எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘இடக்கை’ – சில இடக்குக் குறிப்புகள்

April 27, 2016

இடக்கை வலக்கை வழுக்கை பொக்கை.

எப்படி வண்ணமயமாக இருக்கிறது, என் விமர்சனம்? :-(

மன்னிக்கவும். இது எழுத்தாளர் பற்றிய விமர்சனம் அல்ல; கீழ்த்தரமாக (அல்லது மேல்தரமாக) எழுத்தாளரின் உடலமைப்பை, உடற்கூறுகளைப் பரிகசிப்பது எனக்கு ஒத்துவராது. ஆனால் இதைப் படிக்கும் உங்களுக்கு ஒத்துவரும் என்று தோன்றுவதால்தான் இப்படி…

-0-0-0-0-0-0-0-

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நாவலான ‘இடக்கை‘ என்பதைப் படித்துவிட்டு மகாமகோ ரௌத்திரத்தில் இருக்கிறேன். மன்னிக்கவும். எனக்கு ரத்தம் குடிக்கவேண்டும். தாகம், தாகம், வெறி!

கருத்துப்படம்: எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் 'இடக்கை'

(கருத்துப்படம்: எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘இடக்கை’)

ஏண்டா முட்டாளே, உனக்குப் படித்துப் படித்துச் சொன்னேனே, கண்ட புத்தகத்தையும் படித்துவிட்டு வெம்பிக்கொண்டிருக்கிறாயே, புகைந்துகொண்டிருக்கிறாயே, சொந்த செலவில் நீயே உனக்குச் சூனியம் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம்தானென்ன என என் மனைவி திருப்பித் திருப்பிச் சொன்னாலும்,  ஆயிரம் பிற வேலைகள் செய்வதற்காக இருந்தாலும், அவற்றில் சில அவசரமோதிஅவசரமாகவே இருந்தாலும்  – எனக்கு, என்னருமை மகாமகோ பேராசானான எஸ்.ராவிடம் இப்படியொருமரண ஈர்ப்பு!  ங்கொம்மாள… :-((

(கருத்துப்படம்: தன் இடக்கையோடு இணைந்த எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் படம்: நன்றி - ஜெயமோகன் தளம்)

(கருத்துப்படம்: தன் இடக்கையோடு மகிழ்ச்சிகரமாக இணைந்த எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் படம்; நன்றி – ஜெயமோகன் தளம்)

நான் உருப்படவே போவதில்லை. :-(
-0-0-0-0-0-0-0-

இந்த ‘இடக்கை’ எழவில், பக்கத்துக்குப் பக்கம் இலக்கணப் பிழைகள். அச்சுப் பிழைகள். அச்சுப்பிச்சுப் பிழைகள். கதை சொல்லலில் குளறுபடிகள். ஊக்க போனஸாக நெகிழ்வுகள். அர்த்தமற்ற பத்திகள்.

செத்த மரத்தால் உருவாக்கப்பட்ட சொத்தை அலக்கியம்.

அதாவது,  இது ஒரு அக்மார்க் எஸ்ராவிய அமர காவியம். வெறுப்பாக இருக்கிறது.

ஆகவே.

-0-0-0-0-0-0-0-

நகைச்சுவை ஒன்று:
“வரலாற்றின் இருள் வெளிகளினூடே சமகால வரலாற்றை, நீதியின் ரத்தக் கறை படிந்த வரலாற்றை எழுதுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இடக்கை’ நாவல்.

அநீதியின் கதையை, அதன் ஊடே விரியும் மானுட அவலத்தின் கதையை எழுதுவது அத்தனை எளிதல்ல, எஸ்.ரா இந்த நாவலில் கவித்துவ செழுமையுடனும் தத்துவார்த்த செறிவுடனும் இந்தக் கதையை எழுதிச் செல்கிறார்.

அய்யோடி சொக்கீ!  யேண்டா  இப்டீயெல்லாம் எள்தறீங்க, சோமாறீங்களா! வுருப்படுவீங்களாடா!

-0-0-0-0-

அவருடைய இந்த இடக்கை நாவல் எழவைப் பற்றிப் பேசும்போது இப்படிச் சொல்லியிருக்கிறார், நம் எழுத்தாளப் பெருந்தகை எஸ்ரா!
“…நீதியை குறித்த எனது சந்தேகங்களும், அதற்கான விளக்கங்களுமே — இந்த இடக்கை நாவல். அன்றும் சரி, இன்றும் சரி, நீதி என்பது உயர் பிரிவினர்களால் கட்டமைக்கப்பட்டு , தாழ்த்தப்பட்டவர்களை வீழ்த்தவே பயன்பட்டது…”

எஸ்ரா அட்ச்சுவுடுவதற்கும் ஒரு அளவுவேண்டும்.

நீதிகள், சட்டங்கள், அறவிழுமியங்கள் போன்றவையெல்லாம் – பல்வேறான நிலப்பரப்புகளுடனும் விதம்விதமான பண்பாட்டுவெளிகளுடனும் ஒத்திசைந்து – எப்படி உருவாகிவருகின்றன, பாரத அளவில் அவற்றின் பரிணாம வளர்ச்சி என்பது எப்படி இருந்திருக்கிறது என்றெல்லாம் ஒரு மசுத்தையும் தெரிந்துகொள்ளாமல் 1)  இப்படி அடிப்படைப் புரிதல்களில்லாமல் உளறிக்கொட்டும் பாங்கில்தான், 2) நிகழ்வுகளைப் படுமோசமாக எளிமைப் படுத்தி அவற்றை நீர்க்கடிக்கச் செய்து அறச்சீற்ற அலக்கியத்தைப் படையல் வைப்பதில்தான், 3) அரைகுறை வாசகனின் ‘வாசிப்பனுபவத்துக்கு’ பாப்கார்ன் தீனி போடுவதில்தான், 4) அவனுக்குச் சொறிந்துகொடுப்பதில்தான் எஸ்ராவின் வெற்றி இருக்கிறது.

மாமேதை மேலும் சொல்கிறார்:
“…தூக்குக் கயிறு சன்னமாக இருந்தால், அந்த தூக்குக் கயிறுக்கு ஏற்ற கழுத்துடையவனே, தூக்கிலிடப்படுவான். அவன் குற்றவாளியா இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இப்படியாகத்தான் அரச நீதி இருந்திருக்கிறது. இருக்கிறது!”

ஆ!

ஆம்!  உங்களுடைய செல்ல உங்களூர் முடிதிருத்தும் நிலையத்தில் — உங்கள் தலையில் மயிறு மிகக் கொஞ்சமாக, வெட்டவே முடியாதபடிக்கு  இருந்தால், நாவிதரானவர் பக்கத்திலிருக்கும் ஆள் மண்டையை மொட்டையடித்து விடுவார்! இதுதான் நாவித நானாவித நீதி.

ஆனால், உங்களுக்கு அடுத்ததாகக்  காத்துக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய ஆள் கவனிக்க வேண்டிய விஷயம் இது, பாவம்.  நன்றி.

… … அய்யா எஸ்ரா, எல்லை மீறி உளறாதீர்கள் அய்யா! எனக்கு அழுவாச்சியா வர்து!

(மேற்கண்ட கருத்துகள் குறித்த சுட்டி விகடன் தளத்தில் இருக்கிறது; ஒரு விட்டேற்றித் தருணத்தில் இவர் இப்படி உளறிக்கொட்டியுள்ளதன் வீடியோவையும் முன்னமே பார்த்திருந்தேன் – ஆனால் அதன் சுட்டி என் கைவசம் இல்லை; எப்படியும் – நீங்களும் அதன்மேல் உங்கள் பொன்னான நேரத்தைச் செலவழிக்கவேண்டிய அவசியமில்லைதானே!)

-0-0-0-0-0-

இந்த எழவுக்காக, ரூ 375/- செலவு செய்திருக்கிறேன். மகா தண்டம். மாறாக, தராதரம் தெரியாத முட்டாக்கூவானாகிய நான், இப்போதைய விலைவாசி நிலவரத்தில் சுமார் 13 கிலோ உருளைக்கிழங்கூ ( = CylindricalOldFuck) வாங்கியிருக்கலாம்.

…இந்த நாவலுக்காக என்னருமை எஸ்ரா அவர்கள் எவ்வளவு உழைத்திருக்கவேண்டும் என்பதை நினைத்தாலே எனக்கு மூச்சு முட்டுகிறது. முட்டிக்கொண்டு வருகிறது.

ஆனால் உழைப்பு என்பது தன்னளவில் முக்கியமானதேயல்ல எனும் என்  நிலைப்பாடு, என் மீட்பன். நன்றி.

இப்படியொரு புத்தகம்! இதற்குமொரு ஆஸ்தான பதிப்பாளர்!! மேலதிகமாக, சொந்தப் பைசா செலவழித்துச் சூனியம் வைத்தும் கொள்ளும் என் போன்ற தமிழ் வாசக அரைகுறைகள்!!! தேவையா? :-(

-0-0-0-0-0-0-

இடக்கை வருங்கால் நகுக
பழிப்புரை: இடக்கை படித்து, படிக்கும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கவும். படிக்காதபோதும் அப்படியே செய்யலாம். பின்னது முக்கியம். கொஞ்சம் வசதியும் கூட. செலவு மிச்சம்.

-0-0-0-0-0-0-0-

இடக்கை ஆழ்ந்தவன் மூளையில்லாங்கே
உடுக்கை களைவதாம் களவு
பழிப்புரை: ஒருவன், இடக்கை படித்து மூளையை இழந்துவிட்டான் எனத் தெரிந்தவுடன், அவனுடைய கோமணத்தையும் கழற்றிக்கொண்டு ஓடிவிடுவதுதான் பதிப்பகம்.  களவு என்பது உயிர்மை என்றறிக.

-0-0-0-0-0-0-0-0-

இடக்கை படித்தவன் உடலிலிருந்தாங்கே
புடுக்கைக் களைவதாம் நட்பு.

பழிப்புரை:  ஒருவன் இடக்கை புதினத்தைப் படித்தவுடன், அவனுக்கு அவன் நண்பன் செய்யவேண்டிய நன்றிக்கடன், அவன் ஆண்குறியை உடனடியாக வெட்டி எடுத்தலே.

-0-0-0-0-0-0-

இடக்கை கொண்டு கழுவும் மூடர்காள்
புழுக்கை போட்டுச் செல்வதே ஆனந்தம்

பழிப்புரை: மூல வியாதியினால் அவதிப்பட்ட திருமூலர் சொல்கிறார்: ஆடுகளைப் போல புழுக்கை போட்டால், கழுவிக்கொள்ளவேண்டிய அவசியமேயில்லை; மேலும், இடக்கை புத்தகத்தை டிஷ்யு காகிதம் போல உபயோகிப்பது தகாது.

-0-0-0-0-0-0-0-0-
இடக்கை செய்தாரை ஒறுத்தல் அவர் கோண
உலக்கையால் இடித்துவிடல்
பழிப்புரை: இடக்கை எழுதியவரை விமர்சனம் செய்ய, பேனாவுக்குப் பதிலாக உலக்கையை அஹிம்ஸாவழியில் பயன்படுத்தலாம்.
-0-0-0-0-0-0-

இடக்கைரடக்கல்: இது இடக்கரடக்கலின் மாமா பெண். இனிமேல், ங்கோத்தா, இடக்கை என்று எந்தப் பண்டாரப் பரதேசியாவது என்னிடம் பேசவந்தால் அவன் மண்டையில் ஓங்கி அடிப்பாள் இப்பெண்.

ஆகவே இடக்கைரடக்கல்தனமாக இடக்கையை விமர்சிக்கவேண்டுமென்றால்: இடக்கை ஒரு மாபெரும் மகாமகோ நவீன காவியம். நன்றி.

-0-0-0-0-0-0-0-0-

”இடக்கை” நாவலை நான்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவிருக்கிறேன். தலைப்பு எஸ்ரா அவர்களே தயைகூர்ந்து தயாரித்துக் கொடுத்ததுதான் =  eDuckHand. இணையச் சான்றோர்கள் உடனடியாகப் புரிந்துகொள்ளும்படிக்கு நவீனமானதொரு தலைப்பை நனிநல்கிய ஆசிரியருக்கு என் நன்றி.

-0-0-0-0-0-0-

விளிம்பு மக்களை இப்படி விளிம்பை நோக்கிப் படுகோரமாகத் தள்ளிக்கொண்டு இருந்தால், ஒரு சமயம் அவர்கள் திருப்பி அடிக்க ஆரம்பிப்பர். உதைபட்டு களிம்பு தடவிக்கொள்ள நேரிடும், ஜாக்கிரதை.

விளிம்பு மக்களை விட்டுவிடவும், பாவம் அவர்கள். தயவு செய்து. ப்ளீஸ்! எஸ்ரா, நான் உங்கள் நலவிரும்பியும்தான்!!

-0-0-0-0-0-0-0-0-

இனிமேல் – இன்னொரு முறை காசுகொடுத்து எஸ்ரா எழுத்தை நான் வாங்கினேன், அதனைப் படித்தேன் என உங்களுக்குத் தெரியவந்தால், தயவுசெய்து உங்கள் பாதக்குரடுகளால் என் குரட்டில் ஓங்கி அடியுங்கள்.

சலிப்பாக இருக்கிறது.

இன்று முதல் விட்டேன், #எஸ்ராவலை! :-(

-0-0-0-0-0-0-0-

அடுத்த பத்து நாட்களுக்குத் தமிழ் பக்கமே – அது படிப்பானாலும் சரி விடிப்பானாலும் சரி – போகவேபோவதில்லை. (மசான வைராக்கியங்களும் பிரசவ வைராக்கியங்களும் நினைவுக்கு வந்து பயமுறுத்துகின்றன!)

நான் தற்போது குடியிருக்கும்  வீட்டைக் ‘காலி’ செய்துகொண்டிருக்கிறேன்; ஆகவேயும் – சந்தடி சாக்கில், பழைய வீட்டிலேயே இந்த இடக்கை புத்தக எழவையும் ஒளித்துவைத்துவிட்டுப் போவதாக ஒரு நூதனச் சதித் திட்டம் கைவசமிருக்கிறது; ஏனெனில், வீட்டின் சொந்தக்காரன், சாவுக் கெராக்கி,  முன்பணத்தைச் சரியாகத் திருப்பிக் கொடுக்கவில்லையென்றால், அவனுக்குச் சூனியம் வைக்கவேண்டுமல்லவா?

என் கையறு நிலையைப் பாரீர்! :-((

17 Responses to “எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘இடக்கை’ – சில இடக்குக் குறிப்புகள்”

 1. Ramanan Says:

  is it that bad ? :)

  I stopped reading ananda vikatan some time back . Couldnt go beyond the platform in ‘yAmam’ and that was the last esra book that i even attempted to read ….


  • Sir, Ramanan,

   BAD? It doesn’t begin to describe it!

   But, I envy your strength of resolve. I am a weak guy. I need guys like YesRaw to provide me with titillation.

   NO. I always hoped that he would somehow magically improve, but then he always dishes out a Raw deal, Yes.

   Seriously, I am really sick and tired of him. So will find other ways of wasting time, I suppose…

 2. Raj Chandra Says:

  இதைப் படித்திருந்தால் (http://www.maamallan.com/2016/04/blog-post.html) அதைப் படித்திருக்கமாட்டீர்கள். நாங்களும் இந்தப் பதிவை உங்களிடமிருந்து பெற்றிருக்கமாட்டோம் :)))

 3. Anonymous Says:

  பல ஆண்டுகளுக்கு முன் உறுபசி,யாமம்,உபபாண்டவம் வாங்கி வாசித்தேன்.யாமம் வாசிக்க செறிவாக இருந்தது.மூன்றாண்டுகளுக்கு முன் துயில் வாங்கி,மிகுந்த சலிப்பில் வாசித்து பாதியில் நிறுத்தி விட்டேன்.(உங்களின் தளம் வாசிப்பதற்கு முன்பே)அதன்பிறகு எஸ்.ரா.நூல்கள் வாங்குவதில்லை.


  • அய்யா! நீங்கள் ஒரு ஞானி!!

   உங்களளவு மனோதிடம் எனக்கு இல்லை. :-(

   ஹ்ம்ம்ம்… எஸ்ராவும் பாவம், நூல்களாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

   தன் ஜட்டி நிஜார்களையெல்லாம் கிழித்து நூல் நூலாகப் பிரித்துப் பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். இந்த எழவுகளுக்குப் பதிப்பகம் ஒன்றுதான் கேடு!

   நானும் என் நூல்களை வெளியிட்டுள்ளது தெரியுமா? – எனது ஏழு நூல்கள் – அட்டைப்பட ரிலீஸ்! 06/01/2015 – https://othisaivu.wordpress.com/2015/01/06/post-438/

   என்னுடைய நூல்களைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன? தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.

   நன்றி.

 4. Mohamed Says:

  பாவம் சார் எஸ்.ரா அவர விட்ருங்க.இல்லனா இப்படி சொல்ல லாம் அய்யோ பாவம் சார் நீங்க அவர் எழுத்துக்கள படிக்காம இருக்க முடியாத எஸ்.ராphobia னால அவஸ்தை படறீங்க.
  மனைவி சொல்லே மாணிக்கம்(வைரம்னு கூட வச்சுக்கலாம்) follow the rules அய்யா.


  • அன்புள்ள மொஹம்மத், நீங்கள் சொல்வது சரிதான்!

   மங்கையே மணாளனின் பாக்கியம்.

   வேதாளம் மறுபடியும் பனைமரம் ஏறிக்கொள்ளப்போகிறது. ஜாக்கிரதை! :-)

   இப்படிக்கு:

   பனங்காட்டு நரி.

 5. Kannan Says:

  This one deserves 10 out of 10

  இடக்கை செய்தாரை ஒறுத்தல் அவர் கோண
  உலக்கையால் இடித்துவிடல்

  … and hereafter you will be called as ‘Vazhum Lolluvar’

  Kannan :)

 6. ganesh Says:

  THALA rofallu ))

 7. bart Says:

  இன்னா எழுதியவரை வறுத்தல்அவர்நாண
  நல்லதோர் குறிப்பைக் கொடுத்தல்.

  :) :) :)

  http://www.sramakrishnan.com/?p=5487

 8. Anonymous Says:

  அறிவீனமான பதிவு… மிக அருமையான நாவல்.. எந்தக் காழ்ப்புணர்ச்சியாலோ நொண்டி நாய் கத்துகிறது..

 9. Ram Karthik Says:

  எதில் உடன்படவில்லை என ஒரு வரி கூட சொல்லவில்லை.
  அச்சுப் பிழை, உளரல் என பொதுவாகத் தாக்குகிறார்.
  காழ்ப்பின் உச்சம்.


  • அய்யா, தாங்கள் சொல்வதில் உண்மையிருக்கலாம்.

   ஆனால் இடக்கையை முழுவதும் வாசித்துள்ள எனக்கு – இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

   That is, this also want. Also more want. :-(

   Denx.


 10. […] டமாரென்று வலக்கையால் (எஸ்ராவின் இடக்கை படித்தபின் தான் அந்தக் கையையே […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s