்பையா
“(அதற்கு முன்) இன்டெர்நெட்டை ஓளித்து வைத்தவன் திராவிடனா ஆரியனா?“
துபுக் கவிதை வெளியீடு: அறிவுமதி
“தன்மானத் தமிழினம் இனிக் குறட்டை விடாது!“
இன்னிசை நிகழ்ச்சி: ஏ ஆர் ரஹ்மானின் எனிக்மா பாடல்கள்
நன்றியுரை: எழுச்சித் டமிளர் சீமார்
நன்றி!
அனைவரும் வருக!
இந்த நினைவகக் கனவு நனவாக நிதிஉதவி தாரீர்! பொற்குவை தாரீர்!! (சினிமா ஸெட் போடுவதற்கும், திறப்பு விழாவுக்குமே இரண்டு கோடி ஆகுமாமே!)
ஆகவே, இந்தக் கருணைநிதி வழங்குவதற்கான மேலதிக விவரங்கள் இங்கே: நிசப்தம் பராக்..பராக்…
தொடர்புள்ள பதிவுகள்:
- ஹாஹ்ஹாவென்று எழுந்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ யுகப்புர்ச்சியின் ஒரு (ஒரேயொரு ?) சந்தோஷமான முடிவு! 06/01/2014
- ’ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ அல்லது முட்டை – இறந்த காலத்தின் நிகழ்காலக் குறிப்புக்கள் 08/07/2013 – 11:18
- மொதல்ல ஒங்க வகுப்பறைய பெருக்கிச் சுத்தம் பண்ணுங்கடா 06/04/2013 – 10:38
- மொதல்ல மாட ஓட்டக் கத்துக்குங்கடா, அப்றம் புத்தபிக்ஷுக்கள தெர்த்தலாம்… 03/04/2013 – 13:07
- மாணவர் போர் ஆட்டம் – பின்னூட்டம், விளக்கம்++ 30/03/2013 – 11:32
- போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் 29/03/2013 – 13:14
- மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு 19/03/2013 – 22:12
- போங்கடா நீங்களும் ஒங்க பொறநானூறும்… 15/03/2013 – 12:49
February 8, 2015 at 19:56
ம்…………..பூவண்ணன் சார் வந்து விட்டார் என்ற நெனப்பே இல்லாமலாகி விட்டது உங்களுக்கு.
நெம்ப தெகிரியம் ராம்.
நீங்க கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே விட்ட சவாலை அவர் ஜமாளிக்கப் போறார்னு எனக்கு நிச்சயமாத் தெரியும்.
இப்ப மேஜரா ராணுவத்தில பூவண்ணன் சார் சேவ செய்யுறதுக்கு ஆதாரமெல்லாம் அவர் மைனரா இஸ்டூடண்டா இருந்த போது செஞ்ச வார் டேன்ஸ் ( = போர் ஆட்டம்) என்று உங்களுக்கு வெவரமா சொல்லப்போறார். அப்பதான் உங்களுக்கு இந்த வார் டேன்ஸ் பத்தி கொஞ்சமாவது பிரியும்.
முகம்மது பின் துக்ளக் சினிமாவில் ……….. சோ வுடையை ஒரு வசனம் வரும்……….
நீங்கள் எதற்கு அமெரிக்கா போகிறீர்?
அவர் சொல்லுவார்………… நான் அமெரிக்கா பார்க்க வேண்டாமா?
அது போல இந்த டம்ளர்களுடைய வார் டேன்ஸ் பற்றி யோசித்தால்………..
டம்ளர்களுக்கு பொளுது போக வேண்டாமா?
ஒரு முப்பது நாப்பது வருஷம் மின்னாடி………. சாணி பேப்பர் மாதிரி………… ஒரு மக்கலான காயதத்தில் அச்சாகி வந்த ராணி சஞ்சிகையில்……… குரங்கு குசலான்னு அடிக்கடி ஒரு கார்ட்டூன் வரும்……….அதில் ப்ரபலமான ஒரு கார்ட்டூன்
தமிழா உறங்குகிறாயா………….கொர்………… அப்படீன்னு………..
ம்……… உறங்கும் மறட் டம்ளரை எழுப்பி விடுகிறீர்கள். கதி கலங்குகிறது
February 8, 2015 at 23:31
ஏனென்று தெரியவில்லை – நேனோபாலிடன் தளத்தில் இருந்த ஷிவா அய்யாதுரை பற்றிய விமர்சனத்தை, இன்று நீக்கி விட்டார்கள்.
ஆனால் அந்த விமர்சனத்தின் ஒரு பிரதி இங்கே கிடைக்கிறது:
https://web.archive.org/web/20130912050711/http://nanopolitan.blogspot.in/2009/12/unravelling-of-shiva-ayyadurai.html
படித்து இன்புறவும்.
February 9, 2015 at 10:04
//அங்குள்ள பாதிரிமார்கள் (கவனிக்கவும்; இவர்கள் மாரொருபாதிகள் அல்லர்! ஆகவே புண்படவேண்டாம்!! ஆகவே, எதிர்ப்புண்படலும் வேண்டாம்!!!)//
இது தனிமனிதப் புண்படும் உரிமைக்கு எதிரானது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்தே புண்தோன்றிய மூத்த குடிகளான தம்ளர்களுக்கு இழைக்கப்படும் பேரநீதி. நீங்கள் வடவர்களுக்கு எதிராக நாம் தம்ளர்கள் எலுச்சிப் படை சீமார் தலைமையில் திரலும் என்பதைத் தினவெடுக்கும் தோல்களுடன் (இஸ்கின் இல்லபா, ஸோல்டர்) அறிவிக்கிறேன். .
தவிர புண்படும் உரிமை ஆணையத்தில் தங்கள்மீது புகாரும் செய்ய்யப்படும் என்று எச்சரிக்கிறேன்.
February 9, 2015 at 10:58
SUPER
February 11, 2015 at 14:14
Sirichu sirichu vayiru valikkudhu😃