சர்வ நிச்சயமாக ஏன், சிந்துசமவெளி நாகரிகம் என்பது திராவிடத்தனமானது அல்லவேயல்ல: ஆதாரம்

April 3, 2016

நம்மைப் போன்ற பாவப்பட்ட சாதாரணத் தமிழர்களுக்குத் தெரியும், திராவிடர்கள் என்றாலே அனைத்து எதிர்மறைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கிய வெறும் வெற்றுப் பொறுக்கி கும்பலினர் என்று. தமிழகத்தை, அதன் போற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளை, நம் தமிழை, தமிழத்தை — துப்புரவாக அழித்தொழிக்கத் தொடர்ந்து முயல்பவர்கள் என்று…

நமக்கு மேலும் தெரியும்: திராவிடம் எனும் கருத்தாக்கமே கடந்த 150+ வருடங்களில், க்றிஸ்தவ மிஷனரிகளாலும், வெள்ளைப் பரங்கித் துரைமார்களாலும், நம்முடைய சொந்த பிச்சைக்கார எட்டப்பர்களாலும் – பிரித்தாளும் சூழ்ச்சிக்காகவும், மதமாற்ற முயற்சிகளுக்காகவும் தொடர்ந்து பரப்பப்பட்டது, இன்னமும் பரப்பப்படுகிறதும்கூட என்று!

நம்மில் கொஞ்சமேனும் சிந்திப்பவர்களுக்கு, சுயசிந்தனை உடையவர்களுக்கு –திராவிட இயக்கம் என்பதே – பிரிவினை வாதத்துக்கும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி ஐம்பெரும் கொள்கைகளை நிலை நாட்டி, மக்களை அறியாமையில் புகுத்தி, அவர்களுடைய கலாச்சார அறம் சார்ந்த விழுமியங்களைக் குதறி, படுஅசிங்கமான ஜாதிவெறியைக் கமுக்கமாகப் பரப்பி கோர தாண்டவம் ஆடவும் பயன்படும், ஒரு பொறுக்கி அரசியல் இயக்கம் என்பதும் தெரியும்.

திராவிடர்களுடைய ஐம்பெரும் கொள்கைகள் என்றாலே நமக்குத் தெரியும், அவை – குடியும், கூத்தும், கொள்ளையும், ஜாதிவெறியும், பொய்மையும் மட்டுமேயென்று!

பாரதத்துக்கே மிக நன்றாகத் தெரியும் – இந்த திராவிடர்களை விட்டால், அவர்கள் தமிழர்களை மட்டுமல்ல, நம் இந்தியாவையே துப்புரவாக ஒழித்துவிடுவார்கள் என்பதும்… ஏமாந்தால் உலகத்தை உருட்டியெடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள் என்பதும்…

-0-0-0-0-0-0-

இந்த அழகில், இவர்களில் சில திராவிடலை அகடெமிக் அரைகுறைகள்,  சந்தில் சிந்து பாடிக்கொண்டு, சிந்துசமவெளி நாகரீகம் என்பது திராவிடம் சார்ந்தவொன்று என்றெல்லாம் உணர்ச்சிப் பெருக்குடன், ஒரு விதமான ருசுவும் இல்லாமல், ஏகோபித்த  பீலா வுடுகிறார்கள். இப்படியே தொடர்ந்து உளறிக்கொட்டிக்கொண்டு, உலகெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டு – உன்னதங்கள் பலவற்றை எட்டிய சிந்துசமவெளி நாகரீகத்துக்கே உலகளாவிய அவப்பெயரை வாங்கிக்கொடுத்தே தீருவோம் என்கிறார்கள்!

…அது மட்டுமல்ல, தமிழகத்தின் வரலாற்று மேன்மையை திராவிடத்தனமாக  நிலைநாட்ட, இப்படிப் பொய்மைச் சப்பைக்கட்டுகளைக் கட்டி,  நம்மைப் போன்றவர்களை, தமிழர்களை — மாளா வெட்கத்தில், கூச்சத்தில் நெளிய விடுகிறார்கள்… பாவப்பட்ட டமில்ட் டாய் இனி மெல்லச் சாவாள்!

இம்மாதிரிக் கோமாளிக் கோமகன்களின் அரைவேக்காட்டு உரைகளை ஒன்றிரண்டு முறை நேரில் கேட்ட துர்பாக்கியவானாகிய நான், உடனடியாகச் சீதபேதி எடுத்து ரத்த வாந்தி வந்து, ஏறக்குறைய செத்தே போயிருக்கிறேன் என்கிற ஆதங்கத்தில்தான் இப்பதிவை எழுதுகிறேன்.

-0-0-0-0-0-0-

…இச்சமயம் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது; சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பிரதான வாயிலுக்கு வலதுபுறத்தில், ஸர்தார் படேல் சாலையை ஒட்டி, சிலபல  கட்டிடங்களும், உருவங்களும், பதுமைகளும் (shoddy art installations, meant only for pigeon shit?)  ‘தமிழகக் கலாச்சார ஆணிவேர்களையும், நீண்ட நெடிய பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதமாக‘ அமைக்கப்பட்டுள்ளன.  ஆகவே தற்கால கலாச்சார வறட்சியையும் பிரதிபலிக்கும் படி அசிங்கமாகவும்…

இது பற்றி நான் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் தான் அறிந்துகொண்டேன்; ஏதோவொரு விஷயம் தொடர்பாக அப்பல்கலைக்கழக வளாகத்திற்கு  என்னைக் கூட்டிக்கொண்டு போயிருந்த நண்பர்தாம் எனக்கு இந்த கந்தறகோள எழவைக் காண்பித்து இடஞ்சுட்டிப் பொருள் விளக்கினார் – இதற்காக அவருக்கு நான் நன்றி சொல்வதா இல்லை ரெண்டு சாத்து சாத்துவதா என்பதை நான் இதுவரை முடிவு செய்யவில்லை.  :-(

சரி, அங்கு பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பெட்டகங்களில் சில – மாமல்லபுரம் அலைவாய்க்கோயிலின் அளவு குறைக்கப்பட்ட மாதிரியும் (8:1 விகிதம்?) – அதன் முன்னர் வடக்கிருந்து கொண்டிருக்கும், மொஹெஞ்சொ-தாரோ பகுதியில் கிடைத்த ‘பூஜாரி-அரசன்’ மாதிரி பதுமையும்… பிந்தைய பதுமை, அலைவாய்க்கோயில் வளாகத்திலேயே இருக்கிறது போல அமைக்கப்பட்டுள்ளது.

சரி. எனக்கு இதனால் எங்கே எரிகிறது? இதனை ஏன் நான் ‘இந்திய ஒருமைப்பாட்டின் சின்னமாக’ எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம்.

என் பதில்: நண்பரே, இதில் ஒரு மகாமகோ ஜோடனை இருக்கிறது. பொய்மை இருக்கிறது. அற்பத்தனம் இருக்கிறது. வரலாறு இருக்கிறது. கேவலம் இருக்கிறது.

-0-0-0-0-0-0-

இந்த ‘பூஜாரி-அரசன்’ பதுமையின் சில விவரங்களைப் பார்க்கலாம்:

சிந்துசமவெளி நாகரீகத்தின் சின்னங்கள், அகழ்வாராய்ச்சியில் சேகரம் செய்யப்பட்டவை, புத்துருவாக்கம் செய்யப்பட்டவை என, பலப்பல விஷயங்கள் அழகாகப் போற்றிப் பாதுகாக்கப்படும் பாகிஸ்தானிய கராச்சி அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. (இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் பலப்பல விஷயங்களை நான் கேள்விப்பட்டிருந்தாலும், இதுவரை எனக்கு அங்கே சென்று சொக்கிப்போக லபிக்கவில்லை)

அந்தப் பதுமையின் படம்:
Screenshot from 2016-04-03 09:35:25

அதன் பக்கவாட்டு, பின்பக்கத் தோற்றங்கள்: (மன்னிக்கவும்; இப்படங்களில் சொல்லப்படுவதுபோல் நான் இப்படங்களை எடுத்துக் கையாள்வதற்கு ஒரு எழவு அனுமதியும் பெறவில்லை)

Screenshot from 2016-04-03 09:35:50
இப்பதுமை பற்றிய மேலதிக விவரங்கள் – அதே பக்கத்திலிருந்து எடுத்தவை:
Material: white, low fired steatite
Dimensions: 17.5 cm height, 11 cm width
Mohenjo-daro, DK 1909
National Museum, Karachi, 50.852
Marshall 1931: 356-7, pl. XCVIII

ஸர் ஜான் மார்ஷல் அவர்களுடைய குழுவினரால் 1931ல் அகழ்வு செய்யப்பட்டு, தற்போது  கராச்சி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் இந்தப் பதுமையின் உயரம் 17.5 cm – பதினேழரை சென்டிமீட்டர் மட்டுமே; அதாவது, இந்தச் சிலை அரையடி போலத்தான் உயரம் கூட இல்லாதது – உள்ளங்கை+கைவிரல் அளவு உயரம் மட்டுமே!

ஆனால், இது சுமார் 5 அடி உயரம் போல, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும், ஏறத்தாழ அலைவாய்க் கோயிலின் மாதிரியில் முக்காற்பங்கு அளவு இருக்கிறது… அலைவாய்க்கோயிலைச் சுருக்கியது போல இதுவும் சுருக்கப் பட்டிருந்தால், இந்தப் பதுமை வெறும் இருவிரற்கடை அளவு (சுமார் இரண்டு சென்டிமீட்டர் அளவு) மட்டுமேதான் இருக்கவேண்டும்?

இது தேவையா?

இதன் தாத்பரியம் என்ன, இப்படி ஒரு கேளிக்கை உருவகங்களை பிரகடனப் படுத்துவதன்மூலம் இந்தத் திராவிடர்கள் என்னத்தான் சொல்லவருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்: (அங்கு கூட்டிக்கொண்டு சென்ற நண்பருடைய கருத்தும் ஏறத்தாழ இதுதான்)

1. சிந்து சமவெளி நாகரீகம் என்பது திராவிட(!) நாகரீகத்தின்(!!) ஒரு அங்கம்.
2. திராவிடத்தின் கீர்த்தி பெரிது.
3. வடக்கு தேய்கிறது, தெற்கு வாழ்கிறது.
4. வடக்குக்கு முன்பே தெற்கு உருவாகி விட்டது.
5. உலகத்தின் முதற் கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரம்.
6. எங்களுடையது உங்களுடையதை விடப் பெரிசு. நன்றி.

ஹ்ம்ம்… என்ன கேவலமான விஷயம் இது! எம்மாதிரி அசிங்கமான அயோக்கிய மோசடி இது! எப்படிப்பட்ட கயமைத் திரித்தல் இது!

ஏன், இப்படி ட்யூமர்/கேன்ஸர் பெருவியாதிகள்/ஆரோக்கியக்கேடுகள் போல வீங்கடிக்கப் படவேண்டிய நியதியிலா இருக்கிறது, தமிழகத்துப் பாரம்பரியப் பின்புலத்தின் தன்மை? இப்படித் தேவையற்று வீங்கடிக்கப்படுபவைகள், மன நோய் காரணமாகவே மட்டுமே ஏற்படும் சீழ்பிடித்த பலூன்கள் அல்லவா?

தமிழின் நெடிய பாரம்பரியம் என்பது — போயும்போயும் அற்ப திராவிடர்களால் இப்படி உளுத்த கட்டைகளை வைத்து முட்டுக் கொடுத்துக்கொண்டு நிற்கவைக்க வேண்டிய அளவிலா இருக்கிறது?

-0-0-0-0-0-0-

சிந்துவெளி நாகரீகத்துக்கும் திராவிடர்களுக்கும் ஒரு எழவு தொடர்புமில்லை.  இந்த திராவிட ஜோடனைக்கு ஒரேயொரு காத்திரமான வரலாற்றுச் சான்றோ, கறாரான அறிவியல்சார் அறிதல்களோ, அகழ்வாராய்ச்சிப் புரிதல்களோகூட இல்லவே இல்லை; இருக்கவும் முடியாது! ஏனெனில், திராவிடர்கள் எனும் அயோக்கிய கொள்ளைக்கூட்டத்தினர், கடந்த 150 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்டு மேலெழும்பி, தமிழகத்தைக் கீழே அதலபாதாளத்தில் தொடர்ந்து தள்ளிக்கொண்டிருக்கும் அற்ப ஜந்துக்கள்தாம். ஆனால், சிந்துவெளியானது, குறைந்த பட்சம் 5000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே இயங்கிய ஒன்று. நன்றி.  தமிழர்களின் நாகரீகமும் அதேபோல, சில ஆயிரம் வருட,  பெரும் அழகிய பாரம்பரியம் உள்ள ஒன்றுதான். மீண்டும் நன்றி.

திராவிடர்கள் ஒரு தனிப்பட்ட ‘இனம்’ சார்ந்தவர்கள் அல்லவேயல்லர். ஆனால், அவர்கள் வெறும் ஈனம் மட்டுமே சார்ந்தவர்கள்.

ஆரியர்களும் ஒரு தனிப்பட்ட ‘இனம்’ சார்ந்தவர்கள் அல்லவேயல்லர். அப்படி ஒரு இனம்(!) இருந்ததேயில்லை; திராவிடர் எனும் பொய்மைக் கட்டமைப்புக்கு முட்டுக்கொடுப்பதற்காக, ஆரியர் எனும் பகுப்பு பரப்பப் பட்டிருக்கிறது; இப்படித் திரியாவரங்களைச் செய்தது பாதிரிகளும், வெள்ளையர்களும் + அவர்களின் அடிவருடி நக்குதல்முதல்வாதிகளான (=திராவிடர்கள்) நம் சொந்தங்களும்தான்.

அந்த ஆரிய பலூனும் –  ஆரியப் படையெடுப்பு என்று வாயோர நுரைதள்ளலுடன் ஆரம்பித்து இக்காலங்களில் ஆரியப் புலம் பெயர்தல் என்று தேய்ந்து கொண்டிருக்கிறது. ரொமிலா தாபர்களுக்கும், இர்ஃபன் ஹபீப்களுக்கும் மிக்க நன்றி. ஆனால் இந்தப் பலூனின் காற்றும் காலப்போக்கில் இறங்கிவிடும்தான்.

…தற்போதைய கறாரான உயிரியல் ஆராய்ச்சிகளின் படி, கடந்த 60,000 ஆண்டுகளில் எந்தவொரு சொல்லத்தக்க ‘வெளிப் பிரதேசத்து’ மரபணுக் கூறும், பாரத மக்களின் மைய நீரோட்ட மரபணுக்கூறுகளின் அங்கமாக உட்புகவில்லை!​ திராவிடமாவது, வெங்கயமாவது, ஆரியப் படையெடுப்பாவது!  வரும் காலங்களில், ‘ஜாதி’ பரிணாமம் பற்றிய ஓரளவுக்குச் சரியான புரிதல்களும் நமக்கு வாய்க்கும் எனத்தான் படுகிறது.

(ஒரு விண்ணப்பம்: சென்னை மாநகரில் இருக்கும் யாராவது இந்த அண்ணாபல்கலைக்கழக எழவினைப் படம் எடுத்து அனுப்ப முடியுமானால், அவர்களுக்கு என் முழு ராஜ்ஜியத்தையும் பாதி ராஜகுமாரியையும் பரிசளிப்பதாக இருக்கிறேன், நன்றி!)

-0-0-0-0-0-0-0-

சர்வ நிச்சயமாக ஏன், சிந்துசமவெளி நாகரிகம் என்பது  திராவிடத்தனமானது அல்லவேயல்ல!

(ஒரு நிஜ, அகழ்வாராய்ச்சிக் குறிப்பு சார்ந்த உரையாடல்;  உண்மைச் சாட்சியங்களின் மீதாகக் கட்டமைக்கப்பட்டது; ஆகவே திராவிடத்தனமானது அல்ல, மன்னிக்கவும்!)

…சிந்துவெளிப் பண்பாடுகளைப் புரிந்துகொள்ள பலவகையான, பலதரமான, அழகான புத்தகங்கள் இருக்கின்றன; என்னைப் பொறுத்த வரை, அவற்றில் முக்கியமானவை என்று – எனக்குத் தெரிந்து,  நான் படித்துள்ளவை என –  சுமார் 30-35 புத்தகங்கள் போல இருக்கின்றன.

அவற்றில் ஒன்றாக, எனக்கு அறிவியல், வரலாறு ரீதியாகப் பல புரிதல்களைக் கொடுத்ததற்காக,  ஷிகாரிபூர் ‘பேராசிரியர் எஸ்ஆர் ராவ்’ ரங்கநாதராவ் (1922 2013) எனும் மகாமகோஅறிஞர் எழுதிய புத்தகம் ஒன்றை முன்வைப்பேன்.

ரங்கநாத ராவ் அவர்கள் பழம்பெரும் அகழ்வாராய்ச்சிக்காரர்; 70 ஆண்டுகளுக்கும் மேலாக, கறாரான அகழ்வாராய்ச்சிகளைச் செய்தும், மாணவர்களுக்கு வழிகாட்டியும், பரவலாக எழுதியும் வந்தவர். சிந்துவெளியில் மட்டுமல்லாமல் – நம் தமிழகத்தின் பூம்புகார் (காவேரிபூம்பட்டினம்) உட்பட, துவாரகை, ஐஹோளே உட்பட, பல பகுதிகளில் உன்னதமான கண்டுபிடிப்புகளைச் சாத்தியமாக்கியவர். இந்தியாவில் கடல்சார் அகழ்வாராய்ச்சிக்கு வித்திட்டவர். உலகளாவிய அகழ்வாராய்ச்சி அறிஞர்களில், போற்றத்தக்க சான்றோர்களினிடையே தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கி இருப்பவர்…

என்னைப்போல அமெச்சூர்தனமாக இல்லாமல் (=சிந்து சமவெளி எழுத்துகள் – ஒரு குறைப் பிரசவ ஆராய்ச்சி 27/12/2014), இவரும் சிந்துவெளி எழுத்துகளைப் புரிந்துகொள்ள மிகவும் முயன்றிருக்கிறார்.  படு புத்திசாலி + உழைப்பாளர்.
Screenshot from 2016-04-03 10:25:34

தஹிந்துத்துவா அரைகுறைத் தினசரி, ரங்கநாதராவ் அவர்களுடனான ஒரு நேர்காணலை (=2002, Unearthing historical vestiges) ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறது; மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவும். நன்றாகத்தான் வந்திருக்கிறது. தஹிந்துத்துவா சில சமயங்களில் தவறுகளைச் செய்துவிடுவதும் உண்டு என நான் இதனைப் புரிந்துகொள்கிறேன்.   (மேற்கண்ட புகைப்படமும் அந்த எழவெடுத்த தினசரிப்பக்கத்திலிருந்துதான்)

சரி. 1991ல் ஆதித்ய ப்ரகாஷன் பதிப்பகத்தால் வெளிடப்பட்ட அந்தப் புத்தகம் இதுதான்.  இதில் ரங்கநாதராவ் அவர்கள், சிந்துசமவெளி நாகரீகம் முடிந்த கதைக்குச் சான்றுகளாக, வறட்சிகளையும், வெள்ளங்களையும், தட்பவெப்ப நிலை மாற்றங்களையும், டெக்டொனிக் வகை அசைவுகளையும் காத்திரமாக முன்வைக்கிறார்.  சிந்துவெளி சமூகத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே ‘வேத கால நிகழ்வுகள்’ இந்தியாவின் உட்பகுதிகளில் நடந்துகொண்டிருந்தன என்பதையும் நிரூபிக்கிறார். ‘ஆரியப் படையெடுப்பு’  எனும் பலூனின் மீது  கறாரான ஆராய்ச்சிப் பார்வைகளின் மூலம் ஊசியேற்றுகிறார். இது சுமார் 400 பக்கங்களேயுடைய சிறுபுத்தகம்தான், அவசியம் படிக்கவும்.

Screenshot from 2016-04-03 10:51:48

இப்புத்தகத்திலிருந்து ஒரு சுவாரசியமான பகுதியைக் கீழே தருகிறேன்:

Screenshot from 2016-04-03 10:52:05

மேற்கண்ட பகுதி, சிந்துவெளி நாகரீகத்தின் அழகான பகுதியான லோதல் துறைமுக நகரில் வெளிப்பட்ட அகழ்வாராய்ச்சி உண்மைகளைப் பற்றிப் பேசுகிறது. இதன் சாராம்சம் என்னவென்றால் – 500 வருடங்களுக்கு மேற்பட்டு, ஆற்றுவெள்ளங்களால் தொடர்ந்து நகரமைப்பு பாதிக்கப்பட்டு வந்திருந்தாலும், மறுபடியும் மறுபடியும் அயர்வேயில்லாமல் இடிந்த கட்டிடங்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டிருந்தாலும், ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருபோதும் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படவேயில்லை.

ஆச்சரியமாக இருக்கிறது – இப்படிப்பட்ட, போற்றத்தக்க  குடிமைப் பண்பைப் பார்த்து. கடும் பிரச்சினைகளுக்கிடையேயும் பொதுச் சொத்தை கபளீகரம் செய்யாமல் இருப்பதைப் பார்த்து…

இப்போது சொல்லுங்கள்,  சிந்துவெளி மக்கள் திராவிடர்களாக இருந்திருந்தால் அவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்?

கொஞ்சம் யோசியுங்கள் – கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, திருமாவளவனோ, விஜயகாந்தோ, ஸ்டாலினோ, டிஆர்பாலுவோ, தயாநிதிமாறனோ, கலாநிதிமாறனோ, கனிமொழியோ, அன்புமணியோ அல்லது மற்றெந்த திராவிடகுலத் திருட்டுத் திலகமோ – அக்கால லோதல் நகரத்தில் இருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

ஆகவேதான் சொல்கிறேன், சிந்துவெளி நாகரீகத்துக்கும், திராவிடத்துக்கும் ஒரு சுக்குத் தொடர்புமில்லை.

நன்றி. வணக்கம்.

7 Responses to “சர்வ நிச்சயமாக ஏன், சிந்துசமவெளி நாகரிகம் என்பது திராவிடத்தனமானது அல்லவேயல்ல: ஆதாரம்”

  1. Venkatachalam Says:

    ttps://www.harappa.com/content/‘high-west-low-east’-dichotomy-indus-cities-dravidian-paradigm

    ராமசாமி அவர்களுக்கு வணக்கம்.மேலே கண்டு உள்ள இடத்தில் ஒரு ஆய்வு தாங்கள் எழுப்பி உள்ள கேள்வி தொடர்பாக உள்ளது. இது என்னுடைய நண்பர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ், ஒடிசா மாநிலத்தில் முதன்மை செயலாளராக உள்ளவர் ,எழுதியது. நாங்கள் வாய்ஸ் ஆப் வள்ளுவர் என்று ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். அவர் அதில் உருப்பினர். எனக்கு இனிய நண்பர். இந்த கட்டுரை தங்களுக்குப் பயன்படுமெனின் நான் மகிழ்வேன். நன்றி
    அர. வெங்கடாசலம்

  2. M.Veerabahu Says:

    Initially it was Aryan vs dravidiayan.now seeman is using their trick and making it Tamils vs dravidiayans.God save Tamil nadu from these people.

  3. tyaguu Says:

    அற்புதமான அலசல். ஆக்கிரமிப்பு இல்லாத திராவிடம் இல்லவே இல்லை. சரிதான்.

  4. Vanthia Thevan Says:

    கடைசியாக கொடுத்த ஆதாரம் “, கருணாநிதியோ………”.. தூள். அது ஒன்று போதும் உங்கள் அனுமானத்தை நிச்சயபடுத்த!

  5. giridharlal Says:

    naar naaraaga kizhuchutteenga (rama)sami!

  6. gopi Says:

    i dont think more than 50 crore dalits, adivasis and extremely backward castes of north india who speak a so called indo aryan language came from outside india.i aver they are the primitive natives of this country and if any questions arise regarding the residents of harappa and mohenjadaro it has to be them and not any south indian so called dravidian hunter gatherers who learned to bake bricks and build houses only in the 2nd half of first millennium bc.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s