…ஔரங்கசீப் புராணம்
July 10, 2016
முதலில் சிலபல விஷயங்களைத் தெளிவுபடுத்திவிடவேண்டும்: ஔரங்கசீப் எனப் பொதுவாக அறியப்படுபவர் மலினமான, சீப் உற்பத்தி சீனாக்கார சாமான்*.
இடக்கை வலக்கை வழுக்கை பொக்கை. Read the rest of this entry »
அய்யோ! நான் இளையராஜாவைச் சில்லுண்டித்தனமாக வம்புக்கிழுக்கும் – அவருடைய அடிப்பொடிகளைச் சீண்டும், ஒருமாதிரி ஏஆர்ரஹ்மானுடைய ரசிகக் குஞ்சாமணியல்லன். கோபப்படாதீர்கள்! நானும் பலப்பல இளையராஜா பாடல்களை என்னையும் அறியாமல்(!) பாடிக்கொண்டு தாளம்போட்டுக்கினு தாடிவுட்டுக்கினு சென்றுகொண்டிருப்பவன்தான். Read the rest of this entry »
முன்னமேயே ஒருதடவை இந்த டேட்டா ஸையின்டிஸ்ட் ப்ரக்ருதியின் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பர’ உளறல்களைப் பற்றி எழுதியிருந்தேன். பின்னர் சே என்று விட்டுவிட்டேன். Read the rest of this entry »
பெருவெடிப்புக் கோட்பாடு (‘The Big Bang Theory’) எனும் அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்மூலம், கமுக்கமாகத் தமிழைப் புகட்டுவது எப்படி?
April 19, 2016
எப்போதோ 2007ல் இத்தொடர் ஆரம்பித்து விட்டாலும், என் குடும்பத்தில் ஊடாடும் ஊடகஎதிர்வாத வெறியின் காரணமாகவும், டீவி இல்லாமல் வாடிவதங்கும் தன்மையினாலும் – 2015 ஜனவரி வாக்கில் எங்களுடைய செல்லங்களான சில அமெரிக்க என்ஆர்ஐ எழவெடுத்தவர்கள் மூலமாகத்தான், வழக்கம்போலவே மிகத்தாமதமாக இதனைப் பற்றித் தெரிந்துகொண்டோம். பின்னர் எங்கள் மகளின் நண்பர்களின்மூலமாகவும் பரிந்துரைகள் வந்தன.
அமெரிக்க மகாமகோசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அரவிந்தன்கண்ணையன் மஹராஜ் அவர்களின் மேலான சமூகத்துக்கு…
April 17, 2016
எனக்கு இது மாளா ஆச்சரியம் தரும் விஷயம். ++ அரைகுறைகளின் சொம்புதூக்குதல்களையும் அவர்களுடைய அற்ப மலைப்பையும் அவதானிக்கும்போதெல்லாம் ஏற்படும் அலுப்பும் சலிப்பும், ஊக்க போனஸ்.
மன்னிக்கவும்; ஆச்சரியக்குறி ஸ்டாக் தீர்ந்துவிட்டது, இந்த எழவெடுத்த பதிவை எப்படி எழுதி முடிக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை. :-( இதைப் படிப்பவர்கள் மின்னஞ்சலில் தலா 1024 ஆச்சரியக்குறிகளை அனுப்பிவைக்கவும். நன்றி. Read the rest of this entry »
நம்மைப் போன்ற பாவப்பட்ட சாதாரணத் தமிழர்களுக்குத் தெரியும், திராவிடர்கள் என்றாலே அனைத்து எதிர்மறைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கிய வெறும் வெற்றுப் பொறுக்கி கும்பலினர் என்று. தமிழகத்தை, அதன் போற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளை, நம் தமிழை, தமிழத்தை — துப்புரவாக அழித்தொழிக்கத் தொடர்ந்து முயல்பவர்கள் என்று… Read the rest of this entry »
குறுங்குறிப்புகள் – சில குறுங்குறிப்புகள் (1/n)
March 29, 2016
பொதுவாக, எந்தக் கட்டுரையையாவது எழுத ஆரம்பித்தால், எனக்கு ஆயிரம் வார்த்தைகளைத்தாண்டாமல் இருக்கவே முடியாது. ஆங்கிலத்தில் எழுதுவதென்றால், இது இன்னமும் அநியாயத்துக்கு நீளமாகி விடுகிறது. இந்த லட்சணத்தில் நான் எழுத்தாளனே அல்லன், இருந்தாலும் இப்படி ஒரு அரிப்பு என, என் செல்ல #எஸ்ரா போல, எனக்கு நானே நமட்டுச் சிரிப்புச் சிரித்துச் சொல்லிக் கொள்கிறேன். ஊக்கபோனஸாக, தமிழும் ஆங்கிலமும் என்னபாவம் செய்தனவோ என்கிற எண்ணத்தையும் என்னால் தவிர்க்கமுடியவில்லை! ;-) Read the rest of this entry »
அறியாக் குழந்தைகளை மதராஸாக்களில் சேர்த்து, அவர்களை மதவெறித் தற்கொலைக் கொலைகாரர்களாக மாற்றுவது எப்படி – சில குறிப்புகள்
February 3, 2016
டெட்.காம் இணைய தளத்தில் உள்ள 8 நிமிடங்களே ஓடும் ஒரு சிறு வீடியோ ஒன்றின் ட்ரேன்ஸ்க்ரிப்ட்-ன் (உரையாடல்/பேச்சு/வசன வடிவம்) தமிழ்மயமாக்கம் இது.

[ஷர்மீன் ஒபைத்-சினாய்]
the imfartance of being aravindan kannaiyan
January 28, 2016
The first part here: the importance of being aravindan kannaiyan.
The thing is that, slander happens rather too easily in the world of Tamil Literature, what with its half-baked & clueless charlatans running amok – but to set it right, to show the twisted bent of mind behind the slander, takes a bloody loooong essay.
#பெரியார்புதைந்தமண்: சில குறிப்புகள் (2/n) + திபெ கமலநாதன், வீரமணி…
December 24, 2015
பெரியார் நாமம் வாழ்க! பக்காத் திராவிடர்கள், சாதா தமிழர்களுக்குத் தொடர்ந்து போடும் நாமம், மேலதிகமாக வாழ்க! :-(
இனி இரண்டாம் பகுதி…
-0-0-0-0-0-0-0-
‘circular ruins’ vs ‘taare zameen par’ & ‘tinkle’
December 1, 2015
Circa 1972/73, as a little boy, I read a Tamil translation of this mind blowingly beautiful short story of Jorge Luis Borges (JLB) – one of the finest littérateurs that inhabited the earth, an Argentinian – a remarkable essayist and a fine poet too.
This translated ‘circular ruins’ was Vattach-chidhaivugal (=வட்டச் சிதைவுகள் – made available on the web by that fellow-curmudgeon Vimalaadiththa Maamallan, hat tip to him) – artfully and faithfully done-up by a remarkable Srilankan Tamil – Dharumu Aroop Sivaramu (AKA Pramil Banuchenran, Bramil … …) – who, in my opinion, is/was one of the finest littérateurs too. I remember to have been completely bowled over by the translated story and recollect that I tried to hunt for more of JLB’s outputs – not with much success though, as my world then was limited to whatever that was available in the local government lending libraries. Read the rest of this entry »
ஃபில் கேம்பியன்: இஸ்லாமிக்ஸ்டேட் அட்டூழிய கும்பலுடன் பொருதுவது எப்படி? (+ சில கோரிக்கைக் குறிப்புகள்)
October 20, 2015
பெஷ்மெர்கெ (Peshmerga), ஒய்பிஜி (YPG), ஒய்பிஜே(YPJ) போன்றவை – தகுந்த பயிற்சியும், யுத்த தளவாடங்களும், ஏன், உண்ணஉணவும் கூடச் சரியாகக் கிடைக்காமல் இருந்தாலும் கூட — ஈவிரக்கமற்ற பொறுக்கிமுதல்வாத அயோக்கிய இஸ்லாமிக்ஸ்டேட் விஷத்தை, தொடர்ந்து தளராமல், சளைக்காமல் – உலகத்து மக்கள் அனைவர் சார்பாகவும், ஏன், நம் இந்தியத் தமிழர்கள் சார்பாகவும் கூடப் போராடும் மனோதைரியமும் ஞானவைராக்கியமும் படைத்தவை! இவை கர்ட் அமைப்புகள் என்ற உண்மையை நான் மறுபடியும் மறுபடியும் சொல்லத் தேவையில்லை…
தர்மயுத்தம் எனவொன்று இருக்குமா என்று யாராவது கேட்டால், வெகு தைரியமாக தயக்கமேயின்றி நான் சொல்வேன்:
அது கர்ட் மக்கள் திரள்கள், தங்கள் சுய நிர்ணய உரிமைக்காகச் சில நூற்றாண்டுகளாக இரான், இராக், ஸிரியா, துருக்கி பிரதேசங்களின் பயங்கரவாத அரசாங்கங்களுடன், ஸவுதிஅரேபிய வஹ்ஹாபியத்துடன் — இப்போது முழு முனைப்புடன் வஹ்ஹாபி-ஸலாஃபி இஸ்லாமிய வெறியர்களுடனும் தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கும் பன்முனை யுத்தம்தான். Read the rest of this entry »
ஸாஹித்ய அகா டம்மிகளின் டமார பஜனை (அல்லது) பின்நவீனத்துவப் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது!
October 12, 2015
முதலில்… ஒரு ரகசியச் செய்தியை பகிரங்கமாக்குகிறேன்: இந்த விருதுத் திருப்பலியக்கப் பன்றிக் காய்ச்சலை ஆரம்பித்து வைத்தது – இதுவரை பலப்பல கலைமாமணி விருதுகள் பெற்றிருக்கும் பலப்பலர் தங்கள் பரிசில்களை – தமிழக முதலையமைச்சரின் அலுவலகத்தை நோக்கிக் கடாசியமையே! (இதற்குக் காரணம் – ஐநா சபை அவர்களுக்கெல்லாம் நொபெல் பரிசு கொடுக்கச் சிபாரிசு செய்யவில்லை என்கிற திடுக்கிடவைக்கும் துரோகம்தான்!)
நீல்ஸ் ஹென்ரிக் டேவிட் போர் (Niels Henrik David Bohr – 7 அக்டோபர் 1885 – 18 நவெம்பர் 1962) என்னுடைய ஆதர்சங்களில் ஒருவர்.
இன்று அவருடைய பிறந்தநாள். :-)
‘டாம் மாமா’ புர்ராமகிருஷ்ணர்
September 25, 2015
(எச்சரிக்கை: கீழ்கண்ட சிறுகதையைக் குறித்த மிகமுக்கியமான குறிப்பு, கதையின்/தங்களது முடிவில் இருக்கிறது)
ஒரு பிற்பகலில் ஸஹாரா போய் இறங்கினேன். மணல் தெரியாத அளவு பகல் நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல வெயில். உள்ளாடையை மீறி உடம்பு வியர்த்த கொண்டது. பாலை வனங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன.
Read the rest of this entry »
strongly recommended: a book by the mother + a music album of joy chowdhury et al
September 17, 2015
First things first, dear fellers and fellerinas…
Let me upfront say that, I am big sucker for very beautifully produced and content rich books – and of course – soulful, deep, lilting music.

